Saturday, July 14, 2018

வரன் தேடல் ...?

         
                                                                 வரன் தேடல்........?
                                                                  -----------------------
பெண் பார்க்கும்  படலங்கள்
இப்பதிவுக்கு தொடக்கமாக  நான்பெண்பார்த்தவிவரம் முதலில்  ஒரு நாள் மாலை நான் தங்கி இருந்த இடத்துக்கு எதிரில் ஒரு இளம் பெண் நின்று கொண்டிருந்தாள் என் நண்பர்களில் ஒருவன்  யார் அந்த அழகி என்று கேட்டான்எனக்கு ஏன் கோபம்வர வேண்டும் அவளை நான் மனதால் வரித்து விட்டிருந்தேன்  அவளைப் பற்றி யாரும் பேசுவதை நான்பொறுத்துக் கொள்ள முடியவில்லை  அப்போடுதான் அறிந்தேன் நான்காதல் வயப்பட்டிருந்ததை  அதே பெண்ணை நான் கைப்பிடித்து மணம்செய்து ஆகிறது 54 வருடங்கள்
என் மூத்த மகனுக்கு திருமணத்துக்கு  பெண் பார்த்ததும் நினைவுக்குவருகிறது குடியிருப்பில் நாங்கள் இருந்தது மேல் தளத்தில்  எங்கள் வீட்டுக்கு நேர் கீழ்  இருந்த வீட்டுக்கு ஒருபெண் அடிக்கடி சைக்கிளில் வருவாள் பெண் பார்க்கலட்சணமாக  இருக்கவே எனக்கு நாமேன் அந்தப் பெண்ணை நம் மகனுக்குப்  பார்க்கக்கூடாது என்றுதோன்றியது  கீழ் வீட்டில் இருந்த பெண்ணைப் பார்க்க வருபவள் ஆதலால் அந்தப்பெண்ணிடம்  யார் என்று விசாரித்தேன் என் நண்பன் ஒருவன் மூலம் அந்தப்பெண்ணின் பெற்றோருக்கு என் ஐடியாவைத் தெரியப்படுத்தவேண்டினேன் 
பெண்ணின் பெற்றோருக்கும்  எங்கள் வீட்டில் சம்பந்தம் வைக்க விருப்பம் என்று  தெரிந்தது ஒரு நாள் பெண்ணின்  தந்தை என் வீட்டுக்கு வந்து திருமணம்பற்றிப்பேச ஆரம்பித்தார் அவருக்கு ஜாதகப்பொருத்தம் பார்க்க விருப்பம் என்று கூறினார்  அவர்கள் பார்ப்பது எனக்கு ஆட்சேபணை இல்லை என்றேன்  அவர்கள் ஜாதகம்பார்த்து பெண்ணுக்கு இன்னும் இரண்டு மாததுக்குள்  மணம் முடிக்க வேண்டும் என்பது ஜாதகப்பலன் என்றார் இப்படியாகஒரு நல்ல நாள் பார்த்து உற்றார் உறவினர் சம்மதத்துடன்  திருமணம்  நடந்தது ஏன் இத்தனை சீக்கிரம் மணம் என்னும்  கேள்வி எழுந்தது மகனுக்கு 25 வயதே ஆகி இருந்ததுசீக்கிரம்  திருமணம் நடந்தால் அவன் ஓய்வு பெறும் வயதுவரும்போது அவனது கடமைகள்செய்து முடிக்கப்பெற்றிருக்கும்என்பதே என்பதிலாக இருந்ததுஇப்போது அவனுக்கு 52 வயது  அவனது மகன்  திருமணத்துக்கு தயார்
நானும் என் மனைவியும் வேற்று சாதி மொழி என்றுஅமைந்து விட்டது இதை அறிந்தஎன் நண்பர் ஒருவர் இதே போல் இருக்கும் ஒரு தம்பதிகளுக்கு  ஒருபெண் இருப்பதாகவும் என் இரண்டாம்  மகனுக்குப் பார்க்கலாம் என்று கூறிவந்தனர்  பெண்வீட்டார்நல்ல வசதி உள்ளவர்கள் என்றும் திருமணம் முடிந்து மாப்பிள்ளையை வெளி நாட்டில் படிக்க வைக் தயாரென்றும்  கூறி என்னை  வற்புறுத்திக் கேட்டனர்  அப்போது நான் என் இரண்டாம் மகனுக்கு திருமணத்துக்குப் பார்க்கவில்லை என்று கூறி தவிர்த்து வந்தேன்   இருந்தாலும் உற்ற நண்பரின் மனம்நோகக் கூடாது என்று பெண் வீட்டாரை சந்திக்க ஒப்புதல்  கொடுத்தேன்   இதை வெறும் சாதாரண விசிட் என்றும் கூறினேன்  இருந்தும் நாங்கள் நானும் மனைவியும்  போனபோது தடபுடல் செய்துவிட்டார்கள் பெண்பார்க்கும் படலமாகவே நினைத்தார்கள் பெண்ணைப்பார்த்தபோது மிகவும் சின்ன வயதுப்பெண்ணாகத்தெரிந்தாள் பதினைந்து வயதே ஆகி இருந்தது ஆனால் பெரிய சரீரம் பத்தாவது கூட கரெஸ்பாண்டெண்டில்  படித்து வந்தாள் வேண்டாமென்பதை பக்குவமாகக் கூறினேன் பதினெட்டு வயதுக்கு முன் திருமணம்  சட்டப்படி தவறு என்று கூறினேன்  என்நண்பருக்கு மிகவும் வருத்தம்  எந்த அளவுக்கு என்றால் அவனது திருமணம் நடந்த போது அதற்கு அவர்கள் வரவில்லை…..! நான் விருப்பஓய்வு பெற்று வந்தபோது ஒரு முறை பேரூந்தில் ஒருபெண்ணைபார்த்து அவளை என் இரண்டாம்மகனுக்கு மணம் பேச  பின் தொடர்ந்து சென்றதும் இப்போது நினைவுக்கு வருகிறது இரண்டாமவனுக்கும்   ஒருநண்பர் மூலமே மணப் பேச்சு வார்த்தை நடந்தது இங்கும்  ஜாதகப்பொருத்தம் பார்க்க  வேண்டும் என்றார்கள் எனக்கு ஆட்சேபணை இருக்கவில்லை  இரண்டு மூன்று தினங்களுக்குப் பின் ஜாதகம் பொருந்த வில்லை என்று கூறினார்கள் அதற்குப்பின்  வேறு ஒரு சோதிடரிடம் காட்டி இருக்கிறார்கள் நல்லபொருத்தம் என்று கூறி மறுபடியும் வந்தார்கள் ஒரு நாள் பெண்ணைப்பார்க்க  அவர்கள் வீட்டுக்குச்சென்றேன்  பெற்றோர் இருக்கவில்லைபெண்மட்டும் இருந்தாள் அவ்ள் நாங்கள் யாரென்று யூகித்து விட்டாள் என்வீட்டுக்கு வர அழைப்பு விடுத்தேன் என்மகன் டெல்லிக்குச் சென்றிருந்தான் என்  மூத்த மகனது  திருமண வீடியோவைக் காட்டி அதன்  மூலம் என் இரண்டாம் மகனைப்பற்றிதெரிய வைத்தேன்  
பிற்கென்ன ஜாம்ஜாமென்று திருமணம்நடந்து 24 ஆண்டுகள் ஆயிற்று இது வரை கூறியது பெண்பார்க்கும் படலங்கள் என்வீட்டு சமாச்சாரம்  இப்போதுஎன் பேரன் அவனுக்கு அவனே பெண்பார்த்துவிட்டான்  பெற்றோர்களும் ஓக்கே கொடுத்து விட்டனர்

 திருச்சி குடி இருப்பில் இருந்தபோது ஒரு நண்பரின் தங்கைக்காக பிள்ளை வீட்டாருடன் லௌகிகம் பேசச்சென்றிருந்தேன் எல்லாம் ஓக்கேயாகவில்லை திருமணத்துக்கு கட்டில்பீரோ வகையறாக்களுடன்  அவர்கள்தேவை அதிகமாக இருந்து திருமணப்பேச்சு  முறிந்தது இன்னொருமுறை  தொழிற்சாலையில் அதிகாரியாக இருந்தவருக்கு என் அண்ணா மகளுக்காக பேசச் சென்றிருந்தேன் ஜாதகம் பொருந்தி இருந்தபோதும்   பெற்றோர் மகனுக்காக விலை பேசுவது போல் இருந்தது கேரளத்தில் இருந்தனர்  சொர்ண எதிர்பார்ப்பு கூடுதலாக இருந்துபேச்சு வார்த்தை முறிந்தது மணப் பையனுடன் இதுபற்றிப்பேசும்போது என்னசெய்வது பெற்றோர்  விருப்பம் என்று கூறி சமாளித்தார்  

50 comments:

  1. திருமணம் செய்து கொள்கிறவர்களுக்கு பிடித்தால் போதுமானது என்பது எனது கருத்து ஐயா.

    இடையில் நகையில் என்ன இருக்கிறது ?

    ReplyDelete
    Replies
    1. பெற்றோர் பார்த்து மணம்பேசும்போது மற்ற பொருத்தங்கள் முதலிடம்பெற்று விடுகின்றன

      Delete
  2. மனப் பொருத்தம் இல்லாத போது, எதுவுமே நீடிக்காது...

    ReplyDelete
    Replies
    1. மணம் முடித்தபின் மனப் பொருத்தம்பார்க்க முடியுமா பொறுத்துதான் போகவேண்டும்

      Delete
  3. எழுத்தில் மட்டுமல்ல, உங்கள் வாழ்க்கையிலும் நீங்கள் முற்போக்கான எண்ணம் மற்றும் செயல் வீரர் என்பதில் மிக்க மகிழ்ச்சி. பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. இதுவே தான் என் கருத்தும்.

      Delete
    2. சொல்வதும் செய்வதும் ஒன்றாயிருக்க முயற்சி செய்கிறேன்

      Delete
    3. @ ஜோதிஜி என் பதிவுகள் உங்களுக்கும் என் மேல் ஒரு அபிப்பிராயம் உண்டாக்கி இருக்கிறதே

      Delete
  4. உங்கள் பெண் பார்க்கும் அனுபவத்துடன் உங்கள் மகன்களுக்குப் பார்த்ததும் வித்தியாசமான அனுபவங்களாகவே தெரிகிறது.

    துளசிதரன், கீதா

    ReplyDelete
    Replies
    1. எனக்கு பெண்பார்த்தது தற்செயல் ஆனால் என் மகன்களுக்கு..... எனக்கு அது ஒரு அனுபவம்

      Delete
  5. உங்கள் பையனுக்குப் பெண் பார்த்தது பற்றி முன்னமேயே எழுதியிருக்கீங்க. அவரவர்க்கு என்று எழுதி வைத்ததுதான் நடக்கும். மணவாழ்க்கை நீண்டகால கமிட்மென்ட் என்பதை இருவரும் புரிந்துகொண்டு இறங்கினால் அதைப்போன்ற இனிமை அவர்களுக்கும இருவரின் பெற்றோருக்கும் கிடையாது.

    ReplyDelete
    Replies
    1. நம் வாழ்வில் பல இஃப் களும் பட் களும் இருக்கிறது ஆனால் நான் கூடியவரை அவற்றை நிர்ணயிக்க முயல்கிறேன்

      Delete
  6. நேரம் வந்து விட்டால் எல்லாம் கூடி வரும் என்பார்கள். குருபலன் இருக்கவேண்டும் என்பார்கள். ஜாதகத்தில் பார்த்திருந்தால் அந்நேரம் அப்படி இருந்திருக்கக் கூடும்.

    ReplyDelete
    Replies
    1. இங்கும் ஒரு இஃப் உலா வருகிறதே என் மகனுக்கு முதலில் ஜாதகம்பொருந்தவில்லை என்றார்கள் ஆனால் சில தினங்களில் வேறு ஒரு சோதிட ர் பொருந்தி இருப்பதாகக் கூறினாராம் யாரைத்தான் நம்புவது சோதிடமே ஒரு ஹேஷ்யமென்று நினைக்கிறேன்

      Delete
    2. ஜோதிடமும் மருத்துவம் போலத்தான். புரிந்துகொள்ளும் அறிவையும் அனுபவத்தையும் பொருத்தது. வெறும் புத்தக அறிவைக்கொண்டு செயல்பட்டால் குழப்பம்தான் மிஞ்சும்.

      Delete
    3. எனக்கும் கைரேகை கற்று பலன் சொன்ன நினைவுகள் வருகிறது என் சோதிடமும்சிலநேரங்களில் பலிப்பது போல் இருந்தது

      Delete
  7. இன்னாருக்கு இன்னாரென்று எழுதி வைத்தான் தேவன் அன்று...

    ReplyDelete
    Replies
    1. எங்கு எழுதி இருக்கிறான் என்னைப் பொறுத்தவரை எல்லாமே சால்ஜாப்பு

      Delete
  8. தலைப்பிலேயே எனக்கு சந்தேகம். வரன் என்றால் என்ன அர்த்தம்?.. அந்த வார்த்தைக்கு என்ன பொருள் கொள்கிறீர்கள் எதனால் அப்படிப் பொருள் கொள்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ள ஆசை.

    ReplyDelete
    Replies
    1. ஒரு டிபிகல் ஜீவியின் பின்னூட்டம் ..!

      Delete
    2. நான் தேடித் தெரிந்து கொண்டது:

      வரன் என்றால் தலை சிறந்தவன் என்று பொருளாம். வரணம் என்ற சொல்லே வரன் என்றாயிற்று என்று தெரிகிறது.

      தலைசிறந்ர்தவன் என்று ஆண்பாலில் சொல்வதினால்
      பெண்ணுக்கு மணம் முடிக்க ஆணைத் தேடுவது தான் வரன் என்றாலால், ஆணுக்குப் பெண்ணைத் தேடுவதை வரன் என்று சொல்ல முடியாது என்றாகிறது.

      அப்படியானால் ஆணுக்கு மணம் முடிக்க பெண் தேடுவதற்கு என்ன பெயர்?..

      Delete
    3. மணப்பையனை வரனென்றும் மனப்பெண்ணை வது என்று சொல்லிக் கேள்வி நன் சொல்ல வந்தது தெரிந்து விடும் என்பதால் விவரமாக உள்ளே போகவில்லை பதிவில் பெண்ணையும்பையனையும் தேடிய அனுபவம் பதிவாகி இருக்கிறதுவாசகர்கள் புரிந்துகொண்டது தெரிகிறது

      Delete
    4. வது!... கரெக்ட்..
      அடுத்த பதிவு வா..வா.. என்று அழைக்குமே உங்களை..!

      Delete
    5. நாச்சுரலி . அதுதானே வழக்கம்

      Delete
  9. சிலர் வரன் தேடி அலைய
    சிலர் வீட்டை வரன் நாடி வருகிறதே!

    சிறந்த பதிவு

    ReplyDelete
    Replies
    1. அதெல்லாம் அவரவர் வாங்கி வந்த வரம் என்பார்கள்

      Delete
  10. //சீக்கிரம் திருமணம் நடந்தால் அவன் ஓய்வு பெறும் வயதுவரும்போது அவனது கடமைகள்செய்து முடிக்கப்பெற்றிருக்கும்.// இது தான் எங்க வீட்டார் கருத்தும். எனக்கு முதல் பேத்தி பிறந்தப்போ எனக்கு வயது 45! அவருக்கு 52. பையருக்குத் தான் கொஞ்சம் தாமதம். அவர் எம்.எஸ் படிக்க அம்பேரிக்கா போயிட்டதால் தாமதம் ஆகி விட்டது. என் கணவரின் தம்பிக்கு 24 முடிவதுக்கு முன்னால் திருமணம். இப்போத் தான் அவருக்கு 62 வயது ஆகிறது.

    ReplyDelete
    Replies
    1. வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி....?

      Delete
    2. அதெல்லாம் இல்லை ஐயா! பொதுவாக எங்க வீட்டினர் கருத்தே பெண்ணுக்கு 20--22 வயதுக்குள்ளும், பிள்ளைக்கு 25--27 வயதுக்குள்ளும் திருமணம் செய்ய வேண்டும் என்பதே! என் கணவரின் அத்தை பையர்களுக்கு 22 வயதிலேயே திருமணம். இன்னும் என் மாமியார் வழி ஆண் உறவினருக்கும் 20 வயதிலே திருமணம்! :))))

      Delete
    3. என் கருத்தும் அதுவே

      Delete
  11. உங்க திருமணம் பற்றி ஏற்கெனவே சொல்லி இருக்கீங்க. உங்க மகன்கள் திருமணச் செய்திகள் இப்போத் தான் அறிந்தேன். பேரனுக்குப் பிடித்த பெண் அமைந்தது குறித்து சந்தோஷம். மகிழ்ச்சியான மணவாழ்க்கைக்குப் பிரார்த்தனைகள். கொள்ளுப்பேரன் விரைவில் பிறக்கவும் பிரார்த்தனைகள். அதுக்கப்புறமாக் கனகாபிஷேகம் பண்ணிக்கோங்க! நாங்கல்லாம் பெ'ண்'களூர் வரோம்.

    ReplyDelete
    Replies
    1. நண்பர் நெதவுக்கு என்மகன்களின் திருமணச் செய்திகள் தெரிந்திருக்கிறது நான் முன்பே எழுதி இருக்கிறேனா நினைவில்லை கனகா பிஷேகம் என் அண்ணன்மார்களுக்கே செய்யவில்லை என்பேரன் திருமணத்துக்கு பெண்களூர் வரலாமே

      Delete
    2. உங்க அண்ணன்மார்கள் எல்லாம் பிள்ளை வழிப் பேரன்கள் மூலம் கொள்ளுப் பேத்தி பெற்றிருந்தார்கள் எனில் அவங்களும் உங்களோடு சேர்ந்து செய்துக்கட்டும். ஒரு குடும்பமாய் நாங்க எல்லோரும் வரோம்! :)))) பேரன் கல்யாணம் எப்போ?

      Delete
    3. என் பெரிய அண்ணா இஸ் எ விடோயெர் இரு பெண்கள் அவர் தனியாக காலடியில் வசிக்கிறார் சின்ன அண்ணாவுக்கு ஒரு பெண் தத்தெடுத்தது எனக்கு இந்த மாதிரி கனகாபிஷேகம் செய்வடாக ஐடியா இல்லை என் பேரன் திருமணம் வருகிற அக்டோபரில் இஸ்கான் கோவில் சத்திரத்தில் நடத்த ஏற்பாடுகள் நடக்கின்றன அவசியம் வாருங்கள் மகிழ்வோம்

      Delete
  12. திருமண அனுபவங்கள் உங்களுடைய நல்மனதையும், உறுதியையும் எடுத்துக்காட்டுகின்றன.

    ReplyDelete
    Replies
    1. பராட்டுக்கு நன்றி சார்

      Delete
  13. நல்ல அனுபவங்கள்.

    உங்கள் பேரனின் திருமணத்திற்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. ஆம் ஐயா அனுபவங்களப் பகிர்ந்து வருகிறேனே

      Delete
  14. என் கணவரும் பணி ஒய்வு ஆகும் முன் மகள், மகனுக்கு திருமணம் முடித்து விட்டார்கள்.
    என் கணவருக்கும் எனக்கும் சீக்கிரம் கல்யாணம் ஆகி விட்டது.

    உங்கள் அனுபவ பகிர்வு அருமை.

    உங்கள் பேரனுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. இப்போதுஒரு கடமை முடித்த மகிழ்ச்சி இருக்குமே

      Delete
  15. வரன் தேடிய அனுபவங்கள் குறித்த பகிர்வு அருமை.

    பேரனுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. இன்னு சில அனுபவங்கள் உண்டு ஆனால் பதிவு நீண்டு விடும்

      Delete
  16. மனோ, பிரசாத் இருவரின் திருமண நிகழ்வுகள் இனிய நினைவு மீட்டல்கள். பேரனின் திருமணத்தை அடுத்து பேத்தியின் திருமணமும் விரைவில் நிகழும். மணமக்களுக்கு என் வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. அன்பின் உமேஷ் வருகைகு நன்றி நண்பர்கள் மீதும் அவர்கள் குடும்பத்தின் மீதும்காட்டும் அக்கறை மகிழ்ச்சி அளிக்கிறது

      Delete
  17. பருவத்தே பயிர் செய் என்னும் பழமொழிக்கேற்ப உங்கள் குடும்பத்தில் சரியான பருவத்தில் வாழ்கையை துவக்கியுள்ளீர்கள்.

    ஆனால் இன்றைய பெற்றோருக்கோ பெண் பிள்ளைகளுக்கோ ஏனோ இது புரிவதில்லை. காலம் தாழ்த்தி திருமணம் செய்து, பிறகு குழந்தை இல்லை என மருத்துவத்திற்கு லட்சக்கணக்கில் பணம் செலவழித்து உடல் மன பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கிரார்கள். மேலும் தாமத திருமணம் செய்துகொள்வோர்களில் பெரும்பாலோர் தன் வாழ்கை துணையுடன் ஒத்துப்போகும் மனநிலை இல்லாதவர்களாக இருப்பதால் மணமுறிவுகளின் எண்ணிக்கையும் கூடிகொண்டே போகிறது.

    பெண் 24 வயதுக்குள்ளும் ஆண் 28 வயதுக்குள்ளும் திருமணம் செய்துகொள்வது வெற்றிகரமான வாழ்கையை துவக்கும் முதல் படியாக இருக்கும் என்பது என் கருத்து.

    ReplyDelete
    Replies
    1. இன்றைய இளைய சமுதாயத்தினர் மணம் முடிக்கும் மு வாழ்க்கையில் நன்கு செட்டில் ஆவதை விரும்புகிறர்கள் வெகு சிலரே பெற்றோரின் விருப்பங்களுக்கு உட்படுகிறார்கள் அந்தந்த வயது போனால் அந்தந்த அனுபவங்கள் குறையும் வருகைக்கு நன்றி உங்கள் கருத்துரை இதற்கு முன்பும்பார்த்த நினைவு

      Delete
    2. ஆம். உங்களின் சில பதிவுகளுக்கு கருத்திட்டிருக்கிறேன்.

      செட்டில் ஆவது என்பதற்கு எந்த அளவுகோலும் கிடையாது. பெரும்பாலும் அடுத்தவரை பார்த்து சூடு போட்டுக்கொள்வது தான் நடக்கிறது. தன்னம்பிக்கை மற்றும் பிரச்சனைகளை சமாளிக்கும் தைரியம் இல்லாதவர்களே இப்படி சாக்கு சொல்லி திருமணத்தை தள்ளி போடுகிறார்கள் என்று நினைக்கிறேன்.

      தனக்கு என்ன தேவை என்பதை விட அடுத்தவரிடம் என்ன இருக்கிறது என்று பார்த்து வாழ்கை நடத்துவது தவறு என்பதை எப்போதுதான் மக்கள் புரிந்துகொள்வார்களோ?

      Delete
    3. என் நண்பனின் மகனிடமவன் திருமண்ம் பற்றிக் கேட்டேன் எனக்கு என் மனவி கேட்கும் போது ஒரு ஐஸ்க்ரீம் வாங்கிக் கொடுக்கவாவது முடிய வேண்டுமே அவன் அப்போதெ ஒரு டாக்டர்

      Delete
  18. பேரனின் திருமணம் குறித்த செய்தி ரொம்ப சந்தோஷம். வாழ்த்துக்கள்!

    உங்கள் மகன்கள் திருமணங்கள் குறித்து முன்பு ஒரு பதிவில் எழுதியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஏதாவது பதிவில் நினைவோட்டங்களில் எழுதீதி இருக்கலாம் எதில் என்று நினைவில்லை குறிப்பிட்டால் மகிழ்வேன்

      Delete