பதிவர் சந்திப்பு -4
---------------------------
நான் சென்று சந்தித்த பதிவர்கள் - மதுரை
2013ம் ஆண்டு என்ற நினைவு
நான் கோவைக்கு என் தம்பியைக் காணச்
சென்றிருந்தேன் அவன் மதுரைக்கு சென்றிராததாலும்
எனக்கு இந்த சந்தர்ப்பத்தை பதிவர்களை சந்திக்க உபயோகிக்கவும் ஒரு நாள்
அவனது காரில் கோவை சென்றோம் எனக்கு usst venkat
என்பவரின் முகவரி இருந்தது இப்போது
அவர் வலைப்பக்கத்தில் எழுதுவது நின்று விட்டது
அவர் யாதோ ரமணியின் உற்ற
நண்பர் மதுரையில் சரவணன் பழக்கம் அவர்
மூலம் சீனா ஐயா பரிச்சயம் இவர்க;ளுடன் சிவ
குமாரனும் தெரியும் இவர்களை எல்லாம்
சந்திக்க வேண்டும் என்னும் ஆவல்
இருந்தது கோவையில் டைம்ஸ் என்னும்
ஹோட்டலில் தங்கினோம் ஒரு நாள் எல்லோரும்வரும்படி ஏற்பாடு இதில் மகிழ்ச்சியான ஆச்சரியம் என்ன என்றால் தமிழ்வாசி பிரகாஷும்
வந்திருந்தார் சிவகுமாரன் சற்று
தாமதமாக வந்தார் பலபெயர் பெற்ற பதிவர்களை
சந்திக்கப் போகிறோம் என்னும் மகிழ்ச்சி. என்னுடன்
தம்பியும் அவன் மனைவியும் என் மனைவியும் இருந்தார்கள் ஒரு வேளை அவர்களுக்கு
இது அத்தனை மகிழ்ச்சி தருவதாய் இருக்காது என்பதால் அவர்களை
மதுரை நாயக்கர் மகாலில் நடைபெற்றுக் கொண்டிருந்த லைட் அண்ட் சௌண்ட் நிகழ்ச்சிக்கு அனுப்பி
பதிவுலக ஜாம்பவான்களை எதிர் நோக்கி இருந்தேன்
வலைப் பதிவு ஒன்றேஇணைப்புப்பாலமாக இருந்தது என்ன பேசுவது எதைப் பேசினால்
யாரும் வருத்தப்பட மாட்டார்கள் என்னும்
சிந்தனையே எனக்கிருந்தது பொதுவாக
சிறிது நேரம் பேச்சு நடந்தது நானோ அப்போது எழுத்தில் என்னை வெளிப்படுத்திக் கொள்ள தீவிரமாய்
இருந்தேன் எனக்கு பதிவர்களின் சொந்த பந்தங்களை
அறிந்து கொள்ள கேட்டுத் தெரிய சங்கோஜம் பொதுவாகச் சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்து
விட்டு அவரவர் வேலையை கவனிக்கப் போய் விட்டார்கள்
ரமணி சார் இன்னும் கூட நேரம் செலவு செய்தார் அவரிடம் நீண்ட நேரமுரையாடினேன் அவரையும்
அழைத்துக் கொண்டு இரவு உணவு உண்ண ஒரு ஹோட்டலுக்குச் சென்றோம்
என்னுடன் வந்திருந்தவர்களும் திரும்பி இருந்தனர் முன்பொரு முறை மதுரை வந்திருந்தபோது
மதுரை சுங்கிடி புடவை என் மனைவி வாங்கி இருந்தாள்
ஆனால் எங்கு என்ன என்னும் விஷயங்கள்மறந்து
போக வலை நண்பரிடம் கூறினாள் அவரும் சுங்கிடி புடவை கிடைக்கும் இடதுக்குக் கூட்டி போவதாகச்
சொல்லி அழைத்துச் சென்றார் ஏற்கனவே பல இடங்களுக்குப் போய் வந்த களைப்பு அவர்களுக்கு நடந்தோம்
நடந்தோம் நடந்து கொண்டே இருந்தோம் கடைசியில்
அங்கிருந்த போத்தீஸ் கடையைக் காண்பித்தார் இந்த மாதிரி போத்தீஸ் கடைகள்தான் கோவையிலும் சென்னையிலுமிருக்கிறதே மதுரைச்சுங்கிடி கேட்டால்
போத்தீசுக்கு அழைத்து வந்தாரே என்னும் ஏமாற்றம்
அவர்களுக்கு இருந்தது அந்த மதுரைப் பயணம்பற்றிய நினவுகள் வரும்போதெல்லாம் இந்த நிகழ்வும் அநியாயத்துக்கு நினவுக்கு வருகிறது இதைக் குறிப்பிடாமல் இருக்கலாமோ இதையெல்லாம் எழுதாமல் இருந்திருக்கலாமோ
சிறிது நேரதுக்குப் பின் சிவகுமாரன் வந்தார் அவரது கவிதைகள் எனக்குப் பிடிக்கும் யாருக்குத்தான் பிடிக்காது ? ஒரு முறை மீனவர்களை இலங்கை அரசு கைது செய்வது பற்றி எழுதியதற்கு நான் பின்னூட்டமாக எழுதியது அவருக்குப்பிடிக்கவில்லை என்னிடமிருப்பது பேனாதான் ஏகே 47 துப்பாக்கி இல்லையே என்று மறு மொழி கூறி இருந்தார்
இந்த நிகழ்வுக்குப் பிறகு இவர்கள் எல்லோரையும் மதுரை பதிவர் விழாவில் சந்தித்தேன் இவர்களைத் தவிர தேவக்கோட்டை கில்லர் ஜி மற்றும் ஜோக்காளி பகவான் ஜி திண்டுக்கல் தனபாலன் போன்றோரையும் மதுரை பதிவர் விழாவில் சந்தித்தேன்
அவர்களுக்கு இருந்தது அந்த மதுரைப் பயணம்பற்றிய நினவுகள் வரும்போதெல்லாம் இந்த நிகழ்வும் அநியாயத்துக்கு நினவுக்கு வருகிறது இதைக் குறிப்பிடாமல் இருக்கலாமோ இதையெல்லாம் எழுதாமல் இருந்திருக்கலாமோ
சிறிது நேரதுக்குப் பின் சிவகுமாரன் வந்தார் அவரது கவிதைகள் எனக்குப் பிடிக்கும் யாருக்குத்தான் பிடிக்காது ? ஒரு முறை மீனவர்களை இலங்கை அரசு கைது செய்வது பற்றி எழுதியதற்கு நான் பின்னூட்டமாக எழுதியது அவருக்குப்பிடிக்கவில்லை என்னிடமிருப்பது பேனாதான் ஏகே 47 துப்பாக்கி இல்லையே என்று மறு மொழி கூறி இருந்தார்
இந்த நிகழ்வுக்குப் பிறகு இவர்கள் எல்லோரையும் மதுரை பதிவர் விழாவில் சந்தித்தேன் இவர்களைத் தவிர தேவக்கோட்டை கில்லர் ஜி மற்றும் ஜோக்காளி பகவான் ஜி திண்டுக்கல் தனபாலன் போன்றோரையும் மதுரை பதிவர் விழாவில் சந்தித்தேன்
ரமணி சாரின் பின்னூட்டம்
எல்லாம் ஒரே நேர்மறையாக இருக்கும் ஒரு முறையேனும் மாறாக இருக்காது எனக்கு நேர் எதிர் நான் மனசில் பட்டதைச் சொல்லி விடுவேன் நோ என்று
நினைத்து யெஸ் என்று என்னால் சொல்ல முடியாது இருந்தாலும் எழுதுபவரைக் குறை சொல்லாமல் எழுத்தைப்பற்றியே என் கருத்து இருக்கும் ஆனால் பரவலாக நான் புகழ்ந்து எழுதுவதில்லை என்னும் கருத்து பதிவர்களிடையே நிலவுவது எனக்குத் தெரியும்
வெங்கட் தமிழ்வாசி சரவணன் சீனா ரமணி |
தமிழ்வாசி பிரகாஷ், சரவணன் நான் சீனா ரமணி |
சிவகுமாரன் |
மதுரையில் சுங்கிடிப் புடைவை வாங்க சிறந்த இடம் தேவாங்க சத்திரம். அங்குதான் ஒரிஜினல் சுங்கிடிப் புடைவைகள் கிடைக்கும்.
பதிலளிநீக்குபதிவர் சந்திப்பு இனிமை. சிவகுமாரன் என் மாமா பையன் மணிக் குமார் போலவே இருக்கிறார்!
தேவாங்கர் சத்திரம் இடித்து ஐந்தாறு வருடங்களுக்கு மேல் ஆகிறது அதே தெற்காவணி மூலவீதி, தெற்கு மாசி வீதியில் தேவாங்கர் சத்திரத்தில் கடை போட்டிருந்த சுந்தரம் சாரீஸும், ராணி சுங்குடிக் கடையும் உள்ளது. அதை விட்டால் தெற்கு கோபுரத்துக்கு எதிரே சொக்கப்ப நாயக்கன் தெருவில் பார்க்கலாம். ஆனால் இப்போது சுத்தமான ஒரிஜினல் சுங்குடி வருவதில்லை. காட்டனிலேயே சுங்குடி பிரின்ட் போட்டு சுங்குடி என விற்கின்றனர் நல்ல சுங்குடிப் புடைவை 60க்கு 100 என வாங்குவதெனில் ஆயிரம் ரூபாய் ஆகிவிடும். நூறாம் நம்பர் எனில் இன்னும் விலை அதிகம்.
நீக்குமதுரையில் முன்பு சுங்கிடி புடவைகள் வாங்கி இருக்கிறோம் ஆனால் போத்தீசில் சுங்கிடி சேலைகளை எதிர்பார்க்கவில்லை இனி எப்போது மதுரைப்பயணம் என்று தெரியவில்லை
நீக்கு@கீதா சாம்பசிவம் எனக்கு எல்லா சேலைகளும் ஒரேபோலத்தெரிகின்றன இதில் என் மனைவிக்குதான் விஷயம் தெரியும்
நீக்குநானும் சுங்குடி கடைகள் ராணி மற்றும் சுந்தரம் சாரிஸ் சொல்ல வந்தால் கீதாக்கா சொல்லிருக்காங்க...என் உறவினர் சுங்குடி இந்தக் கடைகளில் குறிப்பாக ராணி ஸாரிஸ் இல்தான் வாங்குகிறார். அவரும் சொன்னது கீதாக்கா சொன்னது போலத்தான். சுங்குடி ஒரிஜினல் வருவதில்லை என்று...காட்டனில் சுங்குடி பிரின்ட் தான் வருகிறது...
நீக்குகீதா
அப்போது மதுரை சென்ற சமயம் சுங்கிடி புடவைகளுக்காக நண்பர் அழைத்துச் சென்றதை கூறவே எழுதியது சுங்கிடி புடவைகள் எங்கும் கிடைக்கும்
நீக்கும். யார் யாரையெல்லாம் நீங்கள் சந்தித்திருக்கிறீர்கள் என்று மீண்டும் படிக்க முடிகிறது.
பதிலளிநீக்கு"மனசில் பட்டதைச் சொல்லி விடுவேன்" - நீங்கள் சொல்வதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், பதிவு எழுதுவது 'மற்றவர்கள் கருத்தை மாற்றுவதற்கு' அல்லவே. பொழுதுபோக்காகவும், நண்பர்களின் தொடர்புக்காகவும்தானே. அதனால்தான் பெரும்பாலும் எல்லோரும் 'மனதில் பட்டதை' எழுதுவதில்லை. கான்ட்ரவர்ஷியல் பதிவுக்கு பின்னூட்டம் போடுவதுமில்லை.
தொடர்கிறேன்.
நெல்லைத்தமிழன் எப்பவுமே மற்றவர் கருத்தை மாற்ற நான் எழுதுகிறேன் என்று சொன்னதில்லை என் எண்ணங்களைக் கடத்தவே எழுதுகிறேன் மாற்றுக் கருத்துகள் இருக்கும் என்றும் அறிவேன் ஆனால் படிக்கிறவர்க்சளுக்கு அவர்கள் கருத்துமட்டும்தான் உள்ளது என்பதுமேற்பதற்லில்லை சில விஷயங்கள் சொல்லியபிறகுதான் தெரியவரும் நான் சொல்கிறேன்பிறரதை எப்படி எடுத்துக் கொண்டாலும் பாதகமில்லை பின்னூட்டமிடுவதோ இல்லையோ வாசிப்பவரைப் பொறுத்தது
நீக்குவயதானால் எல்லாம் மறந்துவிடும் என்பார்கள்.நீங்களோ, யாரையும் மறக்காமல் புகைப்படங்களுடன் பதிவிடுகிறீர்கள்! என் படத்தையும் சென்ற பதிவில் கண்டேன். உங்கள் எழுத்து எங்கள் பாக்கியம்!
பதிலளிநீக்கு-இராய செல்லப்பா சென்னையில் இருந்து
ஐயா மனதால் 77 வயது இளைஞர்
நீக்கு@செல்லப்பா நீங்கள் வரவில்லையே என்றிருந்தேன் வந்து வாசித்தீர்கள் என்பது மகிழ்ச்சி
நீக்கு@கில்லர்ஜி பதிவின் முகப்பில் இருக்கும் வயது பழையது இப்போது நானென் எண்பதுகளில் பயணம்தொடங்கி இருக்கிறேன்
நீக்குஐயா அவர்களுக்கு என்னையும் மனதில் நிறுத்தி இருந்தமை அறிந்து மகிழ்ச்சி.
பதிலளிநீக்குஉங்கள் மனதில் பட்ட கருத்தை எழுவதில் தயக்கம் வேண்டாம் இக்குணத்தை தாங்கள் மாற்றிக் கொண்டால் நீங்கள் நடிப்பதாக அர்த்தமாகி விடும்.
உங்களிடம் என்னைக் கவர்ந்த விடயம் எனது பதிவுகளுக்கு வந்து பல பதிவுகளுக்கு எதிர் கருத்து கொடுத்ததே...
அதேநேரம் நிறைய பதிவுகளை பாராட்டியும் இருக்கின்றீர்கள்.
நானும் இவ்வகைதான் மனதில் பட்டதை சொல்லி விடுகிறேன் இதனால் சில சங்கடங்களும் நிகழ்கிறது.
நீங்கள் பிறரது பின்னூட்டங்களையும் படிக்கிறீர்கள் என்று நினைக்கிறேன் எதிர்க் கருத்துஅல்ல ஜி என் கருத்துஅவ்வளவே
நீக்குஅன்பிற்குரிய அனைத்து வலைப் பதிவர்களையும், உங்களது வலைத்தளத்தில் தொடர்ந்து பார்த்து வருவதில், மிக்க மகிழ்ச்சியும், அவர்கள் எழுதிய முத்தாய்ப்பான பதிவுகளும், மறுமொழிகளும் கூடவே நினைவுக்கு வருகின்றன.
பதிலளிநீக்குஇந்தத் தொடரில் கருத்து இடுவோர் எல்லோரையும் சந்திக்க விருப்பம் முடியுமா தெரியவில்லை
நீக்குபதிவர்கள் சந்திப்பு அருமை.
பதிலளிநீக்குசுங்கடி சேலை விற்கும் தேவாங்க சத்திரம் இடிக்கப்பட்டு வேறு இடத்தில் இருப்பதாய் சொன்னார்கள் நான் இன்னும் பார்க்க வில்லை, சுந்தரம் சாரிஸ் என்ற பழைய கடையில் சுங்கடி சேலை நன்றாக இருக்கும். கோவிலை சுற்றி உள்ள கடைகளில் கிடைக்கும்.
நாங்கள் ஒரு முறை சென்றபோது ஒரு கடையில் சுங்கிடி சேலை வாங்கினோமெங்களிடமப்போது போதிய பணம் இருக்கவில்லை ஆனால் கடைக்காரர் எங்கள் முகவரி வாங்கி சேலையை வி பி பி யில் அனுப்பினார் அதுவே நினைவில் நிற்கும் விஷயம்
நீக்குநல்ல பதிவு ஐயா..
பதிலளிநீக்குவாழ்க நலம்..
நன்றி சார்
நீக்குசந்தித்த பதிவர்கள் - பட்டியல் தொடரட்டும்....
பதிலளிநீக்குஇன்னுமோரிரு பதிவுகளில் சந்திப்பு பற்றிய தகவல்கள் வரும்
நீக்குசந்தித்த பதிவர்கள் எவரையும் நான் பார்த்தது இல்லை.
பதிலளிநீக்குஉங்களை சந்தித்ததே சிங்கத்தின் குகையில் சந்தித்ததுபோல் இருக்கிறது ஆனால் குட்யிருப்பின் பெயரோ நெஸ்ட்
நீக்குசந்திப்பு என்றாலே இனிமைதானே
பதிலளிநீக்குசந்திப்புகள் தொடரட்டும் ஐயா
நனறி
சில சந்திப்புகள் சில நினைவுகளைத் தூண்டிச்செல்லும்
நீக்குஉங்களின் சந்திப்புகள் பல, புதிய நண்பர்களைக்கூட அறிமுகப்படுத்துகின்றன. நன்றி ஐயா.
பதிலளிநீக்குநன்றி சார்
நீக்குபதிவர்களை கண்டேன் படித்தேன்தொடர்கிறேன் சார்
பதிலளிநீக்குஉங்களையும் சந்திக்க ஆவல் சென்னையில் தானே
நீக்குமுகவரி யோ தொலை பேசி எண்ணோ இல்லையே
நீக்குநான் பார்க்காத பதிவர்களை படத்தில் பார்த்ததில் மிகவும் சந்தோஷம்.
பதிலளிநீக்குசிவகுமாரன் கவிதைகள் எனக்குப் பிடிக்கும் என்று சொல்லி
'யாருக்குத்தான் பிடிக்காது?' என்று அந்த வரியை நீங்கள்
முடித்திருந்தது அழகு.
இதற்கு இன்ஸ்பிரேஷன் திருச்சி கோபுசார்தான் அவர் சந்தித்தவர்கள் எண்ணிக்கை அதிகம் நானும் கூடியவரை பதிவர்களைச் சந்தித்து நட்பு பாராட்டவே விரும்புகிறேன் வலைப்பதிவர் விழாவை எதிர்நோக்குகிறேன் வருகைக்கு நன்றி சார்
பதிலளிநீக்குமதுரை பதிவர் சந்திப்பைப்பற்றி எழுதியிருப்பதை இப்போதுதான் பார்த்தேன். பதிவர்கள் உங்களிடம் என்ன சொன்னார்கள்.நீங்கள் என்ன பேசினீர்கள்? இன்னும் இருக்கிறதல்லவா?
பதிலளிநீக்குநீங்கள் குறிப்பிட்டது - கபீர் சிவகுமாரன் தானே ? அவர் ஆலங்குடியிலிருந்து ஆப்பிரிக்கா போனாரே.. மதுரையில் எப்படி மாட்டினார்?
மதுரையில் எப்பட் மாட்டினார்? தொனியே சரியில்லையே சிவகுமாரன் அவர் கவிதைகள் மூலம் பிரசித்தி இப்போதுதான் கபீரிலிருந்து எழுதுகிறார் இந்த சந்திப்பு 2013ல் நடந்தது அவர் ஆஃப்ரிக்கா போகும் முன் நடந்த சந்திப்பு
நீக்குஇதில் பகவான் ஜி, கில்லர்ஜி, ரமணி சகோ தமிழ்வாசி நேரில் சந்தித்ததுண்டு. பிறரைச் சந்தித்ததில்லை. சிவகுமாரன் கவிதைகளை மிகவும் ரசிப்போம். அவரது தளத்தில் உள்ள நிழற்படம் இன்னும் இளம் வயதுப் படமோ?! இதில் வித்தியாசமாக இருக்கிறார். அவரது எழுத்துகள் வசீகரமானவை!
பதிலளிநீக்குகீதா
சிவகுமாரனின் படம் 2013 ல் நான் எடுத்தது
நீக்குநீங்கா நினைவுகள்.
பதிலளிநீக்குநன்றி
உங்களுக்கு நினைவு வருகிறதா
பதிலளிநீக்கு