அங்கதன்
----------------
இலக்கியச் சுவை (அங்கதன் குறித்து)
ராமனின் கதையை ஒரே வாக்கியத்தில் எழுதி
பதிவிட்டிருந்தேன் பலரும் பாராட்டி கருத்துரை
தந்தனர் அதில் ஒருபின்னூட்டம் என்னைக்
கவர்ந்தது
(அங்கதனைக் காணோம் - என் பேவரிட் கேரக்டர்களுள் ஒன்று. 'தன் தந்தையை வஞ்சகமாகக் கொன்றவனை தினம் பார்த்தபடி அவனால் எப்படி பணிவிடை செய்யமுடிந்தது?' என்பதற்கான motivation இன்று வரைக் கிடைக்கவில்லை.) இந்தக் கருத்து திரு அப்பாதுரை எழுதியது நானும் எவ்வாறு அங்கதனை மிஸ்செய்தென் என்று தெரியவில்லை ஒரு வேளை அங்கதன்பாத்திரப்படைப்புஎன்னைக்
கவராது இருந்திருக்கலாம் எனக்கு ராமாயணக்கதை
புகட்டியவர்கள் அங்கதனைப்பற்றி அதிகம் அறியாதிருந்திருக்கலாம் வால்மீகி ராமயணத்தை அடிப்படையாகக்கதை
சொன்னதாலும் இருக்கலாம்
ஆனால் கம்பன் அங்கதனுக்கு ஒருமுக்கிய இடமே கொடுத்திருந்தான்
அங்கதன் பற்றி கம்பனில் நுழைந்து தேடியபோது ஒரு இலக்கியச்சுவையை நான் சுவைத்திருக்கவில்லை
என்றே தோன்றியது
அங்கதனைப் பற்றி அறிய புகுந்தபோது வாலி பற்றியும் இன்னும் சில விஷயங்கள் கிடைத்தது
ராமனுக்கு அனுமன் வாலி பற்றிக் கூறுவதாக வரும் இருபாடல்களைக்
கூறுகிறேன்
நாலு வேதம் ஆம் நவை இல் ஆர்கலி
வேலி அன்னவன் மலையின் மேலுளான்
சூலிதன் அருள் துறையின் முற்றினான்
வாலி என்று உளான்வரம்பு இல் ஆற்றலான்.
(
நான்கு வேதமாகிய பயிர்கள் வளர்வதற்கு வேலி போன்றவன்.
சூலப்படையுடைய சிவபெருமான் மீது.அளவற்ற பக்தி உடையவன்.அப்பெருமானின் இன்னருள் பெற்றவன்.எல்லை
இல்லா ஆற்றல் பெற்றவன்.)
கழறு தேவரோடுஅவுணர் கண்ணின் நின்று
உழலும் மந்தரத்து உருவு தேய முன்
அழலும் கோள் அரா அகடு தீ விட
சுழலும் வேலையைக் கடையும் தோளினான்.
(
வாலியின் ஆற்றலுக்கு எல்லை எது என்றால், அது அவன் கடலைக் கடைந்ததே ஆகும். தேவரும்
அவுணரும் பாற்கடலைக் கடைந்து களைத்த போது, இவன் ஒருவனே மந்தார மலை என்னும் மத்தின்
அகடு தேயக் கடைந்து காட்டினான் )
இந்தக் குறிப்பு அதிகம் அறியப் படாததோ, இல்லை கூறப் படாததோ
ஆகும்.
வாலி உயிர் துறக்கும்
போதுராமனிடம் வேண்டினானாம்
“ என் தம்பி சுக்கிரீவன் மலர்களில் உண்டான மதுவைக் குடித்து
அறிவு மாறுபடும் போது அவன் மீது
சினம் கொண்டு இப்போது என் மீது செலுத்திய அம்பாகிய யமனை செலுத்தாதிருக்க வேண்டும்” எனும் பொருள் படும் இப்பாடலும் என்னைக் கவர்ந்தது.
.
ஓவிய உருவ நாயேன் உளது ஒன்று பெறுவது உன்பால்
பூ இயல் நறவம் மாந்தி புந்தி வேறு உற்ற போழ்தில்
தீவினை இயற்றுமேனும் எம்பிமேல் சீறி என் மேல்
ஏவிய பகழி என்னும் கூற்றினை ஏவல் என்றான்.
வாலி இறக்கும் தருவாயில் தன் மகன் அங்கதனை அழைத்து வரக் கூறுகிறான்.சந்திர மண்டலம் வானிலிருந்து கீழே விழுந்து கிடக்க , அச்சந்திரன் மீது விண்ணிலிருந்து ஒரு விண் மீன் விழுந்தது போல தரையின் மீது விழுந்து கிடக்கும் வாலியின் மேல் அவன் விழுந்தான்”.எட்டு திக்கு யானைகளுக்கும் தோல்வியை உண்டாக்கியவன் இராவணன்.அவன் உள்ளம் உன் வாலின் தன்மையை நினைக்கும் போதெல்லாம்பட படவென அடிக்கும் அச்சம் ,இன்று நீ இறப்பதால் நீங்கி விடும் அல்லவா...” என்றெல்லாம் கூறிக் கலங்க,அதற்கு வாலி, இராவணனை வென்ற தன்னை வென்றதால் அது ராமன் செய்த நல்வினை என்று கூறி , ராமனிடம் அடைக்கலம் என்று அங்கதனை சேர்க்கிறான்.
இலங்கையின் மீது படை யெடுத்துச் செல்லும் முன் இராவணனிடம் அங்கதனைத் தூது அனுப்புகிறான் ராமன்..வாயுவின் மகனான அனுமன் இராவணனிடம் தூதனாகச் சென்றால்,அனுமன் அல்லாது இலங்கைக்குள் வந்து திரும்பும் வல்லமை உடையவர் வேறொருவர் இங்கில்லை என்று ராவணன் நினைக்கலாம் அல்லவா. அங்கதனே தக்கவன் என்று தேர்ந்தெடுக்கப் படுகிறான். தூது சொல்லாக சீதையை விடுவித்து உயிர் பிழைப்பதா இல்லை ராமன் அம்புகளால் பத்து தலைகளும் துண்டாவதா இதில் ஒன்றை ஏற்கக் கூறுமாறு இராவணனிடம் அங்கதன் கேட்க வேண்டும்
.. இராவணன் முன் தூதுவனாக வந்த அங்கதனைப் பார்த்து “இன்று இப்போது இங்கு வந்த நீ யார்.?வந்த காரணம் யாது. ?என் ஏவலாட்கள் கொன்று தின்பதன் முன் நானறியத் தெரிவிப்பாயாக,”என்று வினவ அங்கதனும் பற்கள் வெளியே விளங்கச் சிரித்தான்.
நின்றவன் தன்னை யன்னான் நெருப்பு எழ நிமிரப் பார்த்து இங்கு
இன்று இவண் வந்த நீ யார் எய்திய கருமம் என்னை
கொன்று இவர் தின்னா முன்னம் கூறுதி தெரிய என்றான்.
வன் திறல் வாலி சேயும் வாள் எயிறு இலங்க நக்கான்.
இந்திரனின் மகனும்,முன் காலத்தில் ஒப்பிலா இராவணன் என்பவனை,அவனது தோள்களுடனே வாலில் தொங்குமாறு கட்டி எல்லா திசைகளிலும் பாய்ந்து திரிந்தவனும் ,தேவர்கள் உண்ண மந்தார மலையாலே பாற்கடலைக் கடைந்தவனுமான வாலியின் மைந்தன் நான் என்று அறிமுகப் படுத்திக் கொண்டான்
.
இந்திரன் செம்மல் பண்டு ஓர் இராவணன் என்பான் தன்னை
சுந்தரத் தோள்களோடும் வாலிடைத் தூங்கச் சுற்றி,
சிந்துரக் கிரிகள் தாவித் திரிந்தனன்.தேவருண்ண
மந்தாரப்
பொருப்பால்
வேலைக்
கலக்கினான்
மைந்தன்
என்றான்.
என்நண்பனின்
மகன் நீ
உன்
தந்தையைக் கொன்றவனுக்கு நீ ஏவல் செய்யல் வேண்டாம் உனக்கு குரங்கினத் தலைவன் பதவி
நான் தருகிறேன் என்று அங்கதனைத் தன் வசம் ஈர்க்க முயன்ற ராவணனிடம்
வாய் தரத் தக்க சொல்லி என்னையுன் வசஞ்செய்வாயேல்
ஆய்தரத் தக்கது அன்றோ தூது வந்து அரசது ஆள்கை
நீ தரக் கொள்வேன் யானே இதற்கு இனி நிகர் வேறு எண்ணின்
நாய் தரக் கொள்ளும் சீயம் நல் அரசு என்று நக்கான்.
இவ்விடமொன்று கூற வேண்டும்
கம்பராமாயணப் பாடல்களில் பல இடங்களில் ஒருவரை தாழ்வாகஎண்ண நாய் என்னும் சொல்லை உபயோகித்த்ருக்கிறார் கம்பன்
அதை குற்ப்பிடப்போனால் தனிபதிவாகி விடும்
ராவணனை வென்று சீதையை மீட்டு அயோத்தி சென்று மகுடம்சூடும்போதுபலராலுமெடுத்தாளப்படும்பாடல்
இதோ
அரியணை அனுமன் தாங்க அங்கதன் உடைவாள் ஏந்த
பரதன் வெம் குடை கவிக்க இருவரும் கவரி பற்ற
விரை செறி கமலத்தாள் சேர் வெண்ணையூர்ச் சடையன் தங்கள்
மரபுளோர் கொடுக்க வாங்கி வசிட்டனே புனைந்தான் மௌலி.
கம்ப ராமாயணம் ஒரு இலக்கியச்
சோலை
இப்போதெல்லாம் பதிவெழுதபல விஷயங்கள் உள்ளடக்கியது கம்பனை முழுவதும் கற்று அறிய ஆவல் ஆனால்
என்ன படித்தாலும் கடல் நீரை பூனை
நக்கி குடிப்பது போல்தான் இருக்கிறது
இதைப்படிக்க அல்லது பார்க்க முத்லில் face book ல் லாக் இன் செய்ய வேண்டி இருக் கும்