உபாதை கடைசி பாகம்
------------------------------------
இந்த உபாதைகள் பற்றிய பதிவுகளின் கடைசிக்கு வந்து விட்டேன் என்றே நினைக்கிறேன் நான் அனுபவித்த உபாதைகள் பற்றி கூறாவிட்டால் முழுமை பெறாது என்பதால் கட்டக்கடைசியாக இது அதேநேரம் இனியும் உபாதைகள் இருக்காதா எனத் தெரியவில்லை
2017ல்
செப்டெம்பர் மாதம் என்று நினைக்கிறேன் ராஜ நடை என்றுபெருமைப்பட்டுக் கொண்டிருந்த நான் என் நடையில் ஒரு தளர்வு ஏற்படுவதை உணர்ந்தேன் மாதமருந்துகளுக்கு பி எச் இ எல் மருத்துவமனைக்குச்
செல்லும் நான் அங்கிருந்த மருத்துவரிடம் இதனைத் தெரிவித்தேன் அவரும் என்னைஅங்கும் இங்கும் நடக்கச்சொன்னார் பிறகு ஒரு நரம்பியல் நிபுணர் பெயரும் மருத்துவ மனை பெயரும் கூறி அங்கு போய் காண்பிக்கச்
சொன்னார்
அந்த
நிபுணரும் என்னைப் பற்றி கேட்டுக் கொண்டார்
பிறகு என்னை எம் ஆர் ஐ பிரிவுக்கு அனுப்பினார் தைராய்ட் டெஸ்ட் செய்யச்சொன்னார்
வாசகர்களில்
யாராவது எம் ஆ ஐ டெஸ்டுக்கு ஆளாகி இருக்கிறீர்களா எனக்கு இரு முறை
எம் ஆர் ஐ எடுத்திருக்கிறார்கள் ஒரு முறை வீழ்வேன் என்று நினைத்தாயோ என்னும் பதிவில் கண்டபடி நான் வீழ்ந்தபோது மறு முறை என் நடை தளர்வதற்கான காரணம் அறிய.
ஒரு அனுபவம் . நம்மை ஒரு மெஷினுக்குள்
புகுத்துகிறார்கள் நாம் அப்போது அசையாமல் இருக்க வேண்டும் என்று கூறு கிறார்கள்
ஆனால் பாருங்கள் இந்தவிசித்திர நிலை. அப்போதுதான் நமக்கு உடம்பை அசைத்து வேறு நிலைக்கு வர தோன்றும் இருமல் வரும் தும்மல்வரும் இதை எல்லாம் அடக்குவது அதுவும்
கட்டாயமாக அடக்குவது எவ்வளவுசிரமம் என்பது அனுபவிக்கும் போதுதான் புரியும் மீறி அசைத்து
விட்டால் மீண்டும் ஆரம்பத்திலிருந்து தொடங்குவார்கள்
சுமார் 20 நிமிடங்கள் அசையாமலிருப்பது டார்ச்சர்
இந்த அவஸ்தைகள்நமக்கு இரண்டுமுறையும் எம் ஆர் ஐ ரிசல்டில் ஏதும் தெரியவில்லை
பிறகு இன்னும் பலடெஸ்டுகள் எதிலும்
பிடி கிடைக்காமல் பெயருக்கு ஏதோ மருந்துகள் கொடுக்கிறார்கள் என்னவோ இஞ்செக்க்ஷன் போடச்
சொன்னார்கள் அது பி 12 என்று தெரிந்தது இன்னும்
ஏதும் சரியாக வில்லை எதையாவது சொல்லி என் மனைவியின் துன்பத்தை அதிகரிப்பார்கள் என்றே தோன்றுகிறது எதுக்கும் டெஸ்டுகளெதுவும் குறிப்பிட்டகுறைகூற வில்லை மருத்துவரும் அவருக்குத் தோன்றிய மருந்துகளை எடுக்கச்சொல்கிறார்கள்
இன்னும் சகஜமாக நடக்க முடிவதில்லை
வாக்கிங் போய் பல நாட்கள் ஆகி விட்டன இருந்தாலும் நான் நடக்கப் போவது என்று உறுதியாக இருக்கிறேன் என்ன வென்றால்
என் நடையே மாறிவிட்டது கால்களை எடுத்து
வைக்ககொஞ்சம் எஃபர்ட் போடவேண்டும் என் பேரன்
சொல்கிறான் நான் தேய்த்து தேய்த்து நடக்கிறேனாம்
இன்னு ம் சரியான உணர்வு எனக்கு வர வில்லை பயணங்கள்
எனக்குப் பிடிக்கும் ஆனால் எங்கும் போகப் பிடிக்கவில்லை யாருடைய உதவியும்இல்லாமல் போக விருப்பம் ஆனால் தடை இருக்கிறது எம் ஆர் ஐ மெஷின் (படம் இணையத்தில் இருந்து ) |
பல நாட்களுக்குப் பின் அருகில் இருக்கும் நடை பூங்காவுக்குப் போனேன் காலையில் நடப்பதுதான் எனக்குப் பிடிக்கும்
நான்கு நாட்களாகத் தொடகிறேன் நடை பூங்காவில் உடற் பயிற்சி செய்ய சில உபகரணங்கள்நிறுவி இருக்கிறார்கள் இது வரை நான் பார்க்காதது என்ன விஷயம் என்றால் இந்த இரு நாட்களிலேயே சில உபகரணங்கள் பழுதடைந்து விட்டன
நடக்கும் போது எவ்வளவு தூரம்நடந்தேன் என்பதைகாட்டும் ஒரு கை பேசி என்னிடம் இருக்கிறதுதினம் சுமார் இரு கி மீ நடப்பதாகக் காட்டுகிறதுஅதைக் கொண்டுஒருபுகைப் படம் எடுத்தேன் அதுகீழே
நடக்கும் போது எவ்வளவு தூரம்நடந்தேன் என்பதைகாட்டும் ஒரு கை பேசி என்னிடம் இருக்கிறதுதினம் சுமார் இரு கி மீ நடப்பதாகக் காட்டுகிறதுஅதைக் கொண்டுஒருபுகைப் படம் எடுத்தேன் அதுகீழே
உடற்பயிற்சிக்காக நிறுவிய உபகரணங்கள் |
நடைப்பயிற்சி நோயின் எதிரி ஆகவே தொடர்ந்து நடந்து வரவும் ஐயா.
பதிலளிநீக்குநடப்பது சிரமம் என்றாலும் தொடர்ந்து நடக்கிறேன் வயதாவதால் வரும் உபாதையே என்று நினைக்கிறேன்
நீக்குநடைப் பயிற்சி நல்லது.
பதிலளிநீக்குவெளியில் நடக்க முடியாவிட்டாலும் வீட்டுக்குள் 8 போட்டு நடக்கலாம்.எட்டு மாதிரி நடக்க வேண்டும்.
முடிந்தவரை நடைப்பயிற்சி மேற் கொள்ளுங்கள்.
இரு சக்கர வண்டிக்கு லைசென்ஸ் எடுக்கும் போது எட்டு போடச் சொல்வார்களாமே அது போலவா வருகைக்கு நன்றி மேம்
நீக்குநடைப் பயிற்சி தொடருகிறீர்களா? நல்லது
பதிலளிநீக்குநடக்க முடிந்தால் உடல் நலம் என்று நினைக்கத் தோன்றுகிறது
நீக்குஉங்களின் தொடர்ந்த எழுத்து, வலைபதிவு முயற்சிகள் எனக்கு எப்போதும் வியப்பாக உள்ளது. நலம் பெற வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஐ ஆம் கீப்பிங் மைசெல்ஃப் இன்வோல்வெட் இன் சம் ஆக்டிவிடீஸ்
நீக்குஎழுதுவதில் வேண்டுமானால், கடைசி என்று பாகம் பிரித்து எழுதலாம்.
பதிலளிநீக்குஉபாதைகளுக்கு முடிவேது?..
உடல் உபாதைகளை விட மன உபாதைகள் தாம் ஆளைச் சாப்பிடும் உபாதை என்பது என் எண்ணம். மனமும் உடலில் இருக்கும் ஒரு உறுப்பு போலத் தான் எனத் தெளிவு கொண்டோருக்கு மன உபாதைகளை மிகமிக லேசாக்கி வெல்லவும் தெரியும்.
நான் முதுமை ஒரு தண்டனை என்றே நினைப்பதாலும் that which can not be cured must be endured என்று நினைப்பதாலும் உபாதைகள் பற்றி எழுதினாலும் அதிகம் கவலை இல்லை சார்
நீக்குநான்கு மாதம் முன்பு 'எம் ஆர் ஐ' - ஒண்ணரை மணி நேரம் "அனுபவித்தேன்"
பதிலளிநீக்குநானும் அனுபவிச்சிருக்கேன்.
நீக்கு@ டிடி நிறையப் பணமும் செலவாகிறதே ஒண்ணரை மணி நேரமா எனக்கு அத்தனை நேரம்பிடித்ததாகத் தோன்றவில்லை
நீக்கு@ ராஜி அந்தானுபவத்துக்குப் பின் டாக்டர் என்ன சொல்வாரோ என்பதை நினைப்பதே கொடுமை
நீக்குஎம் ஆர் ஐ கொடுமைதான். சீக்கிரம் நலமடைந்து விடுவீர்கள். உங்கள் தன்னம்பிக்கையே உங்களைச் சரிசெய்துவிடும்.
பதிலளிநீக்குநான் நலமாகத்தான் இருக்கிறேன் ஸ்ரீ
நீக்குவிரைவில் நலம்பெற வேண்டிக்குறேன்ப்பா
பதிலளிநீக்குநன்றிம்மா
நீக்குஇந்த எம் ஆர் ஐ பற்றி தெரியும் ஜி எம் பி ஐயா, ஆனா இதுவரை சந்தித்ததில்லை... நான் இதுபற்றி அறிந்தபோதே நினைத்தேன் எனக்கு அப்படி ரெஸ்ட் செய்ய வேண்டி வந்தால் உயிர்போனாலும் அதற்குள் போகப்போவதில்லை என... ஆனா நோய் என வந்தபின் மனம் ஏற்குமோ என்னவோ..
பதிலளிநீக்குஎனக்கு ஆடாமல் அசையாமல் படுத்திருப்பது பிரச்சனை இல்லை ஆனா அக்குழாய்க்குள் கடசிவரைக்கும் போக மாட்டேன்.. ஒரு பெட்டிக்குள் உள்ளே இருந்து மூடக்கூடப் பயம் எனக்கு..... இதுக்கு மயக்க மருந்து கொடுத்தால் நல்லது.. ஆனா கொடுக்க மாட்டினமாமே.... நினைக்கவே நடுங்குதெனக்கு.. இன்றிரவு கனவாக வந்து தொலைக்கப் போகுதே...:))..
நடக்க முடியவில்லை என எண்ணாமல் கஸ்டப்பட்டு நடவுங்கோ... இல்லை எனில் வீட்டில் ஒரு ரெட்மில் வாங்கி நடவுங்கோ... நோர்மலாகிடும்.
எல்லா ம் சரியாகிக் கொண்டு வரும் என்னை குறித்து யாரும் கவலைப் படுவது எனக்கு விருப்பமில்லை நன்றி அதிரா
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குமெதுவாக முடிந்தவரை இயல்பாகவே நடப்பது யாவருக்கும் நல்லது தான்.
நீக்குமுயற்சி திருவின்சையாக்கும் என்று நம்புகிறேன் சார்
நீக்குதாங்கள் விரைவில் முழு நலம் பெறுவீர்கள் ஐயா
பதிலளிநீக்குநான் நலமாகத்தான் இருக்கிறேனையா இதெல்லாம் வந்து போகும் தடைக்கல்கள்
நீக்குநடப்பது மனிதனை சுதந்திரமாக உணரச் செய்யும். விரைவில் மீண்டும் பழையபடி நடக்க உங்கள் நம்பிக்கை உங்களுக்கு ஊக்கமாக இருக்கும். பி.12 பெரும்பாலும் மாமிசம் உண்ணாதவர்களுக்கு உண்டாகும் குறைபாடு என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
பதிலளிநீக்குநடக்க முடிந்தால் நம்பிக்கை வரும் சரியாகச் சொன்னீர்கள்
நீக்குநானும் சமீபத்தில் போய் வந்தேன்
பதிலளிநீக்குஉண்மையில் அது நினைவுறுத்தக்
கூடாததை நினைவுறுத்த
கொஞ்சம் மனமுதிர்ச்சி வந்தது போல்
இருந்ததும் உண்மை
உங்கள் மன முதிர்ச்சியும்
மனோபலமுமே உங்கள் ஆளுமை
நலமுடன் வாழ வாழ்த்துக்களுடன்
நன்றி சார் இப்போது மதுரையா நியூஜெர்சியா
நீக்குஜிஎம்பி ஸார் தாங்கள் மீண்டும் நலம் பெற்றுவிடுவீர்கள். உங்கள் தன்னம்பிக்கை உங்களுக்குக் கை கொடுக்கும். விரைவில் நன்றாகவே நடப்பீர்கள் சார். எம் ஆர் ஐ அனுபவம் எல்லாம் இதுவரை ஏற்பட்டதில்லை.
பதிலளிநீக்குகீதா: சார் எம் ஆர் ஐ ஸ்கான் அனுபவம் உண்டு. உள்ளுக்குள் சென்றதும் ஏதோ மூச்சு திணறுவது போன்று இருக்கும்...எனக்கு அப்படி இருந்தது.. ஆனால் உடனே நீண்ட மூச்சுப் பயிற்சி போலச் செய்து ரிலீவ் செய்து கொண்டேன். ஆனால் மற்றபடி எனக்கு ஒன்றும் தோன்றவில்லை. கண்ணை மூடிக் கொண்டு எந்தவித சிந்தனைகளுக்கும் என்னை ஆட்படுத்திக் கொள்ளாமல் நிதானமாக மூச்சை நன்றாக இழுத்துவிட்டுக் கொண்டு இஷ்ட தெய்வத்தை நினைத்துக் கொண்டு கண்ணை மூடிக் கொண்டு அவ்வளவே. எனக்கு சிரமமாகத் தோன்றவில்லை.
சார் நடைப்பயிற்சியை மெதுவாகத் தொடருங்கள் நல்லதே..விரைவில் நலம் பெற்றுவிடுவீர்கள். நல்லதே நடக்கும்...
கீதா ரங்கன்... இவைகளைப் பற்றிப் படிக்கும்போது பயம் வருவதென்னவோ நிஜம்.
நீக்குசிரமம் என்றெல்லாம் சொல்லவில்லை அந்த நேரத்திய கட்டுப்பாடுகளைத்தான் சொன்னேன் நீங்கள் அனுபவிக்காத்சதே இல்லையா
நீக்கு@நெத பயமே நோய்களின் முதல் எதிரி
நீக்குஎம்.ஆர்.ஐ என்றால் எனக்கு சற்றே கிலிதான். அனுபவப் பட்டிருக்கிறேன்.
பதிலளிநீக்குநடைப் பயிற்சியை மீண்டும் ஆரம்பித்திருப்பது நன்று, தொடருங்கள்.
கிலியாவதற்கு ஒன்றுமில்லை சிறிது நேரம் அசைவில்லாமல் இருப்பதே பாடு
நீக்கு
பதிலளிநீக்குடாக்டரிடம்போய் நாம் ஏதாவது சொன்னால், அவர்களும் தங்கள்படிப்பிற்கேற்ப சில டெஸ்ட்டுகள், மருந்துகள் என்பார்கள். இன்ஷூரன்ஸ் கவரேஜ் இருக்கிறது என்பதனால், சிலர் அடிக்கடி கோவிலுக்குப் போவதுபோல் டாக்டரிடமும் போய் வருவார்கள்.
MRI : க்யூபாவில் ஒருமுறை இந்த அனுபவம். உள்ளே போனேன். வெளியேயும் வந்தேன் என்பதைத்தவிர வேறொன்றும் சொல்வதற்கில்லை.
வேகமாகவோ, மெதுவாகவோ - தினசரி நடப்பது என்பது பொதுவாக நல்லது. எத்தனை நேரம் நடக்கிறோம், எப்படி நடக்கிறோம் என்பது ஆளாளாக்கு மாறும்.
வருகைக்கு நன்றி சார் தினசரி நடந்து கொண்டிருந்தேன் நடுவில் சில நாட்கள் தடைபட்டதுஇப்போதுமீண்டும் துவங்கி விட்டேன்
நீக்குதங்கள் தன்னபிக்கை தான் தங்களின் பலமே...
பதிலளிநீக்குநலம் வாழட்டும்..
வாழ்த்துக்கு நன்றி மேம்
நீக்குநிதானமான, மெதுவான நடையே சிறந்தது ஐயா. உங்களின் தன்னம்பிக்கையை நாங்கள் அறிவோம்.
பதிலளிநீக்குஎப்படியோ நடக்கிறேன் அதுதான் இப்போது முக்கியம்
நீக்குநடை நல்லது.... ஒரு மாதத்திற்கும் மேலாக நானும் நடக்கிறேன் - வீட்டின் அருகே இருக்கும் தால்கட்டோரா பூங்காவில்!
பதிலளிநீக்குஉடல் நலம் சரியாயிருந்தால் மணிக்கு ஆறு கி மீ வேகத்தில் நடக்க வேண்டும் அதுவே உடற்பயிற்சியாகும் வருகைக்கு நன்றி சார்
நீக்குநடை நல்லது தான். ஆனால் எட்டில் நடந்தால் சிலருக்குத் தலைசுற்றல் வருகிறது. கவனம் தேவை. எனக்கு ஸ்கானிங் என்றாலே பயம் தான். அதுவும் எம்.ஆர்.ஐ! கடவுளே! :(
பதிலளிநீக்குஎன்னைப் பொருத்தவரை நன்கு நடக்கமுடிந்தால் ஆரோக்கியமாக இருப்பது போல் இருக்கும்
நீக்குஇதுவரை நாலுமுறை ஆச்சு. ரெண்டாம் முறை போனது இங்கே :-)
பதிலளிநீக்குஅது ஆச்சு 13 வருசம் !
http://thulasidhalam.blogspot.com/2005/05/mri.html