Sunday, September 1, 2019

அஞ்சலிகள்                                அஞ்சலிகள்
                                ---------------------

இன்று காலை திருமதி கீதா சாம்பசிவமின் பதிவின்  மூலம் திருமதி பானுமதி வெங்கடேஸ்வரன் கண்வனை இழந்து விட்டார் என்னும் தகவல் அறிந்தேன்   திரு வெங்கடேஸ்வரன் எனக்கு தம்பி முறை  சித்தப்பா மகன் 
ஒரு இழப்பு எத்தனையோ நினைவுகளை கொண்டு வருகிறதுவெங்கடேஸ்வரன் தன் திரு மணத்துக்கு   என் விலாசம்  தேட்டி வந்து திருச்சியில் அழைப்பு தந்தார்  பானுமதியின் வீடு ஸ்ரீ ரங்கம்  ஜீயர் மடம் அருகே இருந்த நினைவு அவர்கள்வீட்ட்குக்குச்சென்றோமா என்பது நினைவுக்கு வரவில்லை  அவர் திருமணத்தின்  போது பல உ றவுகளைக் கண்ட தாகவும் நினைவு  பானுமதி ஒருவலைப்பதிவில் எழுதுகிறார் என்பது தெரிந்தது அப்போது அவருக்கு  தன் வலைப்பக்கம்வாசகர்களை இழுக்க மற்றவர் பதிவுகளுக்கு  சென்று படித்து கருத்திடுங்கள் என்றேன் என்பதிவின் மூலம்  பலவலை  உலக எழுத்தாள்ர்களைக் அறியலாம் என்றும் சொன்னென்
அவர் இல்லத் திருமணத்துக்கு  சென்னையில் சென்றபோது சத்திரம் அருகே இருந்த சுப்பு தாத்தா வீட்டுக்கும் சென்றேன் அஞ்சலி எழுதும்போது வரும் gushing நினைவுகளை தவிர்க்கமுடிய வில்லை  சுமார் பத்து தினங்களுக்கு முன் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது  நாராயணா மருத்துவ மனையில் சேர்த்திருப்பதாகச் சொன்னார்கள் அவருக்கு காலில் வலி என்றும் இரு  கால் விரல்களை வெட்டி எடுக்க  வேண்டி இருந்ததாகவும்  கூறினார்கள்  என் இந்தநடக்க யலாத நிலையில்  அத்தனை  தூரம்சென்று பார்க்கமுடியவில்லை சீக்கிரமே குணமாகும் என்று வேண்டுவதுதான் முடிந்தது ஆனால் இந்தமறைவை எதிர்பார்க்க வில்லைதிருமதி பானுமதி என் இல்லத்துக்கு திருச்சியிலும்  சென்னையிலும்  பெங்களூரிலும்  வந்து இருக்கிறார்கள் சிலபதிவர்களை என் இல்லத்தில் சந்தித்தும் இருக்கிறார்கள்பல ஆண்டுகள் இல்லறம்  நடத்திய கணவ்சன் இல்லை என்பது பேரிழப்பாகும் நான் அடிக்கடி சொல்வதை மீண்டும் இங்கு சொல்கிறேன்
THAT WHICH CAN NOT  BE CURED MUST BE ENDURED  திரு வெங்கடேஸ்வரனின் ஆன்மா சாந்திஅடைய வேண்டுகிறேன்  

   

19 comments:

 1. அவரது ஆன்மா சாந்தியடைய எமது பிரார்த்தனைகள்.

  ReplyDelete
 2. திரு வெங்கடேஸ்வரன் அவர்கள் ஆன்மா சாந்திஅடைய வேண்டுகிறேன் .
  இறைவன் தான் பானுமதி அவர்களுக்கும் அவர் குடும்பத்தினருக்கும் ஆறுதலையும், தேறுதலையும் தர வேண்டும்.


  ReplyDelete
 3. வெங்கடேச்வரன் சார் ஆன்மா சாந்தியடைய ப்ரார்த்திக்கிறோம்.

  ReplyDelete
 4. உறவினர்கள் நண்பர்கள் ஒவ்வொருவராய் மறைகிறார்கள் . அவர்களுடன் பழகிய நாள்கள் ,சேர்ந்து அனுபவித்த நிகழ்ச்சிகள் நினைவுக்கு வந்து சோகம் தருகின்றன. உங்கள் துயரில் பங்கு கொள்கிறேன் .

  ReplyDelete
 5. வருத்தமான செய்தி. எங்கள் அஞ்சலிகள்.

  ReplyDelete
 6. இழப்பைத் தாங்கிக் கொள்ளும் சக்தியை ஆண்டவன் அவர்களுக்குத் தருவதற்குப் பிரார்த்திப்பதைத் தவிர வேறே ஏதும் சொல்லத் தோன்றவில்லை.

  ReplyDelete
 7. எனது அஞ்சலிகளும்...

  ReplyDelete
 8. திரு. வெங்கடேஸ்வரன் ஏற்கனவே உங்களுக்குப் பரிச்சயமானவர் என்பதெல்லாம் இப்போதுதான் அறிகிறேன். நீங்கள் திருமதி. பானுமதியின் குடும்பத்தோடு தொடர்பில் இருந்திருக்கிறீர்கள்.

  சேர்ந்து வாழ்ந்தவர் பிரிந்தால், சோர்ந்திடும் மனது. துவட்டும் உறவுகளின் பிரிவு உளைச்சலைத்தான் தருகிறது. என்ன செய்வது? தவிர்க்கமுடியாததாயிற்றே மண்ணுலக வாழ்வில் பிரிவு என்பது...

  அன்னாரின் ஆன்மா சாந்தியடைய ஆண்டவன் அருள்புரிவானாக. திருமதி பானுமதி அவர்கள் மீண்டுவர, கொஞ்ச நாட்கள் பிடிக்கும்.

  ReplyDelete
 9. சிரம் தாழ்ந்த அஞ்சலிகள். அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.

  ReplyDelete
 10. ஆழ்ந்த இரங்கல்கள்.... எங்களது பிரார்த்தனைகள்...

  ReplyDelete
 11. ஆழ்ந்த அஞ்சலிகள். வெங்கடேஸ்வரன் ஐயா அவர்களின் ஆன்ம சாந்திக்காகவும் பானு அக்கா அவர்களுக்கும் குடும்பத்தினருக்கும் ஆறுதல் கிடைக்கவும் இறைவன் இந்த இக்கட்டான சூழலில் அவர்களுடன் துணையிருக்கவும் பிரார்த்தனைகள்.

  ReplyDelete
 12. திரு. வெங்கடேஸ்வரன் அவர்களது ஆன்மா இறைநிழலில் கலந்திருப்பதாக..

  ஸ்ரீமதி பானுமதி அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கடவுள் தான் ஆறுதலையும், தேறுதலையும் தந்தருள வேண்டும்..

  ReplyDelete
 13. அம்மா அப்பாவின் இழப்புகளை கடந்து வந்த நமக்கு நமது துணையின் இழப்பு மிகவும் ஈடு செய்ய முடியாத இழப்பாகவே இருக்கும். சில சமயங்களில் சில நொடிகள் மட்டும் என் மனது என் மனைவியை இழந்துவிட்டால் என்ற நினைப்பு வரும் அந்த நினைப்பே பெரும் துயரத்தை தரும் அப்படி இருக்கையில் உண்மையாகவே இழப்பு ஏற்படும் போது என்ன சொல்லியும் நம் மனது சமாதானம் அடையாது அப்படித்தான் பானுமதி அவர்களின் மனமும் இப்போது இருக்கும்.அவரது இழப்புக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களும் வருத்தங்களும்

  ReplyDelete
 14. நீங்கள் ஏற்பாடு செய்திருந்த சென்னை வேளச்சேரி பதிவர் சந்திப்பில் தான் அவரைச் சந்தித்து கொஞ்ச நேரம் உரையாட வாய்ப்பு கிடைத்தது. நண்பர்கள் பிரார்த்தனையில் நானும் கலந்து கொள்கிறேன்.

  ReplyDelete
 15. அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன்.
  எங்கள் துயரையும் பகிருகிறேன்.

  ReplyDelete
 16. நீங்கள் இருவரும் உறவு என்பதே இப்பொழுதுதான் தெரியும்.
  உங்கள் பிரார்த்தனைகள் திருமதி பானுமதிக்கு ஆறுதல் தரும்.

  துணையை இழப்பது மிகக் கடினம். அவருக்குப் பொறுமையும்
  தாங்கும் சக்தியையும் இறைவன் தரட்டும்.
  நன்றி ஜிஎம்பி சார்.

  ReplyDelete
 17. மிகவும் வேதனையாக இருக்கிறது... அவர்கள் குடும்பத்தாரின் மனம் அமைதி பெறவும் பானுமதி அக்காவுக்கு , தாங்கும் சக்தியை இறைவன் வழங்கவும் பிரார்த்திக்கிறேன்

  ReplyDelete
 18. ஆத்மா சாந்திக்காக வேண்டுகிறேன்.

  ReplyDelete
 19. இழப்புகள் நினைவுகளில் இருந்து மறையும் நாளும் வரும் மறதி ஒரு வரம் அல்லவா

  ReplyDelete