இரு மகிழ்ச்சிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இரு மகிழ்ச்சிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 27 செப்டம்பர், 2019

முதியோர் இல்லமும் புதுவரவுகளும்




                                             முதியோர் இல்லமும் புது வரவுகளும்
                                              ------------------------------------------------------------------
  முதியோர் இல்லம் 
எங்கள் வீட்டைத்தான் முதியோர் இல்லம் என்றேன்   பின் என்ன இரு வயதானவர் மட்டும்  தங்கும் இடம் அல்லவா  முதியவருக்கு சிறிய வர்க்கும் அதிகம்  வித்தியாசமில்லை யாராவது வருகிறார்களா என்று பார்க்கும் குணம் இரு பாலருக்கும்பொருந்தும் யாராவது வந்து விட்டால் மகிழ்ச்சிதான் இதில் குழந்தைகள் முதியோர் கள் என்னும் வேறுபாடு இல்லை
சற்றும் எதிர்பாராத ஒரு விசிட்டர் வந்தார்  வந்ததும் அல்லாமல் எங்களுக்குப்பிடித்த மாதிரி பாட்டுகள்பாடி அசத்தி விட்டார் தமிழ் மலையாளம்  கன்னடம் என பல மொழிகளில் என் மனைவியின்   தங்கை மகன் சசிதரன் என்னும்பெயர் (படங்கள் இடம் மாறி விட்டன
மச்சினன்  மகளுடன்  
ப்ரௌட்பேரெண்ட்ஸ் 
பழுத்த பழம்பச்சிளம் குருத்துடன் 
இருவர் மடியிலே இருவரடி 
தாயின்  அரவணைப்பு 
இரட்டையர்கள் 
நாங்கள் போர்த்திய பொன்னாடையுடன்



திடீரென வந்ததில் எங்களுக்கு கையும் ஓடலை  காலும் ஓடலை எங்கள் மகிழ்ச்சியை தெரிவிக்கும்  அவனுக்கு ஒரு பொன்னாடைபோர்த்தி எங்கள்மகிழ்ச்சியைத் தெரிவித்தோம்  ஹி வாஸ் ஆல்சோ மூவ்ட்

(படங்கள் இடம்மாறிவிட்டன ) இனி புது வரவுகள்பற்றி   புது வரவுகள் என்றதுமிம்முதியோர் இல்லத்துக்குபுது வரவல்ல  இப்புவிக்கு வந்த புது வரவுகள்  எங்கள் இல்லத்தில் இரட்டைக் குழந்தைகளே பிறந்தது இல்லை  என் மச்சினன் மகள் இரட்டைக் குழந்தைகளுக்குத்தாயாகி இருக்கிறாள் ஒரு பெண் ஒரு ஆண் அவர்கள் இருப்பதோ சர்ஜாபூர் ரோடில் எங்கள் வீட்டிலிருந்துசுமார் 40 கிமீ  தூரம் பிரயாணங்களை  முற்றிலும் தவிர்க்கும்  என்னால்  எங்கள்வீட்டு முதல் இரட்டையரைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை முதலில் ஹொரமாவில் இருக்கும் என்மகன் வீட்டுக்கு  ஓலாவில்பயணம்  பின் அங்கிருந்து மகன்மருமகளுடன்சர்ஜாபூர் ரோடுக்கு நல்ல வேளை பிரச்சனை இல்லாமல் வந்து சேர்ந்தோம்



  ஒரு கொசுறு செய்தி  ஐ டி கம்பனிகளில் வேலை செய்வோருக்கு மெடர்னிடி லீவாக ஆறு மாதம் கிடைக்கிறதாம்  அது மட்டுமல்லால் கணவனுக்கு படேர்னிடி லீவாக ஒரு வாரம் அளிக்கப்படுகிறதாம் என் மச்சினன்மகள் இங்கிலாந்தில் இருந்தபோது ஸ்கை டைவிங் எல்லாம் செய்திருக்கிறாள்