Tuesday, November 16, 2021

எதிர் பாராதது

 

 

எதிர்பாராதது

தீபாவளிக்கு ஒன்று  சேர்ந்தவர் பிற்ந்த நாளுக்கு இருக்க முடியாதே என்னும் கவலைஇருக்கத்த்தான் செய்தது ஆனாலு,ம் பிறந்தந் நாளில்.எதிர்பார்ராதபடி வீட்டின்குடி இருப்போர் வந்துசிறப்பித்தனர்  மாலைஇரண்டாம் ம்கன அவன்குடும்ப்த்துடனும்பேரன் அவன் ம்னைவியுட்னும்வ்ந்தன்ர்  நான் எதிர்பார்க்காதது

இரண்டுகேக் வெட்டினோம் என்றுமே இல்லாதபொக்கே வந்தது இதைத் தன் எதிர்பாராத்துஎன்றேன் 













           

 

Thursday, November 11, 2021

பிறந்த நாளும் மண நாளும்

 

 ஆண்டொன்று போக அகவை ஒன்று கூட
இன்றுறங்கி நாளை எழுவேனா என்றறியாமலேயே
சேர்த்துவிட்டேன் எட்டு பத்துடன்   மூன்றாண்டுகளும்
ஆசை எனும் அரவமே அனைத்து வினைகளுக்கும்
ஆதி காரணம் என்றறிந்தும் பாசவலையில் கட்டுண்டு
காலம் கழிந்து விட்டது.. அன்பால் கட்டுவதும்
அன்பினால் கட்டப் படுவதும் இன்பம்தான்
மறுப்பதற்கில்லை, மறப்பதற்கில்லை. .புவியில்
வந்துதித்த நாளே இல்லத் துணையுடன் சேர
தேர்ந்தெடுத்த நாளும் எனும்போது கூடுகிறது
மகிழ்ச்சி குறையில்லாப் பொலிவுடன்.

அல்லல்கள் பலவற்றோடு அனுபவங்கள்
கற்றுத் தந்த பாடங்கள் அசைபோட்டு உணரும்போது
இன்னுமொரு வாழ்வு அமையுமானால் , கேள்வி எழுகிறது,
இதையே தேர்ந்தெடுப்பேனா என்று. .நிச்சயமாய் இதையே
தேர்ந்தெடுப்பேன், என்னில் இருந்த சில குறைகள் நீக்க
எனக்கொரு வாய்ப்பு அது நல்குமல்லவா.?


குறைவற்ற வாழ்வுதனை நிறைவாக வாழ்ந்து விட்டேன்.
இனி எனக்கொரு குறையிலை நான் தயார் யாரும்
அறியாத அண்டப் பேரண்ட வெளிக்குள் ஒளியிலோ இருளிலோ

நான் நுழைய, இருப்பினும் அனுபவங்கள் பகிர எனக்கங்கொரு
வலைத்தளம் இருக்குமா, தெரியவில்லையே..! 



மணநாள்கழிந்து 60ம் பிறந்தநாளும்திருக்கடையூரிலும் கொண்டாடி ஆயிற்று இனி எந்த இடத்துக்கும்  போகஇயலாத நிலை இருக்கும்  இடத்துக்கே பலரும்வந்து வாழ்டுகின்றன்ர் இனி அதுவேபோதும்  













நான் நுழைய, இருப்பினும் அனுபவங்கள் பகிர எனக்கங்கொரு
வலைத்தளம் இருக்குமா, தெரியவில்லையே..! 

Wednesday, November 10, 2021

diwali pictures

                                                        wifewith sons
 

                                                 family relaxing


                                                                self and wife


                                                            women  power of   our  family


                                             family members




                                                  diwali lights by the youngest in the clan


Thursday, November 4, 2021

தீபாவளி

 


பண்டிகைகள் கொண்டாடவே; ஆயிரம் காரணங்கள்
புராண ஆதாரங்கள் காரணம் பல காட்டினாலும்
பண்டிகைகள் கொண்டாடவே; மகிழ்வாய் இருக்கவே.
நரகாசுரன் இறக்கும்போது கேட்ட வரமோ, ராமனின்
வனவாசம் முடிந்து திரும்பும் நாளோ, சக்தியின்
கேதாரகௌரி விரதம் பூர்த்தியாகிப் பின்னர்
அர்தநாரீஸ்வரியான (ரரான) தினமோ, ஏதானால் என்ன ?
தீபாவளிப் பண்டிகை நாள் நன்று கொண்டாடுவோம்.
அகில இந்தியாவிலும் , ஏன் உலகின் பிற பாகங்களிலும்கூட
தீபாவளி கொண்டாடப் படுகிறது. சீக்கியர் பொற்கோயில்
கட்டத் துவங்கிய தினமென்றும்,  சமணர் மகாவீரர் நிர்வாணம்
அடைந்த தினமென்றும், கொண்டாட்டம் நன்று கொண்டாடுவோம்
ஆண்டில் ஒரு நாள் உற்றமும் சுற்றமும் கூடி மகிழவும்
அகத்தின் அகந்தை, பொறாமை, அறியாமை, இருள் நீக்கி
தீப ஆவளியில்  ஒளிவரிசையில் வெளிச்சம் பெற
தீபாவளிப் பண்டிகை நன்று ;கொண்டாடுவோம்.
உறவுகள் கூடவும், கோடி உடுத்தி மகிழவும், பெரியோர்
ஆசியில் நனையவும், தீபாவளி நன்று கொண்டாடுவோம்
வேண்டாதன விட்டொழிப்பதை தலை முழுகுதல் எனக் கூறுவர்
கங்கா ஸ்நானமும் ஒரு தலை முழுகலே நம்மில் இருக்கும்
“நான்ஐ பட்டாசு வாணங்களில் கொளுத்தித் தலைமுழுகி
இனிப்பதனைப் பகிர்ந்துண்டு தீபாவளிப் பண்டிகை கொண்டாடுவோம்





Tuesday, November 2, 2021

பணம் என்ன செய்தது

 ஒரு சிற்றூரில் தங்குமிடம் தேடி வந்தான் ஒருவன்.

தங்கும் விடுதி ஒன்றில் ஒரு நூறு ரூபாய் தாளெடுத்து
கல்லாக் காரனிடம் அச்சாரமாய்க் கொடுத்து--இடம்
பார்த்துப் பிடித்தால் தங்குகிறேன் என்றான்.

மேசையில் நோட்டைக் கண்டதும் கல்லாக்காரன்
எடுத்து, அதை அடுத்துள்ள கடையில் பலசரக்குப்
பாக்கிக்கு என கொடுத்து விட்டான்.

பலசரக்குக் காரன் கூட்டுறவுக் கடைக்கு
அதைக் கொண்டு அவன் கடனை அடைத்தான்.

கூட்டுறவுக்காரன் அவன் கூத்தாளுக்கு அதைக்
கொடுத்து அவள் பாக்கியை நீக்கினான்

அவளதை விடுதியின் வாடகை பாக்கியெனக் கொடுத்தாள்.

அங்கிங்கு அலைந்த அந்தப் பணம் மீண்டும்
கல்லாக்காரன் மேசைமேல் வந்தது.

அறை தேடிச் சென்றவன் திரும்பி வந்து
இருக்க இடம் திருப்தி தரவில்லை என்று,
கொடுத்த பணத்தை எடுத்துச் சென்றான்.

கதை படித்த காசினியோரே
கவனமாய் கருத்தில் கொள்ளுங்கள்.
பணம் என்ன செய்தது.?

உற்பத்திக்கு உதவியதா...
யாராவது அதை சம்பாதித்து ஈட்டினரா.......
ஆனால் பலரது கடன் அடை பட்டது
சம்பந்தப் பட்டவர் மகிழ்ச்சி அடைந்தனர்.

இலவசமாய் வந்தடையும் பணமும்
இதைத்தான் செய்கிறதோ..
இப்படித்தான் இல்லாத ஒனறு
ஊக்குவிக்க உதவுகிறதோ.
--------------------------------------------

Monday, November 1, 2021

கடவுளின் கை வண்ணம்


கடவுளின் கைவண்ணம்.

---------------------

 

ஒரு குழந்தை தன் தாத்தாவின் மடியில் அமர்ந்து கொண்டு சிறிது நேரம் அவரையே பார்த்துக் கொண்டு இருந்தது. பிறகு கேட்டது” தாத்தா உங்களை படைச்சது யார்? 

 

தாத்தா.: ஏம்மா. ..என்னைக் கடவுள்தான் படைச்சார்.

 

குழந்தை.:- அப்போ என்னை யார் படைச்சது.?

 

தாத்தா.:- உன்னையும் கடவுள்தான் படைச்சார்.

குழந்தை.:- உன்னைப் படச்சப்போ இருந்ததை விட என்னைப் படைக்கும்போ கடவுள் தேறி விட்டார்  இல்லையா