Thursday, April 29, 2021

குட முழுக்கு


 


 

ஸ்ரீராம  சௌமித்ரி ஜடாயு வேத

ஷடான நாதித்ய குஜார்தியாய 

ஸ்ரீ நீல கண்டாய தயா மயாய        ;      

ஸ்ரீ வைத்தியநாதாய நமோ நம

 

இன்று ஸ்ரீ வைத்தீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகம் என்ன  பக்தர்களுக்கு அனுமதி இல்லை

கடைசியாக நாங்கள்2014ம்  ஆண்டு வழ்க்கம்போல  சென்றிருந்தோம்  அதன் பின் செல்ல வில்லை தரிசனம்  முடித்துவெளியே வரும்போது  நான் நினைவு தவறி விழுந்து விட்டேன்எங்கள்  ப்ரோகிராம்  தடை பட்டு விட்டது  இனி நினைத்தாலும்  செல்ல  முடியாது

வைத்தீஸ்வரன் கோவில் தரும புரம்  ஆதீனத்துக்கு  உட்பட்டது  நாங்கள் செல்லும்போது  எங்கள் பூஜை  விவரங்களை  இருகுருக்கள் சகோதரர்கள் கவனித்து க்கொள்வார்கள்

வைத்தீஸ்வரன் கோவில் நவகிரக தலங்களில் ஒன்றாக் அங்காரகன் தலமாக  கருதப் படுகிறதுஇங்கிருக்கும் முத்துக் குமரன் வைத்தீஸ்வ்ர்னை விட  முக்கியமானவ்ர் இன்று  காலை 7 30 க்கு ஜயா தொலைக்காட்சி குடமுழுக்கை நேரலையாக ஒளி  பரப்;புகிறார்கள்  
                     

Tuesday, April 27, 2021

உறவுகள்

 

 

உறவுகள்

 
உறவுகளை கொஞ்சம் அலசவும்
 ,புரிந்து  கொள்ளவும்முடிந்தவரை 

விருப்பு  வெறுப்பின்றி எழுத  விரும்புகிறேன். எதை  எப்படி எழுத 

முயன்றாலும் ,என் அடிப்படை எண்ணங்களும்  குணங்களும் 

குறுக்கிடாது என்று உறுதியாகக் கூறமுடியாது. 

 

உறவுகளில் தலையாயதுதாய்__மகன்மகள் உறவுதான். தொப்புள் 

கொடி  உறவு உதிரம்  சம்பந்தப் பட்டது. அன்னையின்  வயிற்றில் 

சாதாரணமாக ஒன்பது மாதங்களுக்கும்  மேலாக உருவாகி வளர்ந்து 

வெளி வரும்போதுஅதை வெளிக்கொணர ,அதில் அனுபவிக்கும் 

வேதனையும்,வெளிக்கொணர்ந்த பிறகு அனுபவிக்கும்  மகிழ்ச்சியும் 

என்னால் விவரிக்க முடியாது. ஏனெனில் நான் ஒரு ஆண் . கண்டதும் 

கேட்டதும் கூடவே இருந்து பங்கு கொண்டதிலும் அறிந்த மறக்க 

மறுக்க முடியாத உண்மை.

 

ஒரு சேய  கருவுருவதோ இந்த  உலகில் உதிப்பதோ திட்டமிட்டு
செய்யப் படுவது அல்ல. தடுக்காமல் இருப்பதே திட்டமிடுதல்  என்றால்
என்னிடம் பதிலில்லை. என்னைப் பொறுத்தவரை நாம் எல்லோரும்
விபத்தின் விளைவுகளே. அறிந்தே விபத்து நடப்பதை தடுக்காததால்
தான் மக்கள் பெருக்கம் கூடுகிறது. அது  வேறு ஒரு தலைப்பு. அதை
நான் விவாதிக்க வரவில்லை.

தொப்புள் கொடி  உறவுக்கு உறுதுணையாய்  இருப்பவன் ,அந்தப்
பெண்ணின் கணவன்,குழந்தைக்குத் தந்தை. பிறந்ததிலிருந்தே
இவ்விருவரையும் சார்ந்தே (பெரும்பாலும் )வளரும் குழந்தை
அவர்களிடம் அதிக ஈர்ப்பு கொண்டிருப்பது  இயற்கை. அவர்கள்
இல்லாமல் குழந்தை இல்லை..ஆகபிறந்த உடனே  சேய்,தன தாய்
தந்தையரிடமிருந்துஅன்பைபரிவைஆதரவை தன்னையறியாமலே
எதிர்பார்க்கிறது..பெரும்பாலும் அந்த எதிர்பார்ப்பு நிறைவேறுகிறது.

இந்த தாய் தந்தை -மக்கள்  உறவை ஒட்டியே மற்ற உறவுகள் அறியப்
படுகின்றன. இந்த தாய்,தந்தை ,மக்கள் உறவு நாட்படநாட்பட கிளை
விட்டுப் பெருகிபெரிய மரமாக உருவாகிறது. இந்த குடும்ப மரத்தின்
அங்கத்தினர்கள்  ஆலின்  விழுதுகளுக்கு  ஒப்பாவார்கள். ஒவ்வொரு
வரும்  ஒரு தனி மரமாக இல்லாமல் தோப்பாக மாறி கிளைவிட்டு ,
விழுதூன்றிஉறவுகளை பலப் படுத்த வேண்டும்.

 

 ஆனால் தற்கால நிகழ்வுகளைப் பார்க்கும்போதுவிதையிலிருந்து
புறப்பட்ட செடிமரமாகிக் கிளைவிட்டு ,கனி தந்துபட்டுப்போனால்
அந்தக் கனியிலிருந்து வேறு ஒரு மரமாக  உருவாகிவெவ்வேறு
இடங்களில் மரமாக நிற்கின்றன. பழைய ஆலின் உதாரணம்
எடுபடுவதில்லை.

இந்த மாற்றத்துக்கு காரணங்கள்தான் என்ன.?உறவுகள் ஒட்டுதலும்,
பரிவும் இல்லாமல்தானுண்டுதன சேயுண்டு, (கவனிக்க:சேய்கள்
என்று சொல்லவில்லை நான். )என்று இருப்பதுதான். தற்காலத்திய
குழந்தைகள் உறவு முறைகள் தெரியாமலே வளர்கின்றன.

மக்களும் ,விலங்குகளைப் போல்  மாக்களாக மாறிவருகிறார்கள்.
தன்னால் விளைந்த விபத்துக்கு மட்டுமே பொறுப்பேற்று ,அதையும்
காலூன்றி நிற்கும் வரை பராமரித்துவிட்டு விடுகிறார்கள். உறவுகள்
எல்லாமே எதிர்பார்ப்பின் அடிப்படையில் அமைவதே இந்த நிலைக்கு
காரணம். உறவுகள் " ஈன்று புறந்தருதல் தாய்க்குக் கடனேசான்றோன்
ஆக்குதல் தந்தைக்குக் கடனே "என்ற வகையில் மட்டுமே அனுஷ்டிக்கப்
படுகின்றன. அதையும் மீறிஉணர்வுகள் புரிந்து கொள்ளப்பட்டுஉறவு
கள் ஒன்றோடு ஒன்று அன்பினால் பிணைக்கப்பட்டுபல்கிப் பெருகி
கிளைவிட்டுதோப்பாக இருந்த காலம் பழங்  கதையாய்ப் போய்
விட்டதோ.?

 

வசதிகளும் வாய்ப்புகளும் குறைந்திருந்த காலத்தில் ஒட்டுதலும்
உறவும் இறுகி இருந்தது. குடும்பம் என்பது ஒருவரை ஒருவர் சார்ந்து
இருந்ததில் மகிழ்ந்திருந்தது. அந்த நிலையை இன்றைக்கும் ஓரளவு
கிராமங்களிலும்வறுமை கோட்டுக்குக் கீழ் இருக்கும் மக்களிடமும்
காணலாம். வாய்ப்பு தேடி நகரத்துக்கு வந்து தங்கள் வேர்களையே
தொலைத்து நிற்கும் மக்களையே பெரும்பாலும் நகரங்களில்
காண்கிறோம். இங்கெல்லாம் வாழ்க்கையில் உறவு முறைகளில்கூட
வியாபாரத் தன்மை வந்து விட்டதோ என்ற சந்தேகம் எழுகிறது. 

ஆங்கிலத்தில்  NO LUNCH IS FREE  என்றொரு சொல் வழக்கில் உண்டு .

எதைச் செய்தாலும் அதற்கு ஒரு விலை உண்டு :எதிர்பார்ப்புகளும் 

கூடவே வருவதுண்டு. போதாக்குறைக்கு மேற்கத்திய கலாச்சாரம் 

வேரூன்றி உறவின் உன்னதங்களை சீரழித்துவிட்டது. 

 

பெற்ற தாய் தந்தையரையே பேண முடியாமல் முதியோர் இல்லங்

களுக்கு அனுப்புவதை நியாயப் படுத்தவும் நிறைய பேர் இருக்கிறார்கள்

ஆண்-பெண் (கணவன் -மனைவி)உறவிலும் யார் பெரியவர் யார் 

சிறந்தவர்யாருக்கு யார் பணிந்து செல்வது போன்ற கேள்விகளும் 

சர்வ சாதாரணமாகி விட்டது. அன்பின் பால் கட்டுப்பட்டு இருக்கும் 

உறவில் விட்டுக் கொடுத்தல்தானாக வருவதன்றோ.?

 

இன்றைய வாழ்க்கை முறையில் குறைந்த பட்ச வசதிகளுக்கு கணவன் 

மனைவி இருவரும் வேலைக்குச் செல்ல வேண்டுமென்றாகி விட்டது. 

இந்த நிலையில் நாம் இருவர் நமக்கு ஒருவர் ( அதிக பட்சம்  இருவர் )

என்ற எண்ணங்கள் தானாகவே வந்து விட்டது. இது தவிர வேறு 

அனைவரும் வேண்டாதவர்களே என்ற எண்ணம் அவர்கள் அறியாமலே 

மனதில் பதிந்து விடுகிறது.

எதையெல்லாமோ  தாண்டிமீதமிருக்கும் உறவுகளை.,பெண்கள்
ஓரளவுக்குப் பேணுகிறார்கள். ஆண்கள் உறவுகளைப் பேணுவதில்லை
என்று சொல்வதைவிட  பேண முடிவதில்லை என்பதே உண்மை. கணவன்
மனைவியின் உறவுகளில் மிகவும் அதிகமாக அறியப்படும் உறவு
தாய் வழி உறவே.உறவுகளைப் பேணும் பெண்களைப் பெற்றெடுப்பதில்
என்னதான் குறையோ.?பெண் சிசுக் கொலைகள் நிகழ்வதுமிகவும்
தவறான ,அடிப்படை உண்மைகள் உணராத மக்களின் அறியாமையின்
விளைவே. வயதான காலத்தில் மகன் பேணுவான் என்று எண்ணுவது
தற்கால சூழ் நிலையில் சரியாகத் தோன்றவில்லை.

 

ஒரு பெண்ணுக்கு தன வீட்டு உறவுகள் முக்கியமாகப் படுகிறது. அதுவும்
ஓரளவுக்குச் சரிதானோ ! பெண் நாற்றங்காலைப்  போன்றவள் வேறு
ஒரு நிலத்தில் (  குடும்பத்தில் )விளைந்து பலன் கொடுப்பவள் என்பது
இப்போதெல்லாம் வெறும் கதையாக உள்ளது. என்ன இருந்தாலும்
கணவன் தேவை. அவன் உறவுகள்  தேவையா,?தன உதிரம்  சம்பந்தப் 
பட்ட உறவுகளிடம்ஒட்டுதல் இருப்பது சகஜந்தானே. ஆனால் நியாயமா
என்று கணவன்  கேட்க முடியாது.. தன மனைவி தன தாயைப் போல்
இருக்க வேண்டும் என்கிற  ஈடிபஸ்  காம்ப்ளெக்ஸ்  சாதாரணமாக
அநேக ஆண்களுக்கு உண்டு. தாய் தனக்குத  தாலாட்டாகப் பாடிய ,
"  
அத்தை வீட்டு வாசலிலேநித்தம் நித்தம் போகாதே. --பழிகாரி அத்தை
அவள்  பாம்பெடுத்து மேலிடுவள்" போன்ற வரிகள் உணர்வுகளால்
உந்தப்பட்டு வருவதே. எல்லோரும் தாலாட்டுக் கேட்டிருக்காவிட்டாலும்
அதில் பொதிந்துள்ள கருத்துக்களை  உணர்த்தப் பட்டவர்களே. அது தன
மனைவியிடமும் இருக்கும்போது கணவன் ஏதும் பேச முடியாதவன்
ஆகிவிடுகிறான். வாழ்க்கையில் அமைதிக்காக ,நிம்மதிக்காகபெற்றவரை
விட்டுக் கொடுத்துப் போவதே உத்தமம்  என்று உணரத் துவங்குகிறான்.

சாதாரணமாக குழந்தைகளுக்கும்  தாய் வழி உறவே அதிகமாக அறிமுகம்
செய்யப்படுகிறது.. மீறி தந்தை வழி உறவுகள்  அவர்களாகவே வந்து
அன்பு செலுத்தினாலும்  வாய்ப்புக்கள் குறைக்கப் படுகின்றன. தாயின் 

அன்பும் அரவணைப்பும் HIGHLY POSESSIVE IN NATURE. பங்கு போட 

விரும்பாதது. அன்பென்ன பங்கு போட்டால் அளவில் குறையக் 

கூடியதா..?. அள்ள அள்ளக்  குறையாத அன்பினை வாரி வழங்கி 

அனைவரும் அன்பு மழையில் நனைந்து  உறவுகளைப் பேணிக் 

காப்போம். 

எக்செப்ஷன்ஸ் மே பி தேர்

         ;