Friday, May 27, 2022

நான் சந்தித்த உலக தலைவர்கள்

 

நான் சந்தித்த உலகத் தலைவர்கள்...

                            நான் சந்தித்த உலகத் தலைவர்கள்...
                            ------------------------------------------------


அந்தக் காலத்தில் உலகத் தலைவர்களை ரேடியோ மூலமாகவும் ,பத்திரிகை வாயிலாகவும்தான் தெரிந்து கொள்ள முடியும். இப்போதுபோல் தொலைக் காட்சியில் அவர்களைக் காண முடியாது.இந்த நிலையில் தலைவர்களை நேரில் சந்திப்பது என்பது அகஸ்மாத்தாகவும் எதிர்பாராததாகவும் அமைவதே. உலகம் போற்றும் உத்தமர் மஹாத்மா காந்தியை நேரில் தரிசிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.என் சம வயதுக்காரர்களுக்கோ இளையவர்களுக்கோஅந்த மாதிரி வாய்ப்பு அமைந்திருப்பது மிகவும் அரிதாகும்.

    
      நாங்கள் அப்போது அரக்கோணத்தில் இருந்தோம்.எனக்கு எட்டு வயதிருக்கலாம் .1945-1946-ம் வருடம் என்று நினைக்கிறேன். காந்திஜி மதராஸ் வருவதாகவும் அவரைப் பார்க்கப் போக வேண்டும் என்றும் அப்பா சொல்லிக் கொண்டிருந்தார். அவருக்கு என்ன தோன்றியதோ, போகும்போது என்னையுமழைத்துக் கொண்டு போனார். இப்போது நினைத்துப் பார்க்கும்போது அது கிடைத்தற்கரிய சந்தர்ப்பம் என்றே தோன்றுகிறது. மஹாத்மாவை சுமார் 20-30-அடி தூரத்தில் இருந்து தரிசித்தோம். அவரிடத்தில் கூட்டத்தில் இருந்த யாரோ என்னவோ கேட்க, அதற்கு அவர் “ சும்மா உக்காருப்பா “என்று தமிழில் கூறியது நன்கு நினைவில் உள்ளது.

     மஹாத்மா காந்தியின் நினைவு வரும்போது, அவர் சுட்டுக்கொல்லப்பட்ட நாள் நன்றாக நினைவுக்கு வருகிறது. நாங்கள் மாலையில் தெருவில் “பேந்தா” என்ற விளையாட்டு ஆடிக்கொண்டிருந்தோம். அப்போது சுவால்பேட்டை தாசில்தார் தெருவில் ஒரு வீட்டில் வசித்து வந்தோம். இரண்டு வீடுகள் தள்ளியிருந்த வீடு,சினிமாக் கொட்டகைக் காரரின் வீடு. அவர் வீட்டில் இருந்த ரேடியோவில் இருந்து வந்த செய்தி சிறு பிள்ளைகளான எங்களுக்கு திடுக்கிடலாகக் கேட்டது. காந்தி இற்ந்த செய்தியை தெரு முழுக்கக் கூவித் தெரியப் படுத்தினோம். அன்று இரவு எங்கள் வீட்டிலேயே சாவு விழுந்த மாதிரியான ஒரு சூழ் நிலை நிலவியது. அப்பா அழுததும், வீட்டில் அம்மாவின் சித்தி “ மேமை” (விட்டில் உதவியாக இருந்தவர்),மாடியில் சென்று தேம்பித் தேம்பி அழுததும் இப்போது நினைக்கும்போது, காந்தியின் செல்வாக்கும் பேரும் புகழும் எப்படி மிகச் சாதாரண மக்களையும் வெகுவாகப் பாதித்தது என்பது புரிகிறது. காந்திஜியின் பாதிப்பு வாழ்க்கையில் இல்லாதவர்கள் அந்தக் காலத்தில் இருப்பதே நினைக்க முடியாதது.

  நான் கண்ட உலகத் தலைவர்களுள் மறைந்த சீனப் பிரதமர் சூ-என் -லாய் 
பிரத்தியேகமாய் நினைவுக்கு வருகிறார்.HAL-ல் பயிற்சியில் இருந்த சமயம்.
1956- 1957-ம் வருடம் என்று நினைவு.

மெயின் ஃபாக்டரியில் பயிற்சி என்பது, அங்குள்ள ஒவ்வொரு பகுதிக்கும் ஓரிடம் இரண்டு வாரம் என்பதுபோல் இருந்தது. மெஷின் ஷாப், ஷீட்மெடல் போன்ற இடங்களில் நிறைய பிரிவுகளில் பயிற்சி. பயிற்சி என்றால் நம்மை யாரும் வேலை செய்ய விடமாட்டார்கள். தொழிலாளிகள் செய்வதை நாம் அருகிருந்து பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டும். அவர்களோ நாம் முக்கியமான விஷயங்களைக் கற்றுக் கொள்ளக் கூடாது என்பதிலேயே குறியாய் இருப்பார்கள். பணிக்கு ஏற்ற செட்டிங் ஏதாவது செய்யும்போது நம்மை ஏதாவது காரணம் சொல்லி அகற்றிவிடுவார்கள். அங்கு வேலை செய்து கொண்டிருந்த பணியாளர்கள் அனுபவத்தில் கற்றதை, பயிற்சி என்ற பெயரில் சின்னப் பையன்கள் நாங்கள் கற்றுக் கொண்டு பிற்காலத்தில் அவர்களையே அதிகாரம் செய்யும் நிலைக்கு வந்து விடுவோம் என்ற பயமே அவர்களது செயல்களுக்குக் காரணம். அனுபவமிக்கத் தொழிலாளியிடம் நட்புடன் பழகி எவ்வளவு தெரிந்து கொள்ள முடியுமோ அதைக் கற்றுக் கொள்வது நம் சாமர்த்தியம். கூடியவரை அவர்கள் சொல் பேச்சுக் கேட்டு, அவர்களுக்கு மரியாதை கொடுத்தால் எடுபிடி வேலையெல்லாம் பழகி கொஞ்சம் கற்றுக் கொள்ள வாய்ப்பு கிடைக்கும். அங்கிருந்தவர்களில் வேலை அறிந்தவர்கள் அதிகம் படிக்காதவர்கள்.

           இந்த காலகட்டத்தில் எனக்கு மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சி எனக்கு நினைவுக்கு வருகிறது. அப்போது சீனப் பிரதமராயிருந்த சூ-என் லாய் இந்தியா வந்திருந்தார். அவர் எச்.ஏ.எல்.-க்கு வருகை தந்தார். அவரை மெஷின் ஷாப்புக்கு அழைத்து வரும்போது, வரும் வழியில் ஆட்டோமேடிக் லேத் மெஷின்களில் எனக்குப் பயிற்சி. அவர் உள்ளே வரும் வழியில் ஒரு புறத்தில் இந்த மெஷின்கள் ஓடிக்கொண்டிருக்க, அதன் அருகே சீனியர் ஆப்பரேட்டருடன் நானும் நின்று கொண்டிருந்தேன். வரிசையாகப் பார்வை இட்டுக்கொண்டு வந்தவர் எங்கள் அருகே வந்து ஏதோ கேட்டார். எங்களை சுட்டிக் காட்டிக் கேட்க, பயிற்சி எடுக்கும் பையன் என்று சொல்லி இருக்க வேண்டும். என் அருகில் வந்தவர், செல்லமாக என் கன்னத்தில் தட்டிக் கொடுத்து உற்சாகப் படுத்திச் சென்றார். உலகத் தலைவர்களில் ஒருவரின் செல்லத்தட்டு கிடைத்தது நினைத்து அன்றெல்லாம் மகிழ்ந்திருந்தேன்.

     
     HAL-ல் பயிற்சி எல்லாம் முடிந்து Aero Engine Division-ல் வேலையிலிருந்தோம். அந்த டிவிஷன் தொடக்கத்திலிருந்தே அங்கு பணியிலிருந்தோம். போர்விமானத்துக்கான ORPHEUS ENGINE தயாரிப்பில் BRISTOL  SIDDELY நிறுவனத்துடன் ஒப்பந்தம். தொழிற்சாலைக்குத் தேவையான மெஷின்கள் வந்து ஒருங்கிணைக்கப் பட்டுக் கொண்டிருந்தன. சில மெஷின்கள் ஏற்கனவே உபயோகத்தில் இருந்தன. அந்த சமயம் (1959 ம் வருடக் கடைசி என்று நினைவு. )இந்தியப் பிரதமர் ,மனிதருள் மாணிக்கம் ,தொழிற்சாலைகளே இந்தியக் குடியரசின் கோவில்கள் என்று நம்பியவர், திரு, ஜவஹர்லால் நேரு, விஜயம் செய்தார். என்னென்ன மெஷின்கள் எதற்காக என்பன போன்ற விஷயங்களைத் துருவித் துருவிக் கேட்டுக் கொண்டார். அங்கு வந்திறங்கிய மெஷின்கள் ஒருங்கிணைக்கப் பட்டுக் கொண்டிருந்தன.ஃப்ரான்ஸிலிருந்து வந்த BERTHIEZ  என்ற வெர்டிகல் டரெட் மெஷினைப் பார்த்து எல்லா விவரங்களையும் கேட்டுக் கொண்டார். அவர் அங்கிருக்கும்போது அவரைப் பொல ஒரு சிறிய BUST உருவம் அலுமினியத்தில் HYDROTEL என்னும் மெஷினில் அவர் முன்னாலேயே பிரதியெடுத்துக் கொடுத்தோம். மிகவும் மகிழ்ந்தார். இதன் நடுவே ஒரு தொழிலாளி, அவரை மாதிரியே ஒரு படம் வரைந்து ஆட்டோகிராஃப் கேட்டான். இதற்குள் அதிகாரிகளின் கெடுபிடி அதிகமாகவும் அதனையும் மீறி அந்தப் படத்தில் கையெழுத்துப் பொட்டுக் கொடுத்தார்.

      மேற்குறிப்பிட்ட சந்திப்புகள்  க்ளோஸ் குவார்ட்டர்ஸ் என்றால், சற்றுத் தொலைவிலிருந்து ராணி எலிசபெத், ப்ரின்ஸ் ஃபிலிப், ரஷ்யத்தலைவர்கள்  புல்கானின், க்ருஷ்சேவ் போன்றோரையும் பார்த்திருக்கிறேன்.

      1962-ம் வருடம் இந்திய சீன யுத்தம் வந்த போது, ஒரு சமயம் கோபத்தில் சூயென்லாய் தட்டிய என் கன்னத்தை நான் அடித்துக் கொண்டிருக்கிறேன்
                                           ----------------------------------------------------------------------.                             
Sunday, May 22, 2022

ராமானுஜனின் மாஜிக் எண்கள்

                        22         12         18          87

                       88          17          9          25

                       10          24          89        16

                       19          86          23         11    

மேலே உஉள்ள எண்கள் ஒவ்வொரு கட்டத்தில் இருப்பதாக பாவித்துக் கொள்ளுங்கள். (கட்டம் போட்டுக் காட்ட என் கணினி அறிவு போதவில்லை.) இது ஒரு மேஜிக் சதுரம். இதில் உள்ள  தனித்தன்மகிமை என்ன என்று புரிகிறதா. ? இது நம் கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜன் வடிவமைஅமைத்தது. அப்படி என்ன தனித் தன்மை என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா.?இதில் எந்த வரிசையிபக்கம் கூட்டினாலும் கூட்டுத்தொகை (இடமிருந்து வலம் அல்லது மேலிருந்து கீழ்.) 139 வரும்.

குறுக்கா எப்படிக் கூட்டினாலும் கூட்டுத்தொகை 139 வரும்.( 22+17+89+11 = 139
                                                    87+9+24+19  = 139

மூலைகளில் இருக்கும் எண்களைக் கூட்டினாலும் கூட்டுத் தொகை 139 வரும்.
                                                    22+87+11+19 =139
நடுவில் இருக்கும் நான்கு எண்களின் கூட்டுத்தொகை 139 (17+9+89+24 =139 )

மேல்வரிசை கீழ்வரிசைகளில் இருக்கும் இரண்டாவது மூன்றாவது எண்களின் கூட்டுத்தொகை 139 வரும் ( 12+18+86+23 = 139 )

மேலிருந்து கீழாக உள்ள வரிசைகளில்முத்ல் வரிசையின் இரண்டாம் மூன்றாம் எண்களும்  கடைசி வரிசையின் இரண்டாம் மூன்றாம் எண்களும் கூட்டினால் வரும் கூட்டுத்தொகை 139.( 88+10+25+16 =139 ) 

இதோ இன்னொரு கூட்டின் எண்ணிக்கை:
முதல் வரிசை இடமிருந்து வலம் இரண்டாவது எண்.
முதல் வரிசை மேலிருந்து கீழ் இரண்டாவது எண்
இடமிருந்து வலம் கடைசி வரிசை மூன்றாவது எண்
மேலிருந்து கீழ் கடைசி வரிசை மூன்றாவது எண்  இவற்றின் கூட்டுத்தொகை 139.
18+10+86+25=139
( 12+88+23+16 =139.

இன்னுமொரு காம்பினேஷன்
முதல் வரிசை இடமிருந்து வலம் மூன்றாவது எண்
முத்ல் வரிசை மேலிருந்து கீழ் மூன்றாவது எண்
இடமிருந்து வலம் கடைசி வரிசை இரண்டாவது எண்
மேலிருந்து கீழ் கடைசி வரிசை இரண்டாவது எண் இவற்றின் கூட்டுத்தொகை 139( 18+10+86+25 = 139 )இந்த சதுரத்தை நான்கு சம சதுரங்களாகப் பிரித்தால் ஒவ்வொரு சிறிய சதுரங்களில் உள்ள எண்களின் கூட்டுத்தொகை 139
உ-ம் 22+12+88+17= 139
      18+87+9+25= 139
      10+24+19+86=139
      89+16+23+11= 139.

இன்னும் சில காம்பினேஷன்களை முயற்சி செய்து பாருங்கள்.

இதோ முத்தாய்ப்பாக ஒரு செய்தி. ஸ்ரீனிவாசன் ராமானுஜனின் பிறந்த நாள் உங்களுக்குத் தெரியுமா.? முதல் வரிசை எண்களைப் பாருங்கள். என்ன தெரிகிறது.?
22   12   18   87   விளங்க வில்லையா.?அவரது பிறந்த நாள் 22 -12 -1887......!
இந்திஇய்இந்தியனாய்இருப்பதில் பெருமை கொள்ளுங்கள்.


எல்லாமே லெஸ் தான்

 


                                   இங்கு எல்லாமே LESS- தான்.
                                   -----------------------------------------

இந்த 21-ம் நூற்றாண்டில்

  நம்   தகவல் பரிமாற்றம்---------------WIRELESS

 நம் தொலைபேசிகள் ---------------  -CORDLESS

 நம் உண்வு ------------------------    FATLESS.

 நம் இனிப்பு ------------------------    SUGARLESS.

 நம் சமையல் ----------------------    FIRELESS

 நம் உழைப்பு -----------------------    EFFORTLESS

 நம் உறவு --------------------------   FRUITLESS.

 நம் மனப் பான்மை ----------------      CARELESS.

 நம் உணர்வுகள் --------------------     HEARTLESS

 நம் அரசியல் ---------------------         SHAMELESS

 நம் கல்வி ------------------------        WORTHLESS 

 நம் தவறுகள் -----------------------   COUNTLESS

 நம் விவாதங்கள் --------------------    BASELESS

 நம் இளைஞர் -----------------------    JOBLESS

 நம் இளைஞர் -----------------------    JOBLESS

 நம் உயரதிகாரிகள் -----------------        BRAINLESS

 நம் பணி ---------------------------       THANKLESS

 நம் தேவை -------------------------      ENDLESS    

 நம் நிலைமை ---------------------          HOPELESS

நம் வரவு ----------------------------         LESS AND LESS. 

இது எனக்கு வந்த மின் அஞ்சலின் பகிர்வு.
ஏற்கனவே பெண்கள் என் மேல் கோபமாய் இருப்பார்கள்
என்பதால் ஒரு வரியைத் தவிர்த்திருக்கிறேன்.அதன் படி

OUR LADIES ----------------TOPLESS  (இங்கு டாப்லெஸ் என்பதை மூளைக்
                    குறைவு என்று எடுத்துக் கொண்டாலும் கோபம்
                    குறையாதே. )
ALL IN LIGHTER VEIN. SPORTIVE –ஆக எடுத்துக்கொள்ள வேண்டுகிறேன்.
-------------------------------------------------------------    

Thursday, May 19, 2022

மாயை தான் எல்லாம்

 


                                    எல்லாமே மாயைதான்..
                                         ---------------------
பிள்ளைப் பிராயத்தில் மண் உண்ட கண்ணன் வாயில்

சிறிதே மண் காண எண்ணிய தாய் யசோதை
மண்ணுடன் விண்ணும் நீரும் நிலமும் அண்ட அகிலமும்
கண்டே மயங்கியது மாயையின் மயக்கத்தால் அன்றோ.

மாயை தயை கொண்டு ஆயர் குலச் சிறார்களையும்
கன்றுகளையும் காணாமல் போக்கினான் நான்முகன் பிரமன்
பரம்பொருளே இடைச் சிறுவராய் கன்றுகளாய் உருவெடுத்து
எங்கும் நீக்கமற நிறைந்து நின்றதும் மாயையின் செயலன்றோ.

முன்னவன் தன் மாயையை விலக்க, மறைத்த தனைத்தும்
மறையாமல் நிற்க , பிரமனே நாரணனின் கணக்கிலா
உருவம் கண்டு அவனும் மாயையில் மூழ்கி
விளக்கம் பெற்றதும் மாயையின் செயலன்றோ

செருக்களத்தில் பார்த்தனுக்குச் சாரதியாய் சக்கரம்
கொண்டு ஆதவனை மறைத்து பூவுலகினை இருட்டாக்க
தலை தப்பியது என எண்ணி ஜயத்ரதன் தலை காட்ட
சக்கரம் மீட்டு இருள் விலக்கி அவன் தலை கொய்ய
கண்ணன் நிகழ்த்தியதும் மாயையின் செயலன்றோ/.

இல்லாதது இருப்பதுபோல் தோன்றுவதும் இருப்பது
இல்லாதது எனத் தோன்றுவதும் மாயையின்
விளைவு எனப் பொருள் புரிதல் தவறாமோ.
உலகே மாயம் வாழ்வே மாயம் என்பதும் சரிதானோ
நிரந்தரம் என்பது ஏதுமில்லை,நிகழ்வுகளில் நிச்சயமில்லை.
கருத்துப் பிழைகளும் காட்சிப் பிழைகளும் நிறைந்ததே வாழ்க்கை
மாயையின் பிடியில் மயங்கி இருப்பதே வாழ்க்கையின் நிதர்சனம்

மனத்தின்  மயக்கமே  மாயை என்றறிவோம்

உண்டு உறங்கி எழுவது நிச்சயமில்லை போகுமிடம்

தெரியாமல் போகாத ஊருக்குப் பொருள் ஈட்டி யாருக்கென்ன லாபம்

பேதம் பாராமல் பகிர்ந்துண்டு  வாழ்தல்  பெருமை தரும் 

ஈதலின் இன்பம் கொடுத்தனுபவித்தால் புரியும்

 ஏற்றமும் தாழ்வும் நிரந்தரமல்ல யாரும் யாராகவும் ஆகலாம்
உணர்ந்து கொண்டால் வாழ்வில் நிம்மதி நிச்சயம். 
(இது மாயை அல்ல)
--------------------------------------------------------------------------------------------.


Monday, May 16, 2022

இவை எப்படி இருக்கு

 

அன்பெனும் மாயை
----------------- 

ஒருவன் தன் மனைவி மக்கள் தன் மீது அத்யந்த அன்பு கொண்டிருப்பதாகவும்,, அது காரணம் தன்னால் துறவு மேற்கொள்ள முடியவில்லை என்றும் ஒரு பெரியவரிடம் கூறினான். அவர் “ நீ இன்னும் விஷயத்தை உள்ளவாறு புரிந்து கொள்ள வில்லை. நான் தரும் இந்த குளிகையை சாப்பிடு.. உனக்கு எல்லாம் புரியும்  என்று கூறி ஒரு மாத்திரஒயை அவன் உட்கொள்ளக் கொடுத்தார். அவன் தன் வீட்டுக்குப் போய் அதனை உட்கொண்ட சிறிது நேரத்தில் கை கால்கள் எல்லாம் நீட்டி விரைத்து சவம் போல் ஆகிவிட்டான். திடீரென அவன் மடிந்து விட்டது கண்டு அவன் மனைவி மக்கள் குய்யோ முறையோ என்று சிறிது நேரம் கதறினர். பிணத்தை சவ அடக்கத்துக்கு வெளியே கொண்டு வர முயற்சித்தனர். கை கால்கள் விரைத்துக்கொண்டு நீட்டி இருந்ததால் வாயிலில் அதைக் கொண்டு வர இயலவில்லை. உடனே ஒருவர் கோடரியைக் கொண்டு கதவைப் பிளக்க முயன்றார். அதைப் பார்த்த மனைவி “ ஐயோ அப்படி செய்யாதீர்கள். என் தலைவிதி நான் கைம்பெண் ஆகிவிட்டேன். குழந்தைகளை காப்பாற்றும் பொறுப்பு எனக்குண்டு. இந்த நிலையில் கதவை உடைத்து விட்டீர்களானால் அதை புதுப்பிக்க என்னிடம் வசதி இல்லை. விதி வசத்தால் அவர் மாண்டு போனார்அவர் சவத்தை துண்டுகளாக வெட்டிக் கொண்டு போகலாம்” என்றாள். அந்த நேரத்தில் குளிகையின் வீரியம் குறைந்து இறந்தவன் எழுந்து நின்றான். “ என்னைத் துண்டு துண்டாய் வெட்ட வேண்டுமென்றா சொன்னாய்” என்று சொல்லிக் கொண்டே துறவியாக வெளியேறி விட்டான்.

குழந்தைகள்  கூர்மையானவர்கள்
------------------------------
ஆசிரியர்:-ராமு,இன்றைக்கு நீ ஏன்  லேட்.?
ராமு:-   நான் வருவதற்குள் மணி அடித்து விட்டார்கள்,டீச்சர்.

ஆசிரியர்:- ராமு,பெருக்கல் கண்க்குகளை ஏன் தரையில் உட்கார்ந்து செய்கிறாய்.?
ராமு:-  பெருக்கல் கணக்குகள் செய்யும்போது டேபிள்ஸ் உபயோகிக்கக் கூடாது என்று சொன்னீர்களே டீச்சர்.

ஆசிரியர்:- ராமு,CROCODILE  எப்படி ஸ்பெல் செய்வாய்.?
ராமு:- KROKODILE
ஆசிரியர்:- தவறு.
ராமு:- இருக்கலாம். நான் எப்படி ஸ்பெல் செய்வேன் என்றுதானே கேட்டீர்கள்.

ஆசிரியர்:- ராமு,தண்ணீரின் ரசாயனக் குறியீடு கூறு.
ராமூ:- HIJKLMNO
ஆசிரியர்:- என்ன உளறுகிறாய்.
ராமு:- நேற்று நீங்கள் தானே கூறினீர்கள்,H to O என்று.

ஆசிரியர் :- ராமு,இன்றுள்ளது பத்து வருடங்களுக்கு முன் இல்லாதது ஒன்று கூறு.
ராமு :- நான்.!


ஆசிரியர் :- ராமு,நாய் பற்றி நீ எழுதிய கட்டுரை சோமு எழுதியது போலவே இருக்கிறது. காப்பி அடித்தாயா.?
ராமு :- இல்லை டீச்சர். நாங்கள் இருவரும் ஒரே நாயைப் பற்றிதான் எழுதினோம்.

ஆசிரியர்.:- ஜார்ஜ் வாஷிங்டன் அவருடைய தந்தையின் செர்ரி மரத்தை தன் கோடாலியால் வெட்டினார். அதை அவரது தந்தையிடம் ஒப்புக்கொள்ளவும் செய்தார். இருந்தும் அவர் தந்தை அவருக்கு தண்டனை தரவில்லை. ஏன்.?
ராமு. :- ஜார்ஜ் வாஷிங்டன் கையில் கோடாரி இருந்தது.

ஆசிரியர்.:- ராமு,ஒருவர் எந்த ஆர்வமும் காட்டாது இருக்கும்போதும் பேசிக்கொண்டே  இருப்பவரை என்ன என்று சொல்வது.?
ராமு.:- ஆசிரியர். !         ,   

Wednesday, May 11, 2022

மொழி மாற்றம்

 aஅண்மையில்நான் செய்திருந்த மொழிமாற்ற்ங்கள் பற்றி வாசித்துக்கொண்டிருந்தேன் அதில் டி பி கைலாசம்  எழுதி இருந்த துரோணர் பற்றியதே கடின மானதுகிட்டத்தட்ட விக்டோரியன் இங்கிலிஷ்/ ஒரு வழியாய் முடித்தேன்கீழே தருகிறேன்இது சரியாஇதை விடசிறப்பாய் இருக்கலாமாவாசகர்கள்   முயற்சிக் கலாமே


DRONA
THY flaunted virgin phalanx cleft a two
By but a stripling, thine own pupil's son
Whose bow abash'd his sire's preceptor! You,
In pain of tortur'd vanity, let run
Thine ire to blind thee to the blackest deed
Besmirch'd the scroll of Aryan Chivalry!
The while thy master's ghoulish hate did feed
And fatten on thy victor's butchery,
 
Thy father's heart had it bore some pity
For Partha in his dire calamity,
Dread Nemesis had spar'd thine aged brain
The searing, killing agony accrued
Of death of
 thine own son. Thou didst but drain
The bitter gall thy
 vanity had brewed!

என் மொழியாக்க ம்


பிளக்க முடியாது எனக் கருதி
அமைத்த வியூகம்,, நீயே வியக்கும் வண்ணம்,
உன் மாணாக்கன் மகனாம் ஒரு இளங்கன்றால்
உடைக்கப் பட்டதும்,, போர் முறை மீறி,
அவனை வீழ்த்த வேறொரு வியூகம் அமைத்தனை நீ.
அறிந்திலை அப்போது , அதே யுத்த தர்மம் மீறலால்,
பார்த்தனின் புத்திர சோகம் உனக்கும் புரியும் எனவே

Saturday, May 7, 2022

தெரிந்து கொள்ள

 


நிகழ்ந்த விக்ருதி ஆண்டு உற்றாரும் உறவினரும் குறித்த நாள் ஒன்றில்  திருவளர்ச் செல்வன் சிவராமனுக்கும், திருவளர்ச் செல்வி ராஜேஸ்வரிக்கும், நடை பெற்ற திருமணத்துக்கு சுற்றம் சூழ வந்திருந்து வாழ்த்தியருள, மாதரார் தங்கள் மகளென்று பார்த்திருக்க, மாப்பிள்ளை முன் வந்து மணவறையில் காத்திருக்க , காதலாள் மெல்லக் கால் பார்த்து நடந்து வர, கன்னியவள் கையில் கட்டிவைத்த மாலை தர, காளைத் திருக்கரத்தில் கனகமணி சரமெடுக்க, ஆனந்தம் பாடு என ஆன்றோர் குரல் பிறக்கக்.,கொட்டியது மேளம், குவிந்தது கோடிமலர், மனை வாழ்க, துணை வாழ்க,குலம் வாழ்க எனவே கட்டினான் மாங்கல்யம். 

திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர். இரு உயிர்கள் இணைந்து மூன்றாவது உயிருக்கு அடிகோல அனுமதி வழங்குவதே திருமணத்தின் தாத்பர்யம். ஆணும் பெண்ணும் நேரமறிந்து இணைந்தாலேயே மூன்றாவது உயிருக்கு வித்திட்டதாகும்..விலங்கினங்கள் இனப் பெருக்கத்துக்காக மட்டுமே நேரமறிந்தே கூடும்..அன்பு பரிவு எல்லாம் ஒரு கட்டுக்குள்தான் இருக்கும்.,அதிகம் கட்டுப் பாடுகளை வகுத்துக் கொள்வதில்லை. பெற்றுப் போட்டவை தன் காலில் நிற்கும்வரை மட்டுமே அரவணைப்பு, பாதுகாப்பு என்பதெல்லாம். ( மேலை நாடுகளில் மக்களிடம் மெல்ல மெல்ல அப்படி ஒரு நிலை உருவாகி வருகிறதாமே.! இருக்கிறதாமே.!  HEY.! THAT IS BESIDES THE POINT.. OH.! AS IF EVERYTHING WRITTEN IS TO THE POINT AND RELEVANT.!) ஆனால் மனித குலத்தில் திருமணம் இனப் பெருக்கத்துக்குக் கொடுக்கப் படும் லைசென்ஸ். அனுமதி. ஒருவரைச் சார்ந்து ஒருவர் வாழ்ந்து, அன்பும் அறமும் பெற்று இல்வாழ்க்கையைப் பண்பும் பயனும் உடையதாகச் செய்யக் கிடைக்கும் அவகாசம். இதெல்லாம் தெரிந்ததுதானே, எதற்காக இந்தப் பீடிகை எல்லாம் என்று அலுத்துக் கொள்வது புரிகிறது. ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் நடந்தது சிவராமன் ராஜேஸ்வரி திருமணம்.எதிர்பார்ப்புகள் உற்றம் சுற்றத்துக்கு மட்டுமல்ல. அவனுக்கும் அவளுக்கும் இருந்ததும் நியாயமே.

ஊரும் உலகமும் கொடுத்த அனுமதியின் பேரில் இருவரும் இணைய அன்றைய மாலைப் பொழுதில் ரம்யமான சூழல் ஏற்படுத்தப் பட்டிருந்தது.

கையில் கையும் வச்சு, கண்ணில் கண்ணும் வச்சு, நெஞ்சின் மன்றம் கொண்டு சேரும் நன் நேரம் சப்ர மஞ்சத்தில் ஆட , சொப்ன லோகத்தில் கூட, ப்ரேமத்தின் கீதங்கள் பாட, சொர்க்கத்தில் ஆனந்தம் தேட, சயன நேரம் மன்மத யாகம்,புலரி வரை நமது யோகம் என்றே சிவராமன் காத்திருந்தான். அவன் எப்படி எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அவனுக்கு ஏராளமான புத்திமதிகளும் அறிவுரைகளும் கொடுக்கப் பட்டிருந்தன. ஒரு வித ஆர்வமும் பயமும் ஒருசேரக் காத்திருந்தான்.( ஆணுக்கு மட்டும் பயமில்லையா என்ன.?)

பெண்ணுக்கு உன் மேல் மதிப்பு ஏற்படும்படி நடந்துகொள். அனாவசியத்துக்கு அவளை பயமுறுத்திவிடாதே. கொஞ்சம் கொஞ்சமாக அவளிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டே, அவளை  உன்பால் ஈர்க்கவேண்டும். முதலிரவு முக்கியமானது .கவனமாய் நடந்து கொள்.

வந்ததும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று மனதிற்குள் ஒரு முறை ஒத்திகை பார்த்துக் கொண்டான் சிவராமன். மெல்லக் கதவு திறக்க தோழிகளின் கிண்டல்களும் கேலிகளும் தொடர அழகுப் பதுமையென ராஜேஸ்வரி உள்ளே நுழைந்தாள். ரிசப்ஷன் நேரத்தில் அணிந்திருந்த நகைகளில் பெரும்பாலானவை காணப்பட வில்லை. பட்டுச்சேலைக்குப் பதில் நல்ல நூல் புடவையே அணிந்திருந்தாள். திட்டமிட்டே உள்ளே அனுப்பப் பட்டிருந்தாள். ‘ செதுக்கிய சிலைபோல் இருக்கும் இவள் எனக்குச் சொந்தம் ‘என்னும் நினைப்பிலேயே அவள் அருகில் சென்று அவள் கையைப் பிடித்தான். ’ஜில்’ என்றிருந்தது. எல்லாம் தெரிந்திருந்தும் அவள் பெயர் முதற்கொண்டு ஒவ்வொரு விஷயமாக அவளிடம் பேச முயன்றான். அவள் அவனிடம் சரளமாகப் பேசவில்லை.பெண்களுக்கே உரித்த நாணமாயிருக்கும் என்று அவன் பொருட்படுத்தவில்லை. சிறிது நேரம் கழிந்தது. ‘ அணைக்கட்டுமா’ என்றான். ’ஹாங்’ என்று அவள் திடுக்கிட்டாள். ‘இல்லை; விளக்கை அணைக்கட்டுமா என்றேன்’ என்று சமாளித்தான். விளக்கு அணைத்து சில வினாடிகள் இருவரும் அசைவில்லாமல் இருந்தனர். சிவராமன் முதலிரவை இழக்க விரும்பவில்லை. மெள்ள அவளைக் கட்டி அணைத்தான். அவன் உடல் முழுவதும் மின்சாரம் பாய்ந்தது போல் உணர்ந்தான்.
ராஜேஸ்வரி இணங்குகிறாற்போல் தோன்றவில்லை. அணைப்பை சற்றே இறுக்கினான். திடீரென்று அவனுள்ளே ஏதொ வெடித்ததுபோல் இருந்தது. அவன் உடலின் வெப்பம் தணிந்து உடல் இறுக்கம் குறைந்து தளர்ந்தது. அவளை அணைப்பிலிருந்து தளர்த்தினான்.இது அவன் சற்றும் எதிர்பார்க்காதது. கொஞ்சம் கொஞ்சமாக அவனுக்கு ஒரு பயம் பிறந்தது ‘ ஏன் என்னால் அவளை அடைய முடியவில்லை. அவளது தயக்கம் புரிந்தாலும் தயக்கம் விலகிய பிறகும் என்னால் அவளை அடைய முடியுமா?’ கேள்விகள் மனசைக் குடைய மறுபடியும் அவளை லேசாக அணைத்தான். அவள் உடல் லேசாக வெடவெடக்க ஆரம்பித்தது. ‘மயிலே மயிலே இறகு போடு என்றும் போடாவிட்டால் பறிக்க வேண்டியதுதான் கைகள் அவளது உடலின் எல்லா பாகங்களிலும் நகர ஆரம்பித்தது. ராஜேஸ்வரி கொஞ்சமும் இணங்குவதாகத் தெரிய வில்லை. ‘ அவள் பெண் அப்படித்தான் இருப்பாள் நான் ஆண் என்னை என் சக்தியை நிலை நாட்ட வேண்டும் ‘ என்று மனதில் உறுதி கொண்டு அவளை நெருக்கினான். மறுபடியும் அவனுள்ளே ஏதோ நிகழ்ந்தது. உடல் இறுக்கம் தளர்ந்தது.சக்தியெல்லாம் வடிந்து விட்டது போல் உணர்ந்தான். சொர்க்கத்தில் ஆனந்தம் தேட சயன நேரம் மன்மத ராகம் புலரிவரை யோகம் என்று கனவு கண்டவன் தான் எங்கோ மேலிருந்து கீழே வீழ்ந்து விட்டதாக எண்ணினான். அவள்தான் அப்படி என்றால் எனக்கு என்ன ஆயிற்று, கடவுளே இது என்ன சோதனை. திருமணம் உடல் இன்பம் எல்லாம் இனி கனவுதானா என்றெல்லாம் எண்ணி மறுகினான். விடிந்தும் விடியாத காலைப் பொழுதில் ராஜேஸ்வரி எழுந்து விட்டாள். இரவெல்லாம் உறக்கம் இல்லாமல் அவதிப் பட்டவன் அயர்ந்து தூங்கினான்.


காலையில் வெகு சீக்கிரமாக எழுந்துவிட்ட ராஜேஸ்வரியை குளியலறைக்குக் கூட்டிக் கொண்டு போய் அவளையும் அவளது உள்ளாடைகளையும் பெரியவர்கள் சோதித்தனர். ‘எல்லாம் நல்ல படியாக இருந்ததா ‘என்ற கேள்விக்கு உம்..உம்.. என்று பதில் கூறி அகன்றாள்.

காலை உணவு முடித்துக் கொண்டு முதல் வேலையாக சிவராமன் காணச் சென்றது அவனுடைய நெருங்கிய நண்பனும் திருமணம் முடித்து இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையுமான கோபால்ன் வீட்டிற்குத்தான். ‘ என்ன சிவராமா, திருமணம் நடந்த மறு நாள் காலையிலேயே வந்திருக்கிறாய். ஏதாவது ப்ராப்ளமா.?’ என்று கேட்ட கோபாலனிடம் நடந்ததை எல்லாம் கூறி கிட்டதட்ட அழுதே விட்டான்.
 ‘ சரி போகட்டும் . நான் கேட்கும் கேள்விகளுக்கு சரியாக பதிக் சொல்லிக் கொண்டு வா,

சரி. கேள் “
” நீ எப்பொழுதாவது சுய இன்பத்தில் ஈடு பட்டிருக்கிறாயா.?

“ என்ன விளையாடுகிறாயா.? அதெல்லாம் தவறு என்று எனக்குத் தெரியும்.

 “நீ அப்படி ஏதாவது செய்திருந்தால் தவறு ஒன்றுமில்லை. உன்னைப் பற்றி நீயே கொஞ்சம் தெரிந்து கொண்டிருப்பாய். போகட்டும்.ஆண்குறிக்கு CIRCUMSITION என்னும் அறுவை சிகிச்சை பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறாயா.? ஆண் உறுப்பைச் சுற்றியுள்ள உறை போன்ற தோல் புண்ர்வின் போது மேலே செல்ல வேண்டும் இல்லாவிட்டால் உணர்வு ஏற்படும் போதே விந்து வெளியேறி உனக்கு ஏற்பட்ட அனுபவம் சாத்தியக் கூறாகும். நீ என்ன செய்கிறாய் என்றால் முதலில் ஆண் உறுப்பைச் சுற்றியுள்ள தோல்   உறை மேலும் கீழும் போக முடிகிறதா என்று நீயே சோதனை செய்து கொள். பிறகு ஒரு நல்ல மருத்துவரை அணுகி CIRCUMSITION  தேவையா என்று அறிந்து கொள். ,பிறகென்ன இன்பத்த்தின் எல்லைக்கே செல்ல முடியும்.


“ ஆனால் ராஜேஸ்வரிக்கும் உடலுறவில் சிறிதும் ஆர்வம் இருப்பது போல் தெரிய வில்லையே “

“ அது உறவு பற்றிய பல விஷயங்களை அவள் தவறாகப் புரிந்து கொண்டிருக்கலாம். வேண்டாதது எல்லாம் கூறப்பட்டு உடலுறவு மேல் அவளுக்குஒரு வெறுப்போ பயமோ இருக்கலாம். ஆணின் ஆதிக்கம் ,குழந்தைப் பேறு குறித்த பயம் என்று என்னவெல்லாமோ ஆழ்மனதில் உறங்கிக் கிடக்கலாம். இவை எல்லாம் ஒரு பெண் FRIGID  ஆக இருப்பதற்குக் காரணமாகலாம்.

 இதல்லாமல் சாதாரணமாக பெண்கள் உடலுறவுக்குத் தயாராக நேரம் பிடிக்கும். ஆண், பெண் இருவரின் அணுகுமுறையும் உடலுறவு என்று வரும்போது வித்தியாசமானது. இருவரும் ஒருசேர இன்பம் அனுபவிப்பது பழக்கப் படுத்திக் கொள்ள வேண்டிய விஷயம். ஆணும் பெண்ணும் புரிந்து கொள்ளல் மிக அவசியம். வெறுமே இன விருத்திக்காக உடல் உறவில் ஈடுபட மனிதன் விரும்புவதில்லை. இந்த விஷயத்தில் விலங்கினத்திட மிருந்து மனிதன் வெகு தூரம் வந்து விட்டான். எதற்கும் கவலைப் படாதே. இதுவும் கடந்து போகும். “ என்றெல்லாம் ஆறுதல் கூறி கோபாலன் ,சிவராமனை அனுப்பி வைத்தான்.

சில மாதங்கள் கழித்து கோபலன் சிவராமன் ராஜேஸ்வரி தம்பதியர் வீட்டுக்கு வந்தபோது

காது கொடுத்துக்கேட்டேன்
குவா குவா சப்தம்
இனி கணவனுக்குக் கிட்டாது
அவள் குழந்தைக்குத்தான்  முத்தம்

என்ற பாட்டு சப்தம் கேட்டு புன்முறுவலுடன் திரும்பி விட்டார்.

( ஆண்களிடம் IMPOTENCE  பெண்களிடம் FRIGIDITY  போன்ற குறைபாடுகள் பற்றி அதிகம் விவாதிக்கப் படுவதில்லை. மனதிற்குள் குமுறி வாழ்க்கையில் துன்பம் அனுபவிப்போர் சிலர் எனக்குப் பரிச்சயம் உண்டு. ஒரு விழிப்புணைச்சிக் கதையாக இதனைப் பதிவிடுகிறேன். )                        :      .               .                                  .                                    
            
                                   ---------------------------------------------
 “


.