வீடு வாடகைக்கு
-----------------------------
நான்
வீடு கட்டியகதையை ஏற்கனவே பதிவில் பகிர்ந்துள்ளேன் 1979/ ல் இடம் வாங்கி 1986-ல்
வீடு கட்டி முடிக்கப்பட்டவுடன் வாடகைக்கு விட்டேன் அப்போது நான் திருச்சியில்
இருந்தேன் 1991-ம் ஆண்டின் கடைசியில் என்
மூத்த மகனை குடி யிருத்துவதற்கு வாடகைக்கு இருந்தவரைக் காலி செய்யச் சொன்னேன் அவரும்
எந்தப்பிரச்சனையும் தராமல் காலி
செய்ய என் மகனும் மருமகளும் குடி வந்தனர் நானும் என் வேலையிலிருந்து விருப்ப ஓய்வு
பெற்று என் மகனுடன் வந்து விட்டேன் என் இளைய மகனுக்கும் இங்கே வேலை கிடைக்கவும்
.அவனுக்கும் மணமுடித்தால் இந்த வீடு சிறியதாய் இருக்கும் என்று எண்ணி மாடியில்
இன்னொரு வீடு கட்டினேன் 1992-ம் ஆண்டு. வீடு கட்டி முடித்தவுடன் நாங்கள் மேல் தளத்துக்குச் சென்று கீழ் வீட்டை
வாடகைக்கு விட்டோம் அதில் ஒரு டாக்டரும் அவர் கணவனும் குடி வந்தனர் சுமார் ஏழு
ஆண்டுகள் அங்கே தங்கி இருந்தனர். .நாங்கள் மேல் வீட்டில் இருக்கும் போது என் இளைய
மகன் திருமணமும் நடந்தது லேடி டாக்டரும் அவள் கணவரும் சொந்த வீடு
கட்டிக் கொண்டு போய் விட்டனர். என் மக்களுக்கும் வேலை மாற்றல் இருந்ததால் சென்னை
சென்றனர். நானும் மனைவியும் கீழ்
வீட்டுக்கு வந்து மேல் வீட்டை வாடகைக்கு விட்டோம் அதுவிட்டு ஆகிறது பதினாறு
வருடங்கள் இத்தனை வருடங்களில் ஆறு குடித்தனங்கள் வந்து போய் இருக்கிறார்கள். சில
பதிவுகளில் இவர்களில் சிலரையே கதாமாந்தராகவும்
மாற்றி இருக்கிறேன் என் வீட்டுக்கு குடி வந்து போனவர்களுடன் நான் இன்னும்
சுமூகத் தொடர்பில்தான் இருக்கிறேன் சிலர் சொந்த வீடு கட்டிக்கொண்டு போய் விட்டார்கள்திருமணம் செய்ய
வேண்டுமென்றே என் வீட்டுக்குக் குடி வந்தவர்களும் உண்டு.பெங்களூரில் வீட்டுக்குக்
குடி வருபவர்களைக் காலி செய்யச் சொல்வது மிகவும் கடினம் என்னைப் பொறுத்தவரை நான் ஒரு ஸ்ட்ரிக்ட்டான
பேர்வழி என்றே அறியப் பட்டிருக்கிறேன் அனாவசியமாக யார் குடும்பவாழ்விலும் தலை
இடுவது இல்லை. நானே ஒரு குடும்பத் தலைவனுக்கு அறிவுரை கொடுக்க வேண்டிய
கதையும் உண்டு
அவர்கள்
ஒரு கணவன் மனைவி ஒரு குழந்தை. வீடு பார்க்க வரும்போதே தனக்கு ஏகப்பட்ட சொத்து
உள்ளது என்றும் அவற்றில் சில கோர்ட் கேசாக
நிலுவையில் இருப்பதாகவும் இன்னும்
என்னவெல்லாமோ கூறிக் கொண்டு ஓவர் பில்ட் அப்புடன் வீடு பார்க்க வந்தார் அவர். அவரது மனைவி ஒரு பல்
மருத்துவர் அவரது க்லினிக் எங்கள்
வீட்டுக்கு அருகில் இருப்பதால் எங்கள் வீடு சௌகரியப்படும் என்றும் அவரது மனைவி
கூறினாள் காதலித்து மணந்தவர்கள் ஒரே பெண்குழந்தை அதுவும் ஏழுமாதத்திலேயே பிறந்து
இன்குபேட்டரில் வைத்துப் பராமரிக்கப் பட்ட குழந்தை. ஹைபர் ஆக்டிவ் என்று கூறலாம்
என் வீட்டு ஹாலில் படுக்கவைத்துத் திரும்புவதற்குள் குழந்தை திரும்பி நீந்தி
அறையின் மறு கோடிக்கு வந்து விடும் எனக்கு
அந்தக் குழந்தையையும் அந்த டாக்டரையும்
பிடித்து விட்டது வழக்கம் போல் வாடகை
போன்ற சில நிபந்தனைகளைக் கூறிய பின்
வீட்டை வாடகைக்கு விட்டோம் எப்படியும் மாதத்தில் ஐந்தாம் தேதிக்குள் வாடகை
கொடுக்க வேண்டும் என்பது ஒப்பந்தம் கணவன் வெறும் பந்தாவுடன் சுற்றிக்
கொண்டிருந்தான் வேலை எதற்கும்
போகவில்லை. பல் மருத்துவரே குடும்பத்தைப்
பராமரித்துக் கொண்டு வந்தார் எனக்கு வாடகை கேட்டுக் கொண்டு போவதுபிடிக்காது.
அவர்களே சொன்ன தேதிக்குள் தரவேண்டும் என்பதும் கூறப்படாத விதி. ஒரு முறை வாடகைதர
தாமதமாகி விட்டது அவரிடம் சொல்லிக் கேட்டேன்
அன்று இரவுக்குள் தருவதாகக் கூறினார் அன்று இரவு ஏழு மணி ஆகியும் வாடகை
தரவில்லை. நான் போய்க் கேட்டேன் அன்றைய பொழுது இன்னும் முடியவில்லை என்று தெனாவட்டாகப் பதில் சொன்னார்நான்
அவர்கள் விட்டைக் காலி செய்ய வேண்டும் என்று கூறினேன்
மறு நாள் காலையில்
பல் மருத்துவர் என் வீட்டுக்கு வந்து வாடகையைக் கொடுத்துவிட்டு அது அவர்
கணவருக்குத் தெரிய வேண்டாம் என்றும் வாடகை
இன்னும் வரவில்லை என்று அவரது கணவரிடமே கேட்கும் படியும் என்னிடம் கேட்டுக்
கொண்டார் கணவர் வாடகை கொடுத்ததும் அந்தப்
பணத்தை தன்னிடம் தருமாறும் மனைவி கேட்டுக் கொண்டாள் இரண்டு மூன்று நாட்கள்
கழித்து தனக்கு வர வேண்டிய பணம் வரத் தாமதமானதால் கெடு தவறியதாகவும் பொறுத்துக் கொள்ள வேண்டியும்
கேட்டுக் கொண்டு வாடகைப் பணத்தைத் தந்தார்
நானும் பெரிய மனது பண்ணி அதைப் பொறுத்துக் கொண்டேன் . அவர் சென்றவுடன்
அவரது மனைவியிடம் அந்தப் பணத்தைக் கொடுத்தேன் அவரும் ஏதும் நடக்காததுபோல் இருந்து
விட்டார்(எப்படி எல்லாம் அட்ஜஸ்ட்மெண்ட்?)
ஒரு நாள் அவரது கணவரைக் கூப்பிட்டு என் இளைய மகனை விடச்
சின்னவர் அவருக்கு ஒரு தந்தை ஸ்தானத்தில் இருந்து
வெறும் பந்தாவை விட்டு விட்டுப் பணிக்குப் போக வேண்டி அறிவுறுத்தினேன் என்ன ஆச்சரியம் ஒரு நல்ல மகனைப் போல்
எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டார் ஓரிரு நாளில் ஒரு ரியல் எஸ்டேட் கம்பனியில்
வேலைக்கும் சேர்ந்தார் சில மாதங்களில்
கோர்ட்டில் நிலுவையில் இருந்த கேசில்
இவருக்குச் சாதகமாகத் தீர்ப்பு வந்ததாகவும் இனி நல்ல நிலைக்குப் போவேன் என்றும் கூறினார்
இரண்டு ஆண்டுகள் சுமார் என் வீட்டில் குடித்தனம் இருந்தனர் அதன் பின் ஒரு வீட்டை
வாடகைக்கு வேறு இடத்தில் எடுத்துக் கொண்டனர்
ஒரு நாள் நானும் மனைவியும் சாலையில் செல்லும் போது காரில் எதிரில் வந்தவர்
எங்களை நாங்கள் போகுமிடத்துக்குக் கொண்டு செல்வதாகக் கூறி லிஃப்ட் கொடுத்தார்.
இன்னொரு முறை கணவனும் மனைவியும் ஒன்றாக என் வீட்டுக்கு வந்து அவர்களது சொந்த
வீட்டுக் கிருகப் பிரவேசதுக்குவர பத்திரிக்கை கொடுத்தனர் என் வீட்டில் குடி வந்தவர்கள்
நல்ல நிலைக்கே போய் இருக்கின்றனர் என்பது திருப்தி தருகிறது
சுமார் நான்காண்டுகள்
வீட்டில் குடி இருந்தவரை அண்மையில் காலி செய்யச் சொன்னேன் வீட்டைப் புதுப்பிக்க வேண்டி இருந்ததாலும் சில
மராமத்து வேலைகள் செய்யவும் வேண்டி இருந்தது.
இப்போது என் மாடி
வீடு புதுப் பொலிவுடன் மீண்டும் வாடகைக்கு. வீடு கட்டிய செலவை விட புதுப்பிக்கவும்
பின் புறம் ஒரு கார் பார்கிங் செய்யவும்அதிகமாகி விட்டது ஒரு நல்ல குடித்தனக் காரரைத் தேடவேண்டும்
புதுப்பிக்கப்பட்ட வீட்டின் சில புகைப்படங்கள்
புதுப்பிக்கப்பட்ட வீட்டின் சில புகைப்படங்கள்
படுக்கை அறை( இது போல் இரண்டு ) |
இது தவிர இன்னொரு ஹால் பூஜை அறை ஒரு ஸ்டோர் ரூம் எல்லாம் உண்டு. கீழே வீட்டின் பின்புறம் கார் பார்க் செய்ய வசதி உண்டு
தங்களால் திருந்திய தம்பதியரைப் (குறிப்பாக கணவரை) அறிந்து மகிழ்ந்தேன். வாடகைக்கு விடுதல் என்பதும் வாடகையை வாங்குவது என்பதும் தற்காலத்தில் சிக்கலாகிவரும் நிகழ்வுகளில் ஒன்று.
பதிலளிநீக்குவடகைக்குடி இருந்தவர்கள்
பதிலளிநீக்குவாழ்ககையில் நன்றாய் இருப்பது சிறப்பு....
பில்ட் அப்புடன் வந்தவர் தங்எள் மகனைப்போல்
அறிவுரை கேட்டு திருந்தியது நல்லதே....
வீட்டின் உள் படங்கள் அருமை ...
கண்களை கவர்கிறது....
நல்ல அழகான வீடு.
பதிலளிநீக்குபுத்திமதியை கேட்டு நல்ல நிலையில் இருந்தால்
மகிழ்ச்சிதானே! மதுரையில் எங்கள் வீட்டில் வாடகைக்கு
இருந்தவர்கள் எல்லாம் சொந்த வீட்டுக்கு தான் சென்று இருக்கிறார்கள்.
நான் சொந்தவீட்டை விட்டு வாடகை வீட்டுக்கு வந்து இருக்கிறேன்.
சில வசதிகளுக்காக.
காரைக்குடி நகரில் பரமா காலணி பகுதியில் வீடு வேண்டும்..
நீக்கு8667094699 என் மொபைல் நம்பர் தொடர்பு கொள்ளலாம்
நல்ல ஐடியா. பதிவுக்கு பதிவும் ஆச்சு.
பதிலளிநீக்குவாடகைக்கு வீடு விட்டவர் குடி இருப்பவர்களை குறிப்பிட்ட 4 வருடத்துக்குள் மாற்றி விடுவதே பிரச்சினைகளை வளர்க்காது ஐயா.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ டாக்டர் ஜம்புலிங்கம்
வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி ஐயா
பதிலளிநீக்கு@ அஜய் சுனில்கர் ஜோசப்
வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி சார்
பதிலளிநீக்கு@ கோமதி அரசு
மதுரையில் சொந்தவீடா மாயவரத்தில் சொந்தவீடா. வருகைக்கு நன்றி மேம்
பதிலளிநீக்கு@ ஜீவி
புதிரே உனக்கு மறுபெயர்தான் ஜீவியோ வருகைக்கு நன்றி ஐயா
பதிலளிநீக்கு@ கில்லர்ஜி
யாரையும் நான் காலி செய்யச் சொல்வதில்லை. இம்முறை வீட்டைப் புதுப்பிக்க வேண்டி காலி செய்யச் சொன்னேன் வருகைக்கு நன்றி ஜி.
சுவையான அனுபவங்கள்.
பதிலளிநீக்குகார் பார்க்கிங்கிற்கு பின் புற ரோட்டின் வழியாக வரவேண்டுமோ? அங்கு இருந்த மாமரத்தை என்ன செய்தீர்கள்?
பதிலளிநீக்குஎத்தனை அனுபவங்கள்.....
பதிலளிநீக்குவீடு வாடகைக்கு விடுவது தனித் திறமை தான். உங்கள் அனுபவங்கள் சுவாரஸ்யமாக இருக்கிறது.
பதிலளிநீக்குஎன்னுடைய அனுபவம் ஒன்றை இந்த சுட்டியில் இருக்கிறது. நேரம் கிடைக்கும் போது படித்துப் பாருங்களேன்.https://prajalakshmi.wordpress.com/2015/06/28/we-shall-get-back-to-you/
வீடு வாடகைக்கு விடுவது தனித் திறமைதான் என்றாலும் உங்களைப் போல் வாடகைக்கு வருபவர்களை நடத்துபவர் சிலரே.
பதிலளிநீக்குநாங்கள் காரைக்குடியில் வாடகைக்கு இருந்த வீட்டின் ஓனரும் இப்படித்தான்... அவர் புதுக்கோட்டை அருகே... நாங்கள் இருந்தது தனி வீடு... மேலே எல்லாம் வீடு இல்லை.... பெரிய வீடு... நல்ல வீடு.... வாடகை வாங்க மட்டுமே வருவார்... நாங்க வீடு கட்டி விட்டோம்... என்று சொன்னதும் நீங்க இங்கயே இருங்க... இது உங்க வீடு மாதிரி என்றெல்லாம் சொன்னார்... ஆனாலும் நாங்கள் தேவகோட்டையில் வீடு கட்டிவிட்டு எப்படி அங்கு வாடகைக்கு இருக்க முடியும்... அதனால் காலி செய்து விட்டோம்... அதன் பின்னர் அந்த வீட்டை விற்றுவிட்டார்.
நாங்கள் இருக்கும் போது விற்பதாக இருந்தால் சொல்லுங்கள் என்றோம்... இல்ல தம்பிக்கு கல்யாணம் பண்ணி இங்கதான் வைக்கப் போறேன் என்றெல்லாம் சொன்னார். பின்னர் நாங்க தேவகோட்டை போனதும் கேட்டார்... வாங்கிக்கிறீங்களா என்று... கடனை உடனை வாங்கி வீடு கட்டியாச்சு... முன்னாடியே சொல்லியிருந்தா வாங்கியிருக்கலாம்... இனி முடியாது என்று சொல்லிவிட்டோம்...
நல்ல வீடு... ராசியான வீடு... விஷால் பிறந்தது... வெளிநாட்டுக்கு வந்தது... எங்களுக்கு வீடு கட்டியது என ரொம்ப ராசியான வீடு....
அவரும் நல்ல மனிதர்...
பதிலளிநீக்கு@ ஸ்ரீராம்
இப்போதும் வீடு வாடகைக்குகேட்டு வருபவர்கள் நிறைய பேர் அந்த அனுபவங்களையும் எழுதுவேன் வருகைக்கு நன்றி ஸ்ரீ
பதிலளிநீக்கு@ டாக்டர் கந்தசாமி
ஆம் . ஆனால் இது திறந்தகார் பார்கிங் பின் புறம் வழியே வர வேண்டும் மாமரங்களை வெட்ட வில்லை. வாழை மரங்கள் இருந்த இடத்தை உபயோகப் படுத்தினேன் வருகைக்கு நன்றி சார்
பதிலளிநீக்கு@ வெங்கட் நாகராஜ்
ஆம் நாகராஜ். ஆனால் செலவு வைக்கும் அனுபவங்கள் வருகைக்கு நன்றி
பதிலளிநீக்கு@ ராஜலக்ஷ்மி பரமசிவம்
வருகைக்கு நன்றி மேம் அவசியம் சுட்டியில் இருக்கும் பதிவைப் படிப்பேன்
பதிலளிநீக்கு@ பரிவை சே குமார்
சொந்த வீடு இருப்பவருக்கு ஒரே வீடு. ஆனால் வாடகைக்கு இருப்பவர்க்கு பல வீடுகள். நீங்கள் வீடு கட்டியதை சுவையாகச் சொல்லி இருக்கிறாஈர்கள் வருகைக்கு நன்றி குமார்
பதிலளிநீக்கு@ ராஜலக்ஷ்மி பரமசிவம்
சுட்டியைச் சரிபாருங்கள் பதிவு ஏதும் வரவில்லை நன்றி மேம்
இதோ இந்த சுட்டி வேலை செய்யும் என்று நினைக்கிறேன். http://wp.me/p4P5Ik-1l
பதிலளிநீக்குநன்றி சார்.
பதிலளிநீக்கு@ ராஜலக்ஷ்மி பரமசிவம்
I have read it madam / I shall get back soon . Thanks for the link Interesting experiences....!
நல்ல அனுபவங்கள் தான். வீடு கட்டும்போது ஏற்படும் அனுபவங்கள் இதை விட அதிகமாகவும் த்ரில்லிங்காகவும் இருக்கும்! :)
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ கீதா சாம்பசிவம்
மேடம் அனுபவங்கள் பலவிதம் . ஒவ்வொன்றும் ஒருவிதம் வருகைக்கு நன்றி
நல்ல வீட்டு ஓனரும்
பதிலளிநீக்குஅவருக்கு நல்ல டெனண்டும்
கிடைப்பது இந்தக் காலத்தில்
குதிரைக் கொம்புதான்.
வீடு சூப்பரா இருக்கு
வாடகைக்கு வருபவர்கள் அதிர்ஸ்டசாலிகள்
வாழ்த்துக்களுடன்...
எவ்வளவு அனுபவங்கள் சார்...அத்தனையும் சுவையான அனுபவங்கள்தான்...வீடு அழகாக இருக்கிறது சார்...
பதிலளிநீக்குமுன்பெல்லாம் உங்கள் பதிவுகல் எங்கள் பெட்டிக்கு (மின் அஞ்சல்) வந்துவிடும். இப்போது ஏன் வரவில்லை. வாராததால் நீங்கள் தளம் பக்கம் வரவில்லை போலும், பதிவுகள் இல்லை போலும் என்று நினைத்துவிட்டோம் சார். அதனால்தான் மிஸ் ஆகிவிட்டன பதிவுகள்...மிஸ் ஆனதை வாசிக்கின்றோம் சார்...
பதிலளிநீக்கு@ ரமணி
நானொரு நல்ல வீட்டு ஓனராகத்தான் இருக்கவேண்டும் இது வரை குடிவந்துபோனவர்கள் குறையேதும் சொல்லவில்லை. சுமூக நட்புடனே போனார்கள் வருகைக்கு நன்றி சார்
பதிலளிநீக்கு@துளசிதரன் தில்லையகத்து,
நான் எஒப்போதும் போல் என் பதிவுகளை மின் அஞ்சலில் அனுப்பிக் கொண்டுதான் இருக்கிறேன் ஒரு வேளை மும்முரத்தில் நீங்கள் கவனிக்கவில்லை போல் இருக்கிறதுவருகைக்கு நன்றி சார்/மேம்
அன்புள்ள ஐயா.
பதிலளிநீக்குஅருமை. நானும் இப்படித்தான் அனுபவித்துக்கொண்டிருக்கிறேன். என்னுடைய வீடுகளுக்கு வாடகைக்கு வருபவர்கள் விட்டுச்செல்ல மனமில்லாமல் செல்கிறார்கள். நான் அவர்கள் குடிவரும்போது சொல்வது என் வீட்டுக்கு வாடகைக்கு வருவது முதலும் கடைசியுமான இருக்கவேண்டும். இதைவிட்டுக் காலிசெய்து போகும்போது உங்கள் சொந்தவீட்டிற்குச் செல்லவேண்டுமென்று. ஆனாலும் ஒரு கசப்பான அனுபவம் ஏற்பட்டுவிட்டது. என் வீட்டிற்குக் குடிவந்த ஒருவருக்கு பிளாட் வாங்க பணம் வாங்கிக்கொடுத்தேன். அதன் விளைவு கசப்பான அனுபவம். நல்லபடியாக பிளாட் அமைந்தது. காலி செய்யும்போது கசப்புடனும் சொல்லாமலும் காலிசெய்துபோனார்கள். இதுபோன்ற நன்றிகெட்ட நிகழ்வுகளும் நடக்கின்றன. இருப்பினும் இப்பதிவு அருமை.
@ ஹரணி
பதிலளிநீக்குஐயா வணக்கம் சில இனிமையான நிகழ்வுகளுக்கு நடுவில் ஒரு சில கசப்பான அனுபவங்களும் இருக்கும் நாளை உகாதி பண்டிகை. இனிப்பும் வேம்பும் கலந்து உண்ணத் தருவார்கள் வாழ்வே இனிப்பும் கசப்பும் சேர்ந்தது என்பதைக் காட்டும் விதமாக. வருகைக்கு நன்றி ஐயா
பதிலளிநீக்குதங்களுடைய வீடு அழகாக இருக்கிறது. வீட்டிற்கு வாடகைக்கு குடியிருக்க வருவோர் தொந்தரவு கொடுப்பவராக இருந்தால் வீட்டு சொந்தக்காரருக்கு அது நரகம் தான். நல்ல வேளை உங்கள் வீட்டிற்கு வாடகைக்கு குடியிருக்க வந்தவர்கள் நல்லவர்கள். ஆடை வாய்ப்பதும் ஆம்படையான் வாய்பாப்தும் அதிர்ஷ்டக்காரிக்கு என்பார்கள். அதுபோல் நல்ல குடியிருப்பவர் கிடைப்பதையும் அதில் சேர்த்துக்கொள்ளலாம் போல.