அரசியல் நினைவுகள்
----------------------------------
தமிழகத்தில் தேர்தல் சூடு பிடிக்கிறது
மேலும் அரிசியிலும் ஏழை அரிசி, பணக்காரன் அரிசி, ரேஷன்
திமுகவினர் தங்களது குறைபாட்டுகளுக்கெல்லாம் காரணம்
----------------------------------
தமிழகத்தில் தேர்தல் சூடு பிடிக்கிறது
தேர்தல் வாக்குறுதிகளும் செயல்பாடுகளும்
1965-ம் ஆண்டு
வாக்கில் நான் சென்னையில் பணியில் அமர வந்தேன்அதன் பின் 25
ஆண்டுகளுக்கும் மேல் தமிழ்நாட்டில் வசித்தேன் நண்பர்திரு வாசன்
அவர்கள் என் உத்தயோக காலத்தில் அரசு
நடவடிக்கைகளை ,செயல்பாட்டை எப்படி பொறுத்துக்
கொண்டேன் என்று வினவி இருந்தார். அந்த காலத்திய
எண்ணங்களுக்கு வடிகாலாய் நான் எழுதி வைத்திருந்தது
இப்போது இங்குமீள் பதிவாகிறது. நன்றி வாசன்
.
நடவடிக்கைகளை ,செயல்பாட்டை எப்படி பொறுத்துக்
கொண்டேன் என்று வினவி இருந்தார். அந்த காலத்திய
எண்ணங்களுக்கு வடிகாலாய் நான் எழுதி வைத்திருந்தது
இப்போது இங்குமீள் பதிவாகிறது. நன்றி வாசன்
.
திமுக ஆட்சி.............
முதல் நூறு நாட்கள்.
---------------------------------------------------------
திமுக ஆட்சி வெற்றியா அல்லவா என்பதை ஆட்சி
பீடத்தில் அமர்த்திய முதல் நூறு நாட்களில் ஆராய்வதே சரியா
தவறா என்பது முதலில் சிந்திக்கப்பட வேண்டிய விஷயம்.
இருப்பினும் முதல் நூறு நாட்களில் வெற்றி பெறுவதற்கான
வழிமுறைகளை வகுக்கிறார்களா,கையாளுகிறார்களா என்பதை
சிந்தித்து நோக்கி விளக்கம் காண முயலுகையில் பெரும்
ஏமாற்றமே ஏற்படுகிறது. இவர்கள் பெரியதாக சாதித்து
விடுவார்கள் என்று நம்பி, அது பலனடையாமல் போவதை
கண்ணாரக் காண்பதால், ஏற்பட்டதல்ல ஏமாற்றம்; ஏழைப் பாமர
மக்களை அடுக்குமொழி அலங்கார வாய் சொற்களை வீசி மயக்கி
பதவியில் அமர்ந்ததனாலும் ,நடுத்தர மக்களை அவர்களை வாட்டி
கொண்டிருந்த பசி போக்கும் அரிசியின் விலை ஏற்றத்தைக் காட்டி
ரூபாய்க்கு மூன்று படி அரிசி போடுவோம், என்று பசப்பு மொழி
கூறி, அரசியலை அரிசி இயலாக்கி காண்பதாலும், இள
வயதினரின் தமிழ் பற்றை மொழி வெறியாக மாற்றி, அதன் மூலம்
ஆட்சியை அடைந்தவர்களின் சாதனையைக் காண்பதனாலும்
ஏற்படும் வருத்தம் , இவர்களது நடைமுறைக் கொள்கைகளையும்
வழிமுறைகளையும் அறியும்போது ஐயகோ இந்த அவல
நிலைக்கு ஆளாகிறோமே என்ற ஏக்கப் பெருமூச்சுதான் ஏமாற்ற
மாகப் பிரதிபலிக்கிறது.
அனைத்திந்தியாவிலும் யாரும் எண்ணியும் பார்க்க முடியாத
விஷயம் ரூபாய்க்கு மூன்று படி அரிசி என்பது. மற்றவர்களுக்குத்
தெரியாத மாய மந்திரங்களும் இந்திர ஜாலங்களும் இவர்களுக்குத்
தெரியுமோ என்னவோ; இல்லை, நாங்கள் அரிசி போடுகிறோம்
ஆனால் மத்திய அரசு குறுக்கே நிற்கிறது என்று சொல்ல மற்றவர்
களுக்குத்தான் தெரியவில்லையோ.!ஏழைப் பாட்டாளியை
ஏமாற்றுவதில் கைதேர்ந்த வாய்ச்சொல் வீரர்கள் இன்னொன்றும்
கூறுகிறார்கள். ரூபாய்க்கு ஒரு படி அரிசி என்று ஆரம்பிக்கிறோம்
ஆனால் அதற்கு பொறுப்பு மத்திய அரசு ஏற்கவேண்டும். காஷ்மீர்
மக்களுக்கு மட்டும் கோதுமை எப்படி குறைந்த விலைக்கு கொடுக்
கிறார்கள் ? காஷ்மீரில்
இருக்கும் அபாயம் தமிழகத்தில் இருக்கக்
கூடாதா.?இவர்களுடைய சாயம் வெளுக்க வில்லையா.பயம்
காட்டப் பார்க்கிறார்கள். நாட்டு மக்களின் ஒற்றுமைக்கு குழி
வெட்டப் பார்க்கிறார்கள். இதே கதியில் ஒவ்வொரு மாநில அரசும்
கூற முடியாதா.?கூறினால் ஏற்படும் பலன் அறிய முடியாததா ?
இவர்களுக்கு ஒட்டுக் கொடுத்து ஆட்சி பீடத்தில் ஏற்றிய மக்கள்
நெஞ்சு கொதிக்காதா?
மேலும் அரிசியிலும் ஏழை அரிசி, பணக்காரன் அரிசி, ரேஷன்
அரிசி,கடைஅரிசி என்று என்னவெல்லாமோ கூறுகிறார்கள் ஐயா,
ஏழை அரிசிதான் ரூபாய்க்கு ஒரு படி தருகிறேன் என்கிறாயே,
அதை ஏன் எல்லா மாவட்டங்களுக்கும் பொதுவாக்கக் கூடாது.
நான் அடிக்கிறார் போல் அடிக்கிறேன் நீ அழுகிறாற்போல் அழு
என்று சொல்வார்களாம். அதுபோல இவர்கள் ரூபாய்க்கு ஒரு படி
போடுகிறார்போல் போடுகிறார்களாம் நாம் பெறுகிற மாதிரி
பெற வேண்டுமாம். என்னே இவர்களது புத்திசாலித்தனம் !
தேர்தல் வாக்குமூலத்தை நிறைவேற்றுகிறாற்போல் நடிப்பு,
அதுதான் அவர்களுக்கு கைவந்த வித்தை ஆயிற்றே.
ஆட்சி மொழியை எடுத்துக்கொள்வோம் .தமிழை பாதுகாப்பதாக
கூறுகிறார்கள். எப்படி.? பலகை எழுதுவதன் மூலமும், சினிமா
மூலமுமா.?ஒன்று மட்டும் கூறுகிறேன். தமிழனுக்கு மொழி பற்று
உண்டு.ஆனால் அதையே ஊதி வீசி வெறியாக்க முனைகிறார்கள்
திமுகவினர்.
இவர்களின் அடுக்குமொழி வாதங்களைக் கேட்டு
இவர்கள்தான் தமிழை தோற்றுவித்து ,பேணிக் கட்டிக்
காக்கிறார்கள் என்று எண்ணும் இளைஞர்கள இன்று இல்லா
விட்டாலும் என்றாவது ஒருநாள் விழிக்கப் போகிறார்கள், பின்
மனம் நொந்து கொதிக்கப் போகிறார்கள்.ஆனால் அதற்கு முன்பே
போட்டி மிகுந்த இந்த சமுதாயத்தில் அவர்கள் பின் தங்கி விடக்
கூடாதே என்பதுதான் என் வருத்தம். இப்போது பள்ளிகளில்
தமிழும் ஒழுங்காயில்லை, ஆங்கிலமும் சரியில்லை, இந்தியோ
இல்லவே இல்லை. திணிக்கப்படும் இந்தியை எதிர்த்து நிற்கட்டும்
கூடவே விரும்பிப் படிப்பவருக்கு சந்தர்ப்பம் கொடுக்கலாமே.
ஆங்கிலம் போதிக்கப்படும் தரத்தை உயர்த்தலாமே. ஆக்க
வேலையில் ஈடுபடுபவனுக்கு ஊக்கம் கொடுக்கலாமே.
மதுவிலக்கு திட்டம் பொறுத்தவரை திமுகவின் கொள்கைகள்
மதில்மேல் பூனைக்கு ஒப்பிட முடியும். என்ன செய்வதென்று
புரியாமல் மக்களின் தீர்ப்புக்கு விடுகிறோம் என்று சப்பை கட்டு
கட்டுகிறார்கள். இவர்களுடைய முடிவினால் ஏற்படும்
விளைவுகளின் பொறுப்புக்கு ஆளாக மறுக்கிறார்கள். இவர்களே
இவர்களின் நிலை புரிந்து கொள்ளாத பரிதாப நிலை. !குதிரைப்
பந்தயங்களை ஒழிப்போம் என்கிறார்கள். இப்போது காசு
வைக்காமல் ஆடும் பந்தயங்கள் பரவாயில்லை என்கிறார்கள்
இந்த மாதிரி விஷயங்களில் இவர்கள் இன்னும் ஒரு முடிவுக்கு
வராததைக் காணும்போது, இன்னும் ஒன்றும் கேட்டுப் போக
வில்லை என்ற மன ஆறுதல் ஓரளவுக்கு ஏற்படுகிறது.
இன்னும் என்னென்ன வேடிக்கைகள். தொண்டர் படை
அமைக்கப் போகிறார்களாம். எதற்கென்று கேட்கிறோம். சீனச்
செங்காவலர் படையினை முன்னோடியாகக் கொள்ளும்
திமுகவினரின் தொண்டர் படை, அண்ணாவின் எண்ணங்களை
மக்கள் மீது திணிக்கவா.?கிடைத்த ஆட்சிக்கு வன்முறை நீர்
ஊற்றி வேரூன்றப் பார்க்கிறார்களா.? செயலால் ஏற்படுத்த
முடியாத வெற்றிக்கு "தம்பிகளின்" ஆர்வ வெறியால் அஸ்தி
வாரமிடப் பார்க்கிறார்களா.?
கலப்பு மணம் செய்பவருக்கு தங்கப் பதக்கமாம்..!கண்டதும்
காதல் என்ற மோகம் அலைக்கழிக்க பால் உணர்ச்சிக்குப் பலி
யாகி, வெறியைத் தணிக்க சற்றே வளைந்து கொடுத்து, சுய
மரியாதைத் திருமணம் செய்து கொள்பவர்களின் வாழ்க்கை
எவ்வளவு தூரம் வெற்றி பெறுகிறது என்பதன் புள்ளி விவரங்கள்
இவர்களுக்குத் தெரியுமா.? திருமணம் என்பது ஆயிரம் காலப்
பயிர். ஆணும் பெண்ணும் உள்ளங்க்கலந்து ஒருமித்துச் செயல்
படவே என்றிருக்கும் வாழ்க்கைத் தோணி. இதில் தூண்டுதல்
என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆசை வார்த்தைகளுக்கும் தங்க
பதக்கங்களுக்கும் அர்த்தமே இல்லை. கலப்புத் திருமணங்கள்
நடந்து வெற்றி பெற தங்கப் பதக்கங்கள் உதவாது. ஒரு சமயம்
அடகு வைக்க உதவலாம், அதுவும் நல்ல தங்க மானால்.!
திமுகவினர் தங்களது குறைபாட்டுகளுக்கெல்லாம் காரணம்
மத்திய அரசுதான் என்கிறார்கள். இந்திய சட்ட அமைப்புப்படி
ஏற்படுத்தப்பட்ட மாநிலங்களின் உரிமைகளைக் கொண்டு
இவர்களால் இதற்குமேல் சாதிக்க முடியுமா என்பதே கேள்வி.
சாதிக்கிறோம் என்று விசுவாசப் பிரமாணம் எடுத்துக்கொண்டு.
ஆட்சியில் இருக்கிறார்கள்.முடியாத போது சட்ட அமைப்புதான்
காரணம் என்று கூறி தப்பிக்க முயல்வது, ஏமாற்று வித்தை.
முடிவாக நூறு நாட்களில் இவர்கள் சாதித்ததைக் கண்டும்,
சாதிக்கப்போவதாக கூறி எடுத்து நடத்தும் வழிமுறைகளை
காணும்போதும், வருத்தமும் ஏமாற்றமுமே மிஞ்சி நிற்கும்.
தமிழக மக்கள் இவர்களது ஆட்சியை வெற்றி என்று எப்படி
கூறுவர்.? ஏமாற்றிப் பதவியில் அமர்ந்ததே திமுகவின் வெற்றியே
தவிர, இவர்களின் ஆட்சிப் போக்கு வெற்றியே அல்ல
( அந்தக்கால சிந்தனைகளின் அன்றே எழுதிய வடிகால் வரிகளே இவை )
காரணம் என்று கூறி தப்பிக்க முயல்வது, ஏமாற்று வித்தை.
முடிவாக நூறு நாட்களில் இவர்கள் சாதித்ததைக் கண்டும்,
சாதிக்கப்போவதாக கூறி எடுத்து நடத்தும் வழிமுறைகளை
காணும்போதும், வருத்தமும் ஏமாற்றமுமே மிஞ்சி நிற்கும்.
தமிழக மக்கள் இவர்களது ஆட்சியை வெற்றி என்று எப்படி
கூறுவர்.? ஏமாற்றிப் பதவியில் அமர்ந்ததே திமுகவின் வெற்றியே
தவிர, இவர்களின் ஆட்சிப் போக்கு வெற்றியே அல்ல
மிக மிகச் சரியாகப் பதிவு செய்துள்ளீர்கள்
பதிலளிநீக்குஇப்போதையவர்களும் தெரிந்து கொள்ளவேண்டும் அல்லவா ?
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
அருமையாக அலசி இருக்கின்றீர்கள் ஐயா
பதிலளிநீக்குகாஷ்மீரில் 1947-லில் உள்ள விலைதான் இன்றுவரை என்று நான் படித்து இருக்கின்றேன் இதற்காக அரசு வருடத்திற்கு பலகோடி ரூபாய்களை ஒதுக்குகின்றது இது எந்த அளவு உண்மை என்பது தெரியவில்லை
இதனைக் குறித்து நான் காஷ்மீரியர்களிடம் கேட்க வேண்டும்.
அதேபோல் அங்கு பிற மாநிலத்தவர் நிலம் வாங்க முடியாது
நல்ல பதிவு.
பதிலளிநீக்குஅன்றும் இன்றும் ஒரே நிலைதான் மாற்றமில்லை!
பதிலளிநீக்குநன்றாக அலசி உள்ளீர்கள்
பதிலளிநீக்குதங்கள் பதிவுகளை இணைத்து மின்நூல் ஆக்க உதவுங்கள்
http://tebooks.friendhood.net/t1-topic
நல்லதொரு அலசல், பார்க்கலாம், இப்போது எப்படி முடிவுகள் வரப் போகிறது என்பதை! :) எப்படியும் இந்த இரு கட்சிகளுக்குள் ஒன்று தான் வரும்! :(
பதிலளிநீக்குஅன்புள்ள ஐயா....
பதிலளிநீக்குஅரசியல் நினைவுகள்
அருமையான பதிவு(பகிர்வு)
அரசியல் என்றாலே
பயமாக உள்ளது
நம் வாழ்க்கை கூட
அரசியல்வாகளுக்கு
விளையாட்டு பொருளாய்
ஆக்கப்பட்டதால்....
இளம் தலைமுறைக்கு ஒரு அறிமுகம்..
பதிலளிநீக்குGRB ஐயா , தாங்கள் ஐம்பாதாண்டுகளுக்கு முன்பு தாங்கள் உணர்ந்தது நிஜமாகி விட்டது.
ஆனால் அந்த கழக, விஷ விருட்ஷம் நாம் நினைத்தை விட வேகமாய்
வளர்ந்து , நல்ல செடிகளையெல்லாம் அழித்து தான் மட்டுமே என்ற
அகம்பாவத்தோடு "வேலி கருவல் மரக்கூட்டம்" போல் திமுக, ஆதிமுக,
என பல கழகங்க்களாய் பிரிந்து, பிணைந்து தேசத்தின் எல்லா இயற்கை
வளத்தையும் சுரண்டி முழுங்கிவிட்டு இப்போது காறிறில் உள்ள ஈர பதத்தையும் உறிஞ்சும் நச்சு குணத்தோடு காற்றின் அலைகளிலும் ஊழல் செய்து நாட்டில் ஈரமே இல்லாமல் செய்து விட்டார்கள்.
இதைப் படிப்பவர்கள் சென்ற தலைமுறையினரை ஏமாற்றிய அதே கழகம் இன்னும் எப்படியெல்லாம் பொய் வாக்குறுதிகளைக் கொடுத்து ஆட்சிக்கு வருவதை மட்டுமே குறிகோளாய் அதிகார வெறி பிடித்து வருகிறார்கள் பல கழகங்கள் பெயரில் என்பதை புரிந்து கொண்டால் போதும். தேசம் காக்க தேச நலம் பேணும் கட்சிகளுக்கு வாக்களியுங்கள். சோயா நல, ஆணவ தலைவர்களை புறம் தள்ளுங்கள். தேசம் நம் வீடு. விட்டைக் காப்போம்..
(இதை எழுதிய திரு GRB அவர்களிடம் அப்போது கேட்ட எளியவன் இந்த வாசன் தான்)
அன்றைய தி.மு.க ஆட்சியை அன்றைய காங்கிரஸ்காரர் ஒருவர் செய்த விமர்சனம் போலவே தோன்றுகிறது.
பதிலளிநீக்குஅருமையான பதிவு ஐயா
பதிலளிநீக்குஇன்னும் 10 வருடங்கள் கழித்து எழுதினாலும் இது பொருத்தமாக இருக்கும்போலுள்ளது ஐயா.
பதிலளிநீக்குஇன்னும் 10 வருடங்கள் கழித்து எழுதினாலும் இது பொருத்தமாக இருக்கும்போலுள்ளது ஐயா.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ ரமணி
அன்றைய அப்போதைய மனநிலையில் எழுதியது . இன்றும் வாக்குறுதிகளுக்கும் செயல்பாடுகளுக்கும் பெரிய வேறு பாடுகளில்லை. வருகைக்கு நன்றி சார்
பதிலளிநீக்கு@ கில்லர்ஜி
இவர்கள் அன்றைய காஷ்மீருடன் ஒப்பிட்டது காஷ்மீரில் இருந்த பிரிவினை வாதம் தமிழ்நாட்டிலும் கேட்கப் படலாம் என்று பயமுறுத்தவே ஆனால் பிற்காலத்தில் பாராளு மன்றத்தில் பிரிவினை பற்றியும் தனித்தமிழ்நாடு கோரிக்கைகளையும் கைவிட்டு விட்டதாகவும் உறுதி கூறினர் வருகைக்கு நன்றி ஜி
பதிலளிநீக்கு@ ஸ்ரீராம்
வாக்குறுதிகள் பற்றி மக்கள் சிந்திக்க வேண்டும் என்று தெளிவிக்கவே இங்கு இந்தப்பதிவு. வருகைக்கு நன்றி ஸ்ரீ
பதிலளிநீக்கு@ புலவர் இராமாநுசம்
ஆம் ஐயா பெரிய மாற்ற மில்லை. வாக்குறுதிகளிலும் அதை நிறைவேற்றுவதிலும் .வருகைக்கு நன்றி
பதிலளிநீக்கு@ ஜீவலிங்கம் யாழ்பாவாணன் காசிராஜலிங்கம்
வருகைக்கு நன்றி ஐயா.
பதிலளிநீக்கு@ கீதா சாம்பசிவம்
எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி.? வருகைக்கு நன்றி மேம்
பதிலளிநீக்கு@ அஜய் சுனில்கர் ஜோசப்
அரசியல் வாதிகள் நம்மையே பிரதிபலிக்கிறார்களோ என்னும் சந்தேகம் எனக்குண்டு வருகைக்கு நன்றி சார்
பதிலளிநீக்கு@ வாசன்
இதைப் படிப்பவர்கள் சென்ற தலைமுறையினரை ஏமாற்றிய அதே கழகம் இன்னும் எப்படியெல்லாம் பொய் வாக்குறுதிகளைக் கொடுத்து ஆட்சிக்கு வருவதை மட்டுமே குறிகோளாய் அதிகார வெறி பிடித்து வருகிறார்கள் பல கழகங்கள் பெயரில் என்பதை புரிந்து கொண்டால் போதும். தேசம் காக்க தேச நலம் பேணும் கட்சிகளுக்கு வாக்களியுங்கள். சோயா நல, ஆணவ தலைவர்களை புறம் தள்ளுங்கள். தேசம் நம் வீடு. விட்டைக் காப்போம்./இந்தப்பதிவின் நோக்கமே அதுதானே வாசன் சார் ஒரு திருத்தம் என் பெயரைத் தவறாகக் கூறி இருக்கிறீர்கள் ஜீஎம்பி என்னும் ஜீ. எம் பாலசுப்பிரமணியம் வருகைக்கும் கருத்ட்க்ஹுப்பதிவுக்கும் நன்றி சார் .
பதிலளிநீக்கு@ தி தமிழ் இளங்கோ
/அன்றைய தி.மு.க ஆட்சியை அன்றைய காங்கிரஸ்காரர் ஒருவர் செய்த விமர்சனம் போலவே தோன்றுகிறது./
யார் யாரை விமரிசனம் செய்வது போல் இருந்தாலும் செய்திகள் சரியா என்பதைப் பார்க்க வேண்டும் வருகைக்கு நன்றி சார்
பதிலளிநீக்கு@ கரந்தை ஜெயக்குமார்
வருகைக்கு நன்றி ஐயா
பதிலளிநீக்கு@ டாக்டர் ஜம்புலிங்கம்
மனம் தளர விடக்கூடாது ஐயா வருகைக்கு நன்றி
நல்ல பதிவு ஐயா...
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ பரிவை சே குமார்
பாராட்டுக்கு நன்றி சார்
பதிலளிநீக்குஅடுக்குமொழி அண்ணாதுரைகளின் அலங்கார வார்த்தைகளை முழுசாக நம்பி 1967-ல் ஆட்சிபீடத்தில் திமுக-வை அமர்த்தினார்கள் தமிழர்கள். அதற்கான அவஸ்தைகளை இன்னும் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள். உங்களின் 1967 வருஷத்திய குறிப்பு, திராவிட இயக்கம் தமிழ்நாட்டிற்கென ஆரம்பித்துவைத்த சீரழிவு சரித்திரத்தின் ஆரம்ப அத்தியாயத்தை அழகாகச் சொல்கிறது.