Sunday, September 15, 2019

எண்ணங்கள் தொடர்பில்லாமல்


                                  எண்ணங்கள்  தொடர்பில்லாமல்                       
              
என்னென்னவோ எண்ணங்கள் ஆவணப்படுத்தலாமே  விநாயக சதுர்த்தி பற்றி எழுதியிருந்தேன்  பெங்களூருவில் துபாய் என்று எழுதி புகைப்படமும் வெளியிட்டுஇருந்தேன் சதுர்த்தி முடிந்து ஓரிருநாளில்  பெங்களூர் துபாய் இருந்த சுவடெ இல்லாமல் போய் இருந்ததுஅங்கு வசித்தவர்கள் பெரும்பாலும் அயல் மாநிலத்திலிருந்து கட்டுமானப்பணிகளுக்கு  வந்தவர்கள்  எல்லோரும் எங்கு போனார்களோ யாருக்கென்ன அந்த இடம்  சீர் செய்யப்பட்டு ஒரு விடிகாலையில் ஒரு பெரிய விநாயகர் அங்கு வீற்றிருந்தார் இனி பல  நாட்களுக்கு அவர் இடம்தான் அது என் வீட்டுக்கு எதிரே இருந்தார்ஒரே கோலாகலம்தான்பாட்டும் கூத்தும் ஒரே இரைச்சல் சப்தத்தால் எதிரே இருக்கும் என்வீடே சும்மா அதிருதில்லே    இன்று மதிய உணவும் விநியோகம்  மாலைக்குள் விசர்ஜனம்போல் தெரிகிறது   இம்மாதிரி  ஆங்காங்கே பிள்ளையார்கள்  வீற்றிருப்பார்கள்  எந்தநாளிலும் நீரில் கரைக்கப்படலாம்
பெங்களூருவில் துபாய் caption

இம்மாதம் ஆசிரியர்தினம்ஒரு வாட்ஸாப்செய்தி திருசெல்லப்பா  அனுப்பி இருந்தார்
“திருமணம் ஆனவர்கள் அனைவரும் உங்கள்மனைவிக்கு  பூங்கொத்து கொடுங்கள்   வாழ்க்கையில் அவரை விடஉங்களுக்குப் பாடம்நடத்தியவர்கள்யாரும் இருக்க மாட்டார்கள்
அதற்கு பதிலாக நான்   பூங்கொத்து என்ன  ஒரு பாமாலையே இயற்றிருக்கிறேனே என்றுபதில்கொடுத்திருந்தேன்பாவைக்கு ஒரு பாமாலை  சுட்டி  
 என்மூத்த மருமகளுக்கு   அவள்பள்ளியில் இருந்து பாராட்டி இருந்தார்கள்மருமகளுக்கு  கிடைத்தது


மருமகளுக்குக் கிடைத்தது n

ஒரு மாணவனின் ஆசிரிய தின வாழ்த்து

நன்றி கூறும்  மாணவன்

  சுப்பிரமணிய பாரதியார்  காணி நிலம்வேண்டும் என்றுஒருபாட்டெழுதி  ஒரு பெரிய லிஸ்டே கேட்டிருந்தார்  அவர் பெரியவர்  நிறையதேவை  அவருக்கு  எனக்கும் ஒரு கையகல இடமும் சுற்றிலும் ப்சுமையாக இருக்க சில செடி கொடி மரஙகளும் வேண்டும் என்றுவிரும்பினேன்  வீட்டைச் சுற்றி காலி இடம்வைத்து இருக்கிறீர்களே  ஏதாவது கட்டிடம்கட்டினால் பலனாக இருக்குமேஎன்று கூறியவர்களும் உண்டு என் ஆசைகள் வெகு சொற்பம் வீட்டைச் சுற்றி பசுமையாக இருப்பது சுகமே  சிலசெடிகொடி வகைகள்  கண்களுக்கு குளிர்ச்சி ஆனால் அவற்றைச் சரிவர பராமரிக்க முடியவில்லை எல்லாமிந்த வயதே காரணம் வெற்றிக்கொடி யில் காய்வருமா பூவருமா தெரிய வில்லை படம் பார்த்து அவை என்ன என்று  தெரிந்தவர்கள் கூறலாமே
பிரம்ம கமலம்பூ இரவில்தான்மலர்கிறது காலைக்குள் சுருங்கி விடுகிறது ஊசிமல்லி 
ஆசையாய் வாங்கி வைத்தேன்  அது ஏனோ தெரிய வில்லை கருகுகிறது

வெற்ற்லைய்ல் காயா பூவா 


சின்ன தோட்டம்

கருகுமூசிமல்லி 

பிரம்ம கமலமல்லடு நிஷாகந்தி 

ஊசிமல்லி வாங்கிய போது செடி  தெச்சி மந்தாரம்துளசி பிச்சக மாலைகள்  சாற்றி குருவாயூரப்பா நின்னே  கணி காணேணம்

கொட்டு முழக்கம் செய்வோர் சற்றே இளைப்பாற  என்வீட்டு முன்                                         வேஷதாரி

ஊர்வல வீடியோக்கள்                      

26 comments:

 1. படங்கள் அழகு.  இந்த அளவு செடிகளை வைத்துப் பாதுகாப்பதே பெரிய விஷயம்.  எனக்கு இந்த அளவு கூட பொறுமை இல்லை!  அனைத்தையும்  ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. நாங்கள் எங்கே பாது காக்கிறோம் அவை வளாஅருகின்றன அவ்வளவே வருகைக்கு நன்றி ஸ்ரீ

   Delete
 2. எண்ணங்கள் நன்று.

  உங்கள் மருமகள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
  உங்கள் தோட்ட படங்கள் அழகு.
  உங்கள் வீட்டு முன் வேஷம் போட்டவர் நிற்கும் படம் நன்றாக இருக்கிறது.

  காணொளி இப்போது வரவில்லை மீண்டும் வந்து பார்க்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. ஹொரபில்லாமல் இருந்தாலும் என்று சேர்த்திருக்கலாம் காணொளி இணைப்பில் எங்கோ தவறு சரி செய்து அடுத்தபதிவில் இணைக்கிறேன் வருகைக்கு நன்றி மேம்

   Delete
 3. ரசிக்க வைத்தன படங்கள் தோட்டம் வளர்ப்பது ஒரு கலையே...

  காணொளி இயக்கமில்லை பிறகு காண்பேன் ஐயா

  ReplyDelete
  Replies
  1. காணொளிகளை அடுத்த பதிவில்இணைப்பேன் எங்கோ தவறு நேர்ந்திருக்கிறது

   Delete
 4. பாமாலையை மீண்டும் ரசித்து வந்தேன் ஐயா.

  ReplyDelete
  Replies
  1. நானும் பல முறை வாசித்து பார்ப்பதுண்டு வந்து ரசித்தமைக்கு நன்றி ஜி

   Delete
 5. எனக்கும் தோட்டம் வைக்க ஆசைதான் ஆனால் அதை பராமரிக்கத்தான் முடியவில்லை. சில வருடங்ஙள் கழித்து போதும் என்று நிறுத்திவிட்டேன். கழுத்து எலும்பு தேய்ந்து விட்டதாம் குனிந்து நிமிர்ந்தால் தலை சுற்றுகிறது.

  என் வீட்டருகில் எந்த கோயிலும் இல்லை. ஆகவே எந்த மத பண்டிகை வந்தாலும் ஒலிபெருக்கி தொல்லை இல்லை.

  ReplyDelete
  Replies
  1. தோட்டம் வளர்ப்ப்சதில் அதிக கவனம் செலுத்த முடியவில்லை

   Delete
 6. பிள்ளையார் அழகு.. இவரைக் கரைக்க எப்படி மனம் வருமோ...

  பிரைமறி ஸ்கூல் எனில் குழந்தைகள் ஒவ்வொன்றுக்கும் கார்ட் கிவ்ட் தருவார்கள்.. மகிழ்ச்சியான தருணம்.. மருமகளுக்கு வாழ்த்துக்கள்.
  வெற்றிலை என்னா அழகு.
  ஊசி மல்லி எங்களிடமும் இருக்கு.. நானும் நட்டு ஆரம்பம் வெறும் தண்டு தான் இருந்தது.. நட்டு 3 வருடத்தால் 6,7 பூக்கள் வந்தது.. இவ்வருடம் பெரிய கொடிகளாகப் பரவி நிறையப் பூத்தது. பொறுமையாக இருங்கோ பூக்கும்..

  ReplyDelete
 7. ஊசி மல்லி முதலில் சில பூக்கள் தந்தது பிறகுதான் கருக ஆரம்பித்தது பார்ப்போம் ஒரு விநாயகர் பந்தல் போட ஏராளமாகச் செலவு அதில் இப்போது அரசியல் பேச ஆரம்பித்து விட்டார்கள்

  ReplyDelete
 8. படிக்க மறக்காதீர்கள்
  நீங்களும் திருக்குறள் எழுதலாம்!
  http://www.ypvnpubs.com/2019/09/blog-post_13.html

  ReplyDelete
  Replies
  1. யாப்பிலக்கணங்களுக்கு உட்பட்டு கவிதை எழுதவிரும்பினேன் சில விதிகளைக் கற்க முயற்சித்தேன் ஆனால் அதற்கு வார்த்தைகள்வந்து விழவேண்டும் இலக்கணவிதிகளுகு உட்பட்டுஎழுதும்போது செயற்கையாக இருந்ததுமுயற்சியைக்கைவிட்டேன் அது குறித்து ஆரம்பத்தில்நான் எழுதிய பதிவின் சுட்டி இதோ :http://gmbat1649.blogspot.com/2011/08/blog-post_29.html

   Delete
 9. வீட்டைச் சுற்றி பசுமையாக இருப்பது சுகமே

  ReplyDelete
 10. இதற்கு மேல் என்ன (எண்ண) வேண்டும்...?

  () தங்களுக்கு புரியும் ஐயா...

  ReplyDelete
  Replies
  1. பல நெரங்களில் புரிவதில்லை எதையும் நேராகச் சொல்லலாமே

   Delete
 11. அழகான தோட்டம். தோட்டம் இருப்பது, பராமரிப்பது நல்லதொரு Stress Buster.

  ReplyDelete
  Replies
  1. தானா வளரும் தோட்டம் பராமரிப்பதே இல்லை முடியவில்லை கண்ணுக்கு குள்ர்சியாய் இருக்கிறது என்பதே முக்கியம்

   Delete
 12. மருமகளுக்கு எங்கள் வாழ்த்துகள். தோட்டம் சின்னஞ்சிறுசும் இல்லை. ரொம்பப் பெரிசும் இல்லை. இதைப் பராமரித்தாலே போதும். மற்றப் படங்களும் அழகோ அழகு!

  ReplyDelete
 13. மருமகளுக்கு பள்ளியில் நல்ல பெயர் மகிழ்ச்சி தருகிறது தோட்டம் தானாவந்தது

  ReplyDelete
 14. உங்கள்வீட்டு வெற்றிலைக்கொடிகள் ஞாபகத்தில் வருகின்றன. இவ்வளவு செடிகள், மரங்கள் சூழ வாழ்கிறீர்கள் இருவரும். பாக்யசாலிகள்.

  வயசைப்பற்றி அலுத்துக்கொள்ளாதீர்கள். அது விலைவாசிபோன்றது.. ஏறத்தான் செய்யும்!

  உங்களது மருமகள் ஒரு ஆசிரியை என அறிந்ததில் மகிழ்ச்சி. ஒரு நல்லாசிரியை என மாணவர்கள் சொன்னது கேட்டு மேலும் மகிழ்ச்சி.

  பிள்ளையார் ஒரே பாடாகப் படுத்திவிட்டாரோ உங்களை!

  ReplyDelete
  Replies
  1. எங்கள் வீட்டுக்கு வந்தது நினவில் இருக்கிறதா பிள்ளையார் ப்சாடகப் படுத்தியது ஒரு நாஐயில் அல்ல இங்கெல்லாம் விநாயகர் சதுர்த்தி பல நாட்களுக்குத்தொடர்கிறதுசில இடங்களில் இன்னும் விசர்ஜனத்துக்கு தயாரில்லை

   Delete
 15. பல தரப்பட்ட தகவல்கள் ; மருமகளுக்கு என் பாராட்டு .

  ReplyDelete
 16. அதைத்தான் தொடர்பில்லாத எண்ணங்கள் என்றேன்

  ReplyDelete