திங்கள், 27 மார்ச், 2017

தமிழ் மொழி பற்றிய சில கருத்துகள்


                                தமிழ் குறித்த என் கருத்துகள்
                               -----------------------------------------------


மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017
https://seebooks4u.blogspot.com/2017/03/2017.html
எனறு திரு யாழ்பாவாணன் ஒரு பின்னூட்டம்  எழுதி இருந்தார்   நான் அதற்கு மறு மொழியாக மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017
https://seebooks4u.blogspot.com/2017/03/2017.html சுட்டிக்கும் சென்று படித்தேன் தமிழே உலகின் முதல் மொழி என்று ஆதாரத்துடன் சொல்லும் வலிமை என்னிடம் இல்லை. இருந்தாலும் தமிழ் மொழி குறித்த சில எண்ணங்கள் இருக்கிறது. அதைப் பதிவிடுகிறேன் படித்துப் பார்த்து அது உங்கள் வெளியீட்டில் வரக் கூடியதா என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள் சில செய்திகளைப் பதிவிலோ பின்னூட்டத்திலோ பதிய இயல வில்லை. உங்கள் முகவரி இருந்தால் பகிர நலமாயிருக்கும் ஆட்சேபணை இல்லை என்றால் தெரிவிக்கவும் நன்றி   என்று எழுதி இருந்தேன்  அது தொடர்பாக விளைந்ததே இப்பதிவு 
 தமிழும்  தாய் மொழியும் 
கட்டுரை எழுதத் துவங்குமுன் மனதில் பல்வேறு எண்ணங்கள் ஓடுகின்றன . முதலில் தமிழ்நாட்டில் பிறந்தவர்கள் அல்லது இருப்பவர்கள் தமிழர்களா? தாய் தந்தை இருவருமே வீட்டில் தமிழ் பேசுபவர்களாக இருந்தால் மட்டும் தமிழர்களா? தாய் மொழி என்பதன் பொருளே சரியாகப் புரிந்து கொள்ளப் படுகிறதா?. நான் ஒரு வலைப்பூ பதிவாளன்  ஒரு முறை என் பேரனிடம் எனக்கு எழுத சரியான பதிவு கிடைக்கவில்லை என்றேன்  அவன் உடனே நான் எழுதித்தருகிறேன் என்று கூறி ஆங்கிலத்தில்  அக்பரும் பீர்பாலும் என்ற தலைப்பில் ஒரு கதை எழுதிக் கொடுத்தான்  அதற்குப் பின்னூட்டமாகசிலர் அவனுக்குத் தாய் மொழி கற்பிக்கும் படிக் கூறினர். எனக்கும் அவன் தாய் மொழியில் எழுதுவது விருப்பம்தான்  ஆனால் அவனது தாய் மொழி எது என்னும் கேள்விக்கு சரியாகப் பதில் கிடைக்கவில்லைஅதைச் சற்று விலாவாரியாக விளக்கினால்தான் புரிந்து கொள்ள முடியும்  என் பேரப்பிள்ளைகளைப் பள்ளியில் சேர்க்கும் போது  அவர்களது தாய் மொழி மலையாளம்  என்று எழுதிக் கொடுத்திருந்தனர் என் மகன்களிடம் கேட்ட போது அவர்களது தாய்பேசும்   மொழி மலையாளம்தானே ஆகவே மலையாளம்  என்று கொடுத்ததாகக் கூறினார்கள்அதாவது தாய்பேசும் மொழி தாய் மொழி என்று புரிந்து கொண்டிருந்தனர்சந்தேகத்துக்கு இடமில்லாமல் என் தாய் மொழி தமிழ்/நான் ஒரு மலையாளப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டாலும் வீட்டில் பேசும் மொழி தமிழே இருந்தது. என் மகன்கள் வளர்ந்து திருமணம் செய்து கொண்டது மலையாளப் பெண்களையே. ஆனால் இவர்கள் தமிழிலும் அவர்கள் மலையாளத்திலும் பேசுவார்கள் அவர்களுக்குக் குழந்தைகள் பிறந்ததும் வீட்டில் இரு மொழி புழக்கம் இருந்தது. பேரக் குழந்தைகள் தந்தையிடம் தமிழிலும் தாயிடம் மலையாளத்திலும் பேசுவது பார்ப்போருக்குப் புதிதாய் இருந்தது. என் பிள்ளைகள் துவக்கத்தில் தமிழ் படித்து வந்தனர். ஆனால் என் பணி மாற்றம் காரணமாக இந்தி படிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது தமிழில் கஷ்டப் பட்டுப் படிக்க முடிந்தாலும் தேர்ச்சி பெற முடியவில்லை. என் பேரக் குழந்தைகள் இரு மொழியிலும் நன்கு பேசக் கற்றாலும் எழுதப் படிக்க என்பது ஆங்கிலம் ஆகி விட்டது  நான் பேரக் குழந்தைகள் கட்டாயம் தமிழ் எழுதப் படிக்க வேண்டும் என்று வற்புறுத்த முடியாது. அப்படிச்செய்தால் ஒரு வேளை மொழி வெறியன் என்னும் பெயர் வரலாம் என் மகன்கள் தமிழ் ஆங்கிலம் மலையாளம் ஹிந்தி கன்னடம் தெலுங்கு என்று பல மொழிகளில் சரளமாகப் பேசுவார்கள். என் பிள்ளைகளாவது தமிழைப் படிக்கவும் பேசவும் கற்றிருக்கிறார்கள். ஆனால் என் பேரப் பிள்ளைகள் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மொழிகளையே கற்கிறார்கள். எனக்குப் பல முறை சந்தேகம் வருவதுண்டு. தாய்மொழி என்பது வ்ளரும்போது பழகும் மொழி என்றால் என் பேரக் குழந்தைகளின் தாய் மொழி ஏது. நிச்சயம் தாய் பேசும் மொழி என்று எடுத்துக் கொள்ள முடியவில்லை. இணையத்திலும் அகராதியிலும் அப்படிச் சொல்லவில்லை
என் நிலையாவது பரவாயில்லை
தமிழ்நாட்டில் வசிப்பவர்கள் தமிழர்களா? கர்நாடகத்தில் வசிப்பவர்கள் கன்னடியர்களா? . தமிழர்களின் வாழ்வில் தமிழுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் என்ன. தமிழே வீட்டில் பேசும் மொழியாக இருத்தல் அவசியம் சில நாட்களுக்கு முன் ஒரு காணொளி கண்டேன் அமெரிக்காவில் வசிக்கும் மகன் வீட்டுக்குசெல்லும் தந்தை பேரனுடன் தமிழில் பேச அவனோ தமிழ் புரிந்தாலும் தமிழ் பேசுவதில்லை.  தமிழ் வாழ வேண்டுமானால் தமிழன் வீட்டில் அது பேசும் மொழியாக இருத்தல் அவசியம்  ஆனால் அங்கும் விதி விலக்குகள் இருக்கும் பொதுவாக வெளியில் புழங்கும் இடங்களில் வேற்று மொழி பேசுவோர் வீட்டில் தமிழில்அல்லது  தாய் மொழியில் பேச சிரமம் உண்டு

  தமிழும்  இருக்கும்  நிலைப்பாடும்
  ---------------------------------------------------------------------                              
 தமிழன் எங்கும் தமிழ் எதிலும் தமிழ்  என்னும் நிலைப்பாட்டைக் கையாண்டால் வாழ்வோட்டத்தில் பின் தங்கி விடுவான் முதலில் தமிழ் மொழிப்பற்று உடையவர்கள்தமிழில் தேர்ச்சி பெற்றவர்களா?
 எந்த மொழி படிப்பவர்கள் ஆனாலும் அந்த மொழியின் மீது நேசம் வேண்டும்அதில் நன்கு தேர்ச்சி பெற வேண்டும்ஆளுமை வேண்டும்
 ஓரளவுக்குத் தமிழ் படிக்கவோ பேசவோ செய்ய முடிந்தவர்கள் நிறைய வாசிக்க வேண்டும் வாசிக்க வாசிக்க மொழியின் மீதான ஆளுமை கூடும்மொழியின் மீது ஒரு பற்று ஏற்படும்  பற்றில்லாமல் எதையும் செய்ய முடியாது
தமிழை வளர்க்கிறோம் என்று சொல்பவர்கள் சிந்திக்க வேண்டும்  தமிழை வளர்க்க என்ன செய்கிறார்கள் தமிழை யாரும் வளர்க்க வேண்டியதில்லை. சங்ககாலத் தமிழுக்கும் இன்றைய தமிழுக்கும்  ஏதாவது ஒற்றுமை இருக்கிறதா.? இன்றைய தமிழ் அதுவாக இவால்வ்  ஆகி இருக்கிறது. சொல்லப் போனால் தமிழின் தோற்றம் முற்றிலும் மாறுபட்டிருக்கிறது
எனக்கு அடிக்கடி ஒரு சந்தேகம் எழும் கல் தோன்றி மண்தோன்றா காலத்துக்கும்முன் தோன்றிய குடி தமிழ்க்குடி என்றும் தமிழின் பெருமை குறித்தும்பலர் பேசுவதும் ஒரு வகையில் ஏற்றம் கொடுக்கப் பேசும் வார்த்தைகளோ? தமிழ் மொழி இவால்வ் ஆகும் என்றேன்  அன்றைய எழுத்துருவுக்கும் இன்றைய எழுத்துருவுக்கும் அநேக வேறுபாடுகள் இருக்கின்றன. அச்சுத்தொழில் வந்தே சில நூற்றாண்டுகளே ஆகி இருக்கும் நிலையில் அன்றைய இலக்கியங்கள் கல்வெட்டுக்கள் மூலமும்  அரித்துப் போக வாய்ப்பிருக்கும்  ஓலைச் சுவடிகள் மூலமுமே தெரிய வந்திருக்கும்
அல்லது வாய்வழிமூலமே தெரிய வாய்ப்பிருக்கும்  இருந்தாலும் அவற்றை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபாடு கொண்டிருந்த உவே சாமிநாதையர் போன்றோரின் முயற்சியே தமிழ் பற்றி நாம் இந்த அளவுக்குத் தெரிய வைத்திருக்கிறது. ஆங்கிலம் எப்படித் தன்னுள் பலமொழி வார்த்தைகளைசெரித்துக் கொண்டிருக்கிறதோ அதே போல் தமிழும் உள்வாங்கிக் கொள்ள வேண்டும் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்பது தமிழ் வளர நல்ல வழி போல் தோன்றினாலும் அப்படி இருப்பவர்கள் ஞானமும் மனதும் பரந்திருக்காது.  தமிழ் வளர எல்லைகள் விதிக்கக் கூடாது
தமிழ் எழுத்துக்களில் வளர்ச்சி என்பதுபோல் கொம்பு போட்ட “ல” ள ண போன்ற எழுத்துக்கள் போய் லை ளை ணை என்ற எழுத்துக்கள்வந்து விட்டன எல்லா ஆங்கில வார்த்தைகளுக்கும் தமிழ் இணை தேடுவது சரியல்ல தமிழ் தன்னுள் பிற மொழி வார்த்தைகளை (“absorb”) ஏற்றுக் கொள்ள வேண்டும்  பண்டைக் காலத்தில் தமிழ் இருந்தது போல் இப்போதும் இருக்க நினைப்பது சரியல்ல. அதற்காக நாம் பண்டைக் காலத்தில் இருந்த தமிழை உதாசீனப்படுத்தவும் கூடாதுமரபு இலக்கணங்களோடு கூடிய கவிதைகளுக்கு என்றும் மதிப்பு இருக்கும் ஆனால் அப்படித்தான் இருக்க வேண்டும் என்று நினைப்பது தமிழ் வளர்ச்சிக்கு ஊறு விளைவிக்கும் புதுக்கவிதையும் வேண்டும் மரபுக்கவிதையும் அறிந்திருத்தல் கூடுதல் நலம் சங்ககால இலக்கியங்களைத் தமிழ்தான் என்றாலும் வழிகாட்டியோ உரையோ இன்றிப் படிக்க முடிவதில்லை ஆகவே சாதாரணன்  தமிழ் அறிந்தவன்  என்று சொல்லிக் கொள்வதே கடினம் பண்டித மொழியிலிருந்த தமிழை பாமரனும்   புரிந்து கொள்ளும் முயற்சியில் பாரதி இறங்கினான்  ஆனால் என்ன பரிதாபம் அவனது எழுத்துக்களையே சரியாக உள்வாங்கிக் கொள்ளாமல் பலரும் பாரதியே மெல்லத் தமிழினிச் சாகும்  என்று கூறி விட்டதாகத் தவறாக  வியாக்கியானம் செய்கிறார்கள் நான் சொல்ல வருவது என்னவென்றால் தமிழில் வாசிப்பதையும் தவறாகப் புரிந்து கொள்ளும் அபாயம் இருக்கிறது
கம்பனையும் வள்ளுவனையும்   பாரதியையும் பாரதி தாசனையும் மேற்கோள் காட்டும் நாம் மேற்கோளையும் தாண்டி சற்று ஊன்றி படித்தல் அவசியம் 
இப்போது வாய்ப்புகள் மிகவும் அதிகரித்து வருகிறதுகணினி உலகில் இந்த உலகமே நம் கைக்குள் அடங்கி இருக்கிறது என்ன ஒரு விஷயம் என்றால்நாம் தேடவேண்டும் தட்டுங்கள் திறக்கப்படும் என்று விவிலியத்தில் கூறி இருப்பதை சற்றே மாற்றி தேடுங்கள் கிடைக்கும் என்னும் நிலை வந்திருக்கிறது ஆக நாம் தேட வேண்டியது என்ன என்று நாம்தான் தீர்மானிக்க வேண்டும்
இந்தத் தேடலுக்கு துணை போகும் வழியில் தமிழிலேயே அந்த வசதியும் வந்து விட்டது  இதுவரை வந்தது போதாது தமிழ் ஆர்வலர்கள்பிற மொழிகளில் இருக்கும் நல்ல விஷயங்களை  கணினியில் தமிழில் ஏற்றவேண்டும் எட்டு திசையும்  சென்று பொருள் குவிப்போரில் தமிழர்களின் எண்ணிக்கையும் சற்றுக் கூடுதலாகவே இருக்கிறது ஆங்கிலம் தவிர கணினி பயன் பாட்டில் தமிழும் கணிசமாக முன்னேறியே இருக்கிறது
எனக்கு இன்னொரு யோசனையும் தோன்றுகிறது பண்டையத் தமிழ் எவ்வாறெல்லாம் முன்னேறிஇருந்தது என்பதைக் கல்வெட்டுகளிலிருந்தும்  பழைய சுவடிகளில் இருந்தும் அறிகிறோம் .அவற்றை கூடியமட்டும் மைக்ரொ ஃபில்மில் எடுத்து அவற்றைக் கணினியில் காட்ட வேண்டும் தமிழ் வளர்ந்த விதம் அல்லது தற்போதைய நிலையை அடைந்த விதம்  தேடினால் கிடைக்க வேண்டும்
மதம் மொழி இனம் போன்றவை மிகவும் சென்சிடிவானவை.தமிழே எல்லா மொழிகளுக்கும் மூத்த மொழி இன்னும் வாழும் மொழி என்று பெருமை பேசப்படும் போது ஏதோ ஒரு உணர்ச்சியால் கட்டுண்டு வேற்று மொழிப் பக்கமே போகாமல் இருந்தால் நஷ்டம் நமக்குத்தான் சென்றிடுவீர் எட்டு திக்கும்  கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் என்றான் பாரதி/ இன்று கணினியின் பயன் பாட்டினால் எட்டுதிக்கும்  செல்லத் தேவையில்லை.  இருந்த இடத்திலிருந்தே அந்தப் பணியைச் செய்யலாம்
  இன்னொரு விஷயம்  தமிழ்ப் பத்திரிக்கைகளும்  ஊடகங்களும் ஒரு கணிப்பின் படி தமிழ் தெரிந்தவர் ஆங்கிலமும் படித்தவர் தமிழில் பத்திரிக்கை வாசிப்பது குறைவே. என்ன காரணம் என்று  சிந்தித்துப் பார்த்தால் ஆங்கிலம் படித்த தமிழ் அறிந்தவர்கள்  தமிழ்ப் பத்திரிக்கைகள் நிறைவான செய்திகளை விட்டு விட்டு கொலை கொள்ளை என்பது போன்ற  சென்சேஷனல் செய்திகளிலேயே அதிகம் கவனம் செலுத்துவதாக எண்ணுகின்றனர் தமிழ்ப் பத்திரிக்கைகளுக்கு அரசியல் சினிமா போன்றவையே பலம் நல்ல பத்திரிக்கைகள் வாசிப்பவர் குறைவால் காணாமல் போய் விடுகின்றன. செய்தித் தாள்களும் பத்திரிக்கைகளும் நல்ல தமிழ் வளர்க்க எந்த முயற்சியும் செய்வதில்லை விதி விலக்குகாக ஏதாவது இருக்கலாம் ஊடகங்கள் சரியாகச் செயல்பட்டால் நல்ல தமிழ்ப்பணி செய்ய முடியும் எடுத்துக்காட்டாக பாரதியின் பாடல்களும்  இன்னும் பிற பழம் பாடல்களும் திரைப்படங்கள் மூலமே பலராலும் அறியப் பட்டிருக்கிறது
சரி. இப்போதுதலைப்பிற்கு வருவோம் தமிழ் மொழியே உலகின்  முதல் மொழி என்று பறை சாற்றுவதால் என்ன லாபம்  எந்த மொழி பேசுபவர் ஆனாலும்  அவர்கள் அந்த மொழிக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் என்ன? என்ற நிலைப்பாடே சரியாக இருக்கும்  அதை அதிகரிக்க என்ன என்ன செய்யலாம் என்றே இருக்க வேண்டும்  . நான்  அறிந்தவரை ஒரே மாநிலத்தில் வசிக்கும் எவரும் அவரது தாய் மொழி எதுவானாலும்  அந்த மாநில மொழியைக் கற்க வேண்டும்  துரதிர்ஷ்டவசமாக ஒரே மாநிலத்தில் வசிக்க முடியாதவர்கள் அவர்களது தாய் மொழியை கட்டாயம்  கற்க வேண்டும் அதற்கான வசதியை அரசு செய்து தரவேண்டும் முக்கியமாக ஏதோ சூழ்நிலை காரணமாக  அவர்களது மொழியைப் பள்ளியில் பயில முடியாதவர்கள்  வீட்டிலாவது அதைக் கற்பிக்க அவர்களது பெற்றோர் முயற்சிக்க வேண்டும் முதலில் தாய் மொழி பற்றிய சந்தேகங்கள் சிறார் மனதில் இருக்கக் கூடாது வீட்டில் அனைவரும் அவர்களது தாய் மொழியிலேயே பேச வேண்டும் நான் கூறி இருந்த எக்ஸெப்ஷனல் கேஸஸ் தவிர.மற்றபடி நான் மேலே குறிப்பிட்டுள்ள  அநேக விஷயங்கள் எல்லா மாநில மொழி பேசுபவருக்கும் பொருந்தும் மொழியை அதன் படி இவால்வ்  செய்ய விட வேண்டும் அவர்களது தினந்தோரும் செய்யும் செயல் பாடுகளில் அவரவர் தாய் மொழியே முதலிடம் பிடிக்கவேண்டும் மொழிப்பற்றை வளர்க்க வேண்டும் ஆனால் மொழி வெறியைக் கண்டிக்க வேண்டும்  பத்திரிக்கைகளும் ஊடகங்களும் மொழியின் மேம்பாட்டுக்காக இருக்க வேண்டும் சிறு வயதிலிருந்தே வாசிக்கும் பழக்கத்தைக் கொண்டுவரவேண்டும் வாசிப்பது சுவாசிப்பது போல் இருக்கவேண்டும் கூடியவரை அவரவர் மொழியையே பயன் பாட்டில் கொண்டு வர வேண்டும்

பள்ளிகளில் அந்தந்த மாநிலமொழியிலேயே பாடங்கள் போதிக்கப் படவேண்டும் ஆங்கிலம் துணைப்பாடமாக இருக்கவேண்டும் வேற்று மாநிலத்தவர்கள் பயில அவர்கள் மொழியில் கற்பிக்க பள்ளிகள் துவங்க எந்தக் கட்டுப்பாடும்  இருக்கக் கூடாது;
 தமிழ் மொழி கற்பிக்கப்படும் போது மொழியின் வளமை பழமை தெரிய வரும் பாடங்கள் பாட புத்தகங்களில்  இருக்கவேண்டும் பொதுவாக ஆங்கிலப் பயிற்று மொழிப் பள்ளிக்கூடங்கள் திறம்பட  நிர்வகிக்கப் படுகின்றன. தமிழில் படிப்பவர்கள் தங்களைக் குறைத்து மதிப்பிட்டுக் கொள்கின்றனர்.இந்த வேறுபாடு அகல அனைத்துப் பள்ளிகளிலும்  ஒரேமாதிரி பாடத் திட்டங்கள் இருக்கவேண்டும் அவரவர் மொழியில் படிப்பது. பயிற்றுவிப்பது புரிதலுக்கு நல்ல வித்தாகும்
அடிப்படைக் கல்வி நிச்சயம்தாய் மொழிப்பயிற்று கல்வியாக இருக்கவேண்டும்  தமிழனுக்குத் தமிழில்  இருக்கவேண்டும் பட்டப் படிப்பு வேண்டுமானால் ஆங்கிலத்தில் இருக்கலாம்மறைந்த பெருந்தலைவர் திரு  அப்துல் கலாம் தமிழ்ப் பயிற்று மொழியில் படித்தவர். தமிழ் வழிக் கல்வியில் படித்தவர் தரம் தாழ்ந்திருக்கும் என்னும் எண்ணம்  மாற வேண்டும் தமிழில் வாசிக்கும் பழக்கம் வேண்டும் பிற மொழிகளில் இருக்கும் நயங்களையும் நேசிக்கக் கற்கவேண்டும் கணினிப் பயன் பாட்டை அதிகம் அறிதல் அவசியம் உலகே நம் தேடலில் தான் இருக்கிறது ஊடகங்களும் பத்திரிக்கைகளும் மொழிப்பற்றை வளர்க்கும் விதத்தில் செயல் படுவது அவசியம் மொத்தத்தில் தமிழில் பற்றுஅவசியம் வெறி கூடாது.


 என் வலைத்தளம்  திறக்காமல் என் கை ஒடிந்த மாதிரி இருந்தது நண்பர் தனபாலனுக்கு இரண்டு மூன்று அஞ்சல்கள் அனுப்பி விட்டேன்  நண்பர் வெங்கட நாகராஜ் அவர்களுக்கு என்  தளம் திறப்பதாக எழுதி இருந்தார் (பூவையின்  எண்ணங்கள்  பதிவின் ஒரு   பின்னூ ட்டத்தில் நான்  என்ன ப்ரௌசர் உபயோகப் படுத்துகிறேன்   என்றும் கேட்டிருந்தார்  நான்  மொஜில்லாவைத்தான் சாதாரணமாக உபயோகி க்கிறேன்  கூகிள் க்ரோமில் போனால் பதிவு திறக்கிறதுநண்பர் டிடி க்கு அனாவசிய தொந்தரவு கொடுத்து விட்டேன்   அவர் மன்னிப்பாராக திரு நாகராஜுக்கு நன்றி  

88 கருத்துகள்:

  1. /தமிழ் வாழ வேண்டுமானால் தமிழன் வீட்டில் அது பேசும் மொழியாக இருத்தல் அவசியம் //

    மிக சரியா சொன்னீங்க ..எங்க மகள் வீட்டில் எங்களுடன் தமிழிலேயே தான் பேசுகிறாள் .இதை நான் கட்டாயமாக அழுத்தம்திருத்தமாக எடுத்த முடிவு ..இதற்காகவே தமிழ் தொலைக்காட்சி சானல்களை கூட நிறுத்திவிட்டோம் பெரும்பாலான ஆங்கர்ஸ் பேசுவது டமில் என்பதால் அதை பார்த்து இவளும் கொஞ்சம் பேச முயன்றதாலும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெற்றோர் இருவரும் ஒரே மொழி பேசும்போது பிரச்சனைகள் குறைவுஅயல் நாடுகளில் வசிப்பவர்க்கு அந்த நாட்டு மொழியைப் பிரித்துப் பேச முடியாது என்றே நினைக்கிறேன் கருத்துக்கு நன்றி ஏஞ்செல்

      நீக்கு
  2. //மொழி பற்றிய சந்தேகங்கள் சிறார் மனதில் இருக்கக் கூடாது வீட்டில் அனைவரும் அவர்களது தாய் மொழியிலேயே பேச வேண்டும்//
    இங்குள்ள இலங்கை தமிழரை கட்டாயம் பாராட்ட வேண்டும் .அவர்கள் பிள்ளைகள் உயர் வகுப்பில் அதாவது 6த் form இல் (நம்மூர் ப்ளஸ் 2 ) வில் மொழி தமிழை தேர்வு செய்து படிக்கிறாங்க
    மகளுக்கு 13 சப்ஜெக்ட் இந்த ஆண்டு ..எப்படியாவது நன்கு பேசும் மகளை எழுத வாசிக்க வைக்கணும் என்று ஒரு எண்ணம் தோன்றுகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மொழி மதம் இனம் போன்றவை மிகவும் சென்சிடிவ் ஆனவை கட்டாயப்படுத்தப் போனால் விளைவுகள் நலம் பயக்காது என்றே தோன்றுகிறது தமிழ் நாட்டில் தமிழே படிக்காமல் பள்ளி இறுதி வரை வாசிக்கும் வாய்ப்புகள் இருப்பதாக ஒரு பதிவில் வாசித்த நினைவு

      நீக்கு
  3. எங்கள் குடும்ப நண்பர் ஒருவர் பெயர் நெவில் ஜோசப் ..அவருக்கு 90 வயதாகப்போகுது தனது தாத்தா எங்களை போல ஒரு மொழி பேசுபவர் தென்னிந்தியா என்றார் செயின்ட் வின்சன்ட் தீவுகளுக்கு 150 ஆண்டுகள் முன்பு குடியேறி பின்பு இவர் லண்டன் வந்தவர் .
    தாத்தா பெயர் ராஜ் குமார் என்றார் அதைத்தவிர வேறொன்றுமே தெரியலை ஆனா அவர் தாத்தா ஊரில் தென்னை மரங்களும் ரப்பர் மரங்களும் இருந்தது என்றும் சொன்னார் .எனக்கு அப்போதிருந்தே இதை கேட்டதில் இருந்து ஒரு பயம் 60 வருடங்களுக்கு பின் எங்களுக்கும் இந்நிலை வரக்கூடாது அதற்ககாகவே மொழியை எப்படியாவது கற்றுக்கொடுக்கணும் பிள்ளைக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நூற்றாண்டுகளுக்கு முன் குடியேறி இருந்தவர்களை பற்றிய பேச்சில்லை. மேற்கிந்திய தீவுகளிலும் பிற இடங்களிலும் தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் நாளாவட்டத்தில் அவர்களது வேரையே மறந்து இருப்பார்கள்

      நீக்கு
  4. வெளிநாடு வாழ் தமிழர்கள்தான் தமிழை அதிகம் நேசிக்கிறார்கள் என்று தோன்றும். அவர்கள் அதை விட்டு தூரத்தில் இருப்பதால். மாற்றுக் கருத்தும் இருக்கிறது என்று தெரிகிறது ஏஞ்சல் கமெண்ட் படிக்கையில்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு முறை நான் பாம்பேயில் விலாசம் தெரியாமல் ஒரு தமிழர் என்று எழுதாதகுறையாக அடையாளம் இருந்தவரிடம் முகவரிக்குப் போக வழி கேட்டபோது அவர் இந்தியில் மாலும் நஹி என்று கூறிச் சென்று விட்டார். இதை என்ன சொல்ல.

      நீக்கு
  5. நாளை கணினியில் படித்து கருத்துரை தருகிறேன் ஐயா

    பதிலளிநீக்கு
  6. ரொம்பப் பெரிய கட்டுரை. நிதானமாகப் படித்தேன்.

    'தாய் மொழி' என்பது வீட்டில் புழங்கும் மொழிதான். இரண்டு வெவ்வேறு மொழிகள் புழங்கினால், குழந்தைகளே CONFUSE ஆகிவிடும்.

    எங்க போனாலும், யாராவது தமிழ்ல பேசுவதைக் கேட்டால், அது ஒரு தனி உணர்வு, வெளி'நாட்டில் வாழும் எங்களைப் போன்றவர்களுக்கு. சில சமயம், இங்கு யாரேனும் பேசிக்கொண்டு செல்லும்போது, எங்கள் ஊர் பேச்சு இருந்தால், நேரே போய், என்ன திருநெவேலியா என்று கேட்டுவிடுவேன். லண்டன்லயும் ஒரு தடவை நம்ம ஊர் ஆட்கள் பேசுவதைக் கேட்டு நானே அவர்களிடம் சென்று பேசினேன்.

    பொதுவா, இலங்கைத் தமிழர்கள் (பெரும்பாலும் அல்லது அனேகமா) தாய்மொழியான தமிழை வளர்ப்பதில் (அதாவது வீட்டில் பேசுவது, குழந்தைகளுக்கு மொழியைக் கடத்துவது போன்றவை) நிறைய முயற்சிகளை எடுத்துக்கொள்கிறார்கள். உண்மையைச் சொல்லப்போனால், ஈழத் தமிழர்களால்தான், தமிழ்நாட்டில் (தமிழ் தொலைக்காட்சி, பத்திரிகைகளுக்கு) நிறைய தமிழ் வார்த்தை கிடைத்திருக்கிறது (பரப்புரை, கடவுச் சீட்டு போன்ற ஏராளமான வார்த்தைகள்). அவர்களும் நிறைய வேற்றுமொழிச்சொல்லை எடுத்தாண்டு அதையும் பேச்சில் தமிழாகவே உபயோகப்படுத்துகிறார்கள் (BUN பாண் போன்று பல வார்த்தைகள்).

    மொழி வளரவேண்டும் என்றால், பிறமொழிச் சொற்களை ஏற்றுக்கொள்ளவேண்டும். வலிந்து அல்ல. BUS என்பதற்கு பேருந்து என்பது இயல்பான தமிழா இருக்கு. COFFEEக்கு கொட்டை வடிநீர் என்பது வலிந்து திணிப்பதுபோல் இருக்கிறது. COFFEE தமிழ்நாட்டிற்கு அன்னியப் பொருள். அதனால் அதனை காபி என்று அழைப்பதால் என்ன தவறு.

    மொழியை நேசிப்பதில் (எனக்குத் தெரிந்த அளவில்) மலையாளிகளை மிஞ்சமுடியாது. இரண்டு மலையாளிகள், என்ன POSITIONல் இருந்தாலும், பேசும்போது மலையாளத்தில்தான் பேசிக்கொள்வார்கள். தமிழர்களுக்கு (தமிழ்நாட்டில் வாழும்) அவ்வளவு தாய்மொழி மீது பற்று கிடையாது.

    @ ஏஞ்செலின் - மக்கள் தொலைக்காட்சியில் பெரும்பாலும் ஆங்கிலக் கலப்பில்லை. நல்ல தமிழ் உபயோகப்படுத்துகிறார்கள். மற்ற தமிழ்த் தொலைக்காட்சிகளில் அவ்வப்போது தமிழ் பேசுகிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழ்நாட்டுத் தமிழர்களுக்குத் தாய்மொழிப் பற்று இல்லை என்றால் ஈழத் தமிழர்களைக் காக்கவும் இன்ன பிற தமிழர் பிரச்சினைகளுக்காகவும் தீக்குளிப்பவர்கள், உண்ணாநிலை கடைப்பிடிப்பவர்கள், வழக்காடுபவர்கள், எழுதுபவர்கள், காவல்துறையிடம் அடி வாங்கி நொறுங்குபவர்கள், பல இலட்சம் ரூபாய்க்கு நூல் கண்காட்சியில் தமிழ் நூல்கள் வாங்குபவர்கள் எல்லாரும் செவ்வாய்க் கோளிலிருந்து வந்தவர்களா?

      நீக்கு
    2. நன்றி @நெல்லைத்தமிழன் ....புது சாட்டிலைட் கனெக்க்ஷன் தரப்போறோம் சில மாதத்த்தில் அதில் மக்கள் தொலைக்காட்சி மட்டும் சேர்த்துக்கப்போறேன் ....

      இங்குள்ள மலையாளிகளும் ஆந்திர மக்களும் தங்களுக்கென தனி தெலுகு மலையாள ஆலய சர்வீஸ் நடத்தறாங்க அவரவர் மொழியில் . also its true that ..ஈழத்தமிழர் மட்டும் இந்த மொழி விஷயத்தில் அவர்களை மிஞ்ச ஆட்களில்லை

      நீக்கு
    3. "தமிழ்நாட்டுத் தமிழர்களுக்குத் தாய்மொழிப் பற்று இல்லை" என்பது பொய். அவர்களுக்கும் தமிழ் மொழிப் பற்று இருப்பதால் அறிஞர் இ.பு.ஞானப்பிரகாசன் அவர்கள் கருத்து வலுப்பெறுகிறது. நிகழ்வுகளில் பிறமொழி ஆதிக்கம், பிற மாநில நடைமுறை இல்லாது பண்டைத் தமிழ்நாட்டுப் பண்பாட்டைப் பேணினால் தமிழ்மொழி வளம் சிறக்கும். அதாவது, பிறமொழி / பிற மாநில மொழி கலக்காத நற்றமிழ் பேண முடியுமே!

      நீக்கு
    4. அறிஞர் நெல்லைத் தமிழன் அவர்களே!

      ஈழத் தமிழர், இந்தியத் தமிழர் என்ற வேறுபாடு வேண்டாம். ஒரே நாடாக இருந்த வேளை கடற்கோள் வந்து துண்டாக்கியதால் இரண்டு நாடுகளானதே தவிர, இந்தியன் ஈழத்தான் எனக் கடற்கோள் பிரிக்கவில்லையே! இன்றும் தமிழகத் தமிழரை தொப்புள் கொடி உறவென்றே ஈழத் தமிழர் அழைக்கின்றனர். தமிழக மக்களும் எமது உடன் பிறப்புகள் என்றே ஈழத் தமிழரை அழைக்கின்றனர். எனவே, நாம் தமிழர் என்றே முழங்குவோம்.

      ஈழத்தில் தமிழ் ஓங்கக் காரணம் தமிழுக்குள் பிறமொழி (சிங்களத்தை அங்குள்ளவர் வெறுப்பதாலும்) நுழையாமையே! தமிழகத்தில் பிறமொழி நுழையக் காரணம் வந்தாரை வரவேற்பதோடு தமிழரின் கலைகளும் பிற மாநில உறவுகளை ஈர்த்தமையே! தற்போது விழிப்புணர்வு ஏற்பட்டுவிட்டது. தமிழகத்தில் இனி பிறமொழி நுழையா நற்றமிழ் பேசுவோர் அதிகரிக்கும்.

      நீக்கு
    5. அன்புள்ள ஞானப்பிரகாசம் ஐயா மற்றும் ஜீவலிங்கம்,

      "தமிழர்களுக்குத் தாய்மொழிப் பற்று இல்லை" - நான் மிகப் பெரும்பான்மையைக் கருத்தில் கொண்டு எழுதியது. நம் ஊரில், சில தமிழர்களின் வாழ்வுக்கும் கலைகளுக்கும் பாரம்பரியத்திற்கும் ஊனம் ஏற்படாமல் கொஞ்சத்துக்குக் கொஞ்சமாவது தழைத்திருப்பதற்கு, தமிழுக்காகப் பாடுபடும் அறிஞர்களும், சில இயக்கங்களும், இலக்கியவாதிகளும், இலக்கியப் பட்டிமன்றப் பேச்சாளர்களும், பதிப்பகங்களும் பெரிய காரணம் என்று மறுப்பதற்கில்லை. இவர்களைப்போன்றே வேறு மா'நிலத்தில் இருக்கும் தமிழ் உணர்வு கொண்டவர்கள், தங்கள் தமிழ்ச் சங்கங்களுக்கு இலக்கியவாதிகளையும் எழுத்தாளர்களையும் அழைத்து கௌரவப்படுத்துகிறார்கள். தங்கள் வேலை நேரம் போக, தங்களின் தமிழ் ஆர்வத்தால் இதனைச் செய்கிறார்கள். இவர்களெல்லாம் மிக்க பாராட்டுக்குரியவர்கள். சந்தேகமில்லை. இது எப்போது பொது விதியாகிறதோ அப்போதுதான் தமிழனுக்கு தாய்மொழிப் பற்று அதிகம் என்று கூற இயலும். வலைத்தளத்திலேயே சிலர், முனைந்து தமிழ் இலக்கிய வளங்களையும், சங்கப் பாடல்களையும், நல்ல புத்தகங்களுக்கு மதிப்புரையும் எழுதுகிறார்கள். இவர்களும் பாராட்டுக்குரியவர்கள். புத்தகத் திருவிழா நடப்பதும், புத்தகங்கள் வாங்குபவர்கள் அதிகரிப்பதும் மகிழ்ச்சியான செய்திதான். நான் வாதம் செய்கிறேன் என்று எண்ணல் வேண்டாம். இப்போதுள்ள எண்ணிக்கை (புத்தக விற்பனை, தமிழில் பேசுவது, கலாச்சாரத்தைப் பேணுவது), 7 1/2 கோடி தமிழர்களை, அதிலும் 2 கோடி இளைஞர்களை (இரு பாலாரும்) எண்ணும்போது, மிக மிகக் குறைவே. தமிழ் அறிஞர்களைப் பேணுவது மிகவும் அதிகரிக்கவேண்டும் என்ற ஆதங்கத்தில் எழுதப்பட்டது.

      ஆனால் பொதுவாக தமிழன் 'இனப்பற்றும் மொழிப்பற்றும் இல்லாதவன்' என்ற என் கருத்தில் மாறுபாடு இல்லை. மொழிப்பற்று மிகவும் அவசியம்.

      நீக்கு
    6. தமிழர்களுக்குத் தமிழ் மொழிப்பற்று வேண்டும் என்பதில் இரண்டு பேச்சுக்கே இடமில்லை. ஆனால் மொழிப்பற்று வெறியாகக் கூடாது என்பதும் முக்கியம் யாழ்பாவாணத்தமிழ் சென்னைத் தமிழ் கொங்கு தமிழ் என்று பேசும் முறையில் வேறு பாடுகள் இருந்தாலும் வேர் ஒன்றுதான் டாக்டர் கந்தசாமி சொல்வது போல் மொழி ஒரு கலாச் சாரத்தின் அடையாளம் சென்னைத் தமிழின் வேரே பழந்தமிழிலிருந்து வந்தது என்று சில இடங்களில் படித்திருக்கிறேன் இப்போது தமிழ் பேசுபவர்கள் ஆங்கிலத்தில் உரையாடுவதையே பெருமையாக நினைக்கிறார்கள் மேலும் ஆழமான கருத்துகளைச் சொல்லும் போது பிறர் மனம்வாடாமல் இருப்பதும் முக்கியம் ஏன் என்றால் நான் ஏற்கனவே கூறியது போல் இது ஒரு சென்சிடிவான தலைப்பு

      நீக்கு
  7. பதில்கள்
    1. இரு வேறு கருத்துகள் இருப்பதாகத் தெரியவில்லையே

      நீக்கு
  8. அப்பப்பப்பப்பப்பா! எவ்வளவு கேள்விகள்! நீங்கள் கேட்டிருக்கும் இத்தனை கேள்விகளுக்கும் நீங்கள் ஏற்றுக் கொள்ளும்படி விடை அளிக்கச் சிறியேனால் இயலும். ஆனால், குறைந்தது இருபது பக்கங்கள் ஆகும்! நான்கு பக்கம் எழுதவே நான்கு நாள் ஆகிற எனக்கு (அதாவது, அந்தளவுக்குச் சிந்தித்துச் சிந்தித்து, மாற்றி மாற்றிப் பல வகைகளில் எழுதிப் பின் இறுதி வடிவம் கொடுப்பேன்) இது பெரும் சிரமம்! எனவே, முடிந்தளவு சிலவற்றுக்கு மட்டும் விடை தர முயல்கிறேன் ஐயா!

    தாய்மொழி என்பது எது?

    நீங்களே கூறிவிட்டீர்கள். கண்டிப்பாக, தாய் பேசும் மொழிதான் தாய்மொழி என்பதில்லை. அப்படியானால், தந்தை பேசும் மொழிதான் தாய்மொழியா என்றால், அதுவும் இல்லை. குழந்தை வளரும் வீட்டில் / சூழலில் எந்த மொழி பெரிதும் பேசப்படுகிறதோ அதுவே தாய்மொழி. எப்படிச் சொல்கிறாய் எனக் கேட்டீர்களானால், ஒரு குழந்தை பிறக்கும்பொழுதே மொழியறிவுடன் பிறப்பதில்லை. தன் தாய் பேசுவது, தந்தை பேசுவது, வீட்டிலுள்ள பிற உறுப்பினர்கள் பேசுவது கண்டு அதுவும் தன் வாயைக் கூட்டி அது போல் ஒலியெழுப்பும் முயற்சியே பேச்சு எனப்படுகிறது. இவ்வகையில் பார்த்தால் தாய் பேசும் மொழி (அல்லது தாய் குழந்தையிடம் பேசும் மொழி) என்பதுதானே தாய்மொழி என்றால், அப்படிச் சொல்ல முடியாது. பல குழந்தைகள் பாட்டியிடம் வளர்கின்றன. பல குழந்தைகள் காப்பகங்களில் வளர்கின்றன. இந்தக் குழந்தைகள் எல்லாம் தங்களைப் பார்த்துக் கொள்பவர்கள் என்ன மொழியில் தங்களிடம் கொஞ்சுகிறார்களோ அதைத்தான் பேசும். மேலும், வீட்டில் பேசும் ஓரிரு சொற்களை வைத்து மட்டுமே குழந்தையின் மொழியறிவு வளர்வதில்லை. மற்ற குழந்தைகள் பேசுவது, அக்கம்பக்கத்து வீடுகளில் பேசுவது, பள்ளியில் பேசுவது எனத் தன்னைச் சுற்றியிருக்கும் மனிதர்கள் என்ன மொழியில் பேசுகிறார்களோ அந்த மொழிச் சொற்களைத்தான் குழந்தையும் பேசும். எனவே, இப்படி எல்லா வகைகளிலும் ஆராய்ந்தால் கடைசியில் மாநிலத்தின் மொழிதான் (அல்லது குழந்தை வளரும் சூழலின்/சமூகத்தின் மொழிதான்) குழந்தையின் தாய்மொழி என்கிற முடிவுக்குத்தான் நாம் வர முடியும்.

    பதிலளிநீக்கு
  9. தமிழில் பிறமொழிச் சொற்களை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற உங்கள் கருத்து பற்றி...

    தமிழில் பிறமொழிச் சொற்களை ஏற்றுக் கொள்ளலாம் என்று தொல்காப்பியரே சொல்லி விட்டுப் போயிருக்கிறார். தற்சமம், தற்பவம் என அதற்கு இலக்கணமும் வகுத்து விட்டுப் போயிருக்கிறார். ஆனால், தொல்காப்பியரே சொல்லிவிட்டாரே என்பதற்காக ஏற்கெனவே வடமொழியிலிருந்து கொள்ளை கொள்ளையாகச் சொற்களை இறக்குமதி செய்து விட்டோம். இதனால் தமிழில் ஏற்கெனவே இருக்கும் பல சொற்களே புழக்கத்திலிருந்து மறைந்து அவ்விடத்தை வடமொழிச் சொற்கள் பிடித்துக் கொண்டன. இதனால், ஒரு கட்டத்தில் தமிழில் மணிப்பிரவாள நடை என ஒரு புது நடையே உருவாகி தமிழே ஒரு புது மொழி போல மாற அல்லது முழுக்க முழுக்க ஒரு கலப்பு மொழியாகப் பரிணமிக்கும் பேரிடர் ஏற்பட்டது. நல்லவேளையாக, பரிதிமாற்கலைஞர் போன்றோர் தோன்றி அப்படி ஒரு பேரிழப்பு ஏற்படாமல் காப்பாற்றினர்.பின்னாளில் எழுந்த திராவிட இயக்கங்களும் அதை மேடைதோறும் கொண்டு செல்ல மொத்தத் தமிழ்ப் பயன்பாடும் சீர்பெற்றது. அதனால்தான் இன்றும் தமிழ் வாழ்கிறது.

    இப்படியொரு பெரும் ஆபத்து இடையில் ஏற்பட்டதால்தான் தமிழில் பிறமொழிச் சொற்களை ஏற்கப் பெரும் தயக்கம் இருக்கிறது.

    ஆங்கிலம் பிறமொழிச் சொற்களை ஏற்பதால்தான் வாழ்கிறது என்பதால் தமிழும் அப்படித்தான் வாழ முடியும் என்பதில்லை. அடிப்படையில் ஆங்கிலம் என்பது வேற்று மொழியிலிருந்து பிறந்தது. எனவே, அது வேற்றுமொழிச் சொற்களை ஏற்றுக் கொண்டு வாழ்ந்தாக வேண்டியது இயல்பு. ஆனால், தமிழ் அப்படி இல்லை. தமிழ் ஒரு தான்தோன்றி! தனித்தியங்க வல்ல மொழி! எனவே, பிறமொழிச் சொற்களைத் தமிழில் மாற்றுவதன் மூலம் நாம் தமிழைத் தொடர்ந்து எவ்வளவு காலத்துக்கு வேண்டுமானாலும் வாழ வைக்க முடியும்.

    வாழ வைக்கலாம்; ஆனால், வளமாக வாழ வைக்க இயலுமா என நீங்கள் கேட்பது புரிகிறது. தமிழில் பிறமொழிச் சொற்களை ஏற்றுக் கொள்ளாவிட்டால் தமிழ் தேங்கி விடும் அதைப் படிக்கும் தமிழர்கள் தேங்கி விடுவார்கள் என்கிற உங்கள் அச்சம் தேவையற்றது. இப்படி ஆணித்தரமாக நான் சொல்லக் காரணம் - தமிழ் விக்கிப்பீடியா! தமிழில் எந்த வேற்று மொழிக் கலப்பும் இன்றி, தூய தமிழில் உலக அறிவு மொத்தத்தையும் கற்பிக்க இயலும் என்பதற்குக் கண்கூடான சான்றாகத் திகழ்கிறது தமிழ் விக்கிப்பீடியா. எனவே பிறமொழிச் சொற்களை ஏற்றுக் கொண்டால்தான் தமிழ் வளரும் என நினைக்க வேண்டா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழ் அப்படி இல்லை. தமிழ் ஒரு தான்தோன்றி! தனித்தியங்க வல்ல மொழி!இதுகுறித்து இன்னும் கருத்துகள் இருக்கிறதா தெரியவில்லை. தமிழும் பிற மொழிச் சொற்களை தன்னுள் ஏற்கக் கூடியதே ஆனால் தனித்தியங்கும் மொழி என்றால் என்ன என்பது புரியக் கடினமாக இருக்கிறது கவிஞர் ரமணி அவர்கள் ஒரு பதிவில் சைக்கிளின் பாகங்களைக் கூற ஒருவரிடம்கேட்ட போதுஅவரால் முடியாமல் போனதை எழுதி இருந்தது
      நினைவுக்கு வருகிறது சில கருத்துகள் ஏற்க முடியாமல் இருக்கிறது வாதம் செய்தால் ஒருவேளை வெற்றி பெறலாம் ஆனால் மனம் காய்ப்படலாம் கருத்துகளைப் பகிர்வதே நோக்கம் வருகை தந்து ஆணித்தரமாக கருத்திடுவதற்கு நன்றி ஐயன்மாரே

      நீக்கு
  10. மற்றபடி, தமிழ் வளர்க்கவும் தமிழைத் தொடர்ந்து அடுத்த தலைமுறைகளுக்குக் கடத்தவும் பல நல்ல சிந்தனைகளைத் தெரிவித்திருக்கிறீர்கள்! இவை அனைத்தும் நீங்கள் எந்தளவுக்குத் தமிழ்ப் பற்று மிகுந்தவர் என்பதைக் காட்டுகின்றன. மிக அருமை! என் பணிவன்பான சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானிங்கு வந்தது அய்யா வின் பதி விற்க்கு பின் 'ஊ(க்க)ட்டமளிக்க வே. ஆனால் தங்கள் பதி(லு)வுறை கண்டு அக மிக மகிழ்ந்'தேன்' நன்றி.

      நீக்கு
    2. இப்பதிவைப் படித்து கருத்திட்டவர்கள் எல்லோரும் மேன் மக்களே தமிழ்ப் பற்று உள்ளவர்களே இவற்றைக்கண்டு நானும் அக மிக மகிழ்ந்'தேன்' நன்றி

      நீக்கு
  11. இது முடிவில்லாத விவாதம். நான் பலமுறை அமெரிக்க சென்று வந்துகொண்டிருக்கிறேன். இங்கே, எந்த வீட்டிலும் கணவன்-மனைவியர் பெரும்பாலும் இரண்டு வேறு வேறு நாடுகளையோ மொழிகளையோ சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். (தமிழர்கள் அல்சொலாதவர்களை சொல்கிறேன்.) அவர்களிடம் இம்மாதிரி, மொழி பற்றிய விவாதங்கள் நடப்பதாகத் தெரியவில்லை. மொழி என்பது மனித வாழக்கைக்கு உதவும் ஒரு கருவியே. காலத்திற்கும் இடத்திற்கும் ஏற்ப அது மாறுபட்டே ஆகவேண்டும். இல்லையென்றால் அது அழிந்துபோகும். தூய்மையான மொழி என்று -தமிழ் உட்பட- எப்போதும் இருந்ததில்லை, அது சாத்தியமும் இல்லை. தேவநேயப் பாவாணர் செய்யாத முயற்சியா! நீங்கள் சொல்வது போல் இன்று இந்தியாவில் வேறு வேறு மொழிகளைச் சேர்ந்த ஆணும் பெண்ணும் திருமணம் செய்துகொள்வது மிகச் சாதாரணமாக நடந்துவருகிறது. அவர்களில் யாருடைய மொழியை தாய்மொழி என்பது? எனவே அவர்கள் இருவருக்கும் பொதுவான் இந்தியையோ ஆங்கிலத்தையோ தேர்ந்தெடுத்து அதிலேயே குழந்தைகளுடன் உரையாடுகிறார்கள். அதுதான் அவர்களுக்குத் தாய்மொழி. ..உலகம் மாறிக்கொண்டு வருகிறது. மொழியைப் பற்றிய நம் கருத்துக்களும் மாறிக்கொண்டே வரவேண்டும். வருகிறது. சிலர் மட்டும் இன்னும் பிடிவாதமாகப் பழைய கருத்துக்களை உயர்த்திப் பிடிக்கலாம். அவர்களைப் பொறுத்தவரையில் அது சரி. மற்றவர்களுக்கு அல்ல.

    - இராய செல்லப்பா நியூஜெர்சி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழை நினைத்தவாறு பேணமுடியாமல் போவதற்கு பல காரணங்கள் இருக்கலாம் ஆனால் சிந்தனை என்பது தாய் மொழியில் தானிருக்க வேண்டும் என்பதே என் கருத்து.ஆனால் அயல் நாடுகளில் பலரும் அந்த மொழிகளில் சிந்தித்து அதைத் தமிழ்ப்படுத்திப் பேச முயற்சி செய்கிறார்களென்னும் கருத்தும் இருக்கக் கண்டேன்

      நீக்கு
  12. மிகப் பெரிய பதிவு. இரண்டாகப் பிரித்துப் போட்டிருக்கலாம். :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு முறைப் படிப்பதற்கே தயக்கம் பலரிடம் இருக்கிறது இரண்டாகப் பிரித்தால் முன்னதில் எழுதிய கருத்துகள் நினைவில் இருக்குமா என்பதே சந்தேகம்

      நீக்கு
  13. மற்றபடி இதில் கருத்துச் சொல்லும் அளவுக்கு எதுவும் தெரியாது! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருந்தாலும் உங்களுக்கு அவையடக்கம் அதிகம் என்றே நினைக்கிறேன் வருகைக்கு நன்றி மேம்

      நீக்கு
  14. நீண்ட பதிவும் சில பின்னூட்டங்களும் ஒரு முக்கிய விவாதத்தை முன் வைக்கின்றன. இந்த பிரச்சினை தெலுகு மலையாளம் கன்னடம் போன்ற மொழிகளுக்கும் கூட இருக்கின்றது.

    இதற்கு விடையோ எளிதானதல்ல. வருங்காலத்தை கருத்தில் கொண்டு, அரசியல் ரீதியாகவும் முடிவுகள் தேவைப்படும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தெலுங்கு, மலையாளம், கன்னடம், தமிழ் எம்மொழியானாலும் அரசியல் கலக்கக்கூடாது. அவரது வீட்டில் தலைமுறை தலைமுறையாகப் பேணி வரும் மொழியே அவர்களது தாய்மொழி!

      நீக்கு
    2. தமிழை செம்மொழியாக அறிவித்தால் நாங்களென்ன குற்றிஐந்தா போய் விட்டோம் என்று நினைப்பு பிற மொழியினரிடம் இருக்கிறது

      நீக்கு
  15. இப்போ நானும் குழம்பிட்டேன்ன், எனக்கும் டவுட்டு டவுட்டா வருதே.. “தாய்மொழி” என்றால் எது எனும்போது குழப்பம்தான் வருது.

    எனக்கென்னமோ வளரும் சூழல் மொழிதான் தாய்மொழி என்பது உண்மையாக இருக்கும் எனத்தான் தோணுது.

    ஏனெனில் நாம் யாராயினும்/ எத்தனை பாசை தெரிந்தவராயினும்...நாம் சிந்திக்கும்போது, தாய் மொழியில்தானாம் சிந்திப்போம்...

    அப்படிப் பார்க்கையில் இப்போ வெளிநாட்டில் வாழும் நம் பிள்ளைகளுக்கு தாய்மொழி ஆங்கிலமாகிறது. ஏனெனில் அவர்கள் என்னதான் டமில்:) பேசினாலும்.. ஆங்கிலத்தில்தான் கனவு காண்கின்றனர்.. சிந்திக்கின்றனர்.....

    அப்போ நம் பிள்ளைகளின் தாய்மொழி ஆங்கிலம் என எண்ணும்போது நெஞ்செல்லாம் என்னவோ செய்கிறதே.. மயக்கம் வரும்போல இருக்கே.... இது யாருடைய தப்பு நம் தப்புத்தானே? நாம் ஊரில் வளர்த்திருந்தால் குழந்தை தமிழில் யோசிக்கும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம் ஊரில் வளர்ந்திருந்தால் குழந்தைகள் தமிழில் யோசிக்கும் என்பதில் நான் மாறு படுகிறேன் எடுத்துக்காட்டாக என் பேரக் குழந்தைகளைக் கூறலாம்

      நீக்கு
  16. உண்மையிலேயே இலங்கைத் தமிழ்க் குடும்பததுப் பிள்ளைகளுக்கு தமிழ் தெரியாமல் இருப்பதில்லை, நம் பிள்ளைக்கு தமிழ் தெரியாது என சொல்வது வெட்கமாக இருக்கும். அதிலும் கனடாவில் பெரிய தமிழ் பாடசாலைகள் உண்டு... அங்கு நம் பிள்ளைகள் திருக்குறள்கள் எல்லாம் என்ன அழகாகச் சொல்கிறார்கள். கோயிலுக்கு ஒழுங்காக அழைத்துப் போகிறார்கள் கோயிலில் தம் பிள்ளை தேவாரம் பாடவேணும் என்றே, மியூசிக் கிளாசுக்கு அனுப்புகிறார்கள்.. ஆனா என்னதான் நடந்தாலும் இன்னும் 2 ஜெனறேசனுடன் வெளிநாட்டில் தமிழ் செத்துவிடும் என்பது மிக துக்கமான உண்மை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மொழி என்பது கலாச்சாரம் சம்பந்தப்பட்டு இருக்கிறது

      நீக்கு
  17. இன்னொரு விசயம் சொல்லோணும்.. இலங்கையில் நாங்கள் திருமணம் முடித்தால் மாப்பிள்ளை வீட்டில் போயிருக்க மாட்டோம்.. மாப்பிள்ளைதான் நம் வீட்டில் வந்து செட்டில் ஆவார்ர்:).. அதனாலேயே இலங்கையில் பெண்களுக்கு திருமணத்தின் பின் சுகந்திரம் அதிகம் எனலாம்.. மாமியார்ர்.. மருமகள் சண்டை எல்லாம் இல்லை.. உண்மையில் சொன்னால்.. அம்மாவோடுதான் சண்டைப்பிடிப்போம்:) மாமியோடு நல்ல ஒட்டாக இருப்போம்:).

    அதனால், இலங்கையில் சொந்த ஊர் எது எனக் கேட்டால் அம்மாவின் ஊரைத்தான் சொல்வோம்.. அப்படித்தான் கேரளாவுமாக்கும் என நினைச்சுட்டேன்ன்.. ஏனெனில் கேரளப் பழக்கவழக்கங்களோடு நிறைய விசயங்களில் இலங்கைத்தமிழ்ப் பழக்கவழக்கங்கள் ஒத்துப் போகும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெண்ணுரிமை என்பது கேரளாவில் அதிகம் அங்கே மருமக்கத்தாயம் என்னும்வழக்கம் இருக்கிறது சொத்தில் பெண்களுக்கே அதிக உரிமை. யாழ்பாணத்திலும் அவ்வாறா ?சில வழக்கங்களை அடிப்படையாகக் கொண்டு நான் ஒருசிறுகதை புனைந்திருக்கிறேன் கேரளாவில் பெயருக்குமுன் போடும் இனிஷியலும் அவர்கள் பிறந்த தாய் வீட்டையே குறிக்குமானால் இப்போதுகாலம் மாறி வருகிறது. தந்தையின் பயரின் முதல் எழுத்தே இனிஷியலாக இடுவதைதற்கால மக்கள் விரும்புகின்றனர்

      நீக்கு
  18. GMB ஐயா விடிய எழும்பி வந்து இத்தனை பின்னூட்டங்களுக்கும் எப்பூடித்தான் பதில் சொல்லி முடிக்கப்போறாரோ தெரியல்ல:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எத்தனை வித எண்ணங்கள் என்று தெரிவதே சந்தோஷம்

      நீக்கு
  19. இங்கு தமிழே எம் மூச்சு தவறினால் எல்லாம் போச்சு. என்று ஒரு சில வியாபாரிகள் புறப்பட்டுள்ள நிலையில், இப்படி ஓர் பதிவு...!. நன்னெறி அய்யா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதற்கு நன்றி பெறத்தகுதியானவர் திரு யாழ்பாவாணனே அவர் போட்டுக் கொடுத்த கோடு ரோடாகிவிட்டது

      நீக்கு
  20. மொழிப்பற்று, மொழிவெறி இந்த இரண்டுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கு.

    எந்த மொழியில் சிந்திக்கறோமோ அதுவே நம் மொழி. அதையே தாய்மொழின்னும் வச்சுக்கலாம். தாய் பேசும் மொழி தாய்மொழின்னா.... ஒரே குடும்பத்தில் ஒவ்வொரு தலைமுறைத்தாயும் வெவ்வேற மொழி பேசும் காலமா இருக்கே இப்போ!

    //தட்டுங்கள் திறக்கப்படும் என்று விவிலியத்தில் கூறி இருப்பதை சற்றே மாற்றி தேடுங்கள் கிடைக்கும் என்னும் நிலை வந்திருக்கிறது .. //

    விவிலியத்தில் ஏற்கெனவே 'தேடுங்கள். கண்டடைவீர்கள்' என்று இருக்கே!

    பின்னூட்டங்களில் பலதும் சுவாரசியமான விளக்கத்துடன் இருப்பது எனக்கு ரொம்பவே பிடிச்சுருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துகளைப் படித்து ரசித்ததற்கும் நன்றி மேம்

      நீக்கு
  21. தமிழ்மொழி தாய்மொழி குறித்த தங்கள் சிந்தனையோட்டமும் தொடர்ந்து வந்திருக்கும் பின்னூட்டங்களும் பல்வேறு தளங்களில் கருத்துகளை வெளிப்படுத்துவதாக உள்ளன. அதிரா சொல்வது போல பிள்ளைகள் இப்போதெல்லாம் வளரும் சூழலுக்கேற்ப வேற்றுமொழிகளில் சிந்திக்க ஆரம்பித்துவிட்டதால் தாய்மொழி எதுவென்ற குழப்பம் கட்டாயம் வந்துவிடுகிறது.

    வெளிநாடுகளைப் பொறுத்தவரை தமிழகத் தமிழர்களை விடவும் ஈழத்தமிழர்களே தமிழ்வளர்ச்சிக்குப் பெரிதும் பாடுபடுகிறார்கள் என்பது மிகவும் உண்மை. என்னுடைய நூல் வெளியீட்டுக்கான முயற்சியை எடுத்து முன்னின்று நடத்தியதெல்லாம் ஈழத்தமிழர்களே.. விழாவுக்கு வந்திருந்தோரில் எண்பது சதவீதமும் அவர்களே.. தவறாமல் தங்கள் பிள்ளைகளை தமிழ்ப்பள்ளிகளுக்கு அனுப்பி தமிழ் பயிற்றுவிக்கிறார்கள். அடுத்தடுத்தத் தலைமுறைக்கு தமிழைக் கொண்டு செல்லும் முயற்சியில் கூட்டாக செயல்பட்டுக்கொண்டிருக்கின்றனர். இது மறுக்கமுடியாத உண்மை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வந்திருக்கும் கருத்துகள் அவரவர் பின்னணியைப் பொறுத்தே அமைந்திருப்பது காண்கிறேன் வெகு நாட்களுக்குப் பின் வருகை தந்ததற்கு நன்றி மேம்

      நீக்கு
  22. உங்கள் பதிவை காலையில் வாசித்ததுமுதல் ஒரே யோசனை எனக்கு எது தாய்மொழி என்று ..பிறகு ஒரு பதிவை இதைப்பற்றி நானும் எழுதி முடித்தபின் எனக்கு தோன்றுவது ..வீட்டில் பெற்றோர் பிள்ளைகளுடன் பேசும் மொழி அந்த பெற்றோர் அவர்களின் சிறுவயது முதல் பேசிவந்த மொழியே அந்த பிள்ளைக்கு தாய்மொழியாகிறது .இங்கே வெளிநாட்டில் பள்ளிகளில் சேரும்போது வீட்டில் என்ன மொழி பேசுகிறீர்கள் என்று கேட்பார்கள் வீட்டில் பேசும் மொழி தமிழ் என்றால் அதுவே தாய்மொழி ஆகிறது ..எங்கள் மகள் ஆங்கிலத்தில் சிந்தித்து தமிழில் பேசுகிறாள் அதனால் சில குழப்பங்களும் பேசுவதில் நேரிடாமலில்லை
    mum has allergy என்பதை அம்மா அலர்ஜி வச்சிருக்காங்க ,mom has fever என்பதையும் அப்படியே அம்மா பீவர் வச்சிருக்காங்க என்று சொல்வாள் .ஆனால் ஆங்கிலத்தில் சிந்தித்தாலும் தமிழில் தானே வெளிவருகிறது ஆகவே வீட்டில் புழங்கும் மொழி தாய்மொழி தானே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இம்மாதிரி சிந்தித்துப்பேசுவதால் மொழி சிதைகிறது என்பது என் தாழ்மையான கருத்து. இதுதான் சரி என்று அறுதி இட்டுக் கூறுவது சிரமம் அகராதியைப் பார்க்க வேண்டுமா.

      நீக்கு
    2. உண்மைதான் ..ஆனால் ஒரு வார்த்தை கூட தங்கள் தாய்மொழியில் பேச முடியாத பஞ்சாபி குஜராத்தி மற்றும் ஏனைய ஆசிய இங்குள்ள பிள்ளைகள் மத்தியில் இவள் இவ்வளவேனும் பேசுவது எங்களுக்கு பெருமையாக இருக்கும் ..
      அனால் தவறாக உச்சரித்தாலும் நாங்கள் திருத்தி விடுவோம் ..மேலும் பிறகு என்ற வார்த்தையை அவள் எங்கிருந்து படித்தாளோ தெரியவில்லை அப்புறம் என்பதற்கு பதிலாக பயன்படுத்துவாள்

      நீக்கு
  23. நல்ல சிந்தனைகள். தாய் மொழி என்பது மொழி மட்டுமல்ல, அது ஒரு கலாச்சாரத்துடன் இணைந்தது. தமிழ் நாட்டுக்கு என்று ஒரு கலாச்சாரம் அதாவது வாழ்க்கை முறை இருக்கிறது. அப்படியே ஒவ்வொரு நாட்டிற்கும் (பிரதேசத்திற்கும்) இருக்கிறது. ஒரு மொழியைப் பேசுவதனாலேயே அது ஒருவரின் தாய் மொழி ஆகி விடாது. அந்த மொழிக்குச் சேர்ந்த கலாச்சாரத்தையும் கடைப்பிடிப்பவர்கள்தான் அந்த மொழியைத் தாய்மொழி என்று கூறிக்கொள்ள முடியும். அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு குழந்தை ஆங்கிலத்தில் பேசினாலும் அவர்கள் எந்த கலாச்சாரத்தைக் கடைப்பிடிக்கிறார்களோ அதுதான் அவர்களின் வேர். அதைத்தான் அவர்களின் தாய்மொழி என்று கூறவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது மட்டுமல்ல. ஒருவன் தன்னைத் தமிழன் என்று கூறிக்கொள்ள வேண்டுமானால் அவனுடைய பெற்றோர்கள் மற்றும் அவனுடைய பெற்றோர்களின் பெற்றோர்கள் தமிழனாக இருக்க வேண்டும்.

      தவிர, தமிழ் கலாச்சாரம் மற்றும் தமிழ் மொழி வாழவேண்டுமானால் அது இந்த அரசியல் வாதிகளிடமிருந்து விலகி இருக்கவேண்டும்.

      நீக்கு
    2. சொன்னாலும் சொன்னீர்கள் சிறப்பான ஒரு கருத்து. உங்கள் அனுபவமும் வயதும் பேசுகிறது நன்றி சார்

      நீக்கு
    3. மொழியில் அரசியல் கலப்பு நிறையவே இருக்கிறது.அவர்கள்தானே முடிவு எடுக்கிறார்கள்

      நீக்கு
  24. "உலகில் முதல் தோன்றிய மொழி தமிழே!" என மின்நூல் தலைப்பிட்டேன். ஆயினும், சுமேரிய மொழி தான் உலகில் முதல் தோன்றியது என்றும் அறிஞர் ஒருவர் கூறுகின்றார்.
    http://www.ypvnpubs.com/2017/03/blog-post_24.html

    இப்பதிவு பலரைச் சிந்திக்க வைக்கிறது. மின்நூலில் வெளிவந்தால் உலகத்தாரைச் சிந்திக்க வைக்கும். தங்கள் பதிவைப் படித்தவர்கள் பலரும் தமிழ் மொழியை ஆய்வு செய்து எழுதுவார்கள்.

    எவரும் பிறமொழிகளைப் படிக்கக் கூடாது என்று எவரும் சொல்ல முடியாது. எல்லோரும் தமிழுக்கு முதலிடம் கொடுத்து உலகெங்கும் தமிழைப் பரப்பிப் பேண உதவலாமென இம்மின்நூல் முயற்சி.

    நானொரு சின்னப்பொடியன், என் கருத்தை ஏற்று இப்பதிவை ஆக்கியதை எண்ணி நான் தங்களைப் பணிந்து வணங்குகின்றேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் தூண்டுதல் இருந்திருகாவிட்டால் இதை ஒரு வேளை எழுதி இருக்கமாட்டேனோ. எல்லப்புகழும் உங்களுக்கே

      நீக்கு
  25. நல்லதொரு கட்டுரை. என்னைப் பொறுத்த வரை, எல்லா மொழிகளுமே வேண்டும். எத்தனை மொழிகள் தெரிந்திருக்கிறதோ அத்தனை நல்லது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் பிள்ளைகளைப் பார்த்து நான் பொறமைப் படுவேன் அவர்களுக்கு எல்லா தென் இந்திய மொழிகளிலும் பேச முடியும் அதுதவிர ஆங்கிலம் ஹிந்தி ஆகியவையும் தெரியும்

      நீக்கு
  26. உங்கள் தளம் Firefox Browser-இலும் திறக்கிறது. பிரச்சனை இல்லையே.....

    பதிலளிநீக்கு
  27. ஐயா , இந்த தாய்மொழி விஷயத்தில் தமிழ் நாட்டில் அதிக சிந்தனை வேண்டும்.
    திராவிடக் கட்சிகள் மிகவும் சுயநலத்திற்காக தமிழ் , தமிழ் என்றே பேசி
    மதுக்கடை மயக்கம் போல் ஆங்கில மயக்கத்தை
    உண்டு பண்ணி , தங்கள் வியாபார வசதிக்காக
    வேலை வாய்ப்புக்காக ஆங்கிலவழியே சிறந்தது.
    ஹிந்தியால் தமிழ் அழிந்து விடும் என்றே மூளைச்சலவை செய்துள்ளனர்.
    அவர்கள் கட்சித் தலைவர்கள் நடத்தும் பள்ளிகள் சண் சைன்,
    ஜெயா மெற்றிக் பள்ளி ,இன்னும் பல.
    இதில் மற்றொன்று அரசுக்கு சிலவு கல்வித்துறைக்கு அதிகம்.
    நான் பணியாற்றிய பள்ளியின் ஆசிரியர்கள் ௧௨௦. இப்பொழுது ௩௦ ஆசிரியர்கள் . காரணம் அரசுப்பள்ளியில் தமிழ்வழி , ஒரே குழந்தை பெற்று வளர்க்கும் பெற்றோர், தன் குழந்தையை அரசுப்பள்ளியில் சேர்ப்பதில்லை.
    அரசுப்பள்ளியில் ஆசிரியர்கள் நியமிப்பதில் தாமதம் . அதில் உள்ள பண விஷயம் . இப்பொழுது அரசுக்கு ௯௦ ஆசிரியர்கள் ஊதியம் இன்றைய ஊதிய விகிதத்தில் மிச்சம்.
    எனது தாய் மொழி தெலுங்கு. வளர்ந்தது மதுரை மாவட்டம் பழனியில் . படித்தது தமிழ் வழி. அதனுடம் அம்மா கோமதி ஜி
    ஹிந்தியின் மூலம் தான் வருமானம்.
    நானும் ஹிந்தி கற்றதால் ஹிந்தி ஆசிரியன்.
    எனக்குத்தமில் ஆர்வம் அதிகம் . ஆனால்
    கல்வியின் பிரதான நோக்கம் வாழ்வியல் பொருளாதாரம்.
    கம்பர் பெரும் புலவர் என்றால் தமிழ் மட்டுமா ? அவர் அறிந்த வடமொழியும் தானே.
    கண்ணதாசன் ஸ்ரீ சங்கராச்சாரியாரின் கனகதார ஸ்தோத்திரம்
    பஜ கோவிந்தம் போன்றவை தமிழில் எழுதி ஆன்மீகத்தொண்டு
    செய்தது வடமொழி ஞானமும் பெற்றதே.
    பாருக்குள்ளே நல்ல நாடு என்று பாரதி எழுதியதற்கு
    காரணம் சாரே ஜஹான் சே அச்சா ,ஹிந்துஸ்தான் ஹமாரா என்ற வாக்கியத்தின் தமிழாக்கம்.
    வேலை வாய்ப்பில்லாமல் ஒரு மொழி எப்படி வளரும்.
    வடமொழி அந்தணர்கள் மறந்தது ஆங்கிலேயர்கள் காலத்திய வேலைவாய்ப்பு. இப்பொழுது ஆக்ராஹாரம் காலி.
    ஒருவர் விமான நிலையத்தில் குடுமி வேஷ்டி கட்டி சந்தியாவந்தனம் செய்தால் செய்தி.
    மனிதன் நாயைக் கடித்தான் என்பதுபோல்.
    எத்தனைபேருக்கு ஆத்திச்சூடியும் திருக்குறளும் தெரியும்?
    இன்றைய சுட்டிவிகடன் குழந்தைகள் அண்ணாச்சி நிகழ்ச்சி பார்த்தால் இந்த சமுதாயச் சீர் கேடு புரியும்.
    அண்ணாச்சி :--நீ காலேஜ் போயி என்னம்மா செய்வே ?
    (மூன்றுவயது மழலையிடம் கேள்வி )
    குழந்தை _--காதலிப்பேன்.
    why this கொலைவெறி ..ஆஸ்கார்.
    சிந்திக்க. இது பாரதம் முழுவதும் உள்ள நிலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாருக்குள்ளே நல்ல நாடு என்று பாரதி எழுதியதற்கு
      காரணம் சாரே ஜஹான் சே அச்சா ,ஹிந்துஸ்தான் ஹமாரா என்ற வாக்கியத்தின் தமிழாக்கம்.எது முந்தையது சார் அதே அண்ணாச்சி நிகழ்ச்சியில் பச்சிளம் குழந்தைகள் அழகாகத்திருக்குறள்சொல்வதையும் கேட்டிருக்கிறேன்

      நீக்கு
  28. வணக்கம் ஐயா
    சர்ச்சைக்குறிய விடயத்தை கையில் எடுத்து இருப்பமைக்கு வாழ்த்துகள்.

    தாங்கள் சொல்வது போல தாய் ஒரு மொழியும், தந்தை ஒரு மொழியும் காலத்தின் கோலத்தால் இணைந்து விடும் சூழலில் குழந்தைக்கு தாயின் மொழியே தாய்மொழியாகி விடுகிறது அதுதான் வழி காரணம் தாய்தான் குழந்தைக்கு முதல் மொழி ஆசான் தந்தை இரண்டாவது இடத்துக்கு தள்ளப்படும் பொழுது மொழியும் அவ்வழியே சென்று விடுகிறது.

    அதேநேரம் தாய்க்கு கணவனின் மொழி முழுமையாக அறிந்து இருந்தாலும் குழந்தைக்கு போதிக்கும் பொழுது தன்மொழியே வரும் இது தவிர்க்க முடியாத நிலைப்பாடு

    உதாரணம் இன்றைக்கும் ராஜீவ் காந்தியின் மகளுக்கும், மகனுக்கும் இத்தாலி மொழி நிச்சயம் அறிந்திருக்கும் அதை வெளியில் என்னைப் போன்றோரிடம் பேசமுடியாது காரணம் எனக்கு இத்தாலி மொழி தெரியாது.

    மேலும் அவர்கள் நாட்டை ஆளத்துடிக்கும் பரம்பரையில் வந்தவர்கள் அதை பேசினால் மேலும் இந்தியனே அல்ல என்றும் எதிர்க்கட்சிகள் பிரச்சனை செய்யக்கூடும்.

    இதைப்போல இரண்டு ஜாதிகளின் கலப்பில் திருமணம் செய்தவர்கள் தனக்கு குழந்தை பிறந்தவுடன் தனது ஜாதியை அங்கு நிலைநிறுத்த முயல்கிறான் காதலிக்கும் பொழுது அவனுக்கு ஜாதி கண்ணுக்கு தெரிந்து இருக்காது தனக்கு மகன் பிறந்ததும் மகனின் பெயரோடு ஜாதியின் பெயரைச் சொல்லி இணைத்து பள்ளியில் சேர்க்கிறான்.

    நான் ஏன் இங்கு ஜாதியை இழுக்கிறேன் ?
    தமிழன் இன்றைய சூழலில் ஜாதிக்கு கொடுக்கும் முன்னுரிமை மொழிக்கு கொடுப்பதில்லை ஆனாலும் ஒருபுறம் தமிழர்களால் தமிழ்ச் கலாச்சாரம், பண்பாடு வளர்க்கப் பட்டுக்கொண்டே இருக்கின்றது இது உலகம் அழியும்வரை தொடரும்.
    தமிழை வைத்து ஆண்டவர்கள் இருக்கின்றார்கள் (நான் இறைவனைச் சொல்லவில்லை)
    தமிழை வைத்தே பிழைப்பு நடத்தும் கூட்டமும் இருக்கின்றது

    அதேநேரம் தமிழ் வாழ்க என்று கோசமிடுவதால் தமிழ் வளர்ந்து விடாது வீட்டில் குழந்தைகளுடன் தமிழில் பேசவேண்டும், இரண்டரை வயதில் தனது குழந்தை ஆங்கிலம் பேசவேண்டும் என்று ஆசைப்படுபவர்களே தமிழ் நாட்டில் அதிகம் ஐயா.

    எனது குழந்தைகள் இருவரும் கல்லூரி முடித்து விட்டார்கள் இருப்பினும் நான் ஓய்வு நேரத்தில் வீட்டில் கணினியில் தமிழ் தட்டச்சு சொல்லிக் கொடுத்து வருகிறேன், மகனுக்கு தமிழ் வாணன் என்று பெயர் வைத்து இருக்கிறேன், என்னால் முடிந்த தமிழ் வளர்ப்பு இவ்வளவுதான்.

    தமிழுக்காக உயிரைக் கொடுப்பேன் என்று சொன்ன அரசியல் தலைவன் யாரும் இறந்ததில்லை தொண்டன் கொல்லப்பட்டு, தியாகி ஆக்கப்பட்டே வருகிறான்.

    அபுதாபியில் ஒரு தமிழ்க் குடும்பம் தனது குழந்தைக்கு என்னை அரபி எழுதப்படிக்க சொல்லிக் கொடுக்க சொன்னார்கள் நான் தமிழ் எழுதப்படிக்க சொல்லிக் கொடுக்கிறேனே என்றதற்கு அதை வைத்து நாக்கு வழிக்கவா ? என்று என்னிடம் சொன்ன கணவன்-மனைவி இருவருமே தமிழர்-தமிழச்சியே இதன் காரணமாக எங்களுக்குள் வாக்கு வாதம் வந்து மனக்கசப்பு உண்டாகி பேச்சு வார்த்தை தடைபட்டு விட்டது.

    நான் சத்தமில்லாமல் என்னால் இயன்றவரை தமிழை வாழவைக்க கடைசிவரை முயல்வேன் மொழிப்பற்றுடன் ஆனால் மொழிவெறியனாகி சாகமாட்டேன் காரணம் இன்றைய தமிழர்களிடம் நன்றிக்கடன் இல்லை

    நாட்டுக்காக உழைத்த திரு. கக்கன் எல்லா இடங்களிலும் வெங்கலச் சிலையாக மிளிர்கிறார் ஆனால் அவரது மகன் நலமடைந்தும் 34 வருடமாக கீழ்ப்பாக்கம் மருத்துவமனையிலிருந்து அழைத்து செல்ல ஒரு நாதி இல்லை.

    பிழைக்க வந்தவனை தமிழன் என்று சொல்லி பாட்டு எழுதிக்கொடுப்பான் ஒரு தமிழன் அவன் கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்யும் மற்றொரு தமிழ்க்கூட்டம்

    இதுதான் தமிழ் நாடு

    தமிழ் வாழ ! அந்த தமிழோடு நாமும் வாழ !
    கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒவ்வொருவருக்கும் சிந்தனை ஒட்டம் ஒரே மாதிரி இருப்பதில்லையே ஜீ. சில எடுத்துக்காட்டுகள் பொதுவாகாதுமுன்னே சொன்னது போல் வந்து கருத்திட்டதற்கு நன்றி ஜி

      நீக்கு
  29. மிக மிக நிதானமாகப் படித்த கட்டுரை.வழக்கம் போல் பின்னூட்டம் பார்க்காமல் பதிலிடத்தான் நினைத்தோம் ஆனால் பல பின்னூட்டங்கள் ஆழமான பின்னூட்டங்கள் என்பதால் அதையும் பார்த்து எங்கள் கமென்ட் ரிப்பீட் ஆகாமல் இருக்க வாசித்தோம்... நாங்கள் சொல்ல வந்த கருத்துகள் அனைத்தும் ஏஞ்சலின், அதிரா, நெல்லைத் தமிழன், கீதமதிவாணண் சகோ, யாழ்பாவாணன், இபுஞா எல்லோரும் சொல்லிவிட்டார்கள், கில்லர்ஜி, கந்தசாமி ஐயா எல்லோருமே சொல்லிவிட்டார்கள்.

    யாழ்பாவணனின் கருத்தாகிய ஈழத்தமிழர், தமிழ்நாட்டுத் தமிழர் என்று பிரித்திட நாங்களும் நினைப்பதில்லை ஏனென்றால் இருவருமே ஒரு காலத்தில் ஒட்டித்தான் இருந்தட்னர். பின்னர் தான் இரு நாடுகளும் பிரிந்தது. அந்தக் கருத்து சரியானது என்று தோன்றுகிறது. அது போல வெங்கட்ஜி அவர்கள் சொல்லிய கருத்தை வலியுறுத்த விழைகிறோம். நம் தாய் மொய் அவசியம். அதில் பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும் என்றாலும் கூடவே பல மொழிகள் அறிந்திருந்தால் மிகவும் நலல்து. பிற இலக்கியங்களைத் தமிழில் மொழி பெயர்க்கவும் செய்யலாமே. அதை வாசிக்க அறிந்தால் அதனைத் தமிழிலும் அதன் கருத்தையும் எழுதலாமே. வாசித்தல் விரியுமே! அது மட்டுமல்ல பிழைகக்ப் போடும் இடத்தில் அந்தப் பகுதியின்மொழி அவசியம் தானே!

    தாய்மொழிப் பற்றி அவசியமே ஆனால் அது மொழி வெறியாக மாறுவதில் உடன்பாடு கிடையாது.

    துளசி: என்னை எடுத்துக் கொண்டால் நான் பிறப்பால் மலையாளிதான். ஆனால் பிறந்து வளர்ந்தது படித்தது 25 வயது வரை தமிழ்நாட்டில் என்பதால் எனக்குத் தமிழ் மீதான பற்றே கூடுதல். தாய்மொழி தமிழ் என்று சொல்லுவதும் வழக்கம். சே குமார் அவர்கள் பாலக்காட்டுத் தமிழர் என்று சொல்லியிருந்ததையும் மிகவும் ரசித்தேன். ஆனால் என் பிள்ளைகள் மலையாளம்தான் பேசுகின்றனர். நான் மலையாளம் கற்றுக் கொண்டதே 25 வயதிற்குப் பிறகுதான்...உங்கள் குடும்பம் ஒர் உதாரணம்...இப்படிப் பல சொல்லலாம்....
    நல்ல கட்டுரை சார். மிகச் சிறந்த கருத்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தஞ்சையம்பதியாரின் ஒரு பதிவுக்குப் பின்னூட்டமாக நான் நம் அரசர்களையும் அவர்களது வீர தீரப் பிரதாபங்களையும் படித்தும் எழுதியும்வ்வரும் நாம் ஏன்பிற மொழி அரசர்கள்பற்றி எழுதவோ பேசுவதோ இல்லை என்று கேட்டிருந்தேன் பிற மாநிலத்தில் நல்ல வல்ல அரசர்கள் இருக்க வில்லையா இதை நான் குறாஇப்பிடக் காரணம் நமதே எல்லாவற்றிலும்சிறந்தது என்னும் எண்ணம் நம் உதிரத்தில் ஊறிப்போய் இருக்கிறதுஎல்லா மொழிகளும் சிறந்ததே.ஆனால் நம் மொழி நம் கலாச்சாரத்தின் வெளிப்பாடு. அதில் வெறுப்பு என்னும் பேச்சுக்கே இடமிருக்கக் கூடாது பாராட்டுக்கு நன்றி சார்

      நீக்கு
  30. தமிழ் பேசும் ,தமிழ் வளர்ச்சிக்கு உறுதுணை புரியும் அனைவரும் தமிழர்களே !சுத்தமான தமிழ் உச்சரிப்புக்கு திரு .t.m. சௌந்தரராஜன் அவர்களை உதாரணமாக சொன்னால் யாராலும் மறுக்க முடியாதுதானே ?ஆனால் ,அவர் தாய்மொழி சௌராஸ்டிரம் !அவரைப் போன்றே எனக்கும் தாய் மொழி இரண்டு என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப் படுகிறேன் :)

    பதிலளிநீக்கு
  31. தாய் மொழி என்பது வேறு ஒரு மொழியில் வல்லமை என்பது வேறு நாம் எல்லோரும் பெருமை படத்தக்கவரே சௌந்திர ராஜன்

    பதிலளிநீக்கு
  32. 'பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே' – என்று பாடினார் மகாகவி சுப்ரமண்ய பாரதியார். இந்த வரியில் பெற்ற தாய் என்பதில். தாய் மொழி என்பதும் அடங்கும். ஒவ்வொருவரும் அவரவர் தாய்மொழியையும் பிறந்த நாட்டினையும் நேசிக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை.

    // தமிழ்நாட்டில் பிறந்தவர்கள் அல்லது இருப்பவர்கள் தமிழர்களா? தாய் தந்தை இருவருமே வீட்டில் தமிழ் பேசுபவர்களாக இருந்தால் மட்டும் தமிழர்களா? தாய் மொழி என்பதன் பொருளே சரியாகப் புரிந்து கொள்ளப் படுகிறதா?. //

    என்ற உங்கள் கேள்விக்கு ஓரிரு வரிகளில் பதில் சொல்லிவிட முடியாது..பிறப்பால் தமிழர்கள் என்பது ஒருபுறம் இருந்தாலும், இன்னொருபுறம் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்து, வீட்டிலும் வெளியிலும் தமிழ் மட்டுமே பேசும் அனைவரும் தமிழர்களாகவே கருத வேண்டும் என்றே நிலை உள்ளது.

    எனக்குத் தெரிந்து எனது நாயுடு நண்பர்கள் பலருக்கு அவர்கள் தாய்மொழியான தெலுங்கு, பேசவோ எழுதவோ தெரியாது. அவர்கள் வீட்டிலும் வெளியிலும் பேசுவது எழுதுவது எல்லாம் தமிழில்தான். நாயுடு என்பது ஒரு (ஜாதி) அடையாளப் பெயர். அவ்வளவுதான். இதே போல இங்கேயே குடியேறிவிட்ட மலையாளிகளும், தெலுங்கு பிராமணர்களும் சவுராஷ்டிரர்களும் அப்படியேதான். ஒரே இடத்தில் நெருக்கமாக வசிக்கும் இடத்தில் மட்டும்தாம் அவரவர் மொழியைப் பேசும் வாய்ப்பு உள்ளது. அதிலும் இன்றைய தலைமுறையில் தமிழ் மட்டும்தான். மற்ற மாநிலங்களில் தமிழர்களை விரட்டி அடிப்பது போல், தமிழ்நாட்டில் பிறமொழியாளர்களை பகைமை கொண்டு யாரும் விரட்டுவதில்லை.

    உங்கள் பதிவு அந்நாளைய ‘தனித்தமிழ் இயக்கம்’ தோன்றிய காலத்தே, தமிழ்நாட்டில் எழுந்த காலச் சூழலையும், கேள்விகளையும் நினைவு படுத்தி விட்டது. மேலும் ஒரு குளத்திற்குள் வீசிய ஒரு கல்லைப் போன்று, உங்கள் வாசகர் வட்ட நண்பர்கள் மத்தியிலும் சிந்தனை அலைகளைத் தோற்றுவித்ததில் மிக்க மகிழ்ச்சி.

    (மீண்டும் ஒருமுறை உங்கள் பதிவினையும், இதற்கான பின்னூட்டங்களையும் உங்கள் மறுமொழிகளையும் படிக்கலாம் என்று இருக்கிறேன்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா வணக்கம் எங்கே காணோமே என்றிருந்தேன் வருகைக்கு நன்றி உலகில் முதன் முதலில் தோன்றிய மொழி தமிழே என்னும் தலைப்பில் ஒரு மின்னூல் கொண்டு வருகிறார் திரு யாழபாவாணன் அதுகுறித்த சிந்தனையில் எழுந்ததே இப்பதிவு எத்தனை விதமாக சிந்திக்கிறார்கள் நான் என் அனுபவத்தையும் சிந்தனையையும் ஓடவிட்டேன் என் வீட்டில் எனக்குப் பின் தமிழ்மொழி இருக்குமா என்னும் சந்தேகம் உள்ளது. என் பேரக்குழந்தைகள் பேசுவது அல்லதுபுரிந்து கொள்வது தமிழானாலும் அதில் குப்பை கொட்ட முடியாதவர்கள் அயல் நாடுகளில் வசிப்போரின் நிலை எந்த விதத்திலும் இதைவிட மேம்பட வில்லை. மீண்டும் வாருங்கள்படியுங்கள்கருத்ட்க்ஹினைப் பகிருங்கள்

      நீக்கு
  33. வணக்கம் ஐயா...
    மிக நிதானமாக படிக்க வேண்டிய பகிர்வு...
    நாளை இரவு வாசிக்கிறேன்... தங்களைத் தொடர்பு கொள்ள மின்னஞ்சல் முகவரி கிடைக்குமா?

    பதிலளிநீக்கு
  34. நிதானமாக வாசித்து உங்கள் மேலான கருத்துகளைப் பகிருங்கள் என் மின் அஞ்சல் முகவரி
    gmbat1649@gmail.com

    பதிலளிநீக்கு
  35. வியாபாரம் தொடர்பாக பயணத்தில் உள்ளதால், தங்களை உடனே தொடர்பு கொள்ள முடியவில்லை...

    Google இலவசமாக தரும் நம் வலைத்தளத்தை Google brower-ல் பயன்படுத்துவது தான் நல்லது... முந்தைய எனது பதிவில் குறிப்பிட்டுள்ளேன்... எனது தொழிற்நுட்ப பதிவின் ஒவ்வொரு வரியும் மிகவும் முக்கியமானது... ஆனால் அதை யாரும் மேம்போக்காக மேய்வதுயோடு சரி... பரவாயில்லை... ம்...

    ஆடியோ இணைப்பு குறித்து மின்னஞ்சலில் சொல்லி இருந்தீர்கள்... அதைப் பற்றியும் ஒரு பதிவு உள்ளது... எனது தளத்தில் வலைத்தள நுட்பம் என்பதை சொடுக்கினால், "நேயர் விருப்பம்" என்கின்ற பதிவை தேர்வு செய்யவும்...

    (From Mobile)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுட்டி கொடுத்திருந்தால் தேட எளிதாயிருக்கும் இதுவரை ஃபயர் ஃபாக்சிலும் பதிவு வந்துகொண்டிருந்தது. இப்போதும் பிறரது பதிவுகள் ஃபயர் ஃபாக்சில் வாசிக்க முடிகிறதுஎன் பதிவை சொடுக்கினால் கணினியின் இடது பாகத்தின் கீழே waiting for gmbat1649.blogspot .in மற்றும் dot com என்று விட்டு விட்டு வருகிறது இது இதுவரை இல்லாதது அதைத்தான் குறிபிட்டிருந்தேன் . மேலும் படித்துப்பார்த்து புரிந்து கொண்டு செய்யும் அளவுக்கு எனக்கு தைரியமில்லைஅதனால்தான் வலைச்சித்தரின் உதவிநாடினேன்

      நீக்கு
  36. சரி... விசயத்திற்கு வருகிறேன்... நல்லதொரு பதிவு...

    பின்னுட்டங்கள் அனைத்தும் அவரவர் சிந்தனையில் நன்றாகவே உள்ளது... சிந்திக்க வேண்டிய வகையிலும் உள்ளது... எனது பாணியில் சொல்ல வேண்டியது என்றால் :-

    காற்றின் மொழி ஒலியா...? இசையா...?
    பூவின் மொழி நிறமா...? மணமா...?
    கடலின் மொழி அலையா...? நுரையா...?
    காதல் மொழி விழியா...? இதழா...?

    இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்...
    மனிதரின் மொழிகள் தேவையில்லை...!
    இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்...
    மனிதர்க்கு மொழியே தேவையில்லை...!

    ஐயா... கவனிக்க :- இயற்கையின் மொழிகளும், இதயத்தின் மொழிகளும் புரிந்து விட்டால் தான், அவன் மனிதன்...!

    (From Mobile)

    அவ்வளவு தான்... வேறு ஏதேனும் வலையில் பிரச்சனை என்றால் உடனே தொடர்பு கொள்ள வேண்டுகிறேன்...

    வியா"பார" இறுக்கத்திலிருந்து சிறிது நேரம் நிவர்த்தி செய்தமைக்கு நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வியாபார இறுக்கத்தில் இருந்த உங்களுக்கு சிரமம் கொடுத்துவிட்டேன் சட்டெனத் தோன்றியது உங்கள் பெயச்ர்தா ந் மேலும் பிரச்சனையா அணுகுங்கள் வலைச்சித்தரை என்பதே பதிவர்களின் எண்ணம்நீங்கள் சொல்வது போல் இயற்கையின் மொழிகளும் இதயத்தின் மொழிகளும் எல்லோருக்கும் புரிவதில்லை. இருந்தாலும் பேசி உறவாட மொழி என்று ஒன்று வேண்டும் அல்லவா அதில்தான் எத்தனை எத்தனை புரிதல்கள் நான் எழுதியதே யாழ்பாவாணனின் தமிழே உலகின் முதல் மொழி என்னும்கருத்துக்குப் பதில் சொல்லவே எதிர்பார்க்காத அளவு கருத்துகள் .இப்போது உங்கள் விளாக்கமும் எல்லோருக்கும் நன்றி சொல்லிக் கொள்கிறேன் இந்த ஆடியோ வைப் பதிவில்கொண்டுவர என்னால் முடியுமா தெரியவில்லை.

      நீக்கு
  37. மிகவும் நன்றாக இருக்கிறது

    பதிலளிநீக்கு
  38. உங்களது பதிவையும் ஆழமான பின்னூட்டங்கள் சிலவற்றையும் இப்போதுதான் பார்க்கிறேன். மேற்கொண்டு எழுதவா? காலதாமதம் ஆகிவிட்டதா?

    பதிலளிநீக்கு
  39. உங்கள் பதிவையும் ஆழமான பின்னூட்டங்கள் சிலவற்றையும் (?) இப்போதுதான் பார்க்கிறேன் மேற்கொண்டு எழுதுவது உங்கள் சௌகரியம் வருகைக்கு நன்றி சார்

    பதிலளிநீக்கு
  40. தங்களின் பகிர்வும் அதற்கான பின்னூட்டங்களும் நிறைய அறியத் தந்தன அய்யா.

    தாய் வழி மொழி என்பதைவிட நாம் பிறந்த மண்ணின் மொழியே நம் தாய்மொழி...

    தமிழ் வாசிக்க... எழுத என் பிள்ளைகளுக்குத் தெரியாது என்று சொல்வதில் நம்மில் பலருக்குப் பெருமை... இந்த வரிகளை இங்கு குடும்பத்துடன் இருக்கும் பலரிடம் பார்க்கலாம்... அவர்களும் பிள்ளைகளிடம் ஆங்கிலத்தில்தான் பேசுவார்கள்.

    இதில் மலையாளிகள் விதிவிலக்கு... அவர்கள் மலையாளத்தில்தான் அதிகம் பேசுவார்கள். ஒரு மலையாளி இன்னொரு மலையாளியைப் பார்க்கும் போது மலையாளத்திலும் இந்திக்காரர் இந்தியிலும் தெலுங்கர் தெலுங்கிலும் பேச, நம்மாட்கள் அவன் தமிழன் என்று தெரிந்தாலும் ஆங்கிலத்தில்தான் ஆரம்பிப்பார்கள்.

    எல்லா மொழியும் அறிந்திருந்தாலும் தாய்மொழி கொஞ்சமேனும் தெரிந்திருக்க வேண்டும் என்பதே என் எண்ணம்..

    நல்ல பகிர்வு.

    மின்னஞ்சல் கொடுத்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாம் பிறக்கும் மண்ணும் வளரும் மண்ணும் வசிக்கும் மண்ணும் பலருக்கும் வேறு வேறாக இருக்கிறதே எல்லா மொழிகளும் தனபாலன் சொல்வது போல் இதயத்தின் மொழிகளாக இருத்தல் அவசியம் வருகைக்கு நன்றி

      நீக்கு
  41. ஆழமாகச் சிந்தித்திருக்கின்றீர்கள். தாய் பேசும் மொழியே தாய்மொழி என்று ஜேர்மனியர் சொல்வார்கள். தாய்மொழி தமிழாக இருந்தாலும் எமது பிள்ளைகள் இதய மொழி ஜேர்மனி மொழியாகவே இருக்கின்றது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெகு நாட்களுக்குப் பின் உங்கள் வருகை மகிழ்ச்சி தருகிறதுதாய் மொழி பற்றி நிறையவே கருத்துகள் இருக்கிறது நன்றி மேம்

      நீக்கு
  42. பதில்கள்
    1. தமிழே உலகின் முதல் மொழி என்னும் தலைப்பில் எழுத வேண்டினார்கள் ஆனால் நான் பசுமாட்டுக்கதை மட்டுமே அறிந்தவன் எனக்குத் தெரிந்ததை எழுதி விட்டேன் உங்கள் பின்னூட்டமும் வரவும் மகிழ்ச்சி தருகிறது சார்

      நீக்கு
  43. பதிவுக்கு நன்றி..
    அன்புடையீர்!,
    இணையத்தில் எங்கும், *தமிழ் எழுத்துக்களில் மட்டுமே எழுதுங்கள்* . பிறமொழிச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களை கண்டுபிடித்துப் பயன்படுத்துங்கள்
    #தமிங்கிலம்தவிர்
    #தமிழெழுதிநிமிர்
    #வாழ்க #தமிழ்
    இதுபற்றியான விரிவான தகவல்களுக்கு => https://thaache.blogspot.com/2020/09/blog-post.html
    ÷÷ நபபலத

    பதிலளிநீக்கு