Friday, February 27, 2015

உபாதைகள் பலவிதம்-ஒவ்வொன்றும் ஒரு விதம்--3


                   உபாதைகள் பலவிதம் -ஒவ்வொன்றும் ஒருவிதம்- 3
                  ----------------------------------------------------------------------------------


உபாதைத் தொடரினை சீக்கிரமே முடிக்க முயற்சி செய்தாலும் அது நீண்டு கொண்டே போகுமளவுக்கு பலவித உபாதைகளின் வகைகளும் அதை  சமாளிக்கும் அனுபவங்களுமே காரணமாகும்
விருப்ப ஓய்வில் பெங்களூரு வந்தபோதே என் கேட்கும் திறனை சோதிக்க விரும்பினேன். எங்காவது வெடி வெடித்தால் என்ன புகைகிறது என்று கேட்கும் அளவுக்கு காதின் திறன் குறைந்து கொண்டு வந்தது. இளவயதிலேயே எனக்குக் காது மந்தம் என்று பிறர் சொல்லிக் கேள்வி. பெங்களூருவில் ஒரு பிரபலமான ENT Specialist ஐப் பார்த்தேன். அவர் சோதனை செய்து அறுவைச் சிக்கிச்சை செய்து விடலாம் STAPIDECTOMY  என்னும் குறை என்றார். அறுவை சிகிச்சை செய்தால் பலன் கிடைக்குமா. காது நன்றாகக் கேட்க எத்தனை சதவீதம் வாய்ப்பு என்று கேட்டேன். அவர் 95 சதம் வெற்றிகிடைக்கும் என்றார். எனக்கோ அந்த5சதம் வாய்ப்பில் இருப்பதும் போய்விட்டால் என்ற பயம். பேசாமல் வந்து விட்டேன். என் அம்மான் மகன் இன்னொரு நிபுணரைப் பரிந்துரைத்தான். அவரும் காதில் மைக்ரோ சர்ஜெரி மூலம் சரிப்படுத்தலாம் என்றார். அவரிடமும் எத்தனை சதம் வெற்றி வாய்ப்பு என்று கேட்டேன். என்னை ஏற இறங்கப் பார்த்தவர் “ உங்களுக்குக் காது கேட்கும் “ என்று உறுதியாய்க் கூறினார். அந்த நம்பிக்கை எனக்கும் வர அறுவை சிகிச்சைக்கு நான் உடன்பட்டேன். அறுவைச் சிகிச்சை முடிந்தது எனக்குக் காதும் (இடது) கேட்டது. வலது காதையும் அறுவைச் சிகிச்சைக்கு இதுவரை உட்படுத்தவில்லை
நாங்கள் காசி ஹர்த்வார் பயணத்துக்கு டிக்கெட் எல்லாம் முன்பதிவு செய்து அந்த நாளுக்காகக் காத்திருந்தோம். எனக்கு என் இடுப்புவலி கூடவே வரும் sciatica என்று மருத்துவர்கள் கூறும் காலில் வலி வந்து மிகவும் படுத்தியது. எங்கள் பயணமே தடை படுமோ என்று பயந்தேன். அருகில் இருந்த ஒரு ஹாஸ்பிடலுக்குச் சென்றேன். அவர்கள் என்னைப் பரிசோதித்து எங்கள் பயணத்தை உத்தேசித்து உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென்றும் இல்லாவிட்டால் பயண நடுவில் பிரச்சனை அதிகமாகலாமென்றும் கூறினர். . நான் அதற்கு உடன் படும் பட்சத்தில் லாப்ரொஸ்கோபிக்கான கருவிகளைக் கொண்டு வருவதாகவும் கூறினர். எனக்கு அவர்கள் பேசும் விதத்தைப் பார்த்ததில் அது என்னை அறுவைச் சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டிய மார்க்கெட்டிங் டெக்னிக் என்று தோன்றியது. சிறிது அவகாசம் கேட்டு வந்து விட்டேன் நான் என்னைச் சோதித்த யுராலஜிஸ்டிடம் சென்று அபிப்பிராயம் கேட்டேன். அவர் அது ஹெர்னியாவின் ஆரம்பஅறிகுறி என்றும் சிறிது ஓய்வில் இருந்தால் சரியாகிவிடும் என்றும் பிறிதொரு சமயம் தேவைப்பட்டால் ஆப்பரேஷன் செய்து கொள்ளலாம் என்றும் கூறினார். அதன் பிறகு நாங்கள் 22 நாட்கள் பயணத்தில் இருந்தோம் எந்தப் பிரச்சனையும் இருக்கவில்லை அதன் பிறகு.
சிறிது தூரம் நடந்தால் இடது தொடையின் நடுவேஅடிக்கடி வலி வரத் தொடங்கியது. சிறிது ஓய்வெடுத்தால் சரியாகும். மருத்துவரை அணுகியபோது Hernia  என்று சொல்லி அறுவைச் சிகிச்சை செய்துகொள்ளச் சொன்னார். செய்து கொண்டேன். பிரச்சனை தீர்ந்தது. இதற்கு முன்பே சிறு நீர் கழிக்க வேண்டும் என்னும் எண்ணம் அடிக்கடி வரும். ஒரு மணி நேரத்திலிருந்து ஒன்றரை மணி நேரம் கூடத் தாக்கு பிடிக்க முடியவில்லை UROLOGIST ஒருவரைப் பார்த்தேன் ஸ்கான் எடுத்துப்பார்த்து prostate enlargement   இருக்கிறது என்றும் அறுவை சிகிச்சை செய்யலாம் என்றும் அறிவுரை கூறினார். எனக்கு அறுவை சிகிச்சை செய்வதில் உடன் பாடு இருக்கவில்லை. நான் இதுவரை பார்த்த மருத்துவர்களிலேயே என்னைக் கவர்ந்தவர் இவர். மருந்து மாத்திரைகள் சிம்ப்டொமெடிக் ரிலீஃப் தரலாம் ஆனால் அறுவைச் சிகிச்சை தேவை என்றார். நான் முதலில் எனக்கு இந்த சிம்ப்டொமெடிக் ரிலீஃப் கிடைக்கட்டும் .பிறகு அறுவை சிகிச்சை பற்றி யோசிக்கலாம் என்று கூறினேன். என் திடமும் முடிவெடுக்கும்திறனும் அவருக்குப் பிடித்தது.இன்றும் மாத்திரைகளில்தான் இருக்கிறேன் ( சுமார் 15 ஆண்டுகளாக). அவர் எனக்குக் கூறிய ஒரு அறிவுரை. மனதுக்குப் பிடித்த வேலைகளில் ஈடுபட்டு உபாதைகளின் நினைப்பை மறக்க    (diversion of  the mind)முயற்சி செய் என்றார். அப்போதுதான் நான் தஞ்சாவூர் ஓவியங்கள் தீட்டக் கற்றுக் கொண்டிருந்தேன்.மும்முரமாக அதில் ஈடுபட்டு சுமாரான திறனை வளர்த்துக் கொண்டேன் அவருக்கு என்னால் நன்றாக வரைய பட்ட ஒரு தஞ்சாவூர் ஓவியக் கிருஷ்ணனைப் பரிசாகக் கொடுத்தேன். மிகவும் மகிழ்ந்தார். தன் வீட்டு ஹாலை அது அலங்கரிப்பதாகவும் கூறினார். இந்த நேரத்தில்தான் 2010 ஆம் ஆண்டு ஆனந்த விகடனில் வந்த ஒரு செய்தி பார்த்து வலைப்பூ பற்றி அறிந்தேன். மனசை ஈடுபடுத்த எழுதலாம் என்னும் எண்ணம் தோன்ற. என் பேரன் மூலம் இந்த வலைப்பூவைத் தொடங்கி எழுதி வருகிறேன்.
அம்மாதிரி ஒரு நாள் நான் கணினியில் இருந்தபோது நெஞ்சு சற்று பாரமாக இருப்பது போல் தோன்றியது. எனக்குத்தான் இது பழக்கப்பட்டதாயிற்றே என்று வாளா இருந்தேன். ஆனால் இன்னும் சிறி நேரத்துக்குப் பின்னும் அது சற்றே வித்தியாசமாய் தொடரவே அருகில் இருந்த மருத்துவமனைக்குச் சென்று ecg எடுக்கக் கேட்டுக் கொண்டேன். அவர்கள் ஈசீஜீ எடுத்து ஸ்பெஷலிஸ்டைப் பார்க்கச் சொன்னார்கள். நானும் என் மனைவியோடு நிபுணரைப் பார்க்கச் சென்றேன். அங்கும் ஈசீஜீ எடுத்து என்னை மருத்துவ மனைக்குப் போகச் சொன்னார்கள். மாலை ஏழு மணி ஆகி இருந்தது. அவர்கள் என்னைப் பல சோதனைகளுக்கு உட்படுத்தி என் மனைவியிடம் வந்திருப்பது ஹார்ட் அட்டாக் என்றார்கள். நாங்கள் தனியே இருந்தோம். என் மக்களுக்குச்செய்தி பறந்தது. பதறி அவர்களும் வர மறு நாள் angiography  செய்தார்கள் ஒரு குழாய் ஏறக்குறைய முழுவதும் அடைப்பு என்று கூறி angioplasty  செய்தார்கள் என்னிடம் அரை முதல் முக்கால் மணி நேரத்துக்குள் முடிந்து விடும் என்றவர்கள் ஒன்றரை மணி நேரமாயும் முடிக்க முடியாமல் இருந்தனர். எனக்கு அவர்கள் பரிதவிப்பு புரிந்து கேட்டேன். பயப்பட ஒன்றுமில்லை என்று கூறி சிறிது நேரத்தில் முடித்தனர். எனக்கு BP கிடையாது சர்க்கரை நோய் கிடையாது கொலோஸ்திரல் கிடையாது இருந்தும் ஏன் இந்த அடைப்பு என்பது புரியாத புதிர். முக்கால் ,மணி நேர procedure  ஏன் தாமதமாயிற்று என்று கேட்டதற்கு ரத்தக் குழாயில் கால்ஷ்யம் டெபொசிட் இருந்தது என்று கூறி அது நான் சிகரெட் புகைக்கும் பழக்கமுள்ளவனாய் இருந்ததனால் இருக்கலாம் என்றார்கள் எனக்கு இந்த பிரச்சனை வந்தபோது நான் புகைப் பழக்கத்தை நிறுத்தி 15 ஆண்டுகளுக்கும் மேலாகி இருந்தது.என்ன ஏதோ காரணம் கொண்டு அடைப்பு ஏற்பட்டு நான் ரூ மூன்று லட்சம் வரை செலவு செய்ய வேண்டி இருந்தது. என் மனதின் எங்கோஒரு ஓரத்தில் இது தேவை இல்லாத செலவோ என்று எண்ணத் தோன்றுகிறது. அப்படி பார்த்தால் சாலையில் நடந்து செல்வோரில் பத்துக்கு மூன்று பேராவது இம்மாதிரி சோதனைகளுக்கு உட்படுத்தப் பட்டால் சிகிச்சை தேவைப் படுபவராகவே இருக்கும்.


விருப்ப ஓய்வு பெற்று நான் பெங்களூரு வந்தபோதே எனக்கு அடிக்கடி சளி பிடிக்கத் தொடங்கியது. பெங்களூருவின் சீதோஷ்ண நிலை எனக்குஒவ்வாமை ஆயிற்று. பெங்களூருவில் இருக்கும் பார்த்தீனிய செடிகளின் மகரந்தத் தூள் காற்றில் பரவி இருப்பதால் இங்கு வசிக்கும் 25 சத வீதத்தினர் ஆஸ்த்மா அல்லது சளித் தொல்லையால் பீடிக்கப் பட்டு உள்ளனர் என்பது புள்ளி விவரம் சில நேரங்களில் நான் சாலையில் நடந்து செல்வதைக் காணும் பலரும் ஏன் இவர் அழுதுகொண்டு போகிறார் என்று எண்ணி இருந்தால் ஆச்சரியமில்லை.
Syncopy  என்றால் என்னவென்று தெரியுமா. காரணம் தெரியாமல் வீழ்ந்து விடுவதாம். ஒரு முறை அப்படி வீழ்ந்து இருந்ததை முன்னமே கூறி இருக்கிறேன். கடந்த சில மாதங்களாக ஒரு இருமல். அதை எவ்வாறு வகைப் படுத்துவது என்று தெரியவில்லை. தொடர்ந்து இருமல் வரும் . ஏதாவது உண்ணும்போதோ அருந்தும் போதோ புரை ஏறுகிறமாதிரி தொடங்கு மூச்சே நின்று விடும் போல் இருக்கும். என்னை ent ஸ்பெஷலிஸ்டிடம் போகச் சொன்னார்கள். அவர் இதை ஒவ்வாமையால் இருக்கும் என்று கூறி மாத்திரை கொடுத்தார். அதிக பலன் இல்லை. மீண்டுமொரு பொது வைத்திய நிபுணரிடம் காட்டினோம். எனக்கு PFT என்னும் நுரையீரல் செயல் திறமையைச் சோதித்துப் பார்த்தனர் சரியாகவே இருந்தது. இருந்தும் ஒரு puff மாதிரியான மருந்து கொடுத்து. உள்ளே இழுக்கச் சொன்னார்கள் இதுவரை பலன் தெரியவில்லை. ஆனால் அந்த பொது மருத்துவர் நான் எனது இதய சிகிச்சைக்காக எடுக்கும் மாத்திரைகளைக் குறை கூறினார். என் கார்டியாலஜிஸ்டும் அவரும் கருத்து வேறு பாடு கொண்டனர். என் கார்டியாலஜிஸ்ட் எனக்கு 24 மணிநேர ஈசீஜீ எடுக்கும் ஒரு கருவியை (holter monitor) பொறுத்திவிட்டார். அதிலும் எந்தக் குறைபாடும் வெளியாகவில்லை. நான் சென்ற முறை ஆலய தரிசனம் சென்றிருந்தபோது வைத்தீஸ்வரன் கோவில் தரிசனம் முடித்து வரும்போது வீழ்ந்து விட்டேன். அதன் பலன் எனக்கு எங்கும் தனியே போக உரிமை இல்லை. கூட யாராவது இருந்தால் என்ன பலன் கிடைக்கப் போகிறது. எனக்கு ஒரு முறை அமெரிக்கா போய் வர வேண்டும் என்னும் ஆசை உண்டு. அது நிறைவேறும் போல் இருந்த சமயம் இந்தமாதிரி syncopy ஆல் அவதிப்பட்டதால் என் மனைவியும் மக்களும் தடா போட்டு விட்டனர். எப்படியோ பல உபாதைகளுடன் மகிழ்ச்சியாகவே இருக்கக் கற்றுக் கொண்டுவிட்டேன். பிறந்தவர் இறந்துதான் ஆகவேண்டும் அதையே நினைத்துக் கவலை படுவதில் அர்த்தமில்லை என்றே தோன்றுகிறது .என்ன சில நேரங்களில் நம்மால் பிறருக்குக் கஷ்டம் கொடுக்கிறோமே என்று தோன்றும் .நான் என்னைச் சார்ந்தவரிடம் அடிக்கடி கூறுவது THAT WHICH CAN NOT BE CURED MUST BE ENDURED. கவலைப் படுவதில் பலன் இல்லை. என் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதன் மூலம் சில உபாதைகள் குறித்த ஒரு விழிப்புண்ர்ச்சி வாசகர்களுக்குக் கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன் 
இந்த உபாதைகள் எனக்கு தனித்தனியாகவோ ஒன்றாகவோ வந்து கொண்டிருந்தது. ஆகவே கூறிய வரிசைகளில் மாற்றம் இருக்கலாம். இப்போதும் இந்த வித்தியாசமான இருமல் விட்டொழிந்தபாடில்லை. மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொண்டிருக்கிறேன் கண்களில் புரைக்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டேன் இருந்தும் இடது கண்ணில் ஏதோ நிழலாடுவதுபோல் வரும். படிக்கவும் தட்டச்சு செய்யவும் சற்று கஷ்டமாக இருக்கும். அது வயோதிகத்தினால் வருவது என்று சொல்கிறார்கள். காதும்கேள்வித்திறனை இழந்து கொண்டு வருகிறது. ஒரு செவிட்டு மெஷின் வாங்கிப் பொருத்திக் கொள்ள வேண்டும்வாழ்க்கையை அனுபவிக்க எல்லா உறுப்புகளும் செவ்வனே செயல் படவேண்டும். குறைகள் இருந்தாலும் சமாளித்துப்போகிறேன். இன்னும் வளர்த்தினால் யாரும் படிக்க வர மாட்டார்கள். ஆகவே முற்றும் கார்டு போடுகிறேன் பதிவு முடிகிறது. ஆனால் உபாதைகள் தொடர்கின்றன. . 
.   
               .  



Wednesday, February 25, 2015

கற்ற பாடமும் இன்னபிறவும்


                                கற்ற பாடமும் இன்னபிறவும்
                               ==============================



நான் கற்றுக்கொண்ட பாடம் ஒரு குட்டிக் கதை

என் பேரக் குழந்தைகளுக்கு நான் சொல்ல விரும்பும் கதை.
அறுபது ஆண்டுகளுக்கு முன் நான் படித்துக் கொண்டிருந்தபோது என் தந்தையின் அலுவலகம் சுமார் எட்டு மைல் தூரத்தில் இருந்தது. அவர் தினமும் தன் சைக்கிளில் போய் வருவார். ஒரு நாள் உடல் சோர்வாக இருக்கிறது .இனறு அலுவலகத்தில் முக்கிய வேலை இருக்கிறது. விடுப்பு எடுக்க முடியாது. அதனால் ப்ளீஸ் இன்றைக்கு மட்டும் ஒரு நாள் நீ என்னை சைக்கிளில் ஏற்றிக் கொண்டுபோய் விடு. மாலை ஐந்து மணிக்கு சரியாக வந்து என்னை கூட்டிக் கொண்டுவாஎன்று கேட்டுக் கொண்டார். வீட்டிலும் டௌனில் சில வேலைகள் கொடுத்தார்கள் நான் தந்தையை சைக்கிளில் ஏற்றிக் கொண்டு அவரது அலுவலகத்தில் விட்டு விட்டு வந்தேன். எப்படியும் மாலை அவரைக் கூட்டிவர டௌனுக்குப் போகவேண்டும்.எனக்கு ஒரு ஐடியா தோன்றியது,அவரைக்கூட்டிவர ப் போவதாக வீட்டில் சொல்லி சீக்கிரமாகவே கிளம்பிப் போய் ஒரு தியேட்டரில் மாட்னி ஷோ பார்க்கப் போனேன் ஷோ முடிந்து நான் தந்தையின் அலுவலகத்துக்குப்போகும் போது நேரம் ஆகி யிருந்தது. என்னைப் பார்த்ததும் அவர் என்னிடம் “ஏன் லேட்என்று கேட்டார். எனக்கு உண்மையைச் சொல்ல முடியவில்லை. சைக்கிள் பங்க்சர், வழியில் நண்பனைப் பார்த்தேன், வீட்டுக்கு வேண்டிய சில சாமான்களை வாங்குவதில் நேரம் ஆகி விட்டது என்று ஏதேதோ உளறினேன், அந்தநேரம் பார்த்து தியேட்டரில் என்னுடன் படம் பார்த்த நண்பன் ஒருவன்படம் நன்றாக இருந்தது இல்லையா.என்று போகும் வழியில் சொல்லிப் போனான். என் தந்தை மிகவும் வருந்தினார். “என்னிடமே உண்மையைச்சொல்ல முடியாமல் பொய் கூறுகிறாய் என்றால் என் வளர்ப்பில்தான் எங்கோ தவறு. அதற்கு எனக்குத் தண்டனையாக உடல் நலமில்லாவிட்டாலும் இந்த எட்டு மைலையும் நான் நடந்தே வருகிறேன்என்று சொல்லி என்ன சொல்லியும் கேட்காமல் நடக்கத் தொடங்கி விட்டார். நானும் அவர் பின்னாலேயே சைக்கிளைத் தள்ளிக் கொண்டு போனேன். நான் செய்த தவறுக்கு எனக்குத் தண்டனை தராமல் அஹிம்சை முறையில் அவர் தன்னையே தண்டித்துக் கொண்டதை என்னால் இன்றும் மறக்க முடியவில்லை. நான் சொன்ன பொய்க்கு என்னை அவர் அடித்து தண்டனை தராமல் அன்பினால் தண்டித்தது இன்றும் என் மனதை கனக்கச் செய்கிறது. அன்று தெரிந்து கொண்டேன். பயத்தினால் திருத்துவதைவிட அன்பினால் கட்டுப்படுத்த முடியும் என்று.நான் பொய் சொல்வதையும் நிறுத்தி விட்டேன்.
                                                 ---------------------------------------------------
டாக்டர்  கந்தசாமி ஐயா அவர்கள் எது சுகம் என்று கேட்டு அவருக்கே உண்டான பாணியில் பதிலும் சொல்லி இருக்கிறார்.ஆனால் இவற்றை எல்லாம் அனுபவிக்க வாழ்க்கை 9 8 7 6 5 4 3 2 1 0 என்று இருக்க வேண்டும் என்பதே இந்தத் தலை முறையினரின் எண்ணம் 
அது என்ன  9 8 7 6 5 4 3 2 1 0...?
9---கிளாஸ்  தினம் குடிக்க நீர்
8---மணி நேர நல்ல தூக்கம்
7---குடும்பத்துடன் இந்த அதிசயங்களுக்கு பயணம்
6---இலக்க மாத சம்பளம்
5---நாள் வாரத்தில் வேலை
4---சக்கர வாகனம்
3---படுக்கை அறை ஃப்லாட்
2---சூட்டிகையுள்ள குழந்தைகள்
1---காதல் மனைவி
0---டென்ஷன்
                            ---------------------------------------------------------------
உலகிலேயே சிறந்த ஆறு மருத்துவர்கள்.-1.  சூரிய ஒளி   2 ஓய்வு
3. உடற்பயிற்சி  4.  உணவு   5 தன்னம்பிக்கை 6  நண்பர்கள்.
 ------------------------------------------------------------------------------------
இரு மாதங்களுக்கு முன்னொரு நாள் நண்பர் ஒருவர் என் வீட்டுக்கு வந்தார். அவர் ஒரு பள்ளிக்கூடம் நடத்துகிறவர். நல்ல மனிதர். எப்படியோ அவருக்கு எங்கள் மேல் ஒரு தனி மரியாதை. சிறந்த பக்திமான். எல்லோருக்கும் உதவும் குணம் படைத்தவர்.
அவருடைய பள்ளிக்கூடத்தில் குழந்தைகளின் மேம்பாட்டுக்காக ஒரு பூஜை செய்வதாகவும் அதற்காக எச்.எம் டி லேஅவுட்டிலிருக்கும்  கோவிலில் இருந்து ஸ்ரீ லலிதாம்பிகை அம்மனை ஒரு நாள் பள்ளிக்கு எடுத்துவர ஏற்பாடு செய்திருப்பதாகவும் அந்த பூஜைக்கு நாங்களும் வந்து பள்ளி மாணவ மாணவிகளை ஆசிர்வதிக்கவும் வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். என் மனைவியாவது கோவில் பூஜை மற்றும் வழிபாடுகளில் ஆர்வம் கொண்டவர். ஆனால் நான்.....? எனக்கு அவரது கோரிக்கையைத் தட்ட முடியவில்லை. நல்ல மனிதர் நம்மையும் மதித்து குழந்தைகளுக்கு ஆசிர்வாதம் வேண்டுகிறார். சரி என்று சொல்லிவிட்டேன். அது ஒரு ஞாயிற்றுக் கிழமை.அவரது பள்ளி என் வீட்டில் இருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்துக்குள் இருக்கிறது
அருகில் இருந்த ஆட்டோ ஸ்டாண்டுக்குச் சென்று பள்ளிக்குக் கூட்டிக்கொண்டு போகச் சொன்னோம். வயதான எங்களைப் பார்த்து ஆட்டோக்காரர் எங்களுக்கு வேறு வழி இல்லை என்று தெரிந்து கொண்டு ரூ.80 கேட்டார். பேரம் ஏதும் பேசிப் பயனில்லை என்று தெரிந்தது. வாசலிலேயே எங்களை வரவேற்றார் நண்பர். சுமார் இரண்டரை மணிநேரம் பூஜை நடந்தது. ஸ்ரீ லலிதா சகஸ்ரநாம வழிபாட்டுடன் பூஜை நடை பெற்றது. நான் சற்றும் எதிர்பார்க்காதபோது நாங்கள் மேடைக்கு அழைக்கப் பட்டோம்.  எனக்கு பொன்னாடை போர்த்தி என் மனைவிக்கு வெற்றிலை பாக்குப் பழங்களுடன் பிரசாதமும் தரப் பட்டது. அம்மாதிரி ஒரு ஏற்பாட்டுக்கு நான் தகுதி ஆனவனா தெரியவில்லை. மனம் நெகிழ்ந்து விட்டது.ஒரு நாள் பள்ளி மாணவர்களுடன் என்னை உரையாட அழைத்திருக்கிறார்.என்னைப் பற்றிய ஏதோ மதிப்பு.இதையெல்லாம் பார்க்கும் போது I FEEL VERY HUMBLE
  மதிய உணவும் அனைவருக்கும் வழங்கப் பட்டதுஅப்போது பூஜை செய்ய வந்திருந்த ஆச்சாரியார் குழந்தைகளையும் பூஜையில் பங்கு பெறச் செய்ததை முதலில் தெரியாததாலும் பின்னர் சுதாகரித்துக் கொண்டு ஒரு பகுதியைக் காணொளியாக்கினோம் அது இத்துடன். 

 

Monday, February 23, 2015

உபாதைகள் பலவிதம்--ஒவ்வொன்றும் ஒருவிதம்---2


                 உபாதைகள் பலவிதம் --ஒவ்வொன்றும் ஒருவிதம்...2
                -----------------------------------------------------------------------------------


திருச்சியில் பணியில் இருக்கும்போது எனக்கு அவ்வப்போது நெஞ்சு பாரமாக இருப்பது போல் தோன்றும் எதுவுமே வாய்க்கு ருசிக்காது. மிகவும் சோர்வடைந்து விடுவேன். மருத்துவமனைக்கு நான் அடிக்கடி செல்ல வேண்டி வந்தது. டாக்டர்கள் இது ஏதாவது டென்ஷனால் இருக்கலாம். மற்றபடி ஏதுமில்லை என்று அனுப்பிவிடுவார்கள். சில மருத்துவர்கள் நான் அவரிடம் போகுமுன்பே “உங்கள் நலத்துக்கு ஒன்றுமில்லை. எல்லாமே உங்கள் மனம் சம்பந்தப்பட்டதுஎன்று அனுப்பி விடுவார்கள். ஏதோ டாக்டரிடம் போக வேண்டியே நான் குறை சொல்வதாக நினைப்பார்கள் இப்படியும் டாக்டர்கள்...! பலமுறை போய் வந்த என்னை பிரதம மருத்துவரிடம் அனுப்பினார்கள். அவர் எனக்கு அமீபாசிஸ் இருக்கலாம் என்று கூறி அதற்கான சிகிச்சையாக எமெடின் எனும் இஞ்செக்‌ஷன் போட்டார் இரண்டு மூன்று நாட்களுக்குக் காலை அசைக்க முடியாமல் போனதுதான் மிச்சம்.ஒரு முறை விடுப்பில் பெங்களூரு வந்தேன். என் மாமாவைப் ( அவர் அந்தக் கால மருத்துவர் LMP) எனக்குக் குடலில் க்ஷயம் வந்திருக்கலாம் என்றும் அதற்கான மருந்துகளை நான் எடுப்பதில் தவறு ஏதும் இல்லை என்றும் கூறினார். மீண்டும் திருச்சியில் நான் எங்கள் மருத்துவமனை பிரதம டாக்டரை அணுகி என் மாமா சொன்ன கருத்தைத் தெரிவித்தேன். அவர்கள் எனக்கு சோதனை dose ஆக montaux எனும் இஞ்ஜ்செக்‌ஷன் போட்டார்கள். அதில் பாசிடிவ் ரிசல்ட் வந்தது. அதாவது எனக்கு அந்த நோய் வருவதற்கான வாய்ப்பிருக்கிறது என்று சொல்லும் அறிகுறியாம் அது. அதன் பேரில் எனக்கு steptomisin இஞ்செக்‌ஷன் இரண்டு நாளுக்கு ஒரு முறையும் NITROZID  எனும் மாத்திரையும் கொடுத்தார்கள். என் மாமாவுக்குத் தகவல் சொன்னேன். அவர் அந்த இஞ்செக்‌ஷனின் வீரியம் 24 மணி நேரம் மட்டுமே என்றும், அதனைத் தினமும் போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் கூறினார். திருச்சி பிரதம மருத்துவர் அதெல்லாம் old school of thought  என்றுகூறிவிட்டார். எனக்கு எந்த முன்னேற்றமும் தெரியவில்லைஇந்த உபாதைகளினால் எனக்குத் தொழில் முறையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அதே இடுப்பு வலியுடனும் சோர்வுடன் கலந்த நெஞ்சு பாரத்துடனும் காலம் கழிந்தது. ஒரு நாள் காலையில்.பல் துலக்கும் போது குமட்டிக் கொண்டு வந்து வாந்தி எடுத்தேன். அதில் இரத்தமிருந்தது. நான் அதைப் பெரிது படுத்தாமல் வேலைக்குப் போனேன். அங்கு டிஸ்பென்சரியில் விவரம் சொன்னேன். அவர்கள் காலம் தாமதிக்காமல் மருத்துவமனைக்குச் செல்லச் சொன்னார்கள். அங்கே எனக்கு barium meal என்று ஒரு கரைசலைக் குடிக்கக்  கொடுத்து உடலின் பாகங்களை அவ்வப்போது x-ray எடுத்தார்கள். அதிலிருந்து எனக்குக் குடலில் புண் இருப்பதாகக் கூறி அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என்றார்கள். பொதுவாகவே எந்த இரு மருத்துவரும் ஒத்துப் போவதில்லை என்று கணிப்பு எனக்கு. பெங்களூரு வந்து மீண்டும் என் மாமாவிடம் விவரம் சொன்னேன். அவர் என்னிடம் ஒரு endoscopy எடுத்துப் பார்க்கச் சொன்னார்.திருச்சி குடியிருப்பு மருத்தவ மனையில் அப்போது அந்த வசதி இருக்கவில்லை என்று நினைக்கிறேன் பெங்களூரு வந்து  அப்படி எடுத்துப் பார்த்ததில் குடலில் புண்ணிருப்பது உறுதியாயிற்று..ஆனால் அறுவைச் சிகிச்சை வேண்டாம் என்றும் மருந்து மாத்திரையில் சரி செய்யலாம் என்றும் சொன்னார்கள்.நாட்பட்ட வைத்தியம். உணவில் கட்டுப்பாட்டுடன் இருக்கச்சொன்னார்கள். நான் பொதுவாகவே மிதமாகவே உண்பவன் . முழு வயிறும் நிரம்பும் வரை உண்ண மாட்டேன். இன்னும் சிறிது உண்ணலாம் என்று இருக்கும்போதே உணவை முடித்து விடுவேன். 70 சதம் உணவும் 20 சதம் நீரும் மீதி 10 சதம் காலியாகவே இருக்குமாறு உண்ணப் பழகிக் கொண்டு விட்டேன்.நான்கு மாதங்களுக்கு ஒரு முறை endoscopy எடுத்துப் பார்ப்பேன். நாளாவட்டத்தில் புண் ஆறி வருவதாகக் கூறினார்கள். என் மாமாவின் மகன் ( மாமா இப்போது இல்லை) அவனும் ஒரு டாக்டர்தான் சொல்லுவான். “ அத்தான், இந்தப் புண்ணானது ஆறுவதுபோல் இருக்கும். அது சாலை ரிபேரில் தற்காலமாகக் குண்டு குழிகளை மூடுவது போல்தான். எப்போது வேண்டுமானாலும் மீண்டும் காயம் வெளியே வரலாம்என்பான் அவன் டாக்டரல்லவா.நன்றாகவே புரிய வைத்தான். போன ஆண்டு நான் மலம் கழிக்கும் போது மலமானது அட்டைக் கருப்பாய் இருந்தது. மீண்டும் புண்ணின் அறிகுறி . சிகிச்சை எடுத்துக் கொள்ளவேண்டும் என்று மருத்துவ மனைக்குச் சென்றேன். அங்கே மீண்டும் endoscopy எடுத்து  இரத்தம் இன்னும் ஒழுகுவதாகக் கூறி அந்தப் புண்ணில் adrenalin என்னும் இஞ்செக்‌ஷனும் போட்டார்கள். மூன்று நாள் மருத்துவமனை icu வில் இருந்தேன். பல இரத்தப் பரிசோதனைகளுக்குப் பின் நான் உட்கொள்ளும் மருந்துகளை பற்றி கேட்டார்கள். எனக்கு இதயத்தில் stent  பொறுத்தியபின் உட்கொள்ளும் மாத்திரைகளைக் குறிப்பிட்டு சில மாத்திரைகளை நிறுத்தச் சொன்னார்கள். ( இதயத்தில் stent பொறுத்தி கதைக்கு பிறகு வருகிறேன் ) அதை என் cardiologist இடம்  சொன்ன போது அது அவருக்கு உடன் பாடாய் இருக்கவில்லை. . என் உடம்பு அல்லவா. நானே அவரிடம் கூறி சில நாட்கள் சில மாத்திரைகளை நிறுத்தலாமே என்றேன். அவர் அரை மனதோடு சில மாத்திரைகளின் டோசேஜைக் குறைத்தார். இப்போது அந்தத் தொந்தரவு இல்லை.மருத்த்வர்கள் பலவிதம் ஒவ்வொருவரும் ஒருவிதம் என்று சொல்லலாமா.? ( முடியவில்லை. தொடரும் )     .  
 

Friday, February 20, 2015

தரம் பற்றிய ஒரு பரிசோதனை


                               தரம் பற்றிய ஒரு பரிசோதனை
                              ------------------------------------------------


என்னுடைய ஆரம்பகாலப் பதிவில் நான் பதிவின் வாசகர்களிடம் கேட்டிருந்த ஒரு சோதனை. நான் கேட்டிருந்த சோதனைக்கு யாரும் அவர்களை உட்படுத்திகொண்டார்களா தெரியவில்லை. . இரண்டேபேர்தான் கருத்திட்டார்கள். நூற்றுக்கும் மேலான வாசகர்கள் படித்திருந்தார்கள். ஒரு வேளை சோதனையில் உண்மையைச்சொல்ல விருப்பம் இல்லாமல் இருந்திருக்கலாம். ஒரு விஷயத்தை வெளிக்கொணரவே அந்த சோதனை.அப்படிப்பட்ட விஷயம்தான் என்ன.?
இப்போதைய வாசகர்கள் பலருக்கும் நான் திருச்சி பாரத மிகுமின் கொதிகலத் தொழிற்சாலையில் தர உறுதி மற்றும் கட்டுப்பாட்டுப் பிரிவில் பணியாற்றி வந்தேன் என்பது தெரிந்திருக்கும். பொதுவாகவே தரம் பற்றி நாம் எல்லாம் தெரிந்து வைப்பதில்லை.அது குறித்த என் பழைய பதிவை நான் இன்று பார்க்கும்போது தரம் பற்றிய இந்தப் பதிவினை ஏறத்தாழ இரண்டாயிரம் பேர் வாசித்திருந்தனர். ஆனால் ஒருவர் கூடக் கருத்திடவில்லை.
தொழிற்சாலையில் செய்யப் படும் பொருட்களை தரக் கட்டுப்பாட்டுக்கு உட்படுத்துவார்கள். ஒவ்வொரு பொருளையும் இப்படி தரக் கட்டுப்பாடு செய்ய இயலாது . அப்படிச் செய்தாலும் அவை நூற்றுக்கு நூறு சதம் கட்டுப்பாட்டில் இருக்கும் என்பது அறுதி யிட்டுக் கூற முடியாது. இதை நிரூபிக்கவே நான் கொடுக்கும் சோதனை. வாசக நண்பர்களை நான் வேண்டிக் கேட்டுக் கொள்வது ஒன்றுதான். இதன் முடிவில் வரும் செய்தியை, நம்மைப் பற்றிய சோதனை என்று எடுத்துக் கொள்ள வேண்டாம். கீழே கொடுக்கப் பட்டிருக்கும் பத்தியை ஒரு முறை கவனமாக வாசியுங்கள். வாசிக்கும் போதே அதில் வரும் எழுத்து ‘f’ எத்தனை முறை வருகிறது என்று கணக்கிட்டுக் கொள்ளுங்கள், முதல் முறை படிக்கும்போதே கணக்கிட்டுக் கொள்ளும் எழுத்தின் மொத்த எண்ணிக்கையைக் குறித்துக் கொள்ளுங்கள். இப்படியே இரண்டு முறையோ மூன்று முறையோ செய்யுங்கள் ஒவ்வொரு முறையும் வரும் எண்ணிக்கையையும் குறித்துக் கொள்ளுங்கள்.அதாவது f’ என்னும் எழுத்து தரத்தில் குறைந்த பொருள் என்றும் ஒருமுறை கணக்கிடுவது உற்பத்தியானபொருட்களை 100% தரக் கட்டுப்பாட்டுக்கு உட்படுத்தி தரமற்ற பொருளை இனம் காண்கிறோம் என்றும் அர்த்தம். இரண்டு முறையோ மூன்று முறையோகணக்கிடுவது 200% அல்லது 300% சதம் தரக் கட்டுப்பாட்டுக்கு உட்படுத்துகிறோம் என்றும் அர்த்தம். இப்போது நண்பர்களே நான் கொடுத்திருந்த பத்தியில் நீங்கள் கண்ட குறைபாடான பொருள் எழுத்து ‘f’ எத்தனை என்பதை பின்னூட்டத்தில் குறிப்பிடுங்கள்.இதில் சரி எது தவறு எது என்று குழப்பிக் கொள்ள வேண்டாம்.

The  necessity  of  training  farm  hands  for  first class  farms  in  the  fatherly  handling  of  farm  livestock  is
foremost  in  the  minds  of  farm  owners. Since  the  forefathers  of  the  farm  owners  trained  the  farm  hands for  first  class  farms  in  the  fatherly  handling  of   farm  livestock,  the  farm  owners  feel  they  should  carry  on  with  the  family  tradition  of  training  farm  hands  of  first  class  farms  in  the  fatherly  handling of  farm  livestock  because  they  believe   it  is  the  basis  of  good  fundamental  farm  management.

இந்தச் சோதனையே பொருட்களை நூறு சதவீதம் பரிசீலனை மூலம் தரம் பிரிப்பதென்பது உத்தரவாதமானது அல்ல என்று புரியும்.

மேலும் தரம் என்றால் என்ன, தரத்தின் விலை என்ன என்று தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப் பட்டிருக்கும் சுட்டிகளில் சொடுக்குங்கள் 
"தரம் என்பது”

"தரம் இலவசம்”


Wednesday, February 18, 2015

உபாதைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம் அனுபவங்கள்---1


           உபாதைகள் பலவிதம் -ஒவ்வொன்றும் ஒரு விதம் அனுபவங்கள்---1
                       --------------------------------------------------------------


சில உடல்நலக் குறைவுகள் நம்மை மிகவும் பயமுறுத்திச் செல்கின்றன.நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் எந்த உடல் உபாதையும் நம்மை பயமுறுத்தக் கூடாது. அண்மையில் வலைப் பதிவர் அருணா செல்வம் அவர்களது தளத்தில் மாரடைப்பின் அறிகுறிகள் பற்றி எழுதி இருந்தார். அதைப் படித்தபின் நான் அனுபவித்த எனக்கு நேர்ந்த சில அனுபவங்களைப் பகிரலாம் என்று நினைத்து இதை எழுதுகிறேன்.பயம் நோயின் வீீரியத்தைக் கூட்டும். அம்மாதிரி பயம் கூடாது என்பதற்காகவே ஒரு first hand narrationஆக என் அனுபவங்களை எழுதுகிறேன் இது ஒரு தொடராக இன்னும் மூன்று பதிவுகளில் வரும் உடல் உபாதை என்பதை நாம் எப்படி அறிகிறோம். நான் தமாஷாக சொல்வதை இங்கும் பகிர்கிறேன். உடலின் எந்த உறுப்பும் தன் இருப்பை வெளிக் காட்டக் கூடாது. “நான் இருக்கிறேன்” என்று நமக்குத் தெரியப் படுத்தும்போது அந்த உறுப்பு சம்பந்தமாக ஏதோ குறை இருப்பது தெரியும். நம் உடல் உறுப்புகள் நம் சொல்லுக்கு அடங்கியே இருப்பது நல்லது. அவற்றுக்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது என்பதே நான் தெரிந்து கொண்டுள்ளது சரி. இனி விஷ்யத்துக்கு வருவோம்நான் கூற வரும்.இந்த உபாதைகள் எல்லாம் தலைவலி  சளி என்பதுபோல் ஓரிரு நாட்கள் படுத்தியவை அல்ல.

 எனக்கு 19 -20 வயதிலேயே(1957-1959) நான் பயிற்சியிலிருக்கும் போது அம்பர்நாத்தில் காரணம் தெரியாத ஒரு back pain இருந்து வந்தது.நிற்க முடியாத அளவுக்கு வலி இருக்கும்  மருத்துவரிடம் காண்பித்தேன். முதலில் rest எடுத்தால் சரியாகிவிடும் என்றார்கள்/ எவ்வளவு நாள் ரெஸ்ட் எடுப்பது. ? என்னவெல்லாமோ. மருந்து மாத்திரைகள் கொடுத்தார்கள். கடைசியில் எனக்கு ஏதோ பால்வினை நோய் இருக்கலாம் என்று நினைத்து இஞ்செக்‌ஷன் கொடுத்தார்கள் (ஏதோ மில்க் இஞ்செக்‌ஷன் என்பதாக நினைவு.) எனக்கு மருத்துவர்களிடம் கோபம் வந்தது. என்னைப் போன்ற பச்சிளம் பாலகனையா அந்த மாதிரி நோய் இருப்பவன் என்று சந்தேகப் படுவது? மருத்துவர்களுக்குப் புலனாகாத நோய்க்கு என்னை பாம்பே கொலாபா நேவல் ஆஸ்பத்திரிக்கு அனுப்பினார்கள். அங்கு அட்மிட் செய்ய இருக்கைகள் (படுக்கைகள்) இல்லாததால் வேறு ஒரு நாளில் வரச் சொன்னார்கள் அப்போது இன்று போல் தொடர்பு வசதி இல்லை. என்னாலும் அவர்கள் சொன்னபடி போக முடியவில்லை. நான் முன்னைவிட அதிக தேகப் பயிற்சிகளில் ஈடுபட்டேன். டேபிள் டென்னிஸ் ஆடக் கற்றுக் கொண்டேன் தடகளப் பயிற்சிகளில் நேரம் செலவழித்தேன் பொதுவாக வலியை இக்நோர் செய்யக் கற்றுக் கொண்டேன்/ விளைவு உயரம் தாண்டும் போட்டியில் முதலாவதாக வந்தேன். டேபிள்டென்னிஸில் இரண்டாம் நிலைக்கு வந்தேன். வலி என்னைக் கண்டு அஞ்சியது என்று நினைக்கிறேன். அன்று தொடங்கிய வலி இன்றும் இருக்கிறது. வலியுடன் வாழக் கற்றுக் கொண்டுவிட்டேன். விஜயவாடாவில் பணியின் மும்முரத்தில் நான் இருந்தபோது வலி அதிகமாகி x-ray எடுத்துப் பார்த்து  disc prolapse  என்று சொல்லி என்னைப் படுக்கையில் முழுநேர ரெஸ்ட் எடுக்கச் சொன்னார்கள். எனக்கு இருந்த பொறுப்பில் ஓய்வு பற்றி நினைத்துக்கூடப் பார்க்கமுடியவில்லை. என் மனைவி வேறு வைத்தியம் பார்க்கலாம் என்று சொல்லி குண்டூரில் ஒரு அக்யுபங்சர் வைத்தியரிடம் கூட்டிப் போனாள். அங்கு உடல் முழுதும் மெல்லிய ஊசிகள் போட்டிருந்த நோயாளிகளைக் கண்டதும் இந்த சிகிச்சை வேண்டாம் என்றும் குணமாகத் திருப்பதி ஏழுமலையானுக்கு காணிக்கை செலுத்துவதுமாக வேண்டிக் கொண்டதும் தனிக்கதை. நான் இதையே காரணம் காட்டி மீண்டும் திருச்சிக்கே வர முடிந்தது இந்த வலியின் பலனால்...! திருச்சியிலும் இந்த வலி என்னைத் தொடர்ந்தது.திருச்சியில் இதன் கூடவே கழுத்திலும் வலி ஏற்படத்துவங்கியது. செர்விகல் ஸ்பாண்டிலிடஸ் என்றார்கள் பின் என்ன, தினமும் மருத்துவ மனைக்குப் போய் ஃபிசியோதெரபி என்னும் பெயரில் கழுத்தில் தூக்கில் இடுவதுபோல் வெயிட் போட்டுத் தூக்குவார்கள் காலுக்கும் வெயிட் கட்டி இழுப்பார்கள். பலன் ஏதுமிருக்கவில்லை


என் மனைவி கோட்டக்கல் ஆர்ய வைத்தியசாலைக்குச் சென்று காட்டலாம் என்றார்கள். எனக்கும் எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்றநிலை. ”’செர்விகல் ஸ்போண்டிலைடிஸ் என்று சொல்கிறார்கள். கழுத்து எலும்பில் தேய்மானம் என்கிறார்கள்என்று சொன்னேன்.ஏஎய். கடவுள்படைப்பில் தேய்மானம் ஒன்னும் இல்லா. ஞான் தருன்ன எண்ணையைத் தேய்த்து குளிக்கண்டா. வெறுதே தொடச்சுவிட்ட மதி. தலைக்குத் தண்ணி ஊத்த வேண்டாம். பின்னே ஈ நெய்யும் கழிக்கானாணஎன்று கூறி நெய்யும் எண்ணையும் தந்தார். திருச்சி மாதியான ஊரில் தலைக்குத் தண்ணீர் ஊற்றக் கூடாது என்று தினம் இருமுறை தலைக்குக் குளிக்கும் என்னாலதை முழுவதும் பின்பற்றமுடியவில்லை. 


மருத்துவர்கள் நான் ஸ்கூட்டர் ஓட்டத் தடை விதித்தார்கள். பலன் நாளாவட்டத்தில் நான் ஒரு கார் வாங்கினேன்.என் மனைவிக்கு அவளது வேண்டுதல் நினைவு வந்து ஒரு முறை திருப்பதி சென்று காணிக்கை செலுத்தினாள்இத்தனைக்கும் பிறகும் இந்த வலி “உன்னை விட்டேனா பார்என்று தொடர்கிறது. ஒரு முறை இந்த வலியில் நான் இருக்கும் போது விழுந்து விட்டேன். அது பற்றி விரிவாக ஒரு பதிவும் எழுதி இருக்கிறேன் பார்க்க.”இங்கே” சொடுக்கவும்  ’”வீழ்வேனென்று நினைத்தாயோ 

இந்த வயதில் வலி வரும்போது கூடியவரை ஓய்வு எடுக்கிறேன் மல்லாந்து படுத்துக் கொண்டுஒவ்வொரு காலாக உயரே எழுப்புவேன். 70 டிகிரி வரை காலை நிமிர்த்த முயன்றால் எழுந்து நடமாடத் தொடங்கி விடுவேன் இடுப்பு தசைகளுக்கு பயிற்சி கொடுக்கும் விதமாக மெதுவாகக் குனிந்து நிமிர்வேன் இந்த உபாதைப் பதிவு மீண்டும் தொடரும் வேறு சில விஷயங்களுடன்.- பலரும் சில உபாதைகளுடன் இருக்கலாம். என் அனுபவங்கள் அவர்களுக்கு தைரிய மூட்டுவதற்கே             











Monday, February 16, 2015

காண சிந்திக்க ரசிக்க பல்சுவை


                            காண சிந்திக்க ரசிக்கபல்சுவை
                            -----------------------------------------------
முதலில் சிந்திக்க
--------------------------
என்னிடம் ரூ.50/- இருந்தது அதிலிருந்து நான் ரூ.20/- செலவு செய்தேன். மீதி இருப்பது ரூ.30/-அதிலிருந்து நான் ரூ.15/- செலவு செய்தேன். மீதியிலிருந்து ரூ.9/- செலவு செய்தேன். மீதியிலிருந்து ரூ 6/- செலவு செய்தேன் பாக்கி இருப்பு ஒன்றுமில்லை.
I have Rs 50/-
     
Spend        Balance
20/-               30/-
15/-               15/-
  9/-                 6/-
  6/-                 0/-
….…             ………
50                   51             ஆனால் இது எப்படி.?

.....                .......
எனக்குத் தெரியவில்லை. உங்களில் யாருக்காவது தெரிந்தால் கூறுங்களேன் 

இனி படித்து ரசிக்க
--------------------------

இந்தியா மூன்று பக்கம் ஊழலாலும்,
ஒரு பக்கம் கடனாலும் சூழப்பட்ட
நாடு...

தோசை கல்லு உள்ளே இருந்தால்
உயர்தர ஹோட்டல்..
வெளியே இருந்தால்
சாதா ஹோட்டல்..

வாக்கிங்
போறது எளிதானது தான்...
வாக்கிங் போக
எந்திரிக்கிறது தான்
கஸ்டமானது..

உலகத்துலயே ஸ்பீட் பிரேக்
ஓரத்துல
ஒரு பாதையை உருவாக்கி அதுல
வண்டி ஓட்டுற டெக்னிக் நம்மள
தவிர யாருக்கும் வராது..

கீழே விழுந்ததும்
அடிபடவில்லை என்பதை விட,
யாரும்
பார்க்கவில்லை என்பதே நிம்மதி..

மதம் மாறினால் தான் கடவுள்
ஆசீர்வதிப்பார் என்றால்
உண்மையில் அவர் கடவுள்
இல்லை, கட்சித் தலைவர்..

ப்யூட்டி பார்லர் போன
மறுநாளே ஐஸ்வர்யா ராய் போல
ஃபீல் பன்னுவாங்க பெண்கள்..
ஜிம்முக்கு போன
அன்னிக்கே அர்னால்டு போல ஃபீல்
பன்னுவாங்க ஆண்கள்..

இந்த ஜெனரேஷன்ல
ஆல்கஹாலுக்கு அடிமையானவன
விட ஆன்ட்ராய்டுக்கு
அடிமையானவன்தான் ஜாஸ்த்தி.

பால்விலை கூடுனது கூட
கவலயா தெரில...டீக்கடைல டீ
விலைய எப்ப கூட்ட
போறாங்கேனுதான் திக்
திக்குனு இருக்கு ...
#
டெய்லி நாலு டீ குடிப்போர்
சங்கம

ஃபேஸ்புக் டுவிட்டர் பக்கமெல்லாம்
வராதவர்கள் தன் வாழ்க்கையில் முன்னேறிக்
கொண்டிருக்கிறார்கள்
என்று அர்த்தம

இப்பெல்லாம் ஏ.டி.எம்-இல் பணம்
எடுத்தவுடன் பணத்தை எண்ணுவதற்கு முன்பு,
இது எத்தனையாவது முறை பணம் எடுக்கிறோம்
என்று தான் எண்ணுகிறோம

ATM - Anju Time Mattum
(
அஞ்சு டைம் மட்டும்)

குழந்தைங்க நம்மகிட்ட
கதை கேட்டதெல்லாம் அந்தக்காலம்..
இப்பல்லாம், 'ஏன் ஹோம்வொர்க்
செய்யல?'னு கேட்டா அதுங்களே கதைகதையா சொல்லுதுங்க..

கிணத்த
தூர்வாருவோம்னு கெளம்புனாங்கெ!!
இப்ப
கெணத்தகாணோம்னு சொல்றாங்கெ!!
இவனுகளே மண்ண
போட்டு மெத்திருப்பானுகளோ!!
# 300
பேரின் சுவிஸ் பணம் மாயம்!!

காய்கறி விலை மளமளவென
உயர்ந்துவரும் நிலையில்,
கீரை விலை ஏறாமல் சில்லறயில்
கிடைப்பது, நம் உடல்
ஆரோக்கியத்துக்க
ு கொடுக்கப்பட்டிருக்கும்
கடைசி வாய்ப்பு..

ஆபிஸ் போற அன்னைக்குலாம் 9
மணி வரைக்கும் தூக்கம் வரும்



சண்டே மட்டும் ஏழு மணிக்கு மேல
வராது # விதி

பியூட்டி பார்லர்க்கும்
ஃபுல்லா மேக்அப் போட்டு தான்
போகனுமா?
என்னம்மா இப்படி பண்றிங்களேமா

தூய்மை இந்தியாதிட்டம்!!
தேவையான பொருட்கள்:
வெளக்கமாறு 1
கேமரா 4

மின்கட்டணத்தை உயர்த்தக்கூடாது
என சென்னை உயர்நீதிமன்றம்
உத்தரவு
#
அப்டியே நெட் கட்டணத்தயும்
உயர்த்தகூடாதுன்
னு உத்தரவு போட்ருங்கயா.....( யான் பெற்ற இன்பம் அனைவரும் பெறப் பகிர்வு).

இனி கண்டு களிக்க
-------------------
 என்ன நண்பர்களே ரசித்தீர்களா? உங்கள் கருத்துக்களைப் பகிரலாமே.