மறக்க மனம் விடுவதில்லையே
----------------------------------------------
நேற்று
என்னவோ மனசே சரியாயிருக்கவில்லை.
காரணம்தெரியாத ஒரு சஞ்சலம் அப்போதுதான்
என் மனைவி சொன்னாள் இது மார்ச்
இரண்டாம் தேதியின் இஃபெக்டாக இருக்கலாம்
என்று. இருக்கலாம்தான் அது ஆயிற்று அறுபது ஆண்டுகள் அவர் இருந்திருந்தால் 108 வயது
முடிந்திருக்கும் நினைவுகள்
நினைவுகள் நினைவுகள் ஆண்டுகள் எத்தனை
போனால் என்ன அப்பாவின் நினைவுகளுக்குக்
குறைவில்லை அவரை ஒரு ஹீரோவாக, நண்பனாக, காரியவாதியாக ரசிகராக முன்
எச்சரிக்கை மிகுந்தவராக என்று பல பரிமாணங்களில் பார்த்திருக்கிறேன் என்
மேல் அலாதி அன்பு செலுத்தியவர் என்னை மேல் படிப்பு படிக்க முடியாமல் போன
கையாலாகதவராக மிகவும் ஃபீல்
செய்திருக்கிறார் அப்போது நீலகிரியில் கல்லூரி ஏதும் இருக்கவில்லை கல்லூரி போகவேண்டுமென்றால் கோவைக்குத்தான் போக வேண்டும் ஹி குட் நாட்
அஃப்ஃபோர்ட் தட்
.
அவரை ஒரு அசடனாகச் சித்தரிப்பதில் என்
தாய் வீட்டுக்காரர்களுக்கு ஒரு
குஷி.திருமணம் முடித்தபோது அப்பாவுக்குக்
குடுமி இருந்ததாம் முதன் முதலில்
கால்களுக்கு ஷூ அணிந்த போது கால்கள் மாற்றிப் போட்டுக் கொண்டாராம்
ஆனால்
அவர்களுடைய மூக்கை தகுந்த நேரத்தில் உடைத்தவர் அவர். என் தாயார் இறந்தபோது என் சித்தியையே மறுமணம்
செய்ய வேண்டினார்கள் ஆனால் அவருக்கென்று ஒரு மனம்
இருக்கத்தானே செய்தது தன் தங்கையை
தன் மச்சினனுக்கே திருமணம் செய்வித்து அது
முடிந்ததும் தான் இஷ்டப்பட்ட வேறோர் பெண்ணை மணம் முடிந்து அவர்கள் எண்ணங்களைத்
தகர்த்தவர்
அவர்
ஒரு நாள் மிகவும் வருத்தத்தில் இருந்தார்
காரணம் என் தம்பி யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் எங்கோ ஓடிவிட்டான் வெல்லிங்டனிலும் கூனூரிலும் தேடினார் ஒரு ஹோட்டல் விடாமல் எல்லா இடங்களுக்கும் சென்று விசாரித்திருக்கிறார் அப்போதெல்லாம் எல்லா இடங்களுக்கும் நடந்தே
செல்ல வேண்டிய கட்டாயம் ஒரு வேளை ஊட்டிக்குச்
சென்றிருப்பானோ என்னும் சந்தேகம் இருந்தது
ஊட்டி நாங்கள் இருந்த வெல்லிங்டனில் இருந்து சுமார் இருபது கி மீ க்கும் மேல் இருந்தது
அடுத்தநாள் அங்கும் சென்று அலைந்து
திரிந்து ஏமாற்றத்துடன் திரும்பினார் உணவு செல்லவில்லை உறக்கம் வரவில்லை இரண்டு நாளில் மிகவும் நலிந்து விட்டார் என்ன செய்வது என்று
தெரியவில்லை இப்போது போல் தகவல் தொடர்புகள் எளிதல்ல. எங்கே போனானோ என்ன
செய்கிறானோ என்றே கவலையிலாழ்ந்தார்
அவனிடம் யாராவது கடுமையாக நடந்து கொண்டார்களா
என்று அடிக்கடி விசாரித்துக் கேட்டுக் கொண்டார் இவ்வாறு மூன்று நான்கு
நாட்கள் கழிந்தது ஐந்தாவது நாள் என்று நினைக்கிறேன் அப்பாவுக்கு என் மாமா ஒருவரிடமிருந்து ஒரு
கார்ட் வந்தது அதில் என் தம்பி பாலக்
காட்டில் மாமாவின் அத்தைமகள் வீட்டுக்கு வந்து போனதாக தகவல் இருந்தது முன்பெல்லாம்
கடிதங்கள் எழுதினால் ஓரிரு நாட்களில் வந்து விடும் ( அது அந்தக் காலம் ) என் அப்பா பாலக்காட்டுக்குப் பயணமானார் அங்கு
என் அம்மாவின் (சித்தி) வீட்டில் அவனைக்
கண்டு பிடித்தார் என் அம்மாவின் உறவு அவர் எங்களுடன் அரக் கோணத்தில் இருந்தவர் என் தம்பிக்குப் பிடித்தமானவர்
பிறகென்ன அவனைக் கூட்டிக் கொண்டு வந்தார்
எங்களுக்கெல்லாம்
ஒரே ஆச்சரியம் இவனிடம் காசு ஏதும்
இருக்கவில்லை பின் எப்படி பாலக்காடு
சென்றான் அவன் சொன்னதைக் கேட்டபோது நம்பமுடியவில்லை
ஆச்சரியமாக இருந்தது வீட்டில் போர் அடித்ததால்
மேட்டுப்பாளையம் வரை ( சுமார் முப்பது
கிமீ/ )தண்டவாளங்களிலேயே நடந்து சென்றானாம்
பின் அங்கிருந்து டிக்கட்
வாங்காமல் பாலக் காடு வரைப் பயணம் நினைத்துப் ,பார்க்கும் போது இன்றும் ஆச்சரியம் வருகிறது ப்ராடிகல் சன் என்று படித்ததுண்டு. அப்பா அவனிடம் கோபித்துக்
கொள்ளாமல் செல்லம் கொஞ்சியது அதை விட
ஆச்சரியம்
தாயைப் பற்றி பேசும் நாம் தந்தையை பற்றி அதிகம் பேசுவதில்லை. காரணம் தந்தையின் அன்பும், ஆதரவும் கண்ணுக்குத் தெரியாதவை (Invisible) ஆனால் அவரை இழந்தபின் அவரின் நினைவு இருந்துகொண்டே தான் இருக்கும். அந்த வகையில் தங்களின் தந்தையைப் பற்றிய நினைவு வந்திருக்கலாம்.
பதிலளிநீக்குதங்களால் மறக்கமுடியாத நினைவுகளை பகிர்ந்தமைக்கு நன்றி!
என் தாயின் நினைவே எனக்கில்லை. இளவயதிலேயே தவறி விட்டார்கள்அறுபது ஆண்டுகள் கழிந்து விட்டாலும் நினைவுகள் பசுமையாக இருக்கிறதுவருகைக்கு நன்றி ஐயா
நீக்குவித்தியாசமான தந்தை...
பதிலளிநீக்குமறக்கவே முடியாது ஐயா...
எல்லோரைப் ப்;ஓலவும் அவரும் என்றே நினைக்கிறேன் எனக்கு மறக்க முடியாத நினைவுகள் வருகசிக்கு நன்றி டிடி
நீக்கு#அவரை ஒரு அசடனாகச் சித்தரிப்பதில் என் தாய் வீட்டுக்காரர்களுக்கு ஒரு குஷி.#
பதிலளிநீக்குபல வீடுகளில் இப்படித்தான் ,இதென்ன மனோபாவமோ தெரியவில்லை :)
அதுவும் உலகம் தெரியாதவர் என்றால் கேட்கவே வேண்டாம் ஆனால் அவர் எல்லோர் எண்ணங்களையும் பொய்ப்பித்து விட்டார் வருகைக்கு நன்றி ஜி
நீக்குஉண்மையிலேயே மறக்க முடியாத தந்தையாகத்தான் தங்களின் தந்தைஇருந்திருக்கிறார்
பதிலளிநீக்குபோற்றுதலுக்கு உரியவர்
எனக்கு எல்லாமாக இருந்ததால்தான் என்னவோ எனக்கு ஒரு கூடுதல் மதிப்பு.வருகைக்கு நன்றி சார்
நீக்குதந்தையிடம் கொண்ட அன்பும் புரிதலும் ஆழ்மனதுக்கு மட்டுமே புரிந்த ரகசியங்கள். அவர்களின் பிரிவு படுத்தும் பாடு வர்ணிக்க இயலாது. காலமும் வருடங்களும் உருண்டோடினால் தான் என்ன!
பதிலளிநீக்குஇத்தனை ஆண்டுகளுக்குப் பின் ஆப்ஜெக்டிவாக சிந்திக்க முடிகிறது வருகைக்கு நன்றி மேம்
நீக்குபல வீடுகளிலும் தங்கள் மகள் சொல்வதை மாப்பிள்ளை கேட்டு அப்படியே நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள், எதிர்பார்க்கிறார்கள்! ஆகையால் அதைக் கேட்காத மாப்பிள்ளை அசடே! :)
பதிலளிநீக்குஎனக்குத் தெரிந்தவரை என் அப்பா என் தாய் சொல்லைத் தட்டாதவர் என்றே தோன்றுகிறது வருகைக்கு நன்றி மேம்
நீக்குபடம் யாருடையது ? அப்பாவுடையதா, தம்பியுடையதா?
பதிலளிநீக்குசின்னம்மாவைப் பற்றியும் எழுதுங்களேன்.(இப்போது உங்கள் ஊருக்கு நாலு வருடப் பயணமாக வந்திருக்கும் அந்த சின்னமாவைப் பற்றி அல்ல!)
படம் அப்பாவுடையது சின்னம்மா பற்றி ஆங்காங்கு எழுதி இருக்கிறேன் வருகைக்கு நன்றி சார்
நீக்குநினைவுகள் மனதை விட்டு மறைவதில்லை. என் தந்தை இறந்து இன்னும் ஒருவருடம் கடக்கவில்லை. மனதில் நிறைய நினைவுகள். கோபமும் வரும், நெகிழ்வும் வரும்.
பதிலளிநீக்குஇறாஅந்து ஒரு வருடம் கூட கடக்க வில்லை என்றால் மறைந்ததே தெரியாதே. ஆண்டுகள் பல கழிந்து நினைக்கும்போது ஆப்ஜெக்டிவாக நினைக்க முடிகிறதுகோபம்வரும் என்பது ஆச்சரியமே வருகைக்கு நன்றி ஸ்ரீ
நீக்குதந்தையின் நினைவுகளை பகிர்ந்து கொண்டது மனம் பாரம் குறைந்து இருக்கும். உங்கள் அப்பா உங்கள் தம்பியை பிரிந்து வேதனையை உணர முடிகிறது.
பதிலளிநீக்குஅருமையான எழுத்து.
அதென்னவோ கடந்த இரண்டு மூன்றாண்டுகளாக மார்ச் முதல் வாரத்தில் அப்பாவின் நினைப்புகள் பதிவாகிறது வருகைக்கு நன்றி மேம்
நீக்குபிரிந்த போது ஏற்பட்ட வேதனை ஒன்று சேர்ந்த பின் கடிந்து கொள்ளத் தோன்றியிருக்காது. நீங்காத நினைவுகள்.
பதிலளிநீக்குஎனக்கு அந்த ப்ராடிகல் சன் கதைதான் நினைவுக்கு வருகிறது
நீக்குஅனைத்தையும் ஒரேமூச்சில் படித்தேன் (எல்லா வருட மார்ச் பதிவையும்). அம்மாவைவிட அப்பாவை வயதாக ஆக நினைவுகூர்வது அதிகமாகும். அவர்தானே வாழ்வுக்கு அடித்தளம் இடுபவர். பதின்ம வயதிலிருந்து திருமணம் ஆகும் வரை, அல்லது வேலைக்குச் செல்லும்வரை கடும் கண்டிப்புடன் நம் கோபத்தையோ எதிர்வினைகளையோ கண்டுகொள்ளாது நம் வாழ்க்கைக்குப் பாடுபடுவது அவர்தானே.
பதிலளிநீக்குதாயொடு அறுசுவை போம் தந்தையொடு கல்விபோம் என்று சும்மாவா எழுதிவைத்தார்கள்?
என்னைப் பொறுத்தவரை தாயை சிறுவயதிலேயே இழந்து சிறிய தாயாரின்(மாற்றாந்தாயின் ) அரவணைப்பில் வளர்ந்தவன் அப்பாபற்றிய பல நினைவுகளை மார்ச் மாதப் பதிவுகளில் இருக்கும் வருகைக்கு நன்றி சார் உங்கள் தளம் சென்றால் எந்ததகவலும்கிடைப்பதில்லையே மெயில் ஐடி உட்பட
நீக்குஜி.எம்.பி சார்... எனக்குத் தளம் கிடையாது. எல்லாரும் எழுத ஆரம்பித்தால் படிக்க வாசகர்கள் ஏது? உங்கள் ஓவியங்கள் கண்ணைக் கவருகின்றன. நல்ல திறமை. இப்போதும் வரைகிறீர்களா?
நீக்குநான் ஓவியங்கள் வரைய முனைந்தால் இப்போதெல்லாம் கையும் கண்களும் ஒத்துழைக்க மறுக்கின்றன. பாராட்டுக்கு நன்றி எப்போதாவது உங்களைத் தொடர்பு கொள்ள நினைத்தால் மெயில் ஐடி தெரியாததால் கேட்டேன் வருகைக்கு நன்றி
நீக்குகண்டிப்பு, பாசம் என்பவை போட்டி போடும்போது பாசமே வெற்றி பெற்றுவிடும் என்பதை உங்கள் சகோதரர் திரும்பி வந்தபோது உங்கள் தந்தை வெளிப்படுத்திய அன்பில் உணரமுடிந்தது.
பதிலளிநீக்குஅவன் எங்கே திரும்பி வந்தான் அப்பா சென்று கூட்டிக் கொண்டல்லவா வந்தார் தந்தையின் மனம் அப்படி வருகைக்கு நன்றி சார்
நீக்கு