மா வும் தென்னையும்
--------------------------------------
தென்னையும்
மா மரமும்
என்
வீட்டில் ஒரு மாமரம் இருப்பது பற்றி முன்பே எழுதி இருக்கிறேன் அது காய்க்கத் தொடங்கி விட்டது என்பதை நினைவு படுத்துதல் போல் பிள்ளைகளின் கல் வீச்சு தொடங்கி விட்டது நான் இப்போதெல்லாம்
கண்டு கொள்வதில்லை இந்த வயதில் தானே அவர்களால்
அதில்மகிழ்ச்சி அடைய முடியும் ஆனால்
என் கவலை எல்லாம் அவர்கள் எறியும் கல் யாருடைய மண்டையையும் பதம் பார்க்கக் கூடாது என்பதுதான் காய்கள் கனிந்துபழுக்கும்
போது மிகச் சிலவே எங்களுக்குக் கிடைக்கும் எனக்கும் என் மனைவிக்கும் அதைப் பறிப்பதே கடினமான வேலை எனக்கு இந்த அறுவைச்
சிகிச்சை முடிந்தபின் டாக்டர் படிகளில் ஏறுவதைத் தவிர்க்கச் சொல்லி இருக்கிறார் இரண்டு மரங்கள் இருக்கின்றன இரண்டு வெவ்வேறு வகைக்
காய்கள் அதில் ஒரு மரம் காய்ப்பதே அரிது இந்த
ஆண்டு அதிலும் சிலகாய்கள் இருப்ப்சதாக மனைவி கூறினார் பார்ப்போம் நமக்கு அதை ருசிக்க
வாய்ப்பு இருக்கிறதா என்று மரங்களில் காய் பறிக்க
யாருடைய உதவியையாவது நாடவேண்டும் மார்ச் 30 ம் தேதி அடித்த பலமான காற்றிலும் மழையிலும் பல காய்கள் விழுந்து விட்டன விழும் போது காயப்படுகின்றன வெம்பிப் போய் விடுகின்றன
வீட்டின்
முன் பக்கம் ஒருதென்னைஇருக்கிறது நன்கு காய்க்கக் கூடியது எங்கள் தேவை என் மக்களின் தேவை மற்றும் உறவுகள் சிலருக்கும் கொடுக்கப்படும் என்ன தொந்தரவு என்றால் மரத்திலிருந்து விழும் மட்டைகள்
சாலையில் விழும் யாராவது எடுத்துப்போய் விடுவார்கள் கவலை எல்லாம்மட்டை
யார்தலையிலாவது விழாமல் இருக்கவேண்டும் என்பதுதான் அதைக் காட்டியே வீட்டின் முன் பக்கம் வண்டிகள்நிற்க வைக்கப்படுவதைத் தடுக்கிறோம் இதில் ஒரு பிரச்சனை என்னவென்றால் முற்றிய காய்களைப்
பறிக்க ஆட்கள் கிடைப்பதில்லை ஒரு சிலர் நன்கு குடித்து விட்டு மரம் ஏற வருவார்கள் நாங்கள்
அனுமதிப்பதில்லை ஒரு சில மரமேறிகளின் தொலை
பேசி எண்கள் இருக்கிறது ஆனால் அவர்கள்தொலை தூரத்தில் இருந்துவர வேண்டும் சாலையில் போக்குவரத்து காலையிலேயே களை கட்டி விடும்முன்
தினமே அவரைத்தொடர்பு கொண்டு காய்பறிக்க வேண்டும் என்போம் அவர் அதிகாலயில் தொலை பேசியில் அழைத்துஅவரை எழுப்ப
கூறுவார் காய்கள் பறிக்கும் போதும் அவை சாலையில் யார் தலையிலும் விழாமல் இருக்க யாராவதுஒருவர்
நின்று பார்க்கவேண்டும் கீழே இருந்து பார்க்கும்
போது நிறைய காய்கள் இருப்பதுபோல் தெரியும்
ஆனால் அவர்பறித்துகீழே போடும்போது ஐம்பதுக்கு கீழே இருக்கும் இத்தனைக்கும்
மரமேறிக்கு ரூ 250/ம் கீழே
இருந்து கண்காணிப்பவருக்கு ரூ 100/ம் கொடுக்க
வேண்டும் கணக்குப்போட்டுப்பார்த்தால் ஒரு காய்பறிக்க ரூ ஐந்திலிருந்து ஆறுவரை ஆகு ம் அது தவிர மட்டை உரிக்க காய்க்கு ரூ 2 / கொடுக்க
வேண்டும்
உடலில்தெம்பு இருந்தால்
சிலபணிகளை நாமே செய்யலாம் என்று இருக்கும்
மார்க்கெட்டில் தேங்காய் விற்கும் விலையில் எல்லாம்
சரியாகி விடும் என்று தேற்றிக் கொள்ள வேண்டியதுதான்வீட்டின் முன் இருக்கும் தென்னை |
இங்கு உள்ளங்கையில் அடக்கும் அளவிற்கு உள்ள தேங்காய் இருபது ரூபாய் பெரிய தேங்காய் முப்பது முதல் நாற்பது வரைக்கும். கிலோ போட்டு கொடுக்கும் நடைமுறையும் வந்துள்ளது.
பதிலளிநீக்குமுதல் கருத்தே பின் வரும் பின்னூட்டங்களின் தொடக்கம் தேங்காயின் விலை பற்றி எழுதி இருக்கிறீர்கள்
நீக்குஇப்பொழுது தேங்காய் கிலோ முப்பது முதல் மும்பத்துஐந்து ரூபாய்வரை ஆகிவிட்டது ஐயா
பதிலளிநீக்குநான் சிறுவனாக இருந்தபோது தேங்காயை முழுதாக வாங்கிப்பார்த்ததில்லை பத்தையாகத்தான் வாங்குவார்கள்
நீக்குதென்னை மரம் மனதை கவர்கிறது...
பதிலளிநீக்குஇந்த புகைப்படம் டாக்டர் கந்தசாமி அவர்கள் என்வீட்டுக்கு வந்தபோது அவர் எடுத்தது
நீக்குதுளசி: வீட்டிலும் மா, தென்னை, (வீட்டிலுள்ள தென்னை தவிர தென்னந்தோப்பும் உண்டு அதிலிருந்து பறிக்கப்படும் காய்களை காய வைத்து வீட்டிற்குத் தேவையான எண்ணெய் எல்லாம் ஆட்டி எடுத்து வைத்துக் கொள்வதுண்டு. வீட்டில் மா, பலா உண்டு. வீட்டில் மரங்கள் இருப்பது மிகவும் நல்லதே. என்ன பராமறிப்பும், பறிப்பது எல்லாம் ஆள் வேண்டும்...
பதிலளிநீக்குகீதா: விலை சிறிய தேங்காய் என்றால் ரூ 20 கொஞ்சம் பெரிய தேங்காய் என்றால் 30, 35, 40 வரை போகிறது ஸார். தென்னை அழகாய் இருக்கிறது சார்...
கேரளத்தில் வீட்டுப் பின் புறத்தை கொடி என்பார்கள் அநேக வீடுகளில் கொடி இருக்கும் தேங்காய் வியாபாரம் செய்வதில்லையே என்னவிலை விற்றால்தானென்ன
நீக்குஇங்கு சந்தையில் சிறிய தேங்காய் 25 ரூபாய்.
பதிலளிநீக்குதென்னைமரம் ஏற ஆட்கள் இப்போது சரியாக இல்லை.
மரமேறிகள் கிடைப்பதே கஷ்டம்
நீக்குமா வும் தென்னையும் -- என்ற தலைப்பை நீங்கள்
பதிலளிநீக்குமாவும் தென்னையும் என்று தவறாக எழுதிவிடாத ஜாக்கிரதை
உணர்வை ரசித்தேன்.
நான் நினைத்துப்பார்க்காத கோணத்ட்க்ஹில் பின்னூட்டம் ரசித்தேன்
நீக்குதென்னை என்றால், அதிலிருந்து தேங்காயைப் பறிப்பது கடினம். எங்கள் அப்பா வீட்டிலும் இந்த அக்கப்போர் இருந்தது. என் வீட்டில் தேங்காயைப் பற்றிக் கவலையே படுவதில்லை (தென்னைமரம் அதுவாட்டு இருக்கு).
பதிலளிநீக்குஇரண்டு மரங்கள் இருந்தது ஒரு மரம் இடி தாக்கப் பட்டுப்போனது இப்போது இருப்பதுஒன்று மட்டும்தான் இருக்கும் மரத்தில் இருந்துதேங்காய் பறிப்பது தவறில்லையே
நீக்குதேங்காய்கள் பறிப்பதும், ஆட்களை அதற்கென வரவழைப்பதும் கடினமான வேலை தான். இப்போ எங்க அம்பத்தூர் வீட்டுத் தேங்காய்கள் எல்லாம் யார் யாரோ எடுத்துச் செல்கின்றனர். நாங்க இங்கே 25 ரூ அல்லது 30 ரூ கொடுத்துத் தேங்காய் வாங்குகிறோம். :( மாமரங்களை அக்கம்பக்கம் அபார்ட்மென்ட் கட்டும்போது சிமென்டைப் போட்டுச் சாக அடித்துவிட்டனர்! :(
பதிலளிநீக்குஇந்த மரங்கள் வீட்டில் வாடகைக்கு இருந்தவர்கள் வைத்தது 1980 களின் கடைசியில்
நீக்குமாமரம் - நெய்வேலியோடு மரங்கள் போச்சு..... இப்போது எதுவாக இருந்தாலும் வாங்கத் தான் வேண்டியிருக்கிறது.
பதிலளிநீக்குதேங்காய் - நம் ஊர் போல அளவு பார்த்து விலை அல்ல தில்லியில். சிறியதாக இருந்தாலும் பெரியதாக இருந்தாலும் ஒரே விலை தான் - இப்போது நாப்பது ரூபாய்!
எங்களுக்கு என்று தேங்காய் அதிகம் தேவையில்லை மரமிருப்பதால் விலை பற்றி கேட்டுத்தெரிந்து கொள்ள வில்லை
நீக்குஎன்னுடைய மாமா ஒருவர் வீட்டில் பங்கனப்பள்ளி மரம் இருக்கிறது. அதில் அவர் சர்வசாதாரணமாக அங்குமிங்கும் சுவர்களில் ஏறியும் அமர்ந்தும் பறிப்பாராம். பக்கத்து வீட்டுக் காரர்கள் ஆச்சர்யப்படுவார்களாம். வயது அவருக்கு 75க்கு மேல்.
பதிலளிநீக்கு2005 வரை நானே மரம் ஏறிப் பறித்துக் கொண்டிருந்தேன் டாக்டர் என்னிடமும் மனையிடமும் எச்சரிக்கை விடுத்தார் இப்போது நினைத்தாலும் முடியாது
நீக்குதேங்காய் பறிக்கும் கவலைகளையும் உறவினர் பகிர்ந்துகொண்டு கேட்டிருக்கிறேன். எங்கும் இதே பிரச்சனைதான்! சென்னையிலும் தேங்காய் விலை அதிகம்.
பதிலளிநீக்குஆட்கள்கிடைப்பதே கஷ்டமாக இருக்கிறது கிடைக்கும் தேங்காய் மாங்காய் பகிர்ந்து கொள்ளப் படுகிறது
நீக்குமகிழ்ந்தேன் ஐயா
பதிலளிநீக்குகும்பகோணத்தில் எங்கள் வீட்டில் தேங்காய் பறிக்க ஆரம்பத்தில் இருந்த நிலை பின்னர் காணப்படவில்லை. ஆளைத் தேட வேண்டியிருக்கும். முன்பு போல ஆள்கள் கிடைப்பதில்லை. தொடர்ந்து எங்களது தேங்காய்மீதான ஆசையை போகுமளவிற்கு ஆகிவிட்டது.
பதிலளிநீக்குதேகாயைப் பறிக்காமல் விட்டால் யார் தலை மீதாவதுவிழுந்து பிரச்சனைவரலாம் இல்லையா
நீக்குவீட்டில் - குறிப்பாக நகர்ப்புறத்தில் - ஒன்றிரண்டு தென்னையை வளர்ப்பதில் உள்ள சிரமங்களை அருமையாகச் சொன்னீர்கள். இதனாலேயே நானும் எங்கள் வீட்டில் ஆரம்பத்தில் இருந்தே தென்னை மரம் வைக்கவில்லை.
பதிலளிநீக்குதென்னையை தோப்பாக வளர்த்தால்தான் லாபம் கிட்டும்; மேலும் பராமரிப்பதிலும்.அதிக சிரமும் இருக்காது. வேலைக்கு ஆட்களும் கிடைப்பார்கள்.
இருப்பதோ கையளவு இடம் இதில் தோப்பாவதுஒன்றாவது இந்த மரங்களே வாடகைக்கு இருந்தவர்கள் வைத்து விட்டு போனது
நீக்குமா, தென்னையிருந்தும் மரமேறிப் பறிப்பவர்கள் கிடைப்பதில்லையா. என்ன கஷ்டம்?
பதிலளிநீக்குமாங்கனிகளையாவது பட்சிகளும், அணில்களும் பார்த்துக்கொள்ளும்! தேங்காய்களைப் பறித்தே ஆகவேண்டுமே..
தேங்காய்கள் பறிக்க முடியாவிட்டாலும்தேவலை ஆனால் யார் தலையில் விழுமோ என்னும் பயமே அவற்றைப் பச்றிக்க ஆட்களை தேட வைக்கிறது வருகைக்கு நன்றி சார்
நீக்குபெங்களூரில் தேங்காய் பறிப்பதற்கு ஆட்கள் கிடைக்க இத்தனை சிரமங்களா?
பதிலளிநீக்குஎங்கள் வீட்டுத் தோட்டத்திலிருப்பது குட்டை வகைத் தென்னை. இரண்டு வருடங்களுக்குப் பிறகு முதன் முதலாக இப்போதுதான் பூ விட்டுள்ளது.
குட்டை வகைத் தேங்காய்கள் என்றால் தொரடு கொண்டு பறித்து விடலாம்
நீக்கு