Monday, May 8, 2017

சில பகிர்வுகள்


                   சில பகிர்வுகள்
 அண்மையில் ஒரு திருமணத்துக்கு சென்னை சென்றிருந்தோம்  திருமணங்களில்தான் பலநாள் காணாத உறவுகளைக் காண முடிகிறதுஇப்போதெல்லாம் திரு மண வைபவத்தின் போது அதைக் கொண்டு நடத்தும் புரோகிதர்கள் லெக்சர் கொடுப்பதைக் காண்கிறேன்  இந்தத் திருமணத்திலும்  புரோகிதர் திருமணம் பற்றி ஒரு பிரசங்கமே நடத்தி விட்டார்  அதை சிறிது காணொளியில் காணலாம்  என்ன வெல்லாமோ சடங்குகள் பலவற்றிலும் காம்ப்ரமைஸ் செய்கிறோம்  மணப் பெண்ணின் தலையில் நுகத்தடி வைத்து சில மந்திரங்கள் சொல்லப் படுகின்றன சென்னை போன்ற பெரு நகரில் நுகத்தடிக்குப் பதில் கட்டிலின் கால் ஒன்று உபயோகிக்கப்பட்டது  காசி யாத்திரை முடிந்து மணமக்கள் வரும்போது  மலர்களைப்பரப்பி  அதன் மேல் வெல்கம் என்று மலர்களாலேயே  அமைத்து அதன் மேல் மண மக்களை  நடந்து வரச்ச்செய்தனர் இதை பலமாக எதிர்த்து புரோகிதர் பிரசங்கம் செய்தார்

                                  **********************

ஒவ்வொரு முறையும் சென்னை செல்லும் போது  அங்கு ஒரு மழையாவது பெய்யும் ஆனால் இம்முறை ஒரு சிறு தூறல் கூட விழவில்லை
                                    ***********************.

சென்னையில் சென்றிருந்த நாட்களில் மகனின்  புது இல்லத்தைக் காண அவனுடன் சென்றது தவிர எங்குமே போக வில்லை, முடியவில்லை வயதாவதன் தாக்கம் நன்கு தெரிந்தது
                                   *************************************

புஸ்தகா டிஜிடல் மீடியா மூலம் எனதுமூன்று நூல்களை மின்னூலாக்கி இருக்கிறேன்  சிறு கதைகளின்  தொகுப்பாக ஒரு நூலும்   நினைவில் நீ என்னும்  பெயரில் ஒரு நாவலும்  பல நேரங்களில் எழுதி இருந்த கவிதைகளைத் தொகுத்து ஒரு நூலாகவும் வெளி இட்டிருக்கிறார்கள் நான் எழுதி இருப்பதை எல்லாம் சேமிக்க மின்னூல்கள்  உதவும்  என்றே தோன்றுகிறது புஸ்தகா பத்மநாபனை சந்தித்து இன்னும் சில படைப்புகளை நூலாக்க வேண்டும் என்றுநினைக்கிறேன் இதற்கு முன்  மின்னூலாக செய்த முயற்சிகள் வீணானதற்குப் பிறகு  இப்போது அவை வெளியானதில் மகிழ்ச்சியே
                               *********************************
சில சிறு கதை போட்டிகள் பற்றிய அறிவிப்புகள்  வந்திருக்கின்றன. போட்டிக்காக எழுத மனம் வரவில்லை. மேலும்  எழுதியவை வருமா வராதா என்று காத்திருப்பதில் எனக்கு உடன்பாடுஇல்லை நான் எழுதுவதை எழுதியவாறே வெளியிட்டுக் கொள்ள எனது வலைப் பூ இருக்கும் போது பிற இடங்களுக்கு எழுதி அனுப்பி அவை வெளிவராமலே போக வாய்ப்புகள் அதிகம்  அதை மாற்ற  முடியுமா தெரிய வில்லை.  என்னதான் எழுதினாலும்  சில எண்ணங்களையும் கருத்துகளையும்  எழுத்தில் வராமல் தவிர்க்க முடிவதில்லை
                                    **********************************
சென்னையில் பதிவர் சந்திப்பின்  போது நான் ஏதாவதுதலைப்பில் டிஸ்கஸ் செய்ய விரும்புகிறேனா  என்று ஜீவி அவர்கள் கேட்டார்கள் சந்திப்பதே சொற்ப நேரம் அதில் நான் எதையாவது கூற  அதைப் பிறரால் ஏற்க முடியாததர்ம சங்கட நிலை உருவாவதை தவிர்க்கவே விரும்பினேன்  யார் யார் என்ன பேசுகிறார்கள் என்றுகவனித்துக் கணிப்பதே போதும்  என்று நினைக்கிறேன்  அவரவர்கள் பற்றிய செய்திகள் ஒன்றோ இரண்டோ வந்தது  மேலும் மேலும்  சந்திக்க முடிந்தால் இன்னும்  வெளிப்படையாக பகிர முடியலாம்
 புஸ்தகா மூலமும் எழுத்துகளிலும்  சந்தித்துக் கொள்ளலாம் என்று ஜீவி ஒரு பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருந்தார்  ஆனால் பலரும்  எழுத்தில் தங்களை  வெளிப்படுத்திக் கொள்வதில்லை என்றே தோன்றுகிறது
                                  ********************************
எதை எழுதத் துவங்கினாலும் அதுபற்றி நான்  ஏற்கனவே எழுதி இருப்பதே முன்  வருகிறது ஆகவே தான் சிற்சில மாற்றங்களுடன்  எழுதும் போது  அவை முன்பே படித்ததுபோல் சிலருக்குத் தோன்றுகிறது ஆகவே இனி நான் எழுதி இருந்தவற்றையே மீள்பதிவுகள் ஆக்கலாம்  என்று தோன்றுகிறது  ஒரு சிலர் படித்திருக்கலாம் ஆனால் இப்போது என் வாசகர் வட்டம்தான் விரிந்து விட்டதே
                                  ********************************
 இன்னும்  ஒரு சென்னை விசிட் இருக்கிறது மேமாதம் பத்தாம் தேதி என் மகன்பெரும்பாக்கத்தில் வாங்கி இருக்கும்  மூன்றுபடுக்கையறை கொண்ட வீட்டுக்கு புதுமனை புகு விழா வைத்திருக்கிறான் டிக்கட்டுகள் கிடைப்பதே  சிரமமாய் இருக்கிறது போதாத குறைக்கு கத்திரிவெயிலின்  உக்கிரமான பகுதி அந்த நாட்கள்
 இப்போதெல்லாம் விசித்திரமான எண்ணங்கள் மனதை அரிக்கிறது எல்லோருடனும்  பகிரவும்  முடியவில்லை. அவற்றைக் கதையாக்கி  என்  ஆதங்கங்களை தீர்த்துக் கொள்ளலாம்  என்றுநினைக்கிறேன்
                                   ********************************
இந்த முறை எங்கள் வீட்டு மாமரத்தில்  காய்கள் மிகவும்  குறைவு  காய்த்தவையையும்  பக்கத்து வீடு புதிதாய் கட்டுவதில்  இருக்கும்  வேலையாட்கள் மாடியேறி வந்து பறித்துக் கொண்டு போகிறார்கள்
                              ***************************************

எங்கள் வீட்டு வெற்றிலைக் கொடி பற்றி எழுதி இருக்கிறேன் அது மாமரத்தைப் பற்றி கொண்டு மேலேறி இருக்கிறது  வெற்றிலை கேட்டு வருபவர்கள் அதிகரித்து விட்டார்கள் வெற்றிலையை  சும்மா கொடுக்கக் கூடாது என்கிறாள் மனைவி. ஒப்புக்காவது ஏதாவது காசு வாங்கிக் கொள்கிறாள் ஆனால் பூஜைக்கு என்று கேட்பவர்களுக்கு  தாராளமாய்க் கொடுக்கிறாள்  இங்கெல்லாம்  வெற்றிலை ஒரு இலை ஒரு ரூபாயாம்
                         ********************************************************************* 
வருடத்துக்கு ஒரு செடியில் ஒரு பூமட்டுமே மலரும்  எங்கள் வீட்டு ஃபுட்பால் லில்லியைப் பற்றி முன்பே பகிர்ந்திருக்கிறே,ன் இந்த ஆண்டும்  மலர்ந்து பட்டுப்போகும் செடிகளில் ஒன்றி லிருந்து ஒரு பூ மலருகிறது ஆச்சரியம்தான்  மலர்ந்த பூ சுமார் ஒரு வார காலம் இருக்கும்   பிறகு செடிய்ம் பட்டுப்போய்விடும்   ஆனால் மே மாதம்  வந்தால் செடியும்வரும்  பூவும் மலரும்  அப்போது கிடைக்கும் மகிழ்ச்சி சொல்லித்தெரியாதது                                  ********************************

 
மெழுகுவர்த்தியின் ஒளியில் கடவுள் பிரத்தியட்சமாவதைக் கண்டு மகிழுங்கள்


இனி ஒரு வாரகாலம் வலைப்பக்கம் வர முடியாதுஎன்று நினைக்கிறேன்  மீண்டும்  சந்திக்கும்  வரை விடை பெறுகிறேன்


50 comments:

 1. வணக்கம்
  ஐயா

  வித்தியாசமான சடங்கு முறை அதுவம் ஓளியில் கடவுள் தெரிவது அதியம்.... வீடியோவை கண்டு மகிழ்ந்தேன்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. முன்பு ஒரு முறை ஒரு கடைக்குப் போனபோது பார்த்து வாங்கினது. வெவேறு கடவுள்களும் தெரியும் படியான பொருளும் இருக்கிறது வந்து ரசித்ததற்கு நன்றி சார்

   Delete
 2. வணக்கம் ஐயா பகிர்வு பல விடயத்தை கொடுத்தது
  மீண்டும் சந்திப்போம் பயணம் சிறக்க வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. கில்லர்ஜியின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 3. பல சுவை! வீடியோ வரவில்லை. மீண்டும் ரெஃப்ரெஷ் பண்ணி பார்க்கிறோம். படம் புகைப்படம் பார்க்க முடிந்தது.

  சார் எல்லா விஷயங்களையும், நம்மைப் பற்றியதாக இருந்தாலும் பொதுவெளியில் பகிர்வது என்பதும் அதுவும் இணையத்தில் பகிர்வது என்பது முடியாத காரியம் சார். இணையத்தில் ஏதேனும் ஒரு தலைப்பு அடித்தால் நமது பதிவுகள், பின்னூட்டங்கள் வரும் பகுதி, நம் பெயர் என்று வந்துவிடுகிறது. அதை பலரும் வாசிக்க நேரிடலாம். நம் உறவினராகவும் இருக்கலாம். அதனால் வெளிப்படையாகப் பகிர்வது என்பதில் நிறைய ப்ராக்ட்டிகல் டிஃபிக்கல்ட்டிஸ் இருக்கிறது சார்.

  ---இருவரின் கருத்தும்...

  ReplyDelete
  Replies
  1. நான் சென்று வந்த ஒரு உறவின் திருமணம் பற்றித்தான் எழுதி இருக்கிறேன் யாரையும் புண்படுத்தவில்லையே யார் வாசித்தாலும் தவறு இல்லை என்பதால்தான் பதிவிடுகிறேன் என்னைப் பொறுத்த வரை ஏழு ஆண்டுகளாக எனழ்க்குத் தோன்றியதை எழுதி வருகிறேன் எனக்கு எந்த ப்ராக்டிகல் டிஃபிகல்டிசும் இருப்பதாகத் தெரியவில்லை. பலரும் வாசிக்க வேண்டும் பல நடப்புகள் பற்றிய பல்வேறு கருத்துகள் இருக்கிறது என்பதைஒ அறிய ஒரு வாய்ப்பே வீடியோ ஏன் வரவில்லை என்று தெரியவில்லை. என் பதிவில் வருகிறதே கூகிள் க்ரோம் உபயோகித்துப் பாருங்கள்

   Delete
 4. படங்கள் அருமை. சென்ற மே மாதம் தங்கள் வீட்டிற்கு ஷூட்டிங்கிற்கு வந்த போது இந்த மலர் பூத்திருக்க நானும் புகைப்படம் எடுத்துப் பகிர்ந்தேன் எங்கள் தளத்தில்....

  எல்லாப் புகைப்படங்களும் அழகாக இருக்கின்றன...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. குறிப்பிட்ட மாதத்தில் அந்தப் பூ மலர்வது காணும்போது மகிழ்ச்சி/ அதைப் பகிர்ந்துகொள்கிறேன்

   Delete
 5. எல்லாப் பகிர்வுகளும் நல்லா இருந்தது. திருமணம் என்பது மந்திரபூர்வமான சடங்கு என்பதிலிருந்து விலகி, கொண்டாட்டம் என்ற நிலைக்கு வந்து பல ஆண்டுகளாகின்றன. நிறையபேர், முழுமையான மந்திரங்களையே விரும்புவதில்லை. ஒரு ஷோவுக்காக இவையெல்லாம் நடத்தப்படுகின்றன.

  பெரும்பாலும், எழுத்துகளில் ஒரு எழுத்தாளரைப் பற்றி அறிய இயலாது. எழுத்து வேறு. எழுத்தாளர் வேறு.இது சினிமாவைப் பார்த்து, டைரக்டரும் இது மாதிரிதான் (அல்லது கதைஆசிரியரும் இதைப்போன்றவர்தான்) என்று நினைப்பதற்குச் சமம்.

  மெழுகுவர்த்தியின் ஒளியில் கடவுள் தெரிவதை, பின்னுள்ள தொலைக்காட்சி டைவர்ட் செய்கிறது.

  ReplyDelete
  Replies
  1. எல்லாப் பகிர்வுகளும் நல்லா இருந்தது. திருமணம் என்பது மந்திரபூர்வமான சடங்கு என்பதிலிருந்து விலகி, கொண்டாட்டம் என்ற நிலைக்கு வந்து பல ஆண்டுகளாகின்றன. நிறையபேர், முழுமையான மந்திரங்களையே விரும்புவதில்லை. ஒரு ஷோவுக்காக இவையெல்லாம் நடத்தப்படுகின்றன./ இந்தமாதிரிக் கருத்தும் இருக்கிறது என்பதை தில்லையகத்தார்கள் தெரிந்து கொள்ள முடியுமே என்பதில் மகிழ்ச்சியே கடவுளை நினைக்கையில் எதுவும் டைவெர்ட் செய்யக் கூடாது அல்லவா வருகைக்கு நன்றி சார்

   Delete
 6. பல்சுவை அருமை!

  மகனுக்கு எங்கள் வாழ்த்துகளைச் சொல்லுங்க.

  ReplyDelete
  Replies
  1. பாராட்டுக்கு நன்றி மேம் சொல்லி விடுவேன்

   Delete
 7. பதிவு அருமையான செய்திகளைத் தந்திருக்கின்றது..

  >>> திருமணம் என்பது மந்திரபூர்வமான சடங்கு என்பதிலிருந்து விலகி, கொண்டாட்டம் என்ற நிலைக்கு வந்து பல ஆண்டுகளாகின்றன..<<<

  அன்பின் நெல்லைத் தமிழன் அவர்களின் கருத்து எனது கருத்தாகவும் ஆகின்றது..

  அதிலும் ஒன்று..

  திருமணம் என்பது மந்திரபூர்வமான சடங்கு மட்டுமல்ல.. மனப்பூர்வமான சடங்கும் ஆகும்..

  வாழ்க நலம்!..

  ReplyDelete
  Replies
  1. திருமணம் மனப் பூர்வமானதாக இருக்க வேண்டும் வெறும் சடங்கு அல்லவே வருகைக்கு நன்றி சார்

   Delete
 8. வயதாவதன் தாக்கம் நன்கு தெரிந்தது
  ////
  இந்த நினைப்பை வரவிடாதீங்க ஐயா

  ReplyDelete
  Replies
  1. மருந்து சாப்பிடும் போது வரக் கூடாத குரங்கின் நினைப்புதான் மேடம் அது

   Delete
 9. இதான் கடவுளா?இந்த படத்தை பலமுறை இதற்கு மின்னே பார்த்திருக்கிறேனே :)

  ReplyDelete
  Replies
  1. இன்னும் எத்தனை எத்தனையோ கடவுள்கள் ...!கடையில் கிடைப்பார்கள்

   Delete
 10. இந்த பதிவு ஒரு கதம்ப மாலை. அழகாகவே தொடுத்து இருக்கிறீர்கள். உங்கள் மகனின் புதுமனை புகுவிழா நிகழ்ச்சிக்கு எனது உளங்கனிந்த வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சார்

   Delete
 11. புதுமனைப் புகுவிழா வாழ்த்துகள்

  இதுவோர் சிறப்புப் பதிவு

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கு நன்றி ஐயா

   Delete
 12. சென்னை வரும்போது முடந்தால் எஙகள் இல்லம் வாருங்கள்!

  ReplyDelete
  Replies
  1. இதை இப்போதுதான் பார்க்கிறேன் அடுத்த முறை சென்னை வரும்போது தெரிவித்து வருகிறேனே

   Delete
 13. பதிவில் கூறியுள்ளவை அனைத்தும் அருமை ....
  ஒளியில் கடவுள் சூப்பர்ப் ..வெற்றிலை தருவது பற்றி வீட்டில் மாமி சொல்வதே சரி பூஜைக்கு எவ்வளவும் இலவசமா தரலாம் ..
  Foot ball lily செடியின் கிழங்கு BULB தரையில் /தொட்டியில் இருப்பதால் வருஷாவருஷம் அதிலிருந்து வளரும் ..செடி காய்ந்தா லும் அப்பப்போ தண்ணி ஊற்றனும் .

  ReplyDelete
  Replies
  1. கடந்த ஐந்து ஆறு ஆண்டுகளாக இப்பூ மலர்வதைக் காண்கிறேன் முதலில் இதன்பெயர் கூடத்தெரியவில்லை, பதிவர் கீதா மதிவாணந்தான் பெயரைச் சொன்னார் நீர் ஏதும் ஊற்றுவதில்லை.

   Delete
 14. காணொளி வரவில்லை.

  சென்னையில் வெய்யில் அப்போது கொளுத்தியது போல இப்போது இல்லை! கொஞ்சம் பரவாயில்லை. அப்புறம் வெய்யில் அதிகமாகலாம். உங்கள் மகனின் புதுமனைப் புகுவிழாவுக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. நல்ல காலம் வெயில் அதிகமாகவில்லை என் ராசிக்கேற்ற மாதிரி ஓரிரு மழையும் பெய்ததே வாழ்த்துக்கு நன்றி ஸ்ரீ

   Delete
 15. தாங்களும் சென்னையில் ஒரு புதுவீடு வாங்கிவிடலாமே, விலைகள் குறைந்திருப்பதாகத் தெரிகிறதே! (அடிக்கடி நாம் சந்திக்கமுடியுமே என்று சொன்னேன். வேறொன்றும் இல்லை.நேரில் பேசுவதைப் போல, எழுத்தில் நம்மைப் பற்றிச் சொல்லிக்கொள்ள முடியாதே! சொன்னாலும் தவறாகப் புரிந்துகொள்ளப்படும். உதாரணமாக, 'எனது நல்ல நண்பர் GMB' என்று எழுதினால், ஸ்ரீராம், கீதா, துளசிதரன், ராஜி, நெல்லைத்தமிழன் ....போன்றவர்கள் 'அப்ப, நாங்கள் எல்லாம் நல்ல நண்பர்கள் இல்லையா?' என்று போர்க்கொடி எழுப்புவார்களே! அதனால் தான் பலபேர் தங்களை வெளிபடுத்துவதில்லை. (நான் விடாமல் வெளிப்படுத்திக்கொண்டுதான் இருக்கிறேன் என்பதை நீங்கள் அறிவீர்களே!) மே இறுதியில்தான் நான் சென்னை திரும்பமுடியும். எனவே உங்கள் மே-10 வருகையும் எனக்குப் பயன்படாமல் போகிறது.

  இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து

  ReplyDelete
  Replies
  1. சென்னை என்றால், இந்தப் பக்கம் நங்கனல்லூர், அந்தப் பக்கம் சாலிக்கிராமம் (கேகே நகர் வடபழனி தாண்டி), இன்னொரு பக்கம் அடையார், இன்னொரு பக்கத்திற்கு போக ஆசை இல்லை. இந்தச் சுற்றுவட்டாரத்தில் ஒரு சதுர அடி 9,000க்குக் குறைந்து (அதுவும் மைலாப்பூர், தி நகர், அடையாரில் 18-20,000 ரூ ஆகிறது. 2015 டிசம்பர் புண்ணியத்தில், மேற்கு மாம்பலத்தில் தரைத் தளம் மட்டும் விலை குறைவு (அதுவும் 10,000க்கு மேல்தான்). இப்போது ரியல் எஸ்டேட் விலை குறைவு என்று சொல்கிறார்களே தவிர, விலை குறைந்த மாதிரித் தெரியவில்லை.

   நாம இருக்கிற இடத்தை விற்கலாம் என்று நினைத்தால், இப்போதுதான் இடம் வாங்க சௌகரியமான சமயம் என்று சொல்கிறார்கள். தேவையானபோது வாங்கலாம் என்று நினைத்தால், அடடா.. இதுதானே விற்பனைக்கு உகந்த சமயம், வாங்குவதற்கு அல்லவே என்று சொல்கிறார்கள். (உப்பு விற்கப்போனா மழை பெய்யுது, மாவு விற்கப்போனா காத்தடிக்குது நிலைமைதான் இராய.செல்லப்பா சார்...

   Delete
  2. பொதுவாகவே ரியல் எஸ்டேட் ஆட்கள், நாம் ஒரு இடம் வாங்கப் போனால் உயர்த்தியும், அதே இடத்தில் நாம் ஒரு இடத்தை விற்கப் போனால் குறைத்தும் சொல்வது அவர்களது தொழில்.

   Delete
  3. @ செல்லப்பா
   @ நெல்லைத் தமிழன்
   @ தி தமிழ் இளங்கோ
   எனக்கு சென்னையில் மனை வாங்கு ம் எண்ணம் இல்லை என் சிறிய பெங்களூர் குடிலே போது மானது. என் அடுத்த பதிவில் இம்மாதிரி வீடுகள் பற்றிய என் கருத்து இடம்பெறும் வருகைக்கு நன்றிகள் ஐயன் மீர்

   Delete
 16. கல்யாணங்கள் எல்லாம் இப்போது மிகவும் ஆடம்பரமாகவும், வித்தியாசம் என்ற பெயரில் என்னவெல்லாமோ செய்கிறார்கள். ஏன் இப்படிச் செலவு செய்கிறார்கள் என்று தெரியவில்லை. இது நிறைய ஸ்டேட்டஸ் பிரச்சனைகளையும் எழுப்புகிறது...யாருக்கு என்ன கொடுத்தார்கள் கிஃப்டாக என்றும் அதில் ஓ உனக்கு இவ்வளவு ரேட்டுக்கா எனக்கு இவ்வளவுதான் என்றெல்லாம்...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. இம்மாதிரிதான் கருத்துகள் இருக்க வேண்டுமா ஒரேயடியாகப் பொதுப்படையாக . யாரும் வருத்தப்பட மாட்டார்கள் அல்லவா

   Delete
 17. சிந்தனைச் சிதறலாக வந்தப்
  பல்சுவைப் பதிவு
  மிக மிக அருமை

  இப்போதெல்லாம் எழுந்து போகமுடியாத
  பார்வையாளர்கள் கிடைத்து விட்ட
  திருப்தியில் சாஸ்திரிகள் பலர்
  உபன்யாசகர்களாக மாறிக் கொண்டிருப்பது
  எரிச்சல் ஊட்டத்தான் செய்கிறது

  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்களுடன்...

  ReplyDelete
  Replies
  1. சாஸ்திரிகள் அவருக்கு மனதில் பட்டதைக் கூறி இருக்கிறார் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சார்

   Delete
 18. Replies
  1. எண்ணச் சிதறல்கள் இம்மாதிரி வடிவம் பெற்று விட்டது வருகைக்கு நன்றி சார்

   Delete
 19. எப்படி ஐயா இவ்வளவு செய்திகளையும் ஒரே பதிவில் பதிந்தீர்கள்? வியப்பாக உள்ளது.

  ReplyDelete
  Replies
  1. மனதில் தோன்றுவதை எல்லாம் எழுதிக் கொண்டு போகிறேன் அதனால் இருக்கும் வருகைக்கு நன்றிசார்

   Delete
 20. பல்சுவை பகிர்வு அருமை.
  புதுமனை புகுவிழாவிற்கு வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
  காணொளி அருமை.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி மேம்

   Delete
 21. அருமையான கெட்டிக் கதம்பம். காணொளி தெரியவில்லை. உங்கள் மகனின் புது வீட்டுக் கிரஹப் பிரவேசத்துக்கு எங்கள் வாழ்த்துகள். திருமணத்தின் பல சடங்குகளையும் யாரும் புரிந்து கொள்ளாமல் அலட்சியப் படுத்துவதின் காரணமாகவே அதை விளக்கி இப்போதெல்லாம் புரோகிதர்கள் பேசும்படி நேரிட்டிருக்கிறது. :(

  ReplyDelete
  Replies
  1. இது குறித்த பல பின்னூட்டங்களையும்பார்க்க வேண்டுகிறேன் காணொளிதெட்ரியாதது ஏன் என்று தெரியவில்லை. கூகிள் க்ரோம் உபயோகித்ட்க்ஹுப் பாருங்களேன்

   Delete
 22. மரம், செடிகொடிகளால் உங்கள் அகம் சூழ்ந்திருக்க நீங்கள் இருவரும் கொடுத்துவைத்திருக்கவேண்டும். உங்கள் வீட்டுக்கு வந்தபோது பார்த்த மாமரம், வெற்றிலைக்கொடிகள் மனதில் நின்ற்கின்றன. அந்த ஃபுட்பால் லில்லியை (உண்மையிலே இதுதானா அதன் பெயர்?) பார்க்க ஆசையாக இருக்கிறது.

  நினைப்பதையெல்லாம் பகிர முடிவதில்லையே என்கிற உங்களின் ஆதங்கம் புரிகிறது.

  ReplyDelete
  Replies
  1. நினைத்ததை எல்லாம் பகிர்வதில் ப்ராக்டிகல் டிஃப்ஃபிகல்டிஸ் இருக்கும் என்கிறார்களே உங்கள் மீள்வருகையை
   (என் வீட்டுக்கு ) எதிர் நோக்குகிறேன்

   Delete
 23. நீங்கள் கூறியவை அனைத்தும் உண்மை. நல்லபடி குடிபுகுதலை முடித்துக்கொண்டு வாங்கோ...

  ReplyDelete
  Replies
  1. உண்மையைத் தவிர வேறெதையும் எழுதக் கூடாதுஎன்று நினைக்கிறேன் குடிபுகல் முடிந்து வந்ததும் மறுமொழிகள் எழுதுகிறேன்

   Delete
 24. பல்சுவைப் பகிர்வு..... நன்று.

  சென்னை விஜயம்! இந்த முறை பதிவர் சந்திப்பு உண்டா?

  ReplyDelete
  Replies
  1. இந்த முறை பதிவர் சந்திப்புக்கு நேரமிருக்கவில்லை. வருகைக்கு நன்றி சார்

   Delete