செவ்வாய், 3 ஜூலை, 2018

மீண்டும் பெண்களா



                                                       மீண்டும்  பெண்களா
                                                        --------------------------------
   
பலபிரச்சனைகளை சந்தித்து   சமாளித்து  சலித்துபின் சகித்து  கடைசியில் அதை ஏற்று  வாழும் ஜீவனுக்குப் பெயர் ஆண்
நான்  அலுவலகம் சேர்ந்தபோதுஒரு தொலைபேசி அழைப்பு வந்தது என் மனைவிதான் அழைத்திருந்தாள் 
இன்று என்ன தேதி 
நான் சொன்னேன் அக்டோபர் 13 
தொலை பேசி அழைப்பு  துண்டிக்கப்பட்டது
எனக்குள் ஒரு பயம்வந்தது  ஏன்  ஏன்  …..?
அவளது பிறந்தநாளா
குழந்தையின் பிறந்தநாளா 
திருமண  தினமா எரிவாயு புக் செய்ய வேண்டிய நாளா
ஏதாவது முக்கிய பொருள் வாங்க வேண்டுமா
அவளது பெற்றோரின் மணநாளா
பிறகு தேதி எதற்கு
மதியம் ஏதோ சாப்பிட்டதாகப் பேர் பண்ணினேன்
மாலை வீட்டுக்குள் நுழையும் போதே  என்மகன் எதிர்பட்டான்  அவனிடம்
வீட்டில் பூகம்பம்  புயல் ஏதாவது இருக்கிறதா எனக்கேட்டேன்
ஒன்று மில்லை எல்லாம் அமைதியாகத்தானிருக்கிறது எனறான்
ஏன் என்று கேட்டான்   காலயில் வந்த தொலைபேசிஅழைப்பு  பற்றி சொன்னேன்  அவன்  புன்னகை தவழ சொன்னான்   காலையில் காலண்டரில் சில தேதிகளைக் கிழித்து விட்டேன்   அம்மா சிறிது  கன்ஃப்யூஸ்  ஆகிவிட்டாள்  என்றான்                                           
 பெண்கள் மேல் எனக்கு எந்தக் காழ்ப்புண்ர்வுமில்லை பெண்கள் யாரும்  பொய்ங்க வேண்டாம்  பின் ஏன்  பெண்களைப் பற்றி அதிகம் எழுதுகிறேன்  அவர்கள் புரியாதபுதிர்கள்         
பெண்களைப் பற்றி அதிகம் புரிந்து கொள்ள முடியாமல் அவதிப்படும் நான் புரிந்து கொள்ள படித்ததை பகிர்ந்து கொள்கிறேன்.
உங்கள் புரிதல் எப்படி பகிரலாமே
.                            
1)  ஒரு ஆணும்  பெண்ணும் சாக்கலேட் பெட்டியிலிருந்து சாக்கலேட் எடுத்து உண்கிறார்கள்.ஒருவர் எடுத்த உடன் அதை மென்று தின்று விடுகிறார். அடுத்தவர் எடுத்துக் கடித்து உள்ளே என்ன இருக்கிறது என்று பார்க்கிறார்.
கடித்தவர் யார் ?------------------ஆணா     பெண்ணா.?

2.) ஒரு ஆணும் பெண்ணும் ஒரு விருந்துக்குச் செல்கிறார்கள்.. அங்கே ஒருவர் சந்திரனுக்குச் செல்ல அநேகம் பேர் விரும்புவதில்லை என்றார். நம் நண்பர்களில் ஒருவர் கருத்துக் கணிப்பின்படி அது சரியாகத்தான் இருக்கும் என்கிறார். மற்றவர் “அது சரியாக இருக்க வாய்ப்பில்லை. நான் .போக விரும்புகிறேன் “ என்கிறார்.
மற்றவர் கருத்தினை இப்படி கணக்கிடுபவர் யார்.?---------ஆணா    பெண்ணா.?

3) ஒரு கணவனும்  மனைவியும் ஹாலில் அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறார்கள். மாடியில் சற்று உடல் நலமில்லாத அவர்கள் குழந்தை உறங்கிக் கொண்டிருக்கிறது. “ குழந்தையின் உடல் நலம் குறித்து வருத்தப் பட்டுக் கொண்டிருக்கிறாய் அல்லவா.?கவலைப் படாதே. டாக்டர் எல்லாம் சரியாகி விடும் என்று சொல்லி இருக்கிறார்.
மற்றவரின் உள்ளத்தை முதலில் கண்டு கொண்டு ஆறுதல் கூறுபவர் யார்.? ஆணா  பெண்ணா ?

4) ஒரு கணவனும் மனைவியும் ஒரு ஹோட்டலில் உணவருந்திக் கொண்டிருக்கிறார்கள்.. ஒருவர் சாதாரணமாக உண்ணாத உணவு வகைகளை ஆர்டர் செய்கிறார். மற்றவர் வீட்டில் உண்ணும் உணவு வகைகளையே கேட்கிறார்..உணவில் வெரைட்டி தேடுபவர் யார்.? ------------------- ஆணா     பெண்ணா. ?

5)  அதே ஜோடி ஒரு கடைக்குப் போகிறார்கள்..அங்கே ஒரு பக்கம் வித்தியாசமான புதிய பொருட்களும் இன்னொரு பக்கம் சாதாரணமாக இருக்கும் பொருட்களும் வைக்கப் பட்டிருக்கின்றன. வித்தியாசமான பொருட்களால் கவரப் படுபவர் யார்.? ஆணா     பெண்ணா. ?


உங்கள் பதில் எந்த அளவுக்கு கீழ்கண்ட பதில்களுடன் ஒத்துப் போகிறது. என்று பாருங்களேன்.

1) பெண். ----டாக்டர் ஹெலென் ஹால் ஜென்னிங்ஸ் ப்ரூக்லைன் காலேஜ் பேராசிரியர் கூறுகிறார். ஆண்கள் தேவையற்றுக் குழப்பிக் கொள்ள மாட்டார்கள். பெண்கள் எல்லாவற்றையும் துருவுவார்கள்.

 2). பெண். --- மிச்சிகன் ஸ்டேட் யுனிவர்சிடிநடத்திய ஆய்வின்படிபெண் எப்போதும் தான் எண்ணுவதுதான் சரி என்று சப்ஜெக்டிவ் ஆக சிந்திக்கிறாள். ஆண் பரந்த மனதுடன் ஆப்ஜெக்டிவ் ஆக சிந்திக்கிறான். 

3) ஆண். ----பிட்ஸ்பர்க்  வெடெரன்ஸ் அட்மினிஸ்ட்ரேஷன் ஹாஸ்பிடல் சைகாலஜிஸ்ட் அநேக திருமணமான ஜோடிகளிடம் நடத்திய ஆய்வின்படி, ஆச்சரியப்படும்படி ஆண்களுக்கே மற்றவரின் உணர்வுகளை அறிந்து கொள்ள முடிகிறது என்று கண்டறிந்தார்.

4). பெண்.--- மார்க்கெட்டிங் கருத்தாராய்வுப்படி, பெண்களே புது உணவு வகையறாக்களை ருசி பார்க்க ஆர்வம் காட்டுகின்றனராம்.

5)  ஆண். ---புதிய வடிவமைப்பு, பாக்கேஜிங்  போன்ற வற்றால் கவரப் பட்டு தெரிந்து கொள்ள ஆணே ஆர்வம் காட்டுகிறான் என்று இன்ஸ்டிட்யூஷன் ஆஃப் மோடிவேஷனல் ரிசர்ச் தலைவர் டாக்டர் எர்நெஸ்ட் டிக்டர், கூறுகிறார்.









60 கருத்துகள்:

  1. நீங்க ஆங்கிலத்தில் வருபவற்றை (மேலைநாட்டினர்), தமிழ்ப்படுத்தும்போது அது நமக்கு அந்நியமாகத் தெரியுது.

    என்னதான் ஆண் 'குடும்பத் தலைவன்' என்றாலும், வாழ்க்கை, அவனை அடங்கிப்போக வைக்கும் காலத்தையும் கொண்டுவரும். ஹா ஹா ஹா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பால அடங்கிப் போவதைத்தானே சொல்றீங்க?:) ஹா ஹா ஹா பின்ன.. பெண்கள் எனில் அன்பால் விளைந்தவர்களாச்சே:)).. அடக்கிட மாட்டோமா?:))

      நீக்கு
    2. எந்த மொழ்யானால் என்ன சொல்லப்பட்டிருக்கும் விஷ யங்கள் ஆய்வின் அடிப்படை என்றுதான் கூறப்படுகிறதுதனிப்பட நபரின் அனுபவம் வேறாகலாம் சில ஆண்களுக்கு அடங்கிப் போவதே சௌகரியமாய் இருக்கிறது

      நீக்கு
    3. அடக்கு முறை எப்படியோ அனுபவிப்பது ஆண்கள்தானே

      நீக்கு
    4. @அதிரா - //அன்பால அடங்கிப் போவதைத்தானே சொல்றீங்க?:) // - திருமணம் ஆன ஆரம்பத்தில் கணவன் குடும்பத்தை வழிநடத்துவான், மனைவி கொஞ்சம் அடங்கித்தான் போவாள். வருடங்கள் சென்றபின்பு, மனைவிக்கு நம்மை விட அதிகம் தெரியும் என்பதைக் கணவன் புரிந்துகொண்டு (பெண்களுக்கே உள்ள நுண்ணறிவால்), அப்புறம் மனைவி சொல்லை ஓரளவோ அல்லது பெரும்பாலுமோ கேட்பான். இதற்கு விதிவிலக்குகள் இருக்கலாம்.

      நீக்கு
    5. என் அனுபவத்தில் வீடுகளில் ஆண்களின் அதிகாரம் இருப்பதுபோல் தோன்றினாலும் பெண்கள் ஆட்சியேநடக்கிறது மஹா ராஜனுலகை ஆளலாம் அந்தமஹாராஜனை மனைவி ஆளு வாள்

      நீக்கு
    6. அடக்கு முறை எப்படியோ அனுபவிப்பது ஆண்கள்தானே//

      ஸார் இது இருபாலாருக்கும் பொருந்தும். ஆண்கள் பெரும்பான்மை என்று சொல்ல முடியாது ஸார்....
      அதிரா சொல்லுவது போல் அன்பால் என்றால் ஓகே இல்லை என்றால் இரு பாலாருக்கும் பொருந்தும்

      கீதா

      நீக்கு
    7. அடக்குமுறை என்பதை ஒப்புக் கொள்கிறீர்கள் அனால் பெரும்பாலானவர்கள் பெண்களாலேயே அடக்கப் படுகிறார்கள்

      நீக்கு
  2. சமீபத்தில் பட்டி மன்றத்தில் கேட்டதை சொல்கிறேன் ஐயா.

    எல்லாமே தெரிந்து கொள்ளலாம் என்று நினைத்து காரியத்தில் இறங்கியவுடன் "உங்களுக்கு ஒண்ணுமே தெரியாது" என்று மனைவியிடம் சர்டிபிகேட் வாங்குவதற்கு பெயர்தான் திருமணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா நானும் கேட்டேன்:)).. உண்மையைச் சொன்னா உங்களுக்கேன் சுடுகுது?:))

      நீக்கு
    2. கில்லர்ஜி இருமனம் இணைவதுதான் திருமணம் என்றும் பட்டி மன்றத்தில் பேசுவார்களே அவர்கள் எந்தக் கட்சிக்காகப் பேசுகிறார்களோ அதைப் பொறுத்ட்க்ஹு பேசுவார்கள்

      நீக்கு
    3. நேரத்துக்கு ஏற்றாற் போல் பட்டிமன்றத்தில் பேசுவது உண்மையா

      நீக்கு
    4. கில்லர்ஜி பட்டிமன்றப் பேச்சை எல்லாம் அப்படியே எடுக்கக் கூடாது வாதங்கள் தாங்கள் எந்தக் கட்சியோ அதை ஒட்டி மாறும் ஹா ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
    5. இதைப் புரிந்து கொண்டவர்கள் ஏன் ஆய்வுகளை அப்படியே நம்பவேண்டும்

      நீக்கு
  3. 4. ஹோட்டலுக்கு போகும் போது நாம் வழக்கம் போல ஒரு ஆணியன் ரவா என்று ஆர்டர் செய்வோம் உடன் வந்த மனைவியோ வித்தியாசமான உணவுகளை ஆர்டர் செய்து டேஸ்ட் பார்த்து அது பிடிக்காமல் அதை நம்மிடம் தள்ளிவிட்டு நம்ம தோசையை புடுங்கி கொள்வார்கள் சரி வீட்டில்தான் நல்ல உணவை சாப்பிட கொத்து வைக்காமல் ஹோட்டலுக்கு வந்தாலு அதே கொடுமைதான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்க வீட்டுல நான் அவ்வளவாப் பிடிக்கலைனா மனைவி கிட்ட தள்ளிவிட்டு நான் வேறு ஆர்டர் செய்வேன். நீங்க என்னடான்னா, மாத்திச் சொல்றீங்க.

      நீக்கு
    2. அது ட்றுத்மாமியின் காண்ட்பாக்கில் பூரிக்கட்டை இருந்திருக்கலாம்:)).
      -----------------------------------------

      //எங்க வீட்டுல நான் அவ்வளவாப் பிடிக்கலைனா மனைவி கிட்ட தள்ளிவிட்டு நான் வேறு ஆர்டர் செய்வேன்.//

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..

      நீக்கு
    3. அவர்கள் உண்மைகள்-----ஆய்வின்படிதானே நிகழ்கிறது

      நீக்கு
    4. நெத --- எல்லா ஆய்வுகளும் நூறு சதவீதம்சரியில்லையே

      நீக்கு
    5. ஞானி சிரிப்பு சிரிப்பாய் வருதா

      நீக்கு
    6. ஹா ஹா ஹா ஹா நானும் உரையாடல் கண்டு சிரித்துவிட்டேன்

      கீதா

      நீக்கு
    7. பிறரது அனுபவம் சிரிப்பாய் இருக்கிறதா

      நீக்கு
  4. இன்றைய நிலையில் பதில்கள் மாறலாம்....

    பதிலளிநீக்கு
  5. முதலில் சொல்லி இருக்கும் கதை பலமுறை வாட்ஸாப்பில் வந்து படித்திருக்கிறேன்!

    பதில்கள் நான் முயற்சிக்கவில்லை. அது ஆளுக்கு ஆள் மாறுபடும் என்று தோன்றியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டிடி, ஸ்ரீராம் பதில்கள்தான் எனக்கும் வருது.. ஏனெனில் எங்கள் வீட்டிலும் புதுசு புதுசா ஓடர் பண்ணுவது நானல்ல:))

      நீக்கு
    2. நமக்கேன் வம்பு யார் என்ன சொன்னால்தான் என்ன நாம் பதில் சொல்லி யாரும் மனம் புண்படக்கூடாதுதானே ஸ்ரீ

      நீக்கு
    3. வீட்டில் கிடைக்காதது வெளியில் கிடைக்குமோ

      நீக்கு
    4. // நாம் பதில் சொல்லி யாரும் மனம் புண்படக்கூடாதுதானே ஸ்ரீ /

      அது உண்மைதானே ஸார்? வாதத்தில் ஜெயிப்பதா முக்கியம்? நட்பை மனம் வருந்தச் செய்யலாமா? அவரவர்களுக்கு தனித்தனிக் கருத்து உண்டே...

      நீக்கு
    5. பதிவில் கேட்கப்படும்கேள்விகள் யாரையும் நோக்கி அல்ல அவை எல்லாம் குறிப்பாக என்ன எண்ணப் படுகிறது என்பதைஅறியத்தானே இதிலெல்லாம் வாதம் பிரதிவாதம்பார்ப்பது சரியா ஸ்ரீ

      நீக்கு
    6. ///அது உண்மைதானே ஸார்? வாதத்தில் ஜெயிப்பதா முக்கியம்? நட்பை மனம் வருந்தச் செய்யலாமா? அவரவர்களுக்கு தனித்தனிக் கருத்து உண்டே...//

      ஹா ஹா ஹா ஜி எம் பி ஐயாவுக்கு இது தெரியப்படுத்தோணும் என்பது என் விருப்பமும்:))

      நீக்கு
    7. எனக்கு புரியாதது கருத்துச் சொன்னால் நட்புகளுக்கு மனம் வருத்தம் வருமா அவர்கள் என்ன தொட்டாற்சிணுங்கிகளா கருத்திச்சொல்வது வாதிடலா நிறையவே விஷயங்கள் பிடிபடுவதில்லை அவரவர் தனிக்கருத்தை சொல்லவே பின்னூட்டங்கள்

      நீக்கு
    8. ஓ முதலில் சொல்லப்பட்டது வாட்சப் கதையா? அனுபவம் என்று புரிது கொண்டேன்....

      கீதா

      நீக்கு
    9. பதிவுகளில் பகிரப்படுபவற்றை அனுபவம் என்று எடுத்துக் கொள்ளலாமா

      நீக்கு
  6. ////பெண்கள் மேல் எனக்கு எந்தக் காழ்ப்புண்ர்வுமில்லை பெண்கள் யாரும் பொய்ங்க வேண்டாம் பின் ஏன் பெண்களைப் பற்றி அதிகம் எழுதுகிறேன் அவர்கள் புரியாதபுதிர்கள்///

    ஹா ஹா ஹா.. பெண்களின் மனதைப் புரிந்து கொள்ள முடியாத ஆண்களுக்கு.. அது ஒரு புரியாத புதிர்தான்:).. அடுத்த பெண்களைப்பற்றி வேண்டாம்ம் தன் மனைவியையே புரிந்து கொள்ள முடிவதிலை எனச் சிலர் புலம்பக் கேட்டிருக்கிறேன்ன் அதுக்கு காரணம்.. இருவருக்குள்ளும் போதிய உரையாடலின்மை:).

    நீங்கள்கூட, திரும்ப ஃபோன் பண்ணி.. ஏன் எதுக்கு திகதி கேட்டீங்க? எனக் கேட்டிருந்தால் அன்றைய பொழுது மகிழ்ச்சியாகச் சென்றிருக்குமே:)).. நெகடிவ்வாவே ஜிந்திச்சிருக்கிறீங்க அன்று முழுவதும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ஹா ஹா ஹா:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனைவியைப் புரிந்து கொண்டதால் வரும் பயமே புயல் பூகம்பம் என் எதிர் நோக்குகிறது அதுநிகழாததும் புதிர்தானே எல்லம் ம்மனைவியிடம் இருக்கும் பயத்தால்தான்

      நீக்கு
    2. ஸார் நான் சொல்ல வந்ததும் இதுதான். கூப்பிட்டுக் கேட்டிருக்கலாம். முதலில் கேட்டிருக்க வேண்டாம் அப்படியே கேட்டார் என்றாலும் நீங்கள் குழப்பிக் கொள்வதை விட உடனே கேட்டிருக்கலாமே. என்று தோன்றியது. ஏன் மனைவியை பூகம்பம் புயல் என்று நினைக்கவேண்டும்?

      கீதா

      நீக்கு
    3. எல்லாமே அனுபவத்தின் விளைவே

      நீக்கு
    4. மனைவியிடம் ஏன் பயப்பட வேண்டும்? தப்பு செய்தால் தான் பயப்படணும்! அப்படி இருக்கும்போது தேவையில்லா பயம் ஏன்?

      நீக்கு
  7. ///ஆச்சரியப்படும்படி ஆண்களுக்கே மற்றவரின் உணர்வுகளை அறிந்து கொள்ள முடிகிறது என்று கண்டறிந்தார்.//

    இதில் எனக்கு நம்பிக்கை இல்லை, உள்ளுணர்வு அதிகம் இருப்பது பெண்களுக்கே என இன்னொரு ஆய்வு படிச்சேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்பாக்கள் எளிதில் ஆரையும் நம்பி விடுவார்கள்.. நம்பி, தம் பிள்ளைகளைக்கூட அனுப்பி வைப்பார்கள். ஆனா அம்மாக்கள் அப்படியில்லை.. அவர் பார்வையே சரியில்லை.. அவரோடு குழந்தையை அனுப்ப வேண்டாம் என கண்டுபிடித்துத் தடுப்பார்கள்.

      நீக்கு
    2. பல ஆய்வுகள் ஒத்துப் போவதில்லை என்பதும் சரி

      நீக்கு
    3. ஆண்கள் வெள்ளந்திகள் யாரையும்நம்புவார்கள் மனைவியையும் கூட

      நீக்கு
    4. //ஆண்கள் வெள்ளந்திகள் யாரையும்நம்புவார்கள் மனைவியையும் கூட//

      மாறுபட்ட ஆண்களை நான் சந்தித்திருக்கிறேன்!

      நீக்கு
    5. பொதுவாகக் கூறப்படுவதாகப்பொருள் கொள்ள வேண்டும்

      நீக்கு
    6. நான் சொல்ல வந்த கருத்துகள் அனைத்தும் இங்கு ஒவ்வொருவரும் சொல்லிவிட்டார்கள்.

      அதிராவின் இக்கருத்தே எனக்கும். அதே போன்று கீதாக்கா சொன்னது போல் குழந்தை உடம்பு சரியில்லை என்றால் கூடவே இருப்பதுதான் வழக்கம்.

      ஸ்ரீராம் சொல்லுவதையும் ஆ மோதிக்கிறேன்....

      அதே போன்று எனக்கும் வித்தியாசமான பொருட்கள் வாங்கப் பிடிக்கும். அதை எப்படி என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம்.

      சாப்பாட்டிலும் வெரைட்டி விரும்புவேன். ஹோட்டலுக்க்குச் சென்றால் கூட சாப்பிடாதது இருக்கிறதா என்று நானு என் மகனும் விழைவோம்.

      முதலில் சொன்னதற்கு. கீதாக்காவை வழி மொழிவேன். ரசித்துச் சாப்பிடுவேன். நானும் சரி மகனும் கொஞ்சம் கொஞ்சமாக சரி ரொம்பவே ரசித்து சுவைத்து மெதுவாகச் சாப்பிடுவோம்.

      நான் ஏன் அப்படிச் சாப்பிடுவேன் என்றால் அதில் என்ன பொருட்கள் இருக்கிறது வீட்டில் செய்ய முடியுமா அந்தச் சுவை அறிந்து என்று....

      கீதா

      நீக்கு
    7. ஒரு பிரச்சனை வலைப் பதிவு பின்னூட்டங்களில் என்னவென்றால்பலரும் பதிலில் தங்களையே அளவு கோலாக காண்கிறார்கள்

      நீக்கு

    8. //ஆண்கள் வெள்ளந்திகள் யாரையும்நம்புவார்கள் மனைவியையும் கூட//
      ஆண்கள் சொந்த மனைவியைக் கூட நம்பலைனா அப்புறம் யாரைத் தான் நம்புவார்கள்? கடைசி வரை
      கூட இருக்கப் போவது மனைவி தான்! அவளை நம்பலைனா வாழும் வாழ்க்கைக்கே அர்த்தம் இல்லை!

      நீக்கு
    9. பதிவில் சில கேள்விகள் அதற்கான வாசகர்களின் கருத்தையே கேட்கப்பட்டது

      நீக்கு
    10. ஞானிக்கான மறு மொழி அவுட் ஆஃப் காண்டெக்ஸ்ட் எடுத்தாளப்பட்டுள்ளது

      நீக்கு
  8. நீங்களே புரியாத புதிர் என்று கூறிவிட்டீர்களே ஐயா. அதற்கு மேல் நாங்கள் கூறமுடியுமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் எங்கே ஐயா கூறினேன் ஆய்வுகளை எடுத்துக் காட்டி இருக்கிறேன்

      நீக்கு
  9. தொலைபேசியில் அழைக்கும்போதே காலன்டர் தேதிகள் கிழிந்து விட்டது என உங்க மனைவி சொல்லிக் கேட்டிருக்கலாம்.நானாக இருந்தால் அக்கம்பக்கம் விசாரித்துக் கொள்வேன். இதுக்கெல்லாம் அலுவலகத்துக்குத் தொலைபேசித் தொந்திரவு செய்யவேண்டாம் என!

    எப்போவும் சாக்லேட், கடலை மிட்டாய் போன்றவற்றை அணு அணுவாக அனுபவித்து ர்சித்தே சாப்பிடணும்.
    உதாரணமாக லட்டுவை யாரானும் உதிர்த்து வைத்தால் எனக்குப் பிடிக்காது. அப்புறம் அந்த லட்டைச் சாப்பிடவே மாட்டேன். வேறே இருந்தால் சாப்பிடுவேன். இல்லைனா விட்டுடுவேன்.

    2.சந்திரனுக்கெல்லாம் எதுக்குப் போகணும்!

    3. உடல்நலமில்லாத குழந்தையின் அருகேயே உட்கார்ந்து புத்தகம் படிப்பேன். வேலை இருந்தால் தவிரக் குழந்தையைத் தனியே விட்டுச் செல்வதில்லை. இது அயல்நாடுகளுக்கு மட்டுமே பொருந்தும் என நினைக்கிறேன். நம் நாட்டுத் தாய்மார்கள் யாரும் குழந்தையைத் தனியே விட மாட்டார்கள்.
    அதோடு குழந்தைக்கு உடம்பு சரியில்லை என்னும்போது அப்பாவும், அம்மாவும் ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லிக் கொள்வது சகஜம் தான். இதில் மற்றவர் உள்ளத்தைக்கண்டு கொள்வது எங்கிருந்து வந்தது? தாய்க்கு இருக்கும் அதே அளவு கவலை தந்தைக்கும் இருக்குமே! யாருக்கு யார் ஆறுதல் சொல்வது? ஒருவருக்கொருவர் சொல்லிக்கணும்.
    இப்படிச் சொல்றேனே தவிர்த்து எங்க வீட்டில் குழந்தைகள் உடல் நலமில்லாமல் போனால் என்னை விட அவர் தான் அதிகம் புலம்புவார். அவருக்குத் தான் நான் தேறுதல் சொல்ல வேண்டி வரும். :)

    4.ஹோட்டல் விஷயத்தில் நான் தான் எப்போவுமே விதம் விதமாகப்பரிட்சை செய்து பார்ப்பேன். அவர் பாரம்பரிய உனவுகளையே நாடுவார்.

    5. ஹிஹிஹி, கடைக்குப் போனால் எங்கே உட்கார நாற்காலி இருக்குனு பார்த்து ஓரமாய்ப் போய் உட்கார்ந்துடுவேன். ஷாப்பிங் எல்லாம் அவர் பண்ணிட்டு வந்ததும் பில்லுக்குப் பணம் கட்டிட்டு சாமான்களை எடுத்துச் செல்ல உதவுவேன். :))))

    பதிலளிநீக்கு
  10. தொலைபேசியில் அழைத்துக்கேட்ட பின் (ஏன் தொலைபேசியில் அழைக்க வேண்டு மென்று குறுக்குக் கேள்விகள் கூடாது)கணவனின்மனநிலையும் பயமுமே காட்டப்பட்டிருக்கிறது ஏறத்தாழ கருத்தாய்வின் பதிலையே நீங்களும் கூறி இருக்கிறீர்கள்

    பதிலளிநீக்கு
  11. சுவாரஸ்யமான பதிவு. படித்து முடிந்தவுடன்,

    // ஆறு அது ஆழம் இல்ல
    அது சேரும் கடலும் ஆழம் இல்ல
    ஆழம் எது அய்யா
    அந்த பொம்பள மனசு தான்யா //

    என்ற சினிமா பாடல் வரி எனக்கு நினைவில் வந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல வேளை அவை சினிமாப்பாடல் வரிகளுங்கள் கருத்தானால் பல நட்புகள்மனம் நோகலாமாம்

      நீக்கு
  12. பெண்கள் புரியாத புதிர்கள்தான். ஆனால் அடிப்படையில் அநேக விஷயம் சொன்னால் சட்டென்று புரிந்து கொள்பவள் பெண் ஆணுக்கு ஒன்று ஒன்றாகச் சொல்லணும். :)

    பதிலளிநீக்கு
  13. உங்கள் புரிதல் சரியாக இருக்கலாம் எங்காவது ஏதாவது ஆய்வு நடந்திருக்கிறதா தெரியவில்லை வருகைக்கு நன்றி மேம்

    பதிலளிநீக்கு