Thursday, December 14, 2017

மனசை என்னவோ பண்ணுது புரியலெ


                      மனசை என்னவோ பண்ணுதுபுரியலெ
                       -----------------------------------------------------------
 ஏனென்று சொல்லு நீ தென்றலே மனசை என்னவோபண்ணுது புரியலே புலம்பி என்ன பயன்  எதையெல்லாமோ படிக்கிறாயே இது நினைவுக்கு வரவில்லையா தவறெது சரியெது என்று புரிந்து கொள் தவறைத் திருத்த முடியுமானால் அதைச் செய் முடியாவிட்டால் அது அப்படித்தான்  என்று விலகி விடு
இந்த தேர்தல் முறையை எடுத்துக் கொள்  நம்மை ஆள்பவர்கள் பெரும்பான்மையினரால் தேர்ந்தெடுக்கப்பட்டுஇருக்க வேண்டும் ஆனால் நடை முறையில் அப்படி இருக்கிறதா/? நூறு வாக்காளர்களில் அதிகபட்சமாக எண்பது பேர் வாக்களிக்கிறார்கள் வாக்களித்தவர்களில் அவர்கள் வாக்குகள் பிரிக்கப்படுகின்றன வாக்களித்த எண்பது பேரில் அதிக  பட்சமாக வாக்கு பெரும்( பொதுவாக 35 பேர் வாக்களித்தவர்) வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுகிறார் அதாவது இருக்கும் வாக்காளர்களில் 35 சதம் வாங்கியவர்  வெற்றி பெறுகிறார் இது பெரும்பான்மையாகுமா தேர்ந்தெடுக்கும் முறை மாற்றப்பட வேண்டும்  இப்படி 35 சதவீதத்தினரால் கொண்டு வரப்படும்  சட்டங்கள் பெரும்பான்மையா?  எனக்குத் தோன்றுகிறது இவர்கள் ஒரு கழுதையைக் காட்டி அதைக் குதிரை என்றால் ஏற்றுக் கொள்ளப்படவேண்டும்  இப்போது அதுதான் நடக்கிறது
தேர்ந்தெடுக்கபடுகிறவர்கள் இல்லை இல்லை  தேர்தலுக்குப் போட்டி இடுபவர்கள் மேல் ஏராளமான வழக்குகள் இருக்கின்றனபண மோசடி கொலை கொள்ளை என்று சொல்லிக் கொண்டே போகலாம் இது பொது மக்களுக்கும் நன்றாகத்தெரியும்   ஆனால் எல்லா வழக்குகளும் தேர்ந்தெடுக்கப்பட்டால் காணாமல் போய்விடும் 
இந்தியாவில் பெரும்பான்மையானவர் ஹிந்துக்கள்  (a tolerent society)  இவர்கள் சிறுபான்மையினர் மீது துவேஷம்  காட்டுவது சரியா  இவர்களது எண்ணங்களையும்  கோட்பாடுகளையும் சிறுபான்மையினர்மீது திணிக்கலாமா ஆனால் ஹிந்துத்வாவே கொள்கை என்று பகிரங்கமாகக் கூறுபவர்கள் இந்திய சரித்திரத்தையே மாற்ற முயல்கிறார்கள் மும்பையில் ஒரு பிஷப் இது பற்றி கூறியபோது அவரிடம் வழக்கு தொடர முயற்சி நடக்கிறது
ராமன்   பிறந்த இடம் இதுதான் என்று கூறி அன்றைய முகலாய அரசனால் கட்டப்பட்ட பாபர் மசூதியை ஆயிரக் கணக்கானவர்கள்  சேர்ந்து இடித்துவிட்டனர்  அன்று முதல் தொடங்கியது ஹிந்து முஸ்லிம் விரோதம்   ஆயிரக்கணக்கானோரைத்தூண்டி   ரத யாத்திரை என்னும் பெயரில்  துவேஷத்தை வளர்த்தவர்கள் இன்று ஏதும்  செய்யாதவர் போல் திரிகின்றனர் இந்நிலையில்மதத்துவேஷம் பாராட்டும் கட்சியே ஆட்சிக்கு வந்து விட்டது என்றால்  கேட்கவே வேண்டாம் அப்போதே முகநூலில் பகிர்ந்தேன் இனி ராமர் கோவில்தான் என்று
ராமாயணமும்   பாரதமும்  நம் ரத்தத்தில் ஊறியவை  தவறில்லை  ராமருக்குக் கோவில் கட்ட வேண்டும் என்றால் யார்வேண்டாம் என்றுசொல்வார்கள்  கோடிக்கணக்கில் செலவு செய்யட்டும்  கோவில் கட்டட்டும்  ஆனால் வழக்கிலிருக்கும்  ஒருஇடத்தில்தான் கட்ட வேண்டுமென்பது என்ன நியாயம்   ஐநூறு வருடங்களாக  இருந்து வந்த ஒரு இடத்தை தரை மட்டமாக்கி  அங்குதான் கோவில் என்பது தாங்கள் ஒருபெரும்பான்மை இனம் என்பதால்தானே நினைக்க வைக்கிறது  நம் நாட்டில் நீதித்துறை மிகவும்  தாமதமாகச் செயல் படுகிறது 25 ஆண்டுகள் முடிந்து விட்டது  இன்னும்வழக்கு முடிந்தபாடில்லை
இப்படியே போனால் காசியில்  விஸ்வநாதர் கோவிலே ஒருமசூதிக்கு அரு கில்தானிருக்கிறது மதுராவில் கண்ணன்பிறந்த இடம்  என்று சொல்லப்படும்  இடத்தருகேயும்  ஒரு மசூதி இருக்கிறது தாஜ்மகாலும் ஒரு சிவன் கோவில் இருந்த இடம் என்கிறார்கள் போகிற போக்கைப்  பார்த்தால் இதையெல்லாம்கூட இடித்துவிடுவார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது மனிதனின்  இனம் மொழி மதம்  இருப்பிடம் போன்றவை  எளிதில் உணர்ச்சி வசப்படுத்தும் இடித்த மசூதியில் ராம லல்லா சிலையை வைத்து பூசித்து திரும்பியவர்களை கோத்ரா ரயில் நிலையத்தில் எரித்தார்கள்  எரிக்கப்பட்ட உடல்களைத் தாங்கி ஊர்வலம்  போனார்கள் இது கண்டுகொதித்து எழுந்தவர்கள் முஸ்லீம்களை வேட்டையாடிக் கொன்றனர் ஒன்றின் பின்  ஒன்றாக வெறுப்பினால்செயல்கள் தொடர்ந்து வருகின்றன நூற்றுக் கணக்கில் உயிர்கள் பலியாயின மத உணர்ச்சிகளைத் தூண்டும் வித்ததில் தேர்தல் பிரசாரங்கள் இந்நாட்டின்முதல்வர் இதில் முன்னிலையில் இருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவரை இவர் விமர்சிப்பதில் இது நன்றகப்புலப்படுகிறது அவர்களை முகலாய் என்றும் ஔரங்கசீப் மனநிலையில் உள்ளவர்  என்றும்  கூறி இனவாதத்துக்கு தூபம் போடுகிறார்கள் ஹிந்துக்கள் பெரும்பான்மையக இடத்தில் இது நன்கு விலை போகும்  
மீண்டும் முதல் வரியை வாசியுங்கள்  

14 comments:

 1. உங்கள் எண்ணத்தை அறியமுடிந்தது. ஆனால் இதுதான் பெரும்பான்மையினரின் எண்ணமா? தெரியவில்லை.

  இது பெரும்பான்மையாகுமா - இதுக்கு வாக்களிக்காத பொதுமக்களும், முதல் இரண்டு இடங்களில் வரக்கூடிய கட்சிக்கு வாக்களிக்காதவர்களும்தான் பொறுப்பேற்றுக்கொள்ளவேண்டும். அரசியல் சட்டம் வாய்ப்புகளை வழங்கியிருக்கிறது. அதைச் சரியாக பயன்படுத்துவது மக்கள் கையில்தான் இருக்கிறது. வீட்டிலேயே ஆளுக்கொரு விருப்பம் சொன்னால், ஏதேனும் ஒன்றைத்தானே நிறைவேற்ற முடியும்?

  ReplyDelete
  Replies
  1. இந்த நிலை மாற வேண்டும் என்னும் ஆதங்கமே பதிவானது அரசியல் சட்டம் வழங்கியுள்ள வாய்ப்புக்சள் இல் இருக்கும் ஓட்டையைத்தான் கூறி இருக்கிறேன்

   Delete
 2. முற்றிலும் தவறான புரிதலுடன் கூடிய பதிவு. இதுக்கு ஒவ்வொரு வரிக்கும் பதிலளித்தால் இன்னொரு பதிவாகி விடும்! மற்றபடி எதிர்க்கட்சிக்காரர்கள் தான் நம் ஜன்மவிரோதியான பாகிஸ்தானுடன் சேர்ந்து கொண்டு நாட்டை ஆள்வதற்காக மோதியை ஒழிக்கத் திட்டம் போடுகின்றனர். அவர்கள் நேர்மையானவர்கள் எனில் ஏன் ரகசியக் கூட்டம் போடணும்? முதலில் அதை ஏன் மறுக்கணும்? ஆதாரங்களுடன் நிரூபித்ததும் ஏன் ஒத்துக்கணும்?

  ReplyDelete
  Replies
  1. பெரும்பலான எண்ணங்கள் ஏதோ பெர்செப்ஷ்சன் பேரிலேயே உருவாகிறது என்புரிதலைத்தானே எழுத முடியும் பின்னூட்டம்திசை மாறி விட்டதோ

   Delete
 3. வணக்கம் ஐயா
  ஒருக்காலும் ராமர் கோவில் கட்டப்போவதில்லை.
  இப்படி சொல்லியே ஓட்டு வாங்கி காலத்தை கடத்தி விடுவார்கள்.

  இதை மக்கள் உணர மறுக்கின்றார்கள்.
  இன்றைய மக்களின் பசியை தீர்ப்பது ராமர் கோவிலோ, பாபர் மசூதியோ அல்ல!

  அதேநேரம் மசூதியை இடித்தது தவறே.

  Chivas Regal சிவசம்போ-
  அந்த இடத்தில் சர்ஜ் கட்டினால்தான் பிரச்சனை தீருமோ...?

  ReplyDelete
  Replies
  1. 2018ல் ராமர் கோவில் என்றே முழங்குகிறார்கள் அதற்கான வேலைகள்தொடர்ந்து கொண்டிருக்கின்றன

   Delete
 4. எங்கும், எதிலும் அரசியல்தான் ஐயா.

  ReplyDelete
  Replies
  1. அப்படி ஒதுங்கிப் போக முடிவதில்லை சார்

   Delete
 5. Replies
  1. வேதனையில் பங்குக்கு நன்றி சார்

   Delete
 6. // என் புரிதலைத் தானே எழுத முடியும்?//

  எல்லா விஷயங்களுக்கும் இன்னொரு பக்கமும் உண்டு. அந்த இன்னொரு பக்கத்தைப் புரிந்து கொள்ள நீங்கள் விரும்பாத மாதிரியான புரிதலை இப்படியான உங்கள் பதில்கள் ஏற்படுத்த வாய்ப்புண்டு.

  ReplyDelete
  Replies
  1. பதிவில் காணப்படாத விஷயங்களுக்கு பின்னூட்டம் வந்தால் இப்படித்தான் எழுத முடியும் என் பதிவே தவறு என்று சொல்பவர்களுக்கான பதில் அது

   Delete
 7. Either you did not read history nor you wanted say ...this is what I belief so I write like this . Hindu muslim riots certainly not started with Babri issue . Please read Arun Shourie's books and so many other write ups by others . And No body impose their ideas on minority , they are freely practicing their religion in India . You better move around with certain influential bishops , you will know how they influence people ( to convert to their religion). Your bitten by secular fever - and that is why you see so many wrongs with you clan/folks . Answer doesn't lie somewhere else , its all within us ( or me to be precise ) .

  ReplyDelete
  Replies
  1. ஐயா வணக்கம் எனக்கு சரித்திர நிகழ்வுகளை நம் வாழ்க்கையில் சந்திப்பதே போதும் என்றிருக்கிறேன் பாப்ரி மசூதி இடிப்பும் கோத்ரா மும்பை வெறிச்ச் செயலகளும் நாம் வசிக்கும் காலத்தில் நடந்தது இவற்றையும் வேறு விதமாக சரித்திரம் ஆக்குவார்கள் என் நண்பர்களில்பல மதத்தினரும் உண்டு எனக்கு செகுலர் ஜுரம் பிடிக்க வாய்ப்பில்லை ஆனால் பெரும்பான்மையினரின் கொட்டங்கள் நம் மதத்திலேயே இருந்தது தெரியும் அதற்கு எதிராக எழுதவும் செய்கிறேன் இவை உண்மைகள் பலர் பாராட்ட வேண்டி எழுதுவதல்ல வருகைக்கு நன்றி

   Delete