ஞாயிறு, 29 செப்டம்பர், 2019

சில நினைவுகள் நவராத்திரி


சில நினைவுகள்  நவராத்திரி


புரட்டாசி அமாவாசைக்கு  அடுத்த பத்து நாட்கள் விசேஷன் தான்   நவராத்திரி அல்லவா
நவராத்திரி எனும்போது நெஞ்சில்  மோதும்  நினைவுகள் ஏராளம் ஒன்பது நாட்களும் புதுப்புடவை சரசரக்கச் பெண்டிர் விதிஉலாவரும்காட்சியும்   சிறுமியர் தங்கள் பாடல் திறமையை வெளிப்படுத்தத் துடித்தாலும் பல தயக்கத்துக்குப்பின் போதும் என்றுசொல்லும் அளவுக்கு பாடி மகிழ்வதை காண்பது இக்காலத்திலும் இருக்கிறதா தெரியவில்லை 1968 என்று நினைவு  திருச்சியிலிருந்தபோது  நவராத்திரி கொலுவுக்கு பொம்மைகள் இருக்கவில்லை ஆனால் என்மனைவிக்கு ஆசை மட்டுமிருந்தது சென் னை குறளகம் சென்று பொம்மைகள் வாங்கி வந்ததும் அதன்பின் ஆண்டு தோறும்கொலு வைப்பதும்  வழக்கமாகி இருந்தது நாங்கள் வேலை மாற்றலாகி விஜயவாடாசென்றதும் பின்  மீண்டும்  திருச்சிவந்ததும் அதன்பின் விருப்ப ஓய்வு பெற்று பெங்களூரில் செட்டில் ஆனபோதும் இந்தபொம்மைகளையும் விடாதுஎடுத்துவந்தோம்  2012 வரை  பொம்மைகள் வைத்து  வழிபடுவது தொடர்ந்தது  அதன் பின்  என்மனைவிக்கு கொலு வைத்தது போதும் என்றாகி  இருந்த பொம்மைகளை  வேண்டிய சிலருக்கு கொடுத்ததும்மறக்க முடியாது
 நவராத்திரி கொண்டாட்டம் பல இடங்களில் பல விதமாகக் கொண்டாடப்படுகிறது எது எப்படி ஆனாலும் கொண்டாட்டத்துக்கு பின்னணியாக பல கதைகளுண்டு வங்காளிகள் துர்கா பூஜையாகக் கொண்டாடுகிறார்கள்  வங்காளிகளின் ஒரு பிரதான வழிபாடு  துர்கா பூஜை துர்கா பூஜை சமயம் பெங்காளிகள்  கூடிச் சேர்ந்துவழிபாடு செய்வார்கள்அவர்களது வழிபாடுகளை  திருச்சியிலும் பெங்களூரிலும் பார்த்திருக்கிறேன் பெங்களூரில் RBANM SCHOOL  மைதானத்தில்பெங்களூர் வாழ் வங்காளிகள்  சிறப்பாகக் கூட்டு வழிபாடு நடத்துகிறார்கள் துர்கை பதுமையை வழிபட்டு விஜயதசமிக்குப் பின்  நீர் நிலைகளில் விசர்ஜனம் செய்கிறார்கள் வடக்கே ராவணனைக்கொன்றதினமாக அனுஷ்டிக்கப்படுகிறது
 தமிழ் நாட்டில் நவராத்திரிபெரும்பாலும் பெண்கள் பண்டிகையாகவே அனுஷ்டிக்கப்படுகிறது
 திருச்சியில் கொதிகலன் தொழிற்சாலைக்கு அன்றுஎல்லோரும் வந்துபோகலாம்   1960  களில்  நான் பெங்களூர் எச் ஏ எல்லில்  இருந்தபோது தொழிலாளர்கள் தங்கள் கைவினையைக் காட்டஆயு பூஜையைக் கொண்டாடினார்கள் என் சில அனுபவங்களை முன்பே பகிர்ந்திருக்கிறேன் எனக்கு அண்மையில் ஒரு செய்திப்படம்வந்திருந்ததுஅதில் கண்ட செய்திகள்புன்னகைக்க வைத்தாலும்   பண்டிகைகள் வழிபாட்டையும்  மீறி சந்தோஷம் தர உபயோகமாகின்றன என்பதே தெரிகிறது    

 இந்தக்காணொளி நான் எழுதிய பாட்டு ஒன்றுக்கு திரு சுப்பு தாத்தா  மெட்டமைத்து பாடியது 


இந்தப்படமே self explanatory



நவராத்திரி விழாவுக்கு  பெண்களுக்குப் பிடித்தமான  புடவைகளும்  உணவு வகைகளுமே பரிந்துரைக்கப்படுகின்றன

 2012ல் நான் எழுதிய பாடல்

ணு அண்டம் பேரண்டம் அனைத்தையும்

இயக்கும் சக்தியே உருவமும் பெயரும் ஏதுமில்லா
உன்னை என்ன சொல்லிப் போற்றுவேன்
.மலையத் துவசன் பெற்ற பெரு வாழ்வென்பேனா-

புவி மடந்தை- நாமருவிய கலை மடந்தை-
ஜெய மடந்தை என்பேனா-சர்வசக்தி பொருந்திய
சர்வாங்க சுந்தரி என்பேனா--நான்அவலத்தில்
அழுந்தும்போது என் நாவினில் வந்தமரும்

முருகனும் நீயே,- கண்ணனும் நீயே- என்னுள்
இருப்போனும் ஏனையோர் துதிக்கும் எல்லா
நாமங்களும் கொண்டவளு(னு)ம் நீயல்லவா- நீ என்
அப்பனல்லவா, அம்மையல்லவா, கண் துஞ்சாது எனைக்

காக்கும் தாரமல்லவா.- யாதுமாகி நிற்கும் எல்லாமே
கலை மகளே, அலை மகளே, மலைமகளே

உயிருள்ள,உயிரற்ற, அனைத்திலும் இருப்பவளே,

எனை ஈன்ற தாயின் தாயே- எல்லாம் நீயே

உன்னை வணங்குகிறேன்
























33 கருத்துகள்:

  1. காணொளியைக் காலம்பர பார்க்கிறேன். நவராத்திரி நினைவுகள் அருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுப்புத்தாத்தாவின்பாட்டுக்கு பின்னணி காணொளி

      நீக்கு
  2. சுப்பு தாத்தா பாடியதை கேட்டேன் அருமை ஐயா.

    பதிலளிநீக்கு
  3. நான் சென்னை கோடம்பாக்கம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தபோதுதான் கொலு அமைப்பை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

    நாங்களும் கிறீஸ்துமஸ் குடில் சுரூப செட்டை ஊர் ஊராக கொண்டு சென்றிருக்கிறோம்.பல சுருபங்கள் உடைந்து போகும். உடைந்தால் அதை ஒட்ட வைத்து பயன்படுத்த கூடாது என்பார்கள்.

    நவராத்திரி பண்டிகையின் கொண்டாட்டம் மும்பையிலும் மிக சிறப்பாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றி சார்

      நீக்கு
  4. உங்கள் அனுபவத்தை ரசித்தோம் ஐயா. கும்பகோணத்தில் நாங்கள் நவராத்திரி கொண்டாடிய நாள்கள் நினைவிற்கு வந்தன,

    பதிலளிநீக்கு
  5. பதில்கள்
    1. நன்றி சார் இப்போதெல்லாம் பாட்டு எழுத வருவதில்லை

      நீக்கு
  6. நீங்கள் எழுதிய பாட்டுக்கு சுப்பு சார் மெட்டு அமைத்து பாடியது அருமை.

    உங்கள் வீட்டு கொலுவும் பார்த்து விட்டேன்.
    மகிழ்ச்சி நவராத்திரி வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தக் கொலு எங்கள் விட்டில் 2010 களில் வைத்தது பாட்டு அருமையா பாடியது அருமையா

      நீக்கு
  7. அழைப்புக்கு நன்றி.
    you are what you are.
    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  8. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  9. உங்கள் நினைவுகளை ரசித்தேன்.  பாடல் அருமை.   சுப்பு தாத்தா வழக்கம்போல கலக்கி இருக்கிறார்.   நான் எழுதிய பாடலொன்றைக்கோட சுதா பாடியிருந்தார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நவராத்திரி நினைவுகளை பகிர்வது மகிழ்ச்சியே முன்பே சொன்ன பலவும் இப்போதும் வருவதை தவிர்க்க முயன்றி ருக்கிறென் சுப்புத்தாத்தாவின் பாடலைத் தேடி எடுக்க வேண்டி இருந்ததுஅடனால் அவருக்கும் அழைப்பு விடுத்திருந்தேன்

      நீக்கு
  10. //பெண்கள் பண்டிகையாகவே அனுஷ்டிக்கப்படுகிறது//


    கொண்டாடப்படுகிறது என்று சொல்லலாம்.   அனுஷ்டிக்கபப்டுகிறது என்று வருமா என்று தெரியவில்லை!  தவறில்லை என்றாலும் கொண்டாடபப்டுகிறது வார்த்தை இன்னும் பொருத்தமாகஇருக்குமோ என்னவோ!

    பதிலளிநீக்கு
  11. பல இடங்களில் கொண்டாடப் படுகிறதுஎன்றே எழுதி இருக்கிறேன் ஆனால் யோசித்துப்பார்த்தால் கொண்டாட்டத்தை விட அனுஷ்டானமே அதிகம்போல் இருக்கிறது

    பதிலளிநீக்கு
  12. பதில்கள்
    1. இப்போதெல்லாம்வாழ்க்கையே நினைவுகளால் ஆனது வருகைக்கு நன்றி சார்

      நீக்கு
  13. செப்டம்பர் மாதம், நவராத்திரி என்றாலே எனக்கு மிகவும் சிறப்பான மாதம். அப்பா என்ற பதவியை அங்கீகாரத்தை இந்த மாதம் தான் எனக்குத் தந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில நாட்களும்மாதங்களும் நம்மனதில் நீங்காஇடம்பெறுகின்றன வருகைக்கு நன்றி சார்

      நீக்கு
  14. நவராத்திரியை ஒட்டிய கொலு நினைவுகள் அருமை.

    பதிலளிநீக்கு
  15. நவராத்திரி பற்றிய நினைவுகள் அருமை

    பதிலளிநீக்கு
  16. அருமையான நினைவுகள்....உங்கள் பாடல் சிறப்பு சார்.

    கீதா

    பதிலளிநீக்கு
  17. நவராந்திரி நினைவுகளுடன் பாடல்கள் அருமை.

    பதிலளிநீக்கு