புதுப்பேய் (ஒரு சுட்ட கதை)
வேதபுரம் எலிக்குஞ்சு செட்டியார் மகளுக்குப் பேய் பிடித்திருக்கிறது. பெயர் காந்திமதி. பெண் நல்ல அழகு. சிவப்பு நிறம். முகத்தில் ஒரு மாசு மறு இல்லாமல் நிலா வீசும். மென்மையான பூங்கொடியைப் போல் இருப்பாள். இரண்டு மூன்று பாஷைகள் தெரியும்.
நேர்த்தியாகப் பாடுவாள். வீணை வாசிப்பாள். தினந்தோறும் வர்த்தமானப் பத்திரிகைகள் படித்து உலகத்தில் நடைபெறும் செய்திகளை வெகு நுட்பமாகத் தெரிந்துகொள்ள முயற்சி செய்வாள். யாரேனும் ஒரு மந்திரி, அல்லது ஒரு பெரிய ராஜ்ய தந்திரி, அல்லது பெரிய ஞானாசார்யர் தனத்தலைவர் ஆகிய இவர்கள் பேசும் வார்த்தைகளுக்குள்ளே தொளைத்துப் பார்த்துக் கால் மைல் தூரம் அர்த்தம் கண்டுபிடிப்பாள். உபந்நியாசம் செய்வோர் சொல்லக் கூடாதென்று மறைத்து வைக்கும் வார்த்தையைக் கூடக் கண்டு பிடித்துச் சொல்லுவாள். பெண் நல்ல புத்திசாலி.
இவளுக்குப் போன மாசம் வரையிலே ஒரு குறையும் கிடையாது. ஸாதாரணமாக இருந்தாள். தீடீரென்று ஒரு வெள்ளிக்கிழமை மாலை தலை சுற்றி ஆடத் தொடங்கிவிட்டாள்.
‘ஹா’ என்று கத்துவதும், சிரிப்பதும், பிதற்றுவதும் பெரிய அமளியாய் விட்டது. செட்டியார் என்னை வந்து கூப்பிட்டார். நான் பார்க்கப் போனேன். என்னைக் கண்டவுடன் காந்திமதி கடகடவென்று சிரித்தாள். கண்ணைப் பார்த்தால் வெறி பிடித்தவளைப் போல் இருந்தது “காந்திமதி, உனக்கு என்ன செய்கிறதம்மா?” என்று கேட்டேன். மறுமொழியில்லை. இரண்டு மூன்று தரம் வற்புறுத்திக் கேட்ட பிறகு, “ஹா, காளிதாசனா? வா வா, தூங்குகிறாயா? எழுப்ப வந்தேன், காளிதாசனா? ஓஹோ; கவியெங்கே, என்மேலே பாட்டுப் பாடு நான் புதுப் பேய்… ஆஹா வெனேஜெலோஸ், மடாதிபதி, தென் ஆப்பிரிகா, வீணை, திருச்சினாப்பள்ளி பாட்டுப் பாடு” என்று எதெல்லாமோ சொன்னாள். நான் திகைத்துப் போய்விட்டேன்.
“எப்படியிருந்த புத்தி!” என்று சொல்லி எலிக்குஞ்சு செட்டியார் கண்ணீருதிர்த்தார். “ஏனம்மா? பிதற்றுகிறாயே, உனக்கு உடம்பு என்ன செய்கிறது?” என்று மறுபடியும் கேட்டேன்.
“எனக்கு உடம்பு ஒன்றுமில்லை. நான் புதுப்பேய். உங்களுக்கெல்லாம் நோய் பிடித்திருக்கிறது.. நான் அதை நீக்கிவிட வந்தேன். விபூதி கொண்டு வா” என்று காந்திமதி அலறத் தொடங்கினாள். எலிக்குஞ்சு செட்டியார் ஒரு பித்தளைத் தட்டிலே விபூதி கொண்டுவந்து என் கையிலே கொடுத்தார். நான் பெரிய மந்திரவாதி என்று அவருடைய அபிப்பிராயம். ஏதாவது வியாதி சாதாரணமாக நரம்புகளைப் பற்றியதாக இருந்தால் மந்திரம் செய்து நோயாளியின் மனத்தை உறுதியாக்கி வியாதியை விரைவிலே ஒழித்துவிடலாம். பேய்க்கு மந்திரம் செய்யும் வழி எனக்குத் தெரியாது. தவிரவும் எனக்குப் பேய் பிசாசுகளின் நம்பிக்கை கிடையாது.
எதற்கும் ஒரு கை பார்க்கலாமென்று உத்தேசித்து விபூதித் தட்டைக் கையிலே வாங்கிக் கொண்டேன். காந்திமதி படீரென்று பாய்ந்து என் கையிலிருந்த தட்டைப் பிடுங்கிக் கொண்டாள்.
““ஹா, ஹா, ஹா! எனக்கா விபூதி போட வந்தாய்? சும்மா இரு. அப்படியே கண்ணை மூடிக் கொள்ளு. நான் உனக்கு விபூதி போடுகிறேன். எலிக்குஞ்சு, நீயும் வா, அப்படியே உட்காரு, உனக்கும் விபூதி போடுகிறேன். இன்னும் உங்கள் கூட்டத்தையெல்லாம் அழைத்து வா. எல்லாருக்கும் விபூதி போடுகிறேன். தென் அப்பிரிக்கா ரஜூல் முஸ்லிம் சங்கம், மதன்மோஹன் மாளவியா, திருச்சினாப்பள்ளி பண்டார, ‘டாக்டர்’ கிழநரி, சென்னப்பட்டணம், கொண்டுவா, கொண்டுவா. எல்லோருக்கும் நான் விபூதி போடுகிறேன்” என்றாள்.
எலிக்குஞ்சு செட்டியார் விம்மி விம்மி அழத் தொடங்கினார்.
“அழாதே, கோழையே, போ, வெளியே போ” என்றாள் காந்திமதி.
எலிக்குஞ்சு செட்டியார் வெளியே போய்விட்டார். அவராலே துக்கம் பொறுக்க முடியவில்லை.
“பேய், பிசாசுகளே கிடையாது. எல்லாம் பொய்” என்று சொன்னேன். காந்திமதி சிரித்தாள்.
“பேயில்லை” என்று மறுபடி சொன்னேன்.
“புதுப் பேய்” என்றாள்.
யான்: என்ன வேண்டும்?
அவள்: விளக்கு.
அவள்: நெய் விளக்கு.
யான்: என்ன நெய்?
அவள்: புலி நெய்.
யான் : எங்கே கிடைக்கும்
அவள்: காட்டிலே
யான் :எந்தக்காட்டிலே
அவள்: பொதியமலைக் காட்டிலே
எனக்குக் கோபம்வந்து விட்டது
காந்திமதி உனக்குப் புத்தி சரியில்லை.நான் மந்திரத்தால் உன்னைக் குணப்படுத்தப் போகிறேன் கொஞ்ச நேரம் பேசாமலிரு பேசினால் இந்தப் பிரம்பாலே அடிப்பேன் என்று பயமுறுத்தினேன் ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்துஎன் கையிலிருந்த பிரம்பைப் பிடுங்கி முறித்தெறிந்து விட்டாள் பிறகு மறுபடியும் அலறத் தொடங்கினாள்“
நெய், நெய், நெய் கொண்டுவா. நட, நட. தூங்காதே, எழுந்திரு. நான் புதுப் பேய். எல்லோரும் நெய் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்தப் பெண்ணை மிகவும் கஷ்டப்படுத்துவேன்” என்றாள்.
“காந்திமதி, நீ சொல்லும் வார்த்தை அர்த்தமாகவில்லையே” என்றேன். “அர்த்தமா தெரியவில்லை? காளிதாசன், காளிதாசன்! கதை கதை” என்று சொல்லி எதெல்லாமோ பிதற்றிய பின்பு ‘ஹா’ என்று மற்றொரு முறை அலறி, அப்படியே மூர்ச்சை போட்டு விழுந்தாள். நான் பெருமூச்சுடன் வெளியேறினேன். சுமார் அரை மணி நேரம் கழிந்த பின்பு, செட்டியார் மறுபடி வந்து கூப்பிட்டு, “காந்திமதிக்குத் தெளிந்துவிட்டது” என்றார். பின்பு போய்க் கேட்டபோது, பேயாடிய விஷயம் ஞாபகமில்லையென்று சொல்லுகிறாள். இப்படி இரண்டு மூன்று வெள்ளிக் கிழமையாய் நடந்து வருகிறது.
இதனுடைய ஸூக்ஷ்மம் தெரியவில்லை. எனக்குப் பேய் பிசாசில் நம்பிக்கை கிடையா
வாசகர்கள்புலிகளாச்சே இந்த கதை எங்கிருந்து யாரிடமிருந்து சுட்டது என்று கண்டு பிடிக்க முடிகிறதா பாருங்கள்
எலிக்குஞ்சு செட்டியார் and vilakennai chetti were the nick names used by our meesai kavi Bharathiyar ..i assume this story was written by him .shall come again to comment about the story
பதிலளிநீக்குமுதலில் வருகை தந்து பாரதியை அடையாளம் கண்டு கொண்டதற்கு பாராட்டுகள் அஞ்சலை
நீக்குதிருமதி ஏஞ்சலின் சரியாக் சொல்லியிருக்கிறார். இது தேசியக்கவி சுப்பிரமணிய பாரதியாரின் கதை தான். 1916 ஆம் ஆண்டு மே திங்கள் 13 ஆம் நாள் இதை அவர் எழுதியிருப்பதாக அறிகிறேன். சரிதானே?
பதிலளிநீக்குமிக்க நன்றி .உங்க ப்ரொபைல் படம் எப்பவும் ஒருவரை எனக்கு நினைவூட்டும் ..நான் முதல்முதலா ஒரு ஸ்கூல் டீச்சர் போஸ்டுக்கு நேர்காணலுக்கு சென்றேன் அவர் அப்படியே உங்களைப்போல பெயரும் உங்க பெயர்த்தான்
நீக்குகருத்துக்கு நன்றி திருமதி ஏஞ்சலின் அவர்களே! தாங்கள் நேர்காணலில் சந்தித்தவர் என்னைப்போல் இருப்பதும், அவரும் என் பெயரைத் தாங்கியிருப்பதும் வியப்பைத் தருகிறது!
நீக்குஆம் ஐயா நூறாண்டுக்கும் முந்தைய கதை அஞ்சலைக்கு அவர் சந்தித்தவரின் நினைவு உங்கள் ப்ரொஃபைல் படமும் பெயரும் பார்த்து ஒன்றிலிருந்து இன்னொன்று வருகைக்கு நன்றி ஐயா
நீக்குசொந்தத்தில் கதை எழுதும் திறன் இருந்தும், செத்துப்போனவர்களின் கதைகளைச் சுடுவது முறையா, நீதியா, தருமமா?
பதிலளிநீக்கு- இராய செல்லப்பா நியூஜெர்சி
சொந்தத்தில் எழுதும் கதைகளை ரசிப்பதைவிட செத்துபோனவரின் சுட்டகதையை யாரும் விமரிசிப்பதில்லை. நான் சொந்தமாக எழுதும் கதையை விட இது தேவலாமா நீதி தருமம் எல்லாம் இல்லை ஐயா
நீக்குஆனாலும் சுவாரஸ்யம்தான்.
பதிலளிநீக்குஉண்மையைச் சொல்லப் போனால் எனக்கு இந்தக் கதை ரசிக்க வில்லை ஸ்ரீ. ஆனால் பாரதியின் பெயர் கொண்டதாயிருந்தால் ரசிக்கத்தான் வேண்டுமோ
நீக்குஆனாலும் சுவாரஸ்யம்தான்.
பதிலளிநீக்குசுட்டகதை புதுமையாகத்தான் இருக்கு.
பதிலளிநீக்குமிகப்பழமையாக இருக்கிறது ஜி வருகைக்கு நன்றி
நீக்குசுட்ட கதையென்றாலும் வாசிக்க நல்லா இருக்கு ..
பதிலளிநீக்குஎலிக்குஞ்சு செட்டியார் பெயரை வைத்து மட்டுமே இது பாரதியார் எழுதியது என கணித்தேன் ..
ஸ்கூல் படிக்கும் போது எங்களுக்கு அக்டொபர் விடுமுறையில் ஜெனரல் நாலெட்ஜ் பரீட்சை வைத்து அதில் 80% எடுத்தா சான்றிதழும் தருவாங்க அப்போ அதுக்கு கொடுத்த புத்தகத்தில் இந்த பெயர் அப்புறம் வெங்காயத்திருடன் யார் எலிக்குஞ்சு செட்டியார் யார் அதன் பெயர்க்காரணம் இந்த கேள்விலாம் இருக்கும் .அதை வைத்தே எழுதினேன் .
கீச் கீச்னு பேசுவாராம் பாரதியாரின் நண்பர் அதனால் அவருக்கு பாரதியார் வைத்த நிக் நேம் எலிக்குஞ்சு செட்டியார்னு எங்க தமிழ் ஆசிரியை சொன்னார் ..
எலிக்குஞ்சையும் எம்மோடு கூட்டணி சேர்த்திடுவோம்ம்:)
நீக்குஅஞ்சலை வாசிக்க நன்றாகைருக்கலாம் சிறு கதையின் லட்சணங்கள் பற்றி பேசுவோர் கருத்து சொல்ல வேண்டும்புகழ் பெற்றவர் எதை எழுதினாலும் பாதகமில்லை
நீக்குஇதற்கு முன் பாரதி எழுதிய குதிரை கொம்பிழந்த கதையைப் பகிர்ந்திருந்தேன்இதிகாசக் கதையை நையாண்டி செய்தது போல் இருக்கும் அதேபோல் நாம் எழுதினால் எதிர்ப்புகள் எல்லா இடங்களிலிருந்தும் வரும் அதிரா யார் வேண்டுமானாலும் யாரிடமும் கூட்டு வைத்துக் கொள்ளலாம் நாம் பாதிக்கப்படாமல் இருந்தால் சரி
நீக்குஅதிரா பூஸ்!!! எலிக் குஞ்சை கூட்டுச் சேத்துக்கணுமா இது என்ன உங்கள் வீட்டில் எலியே இல்லையோ...பூஸுக்கு எலியைக் கண்டதும் ஆசை வந்துட்டது போல்....சரி சரி டாம் அண்ட் ஜெடி விளையாடலாம்...
நீக்குகீதா
சுட்ட கதை என்றாலும் சுவையாகத்தான் இருக்கிறது ஐயா
பதிலளிநீக்குநன்றி
பாரதியார் எழுதியது அல்லவா வேறெப்படிக் கூற முடியும் வருகைக்கு நன்றி சார்
நீக்குஎழுத்து நடையை வைத்தே பாரதியார் என்று புரிந்து கொள்ள முடிந்தது. ஏற்கெனவே எல்லோரும் சொல்லிட்டாங்க! :)
பதிலளிநீக்குவலையில் மேய்ந்து கொண்டிருந்தபோது அகஸ்மாத்தாகக் கண்டது முன் காலத்து நடை இப்படித்தானோ வருகைக்கு நன்றி மேம்
நீக்குசுட்டகதை என் கையில சுட்டுப்போட்டுது:)... எனக்கு நீங்க நஷ்ட ஈடு தரோணும்:).. பேய்க் கதை படிச்சதால இரவு எனக்கு பேய்க் கனவு வரப்போகுது:).. எனக்கு கனவுகள் கண்டநிண்டபடி வரும்:)..
பதிலளிநீக்குஎனக்குக் கனவுகள் நினைவுக்கு வந்தால் கதையாக்கி விடுவேன் நஷ்ட ஈடாக எம் படைப்புகளைத் தொடர்ந்து படியுங்கள் சில அரிய படைப்புகளும் இருக்கும்
நீக்குஎலிக்குஞ்சுச் செட்டியார்.. புதுப்பேய்.. ரொம்ப அருமையான பெயர்கள்.. அதுசரி இப்போ இந்தக் கதையைப் படிச்சிட்டு.. பாரதியாரைப் பாராட்டுவதா? இல்ல உங்களைப் பாராட்டுவதா?:) எனக்கு டவுட்டு டவுட்டா வருதேஏஏஏஏஏஏ:))...
பதிலளிநீக்குபாரதியாரைப் பாராட்டுவது உங்கள்விருப்பம் ஏன் சொந்தக் கதை எழுதாமல் பாரதியிடமிருந்து சுட்டீர்கள் என்னும் கேள்வி வந்தாயிற்றுஎன்னைத் திட்டாமல் இருந்தால் சரி
நீக்குபாதிக் கதை படிக்கும்போதே மகாகவியின் நினைவு வந்து விட்டது..
பதிலளிநீக்குசுட்டது என்றாலும் சுவை தான்..
நடையை வைத்து இது ஒரு பழைய கதை என்று சொல்லலாம் ஆனால் பாரதியுடையது என்று சொல்ல முடிந்தால் நீங்கள் பாரதியை நிறையப்படித்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது வருகைக்கு நன்றி சார்
நீக்குசுட்ட பழம் சுவையோ சுவை.
பதிலளிநீக்குஇங்கே படிக்கத் தந்தமைக்கு நன்றி.
நீங்கள் ரசித்தீர்களா.? வருகைக்கு நன்றி சார்
நீக்குமகாகவியின் கதையை வாசிக்க கொடுத்தமைக்கு மிகவும் நன்றி ஐயா.....
பதிலளிநீக்குஇணையத்தில் நிஆஐயவே கிடைக்கிறது வருகைக்கு நன்றி மேம்
நீக்குதட்டச்சுப் பிழை நிறையவே அப்படி ஆகிவிட்டது
நீக்குசுட்ட கதை பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குபாரதியின் கதை என்றால் கருத்திருக்காதோ வருகைக்கு நன்றி மேம்
நீக்குசுட்டாலும் சுவையே!
பதிலளிநீக்குமேன்மக்களிடமிருந்து சுட்டது சுவைக்கிறதோ வருகைக்கு
நீக்குநன்றி ஐயா
எழுதியது யாரென்று தெரிகிறது ,காந்திமதி தெளிந்தது எப்படி :)
பதிலளிநீக்குபகவான் ஜி காந்திமதி தெளிந்தது என்று சொல்லுவது அப்போதைக்கு. மீண்டும் அவளுக்கு இப்படி எழலாம். எல்லாமே நம் மண்டை ஓட்டிற்குள் இருக்கும் அந்த சிறிய உறுப்பு மூளை எனும் உறுப்பில் ஏற்படும் ரசாயன மாற்றங்களினால் நிகழ்வது...இதைப் பற்றிப் பேச வேண்டும் என்றால் அது ஒரு ஆழம் மிக்க கடல்...இங்கு பேசிப் புரிந்து கொள்ள முடியாதுஜி...
நீக்குகீதா
@பகவான் ஜி
நீக்குகாந்திமதி தெளிந்தது எப்படி என்று அந்த பாரதிக்கே வெளிச்சம்
சுட்ட கதை!! பாரதியின் கதை! எப்போதோ வாசித்த நினைவு இருந்தது இருவருக்கும்....முதலில் வந்தவர்கள் எல்லோரும் சொல்லிவிட்டார்கள்!! மீண்டும் இங்கு வாசிக்க முடிந்தது..
பதிலளிநீக்குவாசித்தது பாரதியை அல்லவா எத்தனை முறை வேண்டுமானாலும் வாசிக்கலாமே வருகைக்கு நன்றி
நீக்குஇது நிச்சயமாகப் பேய் சம்பந்தப்பட்டது இல்லை....சைக்கியாட்ரி....
பதிலளிநீக்குகீதா
பாரதி சொன்னார் புதுப் பேய் என்று அவரிடம் கேட்கவா முடியும் இது வேறு என்று எனக்கும் உங்கள் கருத்தில் உடன்பாடே
நீக்குசுட்ட கதையா - அது
பதிலளிநீக்குநல்ல கதையாச்சே!
மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017
https://seebooks4u.blogspot.com/2017/03/2017.html
கதையை ரசித்ததற்கு நன்றி ஐயா புகழெல்லாம் பாரதிக்கே
நீக்குமின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017
https://seebooks4u.blogspot.com/2017/03/2017.html சுட்டிக்கும் சென்று படித்தேன் தமிழே உலகின் முதல் மொழி என்று ஆதாரத்துடன் சொல்லும் வலிமை என்னிடம் இல்லை. இருந்தாலும் தமிழ் மொழி குறித்த சில எண்ணங்கள் இருக்கிறது. அதைப் பதிவிடுகிறேன் படித்துப் பார்த்து அது உங்கள் வெளியீட்டில் வரக் கூடியதா என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள் சில செய்திகளைப் பதிவிலோ பின்னூட்டத்திலோ பதிய இயல வில்லை. உங்கள் முகவரி இருந்தால் பகிர நலமாயிருக்கும் ஆட்சேபணை இல்லை என்றால் தெரிவிக்கவும் நன்றி
நீக்குதமிழே உலகின் முதல் மொழி என்று நிருபிக்கச் சில குறிப்புகள்
http://www.ypvnpubs.com/2017/03/blog-post_24.html
"தமிழ் மொழி குறித்த சில எண்ணங்கள் இருக்கிறது. அதைப் பதிவிடுகிறேன்." என்றதே பெருமகிழ்ச்சி ஐயா!
தாங்கள் விரும்பிய தலைப்பில் முன்கூட்டியே எழுதிய பதிவாகவோ புதிதாக எழுதிய பதிவாகவோ இருந்தாலும் தங்கள் பதிவுகளை தங்கள் வலைப்பூக்களில் வெளியிட்ட பின்னர், அதற்கான இணைப்பை wds0@live.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்க வேண்டும்.
தனிப்பட்ட தொடர்புக்கு: yarlpavanang1@gmail.com
பேய் விரட்டிவிட்டதோ என்னவோ அருகில் வர தாமதமாகிவிட்டது. பொறுத்துக்கொள்க. சங்கு சுட்டாலும் மேன்மை தரும் என்பது போல....சுட்டாலும் மேன்மைதானய்யா உங்கள் கதை.
பதிலளிநீக்குஐயா சுட்டிக்காட்டுவதற்கு மன்னிக்கவும் கெட்டாலும் மேம்மக்கள் மேன் மக்களே சங்கு சுட்டாலும் வெண்மை தரும் என்றே படித்த நினைவு
நீக்குarumaiya irukku..... ..suttaalum padikka suvakka nandraaga irukkirathe. He must have subtly meant 1000 other things via this story.
பதிலளிநீக்குபுதுப்பேய் கதை பாரதி இயற்றியதற்கான காரணம் காலம் கதைப் பிண்ணனி பற்றி கூறுங்கள் pls
பதிலளிநீக்குஎனக்கு அதெல்லாம் தெர்யாது கற்பனை வற்றும்போது மனசில் தொன்றுவதை எழுதுவேன் பாரதிக்கும் அப்படி இருந்திருக்கலாம்காலம் அப்வியஸ்லி அவ்ர் வாழ்ந்தகாலம் கதை படித்தோமா ரசித்தோமா என்றில்லாமல் கேள்வி கேட்கக் கூடாது இந்தபதிலே சிலருக்கு அதிகப்பிரசங்கிதனமாக தோன்றலாம்
பதிலளிநீக்கு