Friday, September 24, 2021

தொடரும் நினைவுகள்


 an exotic bird

 

                       

 கோவை அருகே இருக்கும்  பேரூர் போய் இருக்கிறீர்களா நான் சென்று வந்தது பற்றியது தான் இப்பதிவு 1950 களின்  துவக்க்சத்தில்நான்  பேரூர் சென்றது நினைவில்அது நினைவில் வரக்காரணம்  நான் முக்காலுக்கும்  அதிக தூரத்தை ஓடியே கடந்தேன்

என்பெரிய அண்ணா சைக்கிளில் என்னை கூட்டிப்போவதாக ஏற்பாடு  அப்போதெல்லாம் சைக்கிளில் டபிள்ஸ் போவது சட்டப்படி குற்றம் நான்சைகிளில் எறி உட்காருவேன்தூரத்தே எங்கோ போலிஸ்தலை தெரியும்  என்னை அண்ணா இற்ங்கச்சொல்வார் அவர் போவார் நா ஓடுவேன்  இப்படி ஓடியே பேரூர் சென்றோம்

தாடகையை எதிர்நோக்கி 

என் பேரனுக்கு  சிரு வயதில் கதைகள் சோல்வதுண்டு ராமாயந்த்தில்  அவனுக்கு அதிகம்விருப்பம் ஒரு முறை நாங்கள் மருதமலைக்கு  காரில் பயணப்பட்டோம் மலை ஏறும் போது  ஏன் பேரன் டென்ஸாக இருந்தான் அவனிடம் பேச்சுக்  கொடுத்தபோதுதெரிந்தது அவன் தாடகையை எதிர் நோக்கி இருந்தான் மலை.களை சுற்றிலு ம்கண்ட அவன்  தாடகை  ஏதோ  மலை முகட்டில்  இருந்து கர்ஜனை  செய்வாள் என்று நம்பினான்   




Sunday, September 19, 2021

மீண்டும் நினைவுகள்

 

 

83 வயதாகும் எனக்குகற்பனையை விட  நிஜமே சொல்ல வருகிறதுஅவை ஏராளமக இருக்கும்போது எதற்கு கற்பனையின் துணை நாடவேண்டும் 1946ம் வருஷம் என்று  நினைவு  அப்போது அரக்கோணத்தில் இருந்தோம்திரைப்ப்ப்டங்கள் பலவும் டெண்ட் கொட்டைகையில் பார்த்ட நேரம் வீட்டின்  அருகே டெண்ட் கொட்டக்சை ருந்தததால் படங்களை பார்த்ததை விட கேட்டதே அதிகம்கொட்டகையி சுற்றி காவல் இருப்ப ர்

ஒரு முறை என் தம்பி காவலர்களுக்கு      
 
டிமிக்கி கொடுத்து உள்ளே போய்விட்டான்   அவனைக்காணாமல்என் பெற்றோருக்கு கவலை ஆகிவிட்டது எனக்கு தெரியும் அவன் கொட்டகை உள்ளே இருக்கிறான் என்று ஆனால் ஊர்ஜிதம்செய்ய முடிய வில்லை என் சின்ன அண்ணா  தான் பார்த்துவருகிறேன் ந்று கிளம்பினான்ஆனால் அவனை உள்ளே விடவில்லை கதை சொல்லி  உள்ளே நுழையும் திட்டம்என்றுதடுத்தனர்காவலர் என்சின்ன அண்ணவும் சளைக்காமழ்ல் கெட்டு பார்த்தார் கடைசியில்தன் சொக்காயை பணையமாக வைத்து உள்ளெ போய்  தமியை மீட்டு வந்தார்அப்போது அவர் என்  கண்களுக்கு ஒரு ஹிரோவாகத் தெரிந்தார்

நான் அப்போது  எச் ஏ எல்லில் இருந்தேன்நண்பர் ஒருவர்  இனிப்பு கொடுத்துக் கொண்டி ருந்தர்ர் அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்ததற்குதன் சந்தோஷத்தை பகிர்ந்துகொண்டிருந்தார் ஆண்குழந்தை செக்கச் சேவேலென்று  வெள்ளைக் காரன் போலவேஇருக்க்றது தென்று சொல்லி மாள வில்லை ஒரு சமயம்  நண்பரை கண்டித்தனர் ‘”சும்மா சொல்லாதே ஐயா குழந்த்தை உனக்குப் பிறந்ததா என்றுசந்தேக்ம்  வ்ருது என்று கூறியதும் அதன்   அர்த்தம் புரிந்ததும்ம்  கொல் என்னும் சிரிப்பு எழுந்த்து

 

போர் முழக்கம்

நான்மூன்றாம் வ்குப்பில் ப்டித்த நினைவு  நாந்தான் முதல் இரண்டு வகுப்புகள் படிக்கவே இல்லையே அப்போது ப்டிததது

ஒன்றிரண்டு ஒன்றிரண்டு என்றே ஏகுவோம்

என்றுமென்றும்  வெற்றீ   பெற்று நாங்கள் மீளுவோம்

கொடிய பகைவர் குலை நடுங்க கொற்ற்ம்வீழ்த்துவோம்

நெடிய வாள்கள் பளபளவெஅ  நெருங்கி தாக்குவோம்

வந்தோம் வந்தொமென்று சொல்லி  விறைந்து தாக்குவோம்  

அதற்கு மேல் ந்னைவில்லை    

                       

 

 
       

 

 

 

Friday, September 10, 2021

நினைவுகள்

 

 

நினைவுகள்

 

1971ம் வருடம்  என் ஐந்து வயது மகனுடன்  சோட்டானிக்கரை பகவ்தி கோவீலுக்கு சென்றிருந்தேன்  மாலை சுமார் ஆறரை இருக்கும் ப்கவதிக்கு  தீபாராதனைகாட்டும்போது

என் அருகிலிருந்த ஒருவர்  பக்கவாட்டி ல்நடக்க ஆரம்பித்த்தார் மெல்ல ஆரம்பிட்தவர் வேகம்   அதிகரித்து  துரித கதி  அடைந்தது நான் பயந்து வ்ட்டேன்   மன நிலை சரியில்லாதவர் என்று பிறகு  புரிந்தது சோட்டானிக்கரிகோவிஎன்றாலலேயேஅதுதான் நினைவுக்கு வரும்

ஸ்ரீ லலிதாம்பிகை கோவில் திருமியச்சூரில் இருக்கிறது அங்கு ஒரு முறைசென்றபோது  

கோவில் முடியிருந்தது கொவில்அக்கிர கார்த்தில் ஒரு வீட்டில் கோவில்திதிற்க்கும் வரை அமர்ந்து பேசிக்கொண்டிருக்கலாம் என்றார்என் மனைவிக்கு ஆர்வமஅதிகரிக்கபெரியவர்  ஓயாமல் என்னவெல்லாமோ  சொல்லிக் கொண்டிருந்தார் அதில் ஒரு விஷயம் என்னில்தங்கியது

ஓம் யஹ சக்தி

ஓம் சாந்தநாயகி அபயம்

தினம் சொன்னால்நலமே பயக்கும் என்றார்  அது என்னவோ மனதில்ப்திந்து விட்டது 

 

இன்று பாரதியின் நினைவு நாள்  ஒரு மீள் பதிவு

 

ஆசை முகம் மறந்து போச்சே- இதை யாரிடம் சொல்வேனடி தோழி

நேசம் மறக்கவில்லை நெஞ்சம்-எனில் நினைவு முகம் மறக்கலாமோ

“வெண்ணிலவு நீ எனக்கு, மேவுகடல் நானுனக்கு

பண்ணின் சுதி நீஎனக்கு, பாட்டினிமை நானுனக்கு

என் காதலியும் நானும் பாடிக்கொண்டிருந்தோம் (கனவில்தான்) ஒரு புகை மண்டலம் எழுந்தது. அதில் நிழல் போல் ஒரு உருவத்தின் பிரதி பலிப்பு தெரிந்தது. பாரதி போல் தெரிகிறதே.

“ வாரும் ஐயா, முண்டாசுக் கவிஞரே. . இன்று உன் நினைவு நாள். எங்களை அறியாமல் உம் பாட்டை முணு முணுத்துக் கொண்டிருந்தோம், உம்மிடம் சற்று உரையாட வேண்டும் . சௌகரியப்படுமா.?

என் பாட்டைப் பாடியே என்னை வரவழைத்து விட்டு சௌகரியப் படுமா என்று கேட்பதே சரியில்லையே.

உம் பாட்டைப் பாடினால் நீர் வந்து விடுவீரோ.?

“ ஸ்ரீராமனின் நாம ஜெபம் நடக்கும் இடத்தில் எல்லாம் அனுமன் வந்திருப்பானாம். அது போல் என் பாட்டை ரசித்துப் பாடும் இடத்தில் நான் பிரத்தியட்சமாகி விடுவேன். இதை எல்லோரிடமும் கூறி விடாதே. பிறகு அவனவன் பாடத்துவங்கி விட்டால் என்னால் எல்லா இடத்துக்கும் போக முடியாது

கவிஞரே, உம்மிடம் சில கேள்விகள் கேட்க வேண்டும் பதில் சொல்வீர்களா.?

“அது நீ கேட்கும் கேள்வியைப் பொறுத்தது

“ஐயா நீர் மறைந்தது 1921-ஆம் ஆண்டு. நாம அரசியல் சுதந்திரம் அடைந்தது 1947-ல். ஆனால் அதற்கும் முன்பே உன் வாழ் நாளிலேயே ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே என்று பாடினீர்களே அது எப்படி.

“நான் மனசளவில் அப்போதே சுதந்திரம் பெற்று விட்டதாகக் கருதினேன்

மன்னிக்க வேண்டும் ஐயா. நீர் பெற்ற சுதந்திரத்தில் ‘பார்ப்பானை ஐயரென்ற காலம் போயிருக்கலாம் . வெள்ளைப் பரங்கியரை துரை என்ற காலமும் போயிருக்கலாம் ஆனால் பிற கருத்துக்கள் எல்லாமே வெறும் கருத்தாகவே கனவாகவே இருக்கிறதே.காலத்தை வென்றவன் கவிதை கதையாகிப் போய்விட்டதே. உம் நெஞ்சு பொறுக்கவில்லையா

“ஏன் .. சுதந்திர நாளில் எங்கும் சுதந்திரம் என்று பேசவில்லையா.? எல்லோரும் சமம் என்று சொல்லவில்லையா.? நாமிருக்கும் நாடு நமதென்று அறிய வில்லையா? அது நமக்கே உரிமை என்று கூறவில்லையா?

“கவிஞரே உணர்ச்சி வசப்படாமல் கேளுங்கள். மேலோட்டமாக சரிபோல் தோன்றினாலும் உண்மை நிலை வேறு என்று உங்களுக்கே தெரியும். எல்லோரும் ஒன்றென்னுங் காலம் வந்ததா, எல்லோரும் சமம் என்னும் நினைப்பு வந்ததா.?நல்லோர் பெரியோர் எனும் காலம் வந்ததா, , நயவஞ்சகக் காரருக்கு நாசம் வந்ததா.? பாரதியே உம்மை சங்கடப் படுத்த அல்ல இந்தக் கேள்விகள். உமது எண்ணங்களின் வெளிப்பாடே அக்கவிதைகள் என்று எனக்குத் தெரியும். இருந்தாலும் நான் சொல்வது என் ஆற்றாமையின் வெளிப்பாடு என்று உங்களுக்கும் தெரிய வேண்டும்.

 

விடுதலைப் பாட்டு பாடினீர்கள் பறையருக்கும் இங்கு தீய புலையருக்கும் விடுதலை என்றீர்கள். திறமை கொண்ட தீமை அற்ற  தொழில் புரிந்து யாவரும் தேர்ந்த கல்வி ஞானமெய்தி வாழ்வமிந்த நாட்டிலே. எவ்வளவு அருமையான  சிந்தனையின் வெளிப்பாடு. கவிஞரே இதெல்லாமே இன்னும் வெறும் கனவாகத்தானே இருக்கிறது.பெயரளவில் நடந்து விட்டது போலும் நடந்து கொண்டிருப்பது போலும் தோன்றும் கானல் அல்லவா உண்மை நிலை.

“நல்ல எழுச்சி மிக்க வரிகள் மக்களை உசுப்பேற்றி நல்ல வழிவகைக்கு அடிகோலும் என்று கண்ட கனவு வரிகள் அல்லவா அவை

முற்றிலும் உண்மை ஐயா..இருந்தாலும் நீங்கள் பாடிய பல வரிகள் பலவற்றில் நான் மிகவும் ரசித்தை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்

“நீ ரசித்ததென்றால் ஏதேனும் சாரம் இருக்குமே. சொல். தெரிந்து கொள்ள விழைகிறேன்

“ மரணத்தை வெல்லும் வழி என்னும் பாடலில் ‘முன்னோர்கள் எவ்வுயிரும் கடவுளென்றார். முடிவாக அவ்வுரையை நான் மேற்கொண்டேன்;அன்னோர்க

ளுரைத்த தன்றிச் செய்கையில்லை.அத்வைத நிலை கண்டால் மரணமுண்டோ?

 

முன்னோர்களுரைத்த பல சித்தரெல்லாம் முடிந்திட்டார், மடிந்திட்டார், மண்ணாய் விட்டார்.

பொந்திலேயுள்ளாராம், வனத்திலெங்கோ புதர்களிலே இருப்பாராம், பொதியை மீதே சந்திலே, சவுத்தியிலே நிழலைப் போலே சற்றே யங்கங்கே தென் படுகின்றாராம்.. நொந்த புண்ணைக் குத்துவதில் பயனொன்றில்லை..நோவாலே மடிந்திட்டான் புத்தன்; கண்டீர் அந்தணனாம்  சங்கராச்சாரியன் மாண்டான்;அதற்கடுத்த இராமானுஜனும் போனான்;சிலுவையிலே அடியுண்டு யேசு செத்தான்; தீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான்;பலர் புகழும் ராமனுமே ஆற்றில் வீழ்ந்தான்;பார் மீது நான் சாகாதிருப்பேன் , காண்பீர்.! மலிவு கண்டீரிவ்வுண்மை, பொய் கூறேன் யான், மடிந்தாலும் பொய் கூறேன் மானுடர்க்கே,நலிவுமில்லை, சாவுமில்லை, கேளீர், கேளீர், நாணத்தைக் கவலையினை சினத்தைப் பொய்யை அச்சத்தை வேட்கைதனை அழித்துவிட்டால் அப்போது சாவுமங்கே அழிந்து போகும் “

“ஆம், ஆம், நான் எழுதியது தான்

 

” ஒரு சந்தேகம் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் குணாதிசயங்களை அழித்தவரா நீங்கள் , இந்த கால கட்டத்தில் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. வேடிக்கை மனிதர் போல் வீழ்வேனென்று நினைத்தாயோ என்று கேட்ட நீங்களும் வீழ்ந்து பட்டாலும் உங்கள் கவிதை வரிகளால் சாகாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். இன்று உங்கள் உடலம் வீழ்ந்து பட்ட நாள். இருப்பினும் உங்கள் பாடல் வரிகளால் நிறைந்து எங்கும் இருக்கிறீர்கள். மன்னித்துக் கொள்ளுங்கள் . நாங்கள் பாடலைத் தொடர விரும்புகிறோம்

 கண்ணில் தெரியுதொரு தோற்றம் அதில் கண்ணன் அழகு முழுதில்லை, நண்ணுமுக வடிவு காணில் அந்த நல்ல மலர்ச் சிரிப்பைக் காணோம்.....  “ 





 

 
       

 

 

 

 

 

 

 

 

 

Monday, September 6, 2021

மீண்டும் அப்ஸ்ட்ராக்ட் டாக

 

மீண்டும்அப்ஸ்ராக்ட்டாக

 

தாய் தந்தையைக் காட்டுகிறென்

தட்டானே கல்லைத் தூக்கு

என்றே நைச்சியம் பேசும் சிறுமி

தன்சொல் கேட்கும் த்ட்டான்பிடிமானம்  வேண்டி

கல்லைத் தூக்க தன் சொல் கேட்டு கல் தூக்குகிறது

என மகிழ சிறுமிஇடம் இருந்து தட்டானைக்

 

  காக்க
எம்பி  எம்பித்  துரத்தும்
ஐந்தே   வயசுப்  பாலகன்.

எப்படியும்   [பிடிக்க    வேண்டும்
என்ற  முனைப்பில்
தடுக்க   வந்த   தம்பியை
அடித்து   விடுகிறாள்   அக்கா.

அவனும்   ஆற்றாமையால்   கூவுகிறான்,  
   
கல்  தூக்க  வைத்து  பின்அதன்  இறகைப் பிய்ப்பாளோ.?
பாவம் தட்டான்    கடவுளே நீ அதை காப்பாற்று

 

பிறிதொரு நாள், குறும்பு  செய்த  பிள்ளையை
கூடத்தின்   ஓரத்தில்  நிற்க  வைக்க,
நில்லாமல்   ஓடிப்போனவனைப்   பிடித்து
ஓரடி  அடித்தாள்   அவன்  தாய்.

சிறிது   நேரம்   அழுது   ஓய்ந்தவன்
மாடியின்  மேலேறி வானம்  பார்த்து
வேண்டிக்கொண்டான்,
"
தட்டானை   காத்த   கடவுளே,
என்னையும்   இவர்களிடமிருந்து   காப்பாற்று.!"

 

ஒரு விளம்பரத்தின்  எவொலுஷன்

பேரெனன லல்லி

 ஃபேர் அண்ட் லவ்லி

  பிறகு

க்ளொ அண்ட் லொவ்லி ஆயிற்று

 

உங்களுக்கு துஷ்யந்த் ஸ்ரீதரைத் தெர்யுமா

இளம் வ்யது ஞானி 

காலைஎட்டரை மணீக்கு ஷங்கரா தொலைக்காட்சியில் மஹா பாரதம் பற்றி  சொற்பொழி வாற்றுகிறார் அப்படி சொல்வதை விடவாயால் நன்கு வடை  சுடுகிறார் என்றே சொல்லலாம் கதை கேட்க்சலாம் என்றால் ஊடேபல கதைகளூம்வரும் தன்க்கு தெரிந்ததை எல்லாம் சொல்ல துடிப்ப்வர் போல் இருக்கும் திர்மணமானவர்  பல கலைகள் தெரிந்து வைட்திருப்பவர் இயல் இசை  நாட்டியம்  என்று பலவும்  தெரிந்தவர் மொத்த்த்த்தில்  சகலகலாவல்லவன்

 

பச்சிளங்குருத்து என் மடியில்

கருப்பையில்நீந்தி மகிழ்ந்த( ? ) ஒரு சின்ன உயிர்

ஏதும் புரியாமல் என்னைப் பார்க்கிறது 

என்னைப் பார்க்கிறதா ?விலங்குகள்

 மண்ணில் விழுந்தவுடன்எழுந்தோடும்

இக்குழவிக்கு அது முடியுமா

 தாய் யாரென்றாவது தெரியுமா

பரப்பிரம்மம்  என்று சொல்லப் படுவதும்  ஈதோ  

 

நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும்

எனக்கு எண்ணிக்கையே துவங்காத

 மழலையின்  ( அதுவும் தவறோ )

 சிந்தையில் என்னதான் ஓடுகிறதோ

 சிந்தை என்றஒன்றுஇருந்தால் தெரியவில்லையே

இன்றைக்கு என்ன எல்லாமே  அப்ஸ்ட்ராக்டாக