வியாழன், 11 நவம்பர், 2021

பிறந்த நாளும் மண நாளும்

 

 ஆண்டொன்று போக அகவை ஒன்று கூட
இன்றுறங்கி நாளை எழுவேனா என்றறியாமலேயே
சேர்த்துவிட்டேன் எட்டு பத்துடன்   மூன்றாண்டுகளும்
ஆசை எனும் அரவமே அனைத்து வினைகளுக்கும்
ஆதி காரணம் என்றறிந்தும் பாசவலையில் கட்டுண்டு
காலம் கழிந்து விட்டது.. அன்பால் கட்டுவதும்
அன்பினால் கட்டப் படுவதும் இன்பம்தான்
மறுப்பதற்கில்லை, மறப்பதற்கில்லை. .புவியில்
வந்துதித்த நாளே இல்லத் துணையுடன் சேர
தேர்ந்தெடுத்த நாளும் எனும்போது கூடுகிறது
மகிழ்ச்சி குறையில்லாப் பொலிவுடன்.

அல்லல்கள் பலவற்றோடு அனுபவங்கள்
கற்றுத் தந்த பாடங்கள் அசைபோட்டு உணரும்போது
இன்னுமொரு வாழ்வு அமையுமானால் , கேள்வி எழுகிறது,
இதையே தேர்ந்தெடுப்பேனா என்று. .நிச்சயமாய் இதையே
தேர்ந்தெடுப்பேன், என்னில் இருந்த சில குறைகள் நீக்க
எனக்கொரு வாய்ப்பு அது நல்குமல்லவா.?


குறைவற்ற வாழ்வுதனை நிறைவாக வாழ்ந்து விட்டேன்.
இனி எனக்கொரு குறையிலை நான் தயார் யாரும்
அறியாத அண்டப் பேரண்ட வெளிக்குள் ஒளியிலோ இருளிலோ

நான் நுழைய, இருப்பினும் அனுபவங்கள் பகிர எனக்கங்கொரு
வலைத்தளம் இருக்குமா, தெரியவில்லையே..! 



மணநாள்கழிந்து 60ம் பிறந்தநாளும்திருக்கடையூரிலும் கொண்டாடி ஆயிற்று இனி எந்த இடத்துக்கும்  போகஇயலாத நிலை இருக்கும்  இடத்துக்கே பலரும்வந்து வாழ்டுகின்றன்ர் இனி அதுவேபோதும்  













நான் நுழைய, இருப்பினும் அனுபவங்கள் பகிர எனக்கங்கொரு
வலைத்தளம் இருக்குமா, தெரியவில்லையே..! 

8 கருத்துகள்:

  1. வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ஐயா.

    பதிலளிநீக்கு
  2. பிறந்த நாள், மணநாள் வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்
    உங்கள் ஆசிகளை வேண்டி வணங்குகிறேன்.

    பதிலளிநீக்கு
  3. நேற்று பிறந்தநாளுக்கு மட்டும் வாழ்த்து கூறியிருந்தேன். இன்று பிறந்தநாள் வாழ்த்துகள், மற்றும் மணநாள் வாழ்த்துகளையும் இணைத்து கூறுகிறேன்.

    பதிலளிநீக்கு
  4. பிறந்த நாள் மற்றும் திருமண நாள் வாழ்த்துகளும், வணக்கங்களும்.

    பதிலளிநீக்கு
  5. உங்கள் ஆசிகளை வேண்டுகிறோம் ஜி.எம்.பி சார்.

    பதிலளிநீக்கு