சில பகிர்வுகள்
---------------------
வலை நண்பர்கள் என் உடல்
தேற வேண்டி அன்புடன் ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டுகிறார்கள் அவர்களின் கனிவுக்கு நன்றி என்னை அறிந்த வர்களுக்குத் தெரியும் IF I REST I WILL RUST அதை விட நான் என் நேரத்தை
பகிர்வதில் மகிழ்ச்சி அடைவேன்
எனக்கு ஒரு நண்பர்
இருந்தார் அவர் சொல்வதுஇப்போதும் என்
காதில் ரீங்கரிக்கிறது நமக்கு இவ்வளவுதான் தாங்கும் சக்தி என்று நாம்நினைப்பதை விட ஆறு மடங்கு நம்மால் தாங்க முடியும் என்பார்
அவர் அது அவர் அனுபவத்தில் கூறியது
மகளின் text தந்தைக்கு
அப்பா நான் திருமணம் செய்துகொள்ள வருகிறேன் உங்கள்
செக் புத்தகத்துடன் தயாராக இருங்கள்
LOL உங்களுக்குத் தெரியும் நான் ஆஸ்திரேலியாவில் இருக்கிறேன் அவர் யூ எஸ்ஸில் இருக்கிறார் முகநூல் மூலம் நண்பர்களானோம் வாட்ஸாப்பில் நிறையப்பேசினோம் ஸ்கைப்பில் அவர்
ப்ரொபோஸ் செய்தார் வைபர் மூலம் உறவு தொடர்ந்தது
உங்கள் ஆசிர்வாதம்
வேண்டும் வாழ்துகளுடன் விமரிசையாகத் திருமணம் நடக்க வேண்டும் அன்புடன்
உங்கள் மகள் லில்லி
தந்தையின் பதில்
அன்புள்ள லில்லிக்கு wow
நிஜமாகவா ? என் சஜெஸ்ஷன் நீங்கள்
ட்விட்டரில் மண முடியுங்கள் have fun in
Tango அமேசான் மூலம்பொருட்களைப்பெற்றுக் கொள்ளுங்கள் pay pal மூலம் பணம்
செலுத்துங்கள்இந்தக் கணவன் போதுமென்றாகி விட்டால் அவனை E bay
மூலம் விற்றுவிடவும்
ஆங்கிலத்தில் வந்த
விஷயம் செய்தி தமிழில் பகிர்கிறேன்
€ருவாய்
என அவன் ஏங்கி நின்றான்
வந்ததும்
வந்தாய் அவன் சென்றபின் வந்தாய்
உறவுகளுக்கு
ஆறுதல் கூற அவன் இருக்கும்போதே
வந்திருந்தால் அவனும் மகிழ்ந்திருப்பானே
அவன்
குறைகளை மறந்தாயோ மன்னித்தாயோ
அதை
அவன் அறிவது எங்ஙனம்
அவனுள்ள
போதெ செய்திருக்கலாமோ
அவனும்
மகிழ்ந்திருப்பானே
அவன்
இருந்த போது இன்னும்
அவனுடன்
நெருங்கி இருக்கலாமோ
இருந்திருந்தால் அவனும் மகிழ்ந்திருப்பானே
எதற்கும்
காலம் தாழ்த்தாமல் இருந்தால்
நலமாய்
இருந்திருக்கும் என இப்போது
தோன்றுவது
அப்போதே செய்திருந்தால்
அவனும் மகிழ்ந்திருப்பானே
இந்தக் காணொளியைப் பலரும் கண்டிருக்கலாம் இன்னுமொரு முறையும் காணலாம் ஒரு நாயின் பரிவு என்ன என்று தெரிய வரும்
இந்த படம் பற்றி ஏதேனும் யூகம் உள்ளதா ஒரு க்லூவும் இருக்கிறது லண்டன் இண்டெர் நேஷனல் கேக் காம்பெடிஷனில் முதல் பரிசு பெற்ற சீனாக்காரனின் கேக் இது சாப்பிடத் தோன்றுமா
![]() |
| மங்கை ஒரு கேக்காக |
