செவ்வாய், 3 ஏப்ரல், 2018

சின்ன சின்ன சரம்


                                    சின்ன சின்ன சரம்
                                   -----------------------------

காமராஜர் எப்போதும்  துண்டை தன்  தோளில் ஒரு பக்கத்தில்தான் போடுவாராம்  ஒரு முறை அது மாறி இருக்கவே பத்திரிகை  நிருபர்கள் கேட்டனராம்  அவர் சும்மாத்தான் என்று மழுப்பினாராம்  ஆனால் நிருபர்கள் துருவி துருவி கேட்க அவர் தன் தோள் துண்டை எடுத்துக்காண்பிதாராம் சட்டையிலிருந்தகிழிசலை மறைக்கவே இந்தமாற்றம் என்று புரிந்து கொண்ட நிருபர்கள் வாயடைத்துப் போய் விட்டார்களாம்

என் மகன்  எனக்கு அனுப்பிய செய்தி ஒரு முறை ஒரு தெலுங்கு பிரமுகரும்  ஜேம்ஸ் பாண்டும்   விமானத்தில்  பயணித்தார்கள் தெலுங்கு நண்பர் ஜேம்ஸ் பாண்டிடம்  அவர்  பெயரைக் கேட்டாராம்  அவர் தன் பெயர் பாண்ட் …ஜேம்ஸ்பாண்ட் என்று ஸ்டைலாகக் கூறினாராம்  பிறகு தெலுங்கு நண்பரின் பெயரைக் கேட்டாராம்   அதற்கு அவர்  தன் பெயர் ராவ் என்றாராம் பின்  விளக்கமாக   sivaraao
Sambasiva rao
Vengkata sambasiva rao
yarlagadda vengata sambasivarao
raajaseekara yarlagadda vengata sambasiva rao
sitharaamanjaneyulu rajasekara yarlagadda vengkata sampasivarao
vijayavada sitharamanjaneyulu rajasekara yarlagadda vengkata sambasiva rao
அதற்குபிறகு பாண்டிடம் யாராவது பெயர் கேட்டால் வெறுமே ஜேம்ஸ்  என்று மட்டும் சொல்லி வருகிறாராம்

ஒரு விவாக ரத்து வழக்கில் ஜீவனாம்ச வழக்கில் நீதிபதி நான் இந்த வழக்கை நன்கு விசாரித்து உன் மனவிக்கு  மாதம் ரூ 2,00,000 தர ஜீவனாம்சமாக தர   தீர்ப்பளிக்கிறேன்    என்றாராம் 
கணவன் அதைக் கேட்டு மிக நல்ல தீர்ப்பு யுவர் ஆனர்  நானும்  முடிந்தபோது ஏதாவது ஒருதொகை தர இசைகிறேன் என்றானாம்

நோயாளி-- டாக்டர் என்கண்களில் ஏதோ கோளாறு ஏதோ தூரத்தில் வருவதுபோல் தெரிகிறது ஆனால் கிட்டப் போனால் எதுவுமே இல்லை
டாகடர் அது ஒன்றுமில்லை  annual increment  deficiency  syndrome  என்பதுதான்  அது என்றாராம்
(மாத சம்பளம் வாங்கும் நண்பர்களுக்கு அர்ப்பணம்)
 
மார்ச் 30ம் தேதி நாங்களிருக்கும் இடத்தில் நல்லகாற்றுடன் பெருமழையும் இருந்தது ஆலங்கட்டியுடன் கூடிய மழை  முடிந்தவரை காணொளியில்  சுட்டது


அண்மையில் மருத்துவ மனையிலிருந்தபோது உணர்ந்தது முன்பெல்லாம்  மலையாள செவிலியர்கள் இருந்தனர் இப்போது யாரையும்காணவில்லை கன்னட நர்சுகளும்   வடகிழக்கு பாகத்திய நர்சுகளுமே இருக்கின்றனர் என்ன காரணமோ தெரியவில்லை  

36 கருத்துகள்:

  1. மலையாள நர்சு எல்லாம் வெளிநாட்டுக்கு வந்துட்டாங்க

    பதிலளிநீக்கு
  2. ரசித்தேன். மலையாள நர்சுகள் மூன்றுவருட அனுபவத்துக்காக மருத்துவமனையில் குறைந்த சம்பளத்துக்கு பணியாற்றிவிட்டு வெளிநாட்டு வேலைக்குச் சென்றுவிடுகின்றனர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லோருமா வெளிநாட்டுக்குச் செல்கிறார்கள்

      நீக்கு
  3. இரசித்தேன்...

    மதுரைத்தமிழர் சொன்னது உண்மைதான் ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனால் மருந்துக்குக் கூட ஒருவரையும் காணவில்லை யே

      நீக்கு
  4. காமராஜரின் செய்தி மனதை நெகிழவைத்தது.

    மலையாள நர்சுகள் எல்லாம் குறிப்பாக கெல்ஃபில் அப்புறம் பிற வெளிநாடுகளில் என்று சென்றுள்ளார்கள். கேரளத்தில் ஆசிரியர்கள் மற்றும் நர்ஸ் வேலைக்கு அதிகம் உள்ளனர்.

    துளசி, கீதா

    கீதா: ஜேம்ஸ்பாண்ட் தெலுங்கு நடிகரைக் கலாய்த்திருப்பது போல விஜயகாந்தைக் கலாய்த்தும் அதிக காணொளிகள் இருக்கின்றன சார்.

    காணொளியில் மழைச்சத்தம் இனிமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு திருத்தம் தெலுங்கு நண்பர்தான் ஜேம்ஸ் பாண்டை கலாய்த்திருக்கிறார் விஜய் காந்த் கலாய்ப்புகளைக் கூறி இருக்கலாமோ

      நீக்கு
  5. காமராஜருக்கு நிகர் அவரேதான்
    பிறஙையும் ரசித்தேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காமராஜர் பற்றி இன்னும் எவ்வளவோ தெரியாதவை இருக்கின்றன வருகைக்கு நன்றி சார்

      நீக்கு
  6. 68 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆஸ்பத்திரி க்கு வந்தால் சேவை செய்யமாட்டோம் என்று மலையாள இளம் செவிலியர் சங்கம் தீர்மானம் போட்டது தங்களுக்குத் தெரியாது போலும்.
    - இராய செல்லப்பா சென்னை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 63 என்பதை நீங்கள் தவறுதலாக 68 என்று தட்டச்சு செய்துவிட்டீர்களோ செல்லப்பா சார்? நீங்கள் இளம் செவிலியரை எதிர்பார்த்துக்கொண்டிருக்க மாட்டீர்கள்னு நினைக்கிறேன்.

      நீக்கு
    2. @ செல்லப்பா அப்படியும் இருக்கலாமா நான் போனபோதே அங்கு யாரும் இருக்கவில்லையே மேலும் அவர்கள் சேவை செய்ய நான் ஒருத்தன் மட்டும்தானா

      நீக்கு
    3. @நெத செல்லப்பாவின் வயதையா குறிப்பிட்டு இருந்தார் என்னுடையதோ என்று நினைத்துவிட்டேன்

      நீக்கு
  7. காமராஜருக்கு ஒரு உதவியாளர் இருந்தார். வைரவன் என்று பெயர். காமராஜருக்கான முழு பணிவிடைகளையும் செய்தவர் அவர் தான். துணிகளைச் சலவைக்குப் போடுவது, எடுத்து வைப்பது உள்பட. அதனால் இந்த விஷயத்தில் வைரவனின் கவனக்குறைவைத் தான் சொல்ல வேண்டும்.

    புதுவையில் தமிழ் வளர்ச்சி விழா ஒன்று. ம.பொ.சி. உரையாற்ற வந்திருந்தார். விழா தொடங்குவதற்கு முன்
    ஜமக்காளம் விரித்த தரையில் அமர்ந்து கொண்டு எங்களோடு பேசிக்கொண்டிருந்தார். பேச்சின் நடுவே சட்டென்று எங்களைப் பார்த்து, "இவரைத் தெரியுமா?.. இவர் தான் கா.மு.ஷெரிப்.." என்று கவிஞரை அறிமுகப்படுத்தினார். அறிமுகப்படுத்தும் பொழுது கவிஞரைச் சுட்டிக் காட்டி லேசாக அவர் கையைத் தூக்கவே சட்டைக்கைப்பகுதியில் இருந்த கிழிசல் சட்டென்று கண்ணுக்குத் தட்டுப்பட்டு மனக்கலக்கத்துடன் நினைவில் பதிந்து விட்டது. இன்றும் நினைவில் நிற்கிறது.

    தோழர் ஜீவா ஒரு மாற்று வேட்டி, சட்டையோடையே வாழ்ந்தார். சென்னை தாம்பரத்தில் வீடு. ஒரு தடவை அந்த வழியாக காமராஜர் காரில் போகும் பொழுது, "ஜீவா இங்கே தானே இருக்கிறார்? காரை அவர் வீட்டுக்கு விடப்பா.." என்று டிரைவரிடம் சொல்லி விட்டார். ஜீவா குடிசை வாசலில் தமிழக முதலமைச்சர். காமராஜர் வந்திருப்பதாக செய்தி போயிற்று.
    அந்த சிறிய குடிசையின் பின்பக்கம் ஜீவா குளித்து விட்டு ஒன்றை நனைந்த வேட்டியையே உலர்த்தி உடுத்தி வர வேண்டிய ஆயத்தத்தில் இருந்தார். காமராஜர் எதிரில் ஈர வேட்டியுடன் வரவும் தயக்கம். கடைசியில் காமராஜரே குடிசை உள்பக்க்கம் போக பரபரவென்று அரைகுறையாக காய்ந்திருந்த வேட்டியை சுற்றிக் கொண்டாராம். ஜீவாவுடன் பேசிவிட்டுத் தான் காமராஜர் வெளியே வந்தார்.

    நெஞ்சுவலி வந்து ஆசுபத்திரிக்குப் போகும் வழியில் ஜீவா கடைசியாகச் சொன்ன வார்த்தைகள்.. "பத்மாவதிக்குத் தந்தி கொடு. காமராஜருக்குப் போன் பண்ணு.."

    தோழர் ஜீவாவின் துணைவியார் பத்மாவதி அம்மையார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொது உடைமை இயக்த்தில் இருந்தவர்கள் பணம்சேர்த்ததாகப் படித்ததுநினைவே இல்லை இப்போதும் கூட இயக்கத்தில் இருப்பவர்கள் பலரும் இல்லாதவர்களே காமராஜர் பற்றிய செய்திகள் எவ்வளவோ இருந்தாலும் நான் முன்பு பணியாற்றிய பி எச் இ எல் நிறுவனம் திருச்சியில் வர அவரே காரணகர்த்தா என்றும்சொல்லுவார்கள்

      நீக்கு
  8. எனக்கு மாத சம்பளம் பத்தி வந்த துணுக்கு புரியல.
    மத்தபடி ரசித்தேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது சம்பள உயர்வை எதிர் நோக்கும் ஜனங்களைப் பற்றிய துணுக்கு

      நீக்கு
  9. ஜேம்ஸ் பாண்ட் ஜோக் இன்னுமா சுற்றிக் கொண்டிருக்கிறது? நான் சின்னப்ப பையனாயிருக்கும்போதிலிருந்து வருகிறது!! மற்றவையும் முன்னரே ரசித்திருக்கிறேன்.

    மலையாள நர்ஸ் இல்லாதது அவ்வளவு ஏக்கமா என்ன!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சின்னப் பையனாயிருந்தபோதே வந்து விட்டதா நானிப்போதுதான் படித்தேன் மலையாள நர்சுகள் அன்பானவர்கள் பரிவானவர்கள் அர்ப்பணிப்பு மிகுந்தவர்கள்

      நீக்கு
    2. ஆலங்கட்டி மழை காணொளியை இதற்கு முன்போட்டதில்லை

      நீக்கு
  10. சுவைக்கச் சிறப்பான தகவல்
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  11. வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி டிடி

    பதிலளிநீக்கு
  12. துணுக்குகள் ஏற்கெனவே ரசித்தவை! நல்ல பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆலங்கட்டி மழை காணொளி இப்போதுதான் பகிர்கிறேன் இதற்கு முன் பார்த்திருக்க வாய்ப்பில்லை

      நீக்கு