நிம்மதி
வாழ்நாளில் முக்கியமாகத் தேவைப்படுவது மன அமைதி. அதை
எங்கெல்லாமோ தேடி அலைகிறோம். என்னைப் பொறுத்தவரை வாழ்வில் திருப்தியும் மன
அமைதியும் பெற நமக்கு வேண்டியது என்ன என்பதைப் பட்டியலிடுகிறேன்.
முதலாவதாக இருக்க வேண்டியது நல்ல ஆரோக்கியம் நம்
கட்டுக்குள் இருப்பவற்றை நாம் புரிந்து கொண்டு அதற்கேற்ற வகையில் நியமங்களை
வகுத்துக் கொண்டு உடலைப் பேணல் அவசியம் ”நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்”
இரண்டாவதாக வாழ்க்கையை குறைவில்லாமல் வாழத் தேவையான பொருட்செல்வம். இலட்சக்
கணக்கிலோ கோடிக்கணக்கிலோ இருக்க வேண்டாம், தேவைக்கேற்ப உண்ணவும் உடுத்தவும் பிறர்
கையை எதிர்நோக்காமல் இருக்கத் தேவையான பணம். இதை இளவயதில் உழைக்க முடியும்போது
நேர்மையாய் உழைத்து தீட்ட வேண்டும். கடன் வாங்கித் தேவைகளைப் பூர்த்தி செய்து
கொள்வது பிறர் முன் தலை தூக்கி நடக்க இயலாதபடி செய்து விடும். உழைக்க வலு இல்லாத
நேரத்தில் உழைக்கும்போது சேர்க்கும் பணமே உதவ வேண்டும்.”பொருளில்லார்க்கு
இவ்வுலகில்லை”
மூன்றாவதாக
அவரவருக்கென்று வசிக்க ஒரு சொந்த வீடு. அதில் வசிக்கும் சுகமே தனி. கூடியவரை
சுற்றுப் புறத்தை தூய்மையாக வைத்து, முடிந்தால் ஓரிரு செடிகளோ மரமோ நட்டு அவை
தரும் சந்தோஷங்களை அனுபவிக்க நேரும்போது ஒரு அலாதியான இன்பம் வரும்.”நம் வீடு நம் வீடுதான்”
நான்காவதாக
நம் வாழ்வில் எல்லா நேரங்களிலும் நம் சுக துக்கங்களில் பங்கு கொள்ளும் ஒரு துணை.
புரிந்து கொள்ளாத துணையை விட நிம்மதியைக் குறைக்கும் மனைவியோ கணவனோ இல்லாதிருப்பதே
மேல்” மனைவி(துணை) அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம்”.
ஐந்தாவது
பொறாமையைத் தவிர்க்க வேண்டும் நம்மை யாருடனும் ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது.
நம்மைவிட வாழ்க்கையில் வசதியானவரைப் பார்த்து ஏங்கினால் துன்பமே மிஞ்சும் “ போதுமென்ற மனமே பொன்
செய்யும் மருந்து” “.ஒளவியம் பேசேல்”
ஆறாவதாக
புறம் பேசுவோரைத் தவிர்க்க வேண்டும். இவர்களை சரியான நேரத்தில் அடையாளம் கண்டு
கொள்ளாவிட்டால் இருக்கும் சூழலையே விஷமாக்கி விடுவார்கள்.
ஏழாவதாக
நமது நேரத்தை உருப்படியாகச் செலவிட வேண்டும் மனம் லயிக்கும் ஏதாவது உபயோகமான
கைவினைப் பொருள்கள் செய்வதிலோ இசைப்பதிலோ இசை கேட்பதிலோ கவனம் செலுத்தும்போது
தேவையில்லாத மறைமுக சிந்தனைகள் எழுவது தவிர்க்கப் படும்
கடைசியாக தினமும் நம்மை நாமே விமரிசிக்க குறைந்தது பத்து
பதினைந்து நிமிடங்களாவது காலையிலும் மாலையிலும் ஒதுக்க வேண்டும் என்ன செய்தோம்
என்ன செய்ய விட்டோம் , என்ன செய்ய வேண்டும் என்று நம்மை நாமே ஒரு மூன்றாவது
மனிதனின் இடத்தில் இருந்து கணிக்க வேண்டும்(.INTROSPECTION)
இன்னும்
பலவும் சொல்லிக் கொண்டே போகலாம். மேலே கூறியவை குறைந்த பட்ச தேவைகள்.
வாழ்வின் தேவைகள் பட்டியல் மிக அருமை.
பதிலளிநீக்குநன்றி.
மனதில் தோன்றியதை பட்டியலிட்டென்நன்றி
நீக்குஒவ்வொன்றும் அற்புதம்...
பதிலளிநீக்குநன்றி சார்
நீக்குமிகவும் அருமையான பாடத்தை பட்டியலிட்டு தந்தமைக்கு நன்றி ஐயா.
பதிலளிநீக்குஇவை அனுபவம் தந்த பாடம்
நீக்குஎட்டாவது எனக்கு சிறு வயதிலிருந்தே பழக்கம்! அனைத்தும் அருமை.
பதிலளிநீக்குமற்றவை உள்ளது தானோ நன்றி ஸ்ரீ
பதிலளிநீக்குஅனைவரும் கடைபிடிக்கக்கூடிய எளிமையான,அருமையான யோசனைகள். வாழ்க்கைத் துணை மட்டும் இறைவன் கொடுக்கும் வரம்.
பதிலளிநீக்குஇறைவன்கொடுக்கும் வரமாக்கலாம்
நீக்குகணவனுக்கு மனைவியும், மனைவிக்குக்கணவனும் அமைவது நம் கைகளில் இல்லை.
பதிலளிநீக்குபாதி பேருக்கு அந்த பாக்கியம் இல்லை இத்தனைக்கும் எல்லா பொருத்தமும் பார்த்த பின் தான்திருமணமே செய்யப்படுகிறது
பதிலளிநீக்கு