Saturday, March 31, 2018

மாறும் வாழ்வின்மதிப்பீடுகள்


                              மாறும் வாழ்வின் மதிப்பீடுகள்
                             -------------------------------------------------


ஒரு சிறு கதை எழுதலாம் என்று நினைத்தேன்  கருவும்  கதாமாந்தர்களும்  உருவகப்படுத்தப்பட்டாய் விட்டது  ஆனால் எழுத உட்காரும்போதுஎண்ணங்கள் எழுத்தில்  கொண்டுவருவது சிரமமாய் இருந்தது ஒரு ஆரம்பம் கொடுத்து இப்படி எழுதலாமே என்று சொல்லியவருக்காக  எழுதிய கதையும்  நினைவுக்கு வந்தது ஆனால் கதை என்றால் அதற்கு ஒரு தொடக்கம் நிகழ்வு முடிவு எனும்  வரிசையில் வர வேண்டும்  சிறு கதைக்கான  இலக்கணத்துக்கு உட்பட்டு இருக்க வேண்டும்  எறு யார் யாரோ சொன்னதெல்லாம்  என்னை எழுத விடவில்லை இருந்தாலும் நான் எழுதிய கதைகளுள் எனக்கே சற்று வித்தியாசமாய்ப் பட்ட ஒரு சிறு கதையை இப்போது மீள் பதிவாக்கி  என்சிறுகதை பதிவிடும் தாகத்தை தற்காலத்துக்கு தணித்துக் கொள்ளலாம் என்று தோன்றியதால் ஒரு பழைய கதையை மீள் பதிவாக்குகிறேன்   மேலும்  இன்றைய  என் வாசகர்களுக்கு அது புதிதாய்த்தான் இருக்கும் 


என்னுடைய மகளுக்குத் திருமணம் நிச்சயம் ஆகிவிட்டது. இந்த சம்பந்தம் கைகூடிவர எத்தனை எத்தனைத் தெய்வங்களைப் பிரார்தித்திருப்பேன். .ஆயிரம் கேள்விகள். ஆயிரம் சமாளிப்புகள். பெண் படித்திருக்கிறாளா, லட்சணமாய் , அழகாய் இருக்கிறாளா என்பதைப் பார்ப்பதை விட்டு குலம் என்ன கோத்திரமென்ன , அப்பா யார் அம்மா யார் என்பதோடு நிறுத்திக் கொண்டால் போதாதா. ? தாத்தா யார், பாட்டி யார் ஊர் என்ன வீடு என்ன அப்பப்பா  போதுமடா சாமி.... இவ்வளவு சலிப்பு ஏன். ? உள்ளதை உள்ளபடி சொல்லிப் போனால் என்ன.? முடியவில்லையே... எனக்கே நான் யார் வந்த வழி என்ன என்று யோசித்துப் பார்த்தால் எங்கோ இடிக்கிறமாதிரி இருக்கிறதே..

சின்ன வயதில் உறவினர் வீட்டு விசேஷங்களுக்கு போவதே அபூர்வம்., சொந்தங்கள் பந்தங்கள் என்று குழுமும்போது எல்லோரிடமும் ப்ழக வேண்டும் எல்லோரையும் பார்க்க வேண்டும் என்று மனசு கிடந்து தவிக்கும். ஆனால் அப்பா ஏதாவது காரணங்கள் சொல்லி தவிர்த்து விடுவார். என்னுடைய தாத்தா பாட்டி என்று எல்லோரும் உயிருடன் இருக்கும்போது அவர்களைப் பார்த்த நேரங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அப்படி பார்த்த நேரங்களிலும் அவர்களிடம் இருந்து பாசம் என்றால் என்னவென்றே தெரிந்து கொள்ள முடியாது. இரண்டு வழி தாத்தா பாட்டிகளுமே ஒருவித காழ்ப்பினைக் காட்டி வந்தார்கள். அந்த வயதில்  பட்டும் படாமலும் யாராவது பேசுவதைக் கேட்டு ஒன்று மட்டும் தெளிவாகி இருந்தது. அப்பாவும் அம்மாவும் ஏதோ தவறு செய்திருக்கிறார்கள், அதனால் உறவுகளால் தூற்றப்பட்டு வந்திருக்கின்றனர் என்று தெரிய வந்தது. ஆனால் அது என் மகள் திருமணத்திலும் பாதிப்பு உண்டாக்கும் என்பது எதிர்பாராதது.

படித்து முடித்து உத்தியோகத்துக்குப் போக ஆரம்பித்த பிறகு ஜாடை மாடையாக அப்பாவிடம் அவர் வாழ்க்கையைப் பற்றி விசாரிப்பேன்.
“ YOU DON’T WORRY ABOUT ANYTHING.  VALUES IN LIFE CHANGE WITH EVERY GENERATION” என்று கூறி என் வாயை அடைத்துவிடுவார். ஆக அவர் வாழ்வில் நடந்த சம்பவங்கள் வாழ்வின் மதிபீடுகளில் எங்கோ அடிபட்டிருக்க வேண்டும் என்று எண்ண வைத்தது.

எனக்கும் நம் உறவுகள் யார் , என்ன செய்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள விருப்பமிருந்தது. நான் அவர்களிடம் தொடர்பு கொள்ளலாமா  என்று அப்பாவைக் கேட்ட போது. “ நீ வளர்ந்து விட்டாய் . உன்னைத் தடுத்து நிறுத்துவதில் அர்த்தம் இல்லை. ஆனால் யார் என்ன பேசினாலும் பிடிக்காவிட்டால் அங்கிருந்து விலகி வந்துவிடு. எதையும் நியாயப் படுத்தும் செயல்களில் ஈடுபடாதே “ என்று மட்டும் கூறினார்.

அப்பாவின் அம்மாவுக்கு ஒரு நிக் நேம் இருந்தது. அவர்களை GOD MOTHER என்று அழைத்தார்கள். அந்தப் பெயர்க் காரணம் புரியவில்லை. ஒருவேளை எல்லோரும் தன் பேச்சுக்குக் கட்டுப் பட்டு நடக்க வேண்டும் என்று விரும்பினார்களோ என்னவோ.... பட்டும் படாமலும் பலர் பேசக் கேட்டதிலிருந்து  எனக்கு ஒரு பெரிய சந்தேகம் வந்து விட்டது. ‘ இவர் என் அப்பாதானா.?’ இந்தக் கேள்வியே அபத்தமாக இருப்பதுபோல் தோன்றியது. எப்பவுமே அம்மா அம்மாதான்... அப்பா என்று வரும்போது அம்மா அறிமுகப் படுத்தியே தந்தை அறியப் படுகிறார். எல்லாமே நம்பிக்கைதான். மேல் நாட்டில் திருமணம் ஆவதும் மணமுறிவு ஏற்படுவதும்  மறு மணம் புரிவதும் வெகு சகஜமாக ஏற்றுக் கொள்ளப் படுகிறது. ஒரு ஆணும் பெண்ணும் பேசிக்கொள்ளும்போது .” என் குழந்தையும் உன் குழந்தையும் நம் குழந்தையோடு ஆடுகிறார்கள் “ என்று சொன்னால் அது நிதர்சனத்தை உணர்த்துவதாக இருக்கும், ஆனால் நம் நாட்டில் அப்படிப் பேசுவது அநேகரது புருவங்களை உயர்த்தும்.

அங்கும் இங்கும் கேள்விப்பட்டதைப் பொருத்திப் பார்க்கும்போது, என் அப்பா அம்மா வாழ்க்கையில் சமகால புரிதல்களை மீறி ஏதோ நடந்திருக்க வேண்டும். அம்மாவிடம் கேட்க மனசு ஒப்பவில்லை. என்னதான் இருந்தாலும் அப்பாவிடமும் அவரது அந்தரங்க வாழ்க்கையைக் கேள்வி கேட்க முடியுமா. ? இருந்தாலும்  உறவுகளில் இருக்கும் ஒரு stigma  தாங்க முடியாமல் இருக்கவே கேட்டு விட்டேன்.

“ அப்பா. உங்கள் வாழ்க்கையில் என்னவோ நடந்திருக்கிறது. சொந்தங்கள் எல்லாம் நம்மை ஒரு மாதிரி பார்க்கிறார்கள். நீங்களும் எதையோ மறைக்க்றாப்போலத் தோன்றுகிறது. என்னவென்று சொல்லலாமில்லையா. நானும் வளர்ந்து விட்டேன் இல்லையா

“ நிச்சயம் நீ இந்தக் கேள்வியோடு வருவாய் என்று எனக்குத் தெரியும். உன்னுடைய திருமணத்தின்போதே இந்தக் கேள்வியை எதிர்பார்த்தேன். நல்ல காலம் காதல் திருமணம் ஆனதால் பல கேள்விகள் கேட்கப் படாமலேயே போயிற்று.. நீ காதலித்துத் திருமணம் செய்து கொண்டாயே. காதலிக்கப் போகும் முன்னால் உன் காதலியின் பின் புலம் பற்றி எல்லாம் கேட்டுத்தான் காதலித்தாயா.?

“ கண்டோம் காதலினால் கட்டுண்டோம். கல்யாணமும் உங்கள் சம்மததோடுதானே நடந்தது. “

“ சமதித்திருக்காவிட்டால் கல்யாணம் செய்து கொண்டிருக்க மாட்டீர்களா.?

 IT IS A HYPOTHETICAL QUESTION.”

“ எப்படி எதையும் கேட்காமல் காதலித்தீர்களோ . அது போலத்தான் நானும் உங்கம்மாவும் காதலித்தோம்.

“ அதற்காக எதிர்ப்பு இருந்ததா?


“ ஆனால் அதில் ஒரு வித்தியாசம் இருந்தது. நான் உங்கம்மாவைக் காதலிக்கத் துவங்கும்போது . உங்கம்மாவுக்கு ஏற்கனவே மணமாகி கணவனும் இருந்தார்.

கதை முற்றிலும் எதிர்பார்க்காத திசையில் செல்வது கண்டு  காதுகளை நன்றாகத் தீட்டிக்கொண்டு கேட்டேன்.

“ VERY INTERESTING !. PLEASE BEGIN FROM THE BEGINNING. “

“ ஊர் பேர் எதுவும் வேண்டாம். நான் படித்து முடித்து வேலைக்குப் போன ஊரில் என்னுடைய அத்தை மகனும் இருந்தான். புதிதாக போகும் ஊரில் எல்லாம் சரிபட்டு வரும் வரை அவன் வீட்டிலேயே தங்கலாம் என்றான்
நானோ மிகவும் சங்கோஜி. யாருடனும் பழக மாட்டேன். திருமணமாகிக் குழந்தையோடு இருக்கும் அத்தை மகன் வீட்டில் தங்குவது முதலில் மனசுக்குக் கஷ்டமாக இருந்தது. இருந்தாலும் உள்ளத்தின் ஒரு ஓரத்தில் சைத்தான் குடி இருந்திருக்க வேண்டும். அத்தை மகனின் மனைவி அங்கும் இங்கும் போகும் போது மனசில் பளீரென ஏதோ வெடிக்கும். தப்புடா தப்பு என்று மனசு சொன்னாலும் அதையும் மீறி ஒரு வேட்கை எழுந்தது நிஜம். அத்தைமகனுக்கு சம்பாத்தியம் குறைவு. நான் அங்கு ஒரு பேயிங் கெஸ்ட் ஆக இருந்ததால் அவனுக்கு  ஓரளவு வசதியாய் இருந்தது. அவன் ஆரோக்கியமும் அவ்வளவு சரியாய் இருக்க வில்லை. அடிக்கடி மருத்துவம் பார்க்கவும் அவனுக்கு சிசுருக்ஷை செய்வதுமாக உன் அம்மா இருந்தாள் 

“ என்னது...? என் அம்மாவா....? அப்போ......

“ ஆம் உன் அம்மாதான். என் அத்தானின் மனைவிதான்.

என் உள்ளத்தின் உள்ளே ஏதேதோ உணர்ச்சிகள் எழுந்தன. எதுவுமே புரியாதது போலும் எல்லாமே புரிந்தது போலும் தோன்றியது.

“ அப்படியானால் என் அப்பா...?

“ இருக்கிறார். ..நல்ல மனுஷன். ஒரு வாலிப வயது மாமா பிள்ளை. இவனே வாவென்று வரவழைத்துத் தங்கச் செய்தது. மனைவிக்கும் மாமா மகனுக்கும் இருந்த ஈர்ப்பைப் புரிந்து கொண்டு  விலகி சென்று விட்டார் குடும்பத்தில் ஒரு பூகம்பமே வெடித்தது. GOD MOTHER  நொறுங்கியே போய்விட்டார். உன் அம்மாவுக்கும் எனக்கும் ஏற்பட்டத் தொடர்பின் விளைவாக.ஒரு குழந்தையும் பிறந்தது. இனி  உறவை மூடிவைத்தால் பலரது பேச்சுக்கும் ஏச்சுக்கும் ஈடு கொடுக்க வேண்டி இருந்திருக்கும். உன் அப்பா.... நல்ல மனுஷன் ஒதுங்கிப் போய்விட்டார். இப்போது சொல் என்றைக்காவது எங்கள் உறவு குறித்து நீ சந்தேகப் பட்டிருக்கிறாயா. எங்கெல்லாம் யார் யாருடைய நாக்கு நீண்டு பேசுவதைத் தவிர்க்கவே உறவுகளைப் புறக்கணித்து வந்தோம். எனக்கும் இப்போது மனப் பாரம்குறைந்தது போல் இருக்கிறது.
 என்று கலங்கிய கண்களைத் துடைத்து விட்டுக் கொண்டார்.

இனிமேல் எனக்கே எங்கோ இடிக்கிறமாதிரி தோன்றாது. எல்லாம் தெரிந்து விட்டதே.   நம்மை நமக்காகவே விரும்பி திருமண உறவு வைத்துக் கொள்ள விரும்பினால் ஓக்கே.. என் மகளுக்கு என்று இனிமேல் ஒருவன் பிறக்கப் போவதில்லை. .இந்தத் திருமணம் நடக்கும் என்று என் உள்ளுணர்வு சொல்லுகிறது.          

  


Thursday, March 29, 2018

ஒரு புது முயற்சி



                                   ஒரு புது முயற்சி
                                   ---------------------------
ஒரு பாடலை ஆடியோ  ஃபைலில் சேமித்திருந்தேன்   ஆனால் அதைப் பதிவில் கொண்டு வர முடியவில்லை  ப்ளாகர் ஆடியோவை ஏற்கவில்லை  எனக்கானால்  அதை எப்படியும் வலையில் ஏற்றவேண்டும் என்னும் விருப்பம் இந்த ஆடியோவை வீடியோவாக்க என்ன செய்யலாமென்றுயோசித்து ஒரு வழியாக  செய் துவிட்டேன் கணினி பற்றிய அறிவு மிகவும் குறைந்தநான்  இதை வெளியிடுவதில் பெரிதும் மகிழ்கிறேன்   எனக்கு என் மனைவி அனுப்பியிருந்தபாடல் பதிவு(ALL IS WELL  THAT ENDS WELL)
இனி பதிவுக்கு வருவோம்


ஸ்ரீகிருஷ்ண பக்தி கானம்  25 ராகங்களில் பாடல் ஸ்ரீ செவ்வனூர் கிருஷ்ணன் குட்டியுடைய வரிகளுக்கு பிரசித்தி பெற்ற சங்கீத விதவானும்  சாயி பக்தனுமான பாடகன்  ஸ்ரீ ராதாகிருஷ்ணன் அவர்களின் சீடன்  ஸ்ரீ உன்னிகிருஷ்ணன்  அதி அற்புதமாக ஆலாபித்த  ஸ்ரீகிருஷ்ண பக்தி பாடல்  சாரங்கா மோஹனத்தில் ஆரம்பித்து மத்யமாவதியில் முடியும்போது கீழே கூறப்பட்டுள்ள 25 ராகங்களிலும் சஞ்சரிக்கிறது
1)சாரங்கா
2)மோஹனம்
3) பூபாளம்
4) பிலஹரி
5)தன்யாசி
^ தேவகாந்தாரி
7)யதுகுல காம்போதி
8)கல்யாணி
9)ரஞ்சனி
10)சாமா
11)ஆபேரி
12)யமுனா கல்யாணி
13)ஸ்ரீ
14)நீலாம்பரி
15)முகாரி
16)ஷண்முகப்பிரியா
17)சங்கராபரணம்
18)காம்போதி
19)த்வஜாவந்தி
20)இந்தோளம்
21)ஆந்தோலிகா
22)ஸ்ரீ பந்துவராளி
23)நாத நாமக்கிரியா
24)தோடி
25) மத்யமாவதி 





Tuesday, March 27, 2018

உபாதைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் --4


                        உபாதைகள் பலவிதம்  ஒவ்வொன்றும் ஒருவிதம் --4
                       -----------------------------------------------------------------------------------


 என் பதிவுகளைத் தொடர்ந்து படித்துக் கொண்டு வருபவர்களுக்கு ஒன்று  தெரிந்திருக்கலாம் என் பல பதிவுகள் அனுபவத்தின்  அடிப்படையில் எழுந்தவையே . உடல் என்று ஒன்று இருக்கும்போது உபாதை என்ற ஒன்றும் கூடவே இருக்கும்  என்வாழ்வில் பல உடல் உபாதைகளை சந்தித்து விட்டேன்  அவற்றினை ஒரு தொடராகவும்  எழுதி வந்தேன்
முந்தைய  பதிவுகளைப் படிக்க சொடுக்கவும் 
  
அனுபவ உபாதைகளை விளக்குவதன் காரணமே  பலருக்கும் ஒரு விழிப்புண்ர்வு ஊட்டவும்  மனம் தைரியத்துடன் இருக்கவும்தான்  2010 ம் ஆண்டு எனக்கு ஒரு மைல்ட் ஹார்ட் அட்டாக் வந்து இதயத்தில் ஒரு குழாய் நோய் வாய்ப்பட்டு இருந்ததால்  எனக்கு ஆஞ்சியோப்லாஸ்டி செய்தார்கள்  என்று எழுதி இருக்கிறேன் நான் நலமுடன் தொடர பல மாத்திரைகளை எழுதிக் கொடுத்தார்கள்
அதில் ஒன்று asa   என்று சொல்லப்படும் ஒரு மாத்திரையும் அடக்கம் ஆனால் கடந்தஒருமாதமாக அந்த மாத்திரை எங்கும்  கிடைக்க வில்லை  நான்  அதில்லாமலேயே இருந்தாலும் பாதகமில்லை என்று கூறிவந்தேன் ஆனால் மருத்துவர் சொன்ன ,மாத்திரையை சாப்பிடாமல் இருக்கக் கூடாது என்பதில் என்மனைவியும் மகன்களும் குறியாய் இருந்தனர் எனக்கு சிகிச்சை செய்த கார்டியாலஜிஸ்டிடம் அப்பாயின்ட் மென்ட் கிடைப்பதுகஷ்டமாக இருந்ததால்  அதே மருத்துவ மனையில் இருந்த  வேறு கார்டியாலஜிஸ்டிடம் விஷயத்தை கூறினேன்  அவர் கொடுத்த மாற்று மருந்து டோசேஜ் அதிகமாய் இருக்கவே  அதை தெரிவித்துஅதன் பக்க விளைவுகள் பற்றியும் அவரிடம்  கூறினேன் அவர் கொடுத்த மருந்தை உட்கொள்ளவும்  தொந்தரவு ஏற்பட்டால் அவரை மீண்டும் பார்க்கவும் கூறினார் அந்தபதில் எனக்கு உடன் பாடில்லாமல் இருந்தது  என் மக்களுக்கு நான்  மருந்து உட்கொள்ளவேண்டும்  என்னும் கட்டாயவிருப்பம் இருந்தது எப்படியோ எனக்கு முதலில் சிகிச்சை கொடுத்த அதே மருத்துவரிடம் எப்படியோ அப்பாயிண்ட்மெண்ட்  வாங்கினார்கள் நானும் சென்று பார்த்து விளக்கினேன்   அவருக்கு என்னைப் பற்றி நன்றாகத் தெரியும்  சுமார் பத்து வித மாத்திரைகளை குறைத்து மூன்றே மாத்திரைகள் போதும் என்றார் அவரிடம்  சொல்லலாமா வேண்டாமா என்று நினைத்து பின் கூறி விட்டேன்   என்  தொப்புழ் பக்கம் சிறிய வலி என்றும் சற்று வித்தியாசமாக தெரிகிறதென்றும்  கூறிக் காண்பித்தேன் அதைப் பார்த்ததும்  அவர் என்னை அங்கிருந்த ஒரு சர்ஜனை பார்க்கக் கூறி  அவருடன் தொடர்பு கொண்டு  பார்க்கவும் ஏற்பாடு செய்தார்  அப்போதே அவரிடம்சொன்னேன்  சர்ஜன்  என்றால்  உடனே அறுவைதானே என்று          
அந்த அறுவைச் சிகிச்சை நிபுணர் நான் எதிர்பார்த்தபடி  உடனேயே ஆப்பரேஷன் செய்ய வேண்டும்  என்றார் IRREDUCIBLE obstructive UMBLICAL HERNIA என்றும் உடனே ஆப்பரேஷன் செய்யாவிட்டால்  அது சிறு குடலை strangulate   செய்யும் வாய்ப்பு இருக்கிறது என்றும்  கூறினார்
பிறகென்ன  ஒரு சுப முஹூர்த்தம்  எல்லாம்பார்த்து அட்மிட் ஆகவில்லை என்    ஒரே  கவலை செலவு பற்றியது என்மகனிடம்  ஆப்பரேஷன் மைனரா மேஜரா என்று கேட்கச் சொன்னேன்  என்  வயதில் எல்லா ஆப்பரேஷனுமே மேஜர்தான் என்னும் விடை கிடைத்தது பி எச் இ எல் மருத்துவ மனையில் பெர்மிஷன்வாங்கி அட்மிட் ஆனேன் செலவில் நான் முதலில் 20 சதம் கட்ட வேண்டும்  மீதியை பி எச் இ எல் நிறுவனம் கட்டும்   அதுவே ஒரு பெரிய ரிலீஃப் 
 அறுவை சிகிச்சைக்கு முன்பாக பல டெஸ்டுகள்  எடுத்தார்கள் ஒரு வழியாய் என்னை ஆப்பரேஷன் தியேட்டருக்கு கொண்டு சென்றார்கள்  மனதில் இன்னும்  எல்லோரையும் பார்ப்போமா என்று இருந்தது நிஜம்.  அப்படியே ஏதாவது  ஆனாலும் கவலைப்பட்டு பிரயோசனம் இல்லை என்று தோன்றியதுசிகிச்சை முடிய சுமார் ஒன்றரை மணிநேரம்  ஆயிற்று பிறகு போஸ்ட் ஆப்பரேடிவ் வார்டில் எனக்கு நினைவு வரும்வரை கிடத்தி இருக்கிறார்கள்  மெள்ள எனக்கு தெளிவு ஏற்பட்ட போது கண்களை சுழல விட்டு இருக்கும் இடம் இதுதான் என்று உறுதிப் படுத்திக்  கொண்டேன்  முதலில் நினைவு வந்து  தோன்றிய எண்ணமெ நான்  பிழைத்து  விட்டேன்  இறக்க வில்லை என்பதுதான்  தெளிவு வந்ததும்  என் மக்களையும்  மனைவியையும் பார்க்க வேண்டும்  என்றேன் அவர்களும்  வந்தார்கள் சிறிது நேரத்தில்  வார்டுக்கு கொண்டு வந்தார்கள் ஆப்பரேஷன் முடிந்த நாள் எனக்கு பச்சைத் தண்ணீர்கூட கொடுக்க வில்லை நாக்கு வறண்டு தாகம் தாகமாய் இருந்தது சிறிது பஞ்சில் நீர் தெளித்து வாயில் ஒப்பினார்கள்  அன்று இரவு கொஞ்சம் இளநீர் பருகக் கொடுத்தார்கள் பிறகு இர்ண்டு நாட்களுக்கு உப்பு சப்பில்லாத நீர்த்த உணவு என்று ஏதோ கொடுத்தார்கள்வயிற்றில் பெல்டுடன் தான் இருக்க வேண்டுமாம்  மூன்றாம்  நாளே  டிஸ்சார்ஜ் செய்தார்கள் அறுவை செய்த இடத்தில் staple செய்திருந்தார்கள் 24ம் தேதி அதைக்  கட் செய்து பிரித்தார்கள் அதன்  மேல் ஏதோ ப்ளாஸ்டர்  போல போட்டிருந்தார்கள் வாட்டர் ப்ரூஃபாம்  அதன்  விலை ரூ 280/ - இன்னும்  மூன்று மாதங்கள் நான்பெல்டுடந்தான் இருக்க வேண்டுமாம்   ஒரு வழியாய் அறுவைச் சிகிச்சை முடிந்தது அந்தப்ளாஸ்டர் மேல் சிறிது ரத்தக் கசிவு இருந்தது உடனே டாக்டரிடம் கூட்டிப் போனார்கள் அது ஒன்று பாதக மில்லை  என்று டாக்டர் கூறினார்   ஒரு வழியாய் நலமாகவீட்டுக்கு வந்து விட்டேன்   கணினியில் என் வேலை தொடரும் எத்தனையோ உபாதைகளிலிதுவும் ஒன்று கடந்து போயாகிவிட்டது என் மேல் அக்கறை கொண்டு விசாரித்த அனைவருக்கும்  மீண்டும்  நன்றி 

இத்தனை விளக்கமாக எழுதக் கூடாதோ என்ன செய்ய என் வழக்கம்  கூடவே சிலபுகைப்படங்கள் 


அறுவைக்குப் பின்   வார்டில்


அறுத்த இடம்  stapled 
தையல் பிரித்தபின் 





Saturday, March 24, 2018

சில பகிர்வுகள்


                                            சில பகிர்வுகள்
                                             ---------------------


வலை நண்பர்கள் என் உடல் தேற  வேண்டி அன்புடன் ஓய்வு எடுத்துக்கொள்ள  வேண்டுகிறார்கள் அவர்களின்  கனிவுக்கு நன்றி என்னை அறிந்த வர்களுக்குத்  தெரியும்  IF I REST I WILL RUST அதை விட நான் என் நேரத்தை பகிர்வதில் மகிழ்ச்சி அடைவேன்  
எனக்கு ஒரு நண்பர் இருந்தார் அவர் சொல்வதுஇப்போதும்  என் காதில் ரீங்கரிக்கிறது நமக்கு இவ்வளவுதான் தாங்கும்  சக்தி என்று நாம்நினைப்பதை விட  ஆறு மடங்கு நம்மால் தாங்க முடியும் என்பார் அவர்  அது அவர் அனுபவத்தில் கூறியது

மகளின் text  தந்தைக்கு
அப்பா  நான் திருமணம் செய்துகொள்ள வருகிறேன் உங்கள் செக் புத்தகத்துடன் தயாராக  இருங்கள் LOL  உங்களுக்குத் தெரியும்  நான் ஆஸ்திரேலியாவில் இருக்கிறேன்  அவர் யூ எஸ்ஸில்  இருக்கிறார் முகநூல் மூலம் நண்பர்களானோம்  வாட்ஸாப்பில் நிறையப்பேசினோம் ஸ்கைப்பில் அவர் ப்ரொபோஸ் செய்தார் வைபர் மூலம் உறவு தொடர்ந்தது
உங்கள் ஆசிர்வாதம் வேண்டும் வாழ்துகளுடன் விமரிசையாகத் திருமணம் நடக்க வேண்டும்  அன்புடன்  உங்கள் மகள் லில்லி
தந்தையின்  பதில்
அன்புள்ள லில்லிக்கு   wow  நிஜமாகவா ? என் சஜெஸ்ஷன்  நீங்கள் ட்விட்டரில் மண முடியுங்கள் have fun in  Tango அமேசான் மூலம்பொருட்களைப்பெற்றுக் கொள்ளுங்கள் pay pal  மூலம் பணம்  செலுத்துங்கள்இந்தக் கணவன் போதுமென்றாகி விட்டால்   அவனை E bay  மூலம் விற்றுவிடவும்

ஆங்கிலத்தில் வந்த விஷயம்  செய்தி தமிழில் பகிர்கிறேன் 

€ருவாய் என அவன்  ஏங்கி நின்றான் 
வந்ததும் வந்தாய் அவன் சென்றபின் வந்தாய் 
உறவுகளுக்கு ஆறுதல் கூற அவன் இருக்கும்போதே
 வந்திருந்தால் அவனும் மகிழ்ந்திருப்பானே  

அவன் குறைகளை மறந்தாயோ மன்னித்தாயோ
அதை அவன்  அறிவது எங்ஙனம்
அவனுள்ள போதெ செய்திருக்கலாமோ
அவனும் மகிழ்ந்திருப்பானே

அவன் இருந்த போது இன்னும் 
அவனுடன் நெருங்கி இருக்கலாமோ
 இருந்திருந்தால் அவனும்  மகிழ்ந்திருப்பானே

எதற்கும் காலம் தாழ்த்தாமல் இருந்தால் 
நலமாய் இருந்திருக்கும்   என இப்போது
தோன்றுவது அப்போதே செய்திருந்தால்
அவனும்  மகிழ்ந்திருப்பானே

இந்தக் காணொளியைப் பலரும் கண்டிருக்கலாம்   இன்னுமொரு முறையும்  காணலாம்  ஒரு நாயின்  பரிவு என்ன என்று  தெரிய வரும்

இந்த படம் பற்றி ஏதேனும்  யூகம் உள்ளதா  ஒரு க்லூவும் இருக்கிறது லண்டன் இண்டெர் நேஷனல்  கேக் காம்பெடிஷனில்  முதல் பரிசு பெற்ற  சீனாக்காரனின்  கேக் இது சாப்பிடத் தோன்றுமா   

மங்கை ஒரு கேக்காக 







Thursday, March 22, 2018

மீண்டும் வலையில்




                                   மீண்டும்   வலையில்
                                  ----------------------------------

நான் அறுவைச் சிகிச்சையில்  இருப்பேன் என்றும் யாரும்  நான் வலையை விட்டு ஓடவில்லை என்றுபுரிந்து கொள்ளவும் கடைசியாகப்பதிவு எழுதி இருந்தேன்   அதற்கு வந்த பின்னூட்டங்களைப்படித்து பார்க்கும்போது  வலையிலென் நலம் குறித்து அக்கறை  கொண்டவர்கள் இருப்பதை தெரிந்து கொள்ள முடிந்தது  நெகிழ்ச்சியாக இருந்தது  மேலும்  தொலைபேசியிலும் தொடர்பு கொண்டு விசாரித்தார்கள் கில்லர்ஜியும்   தில்லையகத்து  கீதாவும்  பானுமதியும்.   சிகாகோ நண்பர் திரு அப்பாதுரை ஒரு அஞ்சலும்   அனுப்பி இருந்தார்இன்னும்  என் எண்ண ஓட்டங்களை விரிவாக எழுத வேண்டும்  அதிகம் சிரமம்  கூடாது என்னும்  என்மனைவியின்   எச்சரிக்கை என்னை ஒரேயடியாகஎழுத வைப்பதற்கு ஏதுவாக இல்லை  வலையில் எழுதுபவனின்  கைகளை சிரங்கு பிடித்தவன் கைகளுக்கு ஒப்பிடலாமா  சும்மா இருக்க முடியாது  என் அறுவைகளைத் தாங்க தயார்படுத்திக் கொள்ளுங்கள் நண்பர்களே  மீண்டும்  நன்றியுடன்    





Wednesday, March 14, 2018

வலையில் இருந்து சற்று விலகி ....



                              வலையில் இருந்து சற்று விலகி........
                               ---------------------------------------------------------

  இந்தப் பதிவை ஷெட்யூல்ட் செய்து வெளியிடுகிறேன்  இது வெளியாகும் நேரம் நான் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையிலிருப்பேன்
 8ம் தேதி காலை எழுந்தபோது என் தொப்புழ் பகுதியில் வலி இருந்தது  9ம் தேதி என்  கார்டியாலஜிஸ்டைப் பார்க்கப் போனபோது அவரிடம் இது பற்றிக் கூறினேன்  அவர் என்னை அந்தமருத்துவமனை சர்ஜனுக்கு ரெஃபெர் செய்தார்  அவர் என்னை பரிசொதித்துப்பார்த்து அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என்றார் நான்    திங்களன்று  அட்மிட் ஆகிறேன்  என்றேன்  என்னால் வலையுலக நண்பர்கள் நீண்ட இடைவெளி இருந்தால்  கேள்வி கேட்பார்கள் என்று தோன்றியதாலும் என்னால் பதில் கூற முடிய்யது என்பதாலும்  யோசனை செய்து இதை ஒரு ஷெட்யூல் பதிவாக வெளியிடுகிறேன்  umbilical  hernia  என்று ஏதோ சொன்னார்கள் அறுவை சிகிச்சை சாதாரணமானதுதானென்றாலும் என்வயதும் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள வேண்டுமல்லவா  சீக்கிரமே வலையில் சந்திப்பேன்என்று நம்புகிறேன்  அதுவரை பை பை         


Tuesday, March 13, 2018

படங்களும் காணொளிகளும் மட்டும்


                           படங்களும் காணொளிகள் மட்டும்
                          -------------------------------------------------------
இதில் காணும் சிலகாணொளிகளை சிலர் ஏற்கனவே பார்த்திருக்கலாம் இருந்தாலும்  மீண்டும் பார்க்க வைக்கக் கூடியவைதான்

இறகு ஓவியங்கள்


யாரென்று  தெரிகிறதா 

ஐயோ பாவமே 

creativity at its best ---1

creativity  at its best -2

creativity  at its best --3

creativity at its best -4 

creativity at its best --5 

creativity  at its best --6  









Sunday, March 11, 2018

அடைப்புக் குறிக்குள் மேற்கோள் காட்ட


                        அடைப்புக் குறிக்குள் மேற்கோள் காட்ட
                        --------------------------------------------------------------

 நான்  இல்லாவிட்டால்  என்னாகும்.? நானே  என்  நினைவாக  மாறி  விடுவேன்அதுவும்  சில  நாட்களுக்குத்தான்.. இருநதால்  என்ன   சாதிப்பேன் .? 

சாவைப் பற்றி நினைப்பதே சங்கடம் கொடுக்கக் கூடிய ஒன்று தான். அதை எதிர்கொள்கையில் பயம் மட்டும் கூடாதென்பதற்குத் தான் இந்த தேசத்து ஆன்மீக சிந்தனைகளே, மரணத்தை வெல்வோம் என்று கூறுகிறது. வெல்வோம் என்பது அந்த பயசிந்தனையிலிருந்து மீள்வோம், மீள்வதின் மூலமாக அதை வெற்றி கொள்வோம் என்கிற அர்த்தத்தில்.

 உலகோரே   உங்களிடம்   கேட்கிறேன் 
வயோதிகம்   என்பது  செய்யாத   குற்றத்துக்கு 
விதிக்கப்பட்ட   தண்டனையா..?

          ஊனென்றும் உயிரென்றும் ஆன்மா என்றும்
         ஆயிரம்தான் கூறினாலும், அதெல்லாம் ஒன்றின் 
         வியாபிப்பே என்று மெய்ஞானம் கூறுகிறது

அறிந்தவர்கள் என்று அறிந்தவர்கள் கூறும் 
மெய்ஞான சூக்குமம் வசப்படும் முன் நானும் 
மண்ணோடு மண்ணாய்  மக்கிப் போவேன்
அறிய முற்படுவோர் நிலையும்  அதுதான்

            என்றோ எவனோ வரைந்து முடித்த வட்டத்தின் 
            தொடக்கப்புள்ளி தேடி ஏன் சோர்வுற வேண்டும்.?
            அறியாமை இருளில் இருப்பதே சுகம்.

அரசியல்  நடத்தும்  அநியாயம் 
ஊழல்   சாக்கடை   என்றெல்லாம் 
எதிர் மறை  எண்ணங்கள் 
கோஷம்  இட்டே  வந்தாலும் 
உழைப்பும்  ஊக்கமும்   ஒன்றானால் 
அடைவோம்   இலக்கை   நிச்சயமாய் .

            காணும்   கனவுகள்  நனவாக
           
வேணும்   உறுதி   உள்ளத்தில் 
            
இருப்போம்  நாமும்  நல்லவராய்
           
அதுவே  வழி  காட்டும்

நரம்புகளின்   முருக்கேற்றம் நடத்துகிற போராட்டம் வரம்புடைத்து மீறுகிற வார்த்தைகளின்   அரங்கேற்றமாக படிக்கப் படிக்க மகிழ்வூட்டும் திறன்


 கஷ்டத்திலும்  இல்லாமையிலும்  இருந்தே  பழ்ச்கிவிட்ட  எனக்கு , நான் சம்பாதிக்கும்  காசை செலவு  பண்ண மனசு  வரமாட்டேங்குது . ஐயோ  எவ்வளவு  கஷ்டப்பட்டு  சம்பாதிச்சது , இதை செலவு  செய்யலாமாநமக்கு தேவைதான் என்ன ... உடுக்க ஏதோ  துணியும்  உயிர்  வாழ உணவும்  போதாதா ? தேவைக்கு மேல் செலவு செய்பவன்  எங்கோ  ஒரு பிச்சைக்காரனையோ  திருடனையோ  உருவாக்கு  கிறான் என்று காந்தி  சொன்னதாகப்படித்த  ஞாபகம் .

எப்பவுமே ஆண்களையே சார்ந்திருக்கும் பெண்கள் அவர்களின்
நலனுக்காக என்னவெல்லாமோ செய்கிறார்கள்.சோமவார
விரதம், காரடையான் நோன்பு, ரக் பந்தன், இத்தியாதி
இத்தியாதி....ஆனால் இந்த ஆண்கள் பெண்களின் நலன் வேண்டி
ஏதாவது செய்கிறார்களா என்ன.?

  விழுவது எழுவதற்கே என்றே உணர்ந்து விட்டால்
   உடலம் விழும்போது காலனிடம் கூறலாம்,
  "வாடா, உன்னை சற்றே மிதிக்கிறேன் என் காலால்"

-. செயல்பாடுகள் (ACTIVITIES )உன்னை
  
மும்முரமாக்கும். பயன்பாடுகள் (PRODUCTIVITY )பலனை
    
தரும்.செயல்பாடுகள் நேரத்தைக் குடிக்கும். பயன்பாடு
   
அந்தத் தளையிலிருந்து விடுவிக்கும்.

:-முதலில் வாழ்க்கையை ஆராய்ச்சி செய்வதை நிறுத்து.
   
வாழ்க்கையை வாழ். அதை ஆராய்ச்சிசெய்வதே அதை
 
சிக்கலாக்கும்.

வலி தவிர்க்க முடியாதது; ஆனால் வேதனையாக
 
எண்ணுவது நாமே தேடுவது. ( PAIN IS INEVITABLE. BUT
 SUFFERING IS OPTIONAL )

-சோதனைகள் என்பதுமனோதிடத்தை அதிகரிக்க 
 
உதவும் ,விதிக்கப்பட்ட தடைக் கற்கள் தரும் 
 
பாடங்களேபோராட்டங்களிலும் சகிப்பிலுமே மன
 
வலிமை வரும். சோதனைகள் இல்லாதபோது அல்ல.

வெற்றி என்பது மற்றவர் தரும் குறியீடு. கடக்கப்போகும்
பாதையை உணர்ந்து, நீ நிர்ணயிக்கும் திருப்தி எனும்
வெற்றியின் அளவுகோல் கடந்துவந்த பாதையினால்
 
ஏற்பட்டதைவிட சிறப்பாக இருக்கும்.நீ திசைமானியை
 
உபயோகி. மற்றவர்கள் கடிகாரத்தை உபயோகிக்கட்டும்.

- நீ யார் என்று கேள்வி கேட்டு வீணாகாதே. நீ யாராக
 
வேண்டும் என்று தீர்மானி. ஏன் வந்தேன் என்று
 
கேட்காதே. காரணத்தை ஏற்படுத்து. வாழ்க்கை என்பது
 
கண்டுபிடிப்புகளின் ( DISCOVERY ) தொகுப்பல்ல.
  
தோற்றுவிப்பின் செயல்பாடே. (WORK OF CREATION.)


ஒரு காலத்தில்  நாட்டை அரசன் ஆண்டான். பின் அந்தணன் ஆண்டான், பின் பெருந்தனக் காரன் ஆண்டான், ஆள்வதாகவும் மனப்பால் குடிக்கிறான். வேதம் கூறும் நான்கு சாதியினரில் மூவரின் காலம் சிறந்திருக்கிறது இதுவரை. இப்போது, இது , எங்கள் காலம், ஏழைத் தொழிலாளிகளின் காலம். நிறம் மாறும் பச்சோந்திப் பண மூட்டைகளுக்கு சாவு மணி அடிக்கும் எங்கள் காலம்..பாட்டாளிப் பெரு மக்களின் பொற்காலம்.