வெள்ளி, 5 மார்ச், 2021

அடையாளம்

 

அடையாளங்கள்

அடையாளம்மிகவும் முக்கியம்

 உனக்கு கிருஷ்ணமூர்த்தியைத் தெரியுமா.?
“ யார்... அந்த சொட்டைத்தலை இரட்டை மண்டை கிருஷ்ண மூர்த்தியா.?
“ இல்லை ....கல்பாத்தி பாகவதர் சுந்தாவின் பிள்ளை.
எத்தனையோ கிருஷ்ணமூர்த்திகள் தெரியும் இருந்தாலும் குறிப்பிட்டவரைத் தெரிந்து கொள்ள அடையாளங்கள் தேவைப் படுகிறது. சொட்டைத்தலைஇரட்டை மண்டைபாகவதர் பிள்ளை என்றால்மட்டும் போதாது  கல்பாத்தி பாகவதர். பிள்ளைஎன்பன போன்றவற்றால் அடையாளம் காட்டப் படுகிறது

ஒருவரை ஒருவர் நினைவில் வைத்துக்கொள்ள உதவுவதே இந்த அடையாளங்கள்தான்

வித்வான் ராஜேஷ் வைத்யா, வாழும் கலை நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவி ஷங்கர். பாப் பாடகி உஷா உதுப், போன்றோர் இதற்கு எடுத்துக்காட்டு. நெற்றியில் விபூதி அல்லது நாமம் உடலெங்கும் சந்தணத் தீட்டுகள் தலையில் வைக்கும் குல்லா, அல்லது தலைக்கட்டு போன்றவை அவர்கள் சார்ந்திருக்கும் மதம் அல்லது ஜாதி அல்லது பிரிவு போன்ற வற்றை அடையாளம் காட்டும், பிராம்மண குடும்பங்கள் சிலவற்றில் பெரியோரிடம் தங்களை அறிமுகப் படுத்திக் கொள்ளும்போது  ”அபிவாதயே சொல்லிஆசி வாங்குவார்கள்  தான் இன்ன குலத்தில் இன்ன கோத்திரத்தில் இன்ன ரிஷியின் பரம்பரையில் வந்த இன்னாரின் பேரன் , இன்னாரின் புத்திரன் என்று சொல்வதுபோல் அமைந்திருக்கும். ஊரின் பெயர் , தந்தையின் பெயர் போன்றவற்றின் முதலெழுத்தை இனிஷியலாக  வைப்பார்கள். கேரளத்தில் இன்ன வீட்டைச் சார்ந்தவர் என்று அறிமுகப் படுத்துவர். பெரும்பாலும் மருமக்கத்தாய முறையைப் பின் பற்றுபவர்கள். ஆனால் பல குடும்பங்களில் இது மாறி தந்தையின் பெயரிலுள்ள முதல் எழுத்து இனிஷியல் ஆக மாறிவருகிறது 

திருச்சியில் நான் பணி செய்து கொண்டிருந்த போது, என் உறவினர் தீ அணைப்புப் படையின் தலைவராக திருச்சியில் பொறுப் பேற்று வந்தவருக்கு என் விலாசம் தெரிய வில்லை. BHEL தீ அணைப்பு படையில் இருந்த ஒருவரிடம் என் பெயரைச் சொல்லி  (இனிஷியல் சொல்ல வில்லை அல்லது தெரிய வில்லை?)நான் ஒரு பொறுப்பான பதவியில் இருப்பதாக மட்டும் தெரியும் என்றிருக்கிறார். பாவம் அந்த மனுஷன், பாலசுப்பிரமணியம் என்ற பெயரில் உள்ளவர்களை எல்லாம் டெலிபோன் டைரக்டரி  பார்த்துக் கூப்பிட்டு ஒரு வழியாய் என்னையும் கூப்பிட்டு தீ அணைப்பு அதிகாரியைத் தெரியுமா என்று கேட்டார். நான் தெரியும் என்று சொன்னவுடன் என்னைத்தேடி ஓடி வந்து அப்பாடா என்று பெருமூச்சு விட்டது நினைவுக்கு வருகிறது. என்னைப் பற்றிய சரியான அடையாளங்கள் தெரியாததால் மிகவும் சிரமப் பட்டு விட்டார்

மனிதர்களுக்கு மட்டுமல்ல கடவுள்ர்க்கும் அடையாளம்   தேவைஎங்கும்  நிறைந்தவன்  எல்லாமாய் இருப்பவன் என்று சொன்னாலும்  கடவுளர்களுக்கும் அடையாளங்கள் உண்டு மனிதனால் படைக்கப்பட்ட கடவுள்களுக்கு மனித்னைப் போல்  அடையாளங்சள் கொடுத்து விட்டான்

 குழல் வைத்துக் கொண்டிருப்பவன் கண்ணன், முருகனுக்கு வேல், லக்ஷ்மிக்கு தாமரை, சரஸ்வதிக்கு வீணை, பெருவிழிகளுடன் நாக்கைத் துருத்திக் கொண்டிருந்தால் காளி சிவனுக்கு பாம்பு சூலம், கொண்டையில் அரை நிலா இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் படுத்துக் கொண்டிருந்தால் அரங்கன் , நின்று கொண்டிருந்தால் பெருமாள், தவழ்ந்து கொண்டிருந்தால் கண்ணன், கோவணத்துடன் இருந்தால் குமரன். நமக்கு இருக்கும் அங்க லட்சணங்களை கடவுளுக்கும் வைத்து நம்மைப் போல் அவருக்கும் உருவம் கொடுத்து நம்மில் அவரைக் காணும்( அல்லது அவரில் நம்மைக் காணும்) பாங்கு வியக்க வைக்கிறது. உருவமே இல்லாதவன் என்று சொல்லும்போதும் படைப்பின் உருவகமாக லிங்கம் ஆவுடையார் என்று உருவகப் படுத்தி இருப்பார்களோ என்னும் ஐயம் எழுவதுண்டு. இப்படி நினைப்பதே தவறு என்று கூறி அடிக்க வந்தாலும் வருவர்.
என்னதான் சொன்னாலும் எல்லோருக்கும் அடையாளங்கள் தேவை என்பது மறுக்க முடியாது. சில அடையாளங்கள் சரித்திர நிகழ்வுகளை கண்முன் நிறுத்தும். வீர பாண்டியக் கட்ட பொம்மனின் மீசை. சர்ச்சிலின் வெற்றியைக் குறிக்கும் V விரல் அடையாளம், ஹிட்லரின் அடையாள மீசை, காந்திஜியின் பொக்கைவாய்,கண்ணாடி கைத்தடி அரை ஆடை,, நேருவின் ஷெர்வானியும் ரோஜாவும் இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.
ஒருவன் இருந்து மறைந்ததற்கு என்னதான் அடையாளமாக விட்டுச் செல்ல வேண்டும்? சிந்திக்க வைக்கிறது. .                

    

 

 

      

 

16 கருத்துகள்:

  1. சுவாரஸ்யமான பதிவு.  இறைவனுக்கு நாம் கொடுத்திருக்கும் உருவங்கள் பற்றி எனக்குள்ளும் இப்படி எண்ணங்கள் எழும்.

    அடையாளம் நாம் ஏற்படுத்திக் கொள்வதல்ல.  நம்மை அடையாளம் காண அது பிறரால் தானாய் அமைவது!

    பதிலளிநீக்கு
  2. ..ஒருவன் இருந்து மறைந்ததற்கு என்னதான் அடையாளமாக விட்டுச் செல்ல வேண்டும்?//

    ஏன் ’விட்டு’ச் செல்லவேண்டும்? எதையாவது இங்கே ‘விடாவிட்டால்’, ’செல்ல’ முடியாதா?

    பதிலளிநீக்கு
  3. நாம் இருந்தோம் என்று மத்தவங்க நினைக்கணும்னு நாம் ஏன் எதிர்பார்க்கணும்? நம் முன்னோர்களை நாமே எத்தனை முறை நினைத்துப் பார்க்கிறோம்? (அவங்க நம் வாழ்வில் தாக்கம் ஏற்படுத்தியிருப்பாங்க. இருந்தாலும் எப்போவாவதுதான் நினைவுகூர்வோம்)

    பதிலளிநீக்கு
  4. கடவுள்களை ஏன் நினைக்கிறோமோ அது போல என்று சொல்லலாமா

    பதிலளிநீக்கு
  5. அருமை
    உறவினர்களிடம்
    நல்ல நினைவுகளை விட்டுச் செல்வோம்

    பதிலளிநீக்கு
  6. இருக்கும்வரை உண்மையுடன் இருந்தான்என்னும்படி வாழ்வோம்

    பதிலளிநீக்கு
  7. அடையாளம் பலதரப்பட்டது. உருவம் (வழுக்கை தலை) செயப்படு பொருள் (சமையல் காரர்) இடம், காலம் என்று பலவகைகளில் சுட்டப்படுவது. எல்லோருக்கும் பொதுவே ஒரு அடையாளம் இருந்தாலும் அது மற்றவர்களால் சுட்டப்படும்போதுதான் அவர்களுக்கே உரைக்கிறது. அடையாளம் இன்றி வாழ்பவர் இல்லை. ஆனால் அந்த அடையாளம் மற்றவர்களால் சிலாகிக்கப்படும் போதுதான் அது பெருமை பெறுகிறது.  
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடவுள்களின் அடையாள்ங்கள் மட்டுமே சிலாகிக்க்கப்படுகின்றன

      நீக்கு
  8. யாருக்கும் தொல்லை இன்றி வாழ்ந்து விட்டு போனாலே அதுவே நல்ல அடையாளம் தான். முன்னோரின் பெயர் சொல்லி அவர் வீட்டுப் பையனா என்று கேட்கும்போது நிச்சயமாய் ஒரு மலர்ச்சி வருகிறது. அதுவே ஒரு தூண்டுதலாகவும் அமைகிறது, நமக்கான அடையாளம் உருவாக்க

    பதிலளிநீக்கு
  9. யாருக்கும் தொல்லைஇன்றி வாழ்வது நம்கையிலா

    பதிலளிநீக்கு
  10. லிங்கம்/ஆவுடையார் என்பதே அருவுருவ வழிபாடு தான். நீங்கள் புதிதாகச் சொல்லிவிடவில்லை.

    பதிலளிநீக்கு
  11. அடையாளங்கள் மனிதனால் ஏற்படுத்தப்பட்டவையே! எந்த இறைவனும் என்னை இந்த அடையாளத்துடன் வணங்குனு சொல்லவில்லை.

    பதிலளிநீக்கு