பயணிகள் கவனிக்கவும்
----------------------------------
மனைவியின் குலதெய்வக் கோவில் பூரம் திருவிழாவுக்கு
இங்கிருந்து நாங்கள் 12 பேர் பயணப்பட்டோம் முதலில் ஆறு பேர் கொண்ட குரூப் ஃபெப்
16-ம் தேதி புறப்பட்டனர் இரண்டாம் குரூப்
17-ம் தேதி புறப்பட்டது இரண்டாம் குரூப்பில் நாங்கள்.
முதல்
குழுவில் பயணித்த ஆறு பேரும் ஒத்தப்பாலத்தில் இறங்கினார்கள் அங்கு ரயில் இரண்டு
நிமிடங்களே நிற்கும் அங்கு
இறங்கியவர்களுள் ஐந்து பேர் பெண்கள் ஒருவர் ஆண். இறங்கிய சில வினாடிகளிலேயே
ஒருவரது பை எடுக்க மறந்து விட்டதாகக் கூறப்பட்டது ரயில் கிளம்பும் முன் இரு பெண்கள் மீண்டும் ரயிலில் ஏறி தவற
விட்ட பையை கீழே வீசினார்கள் அதற்குள் ரயில் வேகமெடுக்க கூடவந்த ஆண்நபருக்கு
என்ன செய்வது என்று தெரியாமல் ரயில் கூடவே சிறிது தூரம் ஓடினார். ஒன்றும்செய்ய
முடியவில்லை இதெல்லாம் காலை
வெளிச்சம் வரும் முன் சுமார் ஐந்து மணிக்குள் நடந்தது
இப்போதுதான் கைப்பேசிகள் அனைவரிடமும் இருகிறதே
அதில் தொடர்பு கொண்டு அடுத்த நிறுத்தத்தில் இறங்குமாறு கூறப்பட்டனர் இதற்குள் கீழே
இருந்தவர்கள் ரயில் ஓடும்போது எடுத்து வீசப்பட்டபை வேறொருவருடையது என்று
அறிந்தனர் முதலில் இறங்கியவர் தவறாக பை
மிஸ்ஸிங் என்று தகவல் கூறி பீதி ஏற்படுத்தி இருக்கிறார் இப்போது கையில் இருந்த வேறொருவர் பையை அவரிடம்
ஒப்படைக்க வேண்டுமே ரயில் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர் ரயிலில் அடுத்த
நிறுத்தம் வரை போனவர்களைக் கூப்பிட்டு வரவேண்டும்
பையைத் தொலைத்தவரிடம் பையை
ஒப்படைக்க வேண்டும் அடுத்த நிறுத்தம்
வடக்காஞ்சேரி இதற்குள் பையைத் தொலைத்தவர் சாலக் குடியில் பை காணாமல் போனதாகப்
புகார் கொடுத்திருக்கிறார் இவர்கள்
அவரிடம் தொடர்பு கொண்டு பையை சாலக்
குடிக்கு வந்து ஒப்படைப்பதாக கூறினார்கள் ஒரு வழியாக இந்த வேலைஎல்லாம் முடிந்து அவர்கள் அனைவரும் ஒத்தப்பாலத்துக்கு வரும் போது நன்கு விடிந்து
இவர்களின் கஷ்டங்களும் விடிந்துவிட்டது அவசரப் புத்திக் கொள்முதலாக நிறையவே அதிகச்
செலவு மன உளைச்சல் இதுவே இந்த கைப்பேசிகள் இல்லாத அந்தக் காலத்தில்
நடந்திருந்தால்……. வண்டியில் இரண்டாம் முறை ஏறியவர்களும் வயதானவர்கள் அறுபதுகளில் இருப்பவர்கள் கூட ஓடியவரும் வயதானவர்
எது வேண்டுமானாலும் நிகழ்ந்திருக்கலாம்
இதனால்
சகலமானவருக்கும் தெரியப்படுத்துவது என்னவென்றால் ரயில் நிற்கும் முன்பாகவே அவரவர்
உடைமைகளைச் சரிபார்த்து இறங்கத் தயாராய் இருக்கவேண்டும் நம்மால்
அடுத்தவருக்கும் தொல்லை கூடாது
இந்த நிகழ்ச்சி பற்றி நாங்கள் சென்றபோது யாரும்
மூச்சுக்கூட விடவில்லை. குழுவில் இருந்த ஒருவருடைய மகன் காரில் அடுத்த நாள்
வந்தபோது யாரோ செய்தியை லீக் செய்ய அது இப்போது இருக்கும் எங்கள்குடும்ப வாட்சாப் பில் வந்து எல்லோரையும் பீதிப்படித்தியது/ அதன் பின்பே நாங்கள் அறிந்து கொண்டோம்
பிறருக்கு பயனுள்ளது தங்களது பதிவு நன்றி ஐயா
பதிலளிநீக்குஏதாவது விதத்தில் பயனிருந்தால் சரி வருகைக்கு நன்றி ஜி. எனக்குள்ள இன்னொரு தளத்தில் பின்னூட்டங்கள் வேறு மொழியில் வருவது குறித்து உங்களுக்கு எழுதி இருந்தேன் நீங்கள் பல மொழிகள் தெரிந்தவர் அல்லவா
நீக்கு"ரயில் நிற்கும் முன்பாகவே அவரவர் உடைமைகளைச் சரிபார்த்து இறங்கத் தயாராய் இருக்கவேண்டும்" - பயனுள்ள அட்வைஸ்.
பதிலளிநீக்கு"ரயில் ஓடும்போது எடுத்து வீசப்பட்டபை வேறொருவருடையது" - அதுமட்டுமல்ல. நம்ம உடைமையை நாம் ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள்ளவேண்டும். இல்லாட்டா, தன்னோட பை என்று தவறுதலாக எடுத்துச்சென்றுவிட்டால்....
என் உறவினர்கள் பட்ட பாடு ஒரு படிப்பினையாகிறது வருகைக்கு நன்றி சார்
நீக்குபயனுள்ள தகவல்.பகிர்ந்தமைக்கு நன்றி!
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி ஐயா
நீக்குகவனக்குறைவால் எத்தனை பதட்டம்...
பதிலளிநீக்குஅதைக் கேட்டபோதே பதட்டமாக இருந்தது அவர்களுக்கோ,,,,,,?
நீக்குநல்ல கலாட்டா. நல்ல வேளை. உயிருக்கு ஒன்றும் சேதமில்லை.
பதிலளிநீக்குநல்ல வேளைதான் அவசரத்தில் கவனம் பிசக வாய்ப்புண்டு வருகைக்கு நன்றி சார்
நீக்குஆமாம், விடியற்காலைப் பொழுதில், தூக்கக் கலக்கத்துடன் இருக்கும்போது, ஸ்டேஷன் வந்ததா இல்லையா என்று கூடத் தெரியாமல் போய்விடும். அவசரம் அவசரமாக இறங்க முற்படும்போது இதுபோல் நேர்ந்துவிடுவதுண்டு. அவசரத்தில் தன்மனைவிக்குப் பதில் இன்னொருவரின் மனைவியை இழுத்துக்கொண்டு இறங்கியவர்களும் உண்டு. (அதன் பிறகு என்ன ஆயிற்றென்று எனக்குத் தகவல் இல்லை!)
பதிலளிநீக்கு- இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.
//அவசரத்தில் தன்மனைவிக்குப் பதில் இன்னொருவரின் மனைவியை இழுத்துக்கொண்டு இறங்கியவர்களும் உண்டு.///
நீக்குஇப்படி எல்லாம் செய்யலாமா இது தெரியாமல் இத்தனை நாள் இருந்துவிட்டேனே ஹூம்
அப்படியும் செய்யலாமா தெரியவில்லையே வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் நன்றி சார்
நீக்குயப்பா மதுரைத் தமிழன் இங்கேயுமா ஹஹஹஹஹ்ஹ்
நீக்குகீதா
நம் உடமை போனாலும் ,பிறர் உடமை நம்மிடம் வந்தாலும் கஷ்டம்தான் :)
பதிலளிநீக்குஅதற்குத்தான் கவனம் தேவை என்பது வருகைக்கு நன்றி ஜி
நீக்குநாங்க எப்போவுமே கவனத்துடனேயே இருப்போம். அப்படியும் ஒருமுறை பல்லவனில் சென்னை வந்தப்போ ஃப்ளாஸ்க் பையை மறந்துட்டேன். பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. உடனே கண்டு பிடித்து என் கணவர் ரயிலிலும் ஏறிப் பையை எடுத்துட்டார். இறங்குகையில் ரயில் கிளம்ப ஆரம்பிக்க எனக்கு திக் திக்! நல்லவேளையாக மெதுவாகக் கால்களை ஊன்றி வைத்து இறங்கிட்டார்.
பதிலளிநீக்குஇன்னொரு முறை ராக்ஃபோர்ட்டில் ஶ்ரீரங்கம் வரும்போது இரண்டு பேருமே தூங்கிட்டோம். திடீர்னு கண் முழிச்ச என் கணவர் வெளியே பார்த்துட்டு ஶ்ரீரங்கம் வந்தாச்சுனு என்னை எழுப்ப, நல்லவேளையாய் சாமான் இல்லாததால் கொண்டு போன ஒரே பையைத் தூக்கிக் கொண்டு அவசரம் அவசரமாக நான் இறங்க, (அங்கே சென்று கொண்டிருந்த ஒருவரிடம் ஊரையும் கேட்டுக் கொண்டு பையையும் கொடுத்துவிட்டே இறங்கினேன்.) பின்னர் அவரும் இறங்கினார். ரயிலும் கிளம்பியது! :)
என் நண்பரின் மனைவி விபத்தில் சிக்கி கஷ்டப்பட்டதும் அதிகாலையில் ஸ்ரீரங்கத்தில் வண்டி ஓடிக்கொண்டிருக்கும்போதே நின்று விட்டது என்று இறங்கியதால் நேர்ந்தது அதுவும் அவசரமாகவும் அதி நம்பிக்கையாலும் செயல் பட்டதால் வந்தவினை இடுப்புக்குக் கீழுறுப்புகள் எல்லாமே பாதிக்கப்பட்டு மிகவும் கஷ்டப்பட்டார் அனுபவங்கள் பலவிதம் வருகைக்கு நன்றி மேம்
நீக்கு
பதிலளிநீக்குபயனுள்ள பதிவு...இந்த பதிவை படிப்பவர்கள் தாங்கள் குடும்பத்தோட பயணம் செய்தால் இது போன்ற சூழ்நிலைகள் ஏற்படுமானால் என்ன செய்யவேண்டும் என்று ஒவ்வொரு முறை பயணம் செய்யும் போது பேசி முடிவு செய்து கொள்வது அவசியம் அதுவும் இரவு நேரம் பயணம் செய்யும் போது மிக கவனட்டில் கொள்ள வேண்டும் முக்கியமாக சிறு குழந்தைகளை கூட்டி செல்லும் போது அந்த குழந்தைகளிடமும் விளக்கி சொல்ல வேண்டும் அப்படி செய்தால் பல சங்கடங்களை எளிதில் தவிர்க்கலாம்
வருகைக்கு கருத்துப் பகிர்வுக்கும் நன்றி சார்
நீக்குஎனக்கு இந்த மாதிரி பயண அனுபவங்கள் ஏற்ப்ட இங்கு வாய்ப்புகள் இல்லை ஆனால் வாழ்க்கை பயணத்தில் இது போன்ற பல பிரச்சனைகள் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்று குழந்தைக்கும் மனைவிக்கும் அறிவுறுத்துவதுண்டு... உதாரணமாக வீட்டில் நான் இல்லாத போது நெருப்பு பிடித்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் யாராவது போனில் மிரட்டினால் அல்லது ஏமாற்ற முயற்சித்தால் என்ன செய்ய வேண்டும் இயற்கை சீரழிவு ஏற்பட்டால் ஒருத்தரை ஒருத்தர் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றால் என்ன செய்யவேண்டும் என்பது போன்ற பல விஷயங்களை அவர்களுக்கு எடுட்து சொல்லி இருக்கிறேன் அது போல நானோ என் மனைவியோ அல்லது இருவரும் ஆக்ஸிடண்டில் இறந்துவிட்டால் அழுது கொண்டு இருக்காமல அடுட்து என்ன செய்ய வேண்டும் எப்படி எதிர்காலத்தை எதிர் கொள்ள் வேண்டும் என்பதையும் என் பெண் குழந்தைக்கு அவ்வபோது சொல்லி வந்து கொண்டிருக்கிறேன்
பதிலளிநீக்குகொடுத்த ஆலோசனைகள் எல்லாம் நினைவுக்கு வந்து செயல்பட்டால் நன்று ஒரேயடியாக பயமுறுத்துவதும் சரியாமீள்வருகைக்கு நன்றி சார்
நீக்குநல்ல பயனுள்ள பதிவு.
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி மேம்
நீக்குஅனைவரையும் கவனமாக இருக்கச் செய்யும் இந்தப் பகிர்வு.
பதிலளிநீக்குஒரு சிலரின் அனுபவங்கள் பிறருக்குப் பாடமாகலாம் வருகைக்கு நன்றி மேம்
நீக்குபயனுள்ள பதிவு ஐயா
பதிலளிநீக்குநன்றி
இதுமாதிரி அவ்வப்போது அமைவதுண்டு.வருகைக்கு நன்றி சார்
நீக்குஉங்களின் ஒவ்வொரு பதிவும் எங்களுக்கு பாடமாக உள்ளது ஐயா. கவனமாக இருப்போம்.
பதிலளிநீக்குஎல்லோரும் கவனமாகத்தான் இருக்கிறார்கள் குறைந்த நேரம் நிறைய பொருட்கள் குழுவாகப் பயணிக்கும் போது மற்றவர் பற்றிய கவனம் இவையே பதட்டமடையச் செய்கிறது
நீக்குஒருமுறையாவது எல்லோருக்கும் ரயில் பயணத்தில் இது போன்றதொரு நிகழ்வு / அனுபவம் வாய்த்து விடும் என்று தோன்றுகிறது!
பதிலளிநீக்குஅனுபவம் தேவௌஇதான் ஆனால் அவை நினைவில் இருத்தப்பட வேண்டும் வருகைக்கு நன்றி ஸ்ரீ
நீக்குநல்ல கூத்து! ரயில், அல்லது பஸ் பிரயாணத்தில் சாமான்கள் அதிகம் வைத்துக் கொள்வது இல்லை. ஒரு முறை மஸ்கெட்டிலிருந்து வரும் பொழுது, மும்பை விமான நிலையத்தில் என்னுடைய சூட்கேஸ் போலவே இருந்த வேறு ஒருவருடைய சூட்கேஸை எடுத்துக் கொண்டு விட்டேன். நல்ல வேளை அந்த பிரயாணி பார்த்து அது தன்னுடையது என்பதை சான்றோடு விளக்கி, அவர் கையில் இருந்த என் சூட்கேஸை என்னிடம் ஒப்படைத்து, தன்னுடையதை பெற்றுக் கொண்டார். விமான பயணத்தில் ஒரு வசதி, தவற விடும் பெட்டி எப்படியும் கிடைத்து விடும் என்பதோடு அதற்கு காம்பென்சேஷனும் கிடைக்கும். தொலைத்தாலும் மேன்மக்கள்.
பதிலளிநீக்குவிமானப் பயணத்தில் நாம் தவற விடுவதில்லை என்றே எண்ணுகிறேன். கார்கோவில் நாம் போடும் சாமான்கள் நமக்கு வரலைனா அந்தக் குறிப்பிட்ட சேவை தரும் விமானக் கம்பெனியாரின் பொறுப்பில் தேடிக் கண்டு பிடித்துத் தர வேண்டும். தருகின்றனர். எங்களுக்கு இப்படி நிறைய ஆகி இருக்கிறது. எங்க பொண்ணு இந்தியா வந்தப்போ லுஃப்தான்சாவில் கார்கோவில் போட்டிருந்த அவளுடைய பெட்டிகள் எதுவுமே வரவில்லை. தம்பி கல்யாணத்துக்கு வந்திருந்தாள்! :) வந்து இறங்கியதுமே மாற்று உடை முதற்கொண்டு வாங்கி வந்தோம்.
நீக்குமறுநாள் பெட்டிகள் தில்லி போய்விட்டதாகக் கூறி அவங்க பொறுப்பிலே திரும்ப ஒப்படைத்தாங்க! அதே லுஃப்தான்சாவில் கல்யாணம் முடிஞ்சு எங்க பையர் திரும்பிப் போகையில் அவன் மனைவியின் புத்தம்புது சூட்கேஸ் 25,000 ரூபாய் மதிப்புள்ளது! கல்யாணப் புடைவைகள், மற்றப் புத்தம்புதிய உடைகளோடு ஹூஸ்டன் வந்து சேரவில்லை. எங்கெங்கோ தேடியும் கிடைக்கவில்லை. கடைசியில் ஏர்போர்ட் அதாரிடியில் இருக்கும் என் கடைசி மைத்துனர் விசாரணை செய்ததில் பெட்டி சென்னையை விட்டே செல்லவில்லை என்பது தெரிந்தது. ஸ்கானிங்கில் புத்தம்புதிய துணிகள் நிறைய இருந்தமையால் அங்கேயே பெட்டியைத் தனியாக எடுத்து வைத்திருந்ததாகவும் தெரிய வந்தது. ஆனால் லுஃப்தான்சாவில் இதை ஒத்துக்கொள்ளவில்லை. நஷ்ட ஈடாக ஒரு லக்ஷம் கேட்டிருந்தோம். பட்டுப்புடைவைகள் நிறைய இருந்தன! அவங்க நீங்க வாங்கின கடை ரசீதைக் காட்டுங்க சொன்னதில் சம்பந்தி வீட்டிலும் எங்க வீட்டிலும் நாங்க வாங்கின ரசீதுகளை ஸ்கான் செய்து அனுப்பினோம். அப்படியும் 25,000 ரூபாய் தான் கொடுத்தார்கள். :( அதன் பின்னரும் ஒரு முறை என்னுடைய பெட்டி மெம்பிஸில் நாங்க இறங்கும்போது வரவில்லை. சிகாகோ வரை வந்திருந்ததால் நடுவில் தான் பிரச்னை என்று புரிந்தது. பின்னர் தேடிப் பார்த்து அதை மறுநாளைய விமானத்தில் அனுப்பி வைத்து வீட்டில் கொண்டு வந்து ஒப்படைத்தனர்.
நீக்குஇந்தியாவிலேயே ஏர் இந்தியாவில் மும்பை பயணித்த சமயம் என் பெட்டி வரவில்லை. நானும் மாற்றுத் துணி இல்லாமல் எல்லாம் கடையில் போய் வாங்கி வந்தேன். மறுநாள் இரவு கொண்டு வந்து கொடுத்தார்கள்.
நீக்கு@ பானுமதி வெங்கடேஸ்வரன்
நீக்குவிமானப் பயண சூட் கேஸ்களில் நம் அடையாளமாக ப்ராமினெண்டாக அடையாளம் இட்டுக் கொள்வது நல்லது
@ கீதா சாம்பசிவம்
பதிலளிநீக்குஎன் நண்பரின் பெட்டி ஒன்று பயணிக்கும் போது களவு போய் அவர் ஒரு திருமணத்துக்காக வந்தவர் எல்லாமே புதியதாக வாஙக வேண்டிய நிலை ஏற்பட்டது
@கீதா சாம்பசிவம்
பதிலளிநீக்குஎன் மறு மொழிக்காக இருக்கும்பகுதியில் உங்கள் பின்னூட்டங்கள்....!என் பதிவு சாமானியமாக ரயில் பயணம் செய்யும் போது அதுவும் அதிகாலையில் ஓரிரு நிமிடங்களே நிற்கும் ரயிலில் இருந்து இறங்கும் போது கவனிக்க வேண்டியது பற்றிய குறிப்புகளே அதுவும் பிறர் அனுபவம் சார்ந்தது வருகைக்கு நன்றி மேம்
நல்ல பயனுள்ள அறிவுரை! இருவருக்குமே இதுவரை ஏற்பட்டது இல்லை. இனியும் கவனமாக இருக்கனும்.
பதிலளிநீக்குமிக்க நன்றி சார்
நெருப்பு தொட்டல் சுடும் என்று சுட்டுப்பார்த்துதான் தெரிந்து கொள்ள வேண்டும் என்றில்லையே வருகைக்கு நன்றி
நீக்குஒவ்வொருவரரின் பின்னூட்டத்திலும் அனுபவம் பேசுகிறது. அதுவும் ஒரு பாடமே! நிறைய தெரிந்து கொள்ள முடிகிறது.
பதிலளிநீக்குகீதா
ரயில் பயண பதிவில் விமானப் பயண அனுபவங்களும் வருகின்றனவே வருகைக்கு நன்றி மேம்
நீக்கு@ கீதா
பதிலளிநீக்குமதுரைத் தமிழனின் ஸ்பெஷாலிடி முத்திரை அவர் பின்னூட்டத்திலும் தெரிகிறது