Friday, May 19, 2017

perception ஆ உண்மைகளா

                                                பெர்செப்ஷனா  உண்மையா
                                               ----------------------------------------------
 வாழ்க்கையில்  பல முடிவுகள் இம்மாதிரி அனுமானங்களின்  பேரிலேயே எடுக்கப் படுகின்றன இவை நல்லபடியும்  இருக்கலாம் தவறாகவும்   இருக்கலாம்  எதையோ எழுத நான்  பீடிகை போடுவது போல் இருக்கிறதா
சரி இத்தனை பீடிகைகளும் எதற்காக. சில விஷயங்களை முழுவதும்  தெரிந்து கொள்ள முடிவதில்லை. தெரிந்து கொள்ளவும் முடியாது/ஆனால் எத்தனையோ நிகழ்வுகளைப் பார்த்துதானே நல்லதுஇது தவறுஇது என்று முடிவு செய்ய வேண்டி இருக்கிறது
இப்போது நடக்கும் பாஜகவின் ஆட்சி பற்றி எழுதத் தோன்றியது முந்தைய யுபிஎ ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பல நல்ல முடிவுகள் பலவற்றையும்  இவர்களே கொண்டு வந்ததுபோல் என்ன ஒரு பித்தலாட்டம்  ராஜிவ் காந்தியின்  முயற்சியால்  முன்னிறுத்தப்பட்ட  கணினி மூலம் எதையும் செய்யலாம் என்பதை இவர்களது முயற்சி போல்  காட்டிக் கொள்கிறார்கள் ஆதார் கார்ட் உபயோகப்படுத்துவது குறித்து நிறையவே எதிர்ப்பு தெரிவித்தவர்கள் இப்போது எந்த ஒரு பணப் பரிவர்த்தனைக்கும்  ஆதாரை முன்னிறுத்துகிறர்கள்  ஜீஎஸ்டி என்று சொல்லப்படும்  கூட்ஸ் அண்ட் செர்விஸெஸ் வரி முந்தைய ஆட்சியில் கொண்டுவரப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டது  முதலில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுஅன்றைய மோடியின் ஆட்சியில் இருந்த குஜராத் அரசுதான் இன்றைக்கு இவர்களால் கொண்டு வரப்பட்டு அமல் செய்வதாக ஒரு பிரமையை ஏற்படுத்துகிறார்கள் அன்னா ஹஜாரேயையும் அவரதுஜன் லோக் பால் மசோதாவையும்  பலர் மறந்து விட்டிருக்கலாம் 2013ம் ஆண்டு பாராளு மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை இன்னும்  அமல் செய்யவில்லை. குறிப்பிட்டவர்களின்  ஊழல்களைக் கண்டுகொள்ளாமல் இருக்கும் உத்தியோ    லோக்பாலின் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும்  பொறுப்பு பிரதமர்  உச்சநீதிமன்ற நீதிபதி. எதிர்கட்சித் தலைவர் மற்றும்    சிலர் அடங்கிய  ஒரு குழு தீர்மானிக்க வேண்டும் இப்போது அங்கீகரிக்கப்பட்ட எதிர்கட்சித்தலைவர் இல்லை என்னும்  காரணத்தால் லோக்பால் நியமனம்  செய்யப்படாமல் இருக்கிறது அந்த லோக் பாலின் முக்கிய பணியே ஊழல் குற்றச் சாட்டுக்கு உள்ளானவரை விசாரித்து நீதி வழங்குவதுதான்  இப்போது ஊழலில் பலரையும் குற்றம்சாட்டி சிபிஐ என்னும்  இயந்திரத்தை முடுக்கி விட்டு எல்லோர் பெயரையும் களங்கப்படுத்தும் காரியத்தை லோக்பால் மூலமே செய்ய முடியாதா  இவர்கள் ஏன்  லோக்பால் நியமனத்தின்  மூலம்  அதை செய்யக் கூடாது / அப்போது இவர்களுக்கு ஏதுவாக செயல்படும் பல அமைப்புக்சள் மீது இவர்களதுஎண்ணங்களை  திணிக்கமுடியாது என்பதாக இருக்குமோ  நீதி  வழங்கும் நீதிபதிகள் மேலும் இவர்களதுமுடிவுகள் திணிக்கப் படுகிறதோ என்னும்  சந்தேகம் எழுகிறது ஆண்டுகள் பலவும் மாதங்கள் பலவும் கிடைப்பில்போட்டிருந்த வழக்குக்கள் இவர்கள் நினைக்கும் போது உயிர்பெறுகின்றன வழக்கு தொடுக்கப்பட்டவர்கள் எல்லோரும் உத்தமர்கள் என்று சொல்ல  வரவில்லை ஆங்கிலத்தில் ஜஸ்டிஸ்  டிலேய்ட்  இஸ்  ஜஸ்டிஸ் டினைட் என்பது போல் இருக்கிறது எத்தனையோ கேஸ்கள் நினைவுக்கு வந்தாலும்  போதுமான விஷயங்கள் நினைவுக்கு வராததால் கோட் செய்ய முடியவில்லை காவியுடை தரித்தவர்கள் எல்லாம் முதல் மந்திரியாகவும்   குற்றங்களில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களாகவும் வெளியில் திரிகிறார்கள் நீதி மன்றம் ஏதோ சில கேஸ்களில் குற்றமற்றவர் என்று தீர்ப்பு வழங்கினாலும் அதை எதிர்த்து அப்பீல் செய்யும்   சிபிஐ ஏனோ சில வழக்குகளை கண்டுகொள்ளாமல் இருக்கிறது சுரங்கத் தில்லுமுல்லுகளில் விசாரிக்கப்பட்ட ரெட்டி சகோதரர்களுக்கு  விடுதலை கிடைத்ததை எதிர்த்து எந்த அப்பீலும்  இல்லை
முந்தைய அரசின் நல்ல முடிவுகள் பலவும் அவர்களால் கொண்டு வரப்பட்டது என்னும் காரணத்தால் செயல் படுவதில் பெரிய சுணக்கமே இருக்கிற்து மஹாத்மா காந்தி நேஷனல் ரூரல் எம்ப்லாய்மெண்ட் ஆக்ட் வேலை இல்லாத அன்ஸ்கில்ட் தொழிலாளர்களுக்கு  ஒரு ஆண்டில் குறைந்தது நூறு நாட்களுக்காவது வேலை கொடுத்து அதன் மூலம்  குறைந்தபட்சம்  ஒரு வருவாய்க்கு வழிசெய்யும் திட்டம் சோஷியல் செக்யூரிடி ஆக்ட் எனலாம்  ஆனால் பாஜக ஆளும் மாநிலங்களிலேயே  முன்னுரிமை வழங்கப் படுவதாக  ஒரு பேச்சும்  இருக்கிறது  இதைச் செயல் படுத்த சில சுலபமான நம்பகமான வழிமுறைகளைக் கொண்டு வரவேண்டும்  இங்கு ஊழல் பெருக வாய்ப்புகள் இருப்பதால் இந்த எச்சரிக்கை
 தகவல் அறியும் சட்டம் ரைட் டு எஜுகேஷன்  போன்ற முந்தைய அரசு கொண்டு வந்த திட்டங்களும் சரியாக செயல் படுத்தப்படாமால் திணறு கிறது
ஒரு கட்சிக்கு  என்று கொள்கை ஏதாவது இருக்க வேண்டும்  அந்தக் கொள்கையின்  அடிப்படையில் செயல்பாடுகள் இருக்க வேண்டும்  இப்போது இருக்கும் அரசுக்கு காவிமயமாக்குதலே கொள்கை போல் தெரிகிறது அதைச் செயல் படுத்த  முக்கிய பதவிகளில் இவர்களின்  அடிவருடிகளே நியமிக்கப் படுகின்றனர்
காங்கிரசின் முக்கிய தலைவர்களை இவர்கள் அடாப்ட் செய்து சொந்தம் கொண்டாடுகின்றனர்எனக்கு இன்னும்  ஏதேதோ சொல்லத் தோன்றுகிறது  கடைசியாக இந்தித் திணிப்பு . அரசு பத்திரங்களில் இந்தியில் எழுதினால் அது தெரியாத மக்களை  இந்தி படிக்கக் கட்டாயப்படுத்தும் ஒரு உத்தியே இது
சரித்திரகாலங்கள் முதலே தமிழ்நாடு  ஆங்கிலேயர் ஆட்சி தவிர  எந்த ஆதிக்கத்துக்கும் கட்டுப்படவில்லை.  அசோகர் காலத்திலும்  சரி அக்பர் காலத்திலும்சரி அவர்களது ஆட்சிக்குக் கட்டுப்படவில்லை இந்திய நாட்டை ஒருங்கிணைப்பது  மதம்  ஒன்றே வடக்கு முதல் தெற்குவரையும்  கிழக்கு மேற்கிலும்  மதம்  ஒன்றுதான்  இந்தியாவை இணைக்கிறது அதையே ஒரு கருவியாகப் பயன் படுத்தி ஹிந்து ராஷ்ட்ரா  என்றெல்லாம்  பேச்சுகள் எழுகிறது
சாதாரணப்பொது மக்கள் போராட்டங்களில் ஈடுபடுவது இல்லை  நரி வலம் ஓனால் என்ன இடம் போனால் என்ன  என்றுஇருப்பவர்கள் ஆனாலும் அவர்களின்  பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டல்லவா
( புள்ளி விவரங்களுடன்  எழுத ஆசைதான்   ஆனால் ஒரு சாதாரணப் பிரஜையாக சில அனுமானங்களே துணை நிற்கிறது நம்மால் தேர்ந்தெடுக்கப்படுபவர்களையே அதன்படிதானே தேர்வு செய்கிறோம் மிகவும் அதிகமான நேரங்களில்  இந்த ஹன்ச் சரியாகவே இருப்பதும்  தெரிகிறது  அதனால்தான்  தலைப்பே அம்மாதிரி ) 
ஒரு மாறுதலுக்காக என் பழைய தஞ்சாவூர் பெயிண்டிங். ஒன்று 
இப்போதெல்லாம்   பெயிண்டிங் செய்ய முடிவதில்லை 
             .


         

52 comments:

 1. எந்த வண்ணமும் இல்லாமல்
  நாடு குறித்து அக்கறை கொள்கிறவர்களின்
  மனவோட்டத்தை, மனவாட்டத்தை
  அப்படியே பதிவு செய்தது போல் உள்ளது
  ஓவியம் மிகச் சிறப்பாக உள்ளது
  பகிர்வுக்கும் தொடரவும்
  நல்வாழ்த்துக்களுடன்...

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. ஸ்ரீராமுக்கான மறு மொழி வந்து விட்டதால் கான்சல் செய்தேன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்

   Delete
 2. தங்களின் கண்ணோட்டத்தில் சொல்லியிருப்பது அனைத்தும் சரியே. நம் நாட்டின் சாபக்கேடு, ஆட்சி செய்ய வந்திருப்போர் முந்தைய ஆட்சியாளர்கள் நல்ல திட்டங்களை அறிமுகப்படுத்தியிருந்தால் அதை கிடப்பில் போடுவதும், இல்லையெனில் ஊரார் பெற்ற குழந்தையை தன் குழந்தை என சொல்வதுபோல்
  பழைய திட்டத்தின் பெயரை மாற்றி புதிய திட்டம்போல் அறிமுகப்படுத்தி பெருமை பேசுவதும் தான்.

  இவர்களையெல்லாம் பார்க்கும்போது,

  ‘நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத்
  திறமுமின்றி, வஞ்சனை சொல்வாரடீ – கிளியே
  வாய்ச் சொல்லில் வீரரடி’
  என்ற பாரதியின் பாடல் நினைவிற்கு வருகிறது.

  தஞ்சை ஓவியம் அருமை! பாராட்டுகள்!

  ReplyDelete
  Replies
  1. இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம் ஆனால் நான் சாதாரணமானவந்தானே எல்லா விஷயங்களும் நினைவில் நிற்பதில்லை கருத்துப் பதிவுக்கு நன்றி ஐயா

   Delete
 3. ஓவியம் நல்லா இருக்கு. ஓவியம், ஓய்வுகாலத்துக்கான நல்ல கலை. நீங்கள் வரைந்த மற்ற ஓவியங்களையும் அவ்வப்போது பதிவிடுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. மெயின் இண்டெரெஸ்ட் பதிவு ஆனால் ஓவியம் பற்றியே கருத்து. இதை நான் முன்பே சிந்தித்தேன் ஓவியனளை வரைவது நின்று விட்டது அவ்வப்போது பதிவிடுகிறேன் எல்லாம் முன்பே வரைந்தது இந்த ஓவியத்தைஎனக்கு ஆலோசனை சொன்ன மருத்துவருக்குக் கொடுத்தேன் டைவெர்ஷன் உதவும் என்றார்

   Delete
  2. சார்... அரசியலும் மதமும் பேச ஆரம்பித்தால் தேவையில்லாத கருத்துமோதல் நிகழும். அது என்னத்துக்கு நமக்கு. பதிவின் கருத்துடன் பெரும்பாலும் நான் உடன்படவில்லை.

   Delete
  3. பதிவு எழுதும்போது உண்மைக்குப் புறாஅம்பாக நான் ஏதாவது எழுதி இருக்கிறேனா என்பது எப்படித் தெரியும் மாறுபட்டக் கருத்து மோதல் அல்ல. ஒரு சிறந்த கலந்தாடல்களின் வழிமுறையே மீள் வருகைக்கு நன்றி

   Delete
 4. பெயிண்டிங் அருமை
  வாழ்த்துக்கள் ஐயா

  ReplyDelete
  Replies
  1. பதிவு பற்றிய கருத்தும் எதிர்பார்த்தேன் வருகைக்கு நன்றி ஐயா

   Delete
 5. உங்கள் பாணியில் கண்ணோட்டம் நன்று...

  ஓவியம் மிகவும் அழகு...

  ReplyDelete
  Replies
  1. என் கண்ணோட்டம் சரியா என்று சொல்லவில்லையே ஓவியத்தைப் பாராட்டியதற்கு நன்றி டிடி

   Delete
 6. ஐயா நாடு முன்னேற்றம் காணும் என்பதில் நம்பிக்கை நாளும் குறைந்து கொண்டே வருகிறது.
  ஓவியம் அருமை ஐயா

  ReplyDelete
  Replies
  1. நம்பிக்கையே வாழ்க்கை இதுவும் கடந்து போகும் என்று நம்புவோம்

   Delete
 7. மத்திய அரசியல் பற்றிய கண்ணோட்டம் அருமை ..
  அந்த தஞ்சாவூர் பெயின்டிங் கொள்ளை அழகு ..வெண்ணையுண்ணும் கண்ணனும் அதை பிடித்திருக்கும் பட்டு விரல்களும் குறும்பு விழிகளும் அட்டகாசமா வந்திருக்கு ஓவியம்

  ReplyDelete
  Replies
  1. என் கண்ணோட்டத்துடன் உடன்படுகிறீர்களா. ஓவியம் வரைவது ஒரு சமயம் என் நேரத்தை ஆக்ரமித்திருந்தது. இப்போது கண்களும் கையும் ஒருங்கிணைவது சிரமமாய் இருக்கிறது

   Delete
 8. சிறந்த படம்
  அருமையான கண்ணோட்டம்

  ReplyDelete
  Replies
  1. பாராட்டுக்கு நன்றி சார்

   Delete
 9. அரசியலும் மீயும் எட்டாத தூரம்..

  ஓவியம் அழகு. இப்பவும் வரையலாமே...

  ReplyDelete
  Replies
  1. இப்பவும் ஓவொயம்வரைய ஆசைதான் சரியாக வர உடல் ஒத்துழைக்க வேண்டுமே இங்கிலாந்தில் இருப்பதால் இந்திய அரசு பற்றி தெரிய வேண்டாமோ

   Delete
 10. பெண்டாட்டியும் மத்திய அரசும் ஒன்று. குறை காண்பதென்றால் எவ்வளவோ உண்டு. குறைகளைப் பொறுத்துக்கொண்டு அவர்கள் போடுவதை மகிழ்சசியோடு உண்பதே நல்ல உறக்கம் வருவதற்கு ஒரே வழி.

  (வலைப்பதிவர் முகங்களை தஞ்சாவூர் ஓவியமாக வரையும் திட்டம் உண்டா?)

  இராய செல்லப்பா நியூஜெர்சி (மிக மிக விரைவில் சென்னை)

  ReplyDelete
  Replies
  1. ///பெண்டாட்டியும் மத்திய அரசும் ஒன்று.///

   ஆனால் பொண்டாடியை நாம் குறை சொல்ல முடியாதே

   Delete
  2. @செல்லப்பா கண்ணன் முகம் எந்த வலைப் பதிவரையாவது நினைவு படுத்துகிறதா

   Delete
  3. 2அவர்கள் உண்மைகள் பெண்டாட்டி செய்தாலும் குற்றம் குற்றமே

   Delete
 11. சார் அரசியல் பற்றி ரொம்பச் சொல்லத் தெரியவில்லை....

  ஓவியம் மிக அழகு சார்!!

  கீதா

  ReplyDelete
  Replies
  1. என்னது அரசியல் பற்றி உங்களுக்கு சொல்ல தெரியவில்லையா

   Delete
  2. @ கீதா தில்லையகத்து
   இருந்தாலும் மிகவும் தன்னடக்கமா இல்லை கருத்து சொல்ல விருப்பமில்லையா

   Delete
 12. இந்தக் கண்ணன் தான் எங்க வீட்டிற்கும் வருகை தந்திருக்கிறானே! நல்ல ஓவியம். நன்றி.

  ReplyDelete
  Replies
  1. அது வேறு கண்ணன் கண்ணாடிக்கண்ணன் கண்ணன் எததனைகண்ணனம்மா

   Delete

 13. மத்திய அரசு பற்றிய சாமன்ய பொது மக்களின் கண்ணோட்டாமாக இருக்கிறது எனக்கு ஒரு சந்தேகம் தமிழர்கள் மட்டும்தான் இப்படி சிந்திக்கிறார்களா என்று காரணம் வட நாட்டு மக்களிடம் பேசும் போது மோடி அரசு நிறைய சாதிக்கிறது என்று பேசுகிறார்கள்

  ReplyDelete
  Replies
  1. மோடி அரசுதான் எல்லாவற்றுக்கும் காரணம் அது தமிழ் மக்களை நிறையவே பாதிக்கிறது தமிழ் மக்களின் கருத்து வெளியில் தெரிகிறது வடநாட்டு மக்களும் விரைவில் உணர்வார்கள்

   Delete

 14. உங்களின் இந்த பதிவை என் தளத்தில் உங்கள் பெயருடன் மறு பதிவு செய்ய அனுமதி கிடைக்குமா?

  ReplyDelete
  Replies
  1. தாராளமாக. உங்கள் தளத்தில் இன்னும் பலரும் வாசிக்கும் வாய்ப்பு இருக்கிறதே

   Delete
 15. எனக்கு இந்துமத கடவுளின் படங்களில் மிக அதிகம் பிடித்தது கண்ணன் முருகன் சிவன் புள்ளையார் படங்கள் அதில் கண்ணன் முருகர் படங்கள் குழந்தைகள் போல மிக அழகாக இருக்கும் பள்ளிக் காலங்களில் காலண்ற்றில் வரும் இந்த கடவுளின் உருவப்படங்களை நானும் வ்ரைவேன்

  ReplyDelete
  Replies
  1. இந்துக்கடவுள்கள் கலர்ஃபுல் சில கடவுளர்களை நம் இஷ்டம்போல் வரையலாம் எனக்கு முருகன் பிடிக்கும்

   Delete
 16. உண்மையா சொன்ன அரசியல் செய்திகள் சரியா மனசுல பதியல ( அதில் எனக்கு விருப்பம் குறைவே..) ....

  ஆன உங்க ஓவியம் அழகோ அழகு...

  கண்ணாடி தஞ்சாவூர் ஓவியங்கள் நிறைய போட்டு இருக்கேன்...ஒரிஜினல் ஓவியம் போடும் வாய்ப்பு இன்னும் அமையவில்லை...

  அப்புறம் இந்த வெண்ணெய் தாளி கிருஸ்னர் ரொம்ப பிடிக்கும்..எங்க பாட்டி இதே போல் ஒரு படம் இருக்கும்...நானும் இது போல் போடணும் ஆசைப்பட்டு ..கண்ணாடி ஓவியத்தில் தேடினேன்...இன்னும் கிடைக்கவில்லை..

  ReplyDelete
  Replies
  1. எனக்கும் ஓவியம் வரைவதைத் தொடர விருப்பமே ஆனால் இப்போதெல்லாம் கவனம் செலுத்த முடியவில்லை.கைகளும் கண்களும் ஒருங்கிணைவது சிரமமாய் இருக்கிறது கண்ணாடிஓவியங்களும் வரைந்திருக்கிறேன் அவ்வப்போது பதிவிடுவேன் வருகைக்கு நன்றி

   Delete
 17. நதிநீர் இணைப்பு என்றார்கள் ,இப்போது அதைப் பற்றி பேச்சே கிடையாது ,கருப்பு பண ஒழிப்பும் ஒன்றும் நடை பெறவில்லை ,ராமராஜ்யம் மட்டுமே குறி :)

  ReplyDelete
  Replies
  1. உள்ளுரில் வரி அதிகாரிகளுக்கு அதிகாரம் அதிகம் அவர்களால் வெளிநாட்டில் இருக்கும் கருப்புப் பணத்தில்கை வைக்க முடியவில்லை நதிநீர் இணைப்பை விடுங்கள் இந்துக்கள் புனிதமாகக் கருதும் கங்கை மேலு ம் சாக்கடையாக இருக்கிறது அதை தூய்மை செய்ய இன்னும் என்னவெல்லாம் செய்யவேண்டுமோ தெரியவில்லை ராமராஜ்ஜியத்தில் எல்லோரும் சந்தோஷமாக இருந்தார்களா

   Delete
 18. மோடி சர்க்காரைப் பற்றிய திறந்த அரசியல் விமர்சனம். ஓவியத்தில் குறிப்பாக தஞ்சாவூர் பெயிண்டிங்கில் உங்களுக்கு உள்ள ஈடுபாடு பதிவுலக நண்பர்கள் அறிந்த ஒன்று. மேலும் பாராட்டும் விதமாகவும் அமைந்தது.

  ReplyDelete
  Replies
  1. திறந்த விமர்சனம் என்று பாராட்டுவதற்கு நன்றி சார் என் ஓவியங்களை பல பதிவர் நண்பர்கள் பார்த்ததில்லை

   Delete
  2. நான் சொல்ல வந்தது, நீங்கள் வரைந்திட்ட, உங்கள் பதிவுகளில் வெளியிடப்பட்ட தஞ்சாவூர் பெயிண்டிங்குகளை.

   Delete
  3. நீங்கள் என் பதிவுகளைப் பல காலமாகப் பார்த்து வருகிறீர்கள் அதனால் என் பெயிண்டிங் பற்றித் தெரிந்திருக்கிறது. பல புதிய வாசகர்களுக்குத்தெரியாது அவர்களுக்காக அவ்வப்போது ஓவியங்களை பகிரும் எண்ணம் இருக்கிறது மீள் வருகை தந்து தெளிவு செய்ததற்கு நன்றி சார்

   Delete
 19. மோடி அரசு கொஞ்சம் ஏமாற்றம்தான் அளிக்கிறது. வழக்கம் போல் உங்கள் கருத்துக்களை உங்கள் பாணியில் அஞ்சாமல் எழுதி விட்டீர்கள்.

  ஓவியம் பிரமாதம்!👍👌

  ReplyDelete
  Replies
  1. அஞ்சுவதற்கு என்ன இருக்கிறது ஓவியத்தைப்பாராட்டியதற்கு நன்றி மேம்

   Delete
 20. அன்புள்ள ஜிஎம்பி ஐயா

  வணக்கம். புள்ளிவிவரங்கள் தேவையில்லாமல் சரியாக எழுதியிருக்கிறீர்கள். எங்கள் தொகுதியில் தனித் தேர்தல் ஒன்று நடைபெற்றபோது தெருவுக்கு பதினைந்துபேர் பதினைந்து விலையுயர்ந்த கார்களில் வந்து தங்கி தினமும் கையில் சிறு குறிப்பேட்டுடன் வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரித்தார்கள். பணப் பட்டுவாடாவும் நடைபெற்றது. அவர்களின் ஆடம்பரப்பேச்சும் செயல்முறைகளும் மக்களுக்கு உதவுபவர்கள் என்கிற போக்கை அடியோடு அறுத்துக் காட்டியது. சாதாரண கவுன்சிலர் நிலையில் உள்ளவர்களின் செயல்பாடுகள் இவை. இதையடுத்து உயர்நிலையில் உள்ளவர்கள் எப்படியிருப்பார்கள் என்பதை இந்த உங்களின் பதிவு தெளிவாகக் காட்டுகிறது. என்றாலும் யார் தவறு செய்கிறார்களோ அந்த நபர் நின்று வெற்றி பெற்ற தொகுதியின் மக்களெல்லாம் பொதுவெளியில் கூடி ஒருங்கிணைந்து கையொப்பமிட்டு இவரை நாங்கள் செல்லாதவர் என அறிவிக்கிறோம் என்கிற ஒரு பொது வாக்கெடுப்பில் இவர்களை உடனே நீக்குகிற நிலை வராதா..இதுபோன்ற நிலை அயல்நாடுகளில் உண்டு எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். இது மிகமிகப் பேராசையான எண்ணம். நிறைவேறாது ஒருபோதும். இருப்பினும் மனவெளிப்பாட்டில் கண்டிக்கிற மனோபாவம்தான் சாத்தியம். அருமையான பதிவு. எதார்த்தமான பதிவு. நன்றிகள்.

  ReplyDelete
 21. அன்புள்ள ஜிஎம்பி ஐயா

  வணக்கம். புள்ளிவிவரங்கள் தேவையில்லாமல் சரியாக எழுதியிருக்கிறீர்கள். எங்கள் தொகுதியில் தனித் தேர்தல் ஒன்று நடைபெற்றபோது தெருவுக்கு பதினைந்துபேர் பதினைந்து விலையுயர்ந்த கார்களில் வந்து தங்கி தினமும் கையில் சிறு குறிப்பேட்டுடன் வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரித்தார்கள். பணப் பட்டுவாடாவும் நடைபெற்றது. அவர்களின் ஆடம்பரப்பேச்சும் செயல்முறைகளும் மக்களுக்கு உதவுபவர்கள் என்கிற போக்கை அடியோடு அறுத்துக் காட்டியது. சாதாரண கவுன்சிலர் நிலையில் உள்ளவர்களின் செயல்பாடுகள் இவை. இதையடுத்து உயர்நிலையில் உள்ளவர்கள் எப்படியிருப்பார்கள் என்பதை இந்த உங்களின் பதிவு தெளிவாகக் காட்டுகிறது. என்றாலும் யார் தவறு செய்கிறார்களோ அந்த நபர் நின்று வெற்றி பெற்ற தொகுதியின் மக்களெல்லாம் பொதுவெளியில் கூடி ஒருங்கிணைந்து கையொப்பமிட்டு இவரை நாங்கள் செல்லாதவர் என அறிவிக்கிறோம் என்கிற ஒரு பொது வாக்கெடுப்பில் இவர்களை உடனே நீக்குகிற நிலை வராதா..இதுபோன்ற நிலை அயல்நாடுகளில் உண்டு எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். இது மிகமிகப் பேராசையான எண்ணம். நிறைவேறாது ஒருபோதும். இருப்பினும் மனவெளிப்பாட்டில் கண்டிக்கிற மனோபாவம்தான் சாத்தியம். அருமையான பதிவு. எதார்த்தமான பதிவு. நன்றிகள்.

  ReplyDelete
 22. அன்புள்ள ஜிஎம்பி ஐயா

  வணக்கம். புள்ளிவிவரங்கள் தேவையில்லாமல் சரியாக எழுதியிருக்கிறீர்கள். எங்கள் தொகுதியில் தனித் தேர்தல் ஒன்று நடைபெற்றபோது தெருவுக்கு பதினைந்துபேர் பதினைந்து விலையுயர்ந்த கார்களில் வந்து தங்கி தினமும் கையில் சிறு குறிப்பேட்டுடன் வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரித்தார்கள். பணப் பட்டுவாடாவும் நடைபெற்றது. அவர்களின் ஆடம்பரப்பேச்சும் செயல்முறைகளும் மக்களுக்கு உதவுபவர்கள் என்கிற போக்கை அடியோடு அறுத்துக் காட்டியது. சாதாரண கவுன்சிலர் நிலையில் உள்ளவர்களின் செயல்பாடுகள் இவை. இதையடுத்து உயர்நிலையில் உள்ளவர்கள் எப்படியிருப்பார்கள் என்பதை இந்த உங்களின் பதிவு தெளிவாகக் காட்டுகிறது. என்றாலும் யார் தவறு செய்கிறார்களோ அந்த நபர் நின்று வெற்றி பெற்ற தொகுதியின் மக்களெல்லாம் பொதுவெளியில் கூடி ஒருங்கிணைந்து கையொப்பமிட்டு இவரை நாங்கள் செல்லாதவர் என அறிவிக்கிறோம் என்கிற ஒரு பொது வாக்கெடுப்பில் இவர்களை உடனே நீக்குகிற நிலை வராதா..இதுபோன்ற நிலை அயல்நாடுகளில் உண்டு எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். இது மிகமிகப் பேராசையான எண்ணம். நிறைவேறாது ஒருபோதும். இருப்பினும் மனவெளிப்பாட்டில் கண்டிக்கிற மனோபாவம்தான் சாத்தியம். அருமையான பதிவு. எதார்த்தமான பதிவு. நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. ஐயாவுக்கு வணக்கங்கள் முகவரி இல்லாத என்போன்றோர் தொடர்ந்து பதிவில் எழுத உங்களைப் போன்றவர்களின் ஊக்கம்தான் முக்கியம் வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி ஐயா

   Delete