Thursday, February 23, 2017

பூரம் திருவிழா காணச் சென்றோமே


                      பூரம் திருவிழா காணச் சென்றோமே
                    ----------------------------------------------------


உடலில் ரத்தம் இளவயதில் சூடாக இருக்கும் என்பார்கள். அப்போது என் ஆளுமையின் கீழ்தான் எல்லாம் நடந்தது வயது ஏற ஏற தெம்பு குறைகிறது இரத்தமும்  சூட்டை குறைக்கிறதோ தெரியவில்லை. இப்போதெல்லாம் என்னைப் பொறுத்தவரை என்  மனைவியின்  ஆளுமைக்குக் கீழ் வந்து விட்டேன்  அவளும்  என்னை ஒரு குழந்தையைக் கட்டுப்படுத்துவதுபோல்  எல்லாம் செய்கிறாள் இருந்தாலும் உண்மையை ஒப்புக் கொள்ள மனம் வருவதில்லை. இப்போதும்  ஓரோர் சமயம்  நான் தாட் பூட் தஞ்சாவூர் என்று செயல் படுகிறேன்  அவளும் எனக்குக் கட்டுப் படுவதுபோல் காட்டுகிறாள்.  இந்நிலையில்  அவர்கள் குலக் கோவிலில் பூரம்  திருவிழா என்னும் செய்தி கிடைத்தது அவளுக்குப் போக ஆசை  நான்  முதலில் கொஞ்சம் ஜபர்தஸ்து காட்டிப் போகலாம் என்றேன் எனக்கும்  ஒரு மாற்றம்  தேவையாய் இருந்தது. சிறு வயதில் கோவில் திருவிழா என்று அரக்கோணத்தில் இருந்தபோது கண்டதுண்டு மேலும் எனக்கு சில விஷயங்களில் தெளிவு போதவில்லை என்றும் தோன்றியது
மனைவியின் குலதெய்வக் கோவிலுக்குப் பல முறை சென்றிருக்கிறேன்  ஆனால் கோவில் திருவிழா என்று பார்த்ததில்லை  ஆனால் ஒன்று சொல்லியே ஆகவேண்டும் எனக்குக் கேள்விகள் பல எழுந்தாலும் திருப்தி கிடைக்கும்  வகையில் பதில்கள் கிடைக்கவில்லை இந்தக் கோவில் பற்றிய தல புராணம் பலரிடம்  கேட்டேன்  கடைசியாகக் கோவிலில் கேட்டபோது அவர்கள் ஒரு பாம்ப்லெட் கொடுத்தார்கள் திருவிழா நிகழ்ச்சி நிரல் இருந்தது கூடவே ஆங்கிலத்தில் கொஞ்சூண்டு தலபுராணமும் இருந்தது கதைகள் இல்லாக் கோவில் இருக்கமுடியுமா
பரியானம்பத்த பகவதி கோவிலின் கதை 1500 ஆண்டுகளுக்குப் பின்னோக்கிச் செல்கிறது பரியானம்பத்த மனையிலிருந்து ஒரு பிராம்மணன் மூகாம்பிகா கோவிலுக்கு க்ஷேத்ராடனம் சென்றாராம்திரும்பிவந்தபின் ஆத்ம விசாரத்தில் ஈடுபட நினைத்தாராம் அவரது பையில் ஒரு திடம்பு ( என்றால் என்ன தெரியவில்லை ) இருந்ததாம் அதை அங்கிருந்த ஆற்றின்  கரையோரம் பிரதிஷ்டை செய்தாராம் (அங்கு ஆறு இருந்த சுவடே இல்லை. ஆனால் அதுதான்  இப்போதிருக்கும் குளமாயிற்று என்றும் சொல்கிறார்கள் ) மேலும்  கதைக்கு படம்பார்க்கவும் எல்லோரும் கதை கேட்கிறார்கள் யாரும் கேள்வி கேட்பதில்லை. எல்லாமே நம்பிக்கைதான்

பூரம் திருவிழா பாம்ப்லெட்
கோவில் புராணம்


வடக்கு நோக்கி இருக்கும்  கோவிலுக்கு புதியதாய் படிக்கட்டு கட்ட திட்டம்  என்றும்  அதற்கு நன்கொடை வேண்டுமென்றும் ஊரில் இருந்து சிலர் வந்திருந்தனர்  அவர்களை அந்த ஊரைச் சேர்ந்tத இங்கிருக்கும் சிலர் எங்கள் வீட்டுக்குக் கூட்டி வந்தார்கள்  கோவில் கைங்கர்யம்  என்றால் என்  மனைவி தடை ஏதும் சொல்ல மாட்டாள் என்னிடம்  அனுமதி கேட்டாள நானும் மனைவி சொல்லைத் தட்டாதவன் அல்லவா கொடுத்தோம் அப்போதுதான் இந்த திருவிழாபற்றித் தெரிந்தது இவளது குடும்பத்தில் இருந்து பலரும் விழாவுக்குச் செல்ல இருந்தனர்  என்  தீர்மானமான முடிவு தெரியும்  முன்னால் அவர்கள் டிக்கட் பதிவு செய்து விட்டார்கள்  நாங்கள் பதிவு செய்தபோது  போகும் ரயிலில் வெயிட் லிஸ்டிலும்   வரும்  போது கன்ஃபர்ம் டிக்கட்டும் கிடைத்தது  எனக்கு என் மகனுடன்  காரில் பயணம் செய்ய விருப்பம் ஆனால் அவனது ப்ரோகிராம்  முன் கூட்டியே சொல்ல முடியாததால் ரயிலில் புக் செய்தோம்
17-ம் தேதி மாலை கன்னியாகுமரி எக்ஸ்ப்ரெசில்  பெங்களூரில் இருந்து ஒத்தப்பாலம் வரை ரயில் பயணம்  அங்கிருந்து சுமார் 17 கி. மீ தூரம் வாடகைக் காரில் என்றும் திட்டம்  ஒரு நாள் முன்பாகவே சிலர் போய்விட்டனர்  நான் மனைவி அவள் தம்பி மனைவியுடன் அவளது சகோதரி  மாமியார் என ஆறு பேர் ஒன்றாகச் சென்றோம்  அங்கு போனால் தங்குவதற்கு ஏ சி அறைகள்  கோவிலுக்கு அருகிலேயே பதிவு செய்யப்பட்டிருந்தன. 18-ம்தேதி  விடியற்காலை  ஐந்து மணிக்குப் போய்ச் சேர்ந்தோம்

தங்கிய விடுதி


ஒரு நாள் முன்பாகவே சென்றவர்களுக்கு  ஒரு வித்தியாசமான அனுபவம் இருந்தது அதுபற்றி அடுத்த பதிவில்       
   ,                            


   .   

குலதெய்வக் கோவில் திருவிழா


                                    குலதெய்வக் கோவில் திருவிழா
                                      ----------------------------------------------


தெய்வத்திண்டே சொந்தம் தேசத்துக்கு நான் பல முறை சென்று வந்திருக்கிறேன்   இருந்தாலும் இந்தமுறை சென்றதுபோல் கவனித்து  பதிந்து கொள்ளவில்லை. முதலில் இந்த பூரம் திருவிழா பற்றிக் கூற வேண்டும்  திருச்சூரில் மட்டும்தான் பூர நட்சத்திரத்தன்று பூரத் திருவிழா நடக்கும்  மற்றகோவில்களில்  பூரம் என்பதே திருவிழாவைக் குறிக்கும் பானை என்று சொல்லி வழிபடுவது  தனிப்பட்டவர்களின் பிரார்த்தனையால் செய்வது  இந்த பூரத் திருவிழாவுக்கு வேலை என்று சொல்லப்படும் கிராம வழிபாடும் உண்டு.  கோவிலின்  நான்கு திசைகளிலும் இருக்கும் கிராமத்தவர்கள் தேவிக்குப் பிரியமான காளை உருவங்களை செய்து கொண்டு வந்து பக்தி செலுத்துகிறார்கள் காளை தவிர குதிரைகளும் உண்டு  திருச்சூரில் யானைகள் மட்டுமே  இந்த விஷயங்களை எல்லாம் நான் பலரிடம்  கேட்டுத்தெரிந்து கொண்டது. என்புரிதலிலோ அவர்கள்சொன்னதிலோ குறைகள் இருக்கலாம்  இன்னொரு சந்தேகம் பகவதி கோவிலில் அம்மே நாராயணா என்று எழுதி இருக்கிறார்கள்  பகவதி என்பவர் பார்வதியைக் குறிப்பதா  அல்லது மஹாலட்சுமியைக் குறிப்பதா அல்லது ஒரு கிராம தேவதையைக் குறிப்பதா என்னும் ஐயம் இன்னும்  இருக்கிறது

 இன்னொரு விஷயமும்  சொல்லியே ஆகவேண்டும் அதிகாலையில்  கோவிலுக்கு வரும்போது நம்மைக் ( என்னைக் ) கவர்வது தொழவரும் பெண்களே. சற்றே துருத்திய பற்களும்  தடித்த உதடுகளும்  நீண்டவிரித்த கூந்தலுடன் ஒருவிதக் கிறக்கப் பார்வையுடன் கனவுகாணும் விழிகளுடன் இருப்பதே பெரும்பாலான பெண்களின் அடையாளங்கள் ஆண்களை விட பெண்களே அதிகம் டாமினேட்டிங்.  ஒரு வேளை அது கேரளப் பாரம்பரிய மாட்ரிலீனியர் பழக்கமோ என்னவோ ஒன்று ---  இருந்தாலும்  கேரளப் பெண்களில் சிலர் அழகானவர்களாகவும்  இருக்கிறார்கள் எல்லாநிறங்களிலும்   இருக்கிறார்கள் 
கோவில் திருவிழாவுக்கு வந்தவன் எதையெல்லாமோ கவனித்திருக்கிறேன்
கோவில் முகப்பு
கோவில் முகப்பு இன்னொரு கோணம்
கோவில் குளம்


நாங்கள் தங்கி இருந்த விடுதி
அன்னதானம் மகா தானம்  முதல் நாள் கோவிலில் அதிகம் கூட்டத்தைக் காணவில்லை.  வந்து போய்க் கொண்டிருந்தவர்களே அதிகம் கோவிலுக்கு சுற்றி யுள்ள கிராமங்களில் இருந்து காளை  உருவங்களைத் தூக்கி வந்து ஓரோர் இடத்தில் வைக்கிறார்கள் கோவிலின்  அமைப்பு பற்றி சொல்ல வேண்டும் கோவில் ஒரு ப;ள்ளத்தில் அமைந்திருக்கிறது கோவிலுக்கு வந்து போக அநேக படிகள் ஏறி இறங்கவேண்டும்  அதுதான் எனக்கிருந்த பிரச்சனை கைப்பிடி இல்லாமல் படிகள் ஏறி இறங்க  எனக்கு முடிவதில்லை. அங்குதான் என் மனைவியின்  உதவி வேண்டி இருந்தது என் மனைவிக்குக் கூட்டம் என்றாலேயே ஒரு அலெர்ஜி. ஆனால் திருவிழா என்றாலேயே கூட்டம்தானே இறக்கி வைத்திருக்கும் காளை உருவங்களைப் புகைப்படமாகவும்  வீடியோவாகவும் எடுத்தேன்
18-ம் தேதி மதியம்  கோவிலில் ஓட்டம்  துள்ளல் இருந்தது  அது ஒரு வித நடனம்  ஏழைகளின் கதகளி என்று நேரு சொல்வாராம்  அன்று நடனமாடிய பெண்மணி மிகவும் பாவத்துடனும் அழகாகவும் ஆடினார் பீமன் பாரிஜாத மலர்களைக் கொண்டு வரும்  கதை என்று தோன்றியது இதே ஓட்டம் துள்ளல் பாடலை எள்ளலுடன் இட்டுக்கட்டியும் பாடல் பாடுவார்களாம் உ-ம் ஓட்டம்  துள்ல் துள்ளி வரும்போள்  வீட்டில் கஞ்சி குடிக்கானில்லியா ....! ஆடி முடித்து வந்த பெண்மணியைப் பாராட்டினேன்   என் மனைவி அவளுக்கு அன்பளிப்பாக ரூ 200 / கொடுத்தாள்  வீடியோக்களைக் கவனித்தால் நடனம்  ரசிக்கலாம்
                             ஓட்டம் துள்ளல் ஒரு சிறிய காணொளி  
                                              தாயம்பகா  ஒரு சிறு காணொளி


கேரளக் கோவில்களுக்கே உரித்தான சன்டை மேளமும் இருந்தது நாங்கள் இருந்த விடுதி வழியே சென்றகாளை உருவங்களையும்   தேரையும் ( சக்கரமில்லாமல் தூக்கி வரும் தேர் ) யானைகளையும்  படமெடுத்தோம்  இன்னொர்கேரள பாரம்பரிய வாத்தியக் கச்சேரி தாயம்பகாவும் இருந்தது தாயம்பகாவில் ஒருவரோ இருவரோ தாளகதி கொடுத்து கையாலும்  குச்சியாலும் இசைக்கிறார்கள்  அதற்கேற்ப மற்றவர்களும்  தாளம் தவறாமல்  வாசிக்கிறார்கள்  வீடியோ துண்டு காணவும்


19-ம் தேதிதான்  பூரத்திருவிழா. அருகிலிருந்த மேடைத் தளத்தில் அமர்ந்தால் எல்லாவற்றையும்  காண முடியும்  என்று சொல்லி  எங்களுக்கு ஒரு இடம் கொடுக்கப்பட்டது  ஆனால் எங்கள் முன் நான்கு காளை வேலைகளும்  மற்றவையும் மறைத்து விட்டன.  இருந்தும்  நம்பிக்கையோடு காத்திருந்தோம்  ஒவ்வொரு காளை உருவத்தையும்  தூக்கிக் கொண்டு ஆரவாரத்துடன் கோவிலை பிரதட்சிணம்  வருகிறார்கள். கீழே சென்று கூட்டத்தோடு ஒன்ற முடியவில்லை  ஒரு சமயம் நாங்கள் இருந்த விடுதியிலிருந்தே யானைகள் வரும் காட்சியைக் காணமுடியும்  என்று சொன்னார்கள் அதுவே சரியாயிற்று 

                       குதிரைகள் வேலை வருகை ஒரு சிறு காணொளி 

   
 
 
ஓட்டம் துள்ளல் ஒரு பாவம் 

 
ஓட்டம்  துள்ளல் ஆடிய பெண்ணுடன் நாங்கள் 

தூக்கிவந்த தேர்
ஓட்டம் துள்ளல் இன்னொரு போஸ்
யானை படியேறுகிறது

 
இன்னொரு பாவம் 

விடுதி முன் வந்த ஏழு யானைகள் 
                        விடுதிமுன் ஏழு யானைகள் ஒரு காணொளி 

 ஏராளமான படங்கள் எடுத்தோம் பல காணொளிகளையும் எடுத்தோம்  வாசகர்கள் பொறுமையுடன் பார்க்க ஒரு சிலவற்றையே பகிர்கிறேன்    

 எனக்கு உணவு ஒரு பிரச்சனை இல்லை நன்றாக வெந்து இருந்தால் போதும்  ஆனால் நாங்கள் இருந்த விடுதியில் உணவு சுமார் ரகம்தான்  சாதம் ஒவ்வொரு பருக்கையும் நம்மைப் பார்த்து முழிக்கிறது  மற்றபடி பட்டினி கிடக்க தேவை இல்

சென்றபதிவில்  சிலரது அனுபவங்களி ப் பகிர்வேன்  என்று முடித்திருந்தேன் (அதை யார் கவனித்தார்கள்) இருந்தாலும் அதை ஒரு தனிப்பதிவாக்குவேன் இன்னொரு சமயம் 

   .   


1.       .
.