Thursday, January 30, 2014

காக்கைகளும் குஞ்சுகளும்


                           காக்கைகளும் குஞ்சுகளும்.
                           --------------------------------------



என் நண்பர் தம்பதிகள் ஒரு நாள் என் வீட்டுக்கு வந்திருந்தனர்.கையில் ஒரு பெண்கைக்குழந்தை. பெங்களூர் சற்றுக் குளிர் அதிகமான ஊர் என்பதால் தரையில் கால் வைத்தால் சில்லென்று இருக்கும். இந்தப்பிரச்சனையைத் தவிர்க்க என் வீட்டு ஹாலில் லினோலியம் கார்ப்பெட் மாதிரி போட்டு வைத்திருக்கிறேன். எப்போதும் கைக் குழந்தைகளை கையில் வைத்திருக்க முடியாது. மேலும் அம்மாதிரிக் குழந்தைகள் தரையில் அமரவோ முட்டுக்குத்தவோ நீச்சல் அடிக்கவோ ஏதுவாய் இருக்கும். குறிப்பிட்ட நண்பரின் குழந்தை ஆறு மாதத்திலேயே பிரசவமான ஒரு ப்ரிமசூர் குழந்தை. ஏறத்தாழ ஆறு வாரங்கள் இன்குபேட்டரில் வைத்திருந்தார்களாம். பிறந்து ஆறு மாதமான அக்குழந்தையை லினோலியம் கார்பெட்டில் மல்லாக்கப் படுக்க வைத்தார்கள். இடனே அக்குழந்தை கவிழ்ந்து தரையில் நீச்சல் அடித்து இம் என்பதற்குள் அறையின் மறுகோடிக்கு வந்தது. எங்களுக்கு இது மிகவும் ஆச்சரியமாய் இருந்தது. மீண்டும் அறையின் ஓரத்தில் கிடத்தினார்கள்.கிடத்தித் திரும்பிவதற்குள் குழந்தை மறு கோடிக்கு வந்து விட்டது. Such an hyperactive child…! பொதுவாகவே இம்மாதிரிக் குழந்தைகள் சற்று அதிகச் சுற்சுறுப்பாக இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இப்பதிவு அதற்காக அல்ல. ஒரு நாள் என் உறவினர் ஒருவர் அவர்கள் வீட்டுக் குழந்தையுடன் வந்திருந்தார்கள் பேச்சுவாக்கில் நாங்கள் அந்த ப்ரிமசூர் குழந்தையைப் பற்றிச் சொன்னோம். வந்திருந்தவர்கள் கையிலும் ஒரு குழந்தை வயது சுமார் இரண்டு இருக்கலாம். இடுப்பிலேயே வைத்துக் கொண்டிருந்தார்கள், “ ச்சே. .! இதென்ன பிரமாதம் ....  இவன் ஆறுமாதத்திலேயே எழுந்து நடந்து ஓட ஆரம்பித்துவிட்டானாக்கும்...!என்றார்கள். அந்தக் குழந்தையானால் இடுப்பைவிட்டு இறங்கவே மறுத்து விட்டது. காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சுதான் .... இருந்தாலும் இப்படியா.? நம் வீட்டுக் குழந்தை நன்றாகப் படிக்கிறது என்று சொல்லிவிட்டாலே போதும் அவர்கள் குழந்தையும் பள்ளியிலேயே முதன்மைக் குழந்தையாய் இருக்கும். ஒரு முறை ஒரு தாத்தா பாட்டி அவர்கள் பேரக் குழந்தையுடன் வந்திருந்தார்கள் “அங்கிளுக்கும் ஆண்டிக்கும் ரைம் சொல்லிக் காண்பி ? என்று அக்குழந்தையைப் பாடாய்ப் படுத்தினார்கள். அது ஏன் சொல்கிறது.?பல மிட்டாய்கள் சாக்கலேட்டுகளுக்குப் பின் அது அழுது கொண்டே ரெயின் ரெயின் கோஅவே என்று அழுதது. தங்கள் வீட்டுக் குழந்தையின் புத்திசாலித்தனத்தை பறை சாற்றுவதில் பெற்றோரை விட அவற்றின் தாத்தா பாட்டிகளுக்கே அதிக முனைப்பு. வீட்டுக்கு யாராவது வருவதானால் சில குழந்தைகள் வந்தவர்களின் கையையோ பையையோதான் பார்க்கும்/ நாம் ஏதும் எடுத்துக்கொண்டு போயிருக்காவிட்டால் “ வருகிறவர் போகிறவர் எல்லாம் ஏதாவது கொடுக்க வேண்டுமா என்ன ?” என்று குழந்தைகளிடம் கடுமையாகப் பேசுவார்கள்.
சில வீடுகளில் குழந்தைகளுக்குப் புகட்டப் படும் முதல் பாடமே “மாமாவுக்கு டாட்டா சொல்லு. வருகிறவரை வரவேற்கக் குழந்தைக்ளுக்குப் போதிக்கிறோமோஇல்லையோ முதலில் வழியனுப்பச் சொல்லிக் கொடுக்கிறோம் இது ஒருவிதம் என்றால் அயல்நாடுகளில் வசிக்கும் தங்கள் பேரன் பேத்திகளுக்கு ஈடே கிடையாது என்று சூடம் ஏற்றிச் சத்தியம் செய்யாத குறையாகப் பேசுபவர்களையும் சந்திக்கத்தானே செய்கிறோம். என் நான்கு வயது பேத்தி ( பேரன் )க்கு கம்ப்யூட்டரில் தெரியாதது ஏதும் இல்லை. நல்லது. ஆனால் இதை சொன்ன உடனே எதிரிலிருப்பவர் உடனே தன் பங்குக்கு தங்கள் வீட்டுக் குழந்தைகள் புராணம் சொல்லி ஓய மாட்டார்கள். இதற்கெல்லாம் காரணம் என்ன.?இப்போதையக் குழந்தைகள் எல்லாம் நம் காலத்தைவிட புத்திசாலிகள்தான் ஒப்புக்கொள்ள வேண்டும். நான் மூன்று வயதாக இருக்கும்போது நிலைக்கண்ணாடி முன் நின்று சீப்பால் தலை வாரிக் கொள்வேனாம். அது என் பெற்றோருக்கு மிகவும் மகிழ்ச்சி தரக் கூடியதாய் இருந்திருக்கும். இப்போதைய குழந்தைகள் அதிலெல்லாம் இருந்து எங்கோ முன்னேறி வந்து விட்டன.
குழந்தைகளை அவர்களுக்குப் பிடிக்காததைச்செய்யச் சொல்லி வற்புறுத்துவது சரியல்ல என்று தோன்றுகிறது. மேலும் குழந்தைகள் ஒன்றும் காட்சிப் பொருட்களில்லையே. பெற்றோர்களே , அவர்களையும் பெற்றோர்களே...! குழந்தைகள் நம் மனதுக்கு இதம் தருபவர்கள். சில குழந்தைகளின் புத்திசாலித்தனத்தை ரசிக்கலாம். ஏன்... நானும் என் பேரன் பற்றிய பதிவுகள் எழுதி இருக்கிறேன். திருமதி .கீதமஞ்சரி நிலா சிறுமியாய் தன் பாட்டியுடன் கோவிலுக்குச் சென்று மூன்று சுற்றுக்குப்பதில்  அதிகமாய் சுற்றியதைக் கழிக்க எதிர் திசையில்சுற்றட்டுமா என்றுகேட்டதாக எழுத்யது நினைவுக்கு வருகிறது குழந்தைகள் என்ன மாதிரி சிந்திக்கிறார்கள் என்று எண்ணி ரசித்திருக்கிறேன் தங்கள் வீட்டுக் குழந்தைகள் குறித்த மகிழ்ச்சி பகிரும்படியாக இருக்கலாம் . ஒப்பிட்டு தங்கள் குழந்தைகளே மேல் என்று எண்ணுவது சரியா, முதலில் நான் சொன்னது போல் காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு பிற குழந்தைகளை மட்டம் தட்டிப் பேசுவதையோ அதைவிட தங்கள் குழந்தையே சிறந்தது என்று எண்ணுவதையோ தவிர்க்கலாமே.

 

என் முந்தையப் பதிவில் காருண்யா இல்லம் பற்றி எழுதி இருந்தேன். உதவ முன் வருபவர்கள் நண்பனின் கடிதத்தில் கொடுத்திருக்கும் இணைய தளத்துக்குச் சென்று தொகை அனுப்ப வேண்டிய முகவரி முதலிய விவரங்களையும் அவசியம் பார்க்கவும். நன்றி.
All donations to Palakad Alzheimers’ Charitable Trust are exempted from payment of Income Tax under section 80G – Cert.No.CIT/TCR/TECH/80G-36/2009-10.
Our Account No. is with Union Bank of India, Chandranagar Branch, Palakad. Act.No.SB.339602100008103 - Palakkad Alzheimers’ Charitable Trust. IFSC Code : UBIN 0533963. 

Please  contact Sri. P Madhusudhan   Tel.Mob. 9447408252
                                                                      Landline  0491/2571090
E mail   madhu37@gmail.com       
 

Wednesday, January 29, 2014

அன்பு நெஞ்சங்களுக்கு ஒரு வேண்டுகோள்


                            அன்பு நெஞ்சங்களுக்கு ஒரு வேண்டுகோள்
                             -------------------------------------------------------------


இந்த என் பதிவு சற்றே வித்தியாசமானது. எனக்கென்று நான் யாரையும் இதுவரை அண்டியதில்லை. ஆனால் ஒரு நல்ல செயலுக்குத் துணைபோக எல்லோரிடமும் வேண்டி எழுதுகிறேன். இதற்கு முன்பாக 2012-ல் ஒரு பதிவு எழுதியது கடிதம் , கடிதம் அல்லஎழுதியிருந்தேன். அதில் நினைவலைகள் தவறியவர்களுக்கென்று என் நண்பன் ஏற்று நடத்தும் இல்லம் பற்றி எழுதி இருந்தேன். பலரும் உதவும் எண்ணம் இருப்பதாகக் கூறி இருந்தனர். இப்போது இத்துடன் அந்த நண்பன் எழுதியுள்ள கடிதத்தின் நகலை இத்துடன் இணைக்கிறேன் வலையுலக நண்பர்கள் தாராளமாக உதவுவார்கள் என்னும் நம்பிக்கையுடன் வேண்டி உதவ அழைக்கிறேன் அந்த இல்லத்தின் இணைய தளத்தையும் காணுங்கள் முந்தைய பதிவைப் படிக்க இங்கே சொடுக்கவும் 


Hi all !

Please visit our new website "www.karunyagcc.org"

I am on a mission to find 1000 well wishers of Karunya who will
contribute just.Rs.1000/- each
for my Medicl Clinic Building construction. With around 20 old people
in Karunya, giving an injection or giving a bottle of Glucose has
become an urgent need.  If we have a Medical Unit of our own we can
avoid running to Govt.Hospital at night times.

The foundation of the Clinic Building (Around 1200 Sq.Ft)  is ready
there and I am raising funds for the super structure - construction to
start in May June 20`14 during Monsoon as there is shortage of water
otherwise.

So, please forward this message to at least 10 friends of yours whom
you can  confidently ask to contribute.  OK ?  May God Bless you and
your families always !
 


 
.

Sunday, January 26, 2014

வாழ்வியலில் ஒரு பாடம்


                               வாழ்வியலில் ஒரு பாடம்
                                -----------------------------------


ஆசிரியர் ஒருவர் வகுப்பறைக்குள் நுழைந்தார்.என்ன பாடம் நடத்தப் போகிறார் என்று ஆவலுடன் எதிர்பார்ப்பில் மாணவர்கள். ஆசிரியர் மேசைக்கு அருகே நின்று  ஒரு கண்ணாடி பாட்டிலை வைத்தார். அதற்குள் கால்ஃப் பந்துகளைப் போட்டு நிரப்பினார். மாணவர்களிடம் கண்ணாடி பாட்டில் நிரம்பிவிட்டதா எனக் கேட்டார். மாணவர்கள் ஆமோதித்தனர். அதன் பின் சில கூழாக்கற்களை கண்ணாடி ஜாரில் போட அவை கால்ஃப்பந்துகளுக்கிடையில் இருந்த காலி இடங்களுக்குள்  போய் அமர்ந்து கொண்டன. இப்போது ஜார் நிரம்பிவிட்டதா என்று கேட்டார். மாணவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு ஆம் என்றனர். பிறகு ஆசிரியர் ஒரு பையில் இருந்த மணலை பாட்டிலுக்குள் இட்டார். மணல் சரிந்து கொண்டு ஜாரில் இருந்த வெற்று இடங்களை நிரப்பியது. இப்போது ஜார் நிரம்பி விட்டதா எனக் கேட்டார். எல்லோரும் கோரசாக ஆம் என்றனர். இன்னும் என்ன செய்யப் போகிறாரோ என்னும் ஆவல் அவர்கள் கண்களில். ஆசிரியர் அவர் கோட்டுப் பைக்குள் இருந்து ஒரு பாட்டில் சாக்கலேட் பானத்தை ஜாரில் விட்டார். ஜாரும் அந்தபானத்தை ஏற்றுக் கொண்டது.  ....





எனக்கு ஒரு மின் அஞ்சல் வந்தது. அதில் இருப்பதை பகிர்ந்து கொள்கிறேன். முதலில் விளக்க மாக எழுதலாம் என்று எண்ணினேன். ஆனால் என்னதான் எழுதினாலும் இந்தக் காணொளி விளக்குவது போல் இருக்காது. மனம் மாறி அந்தக் காணொளியை அப்படியே பகிர்கிறேன்.


 ஒரு நிழலாட்டம் என்னவெல்லாம் சொல்கிறது.REALLY INCREDIBLE.!






Friday, January 24, 2014

ZUKO- வைக் காணப் போனோமே.


                       ZUKO-வைக் காணப் போனோமே
                       -----------------------------------------------


ஆங்கிலப் புத்தாண்டுச் சிந்தனைகள் என்று ஒரு பதிவு எழுதி இருந்தேன். அதன் பிறகு முன்பே எழுதி வைத்திருந்த இரண்டு பதிவுகள் வெளியிட்டேன். அதன் பின் தையலே தைப் பெண்ணே என்று எழுதினேன். பதிவுகள் எழுத உடலும் உள்ளமும் ஒத்துழைப்பதில்லை. என்னதான் நம்பிக்கையோடு இருந்தாலும் உள்ளம் அடிக்கடி உடல் உபாதையை சுட்டிக்காட்டுகிறது. சுவர் இருந்தால்தானே சித்திரம்.?இருந்தாலும் நான் நலமாக இருக்கிறேன் என்று எனக்கு நானே தேற்றிக் கொள்ள இதை எழுதுகிறேன்
.
ஜனவரி 12-ம் நாள் என் மச்சினனின் பெண் திருமணம் இனிதே நடந்தது. இந்தப் பெண்பற்றி sky dive  என்று முன்பே எழுதி இருந்தேன்.ஊரார் உற்றார் முன் கொட்டியது மேளம் கட்டினான் தாலி,கண்ணில் ஆனந்தக் கண்ணீர் வழிய பெண்ணின் கை பிடித்து வரனிடம் பொறுப்பை ஒப்படைத்தான் என் மச்சினன்.திருமணம் முடிந்த கையோடு மாலை என் மனைவியின் அக்காள் மகள் வீட்டுக்குக் கூட்டிப்போனார்கள்.அவர்கள் இல்லத்துக்குச் சென்று நாட்கள் பல ஆகி இருந்தன. இந்த முறை எங்கள் விஜயம் முக்கியமாக ZUKO வைப் பார்ப்பதற்கென்று இருந்தது. என் இளைய பேரனின் வற்புறுத்தலும் ஒரு காரணம் zuko யாரென்று சொல்ல வில்லையே. “எங்களைப் பார்க்க என்று யாரும் வருவதில்லை. ஆனால் zuko வைப் பார்க்க மட்டும் எல்லோரும்வருகிறார்கள் என்று அங்கலாய்த்துக் கொண்டார்கள் ZUKO ஒரு சைபீரியன் ஹஸ்கி நாய்.  நாய் என்று சொன்னால் நம்பமுடியாது. நரி மாதிரி இருக்கிறது. ஆறு வார ஆண் நாய்க் குட்டி. சுமார் 40,000/ ரூபாய் கொடுத்து வாங்கி இருக்கிறார்கள். என் பேரனுக்கு அதேபோல் ஒரு நாய் வாங்கி வளர்க்க வேண்டுமாம் . நாய் நம் வீட்டைக் காக்கும் என்பதைவிட நாம்தான் இம்மாதிரி நாய்களைக் காபந்து செய்ய வேண்டும் . ஏமாந்துஇருந்தால் நாயையே லவட்டிக் கொண்டு போய் விடுவார்கள். பனிப்பிரதேசத்தில் sledge வண்டியை இழுக்க உபயோகமாகும் நாய். நம் நாட்டு தட்ப வெட்பத்துக்குப் பழக்கமான pedigree  இது. குரைப்பதில்லை. ஊளையிடுகிறது.

செல்லி என்று பெயருடன் நாங்கள் வளர்த்த cocker spaniel  நாய்க்குப் பிறகு செல்லப் பிராணி வளர்ப்பையே தவிர்த்து வருகிறோம். அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் நாய் வளர்ப்பது பலருக்கும் இடைஞ்சலாகும். என் பேரன் பிடிவாதமாய் இருக்கிறான். சாதக பாதகங்களை அலசி நாய் வாங்கி வளர்ப்பதில் இன்னும் முடிவெடுக்காமல் இருக்கிறார்கள் மகனும் மருமகளும். பார்ப்போம். எது வெல்கிறது என்று. அறிவா உணர்வா.?.

சொகுசாக சூகோ பீன் இருக்கையில்

அரவணைப்பில்  சூகோ

இப்படியிருக்கும்வளர்ந்தால்

நாயா நரியா.?
 இந்த நாயைப் பற்றிய செய்திகளுக்கு பார்க்கவும் 

http://en.wikipedia.org/wiki/Siberian_Husky

http://en.wikipedia.org/wiki/Balto 

இரண்டாவது சுட்டி பால்டோ என்னும் நாயைப் பற்றியது. கடுங்குளிரிலும் உயிர் காக்கும் மருந்தை ஸ்லெட்ஜ்  வண்டி மூலம் கொண்டு சென்ற  பால்டோவுக்கு சிலை யெழுப்பி நன்றி தெரிவித்திருக்கின்றனர். 





.

.

      

Monday, January 13, 2014

தையலே தைப் பெண்ணே வருக வருக.

நான் வரைந்த கண்ணாடி ஓவியம்
                                                             ஸ்ரீ காயத்ரி தேவி
                                                                   ---------------   
              தையலே தைப் பெண்ணே வருக வருக...
               -----------------------------------------------------

 
               பொங்கல் வாழ்த்துக்கள்.
               ----------------------------------

          மார்கழிப் பனி விலக
          பாவையர் நோன்பு முற்ற,
          தையலே தைப் பெண்ணே-வருக
          உன் வரவால் வழி பிறக்க

          முற்றிய கன்னலுடன் சூல் முற்றிக்
          கதிர் சாய்ந்த செந்நெல் குத்திய
          புத்தரிசி கொண்டு புதுப் பானையதனில்
          பொங்கலாக்கிப் படைத்திடவே

          பகலவனும் பாதை மாறிப்
          பயணம் செய்யத் துவங்கும்
          இந்நாளில் பொங்கும் மங்களம்
          எங்கும் தங்க வணங்குகிறோம்

அனைவருக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
----------------------------------------------------------.
    

Friday, January 10, 2014

சும்மா சிரிச்சிட்டுப் போங்க...!


                                    சும்மா சிரிச்சிட்டுப் போங்க.....!
                                    --------------------------------------



நான் ஒரு சீரியஸ் மனிதன். என்னால் பிறரை சிரிக்க வைக்க முடிவதில்லை. இந்த என் குறை எனக்குத் தெரியும். ஆனால் எனக்கு நகைச் சுவை உணர்வு கிடையாது என்று அர்த்தமல்ல. நன்கு ரசிப்பேன். என் ரசிப்பின் வெளிப்பாடு என் இதழோரப் புன்னகையில் மட்டுமே தெரியும். அப்படி நான் அண்மையில் ரசித்த சில கடி ஜோக்ஸ் ( உபயம்-என் நண்பர்) உங்கள் பார்வைக்கு.முடிந்தால் இவற்றின் தரத்தை வரிசைப் படுத்துங்களேன்.

சே!சே! வர வர செல்போனை எதெதுக்குத்தான் யூஸ் பண்றதுன்னே இல்லாம போயிடுச்சு!
ஏன் என்ன சலிப்பு உனக்கு?
கல்யாணம் ஒண்ணுல பந்தியில கடைசில உக்காந்துருக்கறவரு முதல்ல ஒக்காந்தவருக்கு ஃபோன் பண்ணி பாயசம் அங்கேயே தீந்துடுமா இல்ல கடைசி இலை வரைக்கும் வருமான்னு கேக்கறாரு

நீங்க உடனடியா மீன், ஆடு, கோழி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.
அதுக சாப்பிடுவதை நான் எப்படி நிறுத்த முடியும் டாக்டர்

உங்க கிட்னி பெயில் ஆகிடுச்சு.
நான் என் கிட்னிய படிக்க வைக்கவே இல்லயே டாக்டர் அது எப்படி பெயில் ஆகும்.



காதலி:      நாளைக்கு என் பொறந்த நாள்.. எனக்கு ஒரு ரிங் தருவியா?
காதலன்:  ஓ! லேண்ட்லைன்லயா.. செல்ஃபோன்லயா?

என்னதான் பில் கேட்ஸோட பையனா இருந்தாலும், கழித்தல் கணக்கு போடும்போது, கடன் வாங்கித்தான் ஆகனும்.

பேக் வீல் எவ்வளவு ஸ்பீடா போனாலும், ஃப்ரன்ட் வீல முந்த முடியாது.  இதுதான் உலகம்.

இளநீர்லயும் தண்ணி இருக்கு., பூமிலயும் தண்ணி இருக்கு., அதுக்காக இளநீர்ல போர் போடவும் முடியாது., பூமில ஸ்ட்ரா போட்டு உரியவும் முடியாது.  என்ன நா சொல்றது சரிதானே.

ஓடுற எலி வாலை புடிச்சா நீ கிங்கு…  ஆனா தூங்குற புலி வாலை நீ மிதிச்சா  உனக்கு சங்கு’.
.

சைக்கிள் ஓட்டுறது சைக்கிளிங்னாட்ரெய்ன் ஓட்டுறது ட்ரெய்னிங்கா?   இல்ல………. பிளேன் ஓட்டுறது பிளானிங்கா?

என்னதான் கிளி கீ..கீ.. என்று கத்தினாலும் அதால ஒரு லாக்கை கூட ஒப்பன் பண்ண முடியாது.

நிக்கிற பஸ்ஸுக்கு முன்னாடி நாம ஓடலாம்.  ஆனாஒடுற பஸ்ஸுக்கு முன்னாடி நாம நிக்க முடியாது.

சன்டே அன்னைக்கு சண்டை போட முடியும்.  அதுக்காக  மன்டே அன்னைக்கு மண்டைய போட முடியுமா?

டிசம்பர் 31 க்கும், ஜனவரி 1 க்கும் ஒரு நாள்தான் வித்தியாசம். ஆனால், ஜனவரி 1 க்கும், டிசம்பர் 31 க்கும், ஒரு வருசம் வித்தியாசம்.. இதுதான் உலகம்.

குதிரை தெரிகிறதா கண்டு பிடியுங்கள் 



 

Wednesday, January 8, 2014

தேவன் மகா தேவன்...

                                           தேவன் மகா தேவன் ( சிறு கதை)
                     ( dash board-ல் தெரியாததால் மீண்டும் )

VINGHIP   POTTIYA  HIRUTHAYAMUMAI   ஆங்கில  எழுத்துக்களில் எழுதப்பட்ட மலையாள  கடிதத்தின்  ஆரம்பம். சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்டது
.
பழைய கடிதங்களைப் பாதுகாத்து அதைப் படித்து அந்தக் கடிதங்களின் பின்னணிகளை நினைத்து , அந்தப் பழைய வாழ்க்கையில் சில மணி நேரம் வாழ்வது வாசுவின் பொழுது  போக்கு .இந்தக் கடிதத்தை எழுதிய  தேவனைப் பார்க்க வேண்டும் போல் தோன்றியது  வாசுவுக்கு.  தேவனும் வாசுவும் பழகிய நாட்கள்  என்னவோ கொஞ்சம்தான்.இரண்டு  மாதத்துக்கும் சற்று ஏறத்தாழத்தான் இருக்கும். இருந்தாலும் அந்த நாட்கள் .....ஐம்பது வருடங்களுக்குப் பிறகு இரண்டு மாத நட்பை ஞாபகப்படுத்திப் பார்க்க முடியுமா.. ?ஏன்  முடியாமல் ..? பழைய கடிதங்களைப   பாதுகாத்து  வைத்திருக்கிறானே ... ஆனால் தேவனோ  ...?
பெங்களூரில்  வேலைக்குச் சேர்ந்த  அந்தக் காலத்தில் தங்க நேர்ந்த அந்த லாட்ஜில் "த்ரீ மஸ்கிடீர்ஸ் "என்று தங்களைத் தாங்களே கூறிக்கொண்டனர்  வாசுவும் தேவனும் சந்துருவும் , இதில் சந்துரு எல்லோரையும் விட மூத்தவன். ஏதோ ஒரு கம்பனியில்  குமாஸ்தாவாக  இருந்தான். தேவன் வேலை தேடி  கேரளத்திலிருந்து  வந்தவன். வாசு  அப்போதுதான்  ஒரு தொழிலகத்தில்  பயிற்சியாளனாகச சேர்ந்திருந்தான் . மற்றவரை விட  இளையவன்.

”’இப்போது தேவன் என்ன செய்து கொண்டிருப்பான்..? எப்படி இருப்பான்..பார்க்க வேண்டும்   போல் தோன்றுகிறதே..! " எண்ணியதை  சொல்லில் கூறி செயலில் காட்டாவிட்டால்  வாசுவுக்கு  தலை  வெடித்துவிடும்போல்  தோன்றியது.
"
இந்த பழைய குப்பைகளையெல்லாம்  மாய்ந்து  மாய்ந்து படிப்பதில் அப்படி என்னசுகமோ"--வாசுவின்மனைவி  தங்கம் அவன் நினைவுகளைக் கலைத்தாள்

"
இந்தக் கடிதத்தைப்  படித்துப்  பாரேன் தங்கம் .முடிகிறதா  புரிகிறதா  சொல். "
"
உங்களுக்குத்தான்  வேறு வேலை இல்லை என்றால் .. சரி  சரி ..காட்டுங்கள்   VINGHIP   POTTIYA  ...ஐயே .என்ன இது..?இங்கிலீஷில்  இங்கிலீஷுமல்லாமல்  எனக்குமுடியலைப்பா...... "
"
இங்கே  கொண்டா .நான் படித்துக்காட்டுகிரேன்-----விங்கிப  பொட்டிய ஹிருதயமுமாய்  நிங்களை  விட்டுப் போரேண்டி  வன்னதில் எனிக்கி  கூடுதல்  விஷமிச்சு====.தேவனுக்குத  தமிழ்  தெரியாது.எனிக்கி மலையாளம்  கொறச்சு  அறியும்.அதனால்தான் இந்த முறை                       

தேவனைப்  பார்க்க வேண்டும் போல் தோன்றுகிறது தங்கம். அவன் இந்த விலாசத்தில் இருப்பானா.. ? போய்ப்  பார்க்கலாம்... நீயும் வாயேன் ".

"
அவ்வளவு  தூரம்  பணம்  செலவு  செய்து  போய  அவர்  அங்கே  இல்லாவிட்டால்  எல்லாம்  விரயமாகும்."

" ஏன்  விரயமாக  வேண்டும் .? நமக்கும் பொழுது  சற்று  மாறுதலாகப்  போகும். ஏற்பாடு செய்கிறேன்.ரெடியாக இரு. "
பெருங்கோட்டுகா வழி திருச்சூர்  என்று  விலாசமிருக்கிறது. எப்படியும் திருச்சூர்  போய  அங்கிருந்து  விசாரித்துப்  போய்க்  கொள்ளலாம். திருச்சூருக்கு  டிக்கெட் புக்  செய்ய வேண்டும்  என்று  எண்ணியவாறே   வாசு  ரெயில்வே   ஸ்டேஷனுக்குப  புறப்பட்டுச் சென்றான்.

"
நீளமாய கழுத்துள்ளபெண்கள் சந்தமாய் இருக்கும்....அறியோ  வாசு. ?"தேவனின்  குரல் இப்போதும்கேட்கிறது.

"
வேலை  தேடி  ஊர்  விட்டு  ஊர் வந்து  பெண்களின்  கழுத்தைப்  பற்றி ஆராய்ச்சி  செய்யாதே.முதலில் வேலை."

 "
ஆமாம், இவன்  பேசற  பாஷை  யாருக்கும்  புரியாது. இவனுக்கெல்லாம்  எவன்  வேலை  கொடுப்பான் ", சந்துருவுக்கு  தேவன் சொல்வது   புரியாததால்  வரும் கோபத்தில் சபிப்பான்.

"
அது  எந்தா.. ஆரும்   பணி  தரில்லே..இன்னால்   வேண்டா. ..சந்துரு  எனிக்கி  வேண்டி  ஒன்னும் செய்யண்டா.  ஞான   எங்கனே  எங்கிலும்   ஜீவிக்கும் ".
எப்படியாவதுபிழைத்துக்கொள்வேன் என்று சொன்னதேவனுக்கு  அதை நிரூபிக்க   வேண்டிய நிர்பந்தம்கூடிய  சீக்கிரத்திலேயே  ஏற்பட்டது. ஊரிலிருந்து  செலவுக்குப்  பணம்  வரவில்லை.லாட்ஜில்  நெருக்கினார்கள். இல்லை என்றால்  காலி  செய்யச்  சொன்னார்கள்.
தேவனும்  வேறு  வழி இல்லாமல்  அவனுடையப்  பெட்டியை  வாசுவிடம்   கொடுத்து   பத்திரமாக  வைத்துக்கொள்ளும்படியும் , பணம்  கிடைத்ததும்  அதைத்  திரும்பப் பெற்றுக்கொண்டு போவதாகவும் கூறினான்.

"
தேவா, உனக்கு  நன்றாகத்தெரியும், எங்களுடைய நிலை. சந்துருவின்  பின்னால்  அவன் சம்பாதிப்பதைக் கொண்டு  வாழ   ஒரு பட்டாளமே   இருக்கிறது. எனக்கோ  பயிற்சி  நேரத்தில் ரூபாய்  முப்பதுதான்  ஒரு  மாதத்துக்குக்  கிடைப்பது. ..இதில் என்னதான் செய்ய முடியும்..?"

"
ஏய்ய் வாசுவிஷமிக்கண்டா.. எனிக்கி  அறியும். .என்டே  சமயம்  இங்கனேயுண்டு .எந்து செய்யாம்..?"

அடுத்தநாள்   தேவனின் பெட்டியைப்  பறிமுதல்  செய்ய , லாட்ஜ்  முதலாளி  முயன்றதும் வாசு  அதைக்  கொடுக்காமல்  தகராறு  எழுந்து, போலீஸ்  ஸ்டேஷன்  வரை  தகராறு  போனதும் வேறு கதை.

ரயிலில்  இடம்  பிடித்து   அமர்ந்து, பயணம்  செய்யும்போது அந்த  வாலிப   நாட்களே  வந்தது  போலவும்  நிகழ்ச்சிகள்  எல்லாம்  நேற்று   நடந்தது  போலவும்   வாசுவுக்குத் தோன்றியது.

"
தங்கம் , உன்னைக்  காதலித்துக்  கலியாணம்  செய்து   கொள்ளும்   முன்பே   எனக்கு   ஒரு    காதலி   இருந்தாள்   தெரியுமா  உனக்கு,?"

"நீங்கள்   ஆயிரம்   பெண்களைப்   பார்த்திருப்பீர்கள் எல்லோரையும்   மனசால்   காதலிக்கவும்  செய்திருப்பீர்கள். ஆனால்  யாராவது  உங்களை  காதலித்து  இருக்கிறார்களா.?"

 "
என்னைக்  காதலிக்க  எந்தப்  பெண்ணுக்குத்தான்  கசக்கும்.? ஆனால்  நான்  சொல்லும் இந்தக்காதல் தேவனால் தடம் புரண்டு  விட்டது..நாங்கள்  தங்கியிருந்த   லாட்ஜுக்கு  அருகே  ஒரு பால்  கடை   இருந்தது. அங்கு  பால்  வாங்க  ஒரு பெண்   தினமும்  வருவாள். நாங்கள்  இரவு   உண்ட  பிறகு  சில நாட்களில்  பால்  அருந்த அங்குசெல்வோம். அவளை அங்கு   அடிக்கடி   பார்ப்போம் .ஹூம் .!  பார்த்தால்   எனக்கு உடம்பு  ஒரு  மாதிரியாய்  படபடக்கும் , நாக்கு  வறண்டு   பேச்சு  சரியாக  வராது. இதெல்லாம்   காதலின்   வெளிப்பாடுகள்   என்று தேவன்   விளக்கம் சொல்லுவான்நானும் அதை  நம்ப   ஆரம்பித்தேன். ஆனால்   அவளிடம்   எப்படிப்   பேசுவது, எங்கு   பேசுவதுஅவள்  பேசுவாளா   ஒன்றும்  புரியவில்லை. தேவன்   இதற்கு  ஒரு  வழி  செய்வதாகக்   கூறி   அபயமளித்தான்.

வாசு  கதைபோல்  விவரிக்க   தங்கத்துக்கும்    சற்றே   உற்சாகம்  பற்றிக்கொண்டது.
"
ஆமாம்.அப்போது உங்களுக்கு என்ன வயசிருக்கும்,?"

"
பதினேழு பதினெட்டு இருக்கலாம்"

"
அடப்பாவி.!பிஞ்சிலேயே  பழுத்த  கேசா.?"

"
இல்லை தங்கம்,.உலகத்தையே   புதிசாகப்   பார்க்கும்   வயசு.  எல்லாவற்றையும்   சோதனை செய்து பார்க்கும் வயசு.யாரையும்உடனே நம்பும்  வயசு. சந்தர்பபங்கள்   அமைந்திருந்தால் , யார்  கண்டது, ..ஒரு சமயம்  பிஞ்சிலேயே  பழுத்திருக்கலாம்"

"அதுசரி.அந்தப்பெண்ணுக்குஎவ்வளவு வயசிருக்கும் என்ன பேர் ஏதாவது   தெரியுமா”?

"
அவளுக்கு  பதினெட்டு  இருபது வயசிருக்கலாம். பெயர்  தெரியாது..ஆனால்  என்   மனசுக்குள்   நான்  அவளுக்கு   வைத்த பெயர்   அகிலா. எனக்கு  எல்லாமே  இந்த   அகிலமேஅவள்தான் என்று  தோன்றும்
. "
"
சீ..! நீங்கள் இப்படிப்பட்டவர் என்று தெரிந்திருந்தால்....."

"ஏன்என்னைக் காதலித்து இருக்கமாட்டாயா?கலியாணம் செய்து இருக்க  மாட்டாயா”?

இப்போது அதைப்பற்றி நினைப்பது டூ  லேட்தவிர்க்க முடியாததை   அனுபவிக்கதானேவேண்டும்இருந்தாலும் இப்போது நோ ரிக்ரேட்ஸ் .வருத்தமேதும் இல்லை.
 "
"
எனக்கு  அதுவும்  தெரியும். தேவனைப்  பற்றி  சொல்லிக்கொண்டிருந்தேன் . எப்படயாவது  அந்தப்  பெண்ணைப்  பற்றிய  செய்திகளை  சேகரிக்கப போவதாகக்  கூறினான். வேலை  இல்லாதவனுக்கு  நல்ல வேலை  என்று சந்துரு  கிண்டல்  பேசினான். அடுத்த  நாள் பயிற்சி  முடிந்து  அறைக்குத்  திரும்பும்போது  தேவன்  அங்கு  பொறுமையில்லாமல்    எனக்காகக்   காத்திருப்பது   தெரிந்தது.வாசு ..ஆ  பெண்ணின்டே  ஸ்தலம் அறிஞ்சு என்று  கூவினான். பிறகு  அந்த  வீட்டையும்  காட்டினான். வீடு  தெரிந்தவுடன் அந்தப்  பெண்ணைப்  பார்க்காவிட்டால்  தலை  தெறித்து விடும்  போல்  தோன்றும்.அந்த  வீட்டின்  முன்பாக அங்குமிங்கும்  அடிக்கடி  நடப்பேன்வீட்டு  முன்னால்  ஷூவுக்கு  லேஸ்  கட்டும்  சாக்கில்  உள்ளே  ஆராய்ந்து  பார்ப்பேன்.ஆனால்என்  கண்ணில்  மட்டும்  அவள் தென்பட  மாட்டாள். தேவன்என்னைத் தமாஷ் செய்கிறான் என்று அவனிடம்  கோபித்துக்  கொண்டேன். தேவன் சொன்னான் நான்அங்குபோகும்  நேரத்தில்  அவள்  எங்கோ  தட்டெழுத்துப்  பயிலச்செல்கிறாளோஎன்னவோஎன்று. அதன் பிறகு  அடுத்துள்ள  தட்டெழுத்துப்  பயில்விக்கும்  இடங்களுக்கு  முன்பு  நின்று  நோட்டம்  விட   ரம்பித்தேன். அவள் என்கண்களில்படவேஇல்லை. பிறகுதான் அது  நடந்தது."என்றஒரு  சஸ்பென்ஸ்  கொடுத்து  நிறுத்தினான்  வாசு.
"என்ன  பெரிய சஸ்பென்ஸ்...ஒரு நாள் அவளைப்  பார்த்தீர்கள் , பல்  இளித்தீர்கள்   அவள்  உங்களைக் கண்டு   கொள்ளவே இல்லை .பிறகு  சேச்சே ...இந்தப் பழம்  புளிக்கும் என்று வந்து விட்டீர்கள்..அவ்வளவுதானே "  என்று கிண்டல் செய்தாள்   தங்கம்.

"
அதுதான்  இல்லை. அவளுடைய  பெயரை  அறிந்து   வருகிறேன்  என்று  சொன்ன  தேவன் , அவர்கள்  வீட்டின்  அருகே  விளையாடிக்  கொண்டிருந்த  ஒரு   சிறுவனைக்  கூப்பிட்டு ,நிறைய  மிட்டாய்களைக்  கொடுத்து   அந்தச் சேச்சியின்  பெயரைக்கேட்டுவா--என்று  அனுப்பி   இருக்கிறான். அந்தப்  பையன்  வீட்டிற்குள்  சென்றசற்று நேரத்தில்  அந்தப்  பெண்  வெளியே  வந்திருக்கிறாள் .அந்தப்  பையன்  தூரத்தில்  இருந்த  தேவனைக்  காட்டி  ஏதோ சொல்ல , அந்தப் பெண்  உள்ளே சென்று  மறுபடியும்  வெளியே  வந்தபோது, பெரிய  மீசை  வைத்த  இரண்டு  ஆட்களும்  கூட  இருந்தனர். தூரத்தில்   நின்று  பார்த்துக்  கொண்டிருந்த  தேவன்   மெல்லநழுவப்பார்க்க  ஓடி வந்து அவனைபிடித்து
நன்றாக தர்ம அடி கொடுத்து அனுப்பிஇருக்கிறார்கள்பாவம்,தேவன்.......  முகமெல்லாம்  வீங்கி  உதடு  காயப்பட்டு  ரத்தம்  தெரிய  வந்ததை  நிறையப்  பேர்   பார்த்திருக்கிறார்கள்அவமானமாக இருந்தது,என்று சொல்லிச்சொல்லி   மாய்ந்தான்  பாவம், என் காதலுக்காக  அடி  வாங்கினான் " --என்று  பெருமூச்சுடன்  கூறி நிறுத்தினான்
  வாசு.
 "
அவர்  உங்களைக்  காட்டிக்  கொடுத்து , உங்களையும்  அவர்கள் புடைக்கவில்லையா .?'

"அந்தமட்டில் தேவனுக்குநன்றி சொல்லவேண்டும்
 "
திருச்சூர்  சென்று  அங்கு  ஒரு  ஹோட்டலில்  தங்கி , ஒரு நாள் இருந்து  பிறகு ,
பெருங்கோட்டுக்கா  என்ற இடம்  எங்கு  இருக்கிறது  என்று  விசாரித்து  அங்கு  சென்றால்..... வாசுவிற்கு  முதலில்  ஒன்றுமே  புரிய வில்லை. அந்த  இடத்தில் ஒரே  கூட்டமாக  இருந்தது. அது  ஒரு ஆசிரமாம். அதன்  தலைவர்  பிரம்ம  தேவ  சுவாமிகள்  அன்று  காலையில்தான்  இந்த பூத  உடலை விட்டு உயிர்  நீத்தாராம்.  அவருக்குமரியாதைசெய்ய கூட்டம் கூட்டமாக மக்கள்  சென்று  கொண்டிருந்தனர்.  வாசுவுக்கு   சற்றே  ஏமாற்றமாக  இருந்தது.  சரி  வந்ததுதான்  வந்தோம்  அந்த ச்வாமிகளையாவது  வணங்கி செல்லலாம்  என்று  அருகே  சென்றால்......
 
வயதான  தேவன்தான்  பிரம்மதேவ  சுவாமிகள்.  அருகில்  இருந்தது  யார்..? வயதான  தோற்றத்தில்  அகிலாவா..?   வாசுவின்  அகிலாவா...?!