Friday, July 21, 2023

அவதாரக்கதை சில புரிதல்கள்

  அவதாரக் கதைகள்

-----------------------------------------------
          நான்   அவதாரக் கதைகள் 
எழுத துவங்கிஇருக்கிறேன். இவற்றை எழுதும் போது எனக்கு எல்லாம் தெரிந்து
எழுதுவதாக யாரும் எண்ணவேண்டாம்.ஆனால் எழுதுவது பற்றி
பல இடங்களில் கேட்டும் படித்தும் எழுதுகிறேன். கிருஷ்ணாவதார
கதை எழுதுமுன் மீதி உள்ளதைப் பற்றி எழுத முயலும்போது,
வழக்கம்போல் எனக்கே உள்ள சந்தேகங்கள் எழுந்து ,எழுதுவதற்கு
தடைபோடுகின்றன.

       நாம், பகவான் ஒன்பது அவதாரங்கள் எடுத்திருக்கிறார் என்றும்
இன்னும் எடுக்கப்போகும் கல்கி அவதாரத்துடன் சேர்த்து பத்து
அவதாரம் என்றும் கேள்விப்பட்டும் சொல்லிக் கொண்டும் வந்தி
ருக்கிறோம். சில நாட்களுக்கு முன் “சோ”-வின் “ எங்கே”
பிராமணன் என்னும் தொலைக் காட்சி நிகழ்ச்சியில்
“)மொத்தம் பகவானின் 22-/                  அவதாரங்கள் குறித்து சோஅவர்கள் விளக்கம் கூறி, ( 22- அவதாரங்       களையும் பெயர்களுடன் குறிப்பிட்டார்.) சாதாரணமாகப் பத்து          அவதாரங்களே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதாக தெரிவித்தார். இவற்றைப் பற்றிய ஆராய்ச்சிக்குள் புகுந்து தெளிய தற்சமயம் எனக்கு வழியுமில்லை,
வசதியுமில்லை. ஆனால் அவதாரக் கதைகள் எழுதுவது என்று
முடிவெடுத்து எழுதி வந்தவன் முன்னேற முடியாமல் தவிக்கக்
காரணம் பத்து அவதாரங்களில் ஒரு அவதாரம் குறித்த தெளிவு
இல்லாததனால்தான்.

           பக்திமாலை என்ற ஒரு தியான ஸ்லோகத் தொகுப்பில்
தசாவதாரஸ்துதி என்று ஒரு ஸ்லோகம். பத்து அவதாரங்களின்
பெயர்களும் அந்தத் துதியில் வருகிறது.

           “மத்ஸ்ய கூர்ம வராக நரஹரி
            வாமன பார்கவ நமோ நமோ
            வாசுதேவ ரகுராம புத்த ஜய
            கல்கியவதாரா நமோ நமோ
            தசவித ரூபா நமோ நமோ “

என்று வருகிறது, இதன்படி புத்தன் ஒரு அவதாரமாகக் கருதப்
படுகிறார்.ஆனால் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜகத்குரு
ஸ்ரீ சங்கராச்சாரிய ஸ்வாமிகள் அருளாசியுடன் வெளியிடப்பட்ட
ஸ்ரீ தசாவதாரக் கதைகளில் பலராமனை ஒரு அவதாரமாகக்
கூறப்படுகிறது. நான் எழுதியெதெல்லாlம் பெரும்பாலும் இதில்
கூறியுள்ள செய்திகளின் அடிப்படையில் அமைந்ததே.

          ” இதில் திருமால் உழு தொழிலின் மேன்மையை உலகுக்கு
உணர்த்த எண்ணினார். எனவே கலப்பையை படைக்கலமாகக்
கொண்ட பலராமர் வடிவெடுக்க நினைத்தார்” என்று கூறப்பட்டு
இருக்கிறது திருமால் தேவகியின் வயிற்றில் ஏழாவது கருக்
கொண்டதாகவும் , அக்குழந்தையைக் காப்பாற்றும் பொருட்டு,
மகா காளிதேவி தேவகியின் வயிற்றில் இருந்த கருவை நந்த
கோபனின் இரண்டாம் மனைவி ரோகிணியின் வயிற்றில்
மாற்றி அமைத்தாள் என்றும் ,திருமால் ரோகிணியின் வயிற்றில்
பிறந்து பலராமர் என்ற பெயருடன் விளங்கினார் என்றும் கூறப்
பட்டுள்ளது.

           ஒரே நேரத்தில் திருமால் இரண்டு அவதார புருஷராக
விளங்கினாரா என்ற சந்தேகம் எனக்கெழ, அதைத் தீர்த்துக்
கொள்ளும் அவசியம் உணர்ந்தேன்.

          ஸ்ரீ நாராயண பட்டத்திரியின் ஸ்ரீ நாராயணீயம் படித்துக்
கொண்டு வரும்போது , முப்பத்தேழாவது தசகத்தில் பத்தாம்
பாடலில் “ மாதவனே, உன் ஏவலினால் பாம்பரசனான ஆதி
சேஷன் ஏழாவது கருவாய் இருக்கும் தன்மையை அடைந்தான்.
பின், மாயை அவனை ரோகிணியிடம் சேர்த்தாள். அப்போது
சச்சிதானந்த வடிவமாகிய நீயும் தேவகியின் வயிற்றினுள்
புகுந்தாய்” என்ற ரீதியில் செல்கிறது.

         இப்போது பலராமனை அவதார புருஷ்னாக எடுத்துக்
கொள்வதா, புத்தனை அவதார புருஷனாக ஏற்பதா என்ற
சந்தேகம் வலுக்கிறது. பலராமர் ஆதிசேஷனின் பிறப்பா
பரந்தாமனின் அவதாரமா என்னும் கேள்விகள் எழும்போதும்
பலராமரின் அவதார நோக்கம் நான் படித்த வரையில் சரியாக
விளக்கப்படாத நிலையில் அது பற்றி எழுதுவது உசிதமாகப்
படவில்லை.

           பதிவர்களில் பல விஷயங்கள் தெரிந்தவர் இருப்பர்.
அவர்கள் இவற்றுக்கு விளக்கம் கூறினால் அதையும் சேர்த்துப்
படிக்கும்போது தெளிவுகள் பல உண்டாகலாம். ஆக, அடுத்து
கிருஷ்ணாவதாரக் கதை கூடிய சீக்கிரம் எழுதுவேன் என்று
கூறி முடிக்கிறேன்.
----------------------------------------------------------------


        

Sunday, July 16, 2023

பஞ்சாபில் நான்

 

பஞ்சாபில் நான்.

.பஞ்சாபில் நான். 
-----------------------
      
        சீக்கிசம் என்ற புத்தகம் படிக்கும் வாய்ப்பு தற்செயலாகக் கிடைத்தது  அதை படிக்க துவங்கும் முன்னும், படிக்கும் போதும்  நான்  சீக்கியர்களின் மாநிலமான  பஞ்சாபுக்கும்  அவர்களுடைய  புண்ணிய  தலங்களான  அம்ருதசராஸ் மற்றும் கோவிந்தவால் சென்று வந்த அனுபவங்கள் மனதில் ஓடியது.  1985 ஆம் வருடம் என்று நினைக்கிறேன். சம்பவங்கள் நினைவுக்கு வரும் அளவுக்கு மாதம் தேதிகள் நினைவுக்கு வருவதில்லை. நான் திருச்சியில் பாரத மிகுமின் கொதிகல தொழிற்சாலையில் உள்ள வால்வ் டிவிஷனின் தரக்கட்டுப்பாட்டுப் பிரிவின் பொறுப்பில்  இருந்த காலம்.

       BHEL நிறுவனம்அகில இந்தியாவில்எல்லா  இடங்களிலும் நீக்கமற  நிறைந்திருக்கும்  ஒரு நவரத்னா கம்பெனி. பஞ்சாப் மாநிலத்தில் சில வகை வால்வுகளை  உற்பத்தி செய்ய ஒரு தொழிற்சாலை நிறுவ எண்ணி கோவிந்தவால் என்ற இடத்தைத் தேர்ந்தெடுத்தனர். அதற்கு டெக்னிகல் மற்றும் தரக்கட்டுப்பாடு  சம்பந்தமான விவரங்களை விளக்கவும் ஆலோசனை கூறவும்  BHEL  திருச்சியிலிருந்து  டிசைன் அல்லது உற்பத்திப் பிரிவிலிருந்து பொறுப்புள்ள அதிகாரி ஒருவர் சென்று கோவிந்தவால் தொழிற்சாலை அதிகாரிகளுக்கு விளக்க வேண்டி இருந்தது..அந்த தொழிற்சாலை அப்போது அதன் ஆரம்ப கட்டத்தில் இருந்தது. ஆப்பரேஷன் ப்ளூ ஸ்டார் முடிவுற்று பஞ்சாபே ஒரு கொதிகலன் போல இருந்த நேரம். திருச்சியிலிருந்து அங்கு செல்ல யாரும் துணியவில்லை.டிசைன் மற்றும் மானுபாச்சர்  உடன் நெருங்கிய தொடர்புடைய தரக்கட்டுப்பாடு அதிகாரி யாரையாவது அனுப்பலாம் என்று முடிவு எடுக்கப்பட்டது. தினமும் இருபது முப்பது கொலைகள் நிகழும் பஞ்சாபுக்கு யாரும் போக விரும்பவில்லை. தரக்கட்டுப்பாட்டின் பொறுப்பிலிருந்த என்னிடமும் கேட்கப்பட்டது. நான் சரியென்று ஒப்புக்கொண்டேன்.அதற்கு இரண்டு மூன்று காரணங்கள் இருந்தன. ஒன்று எனக்குப் பல்வேறு இடங்களுக்குப் பயணம் செய்யப் பிடிக்கும். இரண்டாவது என் பொறுப்பை தட்டிக் கழிக்க நான் விரும்பவில்லை. மூன்றாவது எனக்கு ஏதாவது அசம்பாவிதம் நடக்க இருக்கும்t STATISTICAL PROBABILITY அதாவது பஞ்சாப் மாநிலத்தில் 25 லட்சம் பேர் இருக்கிறார்கள் என்றால் அதில் ஒரு நாளில் 25 பேர் தீவிர வாதிகளால் கொல்லப்படுகிறார்கள் என்றால் லட்சத்தில் ஒருவர் சாக வாய்ப்பு என்று அர்த்தம். அந்த லட்சத்தில் ஒருவனாக நான் இருப்பேன் என்பது HIGHLY IMPROBABLE .ஆக  நான் பஞ்சாப் பயணமானேன். 

         வால்வ் தொழிற்சாலை அமைக்கப்பட இருந்த கோவிந்தவால்  அம்ருதசரசிலிருந்து சுமார் அறுபது, எழுபது கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது. பாகிஸ்தான் எல்லையிலிருந்து சுமார் முப்பது  கிலோ மீட்டர். கோவிந்த வாலி   கெஸ்ட் ஹவுஸ்  தயாராக  இல்லாத நிலையில் அம்ருதசரசிலிருந்து தான் .         தினமும் பயணிக்கவேண்டும்  தினமும்  கோவிந்தவால்   தொழிற் சாலை    நிர்வாகி என்னைக் காலையில் ஹோட்டலிலிருந்து பிக் அப் செய்து பணிமுடிந்ததும் மலையில் ஹோட்டலில் விடுவதாக ஏற்பாடு.

          எனக்கு ஓரிரு சீக்கிய நண்பர்கள் உண்டு. என்னுடைய பயிற்சி காலத்தில் இந்தியாவின் எல்லா மாநிலத்தவரிடமும் பரிச்சயம் உண்டு. தமிழ் நாட்டில் அநேகமாக சீக்கியர்களை நாம்  அங்கு மிங்குமாக  ஒன்றிரண்டு   பேரைத் தான்   காண முடியும். நான் அம்ருதசராஸ் சென்றபோது  எங்கு பார்த்தாலும் தலைப்பாகை அணிந்த சர்தார்ஜிகளை கண்டபோது என்னை நானே சற்று வித்தியாசமாக உணர்ந்தேன்.

          முதல் நாள் நான் கோவிந்தவால்  தொழிற்சாலை சீக்கிய  நிர்வாகியுடன்  டாக்சியில் பயணப்பட்டேன். அவரிடம் அங்குள்ள நிலைமை குறித்து விசாரித்தால்அவர்அதிகமாகபேச விரும்பவில்லை. அவருக்கு  என்னைப்  பார்த்து பயம் போல் தோன்றியது. அம்ருதசரசிலிருந்து கோவிந்தவால் போகும் வழியில் தரன் தரன் என்ற ஒரு இடம். தீவிரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்த இடம். அதன் அருகே நாங்கள் சென்றபோது எங்கள் கார் வழி மறிக்கப்பட்டது. பயத்தில் உறைந்து போனேன். கூட வந்த சீக்கிய நிர்வாகி என்னை பயப்படாதிருக்க கூற வண்டியை விட்டு இறங்கினோம் .மூன்று, நான்கு சர்தார்ஜிகள் எங்களை அருகிலிருந்த ஒரு சிறிய குருத்வாராவுக்கு அழைத்துச சென்றனர். அங்கிருந்த லங்காரில் இலவச உணவு அளிக்குமிடம்.) எங்களுக்கு சாப்பிட சப்பாத்தி சப்ஜி கொடுத்து உபசரித்தனர்.அங்கு வைக்கப்பட்டிருந்த ஒரு தாம்பாளம் மாதிரி தெரிந்த ஒரு பாத்திரத்தில் எங்களுக்கு விருப்பமிருந்தால் ஏதாவது பணம் போடலாமென்றார்கள்.என் பாக்கெட்டில் கை விட்டு கிடைத்த (ரூபாய் ஐம்பதோ நூறோ தெரியவில்லை.)பணத்தைப் போட்டேன் .அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அவர்கள் மேல் மதிப்பு சற்றே அதிகமாயிற்று.பார்ப்பதற்கு முரடர்கள் போல் தெரிந்தாலும் வாழ்க்கையில் கொடுமைகளை அதிகம் அனுபவித்தவர்கள் .இந்திய பாகிஸ்தான் பிரிவினையில் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள்.சீக்கிரமாக உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள். யாரையாவது நம்பினால் அடிமை மாதிரி எது வேண்டுமானாலும் செய்வார்கள். உடலுழைப்புக்கு அஞ்சாதவர்கள். வியாபார நுணுக்கங்கள் தெரிந்தவர்கள்.

         ஒருமுறை போபாலில் ஒரு சர்தார்ஜியின் கடையில் என் பிள்ளைகளுக்காக ஆயத்த உடைகள் வாங்க சென்றேன். அன்று காலை தலைமையகத்திலிருந்து என் வேலை நிகழ்ச்சி நிரலில் மாற்றம் கூறி உடனே ட்ராம்பே செல்லப் பணித்திருந்தனர். அதனால் உடை வாங்கி இருக்கும் பணத்தை செலவு செய்ய தயக்கமாயிருந்தது. அந்தக் கடை முதலாளி என்னிடம் பணம் இல்லாவிட்டால் பாதகமில்லை, ஊர் பொய் சேர்ந்தபிறகு அனுப்பிக் கொடுங்கள் போதும் என்று கூறி ,முன்பின் அறியாத என்னிடம் உடைகளைப் பாக் செய்து கொடுத்தார். மனித இயல்பு தெரிந்து பழகுவதில் சர்தார்ஜிக்கள் சிறந்தவர்கள் என்ற எண்ணத்தை என்னிடம்  ஏற்படுத்தினார் அவர்.  பஞ்சாபில் எனக்கு வேண்டி ஏதாவது  செய்வதற்கு வாய்ப்பு தருமாறு வேண்டி வேண்டி உதவியவர்கள்  நிறையப் பேர்.  பஞ்சாபில் பிச்சைக்கார  சர்தார்ஜிகளைப் பார்ப்பதே   மிகவும்  அரிது.

        பஞ்சாப் சென்றபோது அம்ருதசராஸ் பொற்கோவில் காணும் பாக்கியம் கிடைத்தது.ஜாலியன்வாலாபாக் படுகொலை நடந்த இடம் காணும்போது, காந்தி படத்தின் காட்சிகள் நடுவே நான் இருந்ததுபோல் ஒரு உணர்வு ஏற்பட்டது. பொற்கோவிலில் சீக்கியர்களின் அதிகார பீடமான அகல் தக்த் இருக்கிறது. அங்குள்ள ஒரு ஓவிய, பட காலரியில் இருக்கும் படங்களைப் பார்க்கும்போது மனம் பதைக்கிறது. சீக்கியர்களின் தியாகங்களும் உயிர்பளிகளும் கோரமான படங்கள் மூலம் தத்ரூபமாக வெளிப்படுகிறது. அதுதான் அவர்களது உள்ளக் கனலை அணையாது காக்கிறதோ என்னவோ.

         ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். கோவின்தவாலுக்கு ஒரு  தொழிற்சாலை கிடைத்ததில் மகிழ்ந்த அவர்கள் அது சரியாக  சிறப்பாக  நடைபெற ஆலோசனைகள் கூறி வழி நடத்த வந்த என்னிடம் மிகவும்  பவ்யமாகவும் மரியாதையாகவும் நடந்து கொண்டார்கள். கோவிந்தவால் குருத்வாரா சீக்கியர்களின் புண்ணிய தலங்களுள் ஒன்று. அங்கு நான் சென்றபோது (நம்மிடையே பூர்ண கும்ப மரியாதை தருவதுபோல்)அங்கு எனக்கு சிரோப்பா எனப்படும் மஞ்சள் காவியில் தலைப்பாகை துணி தந்து மரியாதை செய்தனர். அதை நான்  இன்னும்  பொக்கிஷமாக  வைத்திருக்கிறேன்.  சீக்கியர்களைப்  பற்றி  எழுதுவதற்கு நிறையவே இருக்கிறது. அதற்காக தனியே ஒரு பதிவு  வேண்டும். GOD WILLING, I WILL DO IT SOMETIME.

Wednesday, July 12, 2023

அவதாரகதை மீனாக

 ----------------------------------------- 

      திருமாலின் அவதாரம் எத்தனை என்று கேட்டால், 
      பத்தென்று கூறிவிடுவான் பத்து வயது பாலகனும
     அவதாரக் கதைகளில் பரிணாமம் பற்றி
     எண்ணியவர் எண்ணிக்கை எவ்வளவோ
     யூகித்துக் கொள்ளும் எண்ணம் இல்லை எனக்கு.


நீர்வாழ் உயிரினமாக மீன் வடிவம் ,பின்
நீர்நில உயிரினம் என்றாகும் ஆமையுருவம்
அதன் பின்னே மண்ணில் வாழ் மிருகம் பன்றி,
உருவமேடுத்தவர் சீறும்  சிங்க முகம் கொண்ட
நரனாக நான்காம் அவதாரம் ,அதன் பின்னெடுத்த
அவதாரங்களும்  பரிணாமத்தின் நிலை மாற்றங்களோ
என்ற என் எண்ணம் சரியோ தவறோ தெளிந்தவனில்லை.


      முதல் மூன்று அவதாரங்களும்  தாத்தா பாட்டி
      கதைகளில் அதிகம் காண்பதில்லை , கதைகளில்
      குழந்தைகள் அதிகம்  ஒன்றாததும்  ஒரு காரணமோ. ?
      அதிகம் கூறப்படாததென்றாலும்அவதாரக் கதைகள்
      அறிந்தே இருக்க வேண்டும் அல்லவா.?

நான்மறைகளுக்கு  உரியவன் நான்முகன் ஆணவம்
அடக்கவும், ,அவன் பறிகொடுத்த மறைகளை
பரிமுக  அரக்கனிடம் இருந்து மீட்கவும்
மீன் உரு எடுத்ததே திருமாலின் ஆதி அவதாரம்.

         ஓர்  ஊழிக்காலம் முடிவடைந்த வேளையில்
         பாம்பணையில் படுத்திருந்த பரந்தாமன்,
         மீண்டும்  உலகை படைக்க  எண்ணி
         முதலில் தன்  நாபிக்கமலத்தில் இருந்து,
         நான்முகனை  படைததெடுத்து நான்மறைகளையும்
         கொடுத்து ,படைக்கும்  தொழிலையும் கற்பித்தார்.

படைக்கும்  தொழிலைப் பாங்குடனே கற்ற  நான்முகனுக்கு,
தான் படைத்து முடித்த உலகையும் உயிரினங்களையும்
கண்டு ,அவனுள்ளே எழுந்ததோர் ஆணவம் ,அதனை
அடக்க அவனையே படைத்த பரந்தாமனும்
காலம் கனியக் காத்திருந்தார்.

         பரிமுகன்  என்ற பேர்கொண்ட அரக்கன், 
         வரம் பல பெற்றவன், வலிமை மிக்கவன்,
         படைக்கும்  தொழிலையும் நான்மறைகளையும் 
          பிரம்மனிடமிருந்து பறிக்கப் பார்த்திருந்தான்  நேரம். 

நான்முகன்  விழித்திருக்கையில் பெற முடியாத 
மறைகளை ,அவன் உறங்கும் ஊழிக்காலத்தில் 
கவர எண்ணிக் காத்திருந்தான்..

            சத்தியவிரதன்  என்றோர் அரசன், 
            நெறி பிறழாது அரசோச்சி வந்தவன், 
            வைகுண்ட வாசனின்  பரம பக்தன் 
            பரந்தாமனின் ஊழிக்கால் திருவிளையாடல் 
            காண விருப்பம் கொண்டே வேண்ட ,அவன் 
            ஆசையை நிறைவேற்றவும், பிரம்மனின் 
            ஆணவம் அடக்கவும் நேரம்  குறித்தான் மகா விஷ்ணு..


ஒருநாள்  காலைக்கடன் கழித்துப்பின், 
ஆற்றுக்கு சென்று நீராடி நீர்க்கடன் ஆற்ற 
கைகளில் அள்ளிய ஆற்று நீரில்  ஒரு மீன் 
இருக்க, அதனை ஆற்றில் விட்டு மீண்டும் 
நீரெடுக்க மீனும் வர வருந்திய அரசனிடம் 
மீனும், " வேண்டாம், நீரில் விட வேண்டாம், 
மீறி விட்டால் பெரிய மீனுக்கு இறையாவேன் , 
என்னை நீர் காத்தருள்வீர்," என வேண்டியது கண்டு 
வியப்படைந்த சத்தியவிரதன் கருணையால் 
கைகள் அள்ளிய நீருடன் மீனையும்  சேர்த்து 
தன கமண்டலத்தில் விட்டான், அதன் பின் 
அவன்  அவனது நீர்க்கடனையும் ஆற்றினான்.

         அரண்மனை மீண்ட அரசன், கமண்டலம் அளவு 
         மீனும் வளர்ந்திருக்கக் கண்டு வியந்து ஒரு 
         தொட்டியில் நீரேற்றி அதனுள் மீனையும் விட்டான். 
         மறுநாள தொட்டியளவு மீன் வளர்ந்தது கண்ட 
         அரசன்  அதனை ஓர் ஏரியில் விட ஏரியளவு 
         வளர்ந்த மீனைக்கண்டு  வியப்பொழிந்து 
          ஐயமும்  அச்சமும் கொண்டான் பின் 
         எழுந்த ஆழ்ந்த சிந்தனை முடிவில் அது, 
         மாலின் திருவிளையாடல் என்று உணர்ந்தான்.

மீனை வணங்கிய  மன்னன் மீனுருவின் 
காரணம் கேட்க, பரந்தாமன் " என் ஊழிக்கால 
திருவிளையாடல் காண விழையும் உன் 
விருப்பத்துடன் மேலும் ஒரு செயல் மீதமுள்ளது..
நான் சொல்வது நன்கு கவனி. இன்றிலிருந்து 
ஏழாம் நாள் கடல் பொங்கி உலகழியும் ; ஏழாம் 
நாள்  படகொன்று அனுப்புகிறேன். மருந்துச் 
செடிகளுடன், விதைகளையும்  எடுத்துப் படகினில் 
ஏற்றிக்கொள். உடன் வர ஏழு முனிவர்களும் இருப்பர்
அவர்தம் ஞான ஒளி வழி காட்டும்.. திமிங்கில வடிவில் 
நான் என் செதில்களில் வாசுகிப் பாம்பினைக் கட்டி, 
உன் படகுடன் பிணைத்துக் கொள்வேன். ஊழிக்காலமாகிய 
நான்முகனின் இரவு முடியும்வரை, படகினை இழுத்துத் 
திரிவேன். என் ஊழிக்காலத் திருவிளையாடல் நீ காணலாம்,"
என்று கூறி மறைந்தார்.

         பரந்தாமன் சொன்னபடி படகுவர, 
         கடல் பொங்கி ஊழிக்காலம் வர 
         நான்முகனும் உறங்கத் துவங்க, வானம் 
         கருத்து, மழை பெய்து உலகைக் கடல் கொண்டது. 

காலம் பார்த்திருந்த பரிமுகன் 
நான்முகன் வாயிலிருந்து  உறக்கத்தில் 
வெளிப்பட்ட நான்மறைகளை கவர்ந்து 
சென்று கடலுக்கடியில் மறைத்து வைத்தான். 

         விழித்தெழுந்த நான்முகன் படைப்புத் 
         தொழிலை துவங்க இயலாது திகைத்து,
        ஆணவம் அடங்கித் திருமாலிடம் 
         மன்னித்து அருள வேண்டினான். 

திருமாலும் மீன் வடிவம் தாங்கி, 
கடலடியில் மறைந்திருந்த பரிமுகனைக் 
கொன்று, நான்கு மறைகளை, நான்கு 
குழந்தைகளாக்கி நான்முகனிடம் சேர்த்தருளினார்.

         நான்முகனும் படைக்கும் தொழில் 
         தொடர, திருமால் முனிவருக்கும் 
        அரசனுக்கும் மூலப் பொருளை 
        உபதேசித்து அருளினார். 

   ( மீன் அவதாரம்  முற்றிற்று.)
-------------------------------------------
 
அவதாரக் கதைகளை தொடர்வதா என்பது  இந்தப்பதிவுக்குக் கிடைக்கும் 
வரவேற்பைப் பொறுத்தது. )

 


----------------------------------------- 
      திருமாலின் அவதாரம் எத்தனை என்று கேட்டால், 
      பத்தென்று கூறிவிடுவான் பத்து வயது பாலகனும
     அவதாரக் கதைகளில் பரிணாமம் பற்றி
     எண்ணியவர் எண்ணிக்கை எவ்வளவோ
     யூகித்துக் கொள்ளும் எண்ணம் இல்லை எனக்கு.


நீர்வாழ் உயிரினமாக மீன் வடிவம் ,பின்
நீர்நில உயிரினம் என்றாகும் ஆமையுருவம்
அதன் பின்னே மண்ணில் வாழ் மிருகம் பன்றி,
உருவமேடுத்தவர் சீறும்  சிங்க முகம் கொண்ட
நரனாக நான்காம் அவதாரம் ,அதன் பின்னெடுத்த
அவதாரங்களும்  பரிணாமத்தின் நிலை மாற்றங்களோ
என்ற என் எண்ணம் சரியோ தவறோ தெளிந்தவனில்லை.


      முதல் மூன்று அவதாரங்களும்  தாத்தா பாட்டி
      கதைகளில் அதிகம் காண்பதில்லை , கதைகளில்
      குழந்தைகள் அதிகம்  ஒன்றாததும்  ஒரு காரணமோ. ?
      அதிகம் கூறப்படாததென்றாலும்அவதாரக் கதைகள்
      அறிந்தே இருக்க வேண்டும் அல்லவா.?

நான்மறைகளுக்கு  உரியவன் நான்முகன் ஆணவம்
அடக்கவும், ,அவன் பறிகொடுத்த மறைகளை
பரிமுக  அரக்கனிடம் இருந்து மீட்கவும்
மீன் உரு எடுத்ததே திருமாலின் ஆதி அவதாரம்.

         ஓர்  ஊழிக்காலம் முடிவடைந்த வேளையில்
         பாம்பணையில் படுத்திருந்த பரந்தாமன்,
         மீண்டும்  உலகை படைக்க  எண்ணி
         முதலில் தன்  நாபிக்கமலத்தில் இருந்து,
         நான்முகனை  படைததெடுத்து நான்மறைகளையும்
         கொடுத்து ,படைக்கும்  தொழிலையும் கற்பித்தார்.

படைக்கும்  தொழிலைப் பாங்குடனே கற்ற  நான்முகனுக்கு,
தான் படைத்து முடித்த உலகையும் உயிரினங்களையும்
கண்டு ,அவனுள்ளே எழுந்ததோர் ஆணவம் ,அதனை
அடக்க அவனையே படைத்த பரந்தாமனும்
காலம் கனியக் காத்திருந்தார்.

         பரிமுகன்  என்ற பேர்கொண்ட அரக்கன், 
         வரம் பல பெற்றவன், வலிமை மிக்கவன்,
         படைக்கும்  தொழிலையும் நான்மறைகளையும் 
          பிரம்மனிடமிருந்து பறிக்கப் பார்த்திருந்தான்  நேரம். 

நான்முகன்  விழித்திருக்கையில் பெற முடியாத 
மறைகளை ,அவன் உறங்கும் ஊழிக்காலத்தில் 
கவர எண்ணிக் காத்திருந்தான்..

            சத்தியவிரதன்  என்றோர் அரசன், 
            நெறி பிறழாது அரசோச்சி வந்தவன், 
            வைகுண்ட வாசனின்  பரம பக்தன் 
            பரந்தாமனின் ஊழிக்கால் திருவிளையாடல் 
            காண விருப்பம் கொண்டே வேண்ட ,அவன் 
            ஆசையை நிறைவேற்றவும், பிரம்மனின் 
            ஆணவம் அடக்கவும் நேரம்  குறித்தான் மகா விஷ்ணு..


ஒருநாள்  காலைக்கடன் கழித்துப்பின், 
ஆற்றுக்கு சென்று நீராடி நீர்க்கடன் ஆற்ற 
கைகளில் அள்ளிய ஆற்று நீரில்  ஒரு மீன் 
இருக்க, அதனை ஆற்றில் விட்டு மீண்டும் 
நீரெடுக்க மீனும் வர வருந்திய அரசனிடம் 
மீனும், " வேண்டாம், நீரில் விட வேண்டாம், 
மீறி விட்டால் பெரிய மீனுக்கு இறையாவேன் , 
என்னை நீர் காத்தருள்வீர்," என வேண்டியது கண்டு 
வியப்படைந்த சத்தியவிரதன் கருணையால் 
கைகள் அள்ளிய நீருடன் மீனையும்  சேர்த்து 
தன கமண்டலத்தில் விட்டான், அதன் பின் 
அவன்  அவனது நீர்க்கடனையும் ஆற்றினான்.

         அரண்மனை மீண்ட அரசன், கமண்டலம் அளவு 
         மீனும் வளர்ந்திருக்கக் கண்டு வியந்து ஒரு 
         தொட்டியில் நீரேற்றி அதனுள் மீனையும் விட்டான். 
         மறுநாள தொட்டியளவு மீன் வளர்ந்தது கண்ட 
         அரசன்  அதனை ஓர் ஏரியில் விட ஏரியளவு 
         வளர்ந்த மீனைக்கண்டு  வியப்பொழிந்து 
          ஐயமும்  அச்சமும் கொண்டான் பின் 
         எழுந்த ஆழ்ந்த சிந்தனை முடிவில் அது, 
         மாலின் திருவிளையாடல் என்று உணர்ந்தான்.

மீனை வணங்கிய  மன்னன் மீனுருவின் 
காரணம் கேட்க, பரந்தாமன் " என் ஊழிக்கால 
திருவிளையாடல் காண விழையும் உன் 
விருப்பத்துடன் மேலும் ஒரு செயல் மீதமுள்ளது..
நான் சொல்வது நன்கு கவனி. இன்றிலிருந்து 
ஏழாம் நாள் கடல் பொங்கி உலகழியும் ; ஏழாம் 
நாள்  படகொன்று அனுப்புகிறேன். மருந்துச் 
செடிகளுடன், விதைகளையும்  எடுத்துப் படகினில் 
ஏற்றிக்கொள். உடன் வர ஏழு முனிவர்களும் இருப்பர்
அவர்தம் ஞான ஒளி வழி காட்டும்.. திமிங்கில வடிவில் 
நான் என் செதில்களில் வாசுகிப் பாம்பினைக் கட்டி, 
உன் படகுடன் பிணைத்துக் கொள்வேன். ஊழிக்காலமாகிய 
நான்முகனின் இரவு முடியும்வரை, படகினை இழுத்துத் 
திரிவேன். என் ஊழிக்காலத் திருவிளையாடல் நீ காணலாம்,"
என்று கூறி மறைந்தார்.

         பரந்தாமன் சொன்னபடி படகுவர, 
         கடல் பொங்கி ஊழிக்காலம் வர 
         நான்முகனும் உறங்கத் துவங்க, வானம் 
         கருத்து, மழை பெய்து உலகைக் கடல் கொண்டது. 

காலம் பார்த்திருந்த பரிமுகன் 
நான்முகன் வாயிலிருந்து  உறக்கத்தில் 
வெளிப்பட்ட நான்மறைகளை கவர்ந்து 
சென்று கடலுக்கடியில் மறைத்து வைத்தான். 

         விழித்தெழுந்த நான்முகன் படைப்புத் 
         தொழிலை துவங்க இயலாது திகைத்து,
        ஆணவம் அடங்கித் திருமாலிடம் 
         மன்னித்து அருள வேண்டினான். 

திருமாலும் மீன் வடிவம் தாங்கி, 
கடலடியில் மறைந்திருந்த பரிமுகனைக் 
கொன்று, நான்கு மறைகளை, நான்கு 
குழந்தைகளாக்கி நான்முகனிடம் சேர்த்தருளினார்.

         நான்முகனும் படைக்கும் தொழில் 
         தொடர, திருமால் முனிவருக்கும் 
        அரசனுக்கும் மூலப் பொருளை 
        உபதேசித்து அருளினார். 

   ( மீன் அவதாரம்  முற்றிற்று.)
-------------------------------------------
 
அவதாரக் கதைகளை தொடர்வதா என்பது  இந்தப்பதிவுக்குக் கிடைக்கும் 
வரவேற்பைப் பொறுத்தது. )

  

அவதாரக் கதைகள் பாகம்----1

அவதாரக் கதைகள்......மீ-னாக
      திருமாலின் அவதாரம் எத்தனை என்று கேட்டால், 
      பத்தென்று கூறிவிடுவான் பத்து வயது பாலகனும
     அவதாரக் கதைகளில் பரிணாமம் பற்றி
     எண்ணியவர் எண்ணிக்கை எவ்வளவோ
     யூகித்துக் கொள்ளும் எண்ணம் இல்லை எனக்கு.


நீர்வாழ் உயிரினமாக மீன் வடிவம் ,பின்
நீர்நில உயிரினம் என்றாகும் ஆமையுருவம்
அதன் பின்னே மண்ணில் வாழ் மிருகம் பன்றி,
உருவமேடுத்தவர் சீறும்  சிங்க முகம் கொண்ட
நரனாக நான்காம் அவதாரம் ,அதன் பின்னெடுத்த
அவதாரங்களும்  பரிணாமத்தின் நிலை மாற்றங்களோ
என்ற என் எண்ணம் சரியோ தவறோ தெளிந்தவனில்லை.


      முதல் மூன்று அவதாரங்களும்  தாத்தா பாட்டி
      கதைகளில் அதிகம் காண்பதில்லை , கதைகளில்
      குழந்தைகள் அதிகம்  ஒன்றாததும்  ஒரு காரணமோ. ?
      அதிகம் கூறப்படாததென்றாலும்அவதாரக் கதைகள்
      அறிந்தே இருக்க வேண்டும் அல்லவா.?

நான்மறைகளுக்கு  உரியவன் நான்முகன் ஆணவம்
அடக்கவும், ,அவன் பறிகொடுத்த மறைகளை
பரிமுக  அரக்கனிடம் இருந்து மீட்கவும்
மீன் உரு எடுத்ததே திருமாலின் ஆதி அவதாரம்.

         ஓர்  ஊழிக்காலம் முடிவடைந்த வேளையில்
         பாம்பணையில் படுத்திருந்த பரந்தாமன்,
         மீண்டும்  உலகை படைக்க  எண்ணி
         முதலில் தன்  நாபிக்கமலத்தில் இருந்து,
         நான்முகனை  படைததெடுத்து நான்மறைகளையும்
         கொடுத்து ,படைக்கும்  தொழிலையும் கற்பித்தார்.

படைக்கும்  தொழிலைப் பாங்குடனே கற்ற  நான்முகனுக்கு,
தான் படைத்து முடித்த உலகையும் உயிரினங்களையும்
கண்டு ,அவனுள்ளே எழுந்ததோர் ஆணவம் ,அதனை
அடக்க அவனையே படைத்த பரந்தாமனும்
காலம் கனியக் காத்திருந்தார்.

         பரிமுகன்  என்ற பேர்கொண்ட அரக்கன், 
         வரம் பல பெற்றவன், வலிமை மிக்கவன்,
         படைக்கும்  தொழிலையும் நான்மறைகளையும் 
          பிரம்மனிடமிருந்து பறிக்கப் பார்த்திருந்தான்  நேரம். 

நான்முகன்  விழித்திருக்கையில் பெற முடியாத 
மறைகளை ,அவன் உறங்கும் ஊழிக்காலத்தில் 
கவர எண்ணிக் காத்திருந்தான்..

            சத்தியவிரதன்  என்றோர் அரசன், 
            நெறி பிறழாது அரசோச்சி வந்தவன், 
            வைகுண்ட வாசனின்  பரம பக்தன் 
            பரந்தாமனின் ஊழிக்கால் திருவிளையாடல் 
            காண விருப்பம் கொண்டே வேண்ட ,அவன் 
            ஆசையை நிறைவேற்றவும், பிரம்மனின் 
            ஆணவம் அடக்கவும் நேரம்  குறித்தான் மகா விஷ்ணு..


ஒருநாள்  காலைக்கடன் கழித்துப்பின், 
ஆற்றுக்கு சென்று நீராடி நீர்க்கடன் ஆற்ற 
கைகளில் அள்ளிய ஆற்று நீரில்  ஒரு மீன் 
இருக்க, அதனை ஆற்றில் விட்டு மீண்டும் 
நீரெடுக்க மீனும் வர வருந்திய அரசனிடம் 
மீனும், " வேண்டாம், நீரில் விட வேண்டாம், 
மீறி விட்டால் பெரிய மீனுக்கு இறையாவேன் , 
என்னை நீர் காத்தருள்வீர்," என வேண்டியது கண்டு 
வியப்படைந்த சத்தியவிரதன் கருணையால் 
கைகள் அள்ளிய நீருடன் மீனையும்  சேர்த்து 
தன கமண்டலத்தில் விட்டான், அதன் பின் 
அவன்  அவனது நீர்க்கடனையும் ஆற்றினான்.

         அரண்மனை மீண்ட அரசன், கமண்டலம் அளவு 
         மீனும் வளர்ந்திருக்கக் கண்டு வியந்து ஒரு 
         தொட்டியில் நீரேற்றி அதனுள் மீனையும் விட்டான். 
         மறுநாள தொட்டியளவு மீன் வளர்ந்தது கண்ட 
         அரசன்  அதனை ஓர் ஏரியில் விட ஏரியளவு 
         வளர்ந்த மீனைக்கண்டு  வியப்பொழிந்து 
          ஐயமும்  அச்சமும் கொண்டான் பின் 
         எழுந்த ஆழ்ந்த சிந்தனை முடிவில் அது, 
         மாலின் திருவிளையாடல் என்று உணர்ந்தான்.

மீனை வணங்கிய  மன்னன் மீனுருவின் 
காரணம் கேட்க, பரந்தாமன் " என் ஊழிக்கால 
திருவிளையாடல் காண விழையும் உன் 
விருப்பத்துடன் மேலும் ஒரு செயல் மீதமுள்ளது..
நான் சொல்வது நன்கு கவனி. இன்றிலிருந்து 
ஏழாம் நாள் கடல் பொங்கி உலகழியும் ; ஏழாம் 
நாள்  படகொன்று அனுப்புகிறேன். மருந்துச் 
செடிகளுடன், விதைகளையும்  எடுத்துப் படகினில் 
ஏற்றிக்கொள். உடன் வர ஏழு முனிவர்களும் இருப்பர்
அவர்தம் ஞான ஒளி வழி காட்டும்.. திமிங்கில வடிவில் 
நான் என் செதில்களில் வாசுகிப் பாம்பினைக் கட்டி, 
உன் படகுடன் பிணைத்துக் கொள்வேன். ஊழிக்காலமாகிய 
நான்முகனின் இரவு முடியும்வரை, படகினை இழுத்துத் 
திரிவேன். என் ஊழிக்காலத் திருவிளையாடல் நீ காணலாம்,"
என்று கூறி மறைந்தார்.

         பரந்தாமன் சொன்னபடி படகுவர, 
         கடல் பொங்கி ஊழிக்காலம் வர 
         நான்முகனும் உறங்கத் துவங்க, வானம் 
         கருத்து, மழை பெய்து உலகைக் கடல் கொண்டது. 

காலம் பார்த்திருந்த பரிமுகன் 
நான்முகன் வாயிலிருந்து  உறக்கத்தில் 
வெளிப்பட்ட நான்மறைகளை கவர்ந்து 
சென்று கடலுக்கடியில் மறைத்து வைத்தான். 

         விழித்தெழுந்த நான்முகன் படைப்புத் 
         தொழிலை துவங்க இயலாது திகைத்து,
        ஆணவம் அடங்கித் திருமாலிடம் 
         மன்னித்து அருள வேண்டினான். 

திருமாலும் மீன் வடிவம் தாங்கி, 
கடலடியில் மறைந்திருந்த பரிமுகனைக் 
கொன்று, நான்கு மறைகளை, நான்கு 
குழந்தைகளாக்கி நான்முகனிடம் சேர்த்தருளினார்.

         நான்முகனும் படைக்கும் தொழில் 
         தொடர, திருமால் முனிவருக்கும் 
        அரசனுக்கும் மூலப் பொருளை 
        உபதேசித்து அருளினார். 

   ( மீன் அவதாரம்  முற்றிற்று.)
-------------------------------------------


 Tuesday, July 4, 2023

மனசே ரிலாக்ஸ்

 

UNDAY, DECEMBER 19, 2010

மனசே ரிலாக்ஸ், உடலே ரிலாக்ஸ்

மனசே   ரிலாக்ஸ், உடலே  ரிலாக்ஸ்
------------------------------------------------------
        தற்போது   நிலவி  வரும்  வாழ்க்கை  முறையில்  உடலும்  உள்ளமும் இறுக்கமாக    (Tension) இருப்பது அனைவராலும்  உணரப்படுவதே.  அது உடலுக்கும்  உள்ளத்திற்கும்  நல்லதல்ல..சரி. இதை  ஓரளவேனும்  தவிர்க்க  வேண்டாமா.? இதோ  என்னுடைய  டிப்ஸ் .உபயோகித்துப்  பலன்  பெற்றது. யான் பெற்ற  பேறு  பெருக  இவ்வையகம் ,என்றபடி  உங்களிடம்  பகிர்ந்து  கொள்ளுகிறேன்.
 
        இந்தப் பயிற்சியை  செய்ய  நேரம்  காலம் எதுவும்  பார்க்கத்  தேவையில்லை   எப்போதெல்லாம் இறுக்கத்தைத்   தளர்த்த  வேண்டுமோ அப்போதெல்லாம் செய்யலாம் .

      முதலில்   மனசின்   டென்ஷனைக் குறைக்க:  - நாம்  மன இறுக்கமாக   இருப்பது  நமக்கு  நன்றாகத்  தெரியும். அப்போது  நாம்  செய்ய  வேண்டிய  பயிற்சி.:- பயிற்சி   என்று  ஒன்றுமில்லை.  நாம் மூச்சு  விடுவதை  உணர  வேண்டும். சுவாசிக்கும்போது  காற்றை  உள்ளிழுத்து  வெளிவிடுவது  நாம் உணராமல்  அணிச்சையாக  நிகழ்வது. இந்தப் பயிற்சிப்படி , நாம் சுவாசிப்பதை  நாம் உணர வேண்டும்.  நாம் மூச்சுக்  காற்றை  உள்ளே  இழுக்கிறோம்   மூச்சுக் காற்றை  வெள்யே  விடுகிறோம்  என்னும் அனிச்சைச் செயலாக  இல்லாமல்  நம் கவனம்  அதில்  பதியவேண்டும்.. வேறு  எதைப் பற்றியும்  சிந்திக்காதீர்கள். இப்படித்  தொடர்ந்து  மூன்று, நான்கு  நிமிடங்களுக்கு
செய்தால் டென்ஷன்  குறைவதை  நாமே  உணர முடியும். அனிச்சையாக  சுவாசிப்பதை   உணர்ந்து சுவாசியுங்கள்.

       இதையே   கொஞ்சம்  தீவிரமாகச்  செய்தால்  அதன் பெயர்  தியானம்.  தியானம்  செய்யும்போது  " ஏதோ ஒரு பொருளின்  மீது  நம் கவனத்தைச்  செலுத்தி, அந்தப்  பொருளை  நம் புருவங்களுக்கு   மத்தியில் அமரச் செய்ய முயலுங்கள்; அது  ஒரு விளக்கின்  ஒளியாக  இருக்கலாம், உடலின் உயிர்ச் சக்தியாக  இருக்கலாம், இல்லை  நாம்  வழிபடும்  கடவுளர்களின்  உருவமாக  இருக்கலாம்" என்றெல்லாம்  கூறுவார்கள்.
ஆனால்  இதையெல்லாம்  செய்யும்போது  கவனச் சிதறல்கள்  ஏற்பட்டு  தொடர்ந்து   செய்வது  தடையாக   இருக்கும்.. நான் கூறும்  பயிற்சியில்  இது ஏதும் இல்லை. நான்   சுவாசிக்கிறேன் ,நான் சுவாசிக்கிறேன் என்று உணர்ந்து செய்யுங்கள் என்றே
கூறுகிறேன்.. சுவாசத்தை  உணர  நேரம் காலம் தேவை இல்லை.

     அடுத்து  உடலின்  டென்ஷனைக் குறைக்க:- உடல் இறுக்கம்  மன இறுக்கத்தால்  வருவது. மன இறுக்கம்  குறைக்க மேலே வழி கூறி உள்ளேன். உடல்  சோர்வுற்று   இருக்கும்போது  அதனை சற்றே  தளரச் செய்தால் புத்துணர்வு  கிடைக்கும்.  அதற்கும்   ஒரு பயிற்சி  கூறுகிறேன்.

        ஒரு நாற்காலியில்  சௌகரியமாக  உட்கார்ந்து கொள்ளுங்கள். இல்லையென்றால்
மலர்ந்து  படுத்துக்கொள்ளுங்கள். கண்களை  மூடிக் கொள்ளுங்கள். கண்களை  மூடச்  சொல்வது  கவனச் சிதறல்களைக்  குறைக்க. இப்போது  உங்கள்  கவனம்   உங்கள்   பாதங்களில்  இருக்கட்டும்.  என் கவனம் என்  பாதங்களில்   உள்ளது  என்று உங்களையே  தயார்ப் படுத்திக்கொள்ளுங்கள் . என் பாதங்கள்  இறுக்கம்   குறைந்து   தளர்வாக  உள்ளது என்று உங்களுக்கு நீங்களே  கூறிக் கொண்டு   ( Auto suggestion  )
பாதங்கள்  தளர்வாவதை  உணருங்கள்.  பாதங்கள் தளர்வாகிவிட்ட நிலையில்  அடுத்து
உங்கள் கால் முட்டிப் பகுதிக்கு  உங்கள் கவனத்தை  செலுத்துங்கள் .அதே  முறையில்
உங்கள் கால்முட்டி தளர்வாக உள்ளது. இறுக்கம்  குறைகிறது என்று மறுபடியும்  உங்களுக்கு  நீங்களே   உறுதி படுத்திக்கொள்ளுங்கள். பாதங்கள், கால்முட்டி, முடிந்து
உங்கள்  தொடைப்பகுதி, இடுப்பு , வயிறு, மார்பு, கைகள், தோள், கழுத்து  என்று ஒவ்வொரு  உறுப்பாக, அதில்  கவனம் செலுத்தி இறுக்கம்  குறைக்க  எண்ணி,  உங்களை  நீங்களே  ஆட்டோ  சஜெச்சன்  முறையில்  டென்ஷனைக்  குறைக்கலாம்.   இந்தப்  பயிற்சியின்  தொடக்கத்தில்  டென்ஷன்  குறைய  பதினைந்து   நிமிடங்கள்   ஆகலாம்.  தேர்ச்சி  பெற்று  விட்டால்  ஐந்து  முதல்  எட்டு  நிமிடங்களுக்குள்  உடல்   ரிலாக்ஸ்  ஆவதை  உணர்வீர்கள்.

         இதன்  கூடவே   நான் பகிர்ந்து  கொள்ள  விரும்புவது, நம்  உணவைப்  பற்றி.  உணவைப்  பற்றி என்றால்  ஏதோ  சமச்சீர்  உணவு  பற்றியல்ல.  எந்த  உணவு  சாப்பிடுவதாயிருந்தாலும் , நாம்  இன்னும்  கொஞ்சம்  சாப்பிடலாம்  என்ற  எண்ணம்  வரும்போதே  நாம் சாப்பிடுவதை  நிறுத்திவிட  வேண்டும். அதாவது  நாம்  உண்ட  பிறகு  நம்  வயிற்றில்   70%  உணவும் 20% நீரும்  மீதி  காற்றாகவும்  இருக்கவேண்டும்.
         அன்பு  மனைவியோ  உறவினர்களோ   உங்கள்  மீது  அதிக  அக்கறை  கொண்டு   உணவு   பரிமாற வரும்போது, நீங்கள்  செய்ய  வேண்டிய  பயிற்சி , ஒரு முறை  மேலும்  கீழும்  தலையை  ஆட்டினால்  மூன்று  அல்லது  நான்கு  முறை தலையை   இடமும்   வலமுமாக  ஆட்டவும். இந்தப்   பயிற்சி  மிக  முக்கியமானது. யாரோ  பெரியவர்கள்   கூறியதாக  நினைவு. " உண்டி  சுருங்கு ' என்று.  அதற்கு  இது  உதவும்.
---------