சனி, 30 ஜூன், 2018

ஒரு பல்சுவைப் பதிவு


                                           ஒரு பல்சுவைப்பதிவு
                                            -------------------------------------
 சில அனுமானங்கள் தவறாகின்றன ஆண்டுக்கு ஒருமுறைதான் பூக்கும்
என்று நினைத்திருந்த பிரம்மகமலம் பூச்செடியில் ஒரே நேரத்தில்  பல மொட்டுகள அரும்பி இருந்தன அவற்றில் சில உதிர்ந்து விட்டன  இலையில் இருந்து அரும்பும் மலர்கள் இரவில் பத்து மணிக்குள் பூக்கின்றன என்றுதிருமதி ராமலக்ஷ்மியின் பதிவில்   படித்தேன்  இரவு ஒரு மணிவரை விழித்திருந்தும்  மொட்டு மலரவில்லை  ஏனோ தெரியவில்லை புகைப்படம் வெளிடுவதில் எங்கோ கோளாறு இருந்தது  சரி செய்து விட்டேன்   



                           -----------------------------------
என் வீட்டுக்கு வரும் பள்ளிக் குழந்தைகளுக்கு  என்னை பார்த்தாலேயே பயம் நான்  எதாவது கேள்வி கேட்டு விடுவேன் என்று பயம் பள்ளியில் மதிப்பெண் வாங்கப் படிப்பதன்கூட தெரிந்தும் படிக்க வேண்டும் என்றும் கூறுவேன்   உதாரணத்துக்கு  செண்டிகிரேட் அளவை ஃபாரன் ஹீட் அளவுக்கு மாற்றக் கேட்பேன்  உங்களுக்குஒன்று தெரியுமா செண்டிகிரேட் அளவும் ஃபாரன் ஹீட் அளவும் _40 டிகிரியில் ஒன்றுதான்  equinox  என்றால்  என்ன எப்போதுவரும்  வாசகர்களும்  தெரிந்து கொள்ளலாமே

                          ------------------------------------

Wilbur Sargunaraaj என்னும் பெயரைக் கேட்டிருக்கிறீர்களா யூ ட்யூபில் சென்று பாருங்கள்  சிலௌபயோகமான பதிவுகள் கிடைக்கும்  உதாரந்த்துக்கு இதைப் பாருங்கள் 
                                                 ------------------------------------------

திரை இசைப் பாடல்கள் பல பாட்டுகள் எனக்குத் தெரிவதில்லை ஆனால் தெரிந்த சிலபாடலகளை  உபயோகித்து ஒரு பதிவே எழுதி இருக்கிறேன்சுட்டியில் பாருங்கள்  நிச்சயம் ரசிப்பீர்கள்
                                      ---------------------------------------
சில இலக்கிய வரிகள் நினைவில்
பள்ளியில் கம்பராமாயணப் பாடல்கள் சில வரும்  அவற்றில் நினைவில் நிற்பவற்றுள் சில
கங்கை இரு கரைஉடையான்  கணக்கிறந்த நாவாயான் உங்கள் குலத்தனிநாதற்கு உயிர் துணைவன் உயர் தோளான்  வெங்கரியின்   ஏறனையான்  விற்பிடித்த வேலையினான்   கொங்கலறுந் நறுந்தொண்டார்க்கு  குகனென்னும் குறி உடையான்

 அஞ்சன வண்ணன் , என் ஆர் உயிர் நாயகனாளாமே   வஞ்சனையால் 
அரசெய்திய  மன்னரும் வந்தாரே செஞ்சரம் என்பன தீ உமிழ்கின்றன செல்லாவோ  உஞ்சிவர் போய் விடின்  நாய்குகன்  என்றென்னை  ஏசாரோ
 
எத்தனை எத்தனை பாடல்கள்  இலக்கண விதிகளுக்குஉட்பட்டு எழுத்யவை  ஹாட்ஸ் ஆஃப் டு கம்பர்   

அதிரப்பள்ளி  நீர் வீழ்ச்சி 

 கேரளத்தில்  சாலக்குடியில் என் சம்பந்தி இருக்கிறார்  அவர் எங்களை  அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி காண ஒரு முறை கூட்டிச்சென்றார்   வாழச்சால் எனும்  நீர்ப்பகுதியே (சாலக்குடி  ஆற்றின்   பகுதி) அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியாகிறது  வாழச்சால்நீர்  அதிரப் பள்ளி நீர்வீழ்ச்சியாக சுமார்  100 அடி உயரத்தில் இருந்து விழுகிறது பலரும்  வாழச்சாலில் இருந்தே  அதிரப்பள்ளி நீர் வீழ்ச்சியைக் காணுகின்றனர் எனக்கு கீழே இருந்து  நீர் வீழ்ச்சியைக் காண் விருப்பம்   செங்குத்தான மலைப்பகுதியில் இறங்குவது மிகவும் கஷ்டம்  அதுவும்   வயதானவர் செய்யக் கூடாத ஒன்று என்று பயமுறுத்தினார்கள் நான் அடம்பிடித்துக் கீழே இறங்கி நீர் விழுவதைக்கண்டேன் புகைப்படங்கள் ஏதும்  எடுக்க வில்லை  இருந்தால் என்ன  கூகிளார்  இருக்கிறாரே  காணொளியைக் கண்டு ரசியுங்கள்  
                                              -----------------------------------------------------------  




 

    

61 கருத்துகள்:

  1. கதம்பம் ஸூப்பர் ஐயா.
    சாலக்குடியில் ஆதிசங்கரர் மடம் இருக்கிறது.

    பல ஆண்டுகளுக்கு முன்பே கட்டியது இதில் எலக்ட்ரிசியனின் திறமையை காணலாம்.

    அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி நானும் போய் இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கில்லர்ஜி ஆதிசங்கரர் மடம் சாலக் குடியில் பார்த்த நினைவு இல்லை ஆனால் சாலக்குடி அருகே காலடி இருக்கிறது ஒரு வேளை அதைக் குறிப்பிட்டீர்களோ

      நீக்கு
  2. சாலக்குடி செய்தி எனக்குப் புதியது. அந்தப் பக்கம் எல்லாம் போக முடியுமானே தெரியலை. இப்போ பலரும் பிரம்ம கமலம் பத்திப் பதிவு போடுகிறார்கள். :))))) மற்றபடி பின்னர் வரேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிரம்ம கமலப் பதிவுக்குக் காரணம் கூறி இருக்கிறேனென்னாலும் இனி அதிரப்பள்ளி காண முடியுமா தெரியவில்லை

      நீக்கு
  3. கதம்பம் அழகாக இருக்கு.. அதிராவின் பெயரில் ஒரு நீர்வீழ்ச்சி.. மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதானே? அதிராவின் பெயரில் ஒரு நீர்வீழ்ச்சியா! அட!

      நீக்கு
    2. ஹ்லோ இது அதிரப்பள்ளி அதிரா பள்ளி அல்ல ஒரு வேளை அதிரா போன்றவர்கள் அந்த பக்கம் போகும் போது பூமி அதிர்ந்ததால் இதை அதிரப் பள்ளி என்று அழைத்தார்களோ என்னவோ

      நீக்கு
    3. ஸ்ரீராமுக்கும் ஆச்சரியம்.. ஆச்சரியக்குறி:).

      ட்றுத்துக்குப் பொறாமை:) தன் பெயரில ஒரு நீர் ஓடை கூட இல்லையே என ஹா ஹா ஹா:)..

      நீக்கு
    4. ஞானி அதிரா எப்படியாவது மகிழ்ச்சி இருந்தால் சரி

      நீக்கு
    5. ஸ்ரீராம் வேறு மாநிலச் செய்தி அந்த அட வில் எத்தனை உணர்வுகள்

      நீக்கு
    6. அவர்கள் உண்மைகள் --ஒரு சிறு சந்தோஷத்தைக் கெடுப்பானேன்

      நீக்கு
    7. கூல் கூல் அதிரா அவர் ஒரு உண்மை விளம்பி பொறாமையால் அல்ல தெளிவிக்க

      நீக்கு
  4. உங்களிடம் எனக்கும் சிறிது பயம் தான்... ஹா...ஹா... ஆனாலும் வித்தியாசமான சிந்தனையை எப்போதும் நினைத்து ரசிப்பேன்...

    காணொளி அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ///உங்களிடம் எனக்கும் சிறிது பயம் தான்..///

      ஹா ஹா ஹா சபை நாகரீகம் எல்லாம் பார்க்காமல் திருப்பி அடிச்சுப் போடுவார் எண்டுதானே பயம்?:))... ஆனா சிலருக்கு ஜி எம் பி ஐயா பயப்படுறார்போலவும் தெரியுதே:)) ஹா ஹா ஹா..

      நீக்கு
    2. டி டி ஒரு உண்மை சொல்லட்டுமா எனக்கு நீங்கள் தொலைபேசியில் என்னை மிரட்டுவீர்களோ என்று தான் எனக்குப் பயம்

      நீக்கு
    3. ஞானி நான் யாருக்குப் பயப்படுகிறேன் என்று நினைக்கிறீர்கள் என்னைப் பற்றிதானே தைரியமாகச்சொல்லலாமே

      நீக்கு
  5. லுங்கி கட்டக் கற்றுக்கொள்ளுங்கள்! உங்கள் இடுப்பினிலே...!!!!

    :)))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வில்பர் சற்குணராஜ் நிறையவே காணொளிகளில் பல விஷயங்களை பகிர்கிறார் பார்க்கலாமே

      நீக்கு
  6. கதம்பம் நன்றாக இருக்கிறது.
    காணொளி நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  7. கதம்பம் நல்லா இருக்கு. அதிரப்பள்ளி கண்ணை கவர்ந்தது.. என்னை கண்டாலும் பசங்க தெரிச்சு ஓடுவாங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் என்ன டீச்சரா இல்லை என்னைப்போல் கேள்விகள் கேட்பீர்களா

      நீக்கு
  8. நல்லதோர் கதம்பம். சற்குணராஜ் காணொளிகள் சில பார்த்ததுண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சற்குணராஜ் சொல்லாத சாதாரண செய்திகளே இல்லைபோல் இருக்கிறது

      நீக்கு
  9. உங்களை போலவே என் மனைவியின் பெரியப்பா அவரும் பெங்களுரில்தான் இருந்தார் அவரும் வீட்டிற்கு வரும் குழந்தைகளிடம் கேள்விகள் கேட்பாராம் அதனாலேயே குடும்பத்தில் பலருக்கு அவரை கண்டாலே கொஞ்சம் அலர்ஜி என்று சொல்லுவார்.

    ஒரு தடவை என் குழந்தையுடன் அவர் வீட்டிற்கு சென்று இருந்தோம் வழக்கம் போலவே என் குழந்தையிடம் அவர் கேள்வி கேட்டார் என் குழந்தையும் பெரியவர் என்பதால் மரியாதையாகவும் பணிவாகவும் தெரிந்ததை தெரிந்தது தெரியாததை தெரியாது என்ரு சொன்னாள்.
    அதன் பின் அடுத்த ரூமில் இருந்த என்னிடம் வந்து இந்தாளு எல்லாம் தெரிந்த மாதிரி கேள்வி கேட்கிறாரே நானும் பதிலுக்கு இவரிடம் எனக்கு தெரிந்த விஷயங்களில் இவரிடம் கேள்விகள் கேட்டால் பதில் சொல்லத் தெரியுமா என்று என்னிடம் சத்தமாக சொன்னாள். அது அந்த பெரியவர் காதில் விழ்ந்துவிட்டது அதன் பின் அவர் இவளிடம் கேள்விகள் கேட்பதையே வீட்டுவிட்டார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லவற்றுக்குக் காலம் இல்லை அதுவு ம் இப்போதைய ஜெனரேஷனிடம்

      நீக்கு

    2. அப்படி சொல்லாதீங்க....அவர்கள் தாத்தா என்று பாசத்தோட கிட்ட போகும் போது அவர்களிடம் கேள்விகேட்டு மட்டும் தட்டுவது சரியல்ல....அவர்களிடம் கேள்வி கேட்க ஆசிரியர்கள் இருக்கும் பொது இப்படி செய்வது சரியல்ல...தன்னிடம் வரும் குழந்தைகளிடம் எவ்வளவோ சுவராஸ்யமான விஷயங்களை பேசி மகிழ்வித்தால் அவர்கள் சந்தோஷமாக செல்வார்கள்தானே எனது மாமனரை என் குழந்தைக்கு ரொம்ப பிடிக்கும் காரணம் என் குழந்தைக்கு ஏற்று விளையாடி மகிழ்வார் அப்படித்தான் பெரியவர்கள் இந்த கால ஜெனரேஷன் குழந்தைகளிடம் இருக்க வேண்டும்

      நீக்கு
    3. கேள்வி கேட்பது மட்டம் தட்டுவதல்ல நம் குழந்தைகள் புரிந்து படிக்க வேண்டும் என்னும் ஆதங்கமே தெரியாததை கேள்வி கேட்டுப்பின் நானே விளக்கம்கூறி அவர்களை சகஜ நிலைக்கு கொண்டு வருவேன் விளையாட்டாகத்தான் என்கேள்விகள் இருக்கும் எப்படி யானாலும் கேள்விகளை இந்த ஜெனரேஷன் விரும்புவதில்லை என்று எனக்கு தெரியும்

      நீக்கு
  10. அதிரப்பள்ளி அருவிக்கெல்லாம் சென்றதில்லை...

    பல்சுவை.. அருமை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேரளாவே பசுமை நிறைந்த இடம் அதிரப்பள்ளி காண வேண்டிய இடம்

      நீக்கு
  11. பதிவிலும் வாசகர்கள்சில கேள்விகளுக்கு பதில் சொல்ல முயற்சிக்கலாம் என்று ரெழுதி இருக்கிறேன் சினிமாப் பாடல்களே ஒரு பதிவாகி இருக்கிறது திரை இசைப் பாடல்களை ரசிக்கும் வாசகர்களந்தப் பதிவுக்கே போக வில்லை போல் இருக்கிறது கம்பராமாயணப் பாடல்கள் பற்றியும் கருத்தில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல படித்த பெரியவர்களும் பதில் சொல்லத் தடுமாறு கேள்விதான் செண்டிகிரேட் ஃபாரன்ஹீட் கன்வெர்ஷண்

      நீக்கு
  12. அதிரப்பள்ளி காணொளி அருமை. இந்த நீர் வீழ்ச்சி பற்றியும் தெரியாது. முதல் முறையாகக்கேள்விப்படுகிறேன். கம்பன் பற்றி என்ன கருத்துக் கூற முடியும். அவன் அளவுக்கு என்னால் ஒரு வரி கூட எழுத முடியாது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கம்ப ராமாயணம் நூல் இருந்தும் முழுதுமாகப்படித்ததில்லை அங்கும் இங்கும் படித்ததுதான் பள்ளியில் படித்ததில் நினைவுக்கு வந்ததை எழுதினேன் ஒரு முறை கேட்டு வாங்கிய கதை சீடை ராமனை மன்னித்தாள் பதிவுக்காக ஒரு முறைபுரட்டியதுண்டு மீள் வருகைக்கு நன்றி மேம்

      நீக்கு
  13. அதிரப்பள்ளி அருமை. நேரில் சென்ற உணர்வு ஏற்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேரில் பார்த்தால் இன்னும் ரசிப்பீர்கள் வருகைக்கு நன்றி

      நீக்கு
  14. கதம்பம் நல்ல மணம். அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி வீடியோவை முழு திரையில் கண்டு ரசித்தேன். இதுபோன்ற நதி நீரோட்டத்தை எங்கள் பக்கம் காவிரியில் கண்டு ரொம்ப நாளாயிற்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போது காவிரிக்கு நீர் வந்திருக்க வேண்டுமே

      நீக்கு
    2. வரலையே! நான் எங்க குடியிருப்பு வளாகத்தில் இருந்தே பார்த்துத் தெரிஞ்சுக்க முடியும்! :))))இன்னிக்கு வரை வரலை. கொஞ்சம் போல் திறந்து விட்டது தான் வருது! மெலிதாக, மயிரிழை போல்! :(

      நீக்கு
    3. கர்நாடகம் தண்ணீர் திறந்து விட்டிருப்பதாகச் செய்திகள் ஒருவேளைமேட்டுரில் சேமித்துபிறகுதான் விடுகிறார்களோ என்னவோ

      நீக்கு
    4. அங்கே அணைக்கட்டு வழிந்தால் திறக்கிறாங்க. மறுநாளே தண்ணீரின் அளவைக் குறைச்சுட்டு மூடிடறாங்க! இதான் நடக்குது. மேட்டூரில் 50 அடித்தண்ணீர் கூட இல்லை! எங்கே இருந்து திறக்க முடியும்?

      நீக்கு
    5. த்ண்ணீர் அதிகமாக வந்தால் தமிழகத்துக்குத்தண்ணீர் அதனால்வெள்ளம் வந்தாலும் அவதிப்பட வேண்டியது தமிழ்நாடே

      நீக்கு
  15. அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி சென்று பார்க்க வேண்டும் என்று பல நாட்களாக ஆசை. எப்போது நிறைவேறும் என்று தெரியவில்லை.

    கம்பனை பற்றி கருத்து கூறும் அளவிற்கு மேதமை இல்லை.

    காணொளிகள் இனிமேல்தான் பார்க்க வேண்டும். வெளியூரில் இருக்கிறேன்.

    குழந்தைகள் என்ன, பெரியவர்களுக்கே கேள்விகள் கேட்பது பிடிக்காது. மற்றவர்களுக்கு பிடிக்காது என்பதற்காக நம் இயல்பை மாற்றிக்கொள்ள முடியுமா?

    பதிவு சுவை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்மை சோதிக்கிறார்கள் என்று தெரிந்தால் கேள்விகள் பிடிக்காதிருப்பதுஇயல்பு கம்பன் பற்றி கருத்து கூறாவிட்டாலும் சந்தங்களை ரசிக்கலாமே வில்பர் சற்குணராஜ் காணொளிகள் இணையத்தில் நிறையவே இருக்கின்றன வெகு சாதாரண விஷயங்களையும் சுவாரசியமாக பதிவிடுகிறார்

      நீக்கு
  16. கீதா அக்கா, அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி பல திரைப்படங்களில் வந்திருக்கிறது. புன்னகை மன்னன் படத்தில் கமலும் ரேகாவும் ஒன், டூ, த்ரீ, என்று கூறி குதிப்பார்களே அது இங்குதான். நிறைய மலையாள படங்களிலும் வந்துள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓஹோ! இது எனக்குப் புதிய செய்தி! மலையாளப்படங்கள் குறிப்பாய்ச் சிலது தான் பார்த்திருக்கேன். மற்றபடி உங்களுக்கு வாட்சப்பில் செய்தி அனுப்பி இருக்கேன். நேரம் இருக்கையில் பார்க்கவும். :)))))

      நீக்கு
    2. புன்னகை மன்னன் காட்சி இங்குதான் என்பது எனக்கு புதிய செய்தி

      நீக்கு
    3. வாட்ஸாப்பில் செய்தியையும் நினைவு படுத்த வேண்டுமா

      நீக்கு
  17. நல்ல தொகுப்பு.

    பிரம்மக் கமலம் ஆண்டுக்கு ஒரு முறைதான் பூக்கும் என்கிறார்கள். ஆனால் ஒரு பூதான் பூக்கும் எனச் சொல்லவில்லை. தோழி வீட்டில் ஒரே செடியில் பத்துப் பூக்கள் பூத்திருந்ததை ஒருமுறை பகிர்ந்திருக்கிறேன்.

    என் வீட்டில் பூக்க ஆரம்பித்த பிறகு, வருடம் ஒரு முறையே
    செடி பூக்கிற காலமாக உள்ளது. இது மாறுபடவும் செய்யலாம்.

    மொட்டு ஓரளவுக்கு பெரிதானதும் ஓரிரு நாட்களில் பூக்கும். எல்லா மொட்டுகளும் ஒரே நாளில் பூத்தன ஒரு முறை. இந்த முறை அடுத்தடுத்த நாட்களில் பூத்தன. இரவு 9 மணியிலிருந்து 12 மணிக்குள் பூத்து விடும். ஒரு வேளை பூத்ததை நாம் பார்க்கத் தவறி விட்டிருந்தால் அடுத்த நாள் காலையில் அப்படியே மூடிக் கொண்டு விடும். சென்ற வருடம் அப்படி ஆயிற்று. ஆனால் செடி விட்ட மொக்கு பூக்காமல் போகாது. படத்தில் இருப்பது பூத்து பிறகு மூடிக் கொண்டதோ, தெரியவில்லை.

    அதிரப்பள்ளி நீர் வீழ்ச்சி வெகு அழகு.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல்லச் செடிகள் என் வீட்டில் உள்ளன பல்வும் பூத்திருக்கிறது ஒரே நேரத்தில் ஒரே செடியில் பல மொட்டுகளைப் பார்த்தேன் பல மொட்டுகள் உதிர்ந்து விட்டன, இரு மொட்டுகள் பூக்கும் நிலையில் இருக்கிற து லக் இருந்தால் பூத்துப்பார்ப்பேன் செடியின் இலையிலிருந்து பூ துளிர் விடுவதையும்காண்கிறேன்

      நீக்கு
  18. திரையிசைப் பாடல்களில் கடைசியாக, 'இறந்தவனைச் சுமந்தவனும் இறந்துட்டான் அதை இருப்பவனும் எண்ணிப்பார்க்க மறந்துட்டான்' பாடலையும், 'சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே' என்பதையும் சேர்த்திருக்கலாம்.

    நீர்வீழ்ச்சி அருமையா இருக்கு. படங்களிலும் வந்திருக்கிறது.

    குகனைப் பற்றிய கம்பன் பாடலை ரசித்தேன். நீங்கள் எழுதியதில்,
    நறுந்தொண்டார்க்கு குகனென்னும் - நறும் தண் தார் குகன் என்னும் - என்று வரவேண்டும். தண் தார்-குளிர்ந்த மாலை

    பரதனைக் கொல்லாமல் தப்பிக்க விட்டு இராமனிடம் போய்ச் சேருமாரு விட்டுவிட்டால், என்னை 'நாய்க் குகன்' என்று சொல்லிவிட மாட்டார்களா என்னும் இரண்டாவது பாடலையும் ரசித்தேன்.

    உஞ்சிவர் போய் விடின் நாய்குகன் என்றென்னை ஏசாரோ - நாய் குகன் என்று என்னை ஓதாரோ என்று வரவேண்டும்.

    ஸ்ரீராம், கீதா ரங்கன் மற்றும் பலருக்கு - ஒருவனைக் கீழானவன் என்று திட்டுவதற்கு 'நாய்' என்ற பதத்தை இலக்கியங்கள் உபயோகிக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கம்பராமாயண நூல் என்னிடமிருந்தாலும் பள்ளியில் கற்றதை நினைவில் வந்தவாறு எழுதினேன் நூலோடு ஒப்பு நோக்கி இருந்தால் தவறு என்று நீங்கள் கூற்யதைத் தவிர்த்திருக்கலாம் கம்ப ராமாயணத்தில் நாய் என்னும் சொல் இகழ்ச்சியாகவே பல இடங்களில் வருகிற்து நான்பல பாடல்களைக் குறிப்பீடு இலக்கிய இன்பம் என்று ஒரு பதிவு எழுதி இருந்தேன் வாழ்வியலில் சினிமாப் பாடல்கள் என்று எழுதும்போது நினைவுக்கு வந்ததையே தொகுத்திருக்கிறேன் பலகருத்துகள் கூறிய நீங்கள் இன்னும் சில பாயின்டுகளைவிட்டு விட்டீர்களோ

      நீக்கு
  19. எல்லாமே அருமை சார். அதிரப்பள்ளி கண்டிருக்கிறோம் இருவருமே.

    துளசி, கீதா

    கீதா: நாங்கள் சென்ற போது அதிரப்பள்ளி கீழேயும் சென்றோம். உள்ளே வாழ்சல் வரை சென்றோம் அதற்கு மேல் அன்று அனுமதிக்கவில்லை. வாழ்ச்சல் காஸ்கேட் போல பாறைகளில் முட்டி மோதி வந்து வீழ்ந்தது....மழைக்காலம் எனவே தண்ணீர் அடித்துப் பாய்ந்தது.

    தொடுபுழா தொம்மங்குத்து அருவியும் செமையா இருக்கும் ஸார். கொஞ்சம் உள்ளே நடக்க வேண்டும் அதுவும் காஸ்கேட் போலதான் என்றாலும் ஒரு இடத்தில் வீழும். நாங்கள் அங்கும் குளித்தோம்.

    மூணாறு போனால் நிறைய யாருமே போயிருக்காத அருவிகள் எல்லாம் சென்றிருக்கோம். மழைக்காலம் என்றால் வரும் வழியிலேயே வாளரா மற்றும் செய்யுப்பாற இரண்டுமே ரொம்ப அருமையா இருக்கும் ஸார். ரோட்டிலிருந்தே பார்க்கலாம் குளிக்கலாம். நடக்கவெ வேண்டாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் அதிரப்பள்ளி சென்றதே கனவுபோல் இருக்கிறது அடிரப்பள்ளி நீர் விழ்ச்சியைஅடியிலிருந்து பார்க்க செங்குத்தாக இறங்க வேண்டி இருந்தது பலரும் கடினம் என்று கூற்யும்சென்று பார்த்ததுஒரு அனுபவம்தான்

      நீக்கு
  20. வாழச்சல் போகும் போது வழியிலேயே சப்பரா ஃபால்ஸ் இது சீசனல் ஃபால்ஸ் மழைக்காலத்தில்...நாங்கள் சென்றது மழைக்காலம் என்பதால் இதிலும் குளித்தோம்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்சம்பந்தி கூட்டிச் சென்று பார்த்தது மற்றபடி அதிகம் விஷயம் தெரிந்திருக்கவில்லை

      நீக்கு
  21. சாலக்குடியில் ஒன்னரை வருஷம் குப்பைகொட்டியும்கூட ஆதிராப்பள்ளி நீர்வீழ்ச்சியை தரிசனம் செய்ய ச்சான்ஸ் கிடைக்கலை.

    ஆனால் அங்கிருந்துவரும் தண்ணீரில்தான் (சாலக்குடிப் புழையில்) தினம் ரெண்டு நேரம் குளியல்! வீட்டுக்குப் பின்புறம் புழை!

    பதிலளிநீக்கு