டும்களும் டாம்களும் இருகோணங்கள்
----------------------------------
( முன்பொரு பதிவு எழுதி இருந்தேன் காதலி வேண்டாம் என்று படித்த அப்பாதுரை வேண்டும் என்று இருந்தாலும் சரியாய் இருக்கும் எனப் பின்னூட்டமிட்டார் அதன் விளைவே இது இரு கோணங்களிலும் )
வேண்டும்
பிற பாவையரைப்பார்க்கையில் குற்ற உணர்ச்சி எழச் செயும்
எனக்கொரு கேர்ல் ஃப்ரெண்ட் வேண்டும்
பாங்குடனே பரிசுப் பொருள் வாங்கிக் கொடுக்க
எனக்கொரு கேர்ல் ப்ரெண்ட் வேண்டும்
பரீட்சையில் தோல்வி தரும் சிந்தனையைத்
தூக்கி எறிய எனக்கொரு கேர்ல்ஃப்ரெண்ட் வேண்டும்
அவளது அன்புக்காக என்னை என்றுமேங்க வைக்கும்
எனக்கொரு கேர்ல்ஃப்ரெண்ட் வேண்டும்
அவளது அலைபேசியின் ஓசைக்கு என்னை ஏங்க
வைக்க எனக்கொரு கேர்ல் ஃப்ரெண்ட் வேண்டும்
செய்வனவற்றை திருந்தச் செய்ய வைக்க
எனக்கொரு கேர்ல்ஃப்ரெண்ட் வேண்டும்
உறவுகளைப் பாந்தமுடன் ஏற்றுக் கொள்ளும்
எனக்கொரு கேர்ல் ஃப்ரெண்ட் வேண்டும்
என்
நட்புகளையும்தன் நட்புகளாய் ஏற்றுக் கொள்ளும்
பக்குவமுள்ள
எனக்கொரு கேர்ல் ஃப்ரெண்ட் வேண்டும்
என் உடலம்
பேணவும் என்னுடன் இணைந்து காதல்
செய்யவும்
எனக்கொரு கேர்ல்ஃப்ரெண்ட் வேண்டும்
பொய் பேசிப் பாவம் கூட்டாது உள்ளதை நேர்படப்
பேசவைக்கும்
எனக்கொரு
கேர்ல்ஃப்ரெண்ட் வேண்டும்
இதந்தரும் இனிய கனவுகள காண வைக்கும்
நல்லுள்ளம் கொண்ட எனக்கு ஒரு கேர்ல் ஃப்ரெண்ட்
வேண்டும்
நான்
நானாக இருக்கவும் விண்ணேறி
விண்மீன் பறிக்க
களிப்பேற்றும்
எனக்கொரு கேர்ல்ஃப்ரெண்ட் வேண்டும்
பாவையரைப் பார்க்கக் குற்ற உணர்ச்சி ஏதும் வேண்டாம்
எனக்கொரு கேர்ல்
ஃப்ரெண்ட் வேண்டாம்
பாங்குடனே பரிசுப் பொருள் வாங்கவே செலவேதும்
செய்ய வேண்டாம்- எனக்கொரு கேர்ல் ஃப்ரெண்ட் வேண்டாம்
பரீட்சையில் தோல்வி தரும் சிந்தனையை
தேங்கச் செய்யும் எனக்கொரு கேர்ல் ஃப்ரெண்ட் வேண்டாம்
அவளது அன்பு என்றும் உளதோ எனவே
தவிக்க வைக்கும் எனக்கொரு கேர்ல் ஃப்ரெண்ட் வேண்டாம்.
அலைபேசியின் ஓசைக்காக ஏங்கி ஏமாந்து
நிற்க வைக்கும் எனக்கொரு கேர்ல் ஃப்ரெண்ட் வேண்டாம்
செய்வனவற்றில் சரியெது குறையெது எனக்
குத்திக்காட்டும் எனக்கொரு கேர்ல் ஃப்ரெண்ட் வேண்டாம்.
உறவுகள் யாருக்கும் பரிசுகள் தந்து மகிழ்ந்தால்
இதம் தர மறுக்கும் எனக்கொரு கேர்ல் ஃப்ரெண்ட் வேண்டாம்.
நட்புகளின் எண்ணிக்கை கூட்டலாம் நேரம்
கழிக்கலாம் தடையாய் எனக்கொரு கேர்ல்ஃப்ரெண்ட் வேண்டாம்.
ஊக்கத்துடன் உடலம் பேணலாம் காதல் திரைப்படம்
காணக் கட்டாயப் படுத்த எனக்கொரு கேர்ல் ஃப்ரெண்ட் வேண்டாம்.
பொய் பேசிப் பாவம் கூட்டவேண்டாம் உள்ளதைக்
கூறத் தயங்க வைக்கும் எனக்கொரு கேர்ல் ஃப்ரெண்ட் வேண்டாம்.
இதந்தரும் இனிய கனவுகள் காணலாம் வீணே
பகல் கனவில் மூழ்கடிக்கஎனக்கொரு கேர்ல்ஃப்ரெண்ட் வேண்டாம்
நான் நானாக இருக்கலாம் நினைக்கு முன்னே
கண்ணீர் சிந்த எனக்கொரு கேர்ல் ஃப்ரெண்ட்வேண்டாம்.
(எதிர்மறைச் சிந்தனையாளன் என்று கூறுபவர்கள் இப்போ என்ன சொல்வீர்கள்?)
ஒரே வரிகளில் இரண்டு பக்க சிந்தனை - அருமை.
பதிலளிநீக்குரசிக்க முடிந்ததா
நீக்கு//எதிர்மறைச் சிந்தனையாளன் என்று கூறுபவர்கள் இப்போ என்ன சொல்வீர்கள்?//
பதிலளிநீக்குஎதிர் எதிர்மறைச் சிந்தனையாளர்!
இரு எதிர்மறை ஒரு நேர்மறை போல
நீக்குஎதற்கு சிநேகிதி வேண்டாமோ அல்லது வேண்டுமோ அதையெல்லாம் விட்டு விட்டு..
பதிலளிநீக்குஎதற்கு சிநேகிதிகள் வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் சார்
நீக்குஇது பொதுவா அவரவர் சொந்த விருப்பம். அதோடு தேவைப்படும்போது பகிர்ந்துகொள்ள சிநேகம் தேவை! ஆணோ, பெண்ணோ! மற்றபடி தேவையில்லாமல் எல்லாவற்றிலும் மூக்கை நுழைத்துக் கொண்டு கருத்துச் சொல்லும் சிநேகம் தேவை இல்லை! நாம் தேர்ந்தெடுப்பதில் தான் இருக்கு! ஓர் அளவுகோல் தேவை!
பதிலளிநீக்குநட்புகளிடம் அளவுகோல் பார்ப்பது உண்டா நன்றி மேம்
நீக்குவேண்டும் - வேண்டாம் இரண்டு வார்த்தைகளை வைத்து கவிதையின் போக்கையே மாற்றி விட்டீர்கள்.
பதிலளிநீக்குஅடுத்து வேண்டாமோ... என்ற ஐயப்பாட்டை வைத்து மீண்டும் தொடகலாமோ...?
முதலில் எழுதி இருந்ததைப் படித்தீர்கள் அல்லவா யாராவது ஏதாவது பின்னூட்டம் எழுதி விட்டால் அதுவே ஒரு பதிவுக்கு வழி வகுக்கிறது ஜி
நீக்குவருகை தந்து தவறாமல் தம வாக்களிக்கும் உங்களுக்கு நன்றி ஜி
நீக்குமுதல் வரி எனக்குத்தான் அர்த்தம் புரியவில்லையா அல்லது வரிகளே தவறா? பரீட்சைத் தோல்வி, உறவுகளையும், நட்புகளையும் இந்த வரிகளெல்லாமே நீங்கள் நினைத்த அர்த்தம், பாடலில் வரவில்லை.
பதிலளிநீக்குஉதாரணமாக, என் நட்புக்களையும் தன் நட்புக்களாக ஏற்கும் எனக்கு, ஒரு கேர்ல் ஃப்ரெண்ட வேணும். சப்ஜெக்ட் தவறு. நீங்கள் சொல்லவருவது உங்கள் நண்பியின் குணம் எப்படிப்பட்டதாக இருக்கவேண்டும் என்று. ஆனால் சொல்லியிருப்பது உங்களுடைய குணத்தைப் பற்றி.
என் புரிதல் தவறா என்று மற்றவர்கள் சொல்லட்டும்.
முதல்வரி என்னவெனில்... கேர்ள் ஃபிரெண்ட் இருந்தால், ஏனைய பெண்களைப் பார்க்கும்போது குற்ற உணர்வு வந்திடுமாம்.. அதாவது தனக்கென ஒரு பெண் இருக்கும்போது, இன்னொரு பெண்ணைப் பார்ப்பது தவறு.. என்பதுபோல சொல்றார்....
நீக்கு..இதுதான் நான் புரிஞ்சது....
நெல்லைத்தமிழன் அவர் சரியாகத்தான் எழுதியிருக்கிறார்.. நீங்கள்தான் எக்ஸ்டா ஒரு
நீக்கு“எனக்கு.”. போட்டு விட்டீங்கள்...
இதுதானே அவரது வரிகள்...
//என் நட்புகளையும்தன் நட்புகளாய் ஏற்றுக் கொள்ளும்
பக்குவமுள்ள எனக்கொரு கேர்ல் ஃப்ரெண்ட் வேண்டும்//
அதாவது.. மனப்பக்குவமுள்ள ஒரு கேள்ஃபிரெண்ட் .....எனக்கு வேண்டும் என வரும் அது:)
இல்லை அதிரா. எனக்கொரு என்பது எனக்கு ஒரு என வரும். வரிகள் தவறான பொருள் கொடுக்கிறது.
நீக்கு@ நெத குறை என்று நினைக்காதீர்கள் நான்புரிந்து கொண்டது உமக்கும் தெரியும் சில இடங்களில் வார்த்தைகளை இன்னும் நன்கு பிரயோகித்திருக்கலாம் ஏன்பொயடிக் ஜஸ்டிஸ் என்று எடுத்துக் கொள்ளக் கூடாது
நீக்கு@அதிரா சரியான புரிதல் நன்றி
நீக்கு@அதிரா மீண்டும்சரி . பட்டப்பெயர்களை உதறி விட்டீர்களா
நீக்கு@நெத நெற்றிக் கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே என்று சொல்கிறீர்கள் அதிராவின் புரிதலைப் பாருங்கள்
நீக்குஆஆஆவ்வ்வ்வ்வ் எல்லோரும் ஓடிவாங்கோஓஒ ஜி எம் பி ஐயா வை மயக்கிப்புட்டேன்ன்ன்ன்ன்ன்ன்:)... இப்போ அவர் என் கட்சீஈஈஈஈஈ:)....
நீக்குஹையோ இதுக்கு ஏதும் வெடி வச்சிடப் போறாரே ஹா ஹா ஹா:)...
பட்டப்பெயர் வரும் ஐயா:)... இப்போ கிரிஸ்மஸ் பிரேக்:)...
நீக்குமயக்கமா கலக்கமா வாழ்விலே புரிந்ததா இதில் வெடி ஏதும் இல்லை அதிரா
நீக்குகிருஸ்துமஸ் நேரம் பட்டப் பெயர்களுக்கு ப்ரேக்கா
நீக்குபலமுறை படித்தேன் புரிந்தது போல் இருக்கிறது புரியாது போலவும் இருக்கிறது மனதில் ஓட்டி பார்த்துவிட்டு வருகிறேன்
பதிலளிநீக்குஅதைத்தான் டும் என்றும் டாம் என்று இருபக்க உணர்வுகளையும் எழுது இருக்கிறேனே பூவிழி சிம்பிள் தமிழ் அவ்வளவுதான்
நீக்குபரவாயில்லப்பா. கேர்ள் பிரண்ட் வச்சுக்கோங்க
பதிலளிநீக்குகேர்ல் ஃப்ரெண்ட் இருப்பதே சரி என்கிறீர்களா
நீக்குஅதுவா.. இதுவா!?..
பதிலளிநீக்குஎது வேண்டும் சொல் மனமே!..
வெங்கட் நாகராஜ் சொல்வதையும் பாருங்கள்
நீக்குடும் - டாம்! சில சமயங்களில் டும், சில சமயங்களில் டாம்!
பதிலளிநீக்குதேர்ந்தெடுப்பது நம்கையில் தானே வருகைக்கு நன்றி சார்
நீக்குஅழகிய கற்பனைதான்... எனக்கு என்னவோ வேணும் என்பதுதான் சரி எனத் தோணுது..
பதிலளிநீக்குநெகடிவ்வான சிந்தனைகள் நமக்கெதுக்கு:)..
அதானே நெகடிவ் சிந்தனை ஏன் நன்றி அதிரா
நீக்குஅருமை ஐயா
பதிலளிநீக்குதம+1
வருகைக்கும் தம வாக்குக்கும் நன்றி சார்
நீக்குaccept your friends for who they are என்பதைத்தான் நான் எப்பவும் தொடர்வது அதனால் ஐ லைக் டும் டும் :)
பதிலளிநீக்குஇரண்டு விதத்திலும் நல்லதைத் தேர்ந்தெஉக்கும் வாய்ப்பு உங்களிடம் வருகைக்கு நன்றி ஏஞ்செல்
நீக்குபாலசந்தர் படம் பார்ப்பதுபோல இருந்தது ஐயா.
பதிலளிநீக்குபுய்ஹிய கோணத்தில் பின்னூட்டம் ...! நன்றி சார்
பதிலளிநீக்கு