வியாழன், 19 ஏப்ரல், 2018

ஒரு திகில் அனுபவம் i


                                       ஒரு திகில் அனுபவம்
                                      -----------------------------------

ஒரு திகில் அனுபவம்
இவன் திருச்சி BHEL-ல்வேலைக்குச் சேர்ந்த புதிது. ஒரு சில நாட்கள் ஓட்டலில் தங்கிவிட்டு  பொன்மலைப் பட்டியில் ஒரு நண்பன்  மூலம் வீடு பார்த்தான் பழைய வீடாயிருந்தது கதவுகளிலும் கதவு நிலைகளிலும்  மரம் உளுத்துப்போனது போல் இருந்தது பக்கத்தில் ஒரு டெண்ட் கொட்டாய் இருந்தது மாலை வேளைகளில் பாட்டு கேட்கும்  மனைவி மற்றும் பிறந்து நான்கே மாதங்களுமான குழந்தையுடனும்தனிக் குடித்தனம்தொடங்கி விட்டான்  வாழ்க்கை படகு மெல்ல அசைந்து ஓடிக் கொண்டு இருந்தது ஒரு நாள் இரவு அழுது வடிந்து கொண்டிருந்த விளக்கு வெளிச்சத்தில் ஏதோ ஒன்று ஓடிக் கதவின்  பின்புறம் போவதைப் பார்த்ததாக இவன் மனைவி சொன்னாள் என்ன ஏது என்று தீர்க்கமாகச் சொல்லத் தெரியவில்லை வேகமாக நெளிந்து ஊர்ந்து சென்றது போல்இருந்தது என்றாள் என்னதான்  அது என்று வீடு முழுதும் தேடிப் பார்த்தும் எதுவும்  தென்படவில்லை சமையல் அறைக்கும் ஹாலுக்கும் நடுவில் இருந்த கதவு நிலையின்  அடியில் ஒரு ஓட்டை இருந்தது
அதன் உள்ளிருந்து அவ்வப்போது  ஏதோ வெளியில் தெரிவதும் உள்ளே போவதுமாய்
இருந்தது பாம்பின்  நாக்கு என்று எண்ணியவர்கள் மிகவும் பயந்து போய் விட்டார்களென்ன ஏது என்று தெரியாமல் கைக் குழந்தையை வைத்துக் கொண்டு , வீட்டில் பாம்பும்  இருந்தால் …..இவன் கையில் ஒரு கழியை வைத்துக் கொண்டு கதவருகில் காத்திருந்தான் அவ்வப்போது நாக்குதான்வெளியில்க் தெரிந்ததே தவிர அந்தப் பாம்பு வெளியே வரவில்லைஅந்தஒட்டையில் ஒரு நீளமான குச்சியை வைத்துக் குடைந்தான் நீளமான குச்சி உள்ளே போகும் அளவுக்கு ஓட்டையாக இருந்ததால்தால் தானோ என்னவோ  அது இன்னும் உள்ளே சென்றிருக்க வேண்டும்  ஊது பத்தியைக் கொளுத்தி ஓட்டைக் குள் புகை போகும் படிசெய்து பார்த்தும்   அது வெளியே வரவில்லை இரவு நேரம் போய்க் கொண்டிருந்ததுகுழந்தையை நடுவில் கிடத்தி இரண்டு பக்கமும் இவனும் இவன் மனைவியும்  படுக்க ஏற்பாடு செய்யப்பட்டது படுப்பதற்கு முன்  அந்தக் கதவின்  நிலையைச் சுற்றி மண்ணை அள்ளிப் போட்டு பரப்பினார்கள் கண அயர்ந்து தூங்கிவிட்டால், அது தெரியாமல் வெளியில் வந்து விட்டால் தடம் பார்த்து தெரிந்து கொள்ளலாமே  அன்றுஇரவு சிவ ராத்திரியாகக் கழிந்தது அது வெளியில் போனதற்கானதடம்தெரியவில்லை விடியற்காலை ஒரு பக்கம் இவனும் மறு பக்கம் அவளும்  அதுவெளியே வரக் காத்திருந்தனர் அவள் கையில் ஒரு கழி இவன் கையில் ஒரு இரும்புச் சட்டுவம்   அது எப்படியும்வெளியே வரும் வந்தவிடன் ஒரே போடு  என்பதாகப் ப்ளான் கண்களில் எண்ணையை  விட்டுப் பார்ப்பது போல்  கவனமாகக் கண்காணித்துக்  கொண்டிருந்தார்கள். அது உள்ளே தான் இருந்ததுவெளியில்  போன அடையாளம் ஏதுமில்லை  திடீரென்று அது வெளியில் ஓடியதுஎன்ன ஏது என்று பார்க்காமல் அந்த இரும்புச் சட்டுவத்தால் ஒரே போடு  வெளியே வந்த அது இரண்டாக  வெட்டுப்பட்டு இருந்தது இறந்த பார்த்தால் அது ஒருஅரணை !!!!         
        




26 கருத்துகள்:

  1. ஹா.. ஹா.. ஹா.. அரணை ஏகாதசியாக்கி விட்டதே...

    பதிலளிநீக்கு
  2. அரணைக்கே இந்த அக்கப்போரா?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த அக்கப்போர் அது அரணை என்று தெரியும் முன்பு

      நீக்கு
  3. திகில் அனுபவம் என்று தலைப்பை போட்டதால் என்னவோ இப்படி ஏதோ இருக்கும் என மனம் முன்பே நினைத்தது... ஆனால் படிக்க சுவையாகத்தான் இருந்தது

    பதிலளிநீக்கு
  4. பதில்கள்
    1. ஆனால் எத்தனை பயமுறுத்தி விட்டது தெரியுமா பாம்பு என்றே நினைத்திருந்தோம்

      நீக்கு
  5. பதில்கள்
    1. ஆனால் அது சாகும் முன் எங்களை பாவப் படுத்தியது

      நீக்கு
  6. அரணை சின்னதாத் தானே இருக்கும். இருந்தாலும் இரவு வேளை என்பதால் பயந்திருக்கீங்க! நேத்தித் தான் ஃபேஸ்புக்கில் பாம்புடன் ஆன அனுபவங்களைப் பகிர்ந்திருந்தேன். :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரணை சின்னதுதான் ஆனால் அதன் நாக்கு அதற்கு யமனாய் விட்டது பாம்பு பற்றி நானும் படிவு எழுதி இருக்கிறேன் சுட்டி தருகிறேன்

      நீக்கு
    2. பாம்பென்றால் சுட்டி இதோ http://gmbat1649.blogspot.com/2011/04/blog-post_11.html

      நீக்கு
    3. பாம்புடன் என்னோட அனுபவங்களே தனி! கிட்டத்தட்ட ஒண்ணாக் குடித்தனம் பண்ணி இருக்கோம்! :) இங்கே நீங்க பொதுவான கருத்துக்களையே பகிர்ந்திருக்கீங்க! என்னோட தனிப்பட்ட அனுபவங்கள்! :)))) அங்கேயும் கருத்தைப்பகிர்ந்திருக்கேன். :)

      நீக்கு
    4. நான் முகநூலில் உங்கள் பதிவுகளில் தேடினேன் கிடைக்கவில்லை

      நீக்கு
    5. என்னோட டைம்லைனில் இருக்காது. இன்னொருத்தரின் பதிவில் சொல்லி இருந்தேன். கிடைத்தால் பகிர்கிறேன். :)

      நீக்கு
    6. முடிந்தபோது நினைவிருந்தால்பகிரவும் நன்றி

      நீக்கு
  7. ஹாஹாஹா! நாங்கள் இப்போது சிரிக்கிறோம், நீங்கள் அப்போது எப்படி பயந்திருப்பீர்கள் என்று புரிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கைக்குழந்தையுடன் நிஜமாகவே பயந்திருந்தோம்

      நீக்கு
  8. அரணை தீண்டினாலும் நக்கினாலும் விஷம் தான். தரையில் படுத்து அயர்ந்து தூங்குவோர் காதுக்குள் நுழைந்து விட்டால் கேட்கவே வேண்டாம். பெரியவரகள் என்றால் கூட பரவாயில்லை. கைக்குழந்தையுடன்.. நீங்கள் பயந்ததில் நியாயமிருக்கிறது.. மொத்தத்தில் இது, 'ஹா... ஹா...' விஷயமில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது அரணை என்று தெரியவில்லை பாம்பு என்றே நினைத்துப் பயந்தோம் சில பல நிகழ்வுகளைப் பகிர்ர்ந்து வருகிறேன் அவை கற்பனைகளை விட சுவாரசியம்

      நீக்கு
    2. சொல்ல மறந்து விட்டேனே உங்கள் வருகையும் கருத்து ம் மகிழ்ச்சி தந்தது

      நீக்கு