Monday, April 30, 2018

என்றும் நான்



                                                      என்றும் நான்                                                        -----------------------


மனம் ஒன்றுவதில்லை எழுத, என்று எழுதி இருந்தேன் புதிதாக ஏதும் எழுத வராவிட்டாலும் பழைய பதிவுகள் சில மனம்கவர்ந்தன ஆண்பெண் ஈர்ப்பு பற்றி நான் எழுதி இருந்த சில பதிவுகள் இன்று படித்தாலும்  நன்றாகத்தான்  இருப்பது போல் இருக்கிறது இரண்டு மூன்று பதிவுகளை மீள் பதிவாக்குகிறேன் இவற்றின்  ஊடே இழையோடும்சில எண்ணங்கள் ஒரு வேளை என்  மனத்திண்மையைக் காட்டுகிறதோ  நான்  எழுதியதை நானே விமரிசிப்பதுஅழகல்ல  நீங்களும்   படித்துப் பாருங்களேன்  
           ----------------------
காலாற நடை பயிலப் பூங்கா சென்றிருந்தேன்.
ஆங்கே, பொன்காட்டும் நிறம் காட்டிப்
பூ காட்டும் விழி காட்டி, இரு தனங்கனக்க,
இடையொடிய மனங்கிளர்க்க மாதொருத்தி,
கண் காட்டி மொழி பேசி,ஆடவர் மனங்கனக்க
விழியாலேவலைவீசி வழி நோக்கிக் காத்திருந்தாள்


காலன் கயிறு கொண்டு கடத்திச் செல்லக்
காத்திருக்கும் காலம்தான் என்றாலும் உள்மனதில் 
காமம்தான் முற்றும் ஒழியாத மன நிலையில்
நெஞ்சே நீயும் எத்தனை நாள்நெருப்பில் மூழ்கிடுவாய்
தஞ்சமாகத் துணையுடனே தழைக்கும் 
பூஞ்சோலை இங்கிருக்க நீ அதனில்கொஞ்சவே 
எண்ணுகின்றாய்,இது தகுமோ, முறையோ முரணன்றோ?


எண்ணிப் பார்க்கிறேன் எனக்கென்ன வயசு
எண்ணில் அடங்குவதோ மனசின் வயசு
காதலுடன் கழிந்த காலம் உன்னும்போது
உணர்கின்றேன் எனக்கென்றும் இளமைதான் என்று. 


என்னதான் நடக்கும் நோக்கலாமே என்றே எழுச்சியுடன்
ஓரடி ஈரடி நாலடி நான் நடந்தவள் முன் செல்ல
எனைக் கண்டெழுந்தவளிடம் நானறியாதே கூறிவிட்டேன்
உள்ளம் சொன்னதை அநுபவம் கற்றதை..


பொய்க் கனவாய்ப் புகுந்துன் பெண்மை புணர்ந்து
மெய்க்கனவாய் ஆக்கிடுவர் உன் இளமையதை. 
கூத்தாள் எனக் கொள்வர், இரவி மறையுமுன் உன்
ஆத்தாள் உனைத் தேடுமுன் போய்ச் சேர் வீடு நோக்கி
.               ---------------

நாலாறு வயதிலும் நல்ல பையன் நான்
கண்முன்னே கார்குழல் விரித்த கன்னியர்
(இப்போதெல்லாம் பின்னிய கூந்தல் காண்பதரிது)
பத்மினி,சித்தினி,சங்கினி, அத்தினிப் பெண்டிர்
பவிசாக வந்தாலும் பத்திர காளியாய் நின்றாலும்
பயமாய் இருக்கிறது.. தலை தூக்கிக் கண்டாலே
காவலரிடம் புகார் செய்வரோ, என்றே அச்சம்.
அவர்களுக்கென்ன ..பாரதியே கூறிவிட்டான்
நிமிர்ந்து நடக்கவும்  நேர்கொண்டு பார்க்கவும்.

எனக்கேன் இந்த பயம்..?

பேதையோ, பெதும்பையோ
மங்கையோ மடந்தையோ , அரிவையோ தெரிவையோ
இல்லை பேரிளம்பெண்ணோ , பார்வையால்
துகில் உரியப்பட்டு பருவ பேதமின்றி சிதைக்கப்படும்
அச்சத்தின் உச்சத்தில் வளைய வரும் தாய்க்குலம்
யாரைப் பார்த்தாலும் பாம்பா பழுதையா என்றறியாது
தற்காப்புக்காக எதுவும் செய்யலாம்தானே

பாரதிதாசன் கூறியதுபோல்கிளையினில் பாம்பு தொங்க
விழுதென்று குரங்கு தொட்டு விளக்கினைத் தொட்ட பிள்ளை
வெடுக்கென குதித்ததைப் போல் கிளைதோறும் குதித்துத் தாவி
கீழுள்ள விழுதையெல்லாம் ஒளிப்பாம்பாய் எண்ணி எண்ணி
உச்சிபோய்த் தன் வால் பார்க்கும்.”

பாவிகள் பலரது செயல்கள்
பூவையரிடையே அச்சத்தை விளைவிக்க் நானிருக்கிறேன்
நாலாறு வயதிலும் நல்ல பையனாக.
                       -------------------------

           
ஓரடி  ஈரடி  சீரடி  வைத்தென்முன் நாலடி  நடந்து  வர,
உன் வலை வீசும்  கண்கள்   கண்டு
நாலாறு வயசு நிரம்பப்  பெறாத என் 
மனசும்  அலைபாயும், மெய்  விதிர்க்கும் ,
வாய்  உலரும் , தட்டுத் தடுமாறும்   நெஞ்சும்

ஆடிவரும்  தேரினை  யாரும்  காணாதிருக்க 
செய்தல்  கூடுமோ ..?
அயலவர்  உன்னை    ஆராதிப்பதை 
தடுக்கவும்  இயலுமோ ...?
எங்கும்  நிறைந்தவன் ஈசன்  என்றால் 
என்னுள் நிறைந்தவள் நீயேயன்றோ ...?
என்னுள் நிறைந்த உனை என் கண்ணுள் நிறுத்தி 
நீ வரும் வழி நோக்கித  தவமிருக்கும்
நானும்  ஒரு   பித்தனன்றோ...?

யாருனைக்  காணினும்   யாதே  நேரினும் ,
நிலம்  நோக்கி  என் முன்னே  மட்டும் 
என்கண்  நோக்கி என்னுள் பட்டாம்பூச்சி 
பறக்கச்செய்யும்  வித்தை   அறிந்தவளே ...!

உன் விழி  பேசும்  மொழியறிந்து
உனைக் கண்ட   நாள்  முதல்  கணக்கிட்டு  விட்டேன்
எனக்கு  நீ , உனக்கு  நான் , எனவே ,
கைத்தலம்  பற்ற காலமும்  நேரமும்  குறித்து  விட்டேன், .
                              -----------------------------------

        எந்தன்    உயிருக்குயிர்     நீயே
                
நாடும்    அன்பு     நானோ
           
என்   கண்ணின்  மணி   நீயே --உந்தன்
                
கருத்தின்  ஒளியும்  நானோ
            
நற்பண்பின்    சுவை    நீயே ---உன்
                
பாவின்   நயமும்   நானோ
            
என்    எண்ணின்   பொருள்   நீயே
                 
உன்    எண்ணம்    சொல்லாதது   ஏனோ !
            

 --------------------------------------------------------------------------




Friday, April 27, 2018

எண்ணங்கள் கோர்வையாக அல்ல

                   
                             
                                  எண்ணங்கள் கோர்வையாக அல்ல
                                 ------------------------------------------------------
  தொடர்ந்து ஒரே மாதிரி கனவு தினமும் வருமா அம்மாதிரி வரும் கனவை நினைவில் கொண்டு வர முடிவதில்லையே ஏன் ஏதோ ராக்கெட் விடும் கனவு என்பது மட்டும்  நினைவுக்கு வருகிறது  கனவு காணும்போது இது ஏதோ யுரேகா சமாச்சாரம்  இது பற்றிக் குறிப்பிட வேண்டும் என்று  நினைத்ததும்   நினவுக்கு வருகிறது  திரு ஜீவி சார் ஒரு முறை கனவுகள் பற்றி  ஒவ்வொப்ரு பதிவுக்கு முன்னாலும்  எழுதிவந்தார் என்பது நினைவுக்கு வருகிறது  என்ன என்று அறிய அவரது பழைய பதிவுகளைப் பார்க்க வேண்டும். முடியுமா தெரியவில்லை
 சில காலம் முன்  இந்த கங்நம் டான்ஸ் பற்றி ஒரே பேச்சாக இருந்தது அந்த நடனம்பயில காணொளி பாருங்கள்




 குருவாயூர் கோவில் அருகே யானைகள்  வளாகம் இருக்கிறது அங்குசுமார் 40 யானைகளுக்கும் மேல் பராமரிக்கப்படுகிறது யானைகளைப் பார்த்துக் கொண்டிருப்பது ஒரு அலாதி மகிழ்ச்சி  அங்கு சென்றபோது அவற்றை குளிப்பாட்டும் காட்சியை  வீடியோவாக்கி இருந்தேன்  நீங்களும் கண்டு மகிழலாமே




அண்மையில் பெங்களூர்  இஸ்கான்  கோவிலுக்கு சென்றிருந்தோம்   நண்பர் ஒருவர் வீட்டுத் திருமணத்துக்கு  ஹால் புக் செய்ய அவர்களுடன்   சென்றிருந்தேன்   அப்போது அங்கே இருக்கும்  கடவுள் பிம்பங்களைப் புகை படமெடுக்க லாமா  என்று கேட்டேன்   அவர்கள் மறுப்பு தெரிவித்தனர்  பொது மக்களுக்கு அனுமதி இல்லாதபோது மீடியாக்களுக்கு மட்டும் எப்படிஅனுமதிஎன்று கேட்டேன்   அவர் எதிர்பார்க்கவில்லை  எனக்கு அனுமதிதரும் அதிகாரம் இல்லை என்று ஏதோ கூறி மழுப்பினார்





 ஏப்ரல் 11 ம் தேதி என் மூத்தமக்ன் பிறந்தநாள் வழக்கம்போல் வீட்டில் என்மனைவி ஒரு கேக் செய்தாள் என் பேரனும் கடையில் இருந்து ஒரு கேக் வாங்கி வந்திருந்தான் அதன் விலை மிக அதிகம்  அன்பினால்தான் இரண்டும் வந்தன  அன்புக்கு அத்தனை விலை கொடுக்கமனம்வரவில்லை





ஏழு ஆண்டுகள் பள்ளிஆசிரியையாகப் பணி புரிந்து வந்த என்  இரண்டாம் மருமகளை பாராட்டும்வகையில் ஒரு பரிசுகொடுத்தனர்  மகிழ்ச்சியாயிருந்தது



 என் மகனது நாய்க்குட்டி சில நாட்கள் என்னுடனிருந்தது இப்போது அது வளர்ந்து வேறுயாரிடமோ  அது இருந்தபோதுஎடுத்த காணொளி



என் மகனது நட்சத்திரப் பிறந்த நாள் ஆங்கில வருடப்பிறந்தநாள்  என்று என் மனைவி கொண்டாடுவாள் ஒருவருக்குஎத்தனை பிறந்த நாள் என்று என் மனைவியிடம் கேட்டேன்  அவள் ஒவ்வொரு நாளும் புதிதாய்ப் பிறப்பதால் எல்லா நாளும்  பிறந்த நாளே  என்றாள்  இதைக் கேட்டுக் கொண்டிருந்த என் மகன்  அம்மா அடித்தாளே ஒரு சிக்சர்  என்று கூறினான் ,,,,,,,,! 

Tuesday, April 24, 2018

நோ லன்ச் இஸ் ஃப்ரீ


                                           நோலன்ச் இஸ் ஃப்ரீ
                                            --------------------------------
           
அண்மையில்  எழுதுவதற்குமனம் ஒன்றுவதில்லை ஏன்  என்று ஆராயும் போது பல காரணங்கள் தெரிய வருகிறது நான்பெரும்பாலும் எழுதுவது என்  எண்ணங்களைத்தான்  அவை வெகுஜன எண்ணங்களோடு ஒத்துப் போவதில்லை  நான் எழுதுவது பிறரைக் கவர அல்ல  இருந்தாலும்   அவை எவ்வாறு  வரவேற்கப் படுகின்றன என்பதைஅறியும் ஆவலும் உண்டு ஆனால் துரதிர்ஷ்டவசமாக வலைத்தளங்களில்  எழுதுபவற்றை வாசிப்பவர்கள்நரிவலம் போனால் என்ன இடம்போனாலென்ன  என்றே இருக்கின்றனர்  வித்தியாசமான முயற்சிகள் கண்டு கொள்ளப்படுவதில்லை
இதைப் போக்கும் முயற்சியாகவே  சில பதிவுகளை மீள்பதிவாக்கி  அதன் முக்கியசேதிகளையும்சொல்லி[ப்பார்த்தேன்இருந்தும் நான் நினைத்த படி ஏதும்நடக்கவில்லை  அப்போதுதான் தெரிந்தது வாசகர்கள் எழுதவும் கருத்து பதிக்கவும் சில இன்சென்டிவ்ஸ்இருக்க வேண்டும் ஒரு தீர்க்க தரிசியும்  நினைவுக்கு வந்தார் பதிவுகளை ஊன்றிப்படிக்கவும்  கருத்துகளை அலசல் முறையில் வெளியிடவும்  அவர் செய்த உத்தி இப்போதுநினைத்தால் வியப்பாய் இருக்கிறது நோ லன்ச் இஸ் ஃப்ரீ என்னும் சொல்லுக்கு அர்த்தம்புரிந்தது ஒரு கதையை யோ கட்டுரையையோ மீள் பதிவாக்கும் போதே தெரியும் சிலர் அவற்றைப்படித்திருக்கலாம்  ஆனால் பின்னூட்டக்கருத்தாக அதுவே வெளிவரும்போது நான் நினைத்தது நடக்க வில்லை என்றுநன்கு தெரிகிறது என் ஏமாற்றங்களை  நான்மறைத்துக் கொண்டு மறு மொழி இடுகிறேன்
என்னை நான்  அடையாளப்  படுத்திக் கொள்வதே என் கருத்துகளாலும்   எழுத்துகளாலும் தான்  ஆனால் நான் பதிவில் சொல்லும்   சில விஷயங்களை வைத்துக் கொண்டு சிலர் எனக்கு முத்திரை பதிப்பிக்கிறார்கள்  நான் எதற்கும் எதிரி அல்ல  ஆனால் எதையும்  அப்படியே ஏற்றுக் கொள்ளும்  மனப் பாவம் கொண்டவனும் அல்ல இத்தனையு ம் நான் தெரிவிக்க வேண்டிய அவசியமும்  இல்லை  இதற்குத்தான்  நான் பதிவர்களைசந்திப்பதில் ஆர்வம் காட்டுவதன் காரணம்  தெரியும்       முகம் தெரியா விட்டால் ஏற்படும் சங்கடங்கள் தவறகப்புரிவதாலும்  இருக்கும் இவற்றை நான்  எழுதுவதாலாவது சிலர் சிந்திக்கலாம்  என்பதையே காட்டும்   

Saturday, April 21, 2018

நினைக்கும் போது நகைப்பு வரும் நிகழ்வு


                    நினைக்கும் போது  நகைப்பு வரும் நிகழ்வு
                   ------------------------------------------------------------------
வாழ்வில் சில நிகழ்வுகள் திகிலூட்டும்  அதிர்ச்சி தரும்   நகைப்பூட்டும்  அவ்வப்போது சிலவற்றைப்பகிர்ந்து வருகிறேன்  அதில் இது நகைப் பூட்டுவது

இவன்1966ம் ஆண்டு பொன்மலைப் பட்டியில் ஒரு வீடுவாடகைக்கு  எடுத்துக் கொண்டு மனைவி மற்றும் நான்கு மாத மகனுடனும்  தனிக் குடித்தனம் நடத்தத் துவங்கிய காலம்  இவனது வீட்டுக்கு நண்பர்கள் வந்து இவனது வாழ்க்கையை கண்டு போவது வழக்கம்   இவனது  மூத்த மகன்தான் அப்போதைய குழந்தை வருபவர்கள் குழந்தையைத் தூக்கிக் கொஞ்சுவார்கள்  அப்போது நடந்த ஒரு நிகழ்வுஇன்று நினைக்கும் போதும்  சிரிப்பு வரும்
ஒரு நண்பன் வீட்டுக்கு வந்திருந்தான் எல்லோரையும் போல் குழந்தையை எடுத்துக் கொஞ்சினான்  இவன் மனைவிக்கு   மிகவும்  சங்கோஜமாக இருந்தது ஏன்  என்றால் அவன்  குழந்தையை எடுத்து சாந்தி . சாந்துக் குட்டி என்று கொஞ்சிக் கொண்டிருந்தான்  என்ன விஷயம் என்றால்   இவன்  இவனது மனைவியை சாந்தி என்று கூப்பிடுவதைக்கேட்டுகுழந்தையின் பெயரையும்  அதுதான் என்று அவன் நினைத்து   கொஞ்சி கொண்டிருந்தது தான்   இவனுக்கோ  மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் இருந்தது  அவனிடம் இருந்து குழந்தையை வாங்கி  ஒரு முறைக்குப் பலமுறை  மனோக் கண்ணா  என்று கூப்பிட்டு நண்பனைப் பார்த்த்தான்   சிலநொடி நேரத்தில் நண்பனுக்கும்   அவனது தவறு தெரிந்தது  அசடு வழிய  இவர்களை  பார்த்தான்   சகஜநிலைக்கு வர சிறிதுநேரம் பிடித்தது அந்தநிகழ்வு இன்றும்  முகத்தில் ஒருசிரிப்பை வர வழைக்கும் 
  

Thursday, April 19, 2018

ஒரு திகில் அனுபவம் i


                                       ஒரு திகில் அனுபவம்
                                      -----------------------------------

ஒரு திகில் அனுபவம்
இவன் திருச்சி BHEL-ல்வேலைக்குச் சேர்ந்த புதிது. ஒரு சில நாட்கள் ஓட்டலில் தங்கிவிட்டு  பொன்மலைப் பட்டியில் ஒரு நண்பன்  மூலம் வீடு பார்த்தான் பழைய வீடாயிருந்தது கதவுகளிலும் கதவு நிலைகளிலும்  மரம் உளுத்துப்போனது போல் இருந்தது பக்கத்தில் ஒரு டெண்ட் கொட்டாய் இருந்தது மாலை வேளைகளில் பாட்டு கேட்கும்  மனைவி மற்றும் பிறந்து நான்கே மாதங்களுமான குழந்தையுடனும்தனிக் குடித்தனம்தொடங்கி விட்டான்  வாழ்க்கை படகு மெல்ல அசைந்து ஓடிக் கொண்டு இருந்தது ஒரு நாள் இரவு அழுது வடிந்து கொண்டிருந்த விளக்கு வெளிச்சத்தில் ஏதோ ஒன்று ஓடிக் கதவின்  பின்புறம் போவதைப் பார்த்ததாக இவன் மனைவி சொன்னாள் என்ன ஏது என்று தீர்க்கமாகச் சொல்லத் தெரியவில்லை வேகமாக நெளிந்து ஊர்ந்து சென்றது போல்இருந்தது என்றாள் என்னதான்  அது என்று வீடு முழுதும் தேடிப் பார்த்தும் எதுவும்  தென்படவில்லை சமையல் அறைக்கும் ஹாலுக்கும் நடுவில் இருந்த கதவு நிலையின்  அடியில் ஒரு ஓட்டை இருந்தது
அதன் உள்ளிருந்து அவ்வப்போது  ஏதோ வெளியில் தெரிவதும் உள்ளே போவதுமாய்
இருந்தது பாம்பின்  நாக்கு என்று எண்ணியவர்கள் மிகவும் பயந்து போய் விட்டார்களென்ன ஏது என்று தெரியாமல் கைக் குழந்தையை வைத்துக் கொண்டு , வீட்டில் பாம்பும்  இருந்தால் …..இவன் கையில் ஒரு கழியை வைத்துக் கொண்டு கதவருகில் காத்திருந்தான் அவ்வப்போது நாக்குதான்வெளியில்க் தெரிந்ததே தவிர அந்தப் பாம்பு வெளியே வரவில்லைஅந்தஒட்டையில் ஒரு நீளமான குச்சியை வைத்துக் குடைந்தான் நீளமான குச்சி உள்ளே போகும் அளவுக்கு ஓட்டையாக இருந்ததால்தால் தானோ என்னவோ  அது இன்னும் உள்ளே சென்றிருக்க வேண்டும்  ஊது பத்தியைக் கொளுத்தி ஓட்டைக் குள் புகை போகும் படிசெய்து பார்த்தும்   அது வெளியே வரவில்லை இரவு நேரம் போய்க் கொண்டிருந்ததுகுழந்தையை நடுவில் கிடத்தி இரண்டு பக்கமும் இவனும் இவன் மனைவியும்  படுக்க ஏற்பாடு செய்யப்பட்டது படுப்பதற்கு முன்  அந்தக் கதவின்  நிலையைச் சுற்றி மண்ணை அள்ளிப் போட்டு பரப்பினார்கள் கண அயர்ந்து தூங்கிவிட்டால், அது தெரியாமல் வெளியில் வந்து விட்டால் தடம் பார்த்து தெரிந்து கொள்ளலாமே  அன்றுஇரவு சிவ ராத்திரியாகக் கழிந்தது அது வெளியில் போனதற்கானதடம்தெரியவில்லை விடியற்காலை ஒரு பக்கம் இவனும் மறு பக்கம் அவளும்  அதுவெளியே வரக் காத்திருந்தனர் அவள் கையில் ஒரு கழி இவன் கையில் ஒரு இரும்புச் சட்டுவம்   அது எப்படியும்வெளியே வரும் வந்தவிடன் ஒரே போடு  என்பதாகப் ப்ளான் கண்களில் எண்ணையை  விட்டுப் பார்ப்பது போல்  கவனமாகக் கண்காணித்துக்  கொண்டிருந்தார்கள். அது உள்ளே தான் இருந்ததுவெளியில்  போன அடையாளம் ஏதுமில்லை  திடீரென்று அது வெளியில் ஓடியதுஎன்ன ஏது என்று பார்க்காமல் அந்த இரும்புச் சட்டுவத்தால் ஒரே போடு  வெளியே வந்த அது இரண்டாக  வெட்டுப்பட்டு இருந்தது இறந்த பார்த்தால் அது ஒருஅரணை !!!!