Friday, April 22, 2016

எங்கள் வீட்டு மாமரம்


                                        எங்கள் வீட்டு மாமரம்
                                         ----------------------------------
  என் வீட்டில் இரண்டு மாமரங்கள் அடுத்தடுத்து இருக்கின்றன/ இதில் ஒரு மரம் வீட்டுக்கு வெளியே தான் காய்க்கும் அதிகம் காய்களைப் பார்க்க முடியாதுஎனக்கு மாமரத்திலும்  மலட்டு மரம் உண்டோ என்னும்  சந்தேகம் எழும்  இன்னொரு மரம் நன்கு காய்க்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நானே மரத்தில் ஏறி காய்களைப் பறிப்பேன்  என் மனைவிக்கு இது பிடிக்காது. மரம் ஏறி விழுந்து கிழுந்து விட்டால் என்ன செய்வது என்று பயம் எங்கள் மருத்துவரிடம் புகார் செய்வாள் எனக்கும் முன்பு போல் தைரியமும்  மரம் ஏறும் வாகும் வருவதில்லை மேலும் இப்போதெல்லாம் என் சொற்படி உடல் கேட்பது இல்லை. ஆக வீட்டு மொட்டை மாடியில் இருந்து கைக்கெட்டும்  காய்களே எங்களுக்கு  மரம் ஏற சிலரைக் கூப்பிட்டால் பெரிய சிவப்பு எறும்புகளின்  தொல்லையால் யாரும் ஏற முன்  வருவதில்லை. தொரடு வைத்து காய்களை எடுக்கும் போது அவை கீழே விழுந்து உடைந்து விடுகின்றன
எதையோ எழுத வந்தவன்  எதையோ எழுதிக் கொண்டு போகிறேன் வீட்டுக்கு வெளியே இருக்கும் காய்கள் பள்ளிப்பிள்ளைகளுக்கு  என்று நேர்ந்து விடப்பட்டது பள்ளி முடிந்து வீட்டுக்குப் போகும் பிள்ளைகள் சிறுமியர் அடக்கம் மரத்தில் கல்லெறிந்து காய்களை எடுக்க முயல்வார்கள் என் மனைவிக்கு பிள்ளைகள் கல் எறிவதில் உடன் பாடு இல்லை. கல் எங்காவது யார் தலையிலாவது விழுமோ என்னும் பயம் நான் என்  மனைவியிடம் அவர்களைத் தடுக்காதே என்பேன் இந்த வயதில் அல்லாமல் என் மாதிரி வயதானபின் இப்படிச் செய்ய முடியுமா

நானும் கிராமத்தில் என்  பாட்டி வீட்டில் இருந்தபோது எல்லா சேட்டைகளும் செய்தவன்  ஒரு விளையாட்டு. நண்பர்கள் குழு சேர்ந்து யாரிடமாவது  ஒரு பூவையோ காயையோ செடியின் இலையையோ பறித்துக் கொண்டு வரச் சொல்வார்கள் அந்தச் செடியோ பூவோ காயோ எந்த வீட்டில் இருக்கிறது என்று தெரிந்துகொண்டு  சொன்னதைப் பறித்துக் கொண்டு வர வேண்டும் சில வீடுகளின் கொல்லைப் புறத்துக்குப் போய் எடுத்து வருவதில் இருக்கும் த்ரில் இப்போது நினைத்தாலும் மகிழ்ச்சி தருகிறது
காயுள்ள மரம் கல்லடி படும் என்றும் சொல்லி இருக்கிறார்களேஆகவே என் வீட்டு மரத்தில் கல் எறியும் சிறார்களை நான்  வைவது இல்லை. காயம் பட்டுக் கொள்ளாதபடி  இருக்க எச்சரிக்கை செய்வதுண்டு. சில பிள்ளைகளுக்கு பயம் என்பதே இல்லை. ஒரு முறை மரத்தில் கல்லெறிவது கண்டு என் மனைவி யாரடா அது  என்று கேட்டுக் கொண்டு போனபோது நெஞ்சை நிமிர்த்தி  நாந்தான் ஆண்ட்டி என்று ஒரு சிறுவன் வந்ததைச் சொல்லிச் சொல்லி என் மனைவி அங்கலாய்ப்பாள் ஒரு முறை பையன்கள் கிரிக்கட் மட்டையை மரத்தில்  வீசி காய்களைப் பறிக்க முயன்றார்கள் மட்டை மரத்தில் சிக்கிக் கொண்டது என் மனைவி போய் பார்த்தபோது  மட்டையை எடுக்க ஒருவன் மீது ஒருவன் ஏறி நின்று எடுக்க முயன்று கொண்டிருந்தார்கள்  என் மனைவி அவர்களை எச்சரித்துவிட்டு தொரடைக் கொடுத்தாள் தொரட்டால் மட்டையை எடுத்துக் கொண்டதுடன் சில மாங்காய்களையும் அனுமதியுடன் பறித்துக் கொண்டார்கள்

எனக்கு என்ன குறை என்றால் நிறைய பழங்கள் யாருக்கும் உதவாமல் கீழே விழுந்து கெட்டுப் போகிறதுஎனக்கு யாரையும் மரம் ஏறச் சொல்ல பயமாய் இருக்கிறது யாருக்காவது ஏதாவது நடந்தால் நான் பொறுப்பேற்க வேண்டும் அல்லவாஅணில்கள் பாடு கொண்டாட்டம்தான் வீட்டின் அண்டை அயலாருக்கு  ஆவக்காய் ஊறுகாய் போட காய்களைக் கொடுப்பதுண்டு ஊறுகாய்க்கு காய்கள் விழுந்து அடிபட்டாலும் பரவாயில்லையே             
                   

 

                       


48 comments:

 1. உயரமான மரம் என்றால் மற்றவர்களை ஏற சொல்வது கஷ்டம். என் தங்கை வீட்டிலும் ஒரு மாமரம் மிகவும் உயரமாய் வளர்ந்து நிற்கிறது.

  ReplyDelete
 2. ஒன்றுக்கு மூன்று மாமரங்கள் இருந்தன எங்கள் வீட்டில்! அதில் ஒரு மாமரத்தின் பழம் மிக ருசியாக இருக்கும். இரு மரங்களை நாங்களே வெட்டும்படி ஆகிவிட்டது. வெட்டுவதற்குப் பணம் கொடுத்தோம். ஒரு மரத்திற்கு 750 ரூ என இரு மரத்துக்கு 1,500 ரூ கேட்டுப் பின்னர் ஆயிரம் ரூபாயில் பேரம் முடிந்தது. மிச்சம் இருந்த ஒரே ஒரு மாமரத்தையும் பக்கத்து ப்ளாட்டில் குடி இருப்பு வளாகம் கட்டும்போது கல், ஜல்லி, சிமென்ட், சுண்ணாம்பு எனப் போட்டுப் போட்டுப் பட்டுப்போக வைத்துவிட்டார்கள். இப்போ இருப்பவை நான்கு தென்னை மரங்கள் மட்டுமே! வாசலில் வேப்பமரமும் இருக்கிறது! :(

  ReplyDelete
 3. காய்களை நாங்களும் அதிகம் பறித்ததில்லை. ஏனெனில் எங்கு இருந்தும் பறிக்க முடியாது. மரத்தில் ஏறித்தான் பறிக்க முடியும். மரத்தில் ஏற எவரும் முன் வருவதில்லை! கீழே விழும் காய்களைத் தான் எடுத்துப்போம். துரட்டி கொண்டு ஒன்றிரண்டு பறிப்போம்.

  ReplyDelete
 4. மா மரத்தின் நினைவுகளில் உங்கள் மனசைப் பார்க்க முடிந்தது.

  உங்கள் வீட்டு மேல் மாடியில் மரம் இருக்கும் திசையில் கண்ணாடி பதித்த ஜன்னல்கள் இல்லை போலிருக்கு. :))

  ReplyDelete
 5. மாமரத்தைப் பற்றிய மலரும் நினைவுகள்..

  மாமரத்தில் கல்லெறிவதில் உள்ள சந்தோஷமே தனி..
  அதன் ஆபத்துகளைப் பற்றி சிந்திக்காமல் - விடலைப் பருவத்தில் விளையாட்டுகள்..

  மாம்பூவாக மணக்கின்றது - பதிவு.. வாழ்க நலம்..

  ReplyDelete
 6. மரத்தில் கல்லெறிந்து காய்களைக் கவர்ந்து
  தின்று மகிழ்ந்த இளமைக் கால நினைவுகள் நெஞ்சில் தோன்றுகின்றன ஐயா
  நன்றி

  ReplyDelete
 7. எனக்கு சிறு வயது நினைவுகள் ஞாபகத்திற்கு வந்தது ஐயா.

  ReplyDelete
 8. மாமரம்
  அருமையான எண்ணங்கள்

  உங்கள் பதிவுகளை இணையுங்கள்; நாம் மின்நூலாக்குகிறோம்!
  http://www.ypvnpubs.com/2016/04/blog-post_18.html

  ReplyDelete
 9. எங்கள் வீட்டிலும் மாமரம் உண்டு ஐயா
  இதே சிவப்பு எறும்பின் காரணமாக
  யாரும் ஏறமாட்டார்கள்...
  எனக்கு ஏறி பறிக்கலாம் என்றால்
  விபத்தில் கால் முறிந்ததால்...
  என்னால் ஏறிப்பறிக்க முடியாது...
  இருந்தாலும் தொரடு வைத்து
  நிறைய பறிக்கலாம்...

  ReplyDelete
 10. அந்த சிறுவர்கள் தா... தா... என்று கேட்பதற்கு முன்னரே அவர்கள் உண்ர்வை மதிக்கத் தெரிந்த,நீங்கள் ஒரு அதிசயத் தாத்தா.

  ReplyDelete
 11. பள்ளிக்காலத்தில் அடுத்தவீட்டில் மாங்காய் அடித்து உதை வாங்கிய நினைவு வந்துவிட்டது எனக்கு.

  ReplyDelete
 12. மாமரத்தின் நினைவுகள் எங்க வீட்டு மாமரத்தையும் நினைவில் நிறுத்திச் சென்றது.

  ReplyDelete

 13. @ கோமதி அரசு
  மூன்று நான்கு ஆண்டுகளுக்கு முன் வரை தெரிந்தபையன் ஒருவன் காய்கள் பறிப்பதில் உதவிக் கொண்டு இருந்தான் அவனுக்கு மணமாகி விட்டபின் தயங்குகிறான் சில காய்களும் அவற்றைப்பழுக்க வைத்தபின் பழங்களும் சுவைத்துக் கொண்டுதான் இருக்கிறோம்

  ReplyDelete

 14. @ கீதா சாம்பசிவம்
  ஸ்ரீரங்கம் வீட்டுக்கு வந்திருக்கிறேனே அந்தக் குடியிருப்பில் மாமரங்களா ?

  ReplyDelete

 15. @ கீதா சாம்பசிவம்
  ஊறுகாய் போடவும் கச்சாமாங்கோ ஜூஸ் செய்யவும் காய்கள் கிடைக்கின்றன. சில முற்றிய காய்களைப் பறித்துப் பழுக்க வைத்து உண்போம் அலாதி சுவை.

  ReplyDelete
 16. !@ ஜீவி
  மாமர நினைவுகளில் என் மனசைப் பார்க்க முடிந்ததா. நன்றி சார் மரம் வீட்டின் கொல்லைப் புறத்தில் சற்று தள்ளியே இருக்கிறது ஒரு சில கிளைகள் மொட்டை மாடிப்பக்கம் நல்ல வேளை கண்ணாடி ஜன்னல் ஏதும் இல்லை. வருகைக்கு நன்றி சார்

  ReplyDelete

 17. துரை செல்வராஜு
  மலரும் நினைவுகளா . நிகழும் நினைவுகள் ஐயா . அந்த நாளும் வந்திடாதோ

  ReplyDelete

 18. @ கரந்தை ஜெயக்குமார்
  சின்ன வயதில் நீங்களும் மரத்தில் கல்லெறிவீர்களா. வருகைக்கு நன்றி சார்

  ReplyDelete

 19. @ கில்லர்ஜி
  சின்ன வயது நினைவுகள் வராவிட்டால்தான் ஆச்சரியம் நன்றி ஜி

  ReplyDelete

 20. @ ஜீவலிங்கம் யாழ்பாவாணன் காசிராஜலிங்கம்
  வருகைக்கு நன்றி ஐயா எனக்குத் தெரிவித்து விட்டு என் எந்தப்பதிவையும் மின்னூலாக்கலாம் ஐயா

  ReplyDelete

 21. அஜய் சுனில்கர் ஜோசப்
  வருகைக்கும் மேலான பின்னூட்டத்துக்கும் நன்றி ஐயா கால் முறிவு என்றால் விவரம் போதவில்லையே

  ReplyDelete
  Replies
  1. ஐயா....
   நான்கு வருடங்களுக்கு முன்னால்
   ஒரு விபத்தில் தான் கால் முறிந்தது
   அதன் பிறகு நடப்பதே சற்று
   கடினமான ஒன்று....
   மூன்று அறுவை சிகிச்சைகளுக்கு
   பின் இப்போதுதான் குழந்தை
   போல் நடை பழகி கொண்டிருக்கிறேன்...

   Delete

 22. @ தி தமிழ் இளங்கோ
  சிறார்களில் நான் தொலைத்த நாட்களையும் என்னையும் காண்கிஏன் ஐயா

  ReplyDelete

 23. @டாக்டர் ஜம்புலிங்கம்
  நான் யாரிடமும் உதை வாங்கியதில்லை வருகைக்கு நன்றி ஐயா

  ReplyDelete
 24. @ பரிவை சே குமார்
  நான் எழுதி இருப்பது மாமர நிகழ்வுகள் குறித்தது இன்னும் நினைவுகளாகவில்லை. வருகைக்கு நன்றி சார்

  ReplyDelete
 25. //ஸ்ரீரங்கம் வீட்டுக்கு வந்திருக்கிறேனே அந்தக் குடியிருப்பில் மாமரங்களா ?//

  ஹாஹா, மன்னிக்கணும் ஐயா, நான் தெளிவாய்க் குறிப்பிடவில்லை. நான் சொன்னது சென்னையில் எங்கள் அம்பத்தூர் வீட்டில்! :) அந்த வேப்பமரம் குறித்துப் பலமுறை எழுதி இருக்கேன். :)

  ReplyDelete
 26. ஜீவி சொல்லியிருப்பது எனக்கும் தோன்றியது.

  revenant படம் பார்த்தீங்களா? அதுல 'turns out god is a squirrel'னு ஒரு வசனம் வரும்.. அதுவும் நினைவுக்கு வந்தது. (படம் பாக்கலேன்னா பாத்துட்டு திட்டாதீங்க - வசனம் context அப்படி:-)

  ReplyDelete
 27. ஊரில் இருக்கும் போது மாமரங்களில் ஆடிய ஆட்டம் உங்களின் பதிவு மூலம் அசைபோடுகின்றேன்.உயர்ந்த மரம் என்றால் மிகவும் அவதானத்துடன் ஏற வேண்டும்.

  ReplyDelete
 28. எங்கள் வீட்டு கதையை படித்தது போலவே இருக்கிறது. இரண்டு மாமரங்கள் தற்போது காய்த்துக் கொண்டிருக்கிறது. வீடு கட்டப் போவதால் வெட்ட மனமின்றி தள்ளிப் போட்டுக் கொண்டே வருகிறேன்.இப்போதும் மரத்தில் ஏறிப் பறிப்பது உண்டு மரம் வெட்ட வேண்டும் என்று பேசிக் கொண்டிருப்போம்.ஏதோ கோபம் கொண்டது போல கடந்த ஆண்டு மாங்காய் இரண்டு மரத்திலும் காய்க்கவில்லை. வீட்டுக்கு வீடு மரம் வளர்க்க சொல்கிறார்கள். ஆனால் சென்னையில் மரம் வளர்ப்பது எளிதல்ல. குப்பைகளை அகற்றுவதும் பக்கத்து வீட்டில் எட்டிப் பார்க்கும் கிளைகளை அகற்றுவது கூட கடினமல்ல அதை அப்புறப் படுத்துவதற்கு ஏராளமாக செலவு செய்ய வேண்டி இருக்கிறது தென்னை மரங்களுக்கும் இதே கதைதான். தேங்காய் பறிப்பதற்கான கூலி, கிடைக்கும் தேங்காய்களின் விலையை விட மிகஅதிக மாக இருக்கிறது அதனால் விழும் தேங்காயை மட்டும் பயன்படுத்துகிறோம். அக்கம்பக்கத்து வீடுகளெல்லாம் மரம் செடி கொடிகளை இழந்து ஃபிளாட்களாக மாறிவிட எங்கள் வீட்டில் மட்டும்தான் ஒரு சில மரங்கள் உள்ளன.மே மாத்தத்தில் கூட எங்கள் வீட்டில் வெயில் தெரியாது.இப்போது அதுவம் மாறப் போகிறது .
  இதனைப் பற்றிய பதிவும் விரைவில் எதிர்பார்க்கலாம்

  ReplyDelete

 29. @ கீதாசாம்பசிவம்
  என்னைப் போல் இருப்பவர்கள் படித்துபிறகு மறந்துவிடுவதில்லை. சந்தேகம் வந்ததால் சில நேரங்களில் கேட்கத் தயங்குவது உண்டு. வருகை தந்து சந்தேகம் தீர்த்தமைக்கு நன்றி மேம்

  ReplyDelete

 30. @ அப்பாதுரை
  நான்தான் ஒரு திறந்த புத்தகமாயிற்றே. சினிமா பார்த்துஆகிவிட்டது ஆண்டுகள். அதுவும் ஆங்கிலப் படங்கள்...... படம் பார்த்துக் கதை சொல்லும் கேஸ் நான் வசனம் எல்லாம் புரிந்து கருத்து சொல்வது நினைக்கவே முடியவில்லை. வருகைக்கு நன்றி சார்

  ReplyDelete

 31. @ தனிமரம்
  இப்போதெல்லாம் நானும் ஏறுவதில்லை. யாரையும் ஏறச் சொல்லவும் பயம் வருகைக்கு நன்றி சார்

  ReplyDelete

 32. @ டிஎன் முரளிதரன்
  புரிகிறது முரளி. ஒரு முறை இடி விழுந்து பட்டுப்போன தென்னை மரத்தை வெட்டியது பற்றி கருணைக் கொலை என்று எழுதி இருந்தேன் என் வீட்டில் இப்போது இருக்கும் ஒரே தென்னை மரத்தில் காய்க்கும் காய்களை எடுப்பதும் சிரமமாய் இருக்கிறது காய்கள் சாலையில் கீழே விழுவதில் அபாயமும் இருக்கிறது மரம் ஏறிக் காய்கள் பறிக்க ரூ500-/ க்கும் மேல் கேட்கிறார்கள் எப்படியோ பாலன்ஸ் செய்துபோகிறேன் வருகைக்கு நன்றி சார்

  ReplyDelete
 33. மரங்களின் சகவாசத்துடன்கூடிய அருமையான வீடு உங்களுடையது. நீங்களும் உங்கள் மனைவியும் பாக்கியசாலிகள் என்பேன்.

  உங்கள் மாமரக்கதையில், வெளியே இருக்கும் காய்கள் பள்ளிப்பிள்ளைகளுக்கு என்று நேர்ந்து விடப்பட்டது என்கிறீர்கள். பிள்ளை மனசு உங்களுக்கு. உங்கள் மனவோட்டம் சரிதான். பிள்ளைகள் இந்த வயதில் கல்லெறியாமல், மரம் ஏறாமல் பிறகு எங்கே அவர்களுக்கு இதற்கெல்லாம் நேரம் வாய்க்கப்போகிறது. எந்தப் பிள்ளை எங்கே போய் எப்படி வாழப்போகிறதோ? இந்தக் குழந்தைகள் தங்கள் சிறுபிராயத்தை ஆசையாய் நினைவு கூர்வார்கள். ஒரு நாள், தங்கள் பிள்ளைகளுக்குக் கதையாய்க் கூறுவார்கள்.

  இருந்தாலும், யாரையாவது கல் தாக்கிவிடப்போகிறதே என்கிற உங்கள் மனைவியின் கவலையும் நியாயமானது.

  என் இளமைக்கால கிராம வாழ்க்கையை நினைவுக்குக்கொண்டு வந்தது உங்கள் மாமரக்கதை. வாழ்வின் அதிரசமான பகுதி.

  ReplyDelete
 34. சுவாரஸ்யமான நினைவுகள்.

  சிறுவர்களை மகிழ்ச்சிப் படுத்திப் பார்ப்பதில் நமக்கும் மகிழ்ச்சி.

  ReplyDelete
 35. @ ஏகாந்தன்
  உணர்ந்து எழுதிய பின்னூட்டத்துக்கு நன்றி சார் பெங்களூரில் இருந்தால் மறு முறையும் வரலாமே ஊறுகாய் போட சில மாங்காய்கள் கிடைக்கலாம்

  ReplyDelete

 36. @ ராமலக்ஷ்மி
  ஒரு சிறு திருத்தம் மேடம் சுவாரஸ்யமான நினைவுகள் அல்ல நிகழ்வுகள் எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றும் அறியேன் வருகைக்கு நன்றி மேம்

  ReplyDelete
 37. பெங்களூரில்தான் இருக்கிறேன். வர முயற்சிக்கிறேன். ஊறுகாய்க்கு மாங்காய் கிடைக்காவிட்டாலும் வருவேன்!

  ReplyDelete

 38. @ ஏகாந்தன்
  உங்கள் வருகையை எதிர்நோக்கி இருக்கிறேன் நன்றி சார்

  ReplyDelete
 39. மாமரத்தை வைத்து ஒரு நல்ல பதிவு. உண்மையில், இப்படி வீட்டில் நடக்கும் சுவையான நிகழ்வுகள், சொந்த அனுபவங்கள் ஆகியவற்றைப் பகிர்ந்து கொள்ளத் தொடங்கப்பட்டதுதான் பிளாகர். என்னைப் போன்றவர்கள்தாம் தேவையில்லாமல், பக்கத்து வீட்டுக்காரன் அடாவடி முதல் பிரதமரின் நாடாளும் திறன் வரை எல்லாவற்றையும் விமரிசித்து விட்டுப் பிரச்சினையில் மாட்டிக் கொள்கிறோம்!

  எங்கள் வீட்டில் எல்லாருக்கும் மாமரம் என்றால் விருப்பம்தான். ஆனால், வைக்க இடம்தான் இல்லை. பக்கத்து வீடு பெரியது. கொத்துக் கொத்தாய் மாவும் கொய்யாவுமாய்க் காய்த்துத் தொங்கும். ஆனால், வயது முதிர்ந்த அந்த அம்மாள் வீட்டை விற்றுவிட்டுப் போய்விட்டார். 2400 சதுர அடி கொண்ட அந்த இடத்தை வாங்கியவர்கள் அதை இரு பகுதியாக விற்பதற்காக, பார்ப்பதற்கு நிறைய இடம் இருப்பது போல் தெரிய வேண்டும் என்பதற்காகவோ என்னவோ மரங்களையெல்லாம் வெட்டி விட்டார்கள். என் அம்மாவும் சித்தி மகனும் அங்கலாய்த்துக் கொண்டார்கள். என்ன செய்வது? அவர்கள் இடம், அவர்கள் வெட்டுகிறார்கள்.

  மா, நெல்லி, கொய்யா ஆகிய மரங்கள் சிறுவர்களை ஈர்ப்பவை. நீங்கள் ஒரு முழு மரத்தையே சிறுவர்களுக்காக விட்டு வைத்திருப்பது பெரிய கொடை! சிறுவர்கள் மட்டுமல்லாமல், நீங்கள் குறிப்பிட்டது போல் அணில்கள், பறவைகள் என எத்தனை சிறிய உயிர்கள் அதில் பசியாறும்! மாமரம் இல்லாவிட்டாலும் எங்கள் வீட்டுக் கொய்யா மரத்திலும், மலைவேம்பு மரத்திலும் எத்தனை உயிர்கள் அடைக்கலமாயிருக்கின்றன என்பதைப் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறேன். எனவே, நீங்கள் வருந்த வேண்டியதேயில்லை. யாருமே பறிக்காமல் கீழே விழுந்தாலும் அதுவும் மண்ணுக்கு உரம்தானே! மனிதனைப் போல் பிளாச்டிக், பாதரசம், பாலித்தீன் எனத் தன்னால் செரிக்க இயலாத எதையும் இயற்கை படைப்பதில்லை. ஆகவே, இயற்கையின் படைப்பில் எதுவுமே வீணாவதில்லை.

  ReplyDelete

 40. @ இபு ஞானப்பிரகாசன்
  உங்கள் பின்னூட்டத்துக்கு மறு மொழியாக ஒரு நீண்ட பதில் எழுதிக் கொண்டிருக்கும்போது இண்டெர்னெட் கனெக்‌ஷன் போய் விட்டது. ஒரு நாளைக்குப் பின் இப்போது வந்தது வலையில் எழுதுவதற்குப் பலருக்குப் பல காரணங்கள் எழுதுவது அவரவர் விருப்பம்/ சுயதர்மம் பொறுத்தது நான் இம்மாதிரிப் பதிவுகளை ஒரு மாற்றத்துக்காக எழுதுகிறேன் அரசியல் சினிமா தவிர்த்து எனக்குத் தோன்றும் அனைத்துப் பொருண்மையிலும் எழுதுகிறேன்கதை கவிதை கட்டுரை நாடகம் நாவல் என்று எல்லாவற்றிலும் எழுதிப்பார்த்திருக்கிறேன் இலக்கியங்களையும்விட்டு வைக்க வில்லை. சாதாரணன் ராமாயணம் அப்படியான என் முயற்சி. ஆறு காண்டங்களையும் ஒரே வாக்கியத்தில் எழுதி இருக்கிறேன் கிருஷ்ணாயணம் அவதாரக் கதைகளென்றெல்லாம் எழுதி இருக்கிறேன் என் ஆதங்கங்களைக் கொட்டும் பதிவுகளும் உண்டு என் பழைய பதிவுகளைப் படித்துப் பாருங்கள்மரங்களின் பதிவின் நீட்சியாக என் அடுத்தபதிவும் இருக்கிறது வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் நன்றி ஐயா

  ReplyDelete
 41. நான்கு வருடங்களுக்கு முன்பு வரை கூட மரத்தில் எரிக் கொண்டிருந்தீர்களா! அட!

  எங்கள் வீட்டில் நெல்லி மரம் ஒன்று இருந்தது. அதில் எங்கள் அப்பா வேட்டியைத் தார்ப்பய்ச்சிக் கட்டிக்கொண்டு ஏறி காய் பறிப்பார். அது ஒரு காலம். எங்கள் வீட்டில் மாமரம் இருந்தது கிடையாது. அதனால் குறை ஒன்றும் இல்லை. இருப்பவனுக்கு ஒரு வகை மாங்காய்... இல்லாதவனுக்குப் பலவகை!

  ஒருமுறை என்னையும் என் நண்பனையும் ஜட்ஜ் வீட்டு காவலாளி மோட்டார் ரூமில் அடைத்து வைத்து மிரட்டியதும், வாண்டையார் வீட்டில் சுவரேறிக் குதித்ததும் பிரம்மாண்ட நாய்கள் ஓடி வந்ததும் மறக்க முடியாத நினைவுகள்.

  ReplyDelete
 42. எங்கள் வீட்டிலும் மாமரம் உண்டு. வீட்டுக் காய் பழங்கள்தான். வெளியில் வாங்குவதில்லை. தோட்டத்தில் காய்ப்பதுதான். நல்ல நினைவுகள் சார். எங்கள் வீட்டிலும் ஊறுகாய் போடுவதுண்டு ஆனால் ஆவக்காய் என்றெல்லாம் இல்லை. சும்மா போடுவதுண்டு...

  கீதா: சார் எனது சிறிய வயது நினைவுகளை அப்படியே உங்கள் பதிவின் மூலம் கொடுத்துவிட்டீர்கள். நான் மரத்தில் ஏறி மாங்காய் பறித்ததுண்டு. கிளைகள் உள்ள எல்லா மரங்களிலும் ஏறிவிடுவதுண்டு. தொரட்டி கொண்டு பறித்ததும் உண்டு...மாங்காய் சீசன் என்றாலே வீட்டில் பழங்களும் காய்களும் நிறைந்திருக்கும். கேரளத்து மோர்க்கூட்டான், தமிழ்நாட்டு மோர்க்குழம்பு, மாங்காய் பருப்பு, மாங்காய் சாம்பார், மாங்காய் பச்சடி, அடமாங்காய், வற்றல், கட் மாங்காய், இது அப்போது. அணில்கள், பறவைகள் என்று வீடு இயற்கையுடன் ஒன்றி இருக்கும்...அப்போது

  இப்போதும் மாமியாரின் வீடு தனி விடானதால் வீடு முழுவதும் மரங்கள் அதில் மாமரங்கள் இரண்டு. மேற் சொன்னவற்றுடன் மாம்பழ ஜாம் , மாம்பழ பிரதமன் மாம்பழ மில்க் ஷேக் என்று விதவிதமாகச் செய்வதுண்டு சார்....மாம்பழ குஜராத்தி ஊறுகாய் செய்வதுண்டு மாமியார் வீட்டு மாங்காய்களில் அணில்கள் காக்கைகள் எல்லாம் தின்றுவிட்டு மீந்ததில். மாமியார் வீடும் அணில்கள்,காக்கைகள்ம் கிளிகள் என்று அழகாக இருக்கிறது சார். அணில்கள் சண்டை போடுவதைப் பார்த்திருக்கிறீர்களா சார். கீச் கீச் என்றுக் கத்திக் கொண்டு துரத்திக் கொண்டு, டாமினேட் செய்யும் அணில் பிற அணில்களை வர விடாது...அழகாக இருக்கும் பார்க்க...

  ReplyDelete
 43. ஏறிக் கொண்டிருந்தீர்களா என்று படிக்கவும். தட்டச்சுப் பிழை.

  ReplyDelete

 44. @ ஸ்ரீராம்
  நான்கு ஆண்டுகளுக்கு முன்புவரை என்று நான் சொல்லவே இல்லையே. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை என்றுதான் எழுதி இருக்கிறேன் அது ஆயிற்று ஏழெட்டு ஆண்டுகளுக்கும் மேல்.
  /இருப்பவனுக்கு ஒரு வகை மாங்காய்... இல்லாதவனுக்குப் பலவகை!/ சரிதான் வீட்டில் மாம்பழம் இருக்கும் போது வெளியில் வாங்க மனம் வருவதில்லை அந்த நாள் ஞாபகம் இனிமைதானே வருகைக்கு நன்றி ஸ்ரீ

  ReplyDelete

 45. @ துளசிதரன் தில்லையகத்து,
  கீதா நான் மாமரம் பற்றி எழுதி இருப்பது நினைவுகள் அல்ல. தற்கால நிகழ்வுகள் மாம்க்காய் கொண்டு கச்ச மாங்கோ ஜூஸ் வெயிலுக்கு நல்லது எனது பூவையின் எண்ணங்கள் தளத்தில் பதிவு ஒன்று எழுதி இருக்கிறேன் வருகைக்கு நன்றி மேம்

  ReplyDelete
 46. @ துளசிதரன் தில்லையகத்து
  மேலே பச்சை மாங்காய் கொண்டு செய்யும் கச்சா மாங்கோ ஜூஸ் என்று திருத்திப் படிக்கவும் அவசரம் தவறாக எழுத வைத்தது நன்றி

  ReplyDelete

 47. @ அஜய் சுனில்கர் ஜோசப்
  விபத்துபற்றி கேட்டு மனம் வலிக்கிறது. மனதைத் தளரவிடாதீர்கள் உங்கள் தளம் கவிதையாய் இருப்பதால் கருத்து இட சங்கடம் தெரிய வைத்ததற்கு நன்றி சார்

  ReplyDelete