Friday, December 29, 2017

மறதியா நோயா


                         மறதியா நோயா
                        ------------------------------

 நண்பனின்  மகன்  திருமணத்துக்குச் சென்றிருந்தோம்  அங்கே ஒருவர் அங்கும்  இங்குமாக நடந்து கொண்டிருந்தார் முகத்தில் ஒரு சிநேக பாவமான புன் சிரிப்பு. என்  நண்பனிடம் என்னை யார் என்று கேட்டார் என்னைத் தன்நண்பன் என்று அறிமுகப்படுத்திய நண்பன்  மெல்ல அவரிடம் பேசி அழைத்துச் சென்று விட்டான்   சிறிது நெரத்தில் மீண்டும்  அந்தப் பெரியவர் என்  நண்பனிடம் என்னைப்பற்றிக் கேட்டார் மீண்டும்  அறிமுகம் செய்து வைத்தான்  அதே சிரிப்புடன் அவரும் சென்று விட்டார்   நண்பனிடம்  கேட்டேன்  அவரது மாமனார் என்று தெரிவித்தான். சற்று நேரத்தில் அந்தமனிதர் மீண்டும் வந்தார் வரும்போது தனது வேட்டி அவிழ்ந்து    இருப்பதும்  தெரியாமல் அதே சிரிப்புடன் வந்தவர் வேட்டி தடுக்கிக் கீழே விழுந்து விட்டார் விழுந்ததில் கொஞ்சம் காயம் ஏற்பட்டது  அதைச்  சட்டை செய்யாமல் சிரித்து வந்தவரை ஆசுவாசப் படுத்தி நான் பேச்சுக் கொடுத்தேன்  அவர் அந்த வீட்டைக் காண்பித்து அது அவர் கட்டியது என்றும்  அதன் பெயர் ----------என்றும் சரியாகக் கூறினார்  என்  நண்பன்  அவருக்கு டெமென்ஷியா நோய் என்றும்  அதன்  அறிகுறிகளே அவர் செயல்களில் என்றும்  கூறினான் 

வட இந்தியப் பயணமாக நான் என்மனைவி அண்ணா   அண்ணியுடன்  காசி ஹரித்வார் எல்லாம் சென்றிருந்தோம் ஹரித்வாரில் மாலை கங்கா ஆரத்தி நடக்கும்  நல்ல கூட்டம்  கங்கா மாதாவின் கோவில் சிறியது தரிசனம் செய்ய நன்  என் மனைவி முதலில் சென்றோம்  மற்ற இருவரும்  செருப்புகளுக்குக் காவலாக ஒருஇடத்தில் இருந்தனர்  நாங்கள் தரிசனம் முடித்து வந்தபின்  அண்ணா அண்ணி சென்றனர்  கூட்டத்தில் அண்ணா தனியே அண்ணி தனியே என்று பிரிந்துவிட்டனர்  முதலில் அண்ணா வந்தார்  சிறிது நேரம் கழிந்தும் அண்ணி வரவில்லை இடம்தெரியாமல் எங்கோ தேடுகிறாரோ என்று நினைத்தோம்   இன்னும் சிறிது நேரம்கழிந்தும்வராததால் அவரைத் தேடி  நானும் அண்ணவும் சென்றோம்  சிறிது தேடலுக்குப்பின்  கொஞ்ச தூரத்தில் அண்ணி தனியே எங்கோ சென்று கொண்டிருப்பதைப் பார்த்து அவரை அழைத்து வந்தோம் 
ஹரித்துவாரில் ஒரு ஹோட்டலில் உணவு அருந்தி அறைக்குத் திரும்பினோம்   அப்போதுதான் அண்ணா அவருடைய பர்ஸ் மற்று அறைச்சாவியை ஒரு டெலெபோன் பூத்தில் அண்ணி வைத்ததை நினைவு கூர்ந்தார்  மறுபடியுமந்த பூத்துக்குச் சென்றால் நல்ல வேளை வைத்த பொருட்கள் கிடைத்தன அண்ணா அண்ணியிடம்கோபித்துக் கொண்டார்  அண்ணி அண்ணாவிடம் கோபித்துக் கொண்டார் பிறகு அவரவர் அறைக்குச் சென்றோம்  சிறி து நேரத்தில் அண்ணி வந்து கால் செருப்பை எங்கள் அறையில்விட்டு விட்டதாக கூறினார்  அங்கிருக்கவில்லை  அவர்களது அறையிலேயே இருந்தது( இந்த நோயினால் பீடிக்கப்பட்டு  மருத்துவம் ஏதும் குணமளிக்காமல்  இரண்டு ஆண்டுகள் படுக்கையில் இருந்து என் அண்ணி உயிர் நீத்தார்)  

 சில நேரங்களில்  நாம்  எதையோ செய்ய நினைத்து அதைச் செய்யாமல் மறந்து போகும்  சந்தர்[ப்ப்பங்களும்  உண்டு அதை நான் ஒரு பதிவாக எழுதி இருந்தேன்
  என் சிறு தோட்டம் நீரின்றி காய்கிறது
பூவாளியில் நீரை ஏற்றி இரைக்கப்
போகும்போது அழுக்கடைந்த கார் காண 
அதை முதலில் கழுவலாம் என்று தோன்ற 
அருகில் செல்லும் போது தென் படுகிறது
வீட்டின் முன் மாட்டியிருக்கும் தபால் பெட்டி.
காரைக் கழுவும் முன் தபாலை எடுத்துப்  
ஹாலில் மேசை மேல் கார் சாவியை வைத்து
ஃப்ரிட்ஜிலிருந்து ஃபான்டா பாட்டிலைத் திறந்து
ஒரு வாய் அருந்தி அதை அருகில் வைத்து
கடிதங்களைப் பிரித்துப் பார்க்க அவை 
குப்பைத் கூடையில் போக வேண்டியது என்று 
அதைப் பார்க்க அதுவும் நிரம்பி இருக்க அதைக் 
காலி செய்து குப்பைத் தொட்டியில் போட 
வெளியே போக வேண்டும் போகிறபோதே 
அருகில் இருக்கும் கியோஸ்கில் மின் கட்டண்ம்
செலுத்தினால் ஒரு வேலை முடியும். அதற்கு முன்
அட்டைப் படத்தில் கவர்ச்சியுடன் சிரிக்கும் அழகியைத் 
தாங்கி வந்திருக்கும் வாராந்திரி கண்ணில் பட அதை 
எடுத்துப் படிக்கக் கண்ணாடி தேவை அதை வைத்த
இடம் மறந்து தேட மேசை அறையில் கார் சாவி கண்டதும் 
காரைக் கழுவ நினைத்ததும் நினைவுக்கு வர 
அங்கே போனால் பூவாளி நீரும் குப்பைக் கூடையும் 
என் முன்னே இளிக்க ஆயாசத்துடன் ஃபாண்டா பருக்
எண்ணி எடுத்தால் அதுவும் குளிர் விட்டுப் போய் ச்சே!
எந்தவேலையும் திட்டமிட்டபடி நடப்பதில்லையே 
என நான் சிந்திக்கும் போது மனசு குரல் கொடுக்கிறது
டேய்.! உனக்கு இருப்பது AAADD யின் அறிகுறிகள்
( AAADD  என்றால் AGE ACTIVATED ATTENTION DEFICIT  DISORDER.)

இந்த AAADDக்கும்  மேலே குறிப்பிட்ட நிகழ்வுகளுக்கும் வித்தியாசமுண்டு  வயது காரணமாக வரும் பிரச்சனைகளே இவை  முதலில் கூறியவை டெமென்ஷியா அல்லது அல்ஜிமெர்  என்னும்  நோயின்  அறி குறிகள்  பின்னது ஏறத்தாழ வயதானோர் எல்லோருக்கும் நிகழ்வது டெமென்ஷியா அல்லது மறதிஒருநோயாகப் பரிமளிப்பது முதலில் சொன்ன நிகழ்வுகளில் அண்மைய கால நிகழ்வுகள் மறந்து போகும்  நோய் முற்றும் போது தனித்தியங்க இயலாது பிறரது கவனிப்பு மிக அவசியம்  நான்  காரணகாரியங்களைப் பற்றி அலசப்போவதில்லை   ஆனால் நோய் வாய்ப்பட்டவர்கள் மிகவும்  அனுதாபத்தோடு அணுகப் பட வேண்டியவர்கள்
  
 டெமென்ஷியா மூளையின் செயல்பாட்டின் குறைவால் ஏற்படும்
மனநோய். அல்ஜீமர் நோய் அவற்றில் ஒன்று. அது நாள்பட நாள்
பட தீவிரமடையக் கூடியது. நியூரான்ஸ் எனும் நரம்பு செல்கள்
அழியும்போது நரம்பு மண்டலத்துக்குசெய்திகள் அனுப்பும்
ரசாயனக் குறைவால் மூளையும் நரம்பு மண்டலமும் ஒன்றாக
இணைந்து செயல்படுவது குறைகிறது. இதுவே இந்நோய்க்கான
காரணமாக இருக்கலாம் என்று எண்ணப்படுகிறது.

ஒருவர் பாதிக்கப்பட்டிருப்பது அல்ஜீமர் நோயால்தானா, இல்லை
இந்தமாதிரி நிகழ்வுகள் மூளையில் ஏற்படும் பழுதால்,அல்லது
கட்டி போன்றவற்றால் ஏற்படுகிறதா என்று முதலில் சோதித்துத்
தெரிந்துகொள்கிறார்கள். அல்ஜீமர் நோய்க்கு இதுவரை மருந்து
கண்டு பிடிக்கப் படவில்லை. நோயின் தீவிரத் தன்மையை தள்ளிப்
போட மருந்து மாத்திரைகள் கொடுக்கிறார்கள். இந்த நோயால்
பாதிக்கப் படுபவரைவிட ,அடுத்துள்ளவர்க்குத்தான் கஷ்டங்கள்
கூடும். வயதான காலத்தில் புரிதலும் அனுசரணையுமே முக்கிய
தேவை.

ஏற்கெனவே இந்த காலத்தில் வயதானவர்களைப் பராமரிப்பது
கஷ்டமான காரியமாகக் கருதப் படுகிறது. இம்மாதிரி நோய்
இருப்பவரின் நடவடிக்கைகள் அவரால் கட்டுப்படுத்த முடியாதது
மற்றவர்களால் புரிந்து கொள்ளப்படாவிட்டால் எரிச்சல் ஊட்டக்
கூடியதாய் இருக்கும். சின்னச் சின்ன விஷயங்கள் கூட தொல்லை
கொடுத்து மன உளைச்சலை அதிகரிக்கச் செய்யும்.

எனக்குத் தெரிந்து , இந்த நோயின் தீவிரம் உணர்ந்து, இப்படிப்
பட்டவர்களுக்குக் காப்பகம் போன்ற அமைப்பு தேவை ,என்று
உணர்ந்து, தான் தீவிரமாக ஈடு பட்ட  என் நண்பரை  அவருடைய
மனைவி, நாற்பது ஆண்டுகளுக்கு மேல் குடித்தனம் நடத்தியவர்
விவாகரத்து செய்து கொண்டு ,அவருடைய சொத்தின் பெரும்
பகுதியை சுயார்ஜிதப் படுத்திக் கொண்டுவிட்டார்.
நண்பர் நடத்தும் காருண்யா இல்லத்தில் முதியோர் காலை உணவு 
இந்நோய் குறித்த விவரங்கள் அறியப்பட வேண்டும். இன்னும்
விவரமாக எழுதினால் அனாவசிய பீதி ஏற்படுத்தக்கூடும்.
என்பதால் இத்துடன் முடிக்கிறேன்.

முடித்தபின் தோன்றியது மறதி என்பதுஒரு வரம் யோசித்துப் பாருங்கள் நடந்த நிகழ்வுகள் எல்லாமே நினைவில் நின்றால் தலை வெடித்து விடாதா? இன்னொன்று நாம் முக்கியமாய் நினைப்பவைகளை  மறப்பதில்லை உ-ம் மனைவி நாம் ஆஃபீசுக்குப்  போகும்போது  gas புக் செய்யச்சொன்னால் மறக்க முடியுமா ? 




Monday, December 25, 2017

பதிவர்களை நினைக்கும் போது தோன்றும் எண்ணங்கள்


          பதிவர்களை நினைக்கும் போது தோன்றும்  எண்ணங்கள்
          -----------------------------------------------------------------------------------------
நான் சந்தித்த பதிவர்கள் பற்றி எழுதி இருந்தேன்  அப்போது என்ன பேசினோம்  என்பதையும்  தந்திருக்கலாமோ என்றும்கருத்து  இருந்தது நாங்கள் என்ன பேசினோம்  என்பதைவிட அவர்கள் பற்றி , அவர்கள் எழுத்து பற்றி நான் என்ன நினைத்தேன்  என்பது சொன்னால் நன்றாயிருக்கும்  என்று தோன்றியது சந்தித்த சந்திக்காத பதிவர்களின் எழுத்துகள் பற்றி இப்போது கூறப்போகிறேன்  அதற்கு முன்பு ஒரு காணொளி இதில் காணும் விஷயங்கள் எனக்கு சரியாகப் புரியவில்லை  பதிவுலகில் வங்கியில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர்களால் இதைப் புரிய வைக்க முடியும்  என்று நினைக்கிறேன்  வங்கி தொழிலில் புகழ் பெற்ற பதிவர்கள் சிலரது பெயர்களை இங்கு எழுதுகிறேன் திரு செல்லப்பா யக்ஞசாமி. திரு நடன சபாபதி திரு தி தமிழ் இளங்கோ போன்றோர் இன்னும்  வலையுலகில் எழுதிக் கொண்டு இருக்கிறார்கள் என் பதிவுகளுக்கு வரவும் செய்கிறார்கள் இவர்களும் மற்றவர்களும் கருத்து சொல்லி என்னைத் தெளிவு படுத்தலாம் 
சந்திக்காத பதிவர்களின் சில எழுத்துகள் என்னை மிகவும் ஈர்த்தவை  திரு டிபிஆர் ஜோசப் எழுதி இருந்த ஒரு க்ரைம் த்ரில்லர் நான் ஆவலோடு வாசித்து மகிழ்ந்தது சொந்த செலவில் சூனியம் என்பது அந்த நாவலின்  பெயர் ஒரு வங்கி அதிகாரியாய் இருந்தவர் எப்படி இத்தனை விஷயங்களையும்   நுணுக்கத்தோடு எழுத முடிந்தது என்பதேஎன்  ஆச்சரியம்  சுட்டி தருகிறேன்   நேரம் இருந்தால்  எல்லா பகுதிகளையும் படித்து பாருங்கள் என்னுலகம் என்னும் தளத்தில் எழுதி வந்தார் ஆவடி வாசி  இதுவரை சந்தித்ததில்லை சுட்டி என்னுலகம் 

சந்திக்காத பதிவர்களில் ஒருவர் பக்கிரிசாமி நீலகண்டன்  இவரும் இப்போது பதிவுகளெழுதுவதில்லை ஆனால் ஆங்காங்கே பின்னூட்டங்களிடுவார்  இவரை நினைத்தாலேயே  இவரது ஒரு தொடர் நினைவுக்கு வரும் முற்பிறப்பு விஷயங்களை நினைவு கூறும் ஒருவர் பற்றியது இவரைப் பற்றி இவரது ப்ரொஃபைலில் இருந்து

நான் இங்கே எழுதும் அனைத்தும் Statin Drug, Lipitor-க்கு சமர்ப்பணம். மனமும், உடலும் என் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்பொழுதே, நான் நினைத்தவைகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும் என்னும் எண்ணத்தை Statin எனக்கு அளித்தது. உலகத்தில் உள்ள பயங்கரமான குற்றவாளிகள் அனைவருக்கும் கொடுக்கவேண்டிய அற்புதமான மருந்து அது. பக்க விளைவே கிடையாது; எல்லாம் நேரடி விளைவுதான்; மனுஷனை நடைபிணமாக மாற்றிவிடும். யார் செய்த புண்ணியமோ, சரியான நேரத்தில் மருந்தை நிறுத்திவிட்டேன். என்னை பார்த்து ஆர்வம் கொண்டு, நிறைய பேர் தமிழில் எழுதி, அதில் யாருக்காவது நோபெல் பரிசு கிடைத்தா, நான் ஜன்ம சாபல்யம் அடைவேன். இவரே தமிழில் தைரியமாக எழுதும் பொழுது, நானும் எழுதினால் தப்பே இல்லைன்னு, ரொம்ப பேர் முனைப்போடு எழுதுவாங்கன்னு நினைக்கிறேன் ( நானும் அதர்வோ ஸ்டாட்டின்  மாத்திரைகளை எடுத்துக் கொள்பவன் ) 

சமுத்ரவைப் பற்றிச் சொல்லும்போதுஅவரது அணு அண்டம் பேரண்டம்  பகுதிகளையும் கலேடாஸ்கோப் பதிவுகளையும் பற்றி எழுதீருந்தேன் ஆனாலும்  எனக்கு நினைவுக்கு வருவதுஅவருடைய சிறு கதை ஒன்றுதான் மிகவும்  ரசித்தேன்  எந்த அளவுக்கு என்பது இத்தனை எழுத்துகளிலும்  என்மனதில் இடம் பிடித்த பதிவு என்பதே காரணம் கதையின் தலைப்பு நைவேத்தியம்  சுட்டி 


டாக்டர் கந்தசாமி வாழ்க்கைக்கு உதவும் பல செய்திகளை பதிப்ப்பிப்பார் முக்கியமாக சுகாதார சிந்தனைகள் அதில் இருக்கும் டாய்லெட் உபயோகிக்கும் முறை முதல் படுக்கையில் போர்வையின்  பக்கம்தலைமாடு கால்மாடு  பற்றியும் எழுதி இருக்கிறார் ஆதியில் என்னை ஒருபிரபலபதிவராக்குகிறேன் என்றார் நான் தான்  என் எழுத்துகள் மூலம் கிடைக்கும்பிரபலமே போதும்  என்றேன்
திரு செல்லப்பாவின்  ஒரு பதிவு மனதில் நிற்கிறது  இப்போது நடக்கும்  ரெய்டுகள் பற்றிப்படிக்கும் போதெல்லாம் அவரதுபடிவே நினைவுக்கு வரும்  பலரும் படித்திருக்கலாம் அண்மைய பதிவுதான்  அது 

தமிழ் தமிழ் அதிலும் பண்டையத் தமிழையே அனுபவித்து ஒருவர் பதிவிடுவதென்றால் அவரது திறமையிலும் எழுத்திலும் அவருக்கு இருக்கும் நம்பிக்கையை காட்டுவதாகும் ஊமைக் கனவுகள் என்னும் தளம் படித்தால் தமிழன் தலை நிமிர்ந்து நிற்கலாம் கவிதை எழுதக் கற்கலாம் பண்டைய இலக்கியங்களில் மூழ்கி முத்தெடுக்க உதவுவார் மரபுக் கவியின் இலக்கணங்களையும் கற்பிப்பார் ஜோசப் விஜு இவரது பெயரை அறியவே எனக்கு நாளாயிற்று.  , நான் நீதிகேட்கிறேன் என்னும் ஒரு பதிவை எழுதி இருந்தேன்.அதற்கு பின்னூட்டமாக இக்குரல் பழங்காலத்திலேயே ஒலித்திருக்கிறது என்று எழுதி இருந்தார்.அதுவே ஒருவேளை அவரை இப்பதிவை வெளியிடச் செய்ததோ என்னவோ தெரியவில்லை உலகாயுதம்-கடவுளைக்கொன்றவனின் குரல்  படித்துப் பாருங்கள் ரசிப்பீர்கள்.

சில பதிவர்கச்ளை நினைக்கும் போது எழும் நினைவுகளே பதிவாயிற்று  ரசித்தீர்களா நட்புகளே i


         

Friday, December 22, 2017

டும்களும் டாம்களும் இரு கோணங்கள்

                           

                                          டும்களும் டாம்களும்  இருகோணங்கள் 
                                                            ----------------------------------
( முன்பொரு பதிவு எழுதி இருந்தேன் காதலி வேண்டாம் என்று  படித்த அப்பாதுரை வேண்டும்  என்று இருந்தாலும் சரியாய் இருக்கும் எனப் பின்னூட்டமிட்டார்  அதன் விளைவே இது  இரு கோணங்களிலும் )
                                       வேண்டும்  

 பிற பாவையரைப்பார்க்கையில் குற்ற உணர்ச்சி எழச் செயும்
எனக்கொரு  கேர்ல்  ஃப்ரெண்ட் வேண்டும்
பாங்குடனே பரிசுப் பொருள் வாங்கிக் கொடுக்க
எனக்கொரு கேர்ல் ப்ரெண்ட் வேண்டும்
பரீட்சையில் தோல்வி தரும் சிந்தனையைத்
தூக்கி எறிய எனக்கொரு கேர்ல்ஃப்ரெண்ட் வேண்டும்
அவளது அன்புக்காக என்னை என்றுமேங்க வைக்கும் 
எனக்கொரு கேர்ல்ஃப்ரெண்ட் வேண்டும்
அவளது அலைபேசியின்  ஓசைக்கு என்னை ஏங்க
வைக்க எனக்கொரு கேர்ல் ஃப்ரெண்ட் வேண்டும்
செய்வனவற்றை திருந்தச் செய்ய வைக்க
எனக்கொரு கேர்ல்ஃப்ரெண்ட் வேண்டும்  
உறவுகளைப் பாந்தமுடன்   ஏற்றுக் கொள்ளும் 
எனக்கொரு கேர்ல் ஃப்ரெண்ட் வேண்டும்
என்  நட்புகளையும்தன்  நட்புகளாய்  ஏற்றுக் கொள்ளும்
பக்குவமுள்ள  எனக்கொரு கேர்ல் ஃப்ரெண்ட் வேண்டும்
என் உடலம்  பேணவும் என்னுடன்  இணைந்து காதல் செய்யவும் 
எனக்கொரு கேர்ல்ஃப்ரெண்ட் வேண்டும்
பொய் பேசிப் பாவம் கூட்டாது உள்ளதை நேர்படப் பேசவைக்கும்
 எனக்கொரு கேர்ல்ஃப்ரெண்ட் வேண்டும்
இதந்தரும் இனிய கனவுகள காண வைக்கும்
நல்லுள்ளம் கொண்ட எனக்கு ஒரு கேர்ல் ஃப்ரெண்ட் வேண்டும்
நான்  நானாக இருக்கவும்  விண்ணேறி விண்மீன்  பறிக்க
 களிப்பேற்றும்  எனக்கொரு கேர்ல்ஃப்ரெண்ட் வேண்டும்  
                       வேண்டாம் 
 
பாவையரைப் பார்க்கக் குற்ற உணர்ச்சி ஏதும்  வேண்டாம்
எனக்கொரு  கேர்ல் ஃப்ரெண்ட்  வேண்டாம்

பாங்குடனே பரிசுப் பொருள் வாங்கவே செலவேதும்
செய்ய வேண்டாம்- எனக்கொரு கேர்ல் ஃப்ரெண்ட் வேண்டாம்

பரீட்சையில் தோல்வி தரும் சிந்தனையை
தேங்கச் செய்யும் எனக்கொரு கேர்ல் ஃப்ரெண்ட் வேண்டாம்
     
அவளது அன்பு என்றும் உளதோ எனவே
தவிக்க வைக்கும் எனக்கொரு கேர்ல் ஃப்ரெண்ட்  வேண்டாம்.

அலைபேசியின் ஓசைக்காக ஏங்கி ஏமாந்து
நிற்க வைக்கும் எனக்கொரு கேர்ல் ஃப்ரெண்ட்  வேண்டாம் 


செய்வனவற்றில் சரியெது குறையெது எனக்
குத்திக்காட்டும் எனக்கொரு கேர்ல் ஃப்ரெண்ட் வேண்டாம்.

உறவுகள் யாருக்கும் பரிசுகள் தந்து மகிழ்ந்தால்
இதம் தர மறுக்கும் எனக்கொரு கேர்ல் ஃப்ரெண்ட்  வேண்டாம்.

நட்புகளின் எண்ணிக்கை கூட்டலாம் நேரம்
கழிக்கலாம் தடையாய் எனக்கொரு கேர்ல்ஃப்ரெண்ட்   வேண்டாம்.

ஊக்கத்துடன் உடலம் பேணலாம் காதல் திரைப்படம்
காணக் கட்டாயப் படுத்த எனக்கொரு கேர்ல் ஃப்ரெண்ட்  வேண்டாம்.

பொய் பேசிப் பாவம் கூட்டவேண்டாம் உள்ளதைக்
கூறத் தயங்க வைக்கும் எனக்கொரு கேர்ல் ஃப்ரெண்ட்  வேண்டாம்.

இதந்தரும் இனிய கனவுகள் காணலாம் வீணே
பகல் கனவில் மூழ்கடிக்கஎனக்கொரு கேர்ல்ஃப்ரெண்ட்  வேண்டாம்

நான் நானாக இருக்கலாம் நினைக்கு முன்னே
கண்ணீர் சிந்த எனக்கொரு கேர்ல் ஃப்ரெண்ட்வேண்டாம்.

(எதிர்மறைச் சிந்தனையாளன்   என்று கூறுபவர்கள் இப்போ என்ன சொல்வீர்கள்?)



     



Tuesday, December 19, 2017

பல்சுவைப் பகிர்வு


                                              பல்சுவைப் பகிர்வு
                                              ----------------------------
 (  மூன்று  காணொளிகள் இணத்திருக்கிறேன்  ரசிப்பீர்கள்  )

 குப்புசாமி என்னும் பாமரன்  ஒருவன்   
கதைகள் பலவும் படித்தவன் தவமியற்றி
வரங்கள் பெற்றவர் கதைகள் பல கேட்டவன் 
தானும் அவ்வாறு வரம் பெற தவமியற்றினான் 
ஒற்றைக் காலில் நின்று தவம்  ஆகாரம் இன்றி தவம்
எந்நேரமும் தான்பெற வேண்டியதைப் பெற பெரு முயற்சி
கடவுள் பாவம்  இரக்கப் பட்டார்  குப்புசாமி முன் தோன்றி
பக்தா உன் பக்தியை மெச்சினேன்  வேண்டும்  வரம் கேள் என்றார்
ஆண்டொன்று போக அகவை ஒன்று கூடுதல் அன்றி வேறு
எதுவும் மாறாதிருத்தல் கண்ட  குப்புசாமி
கடவுளிடம் மிகவும்  யோசித்து வரம் ஒன்று மட்டுமே கேட்டானாம்
எனக்குச் சாவே வரக் கூடாது என்பதே அந்த வரம் 
கடவுள் இரக்ககுணம் உள்ளவர்  ஆகட்டும் தந்தேன் என்றார்
இவனுக்குத் தலைகால் புரியவில்லை  மகிழ்ச்சியோடு
துள்ளிக் குதித்தோடினான்  வழியில் இவனைக்கண்ட பெரியவர்
மகிழ்ச்சியில் துள்ளுகிறாயே  என்ன நடந்தது முதலில் நீ
யார் உன்  பெயரென்ன என்று கேட்டாராம்  நான் கடவுளிடம் 
தவமிருந்து வரம்பெற்றவன்  என்பெயர் குப்புமி  என்றானாம்
சந்தேகம் எழப்  பெரியவர் மீண்டும் பெயர் கேட்டாராம்
இவனும் என்பெயர் குப்புமி என்றானாம்  திடீரென ஞானோதயம்
எழ வேண்டிய வரம்  பற்றி சிந்தித்தானாம்  தனக்கு சாவே வரக் கூடாது
என்று கேட்டது நினைவுக்கு வர என்ன இருந்தாலும் கடவுள் புத்திசாலி என்று  தெரிந்து கொண்டானாம்   கடவுளும் மென்னகை புரிந்து கவனித்தாராம்
                 ஒரு செய்தி
        
இத்தாலியில் ஒரு கன்னியாஸ்திரி வழக்கு தொடர்ந்தாளாம் ஹரே கிருஷ்ணா இயக்கத்தினர் அங்கு தங்களது தவறான கொள்கைகளைப் பரப்பி வருகின்றனர் 16000 பெண்களை மணந்த கிருஷ்ணனை துதிக்கின்றனர் இதனால் மக்களது morals  பாதிக்கப்படும்  என்பதே வழக்கு வழக்கு நீதி மன்றத்துக்கு வந்தபோது பிரதிவாதியின் வழக்கறிஞர் ஒரு கேள்வி அந்த கன்னியாஸ்திரியிடம்  கேட்டாராம் “நீங்கள் கன்னியாஸ்திரியாகும் போது ஒரு பிரதிக்ஞை எடுப்பீர்களே அதைச் சொல்ல முடியுமா “ அதற்கு இயலாமை தெரிவிக்கப்பட்ட போது வழக்கறிஞர் சொன்னராம் இந்த  பிரதிக்ஞையில் யேசுவைக் கணவனாகக் கொள்கிறேன்  என்று தெரிவிக்க வேண்டுமாம்  அப்போது எத்தனை கன்னியாஸ்திரிகளுக்கு  யேசு கணவனாவார் என்பதே கேள்வி  நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்தாராம்
                படித்ததில் ரசித்தது

இது மூன்று நண்பர்களைப் பற்றியது அண்மையில் படித்தது அதில் ஒருவன் எல்லாவற்றிலும்  முதலாக வருபவர்  இஞ்சினீரிங் படித்து முதலாவதாகத் தேறி  க்லாஸ் ஒன் அதிகாரியாகப் பணியில் அமர்ந்தார் இந்திய ரெயில்வேயில் எல்லோராலும் பாராட்டப்பட்ட வரானார்    இரண்டாமவர்  நன்கு படிப்பவன்  இருந்தாலும்  பிறரை விரட்டி தன்காரியம் சாதித்துக் கொள்பவன்  பௌதிகம் படித்து சிவில் செர்விசஸ் பரீட்சை எழுதி  அரசில் ஒரு முக்கிய பதவியில் இருந்தார்  முதலாமவர் இவரது கட்டுப்பாட்டுக்குள்  வந்தார்  மூன்றமவர் படிப்பில் அதிக கவனம்செலுத்தவில்ல சமயம் பார்த்து ஒரு கட்சியில் சேர்ந்து   தேர்தலில் நின்று பாராளுமன்ற உறுப்பினர் ஆகி மத்திய மந்திரி ஆனார் அவரது கீழ் மற்ற நண்பர்கள்  பணி புரிந்த இலாக்காக்கள் வந்தன
இது ஒரு கற்பனை அல்ல முதலாமவர் இ ஸ்ரீதரன்  மெட்ரோ நிபுணன் என்று பெயர் பெற்றவர் இரண்டாமவர்  டி என் சேஷன் தலைமைத் தேர்தல் அதிகாரியாகப்பெயர் பெற்றவர்  மூன்றாமவர் கே பி உண்ணிக்கிருஷ்ணன் ஐந்து முறை பாராளுமன்றத்துக்கு தேர்வு செய்யப்பட்டு வி பி சிங் தலைமையில் இருந்த அரசில் மத்திய மந்திரியாக இருந்தவர்
மூவரும் படித்தது ஒரே பள்ளி அதே ஆசிரியர்கள் நண்பர்கள் ஆனால் வெவ்வேறு பொறுப்புக்கு உயர்ந்தார்கள்
முதலில் ஒரு மராத்திய பத்திரிகையில் வந்த செய்தியாம்

              இனி ஒரு சின்னக் கதை

ஒருவன் தன் மனைவி மக்கள் தன் மீது அத்யந்த அன்பு கொண்டிருப்பதாகவும்,, அது காரணம் தன்னால் துறவு மேற்கொள்ள முடியவில்லை என்றும் ஒரு பெரியவரிடம் கூறினான். அவர் “ நீ இன்னும் விஷயத்தை உள்ளவாறு புரிந்து கொள்ள வில்லை. நான் தரும் இந்த குளிகையை சாப்பிடு.. உனக்கு எல்லாம் புரியும்  என்று கூறி ஒரு மாத்திரஒயை அவன் உட்கொள்ளக் கொடுத்தார். அவன் தன் வீட்டுக்குப் போய் அதனை உட்கொண்ட சிறிது நேரத்தில் கை கால்கள் எல்லாம் நீட்டி விரைத்து சவம் போல் ஆகிவிட்டான். திடீரென அவன் மடிந்து விட்டது கண்டு அவன் மனைவி மக்கள் குய்யோ முறையோ என்று சிறிது நேரம் கதறினர். பிணத்தை சவ அடக்கத்துக்கு வெளியே கொண்டு வர முயற்சித்தனர். கை கால்கள் விரைத்துக்கொண்டு நீட்டி இருந்ததால் வாயிலில் அதைக் கொண்டு வர இயலவில்லை. உடனே ஒருவர் கோடரியைக் கொண்டு கதவைப் பிளக்க முயன்றார். அதைப் பார்த்த மனைவி “ ஐயோ அப்படி செய்யாதீர்கள். என் தலைவிதி நான் கைம்பெண் ஆகிவிட்டேன். குழந்தைகளை காப்பாற்றும் பொறுப்பு எனக்குண்டு. இந்த நிலையில் கதவை உடைத்து விட்டீர்களானால் அதை புதுப்பிக்க என்னிடம் வசதி இல்லை. விதி வசத்தால் அவர் மாண்டு போனார். அவர் சவத்தை துண்டுகளாக வெட்டிக் கொண்டு போகலாம்என்றாள். அந்த நேரத்தில் குளிகையின் வீரியம் குறைந்து இறந்தவன் எழுந்து நின்றான். “ என்னைத் துண்டு துண்டாய் வெட்ட வேண்டுமென்றா சொன்னாய்என்று சொல்லிக் கொண்டே துறவியாக வெளியேறி விட்டான்.

                         ஒரு காணொளி ரசிக்க 





மோடியின் சாதனைகள் பற்றிப் படித்தேன்  ரசித்தேன் 
1) கேஜ்ரிவால் பேச்சை நிறுத்தினது 
2) மன்மோஹன்சிங்கைப் பேச வைத்தது
3) பப்பு என்று செல்லமாக அழைக்கப்படும்  ராஹுலை கோவிலுக்குப் போக வைத்தது



                                  எமகாதகர்கள்.......!  

                   சிலர் இந்தக் காணொளியை மிகவும்  ரசிப்பார்கள்