வெள்ளி, 27 செப்டம்பர், 2019

முதியோர் இல்லமும் புதுவரவுகளும்




                                             முதியோர் இல்லமும் புது வரவுகளும்
                                              ------------------------------------------------------------------
  முதியோர் இல்லம் 
எங்கள் வீட்டைத்தான் முதியோர் இல்லம் என்றேன்   பின் என்ன இரு வயதானவர் மட்டும்  தங்கும் இடம் அல்லவா  முதியவருக்கு சிறிய வர்க்கும் அதிகம்  வித்தியாசமில்லை யாராவது வருகிறார்களா என்று பார்க்கும் குணம் இரு பாலருக்கும்பொருந்தும் யாராவது வந்து விட்டால் மகிழ்ச்சிதான் இதில் குழந்தைகள் முதியோர் கள் என்னும் வேறுபாடு இல்லை
சற்றும் எதிர்பாராத ஒரு விசிட்டர் வந்தார்  வந்ததும் அல்லாமல் எங்களுக்குப்பிடித்த மாதிரி பாட்டுகள்பாடி அசத்தி விட்டார் தமிழ் மலையாளம்  கன்னடம் என பல மொழிகளில் என் மனைவியின்   தங்கை மகன் சசிதரன் என்னும்பெயர் (படங்கள் இடம் மாறி விட்டன
மச்சினன்  மகளுடன்  
ப்ரௌட்பேரெண்ட்ஸ் 
பழுத்த பழம்பச்சிளம் குருத்துடன் 
இருவர் மடியிலே இருவரடி 
தாயின்  அரவணைப்பு 
இரட்டையர்கள் 
நாங்கள் போர்த்திய பொன்னாடையுடன்



திடீரென வந்ததில் எங்களுக்கு கையும் ஓடலை  காலும் ஓடலை எங்கள் மகிழ்ச்சியை தெரிவிக்கும்  அவனுக்கு ஒரு பொன்னாடைபோர்த்தி எங்கள்மகிழ்ச்சியைத் தெரிவித்தோம்  ஹி வாஸ் ஆல்சோ மூவ்ட்

(படங்கள் இடம்மாறிவிட்டன ) இனி புது வரவுகள்பற்றி   புது வரவுகள் என்றதுமிம்முதியோர் இல்லத்துக்குபுது வரவல்ல  இப்புவிக்கு வந்த புது வரவுகள்  எங்கள் இல்லத்தில் இரட்டைக் குழந்தைகளே பிறந்தது இல்லை  என் மச்சினன் மகள் இரட்டைக் குழந்தைகளுக்குத்தாயாகி இருக்கிறாள் ஒரு பெண் ஒரு ஆண் அவர்கள் இருப்பதோ சர்ஜாபூர் ரோடில் எங்கள் வீட்டிலிருந்துசுமார் 40 கிமீ  தூரம் பிரயாணங்களை  முற்றிலும் தவிர்க்கும்  என்னால்  எங்கள்வீட்டு முதல் இரட்டையரைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை முதலில் ஹொரமாவில் இருக்கும் என்மகன் வீட்டுக்கு  ஓலாவில்பயணம்  பின் அங்கிருந்து மகன்மருமகளுடன்சர்ஜாபூர் ரோடுக்கு நல்ல வேளை பிரச்சனை இல்லாமல் வந்து சேர்ந்தோம்



  ஒரு கொசுறு செய்தி  ஐ டி கம்பனிகளில் வேலை செய்வோருக்கு மெடர்னிடி லீவாக ஆறு மாதம் கிடைக்கிறதாம்  அது மட்டுமல்லால் கணவனுக்கு படேர்னிடி லீவாக ஒரு வாரம் அளிக்கப்படுகிறதாம் என் மச்சினன்மகள் இங்கிலாந்தில் இருந்தபோது ஸ்கை டைவிங் எல்லாம் செய்திருக்கிறாள்  










  



24 கருத்துகள்:

  1. இந்தப் பெண் பறக்கையில் பார்த்திருக்கேன். இரட்டைக்குழந்தைகளுக்கு அதுவும் ஓர் ஆண், ஓர் பெண் எனக்கிடைத்தமைக்கு இறைவனுக்கு நன்றி சொல்லணும். குழந்தைகளுக்கும் உங்கள் மச்சினர் மகளுக்கும் வாழ்த்துகள், ஆசிகள்.

    பதிலளிநீக்கு
  2. முதியோர்களுக்கு இளந்தளிர்களைக் காணும் போது ஏற்படும் ஆனந்தத்திற்கும் அளவே இல்லை .

    பதிலளிநீக்கு
  3. இருவர் மடியில் இருவரடி ரசித்தேன் ஐயா.

    பதிலளிநீக்கு
  4. முதல் காணொளியில் "பாட்டெடுத்து நான் படிச்சா பட்டமரம் பால் சுரக்கும்" என்கிற வரிகள் வரும் நேரத்தில் காணொளி முடிந்து விடுகிறது!

    நன்றாகக் பாடி இருக்கிறார் அவர்.  நல்ல பாடலும் கூட.  இரட்டையரைப் பெற்ற தம்பதிகளுக்கு வாழ்த்துகள். 

    என்றும் பொங்கட்டும் இனிமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கைபேசியில் பாடல்களாஐப் பதிவு செய்தேன் ஆனால் அவை நீளமென்று இடுகையில் அப்லோட் ஆகவில்லை பாரட்டுக்கு நன்றி ஸ்ரீ

      நீக்கு
  5. //எங்கள் வீட்டைத்தான் முதியோர் இல்லம் என்றேன் பின் என்ன இரு வயதானவர் மட்டும் தங்கும் இடம் அல்லவா முதியவருக்கு சிறிய வர்க்கும் அதிகம் வித்தியாசமில்லை யாராவது வருகிறார்களா என்று பார்க்கும் குணம் இரு பாலருக்கும்பொருந்தும் யாராவது வந்து விட்டால் மகிழ்ச்சிதான் இதில் குழந்தைகள் முதியோர் கள் என்னும் வேறுபாடு இல்லை//

    யாராவது வீட்டுக்கு வந்தால் ஆனந்தம். நீங்கள் சொல்வதை ஆமோதிக்கிறேன் அப்படியே.

    பாடல் அருமையாக இருக்கிறது. பிள்ளை கனி அமுதை பெற்ற பெற்றோர்களின் பூரிப்புக்கு குறைந்தது இல்லை உங்களின் உச்சி மோர்ந்து பார்க்கும் படம்.

    குழந்தையில் ஒன்று நன்றாக விழித்துப் பார்க்கிறது.
    இருவரும் நல்ல நலத்தோடு வாழ வேண்டும், வாழ்க வளமுடன்.
    படங்கள் அதற்கு நீங்கள் கொடுத்து இருக்கும் வரிகள் எல்லாம் சூப்பர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி என்று சொல்வது தவிர வேறு எழுத தோன்றவில்லை மேம்

      நீக்கு
  6. படங்கள் கண்டு மகிழ்ந்தேன்.

    நீங்களும் ஜம்முனு இருப்பது கண்டு மகிழ்ச்சி. நல்ல உடல்நிலை தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் ஜம்முனுதான் இருக்கிறேன் ஒரெ ஒரு பிரச்சனை நடக்க முடிவதில்லை மற்றபடி எல்லாம் ஜம்தான்

      நீக்கு
  7. உங்கள் சந்தோசம் எங்களையும் தொற்றிக்கொண்டது..படங்களுடன் பகிர்ந்தவிதம் அருமை..வாழ்த்துக்களுடன்..

    பதிலளிநீக்கு
  8. உங்கள் சந்தோசம் எங்களையும் தொற்றிக்கொண்டது..படங்களுடன் பகிர்ந்தவிதம் அருமை..வாழ்த்துக்களுடன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போதெல்லாம் என்பதிவுக்கு உங்கள் கருத்திடுதல்குறைந்து விட்டதோ நன்றி

      நீக்கு
  9. இளந்தளிர்களுடன் முன்னாள் இளந்தளிர்கள் உள்ள படங்கள் அருமை. திரு சசிதரன் அருமையாகப் பாடுகிறார்.அவருக்கு வாழ்த்துகள்! அவர் உங்கள் மைத்துனரின் மகன் தானே. அவருக்குத்தானே இரட்டைக் குழந்தைகள். ஆனால் கீழே மச்சினன் மகள் இரட்டைக் குழந்தைகளுக்குத்தாயாகி இருக்கிறாள் என்று சொல்லியிருக்கிறீர்களே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சசிதரன் மைத்துனியின் மகன் இரட்டைகுழந்தைகள் என்மைத்துனனின் மகளுக்கு பிறந்தவைசந்தேகம் தீர்ந்திருக்கும் என்று நினைக்கிறேன் வருகைக்கு நன்றி சார்

      நீக்கு
  10. புதுவரவுகளுக்கு வாழ்துகள்.வாழ்க நலமுடன்.

    பதிலளிநீக்கு
  11. புதுவரவுகள் என்றுமே அலாதி மகிழ்ச்சி. வருகைகளும் வசந்தமே. மழலைகள் படம் கொள்ளை அழகு. வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  12. புதுவரவுக்கு எங்கள் அன்பும் ஆசிகளும்.

    இங்கே நம்ம வீடும் முதியோர் இல்லம்தான். எங்க ரஜ்ஜுவும் முதியோர் பட்டியலில் வந்தாச். ஆச்சு 13 வயசு !

    பதிலளிநீக்கு
  13. உங்களையும் முதியோர் என்று சொல்கிறீர்களோ என்று நினைத்துபடித்தால் ரஜ்ஜு என்கிறிர்கள் ரஜ்ஜு உங்கள் பூனை அல்லவா

    பதிலளிநீக்கு