கனவில் கதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கனவில் கதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 9 ஜனவரி, 2020

கனவில் தொலைந்து போகிறவன்



                                       கனவில்  தொலைந்து போகிறவன்
                                      --------------------------------------------------------


கனவுகள் இனிமையானவை கற்பனை கலந்தால் எழுது பொருள்கிடைக்கும்  இம்மாதிரி கனவுகளுடன்   கற்பனை கலந்து பல பதிவுகள் எழுதி இருக்கிறேன்   கனவில் கடவுளோடு உரையாடி இருக்கிறேன் நான் நினைத்தும் பார்க்காத பல செய்திகள்  கற்பனையில் வரும் சில தத்துவங்கள்பிறக்கும்   ஆனல் என்ன குறை என்றால்  விடிந்ததும்  கனவுகள்மறந்து போகும் பின் எழுதுவது எல்லாம்கற்பனையே அண்மையில் புத்தாண்டு பதிவில் என்  சின்ன சின்ன ஆசைகளைக் குறிப்பிட்டு இருந்தேன்   அவை எல்லாம் கனவில் சாத்தியமாகும் போது ஏதோ இனம் தெரியாத மகிழ்ச்சி வருகிறது கனவில் பூமியின் புவி ஈர்ப்பினையும் தாண்டி  மிதக்கவும் செய்திருக்கிறேன்  அப்போது அதுவே சந்தோஷம்தரும்  கனவிலாவது நினைவில் செய்ய முடியாததைச்செய்ய  முடிகிறது  ஒரு வேளை வாழ்வெ ஒரு கனவாய் இருந்தால்  எத்தனை நன்றாக இருக்கும்
நேற்றிரவு ஒரு கனவு கண்டேன்   ஊர் பெயர் தெரியாதஇடம் நானும் என் இளையமகனும்  எங்கோநடந்து செல்கிறோம்   என்னை விட என்மகன் மகிழ்கிறான் அப்பா நீங்கள் நன்றாகத்தானே நடக்கிறீர்கள் உங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று  உற்சாக மூட்டுகிறான்  அப்போதே அவனிடம் இது கனவுதானே என்கிறேன் சிறிது தூரம் சென்றபின் போதும் வீடுநோக்கிச்செல்வோம் என்கிறேன்  பாதைமறந்துவிட்டது  ஆனால் டைரெக்‌ஷன்  நோக்கிச் செல்லலாம் என்கிறேன்  சிறிது தூரம் சென்றபின்   வழிதவறியது தெரிகிறது மகனிடம் ஏதாவது  வண்டி கிடைக்குமா எனப்பார்க்கச் சொல்கிறேன் அவனும் வண்டி தேடிப்போகிறான்
 அவன் போய் சற்று நேரம்  ஆனதால்   நானும் அங்குமிங்குமலைகிறேன் அங்கு ஒரு பெரியவரிடம் எங்கள் இருப்பிடம் பற்றிக்கூறி எவ்வளவு தூரம்  இருக்குமென்க்கேட்கிறேன்  அவர் சொன்ன தூரம் என்னை மலைக்க வைத்து விட்டது கனவுக்குத்தான் நேரம் தூரம் தேசமெதுவுமில்லையே   
மிகக்குறைந்த நேரத்தில் மிக அதிக தூரம் வந்து விட்டோம் என்று தெரிகிறது நடந்தோ வண்டி வைத்தோ கடக்கும்தூரமல்ல  திடீரென்று என்முன்னே  ஒரு பெரியநாய்  மெல்லமெல்லஎன் அருகில் வருகிறது  எனக்குள்பயமதிகரிக்கிறது எனக்கானால் நாய் என்றாலேயே  பயம்  அதிகம்  என்மேல் தாவி என் மெல் கால்வைத்து என்னை மோப்பம்பிடிக்கிறது பயத்தில் நான்  கூச்சல் போட்டு விட்டேன் கனவ்ல்பேசுவது பிறருக்குத் தெரியாது ஆனால் கூகுரல் கேட்கும்