Friday, May 30, 2014

ஏழுமலையானை தரிசியுங்கள்


                                            ஏழுமலையானை தரிசியுங்கள்
                                            ----------------------------------------------


                    என் நண்பர் திரு.வாசன் எனக்கு அனுப்பி இருந்ததைப் பகிர்கிறேன் பாலாஜிக்கு ஆரத்தி. கண்டு மகிழுங்கள்.


Tuesday, May 27, 2014

கதம்பம் ---HOW DARE YOU.......!



                                                  கதம்பம்-- ( HOW DARE YOU.......!)
                                                 ----------------------------------



முதலில் ஒரு காணொளி. தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி. டைம்ஸ் நௌ ல்  NEWS HOUR இரவு ஒன்பதுமணிக்கு வரும். யார் யாரோ வருவார்கள் என்னென்னவோ பேசுவார்கள். எல்லோருக்கும் அவரவர் பக்கமே நியாயமாகத் தெரியும் ஒருவராவது அடுத்தவர் சொல்வதில் ஏதாவது நியாயம் இருக்கிறதா என்று சிந்திப்பதே இல்லை.  NEWS HOUR வெறுமே NOISE HOUR பாக இருக்கும் உங்கள் ரசனைக்கு அதன் anchor அர்னாப் கோஸ்வாமி எப்படி நடத்துகிறார் அவருக்குக் கோபம் வரும்போது எப்படி நடந்து கொள்கிறார் என்பதற்கு ஒரு சாம்பிள்.  
      


 இந்தக் காலப் பிள்ளைகளின் புத்திசாலித்தனம்? கண்ணோட்டம் ?அதிகப் பிரசங்கித்தனம் ? எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்


ஒரு ஜோக் என் மகன் சொன்னது. ஒருவர் அமெரிக்காவில் சிகாகோவில் ஸ்வாமி விவேகாநந்தர் ” சகோதர சகோதரிகளே”  என்று அழைத்துப் பேச்சைத் துவக்கினார் என்று  சொல்லத் துவங்கியதும் ஒரு சுட்டிப் பையன் “நான் அப்படியெல்லாம் சொல்லி என் தந்தையின் பெயருக்கு அவதூறு ஏற்படுத்த மாட்டேன் “என்றானாம்....!
தொலைக்காட்சியில் ரசித்தது. கல்யாணமாலை நிகழ்ச்சியில் ஒருவர் பேசிக் கொண்டிருந்தார் ”கல்யாணத்தில் முஹூர்த்த நேரம் நெருங்கும்போது சாஸ்திரிகள் “நல்ல நேரம் முடியப் போகிறது .பெண்ணை அழைத்து வாருங்ககள் “ என்பார். திருமணம் முடிந்தால் பையனின் நல்ல நேரம் முடியும் என்று அர்த்தமா...!
 இன்னொரு நிகழ்ச்சியில் இந்திர லோகத்தில் பவர் கட் இருக்கிறது. பிரம்ம லோகத்தில் ஏன் இல்லை.?
”பிரம்மாவுக்கு four faces ஒரு ஃபேசில் பவர் போனாலும் மீதி மூன்று ஃபேஸ் இருக்கிறதே”

Sunday, May 25, 2014

மஹாபாரதக் கதைகள்--அசுவத்தாமன்


                  மஹாபாரதக் கதைகள் -- அசுவத்தாமன்
                  --------------------------------------------------------


அசுவத்தாமன் கதையை எழுதுவதற்கு முன் அசுவத்தாமன் கதைகள் என்று ஒரு பிரபல பதிவர் வலையில் படித்திருந்தது நினைவுக்கு வந்தது. ஆனால் அந்தக் கதைகளுக்கும் மஹாபாரத அசுவத்தாமனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று உறுதி செய்து கொண்டேன் ,இன்னுமொரு எச்சரிக்கை. உங்கள் அருகிலேயே அசுவத்தாமன் சூர்யகாந்தனெனும் பெயரில் இருக்க வாய்ப்புண்டு. அவர் சிரஞ்சீவி என்று கூறப் படுகிறது. ஆனால் அவரது சிரஞ்சீவத்தன்மை கண்ணனின் சாபத்தின் விளைவு என்றும் ஒரு கதை உண்டு. அப்படி கண்ணனின் சாபத்தால் சிரஞ்சீவித்துவம் பெற்ற அசுவத்தாமன் நோய் நொடியால் அவதியுற்று குஷ்ட ரோக நோயால் அவதிக்குள்ளாகி கலியுகத்தின் முடிவில் மஹாவிஷ்ணுவின் அவதாரம் கண்டு முக்தி பெறுவான் என்றும் கதை உண்டு. இந்த மஹாபாரதக் கதையே வேதவியாசரின் கதையிலிருந்து அநேக பாடபேதங்கள் புனையப்பட்டு ஒவ்வொருவிதமாய் பேசப் படுகிறது

. துரோணர், பாரத்வாஜ மகரிஷியின் மைந்தர். மகரிஷி அக்னிவேசர் என்பவருக்கு அக்னி அஸ்திரம் ‘ எனும் ஆயுதப் பயிற்சியைக் கற்று கொடுத்தார்.தன் மகன் வளர்ந்ததும் அவனுக்கு அதைக் கற்றுத்தரும்படி கேட்டுக்கொண்டார் இந்த அக்னிவேசரிடம் மாணாக்கராய் துரோணர் பயின்றார். கூடவே பாஞ்சால இளவரசன் துருபதனும் மாணாக்கராய் இருந்தார். அந்த இளவயது நட்பில் துருபதன் துரோணரிடம் தான் அரசனாய்  பதவி ஏற்றதும் பாதி ராஜ்ஜியம் தருவதாக வாக்களித்தார்  நாட்கள் செல்ல அவரவர் வழிகளில் அவரவர் சென்றனர்


துரோணாச்சாரியார் கிருபாச்சாரியரின் சகோதரி கிருபியை மணந்தார்.அவர்களுக்குப் பிறந்தவரே அசுவத்தாமன் பிறந்தபோது குதிரையின் குரலில் அழுததால் அசுவத்தாமன் என்னும் பெயர்க் காரணம் கூறப்படுகிறது.  அசுவத்தாமனின் இளவயது ஏழ்மையில் கழிந்தது.பாலைக் குடிப்பதாக பாவித்து வாயில் மாவுக் குழம்பை பூசிக் கொள்வானாம். துரோணர் தன் ஏழ்மையைப் போக்க பரசுராமரை அணுகினார். ஆனால் பரசுராமர் தன்னிடம் இருந்த செல்வங்கள் அனைத்தையும் தானமாக கொடுத்து விட்டதால் துரோணருக்கு அஸ்திர சாஸ்திரத்தைக் கற்றுக் கொடுத்தார் 

துரோணருக்கு தன் மகன் அசுவத்தாமனிடம் அளவில்லா அன்பிருந்தது. தன் ஏழ்மையைப் போக்கஅப்போதைய பாஞ்சால மன்னன், தன் இளவயது நண்பன் துருபதனிடம் சென்று அவரது பழைய வாக்குறுதியை நினை வூட்டினார். பாஞ்சாலமன்னன் அவரை அவமானப் படுத்திவிட்டான் தன்னுடன் நட்பு பாராட்ட ஒரு மன்னனுக்கே தகும் என்றும் ஒரு ஏழைப் பிராமணன் அதைக் கனவிலும் எண்ணமுடியாது என்றும் கூறி அனுப்பிவிட்டான்

துரோணர் ஹஸ்தினாபுர இளவரசர்களுக்கு ஆசாரியராய் சேர்ந்தார். பாண்டவ, கௌரவர்களுடன் அவர் மகன் அசுவத்தாமனும் பயிற்சி பெற்றான் குருதட்சிணையாக தன் மாணாக்கர்களிடம் தன்னை அவமானப் படுத்திய துருபதனைப் போரில் வென்று கைதியாக்கிக் கொண்டுவர விரும்பினார். கௌரவர்களால் முடியாததை பாண்டவர்களில் அர்ச்சுனன் நிகழ்த்திக் காட்டினான்.இதுவே பாஞ்சால மன்னனுக்கு துரோணரிடம் பகையை ஏற்படுத்தியது. அவரைக் கொல்வதற்கென்று வேள்வி நடத்தி ஒரு குமாரனைப் பெற்றார்.அவனே திருஷ்டத்யும்னன்

துரோணருக்கு அர்ச்சுனன் மேல் தனிப் பிரியம் தன்னுடைய சிறந்த மாணாக்கன் என்று கூறிக் கொள்வார். அவருடைய மகன் அசுவத்தாமனுக்கு இது பிடிக்காமல் கௌரவர்களுடன் அதிக நட்பு பாராட்டினான் .

துரோணர் அர்ச்சுனனுக்கு பிரம்மாஸ்திரத்தைப் பிரயோகிக்கவும் அதை மீண்டும் அழைத்துக் கொள்ளவும் கற்பித்தார். அசுவத்தாமன் தந்தையிடம் தனக்கும் அந்த அஸ்திர வித்தையைக் கற்றுக் கொடுக்கக் கேட்கிறான் . துரோணர் அவனுக்கு பிரம்மாஸ்திரத்தை ஒரு முறை பிரயோகிக்க மட்டும் கற்றுக் கொடுத்தார். அதனை மீட்கவும் மீண்டும்  மீண்டும் பிரயோகிக்கவும் தகுதி இல்லையென்று மறுத்து விட்டார்.இதெல்லாம் அசுவத்தாமனுக்கு அர்ச்சுனன் மேல் பகையையும் பொறாமையையும் வளர்த்தது
குருக்ஷேத்திரப் போரில் துரோணர் தலைமையில் கௌரவர்கள் வெற்றி முகத்தில் இருந்தனர் யுதிஷ்டிரரைப் பிடிக்க வைத்த வியூகத்தில் அர்ச்சுனன் மகன் அபிமன்யு கொல்லப் படுகிறான் துரோணர் இருக்கும் வரை கௌரவர்களை வீழ்த்துவது கடினம் என்று உணர்ந்த கிருஷ்ணர் துரோணருக்கு அசுவத்தாமன் மேல் உள்ள அன்பை தமக்குச் சாதகமாய் பயன் படுத்த எண்ணி அசுவத்தாமன் இறந்தான் என்று பீமனிடம் முழக்கமிடச் சொன்னார். உண்மையில் பீமன் அசுவத்தாமன் என்னும் பெயருடைய ஒரு யானையைக் கொன்றிருந்தான். தருமனின் வாய்மையில் நம்பிக்கை கொண்டிருந்த துரோணர் அது உண்மையா என்று கேட்க தருமனும் அசுவத்தாமன் இறந்தான் என்று சத்தமாகக் கூறிப்பின் “என்னும் யானை“ என்று மெல்லியகுரலில் கூறினான். புத்திர சோகத்தால் தன் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு தியானம் செய்ய அமர்ந்தார். துரோணரைக் கொல்வதற்காகவே பிறப்பெடுத்த திருஷ்டத்யும்னன் ஓடிச் சென்று துரோணரின் தலையைக் கொய்கிறான்

குருக்ஷேத்திரப்போர் முடிவு பெற்று துரியோதனனும் இறந்தான் ( இறக்கும் தருவாயில் இருந்தான் ஒரிஜினல் கதையில் எப்படி என்று தெரியவில்லை. தந்தையைக் கொன்றவர்களைப் பழிவாங்கவும் துரியோதனனுக்கு இறக்கும் போது மகிழ்ச்சியைத் தரவும் என்ன செய்வது என்று சஞ்சலத்தில் இருந்த அசுவத்தாமன் இரவு நேரத்தில் கோட்டான் ஒன்று காகங்களைத் துரத்தி அடிப்பதைக் கண்டான் யுத்த தருமம் மீறித் தன் தந்தையைகொன்றவர்களை அழிக்க முடிவு செய்து அசுவத்தாமன் பாண்டவர்களின் பாசறைக்கு இரவில் சென்று உறங்கிக் கொண்டிருந்த பாஞ்சாலன் திருஷ்டத்யும்னனைக்  வெட்டிக் கொன்றான் அங்கே உறங்கிக் கொண்டிருந்த உப பாண்டவர்கள் ஐவரையும் கொன்றான் களேபரத்தில் எழுந்த மற்றவர்களைக் கிருபரும் கொல்ல பாண்டவர்களைக் கொன்று பழிவாங்கிய சந்தோஷ சமாச்சாரத்தை துரியோதனனிடம் சொல்லச் சென்றான்
அங்கிருந்து வியாச மகரிஷியின் அசிரமத்துக்குச் சென்றான். இரவில் வெளியே சென்றிருந்த பாண்டவர்களும் கிருஷ்ணரும் கூடாரம் வந்தபோது நிகழ்ந்தவை கேள்விப்பட்டு அசுவத்தாமன் பின்னே வியாசரின் ஆசிரம்ம் சென்றனர் பாண்டவர்களைக் கண்ட அசுவத்தாமன் தான் கொன்றது உபபாண்டவர்களைத் தான் என்றும் பாண்டவர்களை அல்ல என்று உணர்ந்து பாண்டவர்களை எதிர்க்க ஒரு புல்லை உருவி மந்திரம் ஜெபித்து அதை பிரம்மாஸ்திரமாகப் பயன் படுத்தினான் . கிருஷ்ணனின் ஆலோசனைப்படி அர்ச்சுனனும் பிரம்மாஸ்திரம் ஏவினான். இந்த இருவர்களின் அஸ்திரப் பிரயோகத்தால் ஏற்படும் அழிவை வியாசமுனி
தடுத்து ஏவிய அஸ்திரங்களைத் திரும்ப்பப் பெறக் கோருகிறார். திரும்பப் பெறும் வித்தை அறிந்த அர்ச்சுனன் தன் அஸ்திரத்தை திரும்பப் பெறுகிறான்  அதனைத் திரும்பப்பெறத் தெரியாத அசுவத்தாமனிடம் இலக்கை மாற்றச்சொல்ல  அவன் அதை அபிமன்யுவின் மனைவி உத்தரையின் கருவின் மேல் ஏவுகிறான் கிருஷ்ணர் தன் சுதர்சனச் சக்கரத்தால் கருவுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் காக்கிறார் அப்படிக் கருவில் காக்கப்பட்டவரே பாண்டவர்களின் வாரிசான பரீக்ஷித்து மஹாராஜா. ( இன்னொரு விதமாகவும் சொல்லப்படும் கதையில் உத்தரை ஒகருவில் இறந்தகுழந்தையைப் பிரசவித்ததாகவும் கிருஷ்அர் நீர் தெளித்து உயிர்ப்பித்ததாகவும்  கருவிலேயே பரீட்சிக்கப் பட்டதால் பரீக்ஷித் எனும் பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது.)  கிருஷ்ணர் அசுவத்தாமன் நெற்றியில் இருந்த சமந்தகாமணி போன்ற மணியை தோல்வியை ஒப்புக் கொண்டு கழற்றித் தரச் செய்து அவனை சபித்து அனுப்புகிறார் 







  







 

 

  

Thursday, May 22, 2014

கல்யாணம் எங்கள் வீட்டுக் கல்யாணம் ....!


                    கல்யாணம் ,எங்கள் வீட்டுக் கல்யாணம் ......!
                   ------------------------------------------------------------



 எனக்கு நானே சில கேள்விகள் கேட்பது வழக்கம். ஆண்டொன்று போக அகவை ஒன்று கூடுகிறது. அது தவிர வேறென்ன மாற்றம் உன் வாழ்வில் நிகழ்த்துகிறாய், ? மாற்றங்கள்தானே மாறாதது. நான் என்ன புதிதாய் நிகழ்த்த. முன்பே வாழ்க்கையின் பகுதிகளை எட்டெட்டாய்ப் பிரித்து எந்த எட்டு மகிழ்ச்சி தந்தது என்று கேட்டு விடையும் அளித்திருந்தேன் அம்மாதிரி வாழ்க்கையின் நிகழ்வுகளை அசைபோடும் போது அவற்றில் சில இடுகைக்கான எண்ணங்களை விளைக்கிறது. அது தவிர இந்தமாதிரி சுய சிந்தனைகளைப் படிப்போருக்கு சில விஷயங்கள் புதிதாய் தெரிந்து கொள்ள வாய்ப்புண்டு. சில விஷயங்கள் என் மனதை உறுத்தும். அவற்றை இடுகையாக்கினால் என்  எண்ணங்களின் தீவிரம் எழுத்துக்களில் பதிவாகாததாலோ, இல்லை ஏதோகாரணத்தால் சரியான இலக்கை எட்டுவதில்லை என்பது பின்னூட்டங்களின் மூலம் தெரியவரும். எழுத்தைவெறும் பொழுது போக்கும் வழியாக நான் எண்ணுவதில்லை இருந்தாலும் நானும் கலந்து கட்டி எழுதி வருகிறேன் எழுத்தின் திசை சீரியஸ்பாதையை நோக்கிப் போகிறது. தவிர்க்கிறேன்
சில சம்பவங்களை நினைவு கூறும் போது மனதின் வேதனை கிளறப்ப் படுகிறது. வேதனைக்குக் காரணமானவர்களின் அடையாளங்களைத் தவிர்க்கிறேன் இந்த நினைவோட்டம் என் மூத்தமகனுக்குப் பெண்பார்த்து திருமணம் செய்வித்தவற்றின் தொகுப்பு.

நாங்கள் திருச்சியில் குடியிருப்பில் இருந்தோம். என் மூத்தமகன் B.Sc. MBA  முடித்து பணியில் அமர்ந்திருந்தான் சீக்கிரமே அவனுக்கத் திருமணம் செய்தால் அவனது நடுத்தர வயதுக்குள் அவனால் பொறுப்புகளை முடிக்க முடியும் பலரும் ரிடையர்ட் ஆகி வீடு வரும்போது பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் இருப்பதையும் அவர்களுக்கான கடமைகளை செய்ய இவர் படும் அவஸ்தைகளையும் கண்டிருக்கிறேன் ஆகவே விரைவில் திருமணம் என்பது என் கொள்கையாக இருந்தது ஆனால் ஒன்று திருமண சமயத்தில் அவன் சொந்தக் காலில் நிற்கும் தகுதி பெற்றிருக்கவேண்டும் வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும் போது திருமணம் என்னும் பொறுப்பும் கூடினால் உலகியல் values புரியும். இதுஎன் கருத்து. மாறுபடுவொர் பலரும் இருக்கலாம்

மகனுக்கு மணம் முடிப்பது என்று தீர்மானத்துக்கு அவனது ஒப்புதலும் பெற்றோம் எனக்கு இந்த ஜாதக ஜோதிடங்களில் நம்பிக்கை இல்லை. இருந்தாலும் மணம் என்பது இரு விட்டார் பங்கு பெறுவது. பத்திரிக்கைகளில் விளம்பரம் கொடுத்தேன் ஓரிரு இடங்களில் இருந்து பதில் வந்தது. எதுவும் திருப்தி தரவில்லை
இம்மாதிரியான நேரத்தில் என் வீட்டின் கீழ்ப்பகுதி வீட்டுக்கு (குடியிருப்பில் ஒரு ப்ளாக்கில் மேல் இரண்டு கீழ் இரண்டு வீடுகள் இருந்தன )ஒரு பெண் சைக்கிளில் வந்து கீழ் வீட்டுப் பெண்ணிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தாள். நான் என் மனைவியிடம் அவள் யாரென்று கேட்டேன் . என் மனைவிக்கும் தெரியவில்லை. அந்தப் பெண் நம் மகனுக்குச் சரியாவாளா என்று என் மனைவியைக் கேட்டேன் அவள் யார் என்னவென்று தெரியாதபோது என்ன சொல்வது என்றாள்.எனக்கு அந்தப் பெண்ணைப் பிடித்து விட்டது . விசாரிக்கலாம் என்றேன் கீழ் வீட்டில் இருக்கும் பெண்ணின் தோழி அவள். பட்டப் படிப்பு முடித்திருக்கிறாள் .மலையாளி என்றும் தெரியவந்தது. பெண்ணின் தந்தை பி.எச்.இ எல். ல் asst. foreman ஆக பணிபுரிகிறார் என்று தெரியவந்தது. நான் என் கேரள நண்பர் ஒருவரிடம் இதைப் பற்றிக் கூறி அவர்கள் எண்ணத்தை அறிந்து வரச் சொன்னேன். நான் பிறப்பால் ஒரு பிராமணன் என்றும் தமிழ் பேசுபவன் என்றும் என் மனைவி நாயர் வகுப்பைச் சேர்ந்தவர் என்னும் எல்லா விஷயங்களையும் அவர்களுக்குத் தெரியப் படுத்தச் சொன்னேன் .ஜாதகம் போன்ற விஷயங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை என்றும் சொல்லச் சொன்னேன்  நண்பன் எல்லா விஷயங்களையும் எடுத்துக் கூற அவர்கள் ஜாதகம் பார்க்க வேண்டும் என்றனர் எனக்கு அவர்கள் எண்ணத்தில் ஆட்சேபணை இருக்கவில்லை. என் மகனின் ஜாதகம் ஒன்று கணினியில் தயாரானது. பெண்ணின் தந்தை என்னைக் காண வந்தார்.நாங்கள் பெண்ணின் ஜாதகம் கேட்கவில்லை. அவர் மறுநாள் வந்து ஜாதகம் பொருந்தி இருப்பதாகவும் ஜாதகப் படி திருமணம் விரைவில் நடக்க வேண்டும் என்றும் தவறினால் இரண்டு மூன்று வருடங்களுக்கும் மேல் தள்ளிப் போகும் என்றும் கூறினார். நாங்கள் முறைப்படி அவர்கள் வீட்டுக்குப் போய் எல்லா விஷயங்களையும் விவாதித்தோம். பெண்ணிடமும் என் மகனிடமும் இருவருக்கும் இதில் சம்மதமா என்றும் கேட்டுத் தெரிந்துகொண்டோம் திருமணத்தேதியையும் நிச்சயப் படுத்திக் கொண்டு உறவினர் அனைவருக்கும் திருமணத்தேதி உட்படத் தெரிவித்து நிச்சயதார்த்தம் உறவுகள் முன் நடக்க வேண்டுமென்றும் நிச்சயதார்த்த தேதி குறித்துத் தகவல் அனுப்பினோம். உறவினர் நண்பர்கள் என்று அயலூரில் இருந்து சுமார் 100 பேர் வந்திருந்தனர். நிச்சயம் முடிந்து மகிழ்ச்சியுடன் அனைவரும் திருமண நாளுக்காகக் காத்திருப்பதாகச் சொல்லிச் சென்றனர்
இது நடந்து ஒரு வாரத்தில் எனக்கு ஒரு கடிதம்வந்தது. எனக்கு மிகவும் வேண்டியவர் திருமணநாள் அன்று என்னைப் பெற்ற தாயாரின் திதி என்றும் அந்நாளில் திருமணம் நடப்பது உசிதமில்லை என்றும் எழுதி இருந்தார். நிச்சயதார்த்தத்துக்கு அழைப்பு விடுக்கும்போதே திருமண நாள் இன்னது என்றும் குறிப்பிட்டிருந்தேன். நிச்சயதார்த்தத்துக்கும் வந்து முன் நின்று நடத்திய்வர் அப்போது அது பற்றி ஏதும் கூறாமல் ஊருக்குப் போய் எனக்கு எழுதியது மிகவும் வருத்தம் கொடுத்தது. எனக்கு இந்த திதி கொடுத்தல் போன்றவற்றில் சிறிதும் நம்பிக்கை கிடையாது. உயிருடன் இருக்கும்போது அவர்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வதும் இறந்தபின் அவர்கள் விட்டுப்போன கடமைகளை முடிப்பதுமே சிறந்த நீத்தார் நினைவு என்று எண்ணி அதை அப்படியே செய்து வருபவன். இருந்தாலும் தாய் இறந்த நாளில் திருமண நிகழ்வு என்பது மனதை நெருடியது. முன்பே தெரிவித்திருந்தால் மாற்று நாள் வைக்கலாம். அதில்லாமல் விழாவில் கலந்து கொண்டு முன் நின்று நடத்திவிட்டு ஊர் போய் இப்படி எழுதியது சொல்லமுடியாத துயரம் கொடுத்தது. நான் பொதுவாக முக்கிய நாட்களை ஆங்கில காலண்டர் வழியேதான் நினைவு வைத்துக் கொள்வது.
மாற்று நாள் குறிக்க முடியாதபடி எல்லோரும் (பெண்வீட்டார் உட்பட) தயாராகிக் கொண்டிருந்தனர். நான் எனது மூத்த அண்ணாவிடம் இது பற்றிக் கேட்டேன். அவர் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நாளில் தாயின் திதி வரவில்லை என்றார். மனசுக்கு மிகவும் ஆறுதலாயிருந்தது.

பிறகென்ன திருமணம் ஜாம் ஜாம் என்று நடந்தேறியது தாயின் திதிநாளைப் பற்றி எனக்குத் தவறாகச் சொன்னவரும் வந்திருந்தார். நான் அவரிடம் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை. சிலருக்கு பிறர் மனம் வாடும்படிச் செய்வதில் எந்தவித குற்ற உணர்ச்சியும் இருப்பதில்லை என்றும் ஒரு பாடம் கற்றேன் .    .  





       
 



Sunday, May 18, 2014

சொன்னதும் இவர்தானே.......

                 
                              சொன்னதும் இவர்தானே...........
                             -----------------------------------------
 சென்ற பதிவில்


சொன்னது யார் என்று கேள்வி கேட்டுவிட்டேன். முதன் முதலில் சொன்னது யார் என்று கேட்கவில்லையே என்று சொல்லித் தப்பித்துக்கொள்ளலாம் ஏன் என்றால் நான் அந்த வாசகங்களை ஒரு நண்பர், மூத்த வலைப் பதிவர் சொல்லித்தான் கேட்டேன்.
சுமார் ஒரு மாதத்துக்கும்  முன் அவர் திருச்சிக்குச் சென்றிருந்தபோது இன்னுமொரு மூத்த பதிவரை சந்தித்தது பற்றி எழுதி இருந்தார். அதைப் படித்ததும் நான் பெங்களூரில் என்னை சந்திக்க வருவதாகக் கூறிய அவர் இங்கு வந்தும் நான் காத்திருந்தும் சந்திக்க வரவில்லையே என்று எழுதி இருந்தேன் உடனே அவர் மே மாதத்தில்தேதி பத்திலிருந்து பதினைந்துக்குள் வந்தால் எனக்கு சௌகரியப்படுமா என்று கேட்டு எழுதி நான் எங்கும் போகும் உத்தேசம் இல்லை என்று அறிந்ததும்  என்னைக்காண்பதற்காகவே ரயிலில் முன் பதிவு செய்து 14-ம் தேதிகாலை வந்து மாலை திரும்புவதாக எழுதி இருந்தார் ஒருவேளை நான் எழுதியது தவறோ என்று நான் எண்ணியது உண்மை, அவர் வந்ததும் இதைத் தெரிவித்தேன் அப்போது அவர் உதிர்த்த பொன் மொழிகள்தான் முந்தைய பதிவில் யார் சொன்னது என்று கேட்டுப் பதிவிட்டிருந்தேன் நான்காவதாக அவர் சொன்னது சில சில அபிலாக்ஷைகள் இருந்தால் மிச்சம் வைக்காமல் முடிக்கவேண்டும் என்றார் என் ஆசை அவர் விருப்பம் இரண்டுமே நிறைவேறியது. சாணக்கியரோ விதுரரோ சொல்லியதை நான் படித்ததுமில்லை,கேட்டதுமில்லை. மூத்த பதிவர் டாக்டர் பழனி கந்தசாமி ஐயா அவர்கள் என்னைப் பார்க்க வந்தபோது சொன்ன வாக்கியங்கள் நான் எழுதும் இப்பதிவுக்கு முன்னோட்டமாக இருந்தது.

ஒரு வாரம் முன்பே அவர் வரவை நானும் என் மனைவியும் எதிர்பார்க்கத் துவங்கி விட்டோம். நான் தங்கி இருக்குமிடத்துக்கு வரும் வழிபற்றிக்கேட்டிருந்தார். எனக்கோ என்னிலும் மூத்தவரை எங்களைப் பார்ப்பதற்காகவே பெங்களூர் வருபவரை ரயிலடிக்கே சென்று வரவேற்பதே முறை என்று தோன்றியது. என் வீட்டிலிருந்து பெங்களூர் சிடி ஸ்டேஷன் சுமார் 15 கிமீ. தூரம் உள்ளது. காலை 8-35-க்கு வரவேண்டிய ரயில் வழக்கம் போல தாமதமாக வந்தது. ஸ்டேஷனிலிருந்து ஒரு ப்ரீபெய்ட் ஆட்டோவில் வீடு வந்து சேரும்போது காலை மணி பத்தாகி இருந்தது. அவரை வரவேற்க மே மாதம் மட்டுமே செடிக்கு ஒரு பூவாகப் பூக்கும் ஃபுட்பால் லில்லி தயாராய் இருக்க அதன் வரவேற்பை படம் பிடித்து ஏற்றுக் கொண்டார்





வந்தவர் ரயிலில் வந்த களைப்பு தீர முதலில் காஃபியும் காலை உணவாகத் தோசையும் பரிமாறப்பட்டது. உண்டு முடித்துக் குளித்துவிட்டு வந்தவர் ஆயாசம் தீர சற்று ஓய்வெடுக்கட்டும் என்றாள் என் மனைவி. டாக்டரும் சரியென்று சொல்லி உறங்கச் சென்றார். மதிய உணவு நேரம் வந்ததும் அவரைத் தூக்கத்தில் இருந்து எழுப்பினோம். என்னால் அவரதுநிலையைப் புரிந்து கொள்ள முடிந்தது. நானும் ஒரு முதியவன்தானே
மதிய உணவாக பிசி பேளா ஹுளி அன்னா என் மனைவி செய்திருந்தாள். அவர் சாப்பிடும் அளவு ஒருவேளை சமையல் பிடிக்கவில்லையோ என்று என் மனைவிக்குத் தோன்றியது. ஆனால் எனக்கென்னவோ ருசித்து சாப்பிட்டதாகவே தோன்றியது. உட்கொளும் அளவு அவர் வயதை கணக்கிட்டால் சரிஎன்றே தோன்றியது. சிறிது அவல் பாயசமும் உட்கொண்டார், சர்க்கரையான மனிதர் என்பதால் எதையும் force  செய்ய விரும்பவில்லை.மதிய உணவு முடிந்ததும் மிண்டுமுறங்கப் போனாஅது அவரது வாடிக்கையான வழக்கம் என்று தெரிந்துஅவரை உறங்க விட்டேன்

  மாலை நான்கு மணிக்கு ஒருஆட்டோ ஏற்பாடு செய்திருந்தேன். என் வீட்டிலிருந்து சுமார் 15 கிமீ. தூரத்தில் தும்கூர் ரோடில் ஒரு கோவில் cum  ஆசிரமம் இருக்கிறது. பல வருஷங்களுக்கு முன் நாங்கள் சென்றிருக்கிறோம்  பகவத் கீதையின் 18 அத்தியாயங்களும் மூன்று மொழிகளிலும் சுற்றிலும் எழுதப் பட்டு கீதைக்கு ஒரு கோவில் போல் இருக்கிறது
அவரை அங்கு அழைத்துப் போய்க் காட்ட விரும்பி முதலிலேயே ஒப்புதல் வாங்கி இருந்தேன் உண்ட களைப்போ ஏதோ அந்தப் பயணத்தைக் கான்சல் செய்யலாமா என்றார். நான் அந்த இடம் அவர் பார்த்தால் மகிழ்வார் என்றும் கூறி பெங்களூரில் இருப்பவரில் பலரும் பார்த்திருக்காத இடம் என்று கட்டாயப் படுத்தி அழைத்துப்போனேன். என் மனைவியும் கூட வந்தார்
ஒரு பிரம்மாண்டமான ஹால் அதன் நடுவே பகவானின் விஸ்வரூபதரிசனம் சிலையாக வடிக்கப் பட்டு இருக்கிறது ஹாலைச் சுற்றியும் வெளியிலும் கீதை சுலோகங்கள் மூன்று மொழிகளில் கீழே காயத்ரி மாதாவின் கோவில் தரிசனம் செய்து வெளியே வந்தால் பார்த்தசாரதியின் கீதா உபதேசம் சிலை வடிவில் வளாகத்தில் ஏழு நதிகளின் சிலா ரூபங்கள். அருகே நடு நாயகமாக விட்டலனின் திருச் சிலை.
நேரம் பற்றாக் குறையால் இன்னும் நன்கு கூர்ந்து கவனிக்க முடியவில்லை. அங்கிருந்து வீடு வந்த போது மாளை ஆறு மணிக்கு மேல் ஆகி இருந்தது. டாக்டர் ஐயா மஜெஸ்டிக் சென்று அங்கு சுற்றிப் பார்த்து விட்டு ரயில் ஏறிப் போவதாகக் கூறினார்.
என் அன்பின் அடையாளமாக நான் எழுதி வெளியிட்டிருந்த “ வாழ்வின் விளிம்பில் “ சிறுகதைத் தொகுப்பையும் நான் வரைந்திருந்த பாமா ருக்மிணி சமேதராக கிருஷ்ணனின் தஞ்சாவூர் ஓவியம் ஒன்றையும் கொடுத்தேன்
நாங்கள் அதிகம் பேசிக் கொள்ளவில்லை. பதிவுகளின் மூலம் ஒருவரை ஒருவர் தெரிந்து கொண்டிருந்தோம் . பதிவின் மூலம் தெரியாதது அவருக்கு கர்நாடக சங்கீதத்தில் இருக்கும் ஆர்வமும் ஈடுபாடும் மாலை ஸ்ரீ அய்யப்பன் கோவில் வரை ஆட்டொக் காரரிடம் கூட்டிச் செல்லப் பணித்திருந்தோம்
 மறுநாள் அதாவது 15-ம் தேதி அவர் பத்திரமாய் வீடு சேர்ந்தார் என்று அறியும் வரை சற்று கவலையாகவே இருந்தாள் என் மனைவி. 
என் சிறுகதைத் தொகுப்பு பரிசாக
தஞ்சாவூர் ஓவியம் நினைவுப்பரிசாக
விஸ்வரூப தரிசனம் டாக்டர் ஐயாவுடன் நானும் என் மனைவியும்

காயத்ரி தேவி ஆலையம் - என் மனைவி
கீதா உபதேசம் சிற்பம்
சப்த நதிகள் சிலாவடிவில்
விட்டலன்



      




     .              


 



.

Thursday, May 15, 2014

WHO SAID IT.?


                                            
                                                         யார்  சொன்னது
                                                         -----------------------
உலகில்  மூன்று  காரியங்களை மிசசம்  மீதி  இல்லாமல் முடித்து  விட வே  ண்டும் முதலில் ஒருவருக்குண்டான  கடமைகள் .இரண்டாவது  ஒருவர் பட்ட  கடன் .மூன்றாவது நெருப்பை  அணைத்தல் நான்காவதாக  ஒன்றும்  சொன்னார் . அது பிறகு  இவற்றை  சொன்னது யாராயிருக்கும் ? கண்டு  பிடிக்க  முடிகிறதா  பாருங்களேன்


Sunday, May 11, 2014

அன்னையர் தினக் கவிதை


                                  அன்னையர் தினக் கவிதை
                                  --------------------------------------




அன்றொரு நாள் என் பேரன் ஆங்கிலத்தில் எழுதிய கவிதை ஒன்றை தமிழ்ப் படுத்தி எழுதி இருந்தேன் அன்னையர் தினத்தை ஒட்டி அதனை மீள் பதிவாக்குகிறேன்
தளைகளும் கட்டுப்பாடும் அற்ற தனிமையில்
நானிருந்தபோது விடுதலை உணர்விருந்தது.
ஆனால் நீ இல்லாதது வெறுமை உணர்த்தியது
அன்புடன் உன அதட்டலும்,அதிகாரமும் இல்லாதிருந்தது
என்னுள் ஏக்கத்தை ஏற்படுத்தியது.

உன் உதிரத்தின் உயிராய் தொப்புள் கொடி
உறவாய் உதித்தவன் நான்.காலங் கடந்து
உணர்கிறேனோஅம்மா, நீயின்றி நானில்லை என்று ?. 

என்னுள் மாற்றங்கள் நிகழ்கிறது நான் அறிவேன்
அவை நல்லதோ அல்லதோ நானும் அறியேன் -ஆனால்
அறிகிறேன் அம்மா, என் அன்பு என்றும் மாறாதது.

விடியலில் என்னை எழுப்பும் ஆதவன் நீ
அந்தியில் என்னை உறக்கும் நிலவும் நீ
என் எண்ணத்தில் உன்னை நிறுத்தி
நீயில்லா வெறுமையை விரட்டினேன்.

இனிமையின் இருப்பு நீ,பூரணத்தின் பொலிவு நீ
என்னுள் என்னை மிளிரச் செய்பவள் நீ
எல்லாம் எனக்கு நீயே அம்மா
உலகில் சிறந்தவள் நீயே அன்றோ.!









      




    

Saturday, May 10, 2014

ஏற்ற தாழ்வுகள் சமன் செய்ய......


                            ஏற்ற தாழ்வுகள் சமன் செய்ய..........
                             ------------------------------------------


அண்மையில் கல்வி பயிற்று மொழி குறித்து உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பளித்தது. இந்த மாதிரியான தீர்ப்புகளில் கவனிக்கப் படவேண்டியவிஷ்யம் ஒன்றுண்டு. இந்த மாதிரியான தீர்ப்புகள் எது தவறு அல்லது எது சரி  என்று கூறுவது நடைமுறையில் இருக்கும் சட்டங்களின் அடிப்படையில் அமைந்தவையே சில நாட்களுக்கு முன் தாய்மொழி பற்றி என் சந்தேகம் ஒன்று எழுப்பி இருந்தேன் சுற்றுவட்டத்தில் பேசும் மொழியே தாய் மொழி என்று கொள்ள முடியாது. அது பலருக்கும் மாறக் கூடியது. வீட்டிலேயே பலமொழிகள் பேசப் படும் நிலையில் தாய்மொழி என்பதே சர்ச்சைக்குரியதாகி விடுகிறது மாநில மொழியைஒருவர் கற்றுக் கொள்வது அவசியமானாலும் பள்ளிகளில் பயிற்று மொழியைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் சிறார்களின் பெற்றோருக்கே என்னும் முறையில் தீர்ப்பு அமைந்திருந்தது Right to expression  அடிப்படை உரிமை என்றும் தீர்ப்பு தெரிவிக்க்றது
கல்வி குறித்து எத்தனையோ கருத்துக்கள் இருக்கின்றன. கல்வி ஒரு great leveler என்று பலராலும் ஒத்துக் கொள்ளப்படும் கல்வி எதை சமன் செய்கிறது.? நான் அறிந்தவரை கல்வி ஏற்ற தாழ்வுகளைச் சமன் செய்கிறது.  அந்தக் கல்வியிலேயே ஏற்ற தாழ்வுகள் இருந்தால் எப்படி சமன் செய்ய முடியும் ?
ஏற்ற தாழ்வு என்று எதைக் கருதுகிறோம் ? நான் முன்பு எண்ணத் தறியில் எட்டு மணிநேரம்   மற்றும் ஏற்ற தாழ்வு மனிதனின் ஜாதி என்றும் பதிவுகள் எழுதி இருந்தேன் பல நேரங்களில் தோன்றிய எண்ணங்களின் வெளிப்பாட்டை காண பழைய பதிவுகளைக் குறிப்பிடுகிறேன்
நம் நாட்டில் இளைஞர்களின் தொகை அபரிமிதமானது. இவர்களது பயன்பாட்டை ஒருமுகப் படுத்தினால் நாம் எங்கோ இருப்போம் பிற நாட்டினருக்கு உதாரணமாய் இருப்போம் ஆனால் எது நம்மைத் தடுக்கிறது? சந்தேகமில்லாமல் நம்மிடையே இருக்கும் பிரிவினைகள்தான்  பிரிவினை என்றால் ஒன்றா இரண்டா...மாநிலப் பிரிவினை, மொழிப் பிரிவினை  மதப் பிரிவினை சமூக ஏற்றதாழ்வுகள்  இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம் இந்தப் பிரிவினைகளுக்கு உரம் ஏற்றுகிறாற்போல இப்போது பணக்காரன் ஏழை என்று எல்லாப் பிரிவுகளிலும் வழிந்து ஓடுகிறது
இந்தப் பிரிவுகளுக்குக் காரணம் என்ன..?சிறிய அரசுகளாகச் சிதறிக் கிடந்த நம் பரத கண்டத்தை ஆங்கிலேயர்கள் ஒன்று படுத்தினார்கள். ஆனால் நம்மிடையே இருந்த பிரிவினைகளை அவன் தன் பலமாக்கிக் கொண்டான் ஏற்கனவே நம்மிடையே குலம் என்றும் கோத்திரம் என்றும் பிரிந்து கிடந்த மக்களை ஒன்றாக அடையாளம் காட்டியது நம் சநாதன தர்மம்தான். அதையும் அவரவர் விருபத்திற்கேற்ப வளைக்கத் தொடங்கியதில் பல புதிய்மதங்கள் உருவாயின, இப்போதுஅதுவல்ல நம் பதிவின் காரணம். விரும்பியோ விரும்பாமலோ மதங்களின் பேரால் உயர்ந்தவன் தாழ்ண்டவன் எனும் பாகுபாடு இருந்தது வளர்ந்தது. செய்யும் தொழிலால் மக்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப் பட்டன. உயர்ந்த குலத்தோர் அவர்களது கல்வித் திறமையால் முன்னுக்கு வந்தனர். மற்றவர்களுக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டது. இந்த நிலையே சீர்திருத்தவாதிகளின் வருகைக்கு வித்திட்டது. பெரியார் என்றும் அம்பேத்கர் என்றும் நாடறிந்த சிலரின் கூக்குரலால் பிரச்சனை இருப்பது கண்டறியப் பட்டது. சுதந்திரத்துக்குப் பின் வாய்த்த அரசு பின் தங்கியவர்களுக்குச் சலுகைகள் என்று கொண்டு வந்தது காலங்காலமாக வாய்ப்புகள் மறுக்கப் பட்டு வந்தவர்கள் குறிப்பிட்ட ஆண்டுகளுக்குள் முன்னேற முடியவில்லை. பிற்படுத்தப் பட்டோரின் மக்கட் தொகை 70% சதவீதத்துக்கும் மேல் இருக்கும் போது சலுகைகள் அத்தனை பேருக்கும் வழங்கப் படவில்லை. இந்த வழங்கிய சலுகைகளை எதிர்த்தே போராட்டங்கள் நடந்தது. இதை எல்லாம் மீறி பிற்படுத்தப்பட்ட மக்களில் முன்னுக்கு வந்தோர் சலுகைகளைத் தொடர்ந்து பெறவே விரும்புகின்றனர், இவர்களே ஒரு neo வகுப்பைத் தொடங்கி விட்டனர். பிராம்மணனுக்குப் பின் இந்த சாதி ஹிந்துக்கள்  ஒரு மேல் வகுப்பினராகி தமக்குக் கீழ் இருப்பவர்கள் முன்னேற விடுவதில்லை.
குறைகளை சொல்லிக் கொண்டே போகலாம் இதற்கு நிவர்த்திதான் என்ன. நம்மில் வயது வந்த மக்களிடையே எந்த மாற்றத்தையும் கொண்டு வருவது next to impossible இளைய சமுதாயமே நாட்டை முன்னுக்குக் கொண்டு வரவேண்டும் அவர்கள் அப்படிச் செய்ய சூழ்நிலைகள் உருவாக்க படவேண்டும் இதையே education is a great leveler  என்று சொன்னேன். ஆனால் கல்வி முறையிலும் ஏழை பணக்காரன் என்னும் சாதி உருவாகி அதுவும் வியாபாரப் பொருளாகி விட்டது சின்னஞ்சிறுவர்கள் இந்த சாதி ஏழை பணக்காரன் என்னும் பேதமில்லாமல் வளர வேண்டுமானால் அவர்கள் பிஞ்சு மனதில் அந்த பேதங்கள் ஏற்பட வாய்ப்பே இருக்கக் கூடாது. இங்குதான் நான் சொலும் தீர்வு புரிந்து கொள்ளப் ப்டவேண்டும் ஏற்ற தாழ்வுகளைக் காட்டுவ்துஎது. உணவு உடை கல்வி . இவை அனைத்தும் எல்லோருக்கும் சமமாக இருந்து விட்டால் அந்த வேறுபாடுகளே பிஞ்சு உள்ளங்களில் எழாது இதைச் செயல் படுத்த அரசே கல்வித் துறையைக் கையில் எடுக்க வேண்டும் கல்வி கற்க வரும் அனைவரும் சமமாக நடத்தப் படவேண்டும் ஏற்ற தாழ்வுகளை தன்னகத்தே கொண்டுள்ளா உணவு உடை கல்வி அனைத்தும் அனைவருக்கும் வேறுபாடின்றிக் கட்டாயமாக இலவசமாக வழங்கப் படவேண்டும்
நான் கூடியமட்டில் குறைகளுக்கு காரணமானவர்களைச் சுட்டிக்காட்ட விரும்பவில்லை அது ஒரு acrimonious  debate –ல் தான் முடியும் நான் குறிப்பிட்டு இருக்கும் தீர்வை அமல்படுத்த ஒரு benevolent dictator  தேவைப் படலாம் நடத்திக்காட இயலாதது போல் தோன்றலாம் When there is a will , there is a way என்று கூறிக் கொள்கிறேன் .யாரையும் புண்படுத்தாத எந்த மாறு பட்டக் கருத்தானாலும் பிறர் மனம் புண்படாத விதத்தில் பதிவிடக் கோருகிறேன்
(பழைய பதிவுகள் படிக்க “எண்ணத் தறியில்”  “ ஏற்ற தாழ்வு “ தலைப்பில்  மேலே பதிவில் சுட்டவும் ) 



      

Thursday, May 8, 2014

மனசில் நிற்கும் சில பாடல்கள்


                                      மனசில் நிற்கும்    சில பாடல்கள்
                                          -------------------------------------------


நேற்றுக் காலையில் எழுந்ததிலிருந்து ஒரு பாட்டின் ராகம் மனதுக்குள் ஓடிக்கொண்டிருந்தது. பாட்டின் வரிகள் நினைவுக்கு வராமல் மனதை என்னவோ செய்து கொண்டிருந்தது. பாட்டின் ட்யூன் மனதில் ஓட திடீரென்று முதல் வரி நினைவுக்கு வந்தது. “சின்னஞ்சிறு “ எனத் துடங்கும் பாடல் என் மனைவியிடம் இந்த் வரிகளைச் சொல்லி நினைவுக்கு வருகிறதா என்று கேட்டேன் சின்னஜ் சிறு கிளியே கண்ணம்மாவா என்றாள். இல்லை என்றேன் . ட்யூனைக் கேட்டாள். மனசுக்குள் சுருதி பிசகாமல் ஓடிய ட்யூனை நான் பாடிக் காட்ட முயன்றபோது எனக்கே எருமைக் குரலாக ஒலித்தது. அவளால் சொல்ல முடியவில்லை. நேற்று மாலை அவள் சகோதரி வீட்டில் ஒரு பூஜை. சென்றிருந்தோம். என் மனைவியின் சகோதரி லைட் ம்யூசிக்கில் சினி,ஆப் பாட்டுகள் நன்றாகப் பாடுவாள். எதையாவது பாடி கோடி காட்டலாம் என்றால் என் குரல் என்னையே பயமுறுத்தியது. , இன்றுகாலை திடீரென்று ஒரு க்ளூ  சிக்கியது. சீர்காழி கோவிந்தராஜன் பாடிய பாட்டு அது என்று மனசு சொல்ல. இணையத்தில் மேய்ந்தேன். ஒரு சில தேடலுக்குப் பின் அந்தப் பாட்டு கிடைத்தது.
“சின்னஞ் சிறு பெண்போலெ
சிற்றாடை இடையுடுத்தி
சிவகங்கைக் குளத்தருகே..... என்று போகும் பாட்டு.
நீங்களும் கேட்டுப்பாருங்களேன்  




இதேபோல சில பாடல்கள் மனசுக்குள் வந்து உட்கார்ந்து கொள்ளும் இனிய நினைவுகளைக் கூடவே கொண்டு சேர்க்கும் எனக்கு எட்டு ஒன்பது வயதிருக்கும் என்று நினைக்கிறேன் என் தந்தை ஒரு நாள் அவரது நண்பர் ஒருவரை வீட்டுக்கு அழைத்து வந்தார். அன்று அந்த நண்பர் பாடிய பாடல் “தாயே யசோதா உந்தன் .....இன்றைக்கும் அந்தப் பாட்டைக் கேட்கும் போது அந்த அரக்கோண நாட்கள் நினைவுக்கு வருகின்றன
 திருச்சியில் குடியிருப்பில் ஒரு நாள் கோவிலில் ஒரு விசேஷம் . யாரோ ஒருவர் பாடிக் கொண்டிருந்தார். எத்தனையோ முறை யார் யார் பாடியோ கேட்டிருந்தாலும் அவர் அன்று பாடியபோது கேட்ட  அனுபவித்த பரவசம் இன்று வரை கிடைக்கவில்லை. “அலை பாயுதே கண்ணா “ என்னும் அந்தப்பாடலில் கண்ணனை அவர் உருகி உருகிக் கூப்பிடும்போது ஏற்பட்ட மயிர்க் கூச்சம்  ஓ. சொல்ல முடியாத அனுபவம்
இன்னொரு பாட்டு . இளைஞர்கள் கேட்டிருக்க வாய்ப்பு வெகு குறைவு. அசோக் குமார் என்னும் படத்தில் எம்.கே. தியாகராஜ பாகவதர் பாடிய பாட்டு , பாபனாசம் சிவன் எழுதியது என்று நினைக்கிறேன் என் தந்தையார் அடிக்கடி பாடும் பாட்டு :மனமே நீ ஈசன் நாமத்தை வாழ்த்துவாய் தினம் வாழ்த்துவாய்அதில் வரும் ஒரு fast beat அந்தக் காலத்தில் நான் மிகவும் ரசித்தது. அந்தப் பாடல் உங்களுக்காக இணையத்தில் இருந்துு எடுத்தது  


மனமே நீ ஈசன் நாமத்தை வாழ்த்துவாய்

தினம் வாழ்த்துவாய்

கனவெனும் வாழ்வில் கலங்கி வாடாதே
காதலை மாதரைப் புகழ்ந்து பாடாதே   (மனமே..)

காம மோஹ மத வைரிகள் வசமாய்
கர்ம வினை சூழ் உலக வாதனையில்
தடுமாறும்  மனமோடு துயர் உறாமல்
நிரந்தரமும் மகிழ்ந்து பர சுகம்  பெறவே ( மனமே)

விளங்கும் தூய சத்ஜன சங்கம்
விடுக்கக் கூடாதே துஷ்டர் ப்ரசங்கம்
விளக்கில் வீழும் பழம் என்று மயங்கும்
விட்டில் ஆகாதே சஞ்சலமே எங்கும் ( மனமே)

சிறு வயதில் காம மோஹ மத வைரிகள் வசமாய் என்று வரிகள் மிகவும் கேட்கப் பிடிக்கும் 
இன்னும் ஒரு பாட்டு. இரண்டு மூன்று ஆண்டுகள் என் மனைவி கர்நாடக சங்கீதம் பயின்று வந்தாள் பாட்டு சொல்லிக் கொடுத்த ஆசிரியர் குடியிருப்பின் கோவிலில் பக்க வாத்தியங்களுடன் என் மனைவி பாட ஏற்பாடு செய்திருந்தார். அப்போது கற்றுக் குட்டியாகிய அவள் மிகவும் தைரியத்துடன் பாடியராகமாலிகைப் பாடல். அது எம்மெஸ்ஸின் குரலில் இங்கு உங்களுக்காக 










.



 









Monday, May 5, 2014

நான் பிறந்த ஊரும் அதன் கோவிலும் ------


               நான் பிறந்த ஊரும் அதன் கோவிலும்
               -----------------------------------------------------


என் பெயர் G.M.Balasubramaniam என்பது அறிந்ததே. பெயரில் இருக்கும் G எங்கள் முன்னோர்களின் ஊரான கோவிந்தராஜபுரத்தைக் குறிக்கும் M என் தந்தையின் பெயரான மஹாதேவனின் முதல் எழுத்தைக்குறிக்கும். இது என் பதிவில் நான் என்றோ சொன்னது. ஒரு வேளை சொல்லாமல் விட்டது நான் பிறந்த இடம் பெங்களூரில் அல்சூர் என்பது. அதுபற்றிப் பதிவிட வேண்டும் என்னும் எண்ணம் திடீரென உதித்ததுநான் பிறந்த ஊரான பெங்களூர் என் வாழ்க்கையில் நிறையவே நிகழ்ச்சிகள் நடந்த இடம் இதெல்லாம் besides the point. சொல்லிக் கொண்டே போனால் சொல்ல வந்தது சொல்லப்படாமலே போக வாய்ப்புண்டு. ஆகவே விஷயத்துக்கு வருகிறேன்
 கோவில் அருகில் உங்கள் வீடு இருக்கிறதென்று நினைத்துக் கொள்ளுங்கள் திடீரென ஒரு நாள் நீங்கள் குடியிருக்கும் இடம் கோவிலுக்குச் சொந்தம் . உங்கள் வீடு ஒரு கோவில் திருக்குளத்தின் மேல் கட்டப் பட்டிருக்கிறது. உங்கள் வீடுகளை இடித்து அதன் அடியில் இருக்கும் கல்யாணியைக் (படிக்கட்டுடன் கூடிய குளம் )மீண்டும் கோவிலுக்கு உரித்தாக்கப் போகிறோம் என்றால் எப்படி இருக்கும் ?இதுதான் 2010-ம் ஆண்டு அல்சூர் சோமேஸ்வரசுவாமி கோவிலுக்கு முன்னால் வீடுகளில் குடியிருந்தோர் எதிர் கொண்ர்டது. அல்சூரில் பிறந்து HAL-ல் 1950- 1960-களில் வசித்து வந்த நான் என் தந்தையை இழந்ததும் அங்கே. மணமுடித்து வாழ்க்கை தொடங்கியதும் அங்கே அப்போதெல்லாம் இந்த மாதிரி கல்யாணி இருப்பது நினைத்தும் பார்க்காதது
இப்படிப்பட்ட அல்சூர் பற்றியும் அதில் இருக்கும் சோமேஸ்வரர் கோவில் பற்றியும் எழுதுகிறேன் அல்சூர் என்று பொதுவாக அறியப்படும் இடத்தின் உண்மைப் பெயர் ஹலசூர் என்பதாகும் இந்த இடத்தில் பலாத் தோப்பு இருந்ததாம் கன்னடத்தில் பலாப் பழத்தை “ஹலசின ஹன்னு “என்பார்கள் இதுவே ஹலசூர் என்று அறியப் பட்டது பிறகு ஆங்கிலேயர்கள் இங்கு ‘தண்டுஅமைத்தபோது அல்சூர் என்று குறிப்பிட அதுவே பெரும்பாலும் அறியப்பட்ட பேராக இருந்தது. நல்ல வேளை இப்போது அதன் மூலப்பெயரே புழக்கத்துக்கு வந்து கொண்டிருக்கிறது ( (இதே சமயம் ஒன்று குறிப்பிடத் தோன்றுகிறது தமிழில் ப வரும் இடங்களில் எல்லாம் கன்னடத்தில் ஹ வரும் உ-ம் பால்=ஹால், பாடு=ஹாடு போராட்டம் =ஹோராட்டம் இப்படி நிறையவே சொல்லிக் கொண்டு போகலாம் அதேபோல பலா ஹலா ஆக மாறி இருக்கலாம் )
ஒரு கோவில் என்று வரும்போது ஒரு கதையும் இருக்கும் அல்லவா.அதுபோல சோமேஸ்வரர் கோவிலுக்கும் ஒரு பின்னணிகதையாக உள்ளது இந்தக் கோவில் உருவான வருஷமோ கட்டியது யார் என்று நிச்சயமாகத் தெரியாத நிலையிலும் கதை மட்டும் உண்டு இக்கோவில் சோழர் காலத்தையது என்று ஒரு கூற்று உண்டு அடாவது 1200 களில் உருவாகி இருக்கலாம் கோவிலும் கட்டுமான படிவங்களும் சோழர் பாணி , விஜய நகரப் பாணி. பிந்தைய கௌடர்களின் பாணி எல்லாம் ஒருங்கே கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது
சரி கதைக்கு வருவோம் விஜய நகர மன்னர்களால் பெங்களூர் கிராமம் கெம்பே கௌடா( 1513-1569) என்பவருக்கு அளிக்கப்பட்டதாம்அவர் இந்தக் கோவிலைக் கட்டி இருக்கலாம் இவர் யெலஹங்கா எனும் இடத்தை தன் தலைமை இடமாக வைத்து இருந்தார். ஒரு நாள் வேட்டையாடி கொண்டே வெகுதூரம் வந்துவிட்டாராம் ( தற்போதைய யலஹங்காவுக்கும் ஹலசூருக்கும் இடையே 25 கி.மீ தூரம் இருக்கலாம் )வேட்டையாடிக் களைத்துப் போய் ஒரு மரத்தடியில் இளைப்பாறினாராம் அப்போதுஅவர் கனவில் சோமேஸ்வரர் வந்து அங்கு கிடைக்க இருக்கும் புதையல் கொண்டு அவருக்கு ஒரு கோவில் எழுப்பச் சொல்லி பணித்தாராம் இன்னொரு கதைப்படி ஜயப்ப கௌடா(1420-1450)எனும் சிற்றரசர் கனவில் ஒரு மனிதர் தோன்றி அவர் அப்போது இளைப்பாறிக் கொண்டிருக்கும் இடத்தில் ஒரு லிங்கம் இருப்பதாகவும் அங்கு ஒரு கோவில் கட்டுமாறு பணித்ததாகவும் கூறப்படுகிறது இன்னொரு கதைப்படி இக்கோவில் சோழ பரம்பரையினரால் கட்டப்பட்டு யெலஹங்கா நாட்டுப் பிரபுக்களால் மெறுகேற்றப்பட்டதாகவும் கூறப் படுவதுண்டு. எது எப்படி இருந்தாலும் பெங்களூரின் புராதனக் கோவில் ஸ்ரீ சோமேஸ்வர சுவாமி கோவில்
இந்தக் கோவிலுக்குப் பல ஆண்டுகளுக்குப் பிறகு 04-05-2014-ல் சென்று வந்தேன் பதிவுலகில் பகிர்வதற்காக அக்கறையுடன் கோவில் தரிசனம் செய்து என் கண்ணுக்குப் பட்டவற்றை எல்லாம் புகைப்படமாக எடுத்து வந்திருக்கிறேன்
இந்தக் கோவிலில் பூப்பல்லக்குத் திருவிழா பெயர் பெற்றது அன்று சுற்று வட்டாரப் பகுதிக் கோவிலிலிருந்தெல்லாம் பூப்பல்லக்குகள் கலந்து கொள்ளும் எனக்குத் திருமணமாவதற்கு முன் ஒரு முறை இத்திருவிழாவைக் கண்டிருக்கிறேன், இரவு முழுவதும்பல்லக்குகளின் பவனி கண் கொள்ளாக் காட்சியாகும் சென்றமாதம் நடந்த பல்லக்குபவனியைக் காணக் கொடுத்து வைக்கவில்லை. இருந்தால் என்ன அன்னப் பட்சி அலங்காரத்தில் சோமேஸ்வரர் கோவில் பல்லக்கு வந்ததற்கு சாட்சியாக அந்தப் பல்லக்கின் ( பூ அலங்காரம் தவிர )கூடு இன்னும் கோவிலில் இருந்தது. புகைப்படமாக எடுத்துக் கொண்டேன்
வாரத்தில் கிடைக்கும் ஒரு நாள் ஓய்வையும் புறக்கணித்து என்னை வீட்டில் இருந்து காரில் கூட்டிச்சென்று காண்பித்த என் இளைய மகனுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன் பதிவில் சொல்லாத பல விஷயங்கள் படங்களில் காணலாம்         

சோமேஸ்வரர் கோவில் பிரதான கோபுரமும்  அதில் காணும் சிற்ப வேலைப்பாடுகளும்








கீழே காண்பவை கோவிலின் உட்புறத்தில் இருந்து கோபுரக் காட்சிகள்





 தெருவில் இருந்து காண்க் கூடிய ஒரு சிற்பக் காட்சி 

 மண்டபத்தில் சில சிற்பங்கள்
கைலை மலையைத் தூக்க முயலும் இராவணன்
நரசிம்மர்?
மண்டபத்தில் கண்ணாடி அறையில் சோமேஸ்வரரும் காமாட்சிஅன்னையும்

மகுடிஊதும் பாம்பாட்டி
சிற்பத் தூண்
மண்டபத்துக்கு வெளியே பலிபீடம் துவஜஸ்தம்பம்  சிறு நந்தி
மண்டபத்துக்கு வெளியே துவஜஸ்தம்பம் அருகே சிறு நந்தி
ஊஞ்சல் ஆட்டும் நான்
மண்டபத்தில் நந்தி ( பெரியது )
பிரதானகோபுரம் முன் நிற்கும் கல் தூண் (close up)

 கோவிலின் கோபுரம் முன் நிற்கும் கல் தூண்
கோவில் பிடகாரத்தில் அனுமன் சன்னதி
கோவில் வளாகத்தில் நாகலிங்க மரம் --பூ
பூப்பல்ல்க்கின் கூடு அருகே நான்

கோவில் அருகே மீட்கப்பட்ட கல்யாணி
வேலி அமைக்கப் பட்ட கல்யாணி பற்றி அரசின்  அ றிவிப்பு

(.PHOTOGRAPHY  BY G.M.B. AND SON )





  .