குலதெய்வக் கோவில் திருவிழா
----------------------------------------------
தெய்வத்திண்டே சொந்தம்
தேசத்துக்கு நான் பல முறை சென்று வந்திருக்கிறேன் இருந்தாலும் இந்தமுறை சென்றதுபோல்
கவனித்து பதிந்து கொள்ளவில்லை. முதலில்
இந்த பூரம் திருவிழா பற்றிக் கூற வேண்டும்
திருச்சூரில் மட்டும்தான் பூர நட்சத்திரத்தன்று பூரத் திருவிழா நடக்கும் மற்றகோவில்களில் பூரம் என்பதே திருவிழாவைக் குறிக்கும் பானை
என்று சொல்லி வழிபடுவது தனிப்பட்டவர்களின்
பிரார்த்தனையால் செய்வது இந்த பூரத்
திருவிழாவுக்கு வேலை என்று சொல்லப்படும் கிராம வழிபாடும் உண்டு. கோவிலின்
நான்கு திசைகளிலும் இருக்கும் கிராமத்தவர்கள் தேவிக்குப் பிரியமான காளை
உருவங்களை செய்து கொண்டு வந்து பக்தி செலுத்துகிறார்கள் காளை தவிர குதிரைகளும்
உண்டு திருச்சூரில் யானைகள் மட்டுமே இந்த விஷயங்களை எல்லாம் நான் பலரிடம் கேட்டுத்தெரிந்து கொண்டது. என்புரிதலிலோ
அவர்கள்சொன்னதிலோ குறைகள் இருக்கலாம்
இன்னொரு சந்தேகம் பகவதி கோவிலில் அம்மே நாராயணா என்று எழுதி
இருக்கிறார்கள் பகவதி என்பவர் பார்வதியைக்
குறிப்பதா அல்லது மஹாலட்சுமியைக்
குறிப்பதா அல்லது ஒரு கிராம தேவதையைக் குறிப்பதா என்னும் ஐயம் இன்னும் இருக்கிறது
இன்னொரு விஷயமும் சொல்லியே ஆகவேண்டும் அதிகாலையில் கோவிலுக்கு வரும்போது நம்மைக் ( என்னைக் )
கவர்வது தொழவரும் பெண்களே. சற்றே துருத்திய பற்களும் தடித்த உதடுகளும் நீண்டவிரித்த கூந்தலுடன் ஒருவிதக் கிறக்கப்
பார்வையுடன் கனவுகாணும் விழிகளுடன் இருப்பதே பெரும்பாலான பெண்களின் அடையாளங்கள்
ஆண்களை விட பெண்களே அதிகம் டாமினேட்டிங்.
ஒரு வேளை அது கேரளப் பாரம்பரிய மாட்ரிலீனியர் பழக்கமோ என்னவோ ஒன்று --- இருந்தாலும் கேரளப் பெண்களில் சிலர் அழகானவர்களாகவும் இருக்கிறார்கள் எல்லாநிறங்களிலும் இருக்கிறார்கள்
கோவில் திருவிழாவுக்கு
வந்தவன் எதையெல்லாமோ கவனித்திருக்கிறேன்
|
கோவில் முகப்பு |
|
கோவில் முகப்பு இன்னொரு கோணம் |
|
கோவில் குளம் |
|
நாங்கள் தங்கி இருந்த விடுதி |
|
அன்னதானம் மகா தானம் |
முதல் நாள் கோவிலில் அதிகம் கூட்டத்தைக்
காணவில்லை. வந்து போய்க் கொண்டிருந்தவர்களே
அதிகம் கோவிலுக்கு சுற்றி யுள்ள கிராமங்களில் இருந்து காளை உருவங்களைத் தூக்கி வந்து ஓரோர் இடத்தில்
வைக்கிறார்கள் கோவிலின் அமைப்பு பற்றி
சொல்ல வேண்டும் கோவில் ஒரு ப;ள்ளத்தில் அமைந்திருக்கிறது கோவிலுக்கு வந்து போக
அநேக படிகள் ஏறி இறங்கவேண்டும் அதுதான்
எனக்கிருந்த பிரச்சனை கைப்பிடி இல்லாமல் படிகள் ஏறி இறங்க எனக்கு முடிவதில்லை. அங்குதான் என்
மனைவியின் உதவி வேண்டி இருந்தது என்
மனைவிக்குக் கூட்டம் என்றாலேயே ஒரு அலெர்ஜி. ஆனால் திருவிழா என்றாலேயே கூட்டம்தானே
இறக்கி வைத்திருக்கும் காளை உருவங்களைப் புகைப்படமாகவும் வீடியோவாகவும் எடுத்தேன்
18-ம் தேதி மதியம் கோவிலில் ஓட்டம் துள்ளல் இருந்தது அது ஒரு வித நடனம் ஏழைகளின் கதகளி என்று நேரு சொல்வாராம் அன்று நடனமாடிய பெண்மணி மிகவும் பாவத்துடனும்
அழகாகவும் ஆடினார் பீமன் பாரிஜாத மலர்களைக் கொண்டு வரும் கதை என்று தோன்றியது இதே ஓட்டம் துள்ளல் பாடலை எள்ளலுடன் இட்டுக்கட்டியும் பாடல் பாடுவார்களாம் உ-ம் ஓட்டம் துள்ளல் துள்ளி வரும்போள் வீட்டில் கஞ்சி குடிக்கானில்லியா ....! ஆடி முடித்து வந்த
பெண்மணியைப் பாராட்டினேன் என் மனைவி
அவளுக்கு அன்பளிப்பாக ரூ 200 / கொடுத்தாள்
வீடியோக்களைக் கவனித்தால் நடனம்
ரசிக்கலாம்
ஓட்டம் துள்ளல் ஒரு சிறிய காணொளி
தாயம்பகா ஒரு சிறு காணொளி
கேரளக் கோவில்களுக்கே
உரித்தான சன்டை மேளமும் இருந்தது நாங்கள் இருந்த விடுதி வழியே சென்றகாளை
உருவங்களையும் தேரையும் ( சக்கரமில்லாமல்
தூக்கி வரும் தேர் ) யானைகளையும்
படமெடுத்தோம் இன்னொர்கேரள
பாரம்பரிய வாத்தியக் கச்சேரி தாயம்பகாவும் இருந்தது தாயம்பகாவில் ஒருவரோ இருவரோ
தாளகதி கொடுத்து கையாலும்
குச்சியாலும் இசைக்கிறார்கள்
அதற்கேற்ப மற்றவர்களும் தாளம்
தவறாமல் வாசிக்கிறார்கள் வீடியோ துண்டு காணவும்
19-ம் தேதிதான் பூரத்திருவிழா. அருகிலிருந்த மேடைத் தளத்தில்
அமர்ந்தால் எல்லாவற்றையும் காண
முடியும் என்று சொல்லி எங்களுக்கு ஒரு இடம் கொடுக்கப்பட்டது ஆனால் எங்கள் முன் நான்கு காளை வேலைகளும் மற்றவையும் மறைத்து விட்டன. இருந்தும்
நம்பிக்கையோடு காத்திருந்தோம்
ஒவ்வொரு காளை உருவத்தையும்
தூக்கிக் கொண்டு ஆரவாரத்துடன் கோவிலை பிரதட்சிணம் வருகிறார்கள். கீழே சென்று கூட்டத்தோடு ஒன்ற
முடியவில்லை ஒரு சமயம் நாங்கள் இருந்த
விடுதியிலிருந்தே யானைகள் வரும் காட்சியைக் காணமுடியும் என்று சொன்னார்கள் அதுவே சரியாயிற்று
குதிரைகள் வேலை வருகை ஒரு சிறு காணொளி
|
ஓட்டம் துள்ளல் ஒரு பாவம் |
|
ஓட்டம் துள்ளல் ஆடிய பெண்ணுடன் நாங்கள் |
|
தூக்கிவந்த தேர் |
|
ஓட்டம் துள்ளல் இன்னொரு போஸ் |
|
யானை படியேறுகிறது |
|
இன்னொரு பாவம் |
|
விடுதி முன் வந்த ஏழு யானைகள் | | | | | |
விடுதிமுன் ஏழு யானைகள் ஒரு காணொளி
ஏராளமான படங்கள் எடுத்தோம் பல காணொளிகளையும் எடுத்தோம் வாசகர்கள் பொறுமையுடன் பார்க்க ஒரு சிலவற்றையே பகிர்கிறேன்
எனக்கு உணவு ஒரு
பிரச்சனை இல்லை நன்றாக வெந்து இருந்தால் போதும்
ஆனால் நாங்கள் இருந்த விடுதியில் உணவு சுமார் ரகம்தான் சாதம் ஒவ்வொரு பருக்கையும் நம்மைப் பார்த்து
முழிக்கிறது மற்றபடி பட்டினி கிடக்க தேவை இல்லை
சென்றபதிவில் சிலரது அனுபவங்களி ப் பகிர்வேன் என்று முடித்திருந்தேன் (அதை யார் கவனித்தார்கள்) இருந்தாலும் அதை ஒரு தனிப்பதிவாக்குவேன் இன்னொரு சமயம்
1.
.
.
சுவாரஸ்யமான காணொளிகள். அழகிய புகைப்படங்கள். அந்தப் பெண் மிகச்சிறிய பெண் போலத் தெரிகிறது! தம வாக்குப் போட்டாச்சு!
பதிலளிநீக்குமுதல் வருகைக்கும் தமிழ்மண வாக்குக்கும் நன்றி ஸ்ரீ ஏனோ இப்பதிவு தமிழ் மணத்தில் என் கண்களில் படவில்லை அப்பெண்சின்னவளாகத் தோன்றினாலும் அந்த நடனத்தில் தேர்ச்சி பெற்றவராகத் தெரிந்தார்
நீக்குரசித்தேன்.
பதிலளிநீக்குரசனைக்கு நன்றி சார்
நீக்குநல்லதொரு பகிர்வு. காணொளிகள் மூலம் நானும் நிகழ்வுகள் கண்டு களித்தேன். நன்றி.
பதிலளிநீக்குபொதுவாக வாசகர்கள் காணொளிகளை ஸ்கிப் செய்கிறார்கள் ஆகவே தான் சிறிய க்லிப்பிங்காக பதிவிட்டிருக்கிறேன் வருகைக்கு நன்றி சார்
நீக்குதெரியாத பல தகவல்கள். படங்கள் எல்லாமும் நன்றாக இருந்தன. பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குஎனக்கே தெரியாத(கேரளத்துடன் பரிச்சயமுள்ளவன் ) தெரியாதவை இவை வருகைக்கு நன்றி மேம்
நீக்குஒவ்வொரு நிகழ்வையும் விவரித்த விதம் அருமை ஐயா... ரசித்தேன்...
பதிலளிநீக்குதமிழ்மணத்தில் பதிவு இணைந்து இருந்ததா டிடி.வருகைக்கு பாராட்டுக்கும் நன்றி சார்
நீக்குஅருமை ஐயா
பதிலளிநீக்குபடங்களும் காணொளிகளும் கண்களுக்கு விருந்தளித்தன
நன்றி ஐயா
எடுத்த படங்களிலும் காணொளிகளிலும் பத்து சதவீதமே பதிவாகி இருக்கிறது பாராட்டுக்கு நன்றி சார்
நீக்குரசிப்பு தெரிகிறது!
பதிலளிநீக்குவாசுதேவன் நம்பூதிரியின் ஓட்டம்துள்ளல் பார்த்துருக்கீங்களா?
இல்லை இதுவே நான் பார்த்த முதல் ஓட்டம் துள்ளல் வருகைக்கு நன்றி மேம்
நீக்குஅனைத்து காணொளிகளையும் பார்த்து இரசித்தேன்! சொற்கள் சொல்லமுடியாதவைகளை காணொளி சொல்லிவிட்டது. இந்த பூரம் திருச்சூர் பூரம் போல் இல்லாவிடினும் Small is beautiful என்பதுபோல் மிக அருமையாக நடக்கிறது என எண்ணுகிறேன்.
பதிலளிநீக்குகேரளாவில் அனேகமாக அனைவரும் குருவாயூரப்பனின் பக்தர்களாக இருப்பதால் அவர்கள் எல்லாவற்றையும் சிவன் மற்றும் சக்தியை நாராயணனாகப் பார்க்கிறார்கள் என நினைக்கிறேன்.
பூரம் என்பதே இங்கு ஒரு திருவிழாவைக் குறிக்கிறது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி ஐயா
நீக்குதுள்ளல் பெண்மணியை விட அருகில் பார்வையாளராக நிற்கும் தாங்கள் துள்ளும் இளைமையோடு காட்சிதருகிறீர்கள் என்ற உண்மைத் தகவலைப் பதிவு செய்யலாமா?
பதிலளிநீக்கு- இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.
பாராட்டுக்கு நன்றி செல்லப்பா சார்
நீக்குநல்லதொரு பகிர்வு! சார் இந்த வயதிலும் இளமையை ரசிக்கும் தங்களைக் கண்டு வியக்கிறோம்! ஏற்கனவே நேரில் கண்டவை என்றாலும் தங்கள் காணொளிகளின் வழி மீண்டும் கண்டோம். இவை பொதுவாக கேரளத்தில் எல்லா கோவில்களிலும் நடப்பவை திருவிழாவின் போது.
பதிலளிநீக்குகீதா: மேற்சொன்ன கருத்துடன் துளசியின் பெண் இம்முறை யூத் ஃபெஸ்டிவலில் ஓட்டம் துள்ளலில் மாநிலத்திலேயே முதல் பரிசு வென்றாள்....10 வகுப்பு!! அவர்கள் ஊரில் யூத் ஃபெஸ்டிவல் என்பது பல படிகள் கடந்து தான் ஃபைனலுக்கு வர முடியும். மிகவும் விமரிசையாக நடத்துகிறார்கல். பள்ளியிலிருந்து செலக்ஷன், அடுத்து சப்ஜில்லா, ஜில்லா அப்புறம் ஸ்டேட்...என்று ஒவ்வொரு படிக்கும் ஒரு வாரமாக அமளிப்படும். இதற்காக அவர்களுக்குப் பாடத்தில் மார்க்கும் உண்டு. A GRADE, B GRADE என்று போட்டியில் கலந்து கொள்பவர்களுக்குக் கொடுக்கிறார்கள். அது மார்க்குடன் சேர்த்துக் கொள்ளப்படுகிறது.
இளமையை ரசிக்கவயதும் ஒரு தடையா?ஓட்டம் பற்றிக் கேள்விப்பட்டு இருக்கிறேன் இதுவே முதலில் நேரில்காண்பது என் சிறிய தாயார் ஓட்டம் துள்ளல் பாடல்களின் மெட்டில் எள்ளலுடன் சில பாட்டுகள் பாடுவார்கள் அதில் ஒரு வரியைக் குறிப்பிட்டிருக்கிறேன் துளசியின் மகள் ஓட்டம் துள்ளலில் மாநில முதலிடம் என்பது மகிழ்ச்சி தருகிறது வாழ்த்துகளைத் தெரிவிக்கவும் புதுக் கோட்டையில் அவர்கள் வந்தபோது அறிமுகம் இல்லாததால் தெரியாமல் போயிற்று வருகைக்கு நன்றி
நீக்கு