Friday, January 31, 2020

அலுவலக அனுபவங்கள்


                                     அலுவலக  அனுபவங்கள்
                                      ---------------------------------------


பொல்லான் என்பரோ,புனிதன் என்பரோ,
கல்லான் என்பரோ,கலைஞன் என்பரோ,
சொல்லா வசைகள் சொல்வரோ,
சூழ்ந்து நின்று புகழ்வரோ
எல்லாம் சொல்லித் தூற்றிடினும்,
ஏதும் சொல்லாது வாழ்த்திடினும்,
மண்ணில் நானோர் ஒளிவட்டம்.
மற்றவ் வட்டம் நோக்கிடுவோர்,
கண்ணிற் காண்பது அவரவர்தம்
காட்சி அன்றி வேறாமோ.?


  முதல் நாள் பி எச் இ எல் போனபோது அப்போதிருந்த உதவி எஞ்சினீரின்  ஆஃப்ஃபிஸ் பார்த்தபோது நான்  தவறவிட்டது என்னுள்  என்னவோ  செய்ததுஒரு பெரிய அறையில் நடு நாயகமாகஒருடேபிள்  அதில் அமர்ந்திருந்தவர்  பிற்காலத்தில்  அவ்ர் பிஎச்இ எல்லின்   முதன்மை பொறுப்புக்கு வந்தாரென்பது வேறு கதை  என் இழப்பைக் கோடி காட்டவே இதைக் குறிப்பிடுகிறேன்   எனக்கான மேல்சதிகாரியிடம் நடந்ததைக் கூறி ஆறுதல் பெற முயன்றேன்  அவர் என்னை ஒரூஉதவி எஞ்சினிராக நடத்துவதாக ஆறுதல் கூறினார் முதலில் என்னை மெஷின்ஷாப்பின்  தரக்காட்டுப்பாட்டுப் பிரிவின்   பொறுப்பைக் கொடுத்தார் தினப்படி நடக்கும்  செய்திகளை  ஸ்கிப் செய்கிறேன் ஒரு முறை  ஆரம்பகாலத்தில் ஃபானுக்கான fan ஒரு பெரியஷாஃப்டில்  சிறு குறை இருந்தது  சிறுகுறை தெரிந்தும் அதைநான் அக்செப்ட்  செய்தேன் அது எப்படியோ தெரிய வந்து என்மீதுகுற்றம்   சாட்டப்பட்டது  என்னிடம்கேட்டபோது தெரிந்துதான் செய்தேனென்று பயப்படாமல் கூறினேன் அப்போது செக்கோஸ்லாவாகியா  உதவியாசளர்களின்  
  கவனத்துக்கு  எடுத்துச் செல்லப்பட்டது அவர் இது பெரிய குறை இல்லாவிட்டாலும்  பிஎச் இ எல்லின்  உள்விவகாரம் தலையிட விரும்பவில்லை என்றார் அப்போதைய ஜெனெரல் மானேஜரின்பார்வைக்கு எடுத்துச் சென்றனர்அவர் அதன் பாதிப்பு எனக்குத் தெரியுமா  என்று கேட்கச் சொன்னார்  நான் அது குறை என்றாலும் அதனால் பாதிப்பு ஏற்படாதுஎன்றுகூறினேன்  என் தன்னம்பிக்கை அவருக்குப் பிடித்திருந்தது அந்தஷாஃப்டை அவர் அக்செப்ட் செய்வதாகவும் பின்னால் பிரச்சனை வந்தால்  ஃப்ரீ ரிப்லேஸ்மெண்ட்  செய்யலாமென்றும் கூறினார் என்மீதான ஒளி வட்டம் சிறிதே பிரகாசித்தது
 இன்னொரு முறை ரயில்வேயில் இருந்து  டெபுடாஷனில் வந்திருந்த வர்க்ஸ்  மேனேஜர் தரக்கட்டுப்பாட்டுக்கும் தலைவர் நான்சில ஐட்டங்களை ரிஜெக்ட் செய்திருந்தேன் அவர் என்னிடம் அக்செப்ட் செய்யச் சொன்னார்  நான்மறுதளித்தேன்   அவரே எனக்கு பாஸ் ஆனதால் அவரிடமே அதை அக்செப்ட் செய்யச்சொன்னேன் அவர் அதை எதிர் பார்க்கவில்லை என்னிடம் இருந்தபேப்பரை வாங்கி கையெழுத்திட்டார்  அந்தபேப்பரை நான் வெகுநாள் வைத்திருந்தேன் என் சக ஊழியர்களிடம் எனக்கிருந்த மதிப்பை உயர்த்திய சம்பவம் அது  என்மீதானஒளிவட்டம் இன்னும் சற்றே ஒளிர்ந்தது ஜீஎம்பி தைரிய சாலி என்பதோடு  தொழில் தெரிந்தவன் என்றும் பெயர் கிடைத்தது           


               
Sunday, January 26, 2020

என்னென்னவோ எண்ணங்கள்                                               என்னென்னவோ எண்ணங்கள்
                                               ------------------------------------------------எனக்கு என்னைப்பற்றியே சந்தேகம்  வருகிறது  நான் யார் ?தமிழனா மலையாளியா கன்னடியனா இந்தியனா வேற்று நாட்டவனா   ஏன் இந்த திடீர் சந்தேகம்   சில விஷயங்கள் தெரியாதபோது தெளிவித்துக் கொள்ள வேண்டும் அல்லவா அதிருக்கட்டும் இதெல்லாம்  என்ன ஏன்  என்னும்கேள்விக்கு பதில் சொல்ல முடிகிறதா சொல்லுங்கள்
இந்த CAA  NRC NPR   இதெல்லாம் என்ன  இந்தியனாகப் பிறந்தேன்  இந்தியனாகவாழ்கிறேன்   இந்தியனாக இறப்பேனா  என்னும் ஐயம் வாட்டுகிறது  என்னை நான் இந்தியன்   என்று ருசுப்படுத்த வேண்டுமா  ஒருவேளை நான் இந்தியன் அல்ல சென்று சொல்ல வாய்ப்புண்டா  யார் சொல்வார்கள் எதற்கு இந்த  அவசரம்   அவசியம்  ஏதோஒரு சில ருக்கு  இந்திய குடியுரிமையை வழங்க அல்லது ரத்து செய்ய என்றால்  மலையைக்கெல்லித்தான் எலியைப்  பிடிக்க வேண்டுமாஎதற்கெடுத்தாலும் அரசியல் பேச வேண்டுமா இப்படி அரசியல் பேச வைப்பதே  சட்டங்களை  அமல் படுத்த வேண்டிய அதிகாரிகளே  எத்தனை பேருக்கு  அவரவர் தந்தை தாயின்  பிறந்தநாளும்  இடமும்தெரியும் தெரியாவிட்டால்  அதை ருசுப்பிக்க முடியாவிட்டால்  நம்மை மிகவும் துன்பப்படுத்தமுடியுமாமே
இந்தியாவில் மக்கட் தொகையைக் கண்டறிய பத்தாண்டுகளுக்கு ஒரு முறை சென்ஸஸ் எடுக்கப்படுகிறதே  எத்தனையோ தேர்தல்கள்வந்து போய் விட்டனவே இதையெல்லாம்  மீறி அன்னியர் குடியுரிமை கோர முடியுமா  அப்படியே கோருபவர்க்களைக் கண்டுபிடிக்க முடியாதா  எனக்கென்னவோ இதெல்லாம்  சுத்த ஹம்புக்  என்றே தோன்றுகிறது  நாளை சில அதிதிகாரிகள் மக்களுக்கு தொந்தரவு தரவும்சில்லறை சம்பாதிக்க்வும்  வழி ஏற்படும்என்றே தோன்று கிறது  எனக்கென்னவோ நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு  இதைவிட  நல்லவேலைகள் இருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது   


               Friday, January 24, 2020

ஒளி வட்டம் மட்டுமே மிச்சம்                     ஒளி வட்டம் மட்டும் மிச்சம்
                    -----------------------------------------------
சந்தோஷங்கள் பகிரப்படல் நலம்  பயக்கலாம்   துக்கங்கள்பகிரப்பட்டால்  நம்சுமை வேறொருவருக்கு ஏற்றும் முயற்சி ஆகலாம்    என்னைப்பொறுத்தவரை நான் இவற்றை சமமாகவே  பகிர்ந்து கொண்டு வந்திருக்கிறேன்   அதுவும் தவிர பகிரப்படாத  விஷ்யம் என்பதால் மிகுந்த சிந்தனைக்குப் பின்தான்  எழுதுகிறேன்மேலும் என்னைப்பற்றிய சிலவிஷயங்கள்பகிராமல் இருந்ததுசரி அல்ல என்றும் தோன்றியது இதைத்தொடர்வேனா இல்லையா என்பது வாசகர்கள்கையில்தான்         


பொல்லான் என்பரோ,புனிதன் என்பரோ,
கல்லான் என்பரோ,கலைஞன் என்பரோ,
சொல்லா வசைகள் சொல்வரோ,
சூழ்ந்து நின்று புகழ்வரோ
எல்லாம் சொல்லித் தூற்றிடினும்,
ஏதும் சொல்லாது வாழ்த்திடினும்,
மண்ணில் நானோர் ஒளிவட்டம்.
மற்றவ் வட்டம் நோக்கிடுவோர்,
கண்ணிற் காண்பது அவரவர்தம்
காட்சி அன்றி வேறாமோ.?நான் பலபதிவுகள்  எழுதி இருக்கிறேன் என்னைப்பற்றி நிறையவே கூறி இருக்கிறேன் அவற்றில் இங்கொன்றும்  அங்கொன்றுமாக அலுவலகம் சார்ந்தும் இருக்கும் சில விஷயங்கள் சொல்லப்படாமலேயெ போய் இருக்கலாம்   அல்லது சொன்னது முழுவதுமாக இல்லாமலும் இருக்கலாம் நான் இருந்திருக்க வேண்டிய இடம் கிடைக்காமல் போனதில் வருத்தம் என்பதை விடஏமாற்றமென்பதெ அதிகம்  எப்படியானாலும்  என்னைச் சுற்றி ஒரு ஒளி வட்டம் அமைத்து கொண்டிருந்தேன்  என்பதே நிஜம்  சில நிகழ்வுகள் அதைப்பற்றி தெரிவிக்கலாம்
எச் ஏ எல் ஏரோ  எஞ்சின்   தொழிற்சாலையில் இருந்து  சென்னை லூகாஸ் டி வி எஸ் கம்பனியில் ஷிஃப்ட் இன் சார்ஜ் ஆக சேர்ந்தேன்  இரண்டு ஷிஃப்ட் வேலை வாரத்துக்கு ஒரு முறை மாறும்  இரவில் ஷிஃப்ட் இன் சார்ஜ்  பகலில் எனக்குள்ள பகுதியில் மேலதிகாரியாகப் பணி அங்குஅவர்கள் ஆங்கிலேயக்கம்பனியுடன் கூட்டு அநேக ஆங்கிலேயர்கள் பணியில் இருந்தார்கள் பேர் மட்டும்  ஷிஃப்ட் இன் சார்ஜ் ஆனால் ஒரு மேஸ்திரியாகத்தான் பணி இருந்ததுடெக்னிகலாக நாம் ஏதும்செய்யமுடியாது கூடாது ஒரு பணியை இப்படித்தான் செய்ய வேண்டும் என்றுஆங்கிலேயர்கள்  வரையறுத்திருந்தனர் அதை  மீறக்கூடாதுஎன்பதுஅங்கிருந்த சட்டம் மெஷினில் வேலை செய்து பழகிய என்க்கு  அங்கு ஆங்கிலேயர் வகுத்த மெஷினிங் ப்ராசெஸ் உடன்பாடிருக்கவில்லை  மூன்று நான்கு பார்ட்கள்மெஷின்செய்தவுடன் டூல் உடைந்து மீண்டும் வேறு ஒரு டூல் பொறுத்தி வேலை செய்வதில் நேரமும்செலவும் அதிகமாயிருந்தது நான்  இரவு ஷிஃப்ட் வரும்போது அந்த செட்டிங்கைமாறி எனக்கு சரி என்றுபட்ட மாதிரி செய்தேன் ஓரிரு நாட்களில் இரவுஅதிக ப்ரொடக்‌ஷனும்  பகலில் குறைந்த ப்ரொடக்‌ஷனும் அவர்கள் புருவதைஉயர்த்த செய்தது  என்னிடம் காரணம் கேட்டபோது நான் உண்மையைபோட்டுடைத்து விட்டேன் அது அங்கு நிலவிய விதி முறையை மீறி இருந்ததால் நான் பகல் ஷிஃப்ட் வ்ரும்போது என்னை என் செய்முறையைசெய்து காட்டக் கோரினார்கள் எல்லோரும் பார்த்துக்  கொண்டிருக்க நான்  செய்து காட்டினேன்  ஆங்கிலேய உயர் அதிகாரி மிகவும் சந்தோஷப்பட்டார் அந்தமகிழ்ச்சியைஎனக்கும் தெரிவிக்கச்சொல்லி  நம் இந்திய அதிகாரிகளிடம் வேண்டுகோள்விடுத்தார் அவர் எழுத்தில் தெரிவித்ததை நம் இந்திய அதிகாரிகள் என்னிடம்காட்டியதோடுசரி
எனக்கும் ஒரு காப்பி கொடுத்திருந்தால் மகிழ்ந்து இருப்பேன் என் மூத்தமகனின் பிரசவசெய்தி கேட்டு நான்பெங்களூர் வந்தேன் எதிர் பாராக் காரணங்களால் நான் ஷிஃப்ட் மாறும்   முன்  வரவில்லை என்றால்  ஒரு நாள்விடுப்பும் கேட்டிருந்தேன் ஆனால் நான் வந்தபோது என் ஒரு நாள்விடுப்பு கொடுக்கப்படவில்லை  மாறாக என்னால் ஒழுங்கு முறைகளை சரியாக்சகடைப்பிடிக்க் முடியாவிட்டால் என் இடத்தில்வேறொருவரை நியமிக்க நேரலாம் என்றும்  எச்சரிக்கை செய்தனர் அது என்னுள் அச்சத்தை ஏற்படுத்தியது ஏற்கனவே என்னால் என் குடும்பநிலையை  பராமரிப்பதே கடினமான  நிலையில் வேலையும்போனால் எனசெய்வது என்ற பயம் வந்தது  நான் வேறு வேலை தேடத்துவங்கினேன்
 அந்தநேர்த்தில் பிஎச் இ எல் லில்  இருந்து ஒரு விளம்பரம் இருந்தது உதவி எஞ்சினீருக்கான  விளம்பரம் நானும்  மனு அனுப்பினேன்   சில நாட்களில் 
நேர் முகத்தேர்வுக்கு வருமாறு பதில் வந்தது இண்டெர்வியூ முடிந்ததும்  தேர்வாகிவிட்டேன் என்று தெரியப்படுத்தினார்கள் வேலையில் சேர உத்தரவு  வருமென்றார்கள் அப்போது அங்கிருந்த என்நண்பர்கள் சிலரிடம் அதுபற்றி கேட்டேன்வேலையில் சேர உத்தரவு வரும் அதுதான் நடை முறை என்றார்கள் ஐ வஸ் இன்  க்லவுட் நைன்
லூகாசில் நான் சேர்ந்து ஓராண்டுஆகிஇருக்க வில்லை ப்ரொபேஷனில் இருந்தேன்  ப்ரொபேஷனிலிருக்கும் போதுவேலையை விடுவதாய் இருந்தால் 15 நாட்கள்  நோட்டிஸ்
போதும்  ப்ரொபேஷன்   முடிந்து வேலையை விட்டால் ஒரு காலண்டர் மாதழ் நோட்டிஸ் தரவேண்டும் அங்குதான்  நான் தவறு செய்தேன் பிஎச் இஎல்லில்  இருந்து ஆர்டர் வரும்முன்  லூகாஸ் வேலையை  ராஜினாமா செய்தேன் ஒரு வாரத்தில் ஆர்டர்வந்ததும்   மிகுந்த ஏமாற்றமாக இருந்தது உதவி எஞ்சினீருக்குப்பதில் ஃபோர்மன்ஆக உத்தரவு இருந்தது நான்கடிதம் எழுதிக்கேட்டேன் விருப்பமிருந்தால் வேலையில்சேரலாம் என்றார்கள்  தொடக்கசம்பளத்தில் வேறுபாடு இருக்காததாலும் நான் ஏற்கனவே ராஜினாமா கொடுத்து விட்டதாலும்  ஒருவேலை முக்கியமய் இருந்ததாலும்    miகுந்த ஏமாற்றத்துடன்  பிஎச் இஎல்லில் சேர்ந்தேன்  அப்போது தெரியவில்லை என்  ,

முடிவு எத்தனை தூரம்   என்னை பாதிக்குமென்று

 (தொடரவா    வேண்டாமா வாசகர்கள் கூறலாமே நான் பெயர்களை தவிர்த்திருக்கிறேன்) 
Monday, January 20, 2020

நெஞ்சம் மறக்கவில்லை

                       

                                               மறக்க மனம் கூட வில்லையே
                                               --------------------------------------------------

    என்னால் இன்னமும்  நம்ப முடியவில்லை தவறாக ஏதும் எழுத வில்லையே  டாக்டர் கந்தசாமி மறைந்து விட்டாரா  நான் தெரிந்துகொண்ட செய்தி தவறில்லையே  
யாராவது ஊர்ஜிதப்படுத்துங்களேன்  ப்ளீஸ்,,1 அன்னாரது நினைவுகள் நிறையவே வருகின்றன பதிவுலகில் என்முதல் நண்பரே அவர்தானிருக்கும் மூன்று நான்கு முறை சந்தித்து இருப்பேன்  என்னை ஒரு பிரபலவலைப்பதிவராக ஆக்க வேண்டுமா  என்று ஒரு முறை கேட்டிருந்தார் நான் தான் என்னை என்  எழுத்து மூலம்தெரியப்படுவதையே நான்விரும்புகிறேன் என்று பதில் அளித்தேன், சுருங்க அவர்பற்றி சொல்வதானால் ஒருநல்ல எளிய மனிதர்
அவர் என் வீட்டுக்கு  இரண்டு முறை வந்திருக்கிறார்  ஒரு முறைஅவரது மனைவியுடன் வந்தார்அவர் பற்றி ஓரிரு பதிவுகள் எழுதி இருகிறேன்மதுரை வலைப்பதிவர் கூட்டத்துக்கு  வரவில்லை ஏதோகாரணம் கூறினார்  என் வீட்டில் இரவு தங்க விரும்பவில்லை அவரதுகுறட்டை தான் காரணம்  என்றார்  அவர் வந்தபோது சொன்ன சில வார்த்தைகள் எனக்குள் ஆழப்படிந்து விட்டது
 உலகில்  மூன்று  காரியங்களை மிசசம்  மீதி  இல்லாமல் முடித்து  விட வே  ண்டும் முதலில் ஒருவருக்குண்டான  கடமைகள் .இரண்டாவது  ஒருவர் பட்ட  கடன் .மூன்றாவது நெருப்பை  அணைத்தல் நான்காவதாக  ஒன்றும்  சொன்னார்
நான்காவதாக அவர் சொன்னது சிலச்  சில அபிலாக்ஷைகள் இருந்தால் மிச்சம் வைக்காமல் முடிக்கவேண்டும் என்றார் என் ஆசை அவர் விருப்பம் இரண்டுமே நிறைவேறியது.  சில பதிவுகளில் இருந்து நான் கற்றது  படுக்கும்போது போர்வையின் தலை மாடு கால்மாடு இவற்றை மாற்றக் கூடாது என்பதுதான் கவுண்டர்கள் திருமணம் பற்றியும் சடங்குகள் பற்றியுமெழுதி இருந்தார் நகைச்சுவையாக பின்னூட்டங்கள் எழுதுவார்  உ-ம் இந்தப் பதிவை முதலிலேயே படித்து விட்டேன். வேலை மும்முரத்தில் (ரிடைர்டு ஆனபிறகு அப்படி என்ன வேலை என்கிறீர்களா? வெட்டி ஆபீசர் வேலைதான்.) பின்னூட்டம் போட மறந்து விட்டேன். ஜிஎம்பி கழுத்தைப் பிடித்து விட்டார்.

என் போட்டோக்களுக்கு விளம்பரமும் கொடுத்து விட்டார். அதற்கு அவருக்கு நன்றி.
கர்நாடக சங்கீதத்தில் ஈடுபாடுள்ளவர்பல பாடல்களை தரமிறக்கி வைத்தவர் ஒரு சங்கோஜியும் கூட என் வீட்டுக்கு வந்திருந்தபோது என்மனைவி பிசி பேளா ஹுளி அன்னா சமைத்திருந்தார் சாப்பாட்டின் அளவு குறைந்து இருப்பது பார்த்துஅவருக்கு பிடிக்கவில்லையோ என்று மனைவி நினைத்தார் கோவை சென்றபின்  எழுதி இருந்தார்  உணவை மிகவும் ரசித்ததாகவும் மரியாதை நிமித்தம் இன்னும் கேட்டு சாப்பிட வில்லை என்றும்  கூறி இருந்தார்
புதுக்கோட்டை வலைபதிவர் மாநாட்டை ப்பற்றி நான்  எழுதியபதிவில்  சில குரங்குகள்வரிசையாக உண்பதுபோல் ஒரு படம் வெளியிட்டு ப் பதிவுக்கும்  படத்துக்கும் சம்பந்தம்  இல்லை என்றும் எழுதி இருந்தேன் அந்தப்படத்தை நீக்கச்சொல்லி பலரும் கேட்டார்கள்  காந்தசாமி அவர்கள் எழுதியபின்  நீக்கினேன் அவர் நினைவுகள் ஏராளம் சில படங்களை பகிர்கிறேன் 

எந்தஞ்சாவூர் ஓவியம்  நினைவுக்காக

நானெழுதிய நூல் பரிசாக 
        
அவரை ஒரு கோவிலுக்கு கூட்டிச் சென்றபோது

அங்கிருந்த காயத்திரி சிலை முன் 

கீதோபதேசம்
கந்தசாமி தம்பதியருடன் நான்  

கந்தசாமி தம்பதியருடன் என் மனைவி 
 புதுக்கோட்டை சந்திப்பில் ஒரு காணொளி


  

Sunday, January 19, 2020

சந்தேகம் தீர என்ன வழி                      சந்தேகம்தீர என்ன வழி
                      -------------------------------------


நான் முகநூலில்  ஒரு செய்தி வாசித்தேன் மனதை குழப்பி விட்டது அதில் ஒருஇறப்புச் செய்தி இருப்பதாகத் தோன்றியது  செய்திக்குரியவர் என் அருமை நண்பர் ஊர்ஜிதப்படுத்த முடியவில்லை அவருக்கே எழுதிக் கேட்கலாமா என்று மனைவியிடம் கேட்டேன்  வேண்டாமென்றவர்  எனக்கு நேர்ந்த ஒரு அனுபவம் போல் ஆகி விடக் கூடாது என்றார்அது என்ன எனக்கு நேர்ந்த அனுபவம்  / நான் காலையில் நடைப் பயிற்சியில் இருக்கும் போது ஒருவர் அறிமுகமில்லாதவர்  என்னை நிறுத்தி என் வீட்டருகே அண்மையில் ஏதாவது இறப்பு நிகழ்ந்ததா என்று கேட்டார். நான் முதலில் இல்லை என்று சொல்லி சற்று நேரம் கழிந்து என் வீட்டு மாடியில் குடி யிருப்பவர் ஒருவர் அண்மையில்  தவறி விட்டார் என்றேன் “ ஓ அதுதானே பார்த்தேன் அது நீங்களில்லையா.? சந்தேகமாய் இருந்தது...” என்றாரே பார்க்கலாம்..........!  

Saturday, January 18, 2020

ரசனை பகிர்வு


                                                          ரசனை  பகிர்வு
                                                           -------------------------

  நான் ரசிப்பதைப் பகிர்கிறேன்  வாசகர்களும்  ரசிப்பார்கள் என்று நினைக்கிறேன் முதலில் பொங்கலுக்குஎன் மூத்தமகன்  மறு மகள் பேரன்  அவன் மனைவி  எல்லோரும் வந்தது மகிழ்ச்சி தந்ததுநமக்கு பொங்கல் எல்லாம்  பொங்கல் செய்து தின்பதோடு முடிகிறது மற்றபடி இதுவும் இன்னொருநாளே


பேரனும் அவன் மனைவியும்   எங்களுடன் சில நாட்களுக்கு முனொரு படம்பகிர்ந்து இருந்தேன் இலை போல் இருந்த ஒன்று தொட்டதும்பறந்து விட்டது மிதியடி ஒன்றை தோய்த்து காயப்போட்டிருந்தோம்  அதில் ஒருபூச்சி நான் பூச்சி என்று தெரியாமலேயே படம் எடுத்திருந்தேன்  எத்தனை வித ஜந்துக்கள் இயற்கையில்
இலை போல் இருந்தது 


என்ன பூச்சியோ 


இப்போதுமாமரம் பூக்கத்துவங்கி இருக்கிறது நன்மாடிக்குப் போய் அருகில் பார்த்து நாட்களாகி விட்டன  ஒரு பூ என் கவனம் ஈர்த்த கிளையில் இருந்து இல்லாமல் நேராக மரத்தண்டிலிருந்து பூ   படமாய்பிடித்து இருக்கிறேன்
மாம்பூ மரக் கிளையில்


 என்மச்சினனின்  மகன்  ஆஸ்திரேலியாவில் இருப்பவன்   மனைவி மகனுடன் வந்திருந்தான்  மகனுக்கு மூன்று பிராயம்தானிருக்கும்  செல்ஃபி வீடியோ என்று எடுத்து  ஒரே அலப்பறை  நான் மூன்று வயதாயிருக்கும் போது கண்ணாடி பார்த்து தலை சீவியதையே ஆச்சரியமாய் பார்த்த காலத்துக்கும்  இப்போதைக்கும்  எத்தனை  வித்தியாசம் …


மச்சினன் மகன் குழந்தை  மனைவியுடன் 
.!   


நான் என்பேரன் முதன்முதலில் தானாகநிற்பதை ஆவணப்படுத்தி இருக்கிறேன் சகஜமாக் நிற்பது பெரிய விஷயமாகத் தெரிவதில்லை அது போல் என்மச்சினனின்  இரட்டை குழந்தைகள்  கவிழத்தொடங்கியதும்பிடித்த படம் காணொளியாக

  
Wednesday, January 15, 2020

பொங்க ல் வாழ்த்து


                        பொங்கல் வாழ்த்து
                       ---------------------------------


        மார்கழிப் பனி விலக
         
பாவையர் நோன்பு முற்ற,
         
தையலே தைப் பெண்ணே-வருக
         
உன் வரவால் வழி பிறக்க

         
முற்றிய கன்னலுடன் சூல் முற்றிக்
         
கதிர் சாய்ந்த செந்நெல் குத்திய
         
புத்தரிசி கொண்டு புதுப் பானையதனில்
         
பொங்கலாக்கிப் படைத்திடவே

         
பகலவனும் பாதை மாறிப்
         
பயணம் செய்யத் துவங்கும்
         
இந்நாளில் பொங்கும் மங்களம்
         
எங்கும் தங்க வணங்குகிறோம்
 இது ஒரு மீள் பதிவு
 இருந்தால் என்ன  ஒவ்வோர் ஆண்டும் பொங்கல் மீண்டும்   மீண்டும் வருவதில்லையா எனக்கு ஒருசந்தேகம் தமிழர்களுக்கு தை மாதம்தான் ஆண்டு பிறப்பா  அனாதிகாலமாய் சித்திரையில்தான் தமிழ் ஆண்டு பிறப்பதாக நினைத்துக்   கொண்டிருந்தேன் இனி ஒருவிதி செய்வோம் இனி தைமாதத்தில்தான் ஆண்டு பிறக்கும் வேண்டுமானால் அரசாணைபிறப்பிக்கலாம்
தை மாதப்பிறப்பு  மகர சங்கராந்தி என்று  வேறு சில மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது மாட்டுப்பொங்கல் போல் கர்நாடகத்தில்  எருதுகள் அன்று தீயில் ஓட்டப்படும் அதனால் அவை நலமாக இருக்குமென்பதும் நம்பிக்கை       


Monday, January 13, 2020

கதம்ப சரம்

                     
                                                              கதம்ப   சரம்

வங்காளிகள்  வ என்று வரும் இடத்தில் bhaஎன்றெ உச்சரிப்பார்கள் அதே போல்
அரபிகள்மொழியில்  pa  இல்லையாம்  ப  வுக்கு பதில்  ba என்றுதான் உச்சரிப்பார்களாம் கில்லர்ஜி என்ன சொல்வாரோ  இதனால் கார் ஓட்ட உரிமம் பெற வரும் ஒருவர்  படும்பாட்டக் கூறுகிறது காணொளி  ரசிக்கவும்தண்ணீர் பஞ்சத்தை சமாளிக்க இதுவும்  ஒரு வழிஅதுவும் வென்னீர் குளியல் பார்த்து ரசிக்ச


பெண்களைப் பற்றி பல பதிவுகள் எழுதி இருக்கிறேன் ஆண்  களைப்பற்றி  ஒரு
காணொளி  பாவம் ஆண்கள்


 

ஒத்த ரூவா நான் தாரேன் ஒணப்ப தட்டும் தரேன்
ஒத்துக் கிட்டு  வாடி நம்ம ஒடப் பக்கம்  போலாம்
ஒத்தரூவாவேணாம்  ஒரு ஒணப்பதட்டும்  வேணாம்
ஒத்துக்கிற மாட்டேன்  நீ ஒதுங்கி நில்லு  மாமா
பத்துரூவா நான் தாரேன் ஒரு பதக்கம் சங்கிலி  தாரென்
பச்சைக்கிளி  வாடி நம்மபடைப்பு பக்கம்  போலாம்
பத்துரூவா வேணாம் உன் படக்கம் சங்கிலி வேணாம்
பக்கத்துல நிக்கிற மாமா என்ன உசுப்பி விடவேணாம் 
 பாட்டும்  காணொளியும்   கண்டீர்களா  ஒணப்ப தட்டுஎன்றால் என்ன?    
  
          
oththaஓo


Thursday, January 9, 2020

கனவில் தொலைந்து போகிறவன்                                       கனவில்  தொலைந்து போகிறவன்
                                      --------------------------------------------------------


கனவுகள் இனிமையானவை கற்பனை கலந்தால் எழுது பொருள்கிடைக்கும்  இம்மாதிரி கனவுகளுடன்   கற்பனை கலந்து பல பதிவுகள் எழுதி இருக்கிறேன்   கனவில் கடவுளோடு உரையாடி இருக்கிறேன் நான் நினைத்தும் பார்க்காத பல செய்திகள்  கற்பனையில் வரும் சில தத்துவங்கள்பிறக்கும்   ஆனல் என்ன குறை என்றால்  விடிந்ததும்  கனவுகள்மறந்து போகும் பின் எழுதுவது எல்லாம்கற்பனையே அண்மையில் புத்தாண்டு பதிவில் என்  சின்ன சின்ன ஆசைகளைக் குறிப்பிட்டு இருந்தேன்   அவை எல்லாம் கனவில் சாத்தியமாகும் போது ஏதோ இனம் தெரியாத மகிழ்ச்சி வருகிறது கனவில் பூமியின் புவி ஈர்ப்பினையும் தாண்டி  மிதக்கவும் செய்திருக்கிறேன்  அப்போது அதுவே சந்தோஷம்தரும்  கனவிலாவது நினைவில் செய்ய முடியாததைச்செய்ய  முடிகிறது  ஒரு வேளை வாழ்வெ ஒரு கனவாய் இருந்தால்  எத்தனை நன்றாக இருக்கும்
நேற்றிரவு ஒரு கனவு கண்டேன்   ஊர் பெயர் தெரியாதஇடம் நானும் என் இளையமகனும்  எங்கோநடந்து செல்கிறோம்   என்னை விட என்மகன் மகிழ்கிறான் அப்பா நீங்கள் நன்றாகத்தானே நடக்கிறீர்கள் உங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று  உற்சாக மூட்டுகிறான்  அப்போதே அவனிடம் இது கனவுதானே என்கிறேன் சிறிது தூரம் சென்றபின் போதும் வீடுநோக்கிச்செல்வோம் என்கிறேன்  பாதைமறந்துவிட்டது  ஆனால் டைரெக்‌ஷன்  நோக்கிச் செல்லலாம் என்கிறேன்  சிறிது தூரம் சென்றபின்   வழிதவறியது தெரிகிறது மகனிடம் ஏதாவது  வண்டி கிடைக்குமா எனப்பார்க்கச் சொல்கிறேன் அவனும் வண்டி தேடிப்போகிறான்
 அவன் போய் சற்று நேரம்  ஆனதால்   நானும் அங்குமிங்குமலைகிறேன் அங்கு ஒரு பெரியவரிடம் எங்கள் இருப்பிடம் பற்றிக்கூறி எவ்வளவு தூரம்  இருக்குமென்க்கேட்கிறேன்  அவர் சொன்ன தூரம் என்னை மலைக்க வைத்து விட்டது கனவுக்குத்தான் நேரம் தூரம் தேசமெதுவுமில்லையே   
மிகக்குறைந்த நேரத்தில் மிக அதிக தூரம் வந்து விட்டோம் என்று தெரிகிறது நடந்தோ வண்டி வைத்தோ கடக்கும்தூரமல்ல  திடீரென்று என்முன்னே  ஒரு பெரியநாய்  மெல்லமெல்லஎன் அருகில் வருகிறது  எனக்குள்பயமதிகரிக்கிறது எனக்கானால் நாய் என்றாலேயே  பயம்  அதிகம்  என்மேல் தாவி என் மெல் கால்வைத்து என்னை மோப்பம்பிடிக்கிறது பயத்தில் நான்  கூச்சல் போட்டு விட்டேன் கனவ்ல்பேசுவது பிறருக்குத் தெரியாது ஆனால் கூகுரல் கேட்கும்   Tuesday, January 7, 2020

குடித்தனக்காரர் பலவிதம்


                                 குடித்தனக்காரர்  பலவிதம்               
                                  ------------------------------------------

1992 என்று  நினைக்கிறேன் முதல் மாடி வீடு கட்டி நாங்கள் கீழ் வீட்டிலிருந்து மேல் வீட்டுக்குக் குடிபோனோம்  கீழ்விட்டை வாடகைக்குஎன்று போர்ட் போட்டோம் விரைவிலேயே வாடகைக்கு என்று கேட்டு  ஒரு ஆணும்  பெண்ணும் வந்தனர்  அண்ணன்  தங்கை என்றார்கள் நம்பூதிரிகள் என்று சொன்னார்கள் அண்ணன்  ஐ எஸ் ஆர் ஓ வில் சயன்டிஸ்ட்  என்றும் தங்கை அருகில் இருந்த ஒரு பாலிடெக்னிக்கில் ஆசிரியை என்றும்  அறி முகம் செய்து கொண்டனர்  இருவரும் மணமகாதவர்கள் இந்தப்பதிவை நான் எழுதுவதே  சில நிகழ்வுகளைகுறிப்பிடவே

அண்ணனுக்கு எப்படியாவது  பணம் பண்ண  வேண்டும் என்னும் ஆசை நிறையவே இருந்தது நம்பூதிரி என்னும் பிரிவினர் என்றாலும் மணம் மூலம் பணம்கிடைக்காத என்று ஏங்கினார்
ஒரு நாள் ஒரு அல்ட்ரா மாடெர்ன்  பெண அவரைத்தேடி வந்தார் ஏதோ விளம்பரம்பார்த்து வந்ததாகக் கூறினார் அண்ணனும் தங்கையும் விட்டில் இருக்கவில்லை என்ன விளம்பரம்  என்று நாங்கள் கேட்கவில்லை  ஆனால் அந்தப் பெண்ணைப்பார்த்தபோது மனதில் நல்ல அபிப்பிராயம் வரவில்லைமாலையில்  அவர் வந்தபொது விவரம் சொன்னோம் அவருக்கு அந்தப்பெண் என்  அவர் இல்லா நேரம்    பார்த்து வந்தார் என்று நினைப்பது நன்கு  தெரிந்தது
ஒரு முறை அவர் நன்கு ஜோசியம் பார்க்கத் தெரியும் என்று சொன்னார் அவரது பெற்றோர்கள அதில் நிபுணர்கள்  என்றும் சொன்னார் எனக்கு நம்பிக்கை இல்லை என்று சொன்னேன்   விடாமல் என்கையைப்பிடித்து இழுத்துப்பார்த்தார்  என் முக்சத்தை தீர்க்கமாகப்  பார்த்தார் பிறகு எனக்கு ஒரு விபத்தில்தான் மரணம்  என்று சொன்னார் அது ஆயிற்று 27 வருடங்கள் இன்னும் நான் இருக்கிறேன் நன்றாக  கோயிங் ஸ்ட்ராங்

அவரதுதங்கை ஒரு ஆசிரியை என்றேன் அல்லவா  பாலிடெக்னிக்கு வருட துவக்கத்தில்  மாணவர்களை அறிமுகப்படுத்தினால் ஒரு குறிப்பிட்டதொகை ஊக்கப்பணமாகக் கிடைக்கும் என்றும் சொன்னார்  என் மூலம் மாணவர் சேர்க்கை  கிடைக்கவில்லை என்று சொல்லத்தேவையில்லை
அப்போது நான்  வலைஉலகை அறிந்திருக்கவில்லை  அறிந்திருந்தால் நம்பூதிரிகள்பற்றி இன்னும்  தெரிந்துகொண்டிருப்பேன்
 அவர் ஒரு நாய் வைத்திருந்தார் மோங்ரெல் ஒன்றை வைத்திருந்தார்  அதை வீட்டின்பின்  வாசல் கதவில் கட்டி விட்டுஅவர்கள்  வேலைக்குச் செல்வார்கள்பொகும்போது ஒரு தட்டில் சோறும் வைப்பார்கள்அந்த வாஃயில்லா ஜீவனுக்கு  அந்த இடமே சப்பாட்டிடம் கழிப்பறை எல்லாம் ஒரு முறை அது கட்டைஅவிழ்த்த் விட்டு  ஓடிவிட்டது அதன் பின் ஒடி மீட்டுவந்து அதைக்கட்டியபின் தான்  மூச்சு வந்தது  நாயை சரியாக வளர்க்க முடியாதவர்கள்நாயைக் கொடுமை படுத்துவதோடு விட்டு சொந்தக்காரர்களுக்கும் தண்டனைதான்  இப்போது வீட்டின்மாடியில் குடி இருப்பவர்கள்நாய் இருக்கிறது என்று சொல்லவே இல்லை சொல்லி இருந்தால் வீட்டை வாடகைக்கு கொடுத்திருக்கமாட்டேன்           

                     
 எ