Tuesday, March 30, 2021

தூசிதட்டி

 


வரதட்சிணை

 


“ பெண்ணைப் பெற்றவர் பிள்ளையை விலைக்கு வாங்கும் கொடுமைக்குக் கௌரவமான பெயர் வரதட்சிணை. வரும் வரனுக்கு தட்சிணை என்று அர்த்தமும் செய்து கொள்ள முடியவில்லை. ஏனென்றால் பிள்ளை பெண்வீட்டுக்கு வருவதில்லை. பெண்தான் பிள்ளையின் வீட்டைப் புகுந்த வீடாக ஏற்றுப் போகிறாள். பெண்ணையும் கொடுத்துக் கூடவே பொருளையும் இழக்க வேண்டிய ஒரு இழிவான நிலையில்நம் சமுதாயத்தில் எத்தனைக் குடும்பங்கள்தான் அல்லல் பட்டிருக்கின்றன. ஆண்டவனின் படைப்பில் மனித குலம் தழைக்க சம பங்கேற்கும் பெண்ணினம் பிறப்பதையே அஞ்சி நடுங்கும் நடுத்தரக் குடும்பங்கள் எத்தனை எத்தனை.இதற்கெல்லாம் அடிப்படைக் காரணங்கள் எதுவாயிருந்தாலும் அவை எல்லாம் காலப்போக்கிலும் வளர்ந்து வரும் சமுதாயக் கண்ணோட்டத்திலும் மாற வேண்டாமா.?ஆதியிலே நம் நாட்டில் வர்ணபேத அடிப்படையில் சமூகம் இயங்கியது. இன்று தகர்த்தெறிய்ப்பட்டுக் கொண்டு இருக்கவில்லையா. வர்ண பேதங்களினால் சமூகத்தில் ஒரு பகுதியினர் அடக்கி ஒடுக்கப் பட்டு இருந்தனர். அவர்களே அதை உணர்ந்து போராடி ஜாதிமத பேதமற்ற சமுதாயத்தை
                

சிருஷ்டிக்கும்  போது  இது என்ன மட்டமான போலி சம்பிரதாயம். ஆணுக்குப் பெண்.அடிமையா. இதற்கு முடிவு கட்ட வேண்டாமா.?நாமெல்லாம் இங்கு கூடி கருத்துப் பறிமாறுகிறோம். வாய் கிழியப் பேசுவோம். அவ்வளவுதானா.?இதுவரையில் இந்த அளவில்தான் நடந்திருக்கிறது. இனிமேல் இதற்கு ஒரு மாற்றம் தேவை. நம் எண்ணத்திலும் பேச்சிலும் தூய்மை உண்டென்று நாம் உண்மையில் நம்பினால் அதைச் செயலில் காட்டத் தயக்கம் ஏன்.?பெண்ணினத்தவராகிய நாம் வரதட்சிணை கொடுக்கக் கூடாது. என்று முழங்கும்போது, ஒன்றைமட்டும் மறந்து விடக்கூடாது. வரதட்சிணை கேட்கவும் கூடாது. இந்தப் போலி சம்பிரதாயமும் வறட்டுக் கௌரமும் தொடர்ந்து நீடிக்க நாம்தான் காரணம். ஏனென்றால் நம் பிள்ளைகளுக்கு நாம்தானே சீர்வரிசையும் வரதட்சிணையையும் எதிர் பார்க்கிறோம். பெண்பிறந்தது என்றால் சுணக்கமும் பிள்ளை பிறந்தது என்றால் மகிழ்ச்சியும் அடைவதும் நாம்தான். இந்த ஒரு உணர்ச்சி நம் ரத்தத்தில் ஊறி ஆணுக்குப் பெண் தாழ்ந்தவள் என்ற ஒரு திடமான ஆனால் தவறான மனப்பான்மையை வளர்த்துவிட்டது. ஆணும் பெண்ணும் சமம் என்று நாம் உண்மையிலேயே நம்ப வேண்டும். அந்த நம்பிக்கையில் உள்ளத் தெளிவு காண வேண்டும். ஆணைப் போல் பெண்ணையும் வளர்க்க வேண்டும். பெண்குழந்தைகளுக்கு வீண் பயத்தையும் போலி அடக்கத்தையும் புகட்டாமல் பாரதி சொன்னபடி,நிமிர்ந்த நடையும் நேர் கொண்ட பார்வையும் ‘கொண்டவர்களாக வளர்க்க வேண்டும். வாழ்க்கைப் பொறுப்பைத் தேடிக்கொள்ள சம உரிமை அளிக்க வேண்டும். அதற்கு முக்கியமாக வேண்டியது நெஞ்சுரமும் தன் நம்பிக்கையும். இவை வளர உலகப் பொது அறிவு வளர வேண்டும். அதற்கு கல்வி அவசியம். அந்தக் கல்வி வளர்ச்சியும் பகுத்தறிவும் வளர்ந்தால் நம் பெண்களுக்கு  தேவைப்பட்டால் வாழ்க்கையில் தனித்தியங்கும் நம்பிக்கையும் துணிவும் வளரும். வரதட்சிணை என்னும் கட்டாயக் கொடுமைக்கு ஆட்பட்டு அல்லல் படுவதைவிட இம்மாதிரி தனித்தியங்குவதையே பெண்கள் விரும்புவார்கள் என்ற நிலை வந்து விட்டால்வரதட்சிணை கேட்பவர்கள் இருக்க மாட்டார்கள். பிறருக்குப் பாரமாக இல்லாமல் ஒரு பெண் அவளுடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்ள கல்வியும், பக்குவப்பட்ட மன முதிர்ச்சிக்கு வயதும் முக்கியம். பெண்கள் கட்டாயமாகக் கல்வி கற்க வேண்டும். அவர்களாக அவர்கள் வாழ்க்கையை அமைக்கும்வரை திருமணம் செய்து கொள்ளக்கூடாது. ஒரு ஆண் படித்து முடித்ததும் மணம் செய்து கொள்வதில்லை. ஒரு வேலையில் அமர்ந்துநிரந்தர வருவாய் உண்டுஎன்று நிச்சயப்பட்ட பின்புதான் மணவினை பற்றிச் சிந்திக்கிறான். இது ஒரு பெண்ணுக்கும் பொருந்த வேண்டும்.

பெண்கள் இருபது இருபத்திரண்டு வயதுக்கு மேல்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு மனப் பக்குவம் அப்போதுதான் இருக்கும். கல்வி கற்றவர்கள் அவர்களது சொந்தக் கால்களில் நிற்கத் துணிவு பெற வேண்டும்.

பெண்களை பாரமாக நினைக்காமல் ஆணும் பெண்ணும் உண்மையில் சமம் என்று நம்பி , வரதட்சிணை வாங்கவும் கூடாது. கொடுக்கவும் கூடாது. என்று நாமே ஒரு நல்ல முடிவு எடுத்துக் கொண்டு முயல்வோமேயானால்நம் சமூகத்திலிருந்து, வரதட்சிணை என்னும் காட்டுமிராண்டித்தனமான

உளுத்துப்போன கொடிய பழக்கம்நிச்சயம் ஒழியும். அதை ஒழிக்க வேண்டியது நம் எல்லோருடையக் கடமையும் ஆகும்.இந்த நேரத்தில் ஏன் நாம் அதைஒரு பிரதிக்ஞையாக எடுத்துக் கொள்ளக்கூடாது.?

(1970-களின் முற்பகுதியில் எழுதியது இது. சுமார் நாற்பது வருடங்களுக்குப் பின்னும் நிலைமை மாறி

 ருக்கிறதா.? எனக்கென்னவோ மாற்றங்கள் இருந்தாலும் போதிய அளவு இல்லை என்றே தோன்றுகிறது. பூவையர்கள் என்ன நினைக்கிறார்கள்.?)

ஆல் இந்தியா ரேடியோ திருச்சியில் பூவையர் பூங்கா நிகழ்ச்சியில்  என் மனை வி பெசியது

 

Sunday, March 28, 2021

நாம் இந்தியர்கள்

 


நாம்இந்தியர்கள் சில விசேஷ குணங்கள்

 நான் ஒரு இந்தியன்

பாட்டிலில் ஷாம்பூ காலியான பிறகு அதில் சிறிது தண்ணீர் ஊற்றி கலக்கி இன்னும் ஒரு குளியலுக்கு அதை உபயோகிப்பேன்.
பற்பசை காலியானாலும் அதைத் தட்டி தகடாக்கி சுருட்டி எல்லாப் பேஸ்ட்டையும் வெளியில் எடுப்பேன்.
இருநூறு ரூபாய்க்குக் காய்கறிகள் வாங்கினாலும் கொஞ்சம் கொத்துமல்லித் தழை கொசுராக வாங்குவேன்.
கிடைத்த பரிசுப் பொருட்களையே மீண்டும் பரிசாகக் கொடுக்க அது பொதிந்து வந்த வண்ணத் தாளையே உபயோகிப்பேன்.
என் வீட்டில் இருக்கும் விலை உயர்ந்த bone chjna கோப்பை, தட்டுகளை விருந்தினர் வரும்போதுமட்டும் வெளியில் எடுப்பேன்.
ஒரு பொட்டுத் தங்கம் வாங்கும் எண்ணம் இல்லாவிட்டாலும் கூட அதன் விலை ஏற்றம் பற்றிக் கவலை கொள்வேன்.
TV ரிமோட்டைத் தட்டித் தட்டி அதன் உயிர் எடுப்பேன். புது பாட்டரி வாங்காமல் காலம் கழிப்பேன்.
விருந்துக்குப் போகுமுன் பட்டினி கிடந்து வயிற்றைக் காலியாக வைத்துக் கொள்வேன்
என்னுடைய T ஷர்ட் பழையதானால் அதை இரவில் உடுத்துவேன். இன்னும் பழையதானால் ஹோலி அன்றைக்கு உடுத்துவேன். இன்னும் பழையதானால் வீடு துடைக்க உபயோகிப்பேன்.

நாம் இந்தியர்கள்.
----------------
ஆண்குழந்தைக்காக வேண்டுவோம். பெண்சிசுக்களை வேண்டோம்.முடிந்தால் கருவிலேயே அழிப்போம். பெரியோர்களின் ஆசியும் ஆண்மகவுக்கே பெண்ணுக்கல்ல.
ஆனால்
செல்வம் வேண்டுமென்றால் மஹாலக்ஷ்மியை வேண்டுவோம்.
கல்வி வேண்டுமென்றால் சரஸ்வதியை வேண்டுவோம்.
துக்கங்களில் இருந்து நிவாரணம் கிடைக்க  தாய் சக்தியை நாடுவோம்
பேய் பிசாசுகளில் இருந்து பயம் அகல காளிமாதாவை தரிசிப்போம்.
நாம் இந்தியர்கள். WE ARE HYPOCRITES.!

 

 

 

 

 

 


Friday, March 26, 2021

கண வன் மனைவிகள்

 


 கணவன் மனைவிகள் என்று  படித்த சிலவற்றைப் பகிர்கிறேன். All in lighter vein.!  

 
மனைவி..:-மணலில் உன் பெயர் எழுதினேன்

          கடலலையில் கரைந்து மறைந்தது.

          காற்றில் உன்பெயரை எழுதினேன்

          புயலில் அது காணாமல் போய்விட்டது.

          பிறகென் இதயத்தில் அதை எழுதினேன்

          எனக்கு இதய வலியே மிஞ்சியது. !( ஹார்ட் அட்டாக்)

 

கணவன்..:_ பசியில் இருந்தேன் கடவுள் பிஜ்ஜா படைத்தார்.

           தாகத்தில் இருந்தேன் கடவுள் பெப்ஸி படைத்தார்.

           இருளில் இருந்தேன் கடவுள் ஒளியைப் படைத்தார்.

           சோதனை. வேதனை ஏதுமின்றி இருந்தேன்

           கடவுள் உன்னைப் படைத்தார்.

கணவன்.:- மழை எல்லாவற்றையும் அழகாக்குகிறது.

           புல்லிற்கும் பூவுக்கும் புத்தொளி தருகிறது.

           மழை எல்லாவற்றையும் அழகாக்குகிறது

           உன் மேல் மட்டும் மழை ஏன் பெய்வதில்லை. 

கணவன் ஒரு குடும்பத்தின் தலைவன் என்றால்.

மனைவி என்பவள் அவனது கழுத்து.

அது திரும்பும் திசை நோக்கியே அவன் செல்வான்

                ---------------------

 

நரகத்தில் இருந்து ஒருவன் அவனது மனைவியை தொலை பேசியில் அழைக்க சாத்தானிடம் அனுமதி கேட்டான். பேசிமுடித்தவுடன். எவ்வளவு பணம் தர வேண்டும் என்று கேட்டான். நரகத்திலிருந்து இன்னொரு நரகத்துக்குப் பேச காசில்லை. ஃப்ரீ என்றது சாத்தான்.

மனைவி.:- நான் ஒரு நாளிதழாக இருந்தால் எப்போதும் உன் கையில்

           இருக்கலாமே.

கணவன்.:- நானும் அதை விரும்புவேன். தினமும் புதிதாய்க் கிடைக்குமே.

மருத்துவர்.:- உங்கள் கணவருக்கு ஓய்வும்  அமைதியும் தேவை.இதோ சில தூக்க மாத்திரைகள்.

மனைவி.:- இதை அவருக்கு எப்போது கொடுக்க வேண்டும்.?

மருத்துவர்.:- இவை அவருக்கல்ல. உங்களுக்கு

                     -----------------------

 

மனைவி.:- நீங்கள் எந்த அளவு முட்டாள் என்று தெரிந்து கொள்ள உங்களைத்

           திருமணம் செய்ய வேண்டி இருந்தது.

கணவன்.:- நான் உன்னைத் திருமணம் செய்து கொள்ளக் கேட்டபோதே  

           தெரிந்து இருக்க வேண்டுமே.

                   ----------------------------

 

மனைவி.:- நான் எவரெஸ்டின் உச்சியில் ஏறினால் என்ன தருவாய்.?

கணவன்..:- அங்கிருந்து ஒரே தள்ளு.


Husband
: Do you know the meaning of WIFE?
It means, 
Without Information, Fighting Everytime!
Wife
: No darling, it means - 
With Idiot For Ever 

 

 

 

 

 

 

 

                 ---------------------------


Thursday, March 25, 2021

sivasankarbaba


 கேளம்பாக்கம் நிலாங்கரையில்சிவசங்கர் பாபவை சந்தித்திருக்கிறோம்2000 ஆண்டுகளின் ஆரம்பத்தில் பறவைகளி ன் மொழிதெரிந்தததாக கூறும்   யாகாவா முனிவரின்  நினைவும்  கூடவே வருகிறதுபாபா எங்களை அன்புட ன்  வரவேற்றார்   பெங்களூரில்  இருந்து  வருகிறோம்   என்று  தெரிந்ததும்   மகிழ்ந்தார்நன்றாக உரையாடினார்  கூல் ட்ரின்க்ஸ் கொடுத்து உபசரித்தார்அவரது செல்வாக்கு  பெருக  ஆரம்பித்தநேர ம் நடிkஅர் விவேக்  மூலம்  பலருக்கும் தெரிந்தி ருக்கலாம்  அவரைப் பற்றி நியூசி  பதிவர் துள்சி கோபாலும்   எழுதி இருக்கிறார் நன்கு படித்தவர் ஆன்மீகத்தில் கலக்குகிறார்முன்பெல்லாம் நடனம் ஆடுவார்  இப்போதுதெரியவில்லை
Sunday, March 21, 2021

என் மனைவி

 


 

  பொழுது விடிந்துவிட்டதா.? தெரியலியே...பொழுது விடிவதை சேவல் கூவக் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்பார்கள். நகரங்களில் சேவலாவது கூவுவதாவது. சில நாட்கள் முன்பு வரை அதிகாலையில் வீட்டின் பின்புற மரத்திலிருந்து குயில் கூவும். ஆனால் குயில் கூவுவதைக் கேட்டு விடிந்துவிட்டதா என்று தீர்மானிக்க முடிவதில்லை. அவை சில அகால நேரங்களிலும் கூவுகின்றன. அவள்  புரண்டு படுத்தாள். உடம்பு ஒரு கடிகாரம் மாதிரி. பழக்கப் பட்ட காரியங்களுக்குக் கட்டுப் படும்

பொதுவாக விழிப்பு வந்தாலேயே பொழுது விடிந்து விட்டது என்று அர்த்தம். சாலையில் நடமாட்டங்கள் அதிகரிக்கத் தொடங்கும். ஐடி கம்பனிகளில் வேலை பார்ப்போரைக் கூட்டிப் போக வரும் கார்களின் சத்தம் கேட்கத் துவங்கும். அடுத்து இருக்கும் பால் வினியோகக் கடைக்குப் பால் வண்டி வந்த சப்தம் கேட்கிறது. பக்கத்துவீட்டு நாய் தன் எஜமானைக் கூப்பிடக் குரைக்கும் வித்தியாசமான சப்தம் கேட்கிறது. பாவம் அது. வாயில்லா ஜீவன். அதற்கும் காலைக்கடன்கள் இருக்கிறதே. அதன் எஜமானர் அதட்டிய படியே அதன் சங்கிலியை கட்டியிருந்த தூணிலிருந்து அவிழ்க்கும் சத்தம் கேட்கிறது. நிச்சயம் விடிந்து விட்டது என்று நினைத்த அவள்  மீண்டும் ஒருக்களித்துப் படுத்துக் கொண்டாள் .மங்கிய வெளிச்சத்தில் அருகில் படுத்திருக்கும் கணவனைப் பார்க்கிறாள்.  இந்த அதிகாலைச் சப்தங்கள் அநேகமாக அவர் கேட்டே இருக்க மாட்டார்..பாவம் இந்த அதிகாலைத் தூக்கம்தான் அவருக்குத் தெம்பு கொடுக்கும். 

 

அவள் கட்டிலை விட்டு இறங்கினாள். அவிழ்ந்திருந்த முடியைப்பின் தலையில் அழுத்திக்கட்டினாள். இன்றைக்குச் செய்ய வேண்டிய அலுவல்களை ஒருதரம்மனதில் ஓட்டிப் பார்த்தாள். என்ன ஸ்பெஷல் அலுவல் இருக்கப் போகிறது. காலைக்கடன்களை முடித்து பக்கத்தில் இருக்கும் பால் வினியோகக் கடைக்குச் சென்று பால் வாங்க வேண்டும். அடுப்பை பற்ற வைத்து நீரைக் கொதிக்க வைத்து காஃபி டிகாக்‌ஷன் இறக்க வேண்டும் அவள் கணவனுக்குக்  காஃபி திக்காக சுவையாக ஃப்ரெஷாக இருக்கவேண்டும் கீசரை ஆன் செய்து காலையில் குளித்து முடித்தவுடன் அணிய வேண்டிய உடுப்புகளை பாத் ரூமில் வைத்தாள். குளிக்கப் போகுமுன் ஸ்தோத்திரப் பெட்டியை ஆன் செய்து அதிலிருந்து வரும் பாட்டுக்களைக்கேட்டுக்கொண்டே குளிப்பதுடன் கூடவே வாய் தலைக்குத் தண்ணீர் ஊற்றும்போது

 

“ அதிக்ரூர மஹாகாய கல்பாந்த தஹனோபம்

பைரவாய நமஸ்துப்யம் அனுஜ்ஞாம் தாதுமர்ஹஸி

கங்கே ச யமுனே சைவ கோதாவரி ஸரஸ்வதி

நர்மதே ஸிந்து காவேரி ஜலேஸ்மின் ஸன்னிதிம்குரு

முணுமுணுக்கும்.. அவளது கணவன் பொருள் தெரியாமல் வாய் ஏதேதோ முணுமுணுப்பதால் என்ன லாபம்?அர்த்தம் தெரியாத வேண்டுதலில் அர்த்தம் கிடையாது”’ என்று சீண்டுவான்.அவளும் “ என்ன அர்தமாயிருந்தால் என்ன.?தலைக்குத் தண்ணீர் ஊற்றும்போது இந்தப் புண்ணிய நதிகளின் நீர் என் தலையில் விழுவதாக நான் கற்பிதம் செய்கிறேன்” என்பாள், அவர்கள் வீடு கட்ட முனைந்தபோதுநீர்நிலை ப்லாட்டின் எந்த பகுதியில் இருக்கும் என்று தெரியாமல் தவித்தனர். வாட்டர் டிவைனரைக் கூப்பிடலாம் என்று சிலர் கூறினர். அவள்தான் அந்த யோசனையை நிராகரித்து விட்டாள். ப்லாட்டின் நடுவில் நீர்நிலை இருக்கிறது என்று சொல்லிவிட்டால் அங்கு போர்(bore) போட முடியுமா.?இடத்தின் ஒரு ஒதுக்குப் புறத்தில் bore  போடுவோம்.குளிக்கும்போது நான் வேண்டும் அந்தப் புண்ணிய நதிகள் போரிலிருந்து நீராய்ப் பிரவகிக்கும் என்று தீர்மானமாய்க் கூறினாள், bore தோண்டி இனிப்பான தெள்ளிய நீர் ஊற்றிலிருந்து வெளிவந்து கொட்டியபோது அவளது கணவனும் வாயடைத்து விட்டான். ஆனால் பதினைந்து வருடங்களுக்குப் பிறகு போரிலிருந்து நீர் வராதபோது  புண்ணிய நதிகள் வற்றிவிட்டனவா என்று மீண்டும் கேலி பேசத் தொடங்கினான். அவளும் சும்மா இருக்கவில்லை. “போரிலிருந்து நீர் வராவிட்டாலும் குழாய் மூலம் இப்போது காவேரி தானே வருகிறாள்என்று வாதாடுவாள்

 

இவள் என் மனைவிதான்...... இருந்தாலும்
               

 
இவள் ஒரு சராசரி நடுத்தர வர்க்கத்துப் பெண்/ அறிவு ஜீவி என்று சொல்ல முடியாவிட்டாலும் புத்திசாலி வட்டத்துக்குள் வருபவள். இவளது வாழ்வே கணவன் பெற்ற குழந்தைகள் உறவினர்கள் போன்றோரோடு பின்னிப் பிணைந்தது. இவளைப் பொறுத்தவரை எல்லோருமே நல்லவர்கள். , அழகானவர்கள். பொதுவாக எல்லோரும் நல் வாழ்வு வாழ வேண்டும் என்று எண்ணம் கொண்டவள்.

இள வயதில் குடும்பத்துக்கு உழைத்தே ஓடானவள். இப்படியெல்லாம் இருப்பவளுக்கும் சில தனிப்பட்ட ஆசைகளோ கருத்துக்களோ இருக்க வேண்டும் அல்லவா. எந்த வேலையாய் இருந்தாலும் காலையில் அருகில் இருக்கும் கோயிலுக்குச் செல்ல வேண்டும். அங்கு சென்று என்னதான் பிரார்த்திப்பாளோ அது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.செல்லும் பல கோயில்களில் கருவறையில் எண்ணை விளக்கில் கடவுளின் திரு உருவம் தெரிவதில்லை என்றால் நீங்கள் ஊனக் கண்ணால் பார்க்கிறீர்கள். மனக் கண்ணில் உருவம் ஜகத் ஜ்யோதியாய்த் தெரிகிறது என்பாள். 

சிறுவயதிலிருந்தே கோயில்களுக்குச் சென்று வழிபடுவதில் இவளுக்குத் தனி சுகம். எப்போதும் மனதில் ஏதாவது ஸ்லோகம் ஓடிக்கொண்டே இருக்கும். தவறிப் போயும் அந்த சுலோகங்களுக்கு அர்த்தம் கேட்கக் கூடாது, அவளாக ஒரு அர்த்தம் புரிந்து கொண்டு சொல்லிக் கொண்டிருப்பாள். வாயில் நுழையாத வடமொழி சுலோகங்களை அவளுக்குத் தெரிந்தபடி உச்சரிப்பாள். வடமொழி மட்டுமல்ல. தமிழிலும் சொல்வது எல்லாவற்றுக்கும் பொருள் தெரியும் என்று சொல்ல முடியாது. வாழ்வில் இவளுக்கு லட்சியம்தான் என்ன. ? எப்போதாவது கேட்டால் “எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதல்லாமல் வேறொன்றும் இல்லை. என்பாள். நம்ப முடியவில்லை. ஆனால் நம்பிக்கையே ஆதாரமாகக் கொண்டு வாழ்ந்து வருகிறாள்.

 

நம்மால் புரிந்து கொள்ள முடியாத ஒரு சக்தி நம்மை இயக்குகிறது. வாழ்வில் நிகழும் அனைத்துச் செயல்களுக்கும் நம்மை இயக்கும் அந்த சக்தியே காரணம்என்ற நம்பிக்கை மட்டும் இல்லாவிட்டால் பலரும் பைத்தியம் பிடித்து தலையைப் பிய்த்துக் கொண்டிருப்பார்கள். எல்லாவற்றுக்கும் நீயே காரணம் நீயே தீர்த்து வைக்க வேண்டும் என்று சரணடைந்து விட்டால் மனப் பாரம் குறையும் என்று சொல்லுமளவுக்குத் தெளிவு பெற்றவள். நாளுக்கு நாள் கோயில்களில் கூட்டம் கூடுவதே கடவுள் நம்பிக்கை உடையவர்கள் அதிகரித்து வருகிறார்கள் என்றுதானே அர்த்தம் காலங்காலமாக நம் முன்னோர்கள் சொல்லிச் சென்றதெல்லாம் தவறா என்றும் கேட்பாள்..மாறுபட்ட சிந்தனைகளையும் செவி மடுத்துக் கேட்பாள். அதிலிருக்கும் நிதர்சன உண்மைகளையும் உணர்ந்து கொள்வாள். இருந்தாலும் இந்த நிலைதான் சௌகரியமாக இருக்கிறது என்று சொல்லாமல் சொல்லிச் செல்வாள்.      . .

     

     

 

 

 

    

  .

 

  

 

 

 

 

 

 

 

 


     

 

 

 

    

  .

 

  

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

          

.


 

 

 

 

 

          

.