Tuesday, June 12, 2018

படிக்கவும் ரசிக்கவும்

                                    GOOD  MORNING
                                    -------------------------

கடவுள்  -1
-------------
ஒரு குழந்தை தன் தாத்தாவின் மடியில் அமர்ந்து கொண்டு சிறிது நேரம் அவரையே பார்த்துக் கொண்டு இருந்தது. பிறகு கேட்டது” தாத்தா உங்களை படைச்சது யார்? 


தாத்தா.: ஏம்மா. ..என்னைக் கடவுள்தான் படைச்சார்.

குழந்தை.:- அப்போ என்னை யார் படைச்சது.?

தாத்தா.:- உன்னையும் கடவுள்தான் படைச்சார்.
குழந்தை.:- உன்னைப் படைச்சப்போ இருந்ததை விட என்னைப் படைக்கும்போது கடவுள் நன்றாகத் தேறிவிட்டார் இல்லையா தாத்தா.?
கடவுள் -2
--------------

இரண்டு சுட்டிப் பையன்கள்.குறும்பும் துடுக்கும் நிறைந்தவர்கள். அவர்கள்மேல் வரும் புகார்கள் அவர்களது தாயைக் கவலைப்பட வைத்தது. ஊரிலொரு பெரிய மனிதர்.கம்பீரமான உருவம் கணீர்க் குரல். அவரிடம் தாய் சென்று முறையிட்டாள். அவரும் குழந்தைகளைத் திருத்த ஒப்புக்கொண்டார். ஒருவருக்குப் பின் ஒருவரை அனுப்பச் சொன்னார். முதலில் இளையவனை அனுப்பினாள். பெரிய மனிதர் அந்தச் சிறுவனை நல் வழிப்படுத்த வேண்டி அவனிடம் “கடவுள் எங்கே இருக்கிறார் தெரியுமா.?என்று கேட்டார். சிறுவன் மிரள மிரள விழித்தான். . அவர் சற்றே குரலை உயர்த்தி “ கடவுள் எங்கே.?” என்று கேட்டார். சிறுவன் முகம் வெளிறி பதில் ஏதும் கூறாமல் விழித்தான்.ஊர்ப் பெரிய மனிதருக்குக் கோபம் வந்தது. பதில் ஏதும் தராத சிறுவனை நோக்கி “கடவுள் எங்கே சொல்.? ” என்று சத்தம் போட்டார். சிறுவன் பயந்து போய் ஓடி தன் வீட்டுக்குள் நுழைந்தான். அவனது அண்ணன் அவனிடம் வந்து நடந்தது என்ன என்று கேட்டான் அதற்கு அவன் “கடவுளைக் காணோமாம். நான்தான் அவரை மறைத்து வைத்துவிட்டதாக என்னிடம் கேட்கிறார் என்றானாம் 
இரண்டாமவன் போக மறுத்துவிட்டன்  அவனும் கடவுளைதான் எஉக்கவில்லை என்றான்  

அரசியல்
-------------

அரசியல் என்றால் என்ன என்று சிறுவன் கேட்டான்.

அப்பாவும் விளக்கமாகக் கூறத் தொடங்கினார்.
நான் செலவுக்குப் பணம் ஈட்டி வருகிறேன் ஆகவே முதலாளி.
ஈட்டிய பணத்தை செலவு செய்யும் உன் தாய் அரசு
தாத்தா எல்லாவற்றையும் கவனிக்கிறார் யூனியன் எனலாம்
வீட்டு வேலைக்காரி தொழிலாளி என்று சொல்லலாம்
எல்லோரும் பாடுபடுவது உனக்காக, ஆக நீ பொதுஜனம்
உனக்கு அடுத்துப் பிறந்த குட்டிப் பாப்பா எதிர்காலம்

மகனே-இங்கு நடப்பதைப் புரிந்து கொண்டால் அரசியல்
என்ன என்று விளங்கும் ஓரளவு தெரிந்து கொள்வாய்.
புரிந்ததைக் கொஞ்சம் எனக்குக் கூறு என்று கேட்டார் தந்தை.
ஒரு இரவு அசைபோட அவகாசம் கேட்டான் தனையன்.

உறங்கச் சென்ற சிறுவன் தம்பியின் அழுகுரல் கேட்டு விழித்தான்.
ஒன்றுக்கும் இரண்டுக்கும் போய் முடை நாற்றத்தில் மிதந்தான் தம்பி
செய்வதறியாது பெற்றோரின் படுக்கையற்க்குச் சென்றான் இவன்.
ஆழ்ந்த உறக்கத்தில் தாய், அருகே தந்தை இல்லை.
தாயை எழுப்ப முயன்று தோற்ற தனையன் வேலைக்காரி
இருக்குமிடம் சென்று பார்த்தால் தந்தையின் பிடிப்பில்
கட்டுண்டு கிடப்பவளை பலகணி வழியே ரசிக்கும் தாத்தா.
இவன் வந்ததே தெரியாமல் அவரவர் பணியில் அவரவர்.
ஏதும் செய்ய இயலாமல் இவனும் மீண்டும் உறங்கப் போனான்

மறுநாள் மகனிடம் தந்தை கேட்டார். அரசியல் பற்றி அறிந்தது கூற.
அறிந்தது புரிந்தது என்று மகனும் விளக்க முற்பட்டான்.
“முதலாளி தொழிலாளியைக் கசக்குகிறான். யூனியன் கண்டும்
காணாமல் இருக்கிறது அரசு உறக்கத்தில் இருக்கிறது.
பொதுஜனம் புறக்கணிக்கப் படுகிறது. எதிர்காலமோ
முடை நாற்றத்தில் மூழ்கிக் கிடக்கிறது.

உணவு 
------------
நண்பனுக்கு ஜெர்மனியில் வேலை கிடைத்ததாம்..அதனைக் கொண்டாடும் முகமாக அங்கிருந்த இவருடைய நண்பர் “ ட்ரீட் “வேண்டி ஒரு ஓட்டலுக்கு அழைத்துச் சென்றாராம். இவரையும் சேர்த்து நான்கு நண்பர்கள் கூடியிருந்தனராம். அந்த ஓட்டலில் உணவுக்கு வந்திருந்தவர்கள் எண்ணிக்கையும் குறைவாகவே இருந்ததாம். அப்படி உண்பவர் மேசைகளிலும் குறைந்த அளவே தட்டுகள் இருந்ததாம். ஒரு வெகு சாதாரண ஓட்டலுக்கு வந்து விட்டோமோ என்னும் எண்ணம் அவர்களுக்கு எழுந்தது. எப்படி இருந்தால் என்ன.. நாம் நன்றாகச் சாப்பிட்டு அனுபவிப்போம் என்று இவர்கள் விதவிதமான உணவுப் பொருட்களும் அதிக அளவிலும் ஆர்டர் செய்தனர். முடிவில் ஆர்டர் செய்த பல பொருட்கள் உண்ணப் படாமலேயே விரயமாயிற்றாம். பார்ட்டி முடிந்து பில் வந்தபோது பில்லில் அபராதத் தொகை என்று ஒரு கணிசமான தொகையும் இட்டிருந்தார்களாம். அபராதம் எதற்கு என்று கேட்டபோது தேவைக்கு மீறி ஆர்டர் செய்து விரயமாக்கியதற்கு என்று பதில் வந்ததாம். “ எங்கள் பணம். நாங்கள் உண்போம் இல்லை வீணாக்குவோம், அதை நீங்கள் எப்படிக் கேட்கலாம் “என்று இவர்கள் கேட்டதற்கு அவர்கள் “பணம் உங்களுடையதாக இருக்கலாம். பொருட்கள் இங்கிருப்பவர்களின் மூலப் பொருட்களிலிருந்து (RESOURCES) “ வந்தவை. . அதை விரயம் செய்வது குற்றம் என்றனராம். நாம் விரயமாகும் எந்தப் பொருளைப் பற்றியாவது சிந்திக்கிறோமா.?

மன அமைதிக்கு 
------------------------------
இது ஒரு கேட்ட கதை .பகிர்ந்து கொள்கிறேன்.

ஒரு முறை புத்த பகவான் தன் சீடர்களுடன் சென்று கொண்டிருந்தார். தாகமாயிருக்கவே சீடன் ஒருவனிடம் குடிக்க நீர் கொண்டு வருமாறு பணித்தார். அவன் அருகில் இருந்த குளத்துக்குச் சென்று நீரை எடுத்து வரப் போனான். அவன் குளத்தை அடையும் நேரம் அங்கே சிலர் துணிகளை துவைத்துக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு மாட்டு வண்டி குளத்தை கடந்து சென்றது. குளத்து நீர் கலங்கி சேறாய்த் தெரிந்தது. சீடன் திரும்பி வந்து நீர் குடிக்கத் தகுதி யில்லாமல் கலங்களாய் இருக்கிறது என்றான்.

ஒரு அரைமணி நேரம் கழிந்து புத்தர் அதே சீடனிடம் நீர் கொண்டு வரச் சொன்னார். இம்முறை குளத்து நீர் தெளிந்து இருக்கவே அவன் புத்தருக்கு நீர் கொண்டு வந்து கொடுத்தான்.

” நீர் தெளிய நீ என்ன செய்தாய். அதை அப்படியே இருக்க விட்டாய். அதுவும் தெளிந்தது. நம் மனமும் அது போல்தான். குழம்பிப் போயிருக்கும்போது அப்படியே விட்டு விட வேண்டும் அதை தெளிவிக்க எந்த முயற்சியும் தேவை இல்லை. தானாகத் தெளியும்.மன நிம்மதி பெற  எந்த முயற்சியும் தேவை
இல்லை. உள்ளம் அமைதியாய் இருந்தால் அது இருக்கும் சூழலையும் அமைதியாக்கும்.

கைகள்செய்யும் மாயம் 
---------------------------------------


 .


24 comments:

 1. எல்லாமே இரசிக்கவும், சிந்திக்கவும் வைத்தது ஐயா. குறிப்பாக அரசியல்.
  காணொளி ஸூப்பர்

  ReplyDelete
  Replies
  1. பலருடைய ரசிப்புக்கு ஏற்றவாறு பதிவு இருப்பதில் மகிழ்ச்சி நன்றி ஜி

   Delete
 2. அனைத்தும் அருமை... முக்கியமாக மனஅமைதி...

  ReplyDelete
  Replies
  1. பகிர்ந்த விஷயம் ரசிப்புக்கு ஏற்றமாதிரி இருப்பது மகிழ்ச்சி நன்றி டிடி

   Delete
 3. அனைத்தும் அருமை ஐயா..

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி மேம்

   Delete
 4. உணவு பற்றியது ஏற்கெனவே பல முறை வந்து விட்டது. மற்றதும் சில படித்திருக்கேன். பகிர்வுக்கு நன்றி. தெளிந்தால் அமைதி வரும் என்பதே எல்லோரும் சொல்லுவது. :))))

  ReplyDelete
  Replies
  1. எல்லோரும் படித்ததில்லையே மேம் மன அமைதி புத்தரின் வாக்கு வருகைக்கு நன்றி மேம்

   Delete
 5. கடவுள் 1 புன்னகைக்க வைத்தது.

  கடவுள் 2 வாய்விட்டுச் சிரிக்க வைத்தது. இது பள்ளிக்கு வந்த DEO ஜோக்கை நினைவு படுத்தியது.

  ReplyDelete
  Replies
  1. DEO ஜோக்கைப் பகிர்ந்த்ருக்கலாம் குஅந்தைகள் எண்ணும் விதம்ந்ந் அலாதி

   Delete
 6. அரசியல் அதிகம் ரசிக்க வைத்தது. கடைசி வரியை எழுதிக்கொண்டு அதற்கேற்ப சம்பவங்கள் அமைப்பது நல்ல வசதியாய் இருக்கும்.

  ReplyDelete
 7. உணவும் மன அமைதியும் ஏற்கெனவே படித்திருக்கிறேன்.

  கைகள் செய்யும் மாயம் என்று தலைப்பு மட்டும் கொடுத்திருக்கிறீர்கள். அங்கு ஒன்றும் காணோமே.... மாயமாகிவிட்டதோ!

  :))

  ReplyDelete
  Replies
  1. நடப்பு விவகாரம் அரசியல் இருப்பதைக் கூறுவதும் ரசிக்க வைக்கிறது

   Delete
  2. உணவை விரயம் செய்கிறோம் மன அமைதி பலருக்கும் இல்லாதது நீங்கள் ஒருவர்தான் கைகள்செய்யும்மாயத்தைக் கவனித்தீர்கள்

   Delete
 8. காணொளி அழகு.

  சில விஷயங்கள் முன்னரே படித்திருக்கிறேன். மற்றவற்றையும் ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. பல முறை பகிர்ந்தகாணொளி காலை வணக்கம்சொல்ல ஒரு உத்தி படித்ததெல்லாம் நினைவில் இருக்கிறதா மீண்டும் மீண்டும்சொல்வது தவறில்லையே

   Delete
 9. அனைத்தும் வித்தியாசமாக இருக்கு. முதலாவது குட் குவெஸ்ஷன்:)..

  உணவு மிச்சம் வைத்தால் அபராதம்.. அப்படி இருக்கிறதுதான் சில ரெஸ்ட்டோரன்களில்.. அது ஒரு நல்ல விசயம் என்றே படுகிறது.

  ReplyDelete
  Replies
  1. முதலாவதுகுழந்தைகள் எண்ணத்தில் உணவு விரயம் தெரிகிறது இருந்தாலும் விரமாக்குவது குறைவதுஇல்லையே

   Delete
 10. Replies
  1. உங்கள் வருகயும் ரசிப்பும் நன்று

   Delete
 11. அனைத்தையும் ரசித்தேன். முதல் ஒன்றை சற்றே அதிகமாக.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி சார்

   Delete
 12. அரசியலும், கடவுளை 2உம் ரசிக்க வைத்தன. உணவகங்களில் உணவை வீணடிப்பது பற்றிய செய்தி யோசிக்க வைத்தது. புத்தர் சொன்னதை ஏற்கனவே படித்திருக்கிறேன்.

  ReplyDelete
 13. வருகையும் கருத்தும் மகிழ்ச்சி தருகிறது

  ReplyDelete