புதன், 25 ஜூலை, 2018

FROM ADOLESCENCE TO ADULTHOOD




FROM adolescence to adulthood


அந்த வயதில் 


எழுதுவதற்கு பொருள் தேடும் போது உதித்த ஐடியாதான் இது  வாழ்க்கையில் பல பருவங்கள் உள்ளன. ஓரோர் பருவதிலிருந்தும்   இன்னொரு பருவத்துக்கு மாறுவது இயல்பு ஆனால் எந்தநிகழ்வு அந்த மாற்றங்களை உணர்த்துகிறது  என்பது பெரிதும் சிந்தனையில் இருப்பதில்லை
சரி . நினைவில் இருப்பதை உணர முடிகிறதா
ஏன் இல்லை தவழும்பருவத்திலிருந்து நடக்கும் பருவம்நிகழ்வது நினைவில் இல்லாமல் போகலாம்  ஆனால் பள்ளிக்கு போய் வரும் அனுபவம் நினைவுக்கு வரலாம்  காதலிக்கும் பருவமும் காதல் தோன்றிய கணங்களும்  காதல் மனைவியுடன் தனித்து விடப்பட்ட நேரங்களும்மறக்காது என்று தோன்று  நினவில் நிற்கும்  சில நிகழ்வுகள் பருவ மாற்றத்தை தெரியப்படுத்தலாம் இப்பதிவுக்கு எழுத நான் நினைக்கும் பருவ மாற்றம் பிள்ளைப் பிராயத்திலிருந்து பெரிய மனிதன் ஆகும் பருவமாகும்
உனக்கு அந்தமாதிரி மாற்றம்தெரிவித்த நிகழ்வுகளை அசை போட்டுப் பாரேன்
 இதைப் படிக்கும் போதுசிலருக்கு இது ஏற்கனவே படித்ததாக தோன்றலாம்  எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக என்னைப் பற்றி எழுதி வரும் எனக்கு எழுதியதை விட்டு விட்டு  புதியதாகக் கற்பனை செய்துஎழுத முடியுமாசில சம்பவங்கள் அப்படித்தோன்ற வைக்கலாம்
இப்போது என்ன சொல்ல வருகிறாய்
ஒன்றும்சொல்ல வரவில்லை  பருவ மாற்றங்கள் நிகழ வைத்த சில சம்பவங்களைக் கூறப்போகிறேன் அவ்வப்போது கேள்விகளைக் கேள்  ஒரு வேளை அவை ஒரு கோர்வையாகச் சொல்லவைக்கலாம்  பிள்ளைப்
 பருவத்திலிருந்துஆண்மகனாக உணர வைத்த சில சம்பவங்களை எடுத்து விடேன்
நான் முதன் முதலாக வேலைக்குபோனபோது  நான் இன்னும் சிறுவன்தான் வளர்ந்த ஆண்மகனல்ல என்று கூறி எனக்கு வேலை கொடுக்காமல் திருப்பி அனுப்பினார்கள்
ஐயையோ பாவமே
உனக்குத் தெரியாது அந்த வலி எத்தனையோ கனவுகளுடன்   அரை நிஜாரிலிருந்து முழுக்கால் சராய்க்கு மாறி ஷூ அணிந்து  பெரிய மனுஷனாகக் காட்டிக் கொண்டாலும்  எதிரே இருப்பவர் என்னை எளிதில் யூகித்து  சின்னப்பையன் உன்னை  வேலைக்கு வைத்துக் கொள்ள முடியாது என்று நிராகரித்தபோது உண்மையிலேயே நான் சின்ன பிள்ளை மாதிரி அழுததே நான் சிறுவன் என்று காட்டிக்கொடுத்துவிட்டது
எப்போதுதான்  பெரிய மனுஷனாய் மாறினாய்
 நான் எங்கே மாறினேன்   என்னை மாற்றினார்கள் அதைத்தான் கூறப்போகிறேன்
பெங்களூரில் முதன்முதலாக  ஒரு வேலை கிடைத்தது உபயம் என் அக்காவின் மாமனார்  ஆனால் அந்தோ பரிதாபம்  ஒரு மாதம்  வெயிலில் நின்று உழைத்ததற்கு  சம்பளம் கிடைக்கவில்லை சின்னப் பையன் தானே என்று நினைத்தார்கள் போலும்  வேலை கேற்ற கூலி இல்லை என்றார்கள்  பார்க்க பூர்வ ஜன்ம கடன்
சின்ன வயதில் நிறையவே  ஏமாந்திருக்கிறாய் போல இருக்கிறது
ஏமாற்றம் என்று சொல்ல மாட்டேன்  எல்லாமே அனுபவ பாடங்கள்
You are digressing too much man தலைப்பை மறந்து விட்டாயா
இல்லை இல்லை ஒரு சேதி சொல்ல சில அடித்தளங்கள் தேவை என்று தோன்றியது
அப்பாவை நச்சரித்து மீண்டும்வேலை தேடத் தொடங்கினேன்
       கூனூரில் ஒரு ஓட்டல். மைசூர் லாட்ஜ் என்று பெயர். அதற்கு ஒரு அன்னெக்ஸ் கூனூர் ரயில் நிலையத்துக்கு எதிரில், சுமார் நூறு அடி உயரத்தில் இருந்தது. அதன் உரிமையாளர் கிருஷ்ண போத்தி. அங்கு வேலை செய்ய ஒரு படித்த , சற்றே ஆங்கிலம் பேசத் தெரிந்திருக்கும் இளைஞன் தேவை என்றும் தெரிவித்திருக்க, அப்பா அவரிடம் பேசி இருக்கிறார். என்னையும் அறிமுகப் படுத்தினார். என்னை வேலையில் சேர்த்துக் கொண்டார்கள். வாரம் ஆறு நாட்கள் வேலை. அங்கேயே தங்கி இருக்கவேண்டும். ஞாயிற்றுக் கிழமை வீட்டிற்குப் போய் வரலாம்.என் செலவு போக மாதம் ரூ.25/-சம்பளம். வேலையில் சேர்ந்து விட்டேன். அங்கு நான் தங்கி இருந்த நாட்கள் என்னை சிறிய பையனிலிருந்து, ஒரு இளைஞனாகவும் உலகம் தெரிய வழி செய்யும் வகையிலும் அமைந்தது.

                  காலையில் ஆறரை ஏழு மணிக்குள் நான் தயாராகி, கல்லாவில் இருக்க வேண்டும். சாதாரணமாக உள்ளஓட்டல்களிருந்து, சற்றே வித்தியாசப் பட்டதாக அமைந்திருந்தது. மேசை நாற்காலிகளுக்குப் பதில் சோஃபா.டீபாய்.இருக்கும்.  ஒரே நேரத்தில் இருபது நபர்களுக்கு மேல் சேவை செய்ய முடியாது. அங்கு அறை வசதிகள் இருந்தன. மாத வாடகைக்குத் தங்குபவர்கள் சிலர் இருந்தனர். ஒரு நாள் இரு நாள் தங்கிச் செல்வோரும் இருந்தனர். மொத்தத்தில் சற்றே போஷ்  ஆன இடமாக இருந்தது. என் வேலை கல்லாவைக் கவனித்துக் கொள்வதும், அறையில் தங்குபவரின் தேவைகளை பார்த்துக் கொள்வதுமாக இருந்தது. கூனூரின் மேல்தட்டு மத்தியதர  மக்கள் வந்து போயினர். அதிகக் கூட்டம் இருக்காது. இரவு ஒன்பது மணி வரை வேலையில் இருக்க வேண்டும்.

       வேலைக்குச் சேர்ந்த சில நாட்களிலேயே என்னிடம் இரண்டு கணக்குப் புத்தகங்களை பராமரிக்கச் சொன்னார்கள். ஒன்றில் சரியான வரவுக் கணக்குகளும், மற்றொன்றில் , அதில் இருபது சதவீதமே வரவாகக் காட்ட வேண்டுமென்றும்                                                                                                                கூறினார்கள். குறைந்த வரவு எழுதிய புத்தகமே விற்பனை வரிக் கணக்குக்குக் காட்டப்படும் என்றும் கூறினார்கள். அது தவறெனப்பட்டு நான் கூறியபோது, “சொன்னதைச் செய்” என்று கட்டாயப் படுத்தினார்கள் அப்போது மது விலக்கு அமலில்
இருந்தது. அறையில் வாடகைக்கு வருபவர்கள் மது பானங்களை உபயோகிக்கக் கூடாது. ஆனால் சில பெரிய மனிதர்கள் விதியை மீறுபவராகவே  இருந்தனர். நான் பார்ப்பதற்கு மிகச் சிறியவனாக இருந்ததால், யாரையும் கேள்வி கேட்க முடியவில்லை.  முதலாளியிடம் கூறினால் கண்டு கொள்ளாமல் இருக்கப் பணித்தார்கள். சில பெரிய மனிதர்கள் அவர்களுடைய மனைவி என்று கூறிக்கொண்டு சில பெண்களுடன் தங்குவார்கள். பகல் நேரங்களில் அந்தப் பெண்கள் காட்டும் அதிகாரம், என் தன்மானத்தை பாதிப்பதாக இருக்கும். மாத வாடகைக்குத் தங்கும் சிலர் அந்தப் பெண்களிடம் பேச முயற்சி செய்து, அவர்களைவசப்படுத்த முயல்வார்கள். அந்தப் பெண்கள் என்னிடம் புகார் கூற, நான் மாத வாடகை அறைவாசிகளிடம் ஏதாவது கேட்கப் போனால், அவர்கள் எனக்குப் பாடம் நடத்துவார்கள் அவர்கள் விலை மாதர்கள் என்றும் அவர்களை நான் மதிக்க வேண்டாம் என்றும் கூறுவார்கள். இந்த மாதிரி அறைகளில் தினமும் படுக்கை விரிப்புகளை மாற்றச் சொல்வார்கள். அந்த விரிப்புகள் காட்டும் கோலம், அங்கு நடந்தவைக்குச் சான்றாக இருக்கும். இந்த நாட்கள் adolescent
ஆக இருந்த நான் அடல்ட்- ஆக மாற பெரிதும் காரணமாக இருந்தன. உலக நடவடிக்கைகள் கொஞ்சம் கொஞ்சமாக எனக்குத் தெரிய வந்தது. இதையெல்லாம் நான் முதலாளியிடம் கூறினால் என்னைக் கடிந்து கொள்வார்கள். காலையில் தொடங்கும் பணி இரவு ஒன்பது வரை ஒரேமாதிரி, காப்பி, இட்லி, வடை தோசை, என்ற சொற்களோடும், அறை சுத்தம், தங்குபவரின் தகாத செயல்கள் இவற்றைப் பார்த்தும் ஒன்றும் செய்ய முடியாத சூழ்நிலை. வாரம் ஆறு நாட்கள் வேலை பார்த்தால்ஞாயிறு ஒரு நாள் மட்டும் வீட்டிற்குப் போய் வரலாம், என்ற நிலை. எல்லாம் சேர்ந்து எனக்கு சலிப்பை உண்டாக்கியது, இருந்தாலும் வீட்டின் நிலை அறிந்தும், எனக்கு வேறு வேலை கிடைக்க வாய்ப்பு குறைவு என்பதாலும் சகித்துக் கொண்டிருந்தேன். இந்த நிலையில், அங்கு வருவோர் சிலரிடம், நல்ல தொடர்பு இருந்தது. அதில் குந்தா ஹைட்ரோ பவர் ஸ்டேஷனில்வேலையிலிருந்த, எக்ஸிக்யூட்டிவ் எஞ்சினேர்,மற்றும், டெல்கோ கம்பெனியில் வேலையிலிருந்த ஒரு மார்கெட்டிங் மானேஜர், பர்மா ஷெல் கம்பெனி இன்ஸ்பெக்டர் ஒருவரும், முக்கியமானவர்கள். குந்தா ப்ராஜெக்ட்டில்  வேலை வாங்கித் தருவதாக ஒரு காண்ட்ராக்டருக்கு, சிபாரிசு கடிதம் ஒன்றை அந்த எஞ்சினீயர் கொடுத்தார். நானும் எங்கெல்லாமோ வேலைக்கு மனு போட்டுக்கொண்டிருந்தேன் .இந்த நிலையில் ஓட்டல் முதலாளியிடம் நான்   என்னுடைய வேலை நேரத்தைக் குறைக்கும் படியும்,,தவறான முறைகளில் கணக்கு வழக்குகள் எழுதுவதை என்னிடம் கட்டாயப் படுத்தாமல் இருக்கவும் முறையிட்டேன். அவர்கள் என்னிடம் எதையுமே பேச விரும்பவில்லை. என்னுடைய தந்தையார் மூலம் நான் வேலைக்கு வந்ததால், அவரை வந்து பேசச் சொல்ல சொன்னார்கள். இதற்கு என் தன்மானம் இடங்கொடுக்கவில்லை.வேலை செய்வது நான், என் தந்தை பெயரைச் சொல்லி மிரட்டுவது சரியல்ல என்று எனக்குத் தோன்றியது.அப்பாவிடம் சொன்னால் வருத்தப் படுவார்கள் என்பதாலும், குடும்ப நிலைமை நான் வேலைக்குப் போவதை தேவைப் படுத்துவதாலும், யாரிடமும் சொல்லாமல் நான் வேலையை விட்டு விலகுவதாக, என் முதலாளியிடம் கூறி எனக்குச் சேர வேண்டிய சம்பளப்பணம்  சுமார் ரூ. 20/- பெற்றுக் கொண்டு, என் பெட்டியுடன் கோயமுத்தூர் சென்றேன்.எங்காவது வேலையில் சேர்ந்து, அப்பாவை சமாதானப் படுத்தலாம் என்று எண்ணிக்கொண்டேன். அந்த முடிவு வாழ்க்கையில் முக்கியமான அனுபவங்களைப் பெற்றுத் தந்தது.
இன்னொரு நிகழ்வு நான்  அம்பர்நாத்தில்  பயிற்சியில் இருந்தேன்  ஓராண்டு காலத்துக்குப் பின் பாலக்காட்டில் இருந்தஎன் சிறிய தாயார்  தம்பிகளைப் பார்க்க விடுப்பில் போய் இருந்தேன்   அப்போது என் தம்பி ஒருவனுக்கு முதுகில் பெரிய கட்டிகள் புறப்பட்டு இருந்தது  அதற்கு மருந்தாக ஒரு எண்ணை  வேண்டும் என்று சொன்னார்கள் அது ஒலவக் கோடு ஜங்ஷனருகே கிடைக்கும்  என்றார்கள் நானொரு வாடகை சைக்கிளில் போனேன்  அவர்கள் குறிப்பிட்டுஇருந்த இடம்  ஒரு பாடத்துக்கு (வயல் வெளிக்கு  ) வெளியேஇருந்தது  எனக்கு வழி காட்டுவதாகஒருவர் முன் வந்தார் நான்  சைக்கிளை தள்ளிக் கொண்டுஅவருடன் சென்றேன்
எண்ணை வாங்கினாயா
அவசரப்படாதே  கோர்வையாக வரும் நினைவுகள் தடை படலாமெனக்கு வழிகாட்டுவதாகக் கூறிவந்தவர்  என்னை ஒரு வீட்டின் முன் நிறுத்தினார்
இங்கு எண்ணை கிடைக்குமா என்றேன்சப்தம் கேட்டு வீட்டிலிருந்து மூன்று நான்கு பெண்கள் வெளியே  வந்தனர் இவர்களில் உனக்கு யாரை பிடித்திருந்தாலும் சொல் அவர்கள் உனக்கு வேண்டிய சுகம் தருவார்கள்
எனக்கு முதன் முதலாக எங்கொ என்னவோ தவறு என்று தெரிந்தது

எண்ணை கேட்டு வந்தாலென்னவெல்லாமோ சொல்கிறாயே என்றேன்  எண்ணை எங்கே போகிறது இந்தப்பெண்களில் யார் உனக்குப்பிடித்திருக்கிறது
எனக்கு பயம் ஏற்பட்டு சைக்கிளைத் தள்ளிக் கொண்டுபோக முயற்சித்தேன் அந்த ஆள்  சைக்கிளை கெட்டியாகப் பற்றிக் கொண்டு நீ ஆண்பிள்ளையாடா  உனக்கு ----------------எல்லாம்  இல்லையாடா  என்று பேச ஆரம்பித்தான் நீ போகமுடியாது உன்னை இங்கே கூட்டி வந்திருக்கிறேன்  எனக்கு கொடுக்க வேண்டிய காசைக் கொடு என்று மிரட்டினான்  அவன் சற்றே ஏமாந்த நேரத்தில்  சைக்கிளுடன் ஓடினேன்  என் பின்னால் பல கெட்ட வார்த்தைகளுடன் சிறிதுதூரம்தொடர்ந்தான்  அப்போது தான்  நான் உணர்ந்தேன்   எப்பேர்ப்பட்ட சங்கடத்திலிருந்துமீண்டேன் என்று  நான் சிறுவனாக இல்லாமல் தோற்றத்திலும்   வளர்ந்து விட்டென்  என்று புரிந்தது


28 கருத்துகள்:

  1. அனுபவம் பலவிதம். அதிலும் கல்விப்பருவத்திலிருந்து வேலை செய்யும் பருவம் வரையிலான அனுபவம் ஒவ்வொருவருக்கும் வித்தியாசமாக இருக்கும்.

    இந்தத் தலைப்பில் இன்னும் தொடர்வீர்கள் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு சில அனுபவங்களின் தொகுப்பு நீங்கள் கல்ஃப் வேலையை விட்டதில் தொடர்பு முகவரி மாறி யிருக்கலாம் தெரிவிக்கலாம் அல்லவா

      நீக்கு
  2. தப்பித்த விதம் நல்லது... தொடருங்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியுமொரு அனுபவம் வருகைக்கு நன்றி சார்

      நீக்கு
  3. அந்த வயதில் அப்படி இருக்கிறீங்க....

    அனுபவங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏன் நன்றாய் இல்லையா வருகைக்கு நன்றிம்மா

      நீக்கு
    2. அப்படி இருக்கிறீங்க என்றால்.. சூப்பரா இருக்கிறீங்க என அர்த்தம் :), எம் ஜி ஆர் சாயலும் தெரியுது.

      நீக்கு
    3. எனக்கு எம் ஜி ஆரை விட ஸ்மார்ட் என்னும்நினைப்பு காம்ப்லிமெண்டுக்கு நன்றி அதிரா

      நீக்கு
  4. சிறுவன் இல்லை என்பதற்கான காலகட்டம் தொடர்கிறேன் ஐயா...

    பதிலளிநீக்கு
  5. 1967-ல் குன்னூரில் தொலைபேசி இலாகாவில் பணியாற்றியிருப்பதால் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் இரயில் நிலையத்துக்கு எதிரே இருந்த மைசூர் லாட்ஜ் பற்றித் தெரியும்.

    எண்ணைய் சமாச்சாரம் வாசிக்க வழுக்கிக் கொண்டு சென்றது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முன்பு என் சில அனுபவங்களை எழுதியபோதும் நீங்கள்தொலை பேசீல்சாகாவில் பணியில் இருந்ததைச்சொல்லி இருந்தது நினைவுக்கு வருகிறதுஎண்ணை சாமாச்சாரம் நான்வழுக்கி விழ இருந்ததை தடுத்திருக்கிற்து

      நீக்கு
  6. சில அனுபவங்கள் மறக்க முடியாதவை என்று தெரிகிறது. சில ஏற்கெனவே படித்த நினைவு இருக்கிறது. நடுவில் வரும் கேள்விகள் மட்டும் புதுசு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொதுவாக என் அனுபவங்களைப் பற்றி எழுதும் போது சில எழுத்துகள் தவிர்க்க முடியாதது

      நீக்கு
  7. திரைப்படத்திற்கு தேவைப்படும் காட்சிகள் போல உள்ளது.

    பதிலளிநீக்கு
  8. வாழ்க்கையிலிருந்து கதை பண்ணலாம்தானே கருத்துக்கு நன்றி சார்

    பதிலளிநீக்கு
  9. படத்தில் நாகேஸ்வரராவ் போல இருக்கிறீர்கள் சார் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் என்னைப் பொல்தான் என்று நினைக்கிறேன் எதிலும் ஒரு தனித்துவம் இருக்கும்

      நீக்கு
  10. நடு நடுவில் வரும் தன்னைப் பற்றிய விமரிசனம் மட்டுமே புதுசு. மற்றபடிபெரும்பாலான விஷயங்கள் ஏற்கெனவே படிச்சிருக்கேன். மீள் பகிர்வுக்கு நன்றி. நாம் மனம் வைச்சால் ஒழிய ஒருவரால் நம்மைக் கெடுக்க முடியாது என்பது உண்மை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சம்பவங்களைச்சொல்ல ஒரு முறை முன்பே சொல்லி இருந்தாலும் என்னை பற்றி அறிய ஒரு மீள் வாசிப்பு என்று எடுத்துக் கொள்கிறேன்

      நீக்கு
  11. முழுவதையும் வாசித்தேன் மனதுக்கு கஷ்டமாகிப்போனது .அந்த ஹோட்டல் அறை மாந்தர் காட்சிகள் அப்புறம் எண்ணெய் வாங்கப்போனபோது நடந்தது ..:( மனதை பாதிக்கும் சம்பவங்கள்
    ஆனால் சிலருக்கு இப்படி பாதித்த சம்பவங்கள் வடுவாகி நிற்கும் நீங்க வடுக்களை மருந்திட்டு அழித்து விட்டீர்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்போ பதிவுகளை சாதாரணமாக முழுவதும்வாசிப்பதில்லையா
      சில சம்பவங்களும் நிகழ்வுகளும் நம்மைத் தீட்ட உதவும் வடு ஏதும் இல்லை

      நீக்கு
    2. ஹா ஹா ஹா அஞ்சுக்கு இது தேவையா?:))...

      நீக்கு
    3. தேவை இல்லாதது எதையும் அஞ்சு கூறியதுய்போல் இல்லையே

      நீக்கு
  12. ஸ்வாரஸ்யமான அனுபவங்கள் தான். சில அனுபவங்கள் மறக்க முடியாதவை அல்லவா....

    பதிலளிநீக்கு
  13. ***எனக்கு பயம் ஏற்பட்டு சைக்கிளைத் தள்ளிக் கொண்டுபோக முயற்சித்தேன் அந்த ஆள் சைக்கிளை கெட்டியாகப் பற்றிக் கொண்டு நீ ஆண்பிள்ளையாடா உனக்கு ----------------எல்லாம் இல்லையாடா என்று பேச ஆரம்பித்தான் நீ போகமுடியாது உன்னை இங்கே கூட்டி வந்திருக்கிறேன் எனக்கு கொடுக்க வேண்டிய காசைக் கொடு என்று மிரட்டினான் அவன் சற்றே ஏமாந்த நேரத்தில் சைக்கிளுடன் ஓடினேன் என் பின்னால் பல கெட்ட வார்த்தைகளுடன் சிறிதுதூரம்தொடர்ந்தான் அப்போது தான் நான் உணர்ந்தேன் எப்பேர்ப்பட்ட சங்கடத்திலிருந்துமீண்டேன் என்று நான் சிறுவனாக இல்லாமல் தோற்றத்திலும் வளர்ந்து விட்டென் என்று புரிந்தது ***

    இதுபோல் அனுபவம் எனக்கு ஏற்பட்டதில்லை. பிறந்த ஊரிலேயே அந்த வயதில் வாழ்ந்ததால், இதுபோல் "ஸ்ட்ரேஞ்சர்" களிடம் மாட்டியது இல்லை. என்னை சுற்றி வாழ்ந்தவர்களில் கெட்டவர்கள் இருந்தாலும், என்னிடம் தரமாக நடந்து கொள்வார்கள். "படிக்கும் பையன்" ந்ம்மதான் கெட்ட்ப்போயிட்டோம், அவனாவது நம்மைப்போல் கெட்டுப்போகாமல் நல்லா வாழட்டும் என்று நினைப்பவர்கள்தான் நான் வளர்ந்த சூழலில் அதிகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன ஏது என்று அறியாத வயசு தெரிந்து கொண்டவைகள் எல்லாம்சில அனுபவங்கள் மூலமே யூ வேர் லக்கி வருகைக்கு நன்றி சார்

      நீக்கு