எல்லாமே மாயைதான்..
---------------------
பிள்ளைப் பிராயத்தில் மண் உண்ட கண்ணன் வாயில்
சிறிதே மண் காண எண்ணிய தாய் யசோதை
மண்ணுடன் விண்ணும் நீரும் நிலமும் அண்ட அகிலமும்
கண்டே மயங்கியது மாயையின் மயக்கத்தால் அன்றோ.
மாயை தயை கொண்டு ஆயர் குலச் சிறார்களையும்
கன்றுகளையும் காணாமல் போக்கினான் நான்முகன் பிரமன்
பரம்பொருளே இடைச் சிறுவராய் கன்றுகளாய் உருவெடுத்து
எங்கும் நீக்கமற நிறைந்து நின்றதும் மாயையின் செயலன்றோ.
முன்னவன் தன் மாயையை விலக்க, மறைத்த தனைத்தும்
மறையாமல் நிற்க , பிரமனே நாரணனின் கணக்கிலா
உருவம் கண்டு அவனும் மாயையில் மூழ்கி
விளக்கம் பெற்றதும் மாயையின் செயலன்றோ
செருக்களத்தில் பார்த்தனுக்குச் சாரதியாய் சக்கரம்
கொண்டு ஆதவனை மறைத்து பூவுலகினை இருட்டாக்க
தலை தப்பியது என எண்ணி ஜயத்ரதன் தலை காட்ட
சக்கரம் மீட்டு இருள் விலக்கி அவன் தலை கொய்ய
கண்ணன் நிகழ்த்தியதும் மாயையின் செயலன்றோ/.
இல்லாதது இருப்பதுபோல் தோன்றுவதும் இருப்பது
இல்லாதது எனத் தோன்றுவதும் மாயையின்
விளைவு எனப் பொருள் புரிதல் தவறாமோ.
உலகே மாயம் வாழ்வே மாயம் என்பதும் சரிதானோ
நிரந்தரம் என்பது ஏதுமில்லை,நிகழ்வுகளில் நிச்சயமில்லை.
கருத்துப் பிழைகளும் காட்சிப் பிழைகளும் நிறைந்ததே வாழ்க்கை
மாயையின் பிடியில் மயங்கி இருப்பதே வாழ்க்கையின் நிதர்சனம்
மனத்தின் மயக்கமே மாயை என்றறிவோம்
உண்டு உறங்கி எழுவது நிச்சயமில்லை போகுமிடம்
தெரியாமல் போகாத ஊருக்குப் பொருள் ஈட்டி யாருக்கென்ன லாபம்
பேதம் பாராமல் பகிர்ந்துண்டு வாழ்தல் பெருமை தரும்
ஈதலின் இன்பம் கொடுத்தனுபவித்தால் புரியும்
ஏற்றமும் தாழ்வும் நிரந்தரமல்ல யாரும் யாராகவும் ஆகலாம்
மனத்தின் மயக்கமே மாயை என்றறிவோம்
உண்டு உறங்கி எழுவது நிச்சயமில்லை போகுமிடம்
தெரியாமல் போகாத ஊருக்குப் பொருள் ஈட்டி யாருக்கென்ன லாபம்
பேதம் பாராமல் பகிர்ந்துண்டு வாழ்தல் பெருமை தரும்
ஈதலின் இன்பம் கொடுத்தனுபவித்தால் புரியும்
ஏற்றமும் தாழ்வும் நிரந்தரமல்ல யாரும் யாராகவும் ஆகலாம்
உணர்ந்து கொண்டால் வாழ்வில் நிம்மதி நிச்சயம்.
(இது மாயை அல்ல)
--------------------------------------------------------------------------------------------.
--------------------------------------------------------------------------------------------.
சிறப்பான வரிகள். பற்றற்ற நிலையை அடையதானே எல்லோரும் விரும்புகிறோம்?
பதிலளிநீக்குபற்றற்ற என்னும்வரிகள் ஏதும் இருக்கிறதா
நீக்குஇது நிலையாமை...! பரவாயில்லையே... ஈகையும் வந்து விட்டதே...! இன்னும் 131 அதிகாரங்கள் இருக்கு...!
பதிலளிநீக்குவாழ்க்கை என்றால் வாழ்வாங்கு வாழ வேண்டும்... பேதைமை இருந்தால் அனைத்தும் மாயையே...!
நாம் அனைவரும் பேதைகளே
நீக்குநல்ல வரிகள் சார். அறியாமையினால் மாயையின் பிடியில் சிக்கித்தானே உலக மானிடர் நாம் துன்பத்திற்கு உள்ளாகிறோம். புத்தி தெளிவதுதான் சிரமமான விஷயம் வாழ்வில்!
பதிலளிநீக்குகீதா
எல்லாம் அறிந்தும் அறியாமல் இருப்பதே மாயையோ
பதிலளிநீக்குஇதன் பிடியில் சிக்கிதானே வாழ்கிறோம்.
பதிலளிநீக்கு