Sunday, September 29, 2019

சில நினைவுகள் நவராத்திரி


சில நினைவுகள்  நவராத்திரி


புரட்டாசி அமாவாசைக்கு  அடுத்த பத்து நாட்கள் விசேஷன் தான்   நவராத்திரி அல்லவா
நவராத்திரி எனும்போது நெஞ்சில்  மோதும்  நினைவுகள் ஏராளம் ஒன்பது நாட்களும் புதுப்புடவை சரசரக்கச் பெண்டிர் விதிஉலாவரும்காட்சியும்   சிறுமியர் தங்கள் பாடல் திறமையை வெளிப்படுத்தத் துடித்தாலும் பல தயக்கத்துக்குப்பின் போதும் என்றுசொல்லும் அளவுக்கு பாடி மகிழ்வதை காண்பது இக்காலத்திலும் இருக்கிறதா தெரியவில்லை 1968 என்று நினைவு  திருச்சியிலிருந்தபோது  நவராத்திரி கொலுவுக்கு பொம்மைகள் இருக்கவில்லை ஆனால் என்மனைவிக்கு ஆசை மட்டுமிருந்தது சென் னை குறளகம் சென்று பொம்மைகள் வாங்கி வந்ததும் அதன்பின் ஆண்டு தோறும்கொலு வைப்பதும்  வழக்கமாகி இருந்தது நாங்கள் வேலை மாற்றலாகி விஜயவாடாசென்றதும் பின்  மீண்டும்  திருச்சிவந்ததும் அதன்பின் விருப்ப ஓய்வு பெற்று பெங்களூரில் செட்டில் ஆனபோதும் இந்தபொம்மைகளையும் விடாதுஎடுத்துவந்தோம்  2012 வரை  பொம்மைகள் வைத்து  வழிபடுவது தொடர்ந்தது  அதன் பின்  என்மனைவிக்கு கொலு வைத்தது போதும் என்றாகி  இருந்த பொம்மைகளை  வேண்டிய சிலருக்கு கொடுத்ததும்மறக்க முடியாது
 நவராத்திரி கொண்டாட்டம் பல இடங்களில் பல விதமாகக் கொண்டாடப்படுகிறது எது எப்படி ஆனாலும் கொண்டாட்டத்துக்கு பின்னணியாக பல கதைகளுண்டு வங்காளிகள் துர்கா பூஜையாகக் கொண்டாடுகிறார்கள்  வங்காளிகளின் ஒரு பிரதான வழிபாடு  துர்கா பூஜை துர்கா பூஜை சமயம் பெங்காளிகள்  கூடிச் சேர்ந்துவழிபாடு செய்வார்கள்அவர்களது வழிபாடுகளை  திருச்சியிலும் பெங்களூரிலும் பார்த்திருக்கிறேன் பெங்களூரில் RBANM SCHOOL  மைதானத்தில்பெங்களூர் வாழ் வங்காளிகள்  சிறப்பாகக் கூட்டு வழிபாடு நடத்துகிறார்கள் துர்கை பதுமையை வழிபட்டு விஜயதசமிக்குப் பின்  நீர் நிலைகளில் விசர்ஜனம் செய்கிறார்கள் வடக்கே ராவணனைக்கொன்றதினமாக அனுஷ்டிக்கப்படுகிறது
 தமிழ் நாட்டில் நவராத்திரிபெரும்பாலும் பெண்கள் பண்டிகையாகவே அனுஷ்டிக்கப்படுகிறது
 திருச்சியில் கொதிகலன் தொழிற்சாலைக்கு அன்றுஎல்லோரும் வந்துபோகலாம்   1960  களில்  நான் பெங்களூர் எச் ஏ எல்லில்  இருந்தபோது தொழிலாளர்கள் தங்கள் கைவினையைக் காட்டஆயு பூஜையைக் கொண்டாடினார்கள் என் சில அனுபவங்களை முன்பே பகிர்ந்திருக்கிறேன் எனக்கு அண்மையில் ஒரு செய்திப்படம்வந்திருந்ததுஅதில் கண்ட செய்திகள்புன்னகைக்க வைத்தாலும்   பண்டிகைகள் வழிபாட்டையும்  மீறி சந்தோஷம் தர உபயோகமாகின்றன என்பதே தெரிகிறது    

 இந்தக்காணொளி நான் எழுதிய பாட்டு ஒன்றுக்கு திரு சுப்பு தாத்தா  மெட்டமைத்து பாடியது 


இந்தப்படமே self explanatory



நவராத்திரி விழாவுக்கு  பெண்களுக்குப் பிடித்தமான  புடவைகளும்  உணவு வகைகளுமே பரிந்துரைக்கப்படுகின்றன

 2012ல் நான் எழுதிய பாடல்

ணு அண்டம் பேரண்டம் அனைத்தையும்

இயக்கும் சக்தியே உருவமும் பெயரும் ஏதுமில்லா
உன்னை என்ன சொல்லிப் போற்றுவேன்
.மலையத் துவசன் பெற்ற பெரு வாழ்வென்பேனா-

புவி மடந்தை- நாமருவிய கலை மடந்தை-
ஜெய மடந்தை என்பேனா-சர்வசக்தி பொருந்திய
சர்வாங்க சுந்தரி என்பேனா--நான்அவலத்தில்
அழுந்தும்போது என் நாவினில் வந்தமரும்

முருகனும் நீயே,- கண்ணனும் நீயே- என்னுள்
இருப்போனும் ஏனையோர் துதிக்கும் எல்லா
நாமங்களும் கொண்டவளு(னு)ம் நீயல்லவா- நீ என்
அப்பனல்லவா, அம்மையல்லவா, கண் துஞ்சாது எனைக்

காக்கும் தாரமல்லவா.- யாதுமாகி நிற்கும் எல்லாமே
கலை மகளே, அலை மகளே, மலைமகளே

உயிருள்ள,உயிரற்ற, அனைத்திலும் இருப்பவளே,

எனை ஈன்ற தாயின் தாயே- எல்லாம் நீயே

உன்னை வணங்குகிறேன்
























Friday, September 27, 2019

முதியோர் இல்லமும் புதுவரவுகளும்




                                             முதியோர் இல்லமும் புது வரவுகளும்
                                              ------------------------------------------------------------------
  முதியோர் இல்லம் 
எங்கள் வீட்டைத்தான் முதியோர் இல்லம் என்றேன்   பின் என்ன இரு வயதானவர் மட்டும்  தங்கும் இடம் அல்லவா  முதியவருக்கு சிறிய வர்க்கும் அதிகம்  வித்தியாசமில்லை யாராவது வருகிறார்களா என்று பார்க்கும் குணம் இரு பாலருக்கும்பொருந்தும் யாராவது வந்து விட்டால் மகிழ்ச்சிதான் இதில் குழந்தைகள் முதியோர் கள் என்னும் வேறுபாடு இல்லை
சற்றும் எதிர்பாராத ஒரு விசிட்டர் வந்தார்  வந்ததும் அல்லாமல் எங்களுக்குப்பிடித்த மாதிரி பாட்டுகள்பாடி அசத்தி விட்டார் தமிழ் மலையாளம்  கன்னடம் என பல மொழிகளில் என் மனைவியின்   தங்கை மகன் சசிதரன் என்னும்பெயர் (படங்கள் இடம் மாறி விட்டன
மச்சினன்  மகளுடன்  
ப்ரௌட்பேரெண்ட்ஸ் 
பழுத்த பழம்பச்சிளம் குருத்துடன் 
இருவர் மடியிலே இருவரடி 
தாயின்  அரவணைப்பு 
இரட்டையர்கள் 
நாங்கள் போர்த்திய பொன்னாடையுடன்



திடீரென வந்ததில் எங்களுக்கு கையும் ஓடலை  காலும் ஓடலை எங்கள் மகிழ்ச்சியை தெரிவிக்கும்  அவனுக்கு ஒரு பொன்னாடைபோர்த்தி எங்கள்மகிழ்ச்சியைத் தெரிவித்தோம்  ஹி வாஸ் ஆல்சோ மூவ்ட்

(படங்கள் இடம்மாறிவிட்டன ) இனி புது வரவுகள்பற்றி   புது வரவுகள் என்றதுமிம்முதியோர் இல்லத்துக்குபுது வரவல்ல  இப்புவிக்கு வந்த புது வரவுகள்  எங்கள் இல்லத்தில் இரட்டைக் குழந்தைகளே பிறந்தது இல்லை  என் மச்சினன் மகள் இரட்டைக் குழந்தைகளுக்குத்தாயாகி இருக்கிறாள் ஒரு பெண் ஒரு ஆண் அவர்கள் இருப்பதோ சர்ஜாபூர் ரோடில் எங்கள் வீட்டிலிருந்துசுமார் 40 கிமீ  தூரம் பிரயாணங்களை  முற்றிலும் தவிர்க்கும்  என்னால்  எங்கள்வீட்டு முதல் இரட்டையரைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை முதலில் ஹொரமாவில் இருக்கும் என்மகன் வீட்டுக்கு  ஓலாவில்பயணம்  பின் அங்கிருந்து மகன்மருமகளுடன்சர்ஜாபூர் ரோடுக்கு நல்ல வேளை பிரச்சனை இல்லாமல் வந்து சேர்ந்தோம்



  ஒரு கொசுறு செய்தி  ஐ டி கம்பனிகளில் வேலை செய்வோருக்கு மெடர்னிடி லீவாக ஆறு மாதம் கிடைக்கிறதாம்  அது மட்டுமல்லால் கணவனுக்கு படேர்னிடி லீவாக ஒரு வாரம் அளிக்கப்படுகிறதாம் என் மச்சினன்மகள் இங்கிலாந்தில் இருந்தபோது ஸ்கை டைவிங் எல்லாம் செய்திருக்கிறாள்  










  



Tuesday, September 24, 2019

வேஷக்கார பிரதமர்


                     
       
                                                          வேஷக்கார பிரதமர்
 






வேஷக்கார  பிரதமர்  நம்மோடி
 வேஷக்கார பிரதமர்நம்மோடி  

கையை ஆட்டி காலை ஆட்டிவசீகரிக்கும்
நம்மோடி இவர் ஒரு வேஷக்கார பிரதமர்

 நாளுக்கொரு கதை பேசி
நம்மையெல்லாம்  முட்டாளாக்கும்
வேஷக்கார  பிரதமர்  நம்மோடி

நாளுக்கொரு  நாடு சென்று அங்கெல்லாம் 
நம் இல்லாத பெருமை பேசும்வேஷக்கார பிரதமர் மோடி  

  56 அங்குல மார்பே அவர் அடையாளம்
 எத்தனைதான் பொய் சொன்னாலும்
பொருந்தும்படி சொல்லியே  ஈர்ப்பவர் 
  வேஷக்கார பிரதமர்நம்மோடி       

பல்லெல்லாம்  தெரியக் காட்டி
 சொல்லும்பொய்யெல்லாம்
விதவிதமாய் சொல்லி நாட்டி
கோயபெலும்  நாணும்விதமாய்
 நம்மை எல்லாம்  நம்பவைக்கும்
வேஷக்கார பிரதமர் நம் மோடி

 அண்டை நாட்டுக்காரனை வம்புக்கிழுப்பார்
aஅவர் மீது  தீவிரவாதக் குற்றம் உரைப்பார்
ஏதும்தெரியாதென்றாலும் சர்ஜிகல் ஸ்ட்ரைக்
எனச்சொல்லி குண்டு மாரி பொழிவார்
வேஷக்கார பிரதமர் நம் மோடி 

அவரவர் கருத்து சொல்லக் கூடாது சொல்லி விட்டால்
தாய் நாட்டுப் பற்று இல்லை எனவே  ஓங்கி உரைப்பார்
சும்மா ஒரு பேச்சுக்காகவும்
- திருடனென்று சொல்லிவிட்டால்-உன்
அம்மா பாட்டி தாத்தா அனைவரையும்
திருடர் என்பார்   வேஷக்கார  பிரதமர் நம் மோடி 

கீழ்காணும்   காணொளியில்  இருக்கும் ராகத்தில் பாடிப்பார்க்கவும்  








  









  





































                                                       -----------------------------

Saturday, September 21, 2019

தரம் சில விளக்கங்கள்



                              தரம்சில விளக்கங்கள்
                              ---------------------------------------

எழுதுவது எதற்காக? நண்பர் ஒருவர் நம் எண்ணங்களைக்கடத்தவே எழுதுகிறோம் என்று சொன்னதாக நினைவு  எனக்கு அது உடன்பாடு என்றாலும்  வாசிப்பவர்கள் எழுதப்படும் கருத்துகள் வாசிப்பவர்கள்  ஒப்புக்கொள்ளும்படி இருந்தாலேயே வாசித்துக் கருத்து இடுகிறார்கள் ஆனால் நான் சற்று மாற்றி யோசிப்பவன் பலரும் கடக்க மறுக்கும் பாதையில் பயணித்து   ஒரு சில இடங்களிலாவது எண்ணங்கள்போய்ச்சேரும்என்னும் நம்பிக்கையிலேயெ  எழுதுகிறேன் அப்படியே  எழுதுவதையே விரும்புகிறேன்  அப்படியெ என் எண்ணங்களைக் கடத்த விரும்புபவன் இதில் நான் ஊருடன் ஒத்து வாழ்வதை விரும்புவதில்லை

 இந்தபதிவு அது போல்தான்  இருக்கும்  வாயுள்ள பிள்ளையே பிழைத்துக் கொள்ளும் பல பொருட்களை நாம் வாங்குகிறோம்  ஆனால் அப்பொருள் குறித்த அறிவு நம்மில் பலருக்கும் இல்லை Have I RUFFLED SOME FEATHERS இத்தனை நாள் எழுத்திலும் நீ அதைத்தானே செய்து கொண்டிருக்கிறாய்  சோ இட் மாட்டர்ஸ் லிட்டில்
எந்தபொருளையும்  வாங்கும்போதும் நமக்கு அது பற்றிய  ஞானம்  என்ன என்று யோசிப்பதில்லை  ஒரு கலர் டி வி வாங்குகிறோம்  நமக்கு டிவி யின் வேலைப்பாடுகள்குறித்து என்ன தெரியும்  தெரிந்தவர் கோபமடைய வேண்டாம்
சுவிட்ச் போட்டால் படம்தெரிய வேண்டும் நம் வசதிக்கு ஏற்ப இருக்க வேண்டும் ஆக உற்பத்தியாளர்கள்  எப்படி வாடிக்கையாளர்களை ஈர்க்கிறார்கள்என்று பார்ப்போம்
நாம்வாங்கும் பொருள் தரமுள்ளதாக  இருக்க வேண்டும் என்று  நினைக்கிறோம் ஆனால் தரம்பற்றிய நம் எண்ணங்கள்தான் என்ன ?அதிக விலை உள்ள பொருட்கள் தரமானதாக இருக்குமென்று நம்புகிறோம் விளம்பரங்களை நம்பி வாங்குகிறோம்  அதிகப்படியான விளம்பரங்கள் விலையை ஏற்றுமென்று தெரியாதவர்கள் நாம் ஒரே தயாரிக்குமிடத்திலிருந்துஒரே வகையான பல பொருட்கள்சந்தைக்கு வருகின்றன  நான் அறிந்தவரை வித்தியாசம் அதிகம்  இல்லை பாகேஜிங் மட்டும்மாறலாம் தயாரிப்பாளர்கள் ஒன்றை தெரிந்திருக்கிறர்கள் ஒரெ விஷயத்தை பலமுறை சொன்னால் அதுவே உணமை என்று எண்ணும் மனப்பான்மைநமக்கு வரும் 
 பொதுவாக தரமென்பதே வாடிக்கையாளரின் திருப்தியே  ஒரு பொருள் அதற்கான பணியை ச் செவ்வனே செய்தால் தரமானதுதான்  ஆனால் வாடிக்கையாளர்கள்திருப்தி என்னும் அளக்க முடியாத  ஒன்றும் இருக்கிறது ஒரு டையை நம்ஷர்டில் பிணைக்க ஒரு பின்  போதும் ஆனால்டைபின்கள் என்னும்பெயரில் சந்தையில்பல்வேறு வடிவில் விலையில் ஷேப்புகளில் இருக்கும் டை பின்னில் எது சிறந்தது என்பதை தீர்மானிப்பது   வாடிக்கையாளனே அதனால் அவனைக் கவர பல்வேறு உத்திகள்  தயாரிப்பாளரால் உபயோகிக்கபடுகிறது
விளம்பரம் என்பதே வியாபார உத்தி. பொருள் முதலில் சந்தையில் அறிமுகமாக விளம்பரம் ஓரளவு தேவை இருந்தாலும் அதையே ஓவராகச் செய்தால் விளைவுகள் எதிர்வினைப் பலன் தரும் எத்தனையோ விளம்பரப்படுத்தியும் படுத்துவிடும்சில திரைப்படங்கள் இதைப் புரியவைக்கும் வாடிக்கையாளன் எதிர்பார்ப்பே தரம் என்று விரிவாகவே  பதிவில் எழுதி இருக்கிறேன் விளம்பரங்கள் ஓரளவாவது நம்பகத்தன்மையுடன் இருக்க வேண்டும் நம் மக்களுக்குப் பொதுவாகவே அதிக விலை அதிக தரம் என்னும் மாயை இருக்கிறது. இதை ஓரளவு எக்ஸ்ப்லாய்ட் செய்யலாம் ஆனால் குறைந்த காலத்தில் சாயம் வெளுத்து விடும் வாஷிங் பௌடருக்கான விளம்பரங்கள் முற்றிலும் தவறான எதிர்பார்ப்பைத் தருகின்றன. வாடிக்கையாளன் இம்மாதிரி பொருள்களில் தொடர்ந்து வாங்க மாட்டான் ஆகவேதான் தரம் பற்றிய புரிதல் முதலில் இருக்கவேண்டும் என்று எழுதுகிறேன்
தரம்பற்றிய புரிதலில் முக்கியமாக இருக்க வேண்டுவது  நம்மை
சோதனை எலிகளகள்கருதுகிறர்கள் என்பதே எம் ஆர் பி விலையை விட குறைந்தவிலையில் பொருட்கள்விற்பனை யாவதைக் காண்கிறோம் இன்னொரு உத்தி அதிக ஆண்டுகள்வாரண்டி என்பார்கள்நமக்குத் தெரியும்அந்தக் காகிதம் வேண்டியபோது நமக்குக் கிடைக்காது அதிக நாள் வாரண்டி என்பதில்  அந்தக்காகிதத்தின் மதிப்புகூட இருக்காது
ஒரு பொருளின் தரம் என்னவென்று யோசிக்கக்கூட விடாமல் அதே பொருளின் அடுத்த கவர்ச்சிகரமான விளம்பரம் அடுத்து வாங்குவோரை ஆக்கிரமிக்கறது. இந்த ஆக்கிரமித்தல் அடுத்து அடுத்து என்று வேகப்பாய்ச்சலில் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

தரம் இல்லையெனில் விற்பனை இல்லை என்கிற காலம் மாறி விட்டதாக நினைக்கிறேன்.
தரம்பற்றியபுரிதல் நமக்கு அவசியம்அதிக விலை அதிக தரம் என்பது ஒரு மாயை  அதில் பலரும்பயணிக்கிறார்களென்பதே நிஜம்  தரம் எனப்படுவதுயாதெனின் என்னும்  என்பதிவை  ஆறாயிரம் பேர்களுக்கும் அதிகமாக வாசித்துள்ளனர் அதில்  கண்டசெய்திகள் உள்வாங்கப்பட்டதா என்றுபுரியவில்லை   


    

Wednesday, September 18, 2019

கற்க பல விதம்


                                              கோட்டோவியங்களில்  கதை


கர்நாடக சங்கீதம் கேட்கப்பிடிக்கும்   அதிலும் இந்தப்பாடல்  பல நினைவுகளைச் சுமக்கிறது 1970 களில் என்மனைவி பாட்டுக் கற்றுக் கொள்ளத்துவங்கியநேரம் வைத்தியநாத பாகவதர் என்னும் பெயருடையவர் ஆசான்  இந்தப்பாட்டை உச்சஸ்தாயியில் துவங்குவார் நல்ல  ஆசிரியர் விஜயவாடா சென்றதால் பாட்டுப்பயிற்சி தடைபட்டதுமீண்டும் திருச்சிக்கு வந்தபோது அவரது வருகைதெரியவில்லை

                         



THEY FLY HIGH  BECAUSE THEY THINK THEY CAN நான் என் பிள்ளைகளிடம் அடிக்கடி கூறுவது உன்னைநம்பு என்பதற்கு உதாரணமாக  ஈகிளைக் காட்டுவேன்  அதன் கதை  காணொளியில்





சென்றபதிவில் திறக்காத காணொளிகள்