Monday, May 30, 2016

செல்வி ஜெயலலிதாவுக்கு ஒரு திறந்த மடல்


                                 செல்வி ஜெயலலிதாவுக்கு ஒரு திறந்த மடல்
                                    =======================================
வெற்றிக்கனி பறித்த முதல்வர்  செல்வி ஜெயலலிதா 
மதிப்பிற்குரிய முதலமைச்சர் மேடம் ஜெய லலிதாவுக்கு  முதலில் என் பாராட்டுக்களையும்  வாழ்த்துகளையும்  தெரிவித்துக் கொள்கிறேன் ஒரு மாநில முதலமைச்சருக்கு ஒரு nondescript personality   கடிதம் எழுதுவது சரியா என்று  நினைக்க மாட்டீர்கள் என்று தெரியும் மக்களின் மனதில் உங்களுக்கென்று ஒரு இடம் பிடித்துள்ளீர்கள்  என்பது தெரிகிறது. இருந்தாலும் எல்லோர் மனதிலும் அல்ல என்பதும் உங்களுக்குத் தெரியும் பல இடங்களிலும்  வெற்றி பெற்று விட்டீர்கள் என்பது சட்டப்படி உண்மையானாலும்  பெரும்பான்மையினர் மனதில் அந்த இடம் இருக்கிறதா என்று ஆராயாமல் இருந்திருக்க மாட்டீர்கள் என்பதும் தெரியும் வாக்களித்தவர்களில் ஐம்பது சதவீதத்துக்கும் மேல் உங்கள் கட்சிக்கு ஓட்டளித்திருந்தால் பெரும்பான்மையினரின் நிஜமான ஆதரவு இருப்பதாகக் கொள்ளலாம் இதையெல்லாம் நான்  சொல்லித்தான்  உங்களுக்குத் தெரிய வேண்டும் என்றில்லை. பல தேர்தல்களைச் சந்தித்த உங்களுக்கு தேர்தலின்  உண்மை நிலை தெரியாமலா இருக்கும் . இருந்தாலும் உங்கள் மேல் மரியாதை கொண்டவன்  என்ற முறையிலும்  ஒரு மூத்த குடிமகன் என்ற  முறையிலும்  என்  கருத்துக்கள் சிலவற்றை முன்  வைப்பது தவறாகாது என்று தோன்றுவதாலும் இதைப் பதிக்கிறேன்
பொறுப்பு ஏற்றுக் கொண்ட வுடன் நீங்கள் அறிவித்திருக்கும்  500 டாஸ்மாக் கடைகளை மூடச் சொல்லும் உத்தரவு பாராட்டுக்குரியது இதுவே கூடிய சீக்கிரத்தில் பூரண மது விலக்குக்கு அடிகோலாய் அமைய வேண்டுகிறேன்
உங்கள் ஆட்சி விலையில்லா இலவசங்களுக்குப் பெயர் போனது இத்தனை இலவசங்களுக்கும்  நிதி ஆதாரத்தை  டாஸ்மாக் விற்பனையிலிருந்தே பெற்றீர்கள் என்று ஒரு வலுவான கருத்து இருக்கிறது இல்லை என்றால் இலவசங்களுக்கான நிதி ஆதாரங்கள்   transparent  ஆக இருக்க வேண்டும் மின்சார வினியோகமே தடை இல்லாமல் இல்லை என்னும் நிலையில் இப்போது முதல் நூறு யூனிட்டுகள் மின்சாரம் இலவசம் ( உங்கள் மொழியில் விலையில்லாதது) என்னும் அறிவிப்பும்  இன்னும் நிறையக் கேள்விகளைக் கேட்க வைக்கிறது யாருமே கேள்வி கேட்க முடியாதபடி நிர்வாகம் திறந்த  முறையில் இருக்க வேண்டும் என்பதும்  என்  வேண்டுகோள்
நான் இந்த மடலை எழுதக் காரணமே  உங்கள் ஆட்சியில் இப்போதிருக்கும் ஏற்ற தாழ்வுகள் மறைய வேண்டும் என்னும் விருப்பமும்  அதற்காக என் ஒரு ஆலோசனையும்  தான்  .
உயர்வு தாழ்வுகளுக்குக் காரணம் என்னைப் பொறுத்தவரை இப்போதிருக்கும் நிலையில் நமக்குள் ஊன்றி விட்ட  சமுதாய சித்தாந்தங்களேயேகும்  இவை நம்  இரத்ததில் ஊறி விட்டது சாதிமத வேறுபாடுகள் நம் கலாச்சாரவிளைவுகளே  இதற்கு யாரையும் குறை சொல்லாமல் இவற்றை நீக்குவது எப்படி என்று சிந்தித்தால் இனிவரும்  புதிய தலைமுறையினரால்தான் சாத்தியமாகும் இதற்கான ஏற்பாடுகள் கல்வி சாலைகளிலிருந்தே தொடங்கப் பட வேண்டும் ஆனால் இப்போதெல்லாம் கல்வியுமே ஏற்ற தாழ்வுக்கு வித்தூன்றுவது தெரியும் ஏழைக்கல்வி பணக்காரக் கல்வி என்று தலை விரித்தாடுகிறது  எனக்குத் தெரியும்  நீங்கள் அசாதாதாரணமாகச் சிந்திக்கக் கூடியவர் என்று.-. இரத்தத்தில் ஊட்டிவளர்க்கப்படும்  பிரிவினை எண்ணங்களைப் போக்க கல்விக் கூடமே சிறந்த இடமாகும் இதற்கான தீர்வாக நான்  சிந்தித்ததை முன்  மொழிகிறேன் பள்ளிப்படிப்பு அரசுடைமை ஆக்கப் படவேண்டும்   
பள்ளியிறுதி வரை கல்வி எல்லோருக்கும்  கட்டாயமாக்கப் பட வேண்டும் எந்தப் பாகுபாடும் இல்லாத சமமான கல்வி வழங்க அவை எல்லோருக்கும்  இலவசமாக இருக்க வேண்டும் இதில் பணம் படைத்தவன் இல்லாதவன் என்னும்  வேற்றுமை கூடாது  பள்ளியில் படிக்கும் சிறார்களும் அனைவரும்  சமம் என்று எண்ண  அத்தனை பேருக்கும்  மதிய உணவும் சீருடைகளும்  கட்டாயமாக இலவசமாக இருக்க வேண்டும் பாடப்புத்தகங்களும்  இன்ன பிறவும்  அனைவருக்கும்  இலவசமாக இருக்க வேண்டும்
 இந்நிலை தொடர்ந்தால் சின்னஞ்சிறியவர்கள்  மனதில் உயர்வு தாழ்வு எண்ணம்வராது நாளாவட்டத்தில் சிறார்கள் மனதில் அதாவது ஒரு புதிய தலை முறை வேறுபாடுகள் பற்றி சிந்திக்காமல் வளருவார்கள் இவர்களே நாளை நம் நாட்டின் தலைவிதியை நிர்ணயிப்பவர்கள் ஆவார்கள்
 இதற்கு எதிர்ப்பு இருக்காதா? நிச்சயம்  இருக்கும் ஆனால் இவற்றை சமாளிக்கும் திறன்  உங்களுக்கு இருப்பது தெரிந்ததே பணம் படைத்தவர்களும்  கல்வியை வியாபாரமாகக் கையாள்பவர்களும் கடும் எதிர்ப்பினைத் தெரிவிப்பார்கள் எல்லா செய்கைகளும்  திறந்த மனதோடு செய்தால் நிச்சயம் பலன்  தரும்
மாநில அரசின் பல செயல் பாடுகளில்  எனக்கு கருத்து வேற்றுமை இருந்தாலும் உங்கள் திறமையில் நம்பிக்கை இருக்கிறது இலவசங்கள் எனக்கு ஏற்புடையதல்ல. ஆனால் கல்வியில் இலவசம் நாட்டின் தலைவிதியை மாற்றும் என்று நம்புகிறேன் பசித்திருப்பவனுக்கு மீனைக் கொடுப்பதை விட மீன் பிடிக்கக் கற்றுக் கொடுப்பதே சிறந்தது என்று நினைப்பவன்  நான் தவறுகளுக்கான  ஆதார காரணங்களைக் களைய வேண்டும்  என்று நம்புபவன் அதற்கான மன உறுதியும் தன்னம்பிக்கையும் உங்களிடம் இருப்பது தெரிந்தே இந்த மடலை அனுப்புகிறேன்
உங்களுக்கு இந்த மடலை அனுப்புவதால்  நிர்வாகத்தில் எங்காவது ஒரு புதிய சிந்தனை உதித்தால் அதுவே பலனைப் பெற்றுத்தரும் 
அ இ அதிமுகவில் உங்களுக்குப் பின் இரண்டாம் நிலைத் தலைவர்கள் இல்லை. ஆலமரம் போல் அனைவரையும் உங்கள்  நிழலிலேயே  இருத்தி இருக்கிறீர்கள் அவர்களும் வேர் ஊன்றி வளர வேண்டாமா இதையும்  கருத்தில் கொள்ள வேண்டுகிறேன்


( பம் தவி---- இணையத்துக்கு  நன்றி)                          

Thursday, May 26, 2016

பெயர் சூட்டும் விழா


                           பெயர் சூட்டு விழா        
                          -------------------------------

யூல் ப்ரின்னர் ஸ்டைலில் இருக்கும் இவர் பெயர் சந்தீப் தந்தையார் சிவராம். என் பெரிய மச்சினன்  இவரைப் பற்றியே பல பதிவுகள் போடுமளவு சாதனையாளர் மிகவும் ஷை டைப். எதையும் முன் வந்து சொல்ல வராததால் பதிவிட முடியவில்லை.  இருந்தாலும் ஓரிரு விஷயங்களைச்சொல்லத்  தோன்றுகிறது தனது மோட்டார் சைக்கிளில் பெங்களூரிலிருந்து வடகிழக்கு எல்லை வரை பயணித்தவர் யாருமே பயணிக்காத இடமெல்லாம் உண்டு  ஏறத்தாழ இரு மாதங்கள் பயணித்தவர்
நான் என்னுடைய காசெட் டேப்புகளில் பதிவாக்கி இருந்த  குரல்களை காசெட் ப்லேயர் கெட்டுப் போய் விட்டதால் கேட்க முடியாமல் இருந்த நேரம் எனக்கு ஆறுதல் தரும் விதத்தில் ஒரு கன்வெர்டர் கருவியை வாங்கிக் கொடுத்து அதை செயல் படுத்தவும் கற்றுக் கொடுத்தார்

தற்போது இன்ஃபோசிஸ்ஸில் கணினி நிபுணராகப் பணி புரிகிறார்  இவரது வீடு எலெக்ட்ரானிக் சிடியில் இருக்கிறது  . என் வீட்டிலிருந்து சுமார் நாற்பது கிமீ தூரம்  


சந்தீப் சிவராம்  குழந்தையுடன் 

இவருக்கு ஒருஆண்மகவு பிறந்து அதற்கு பெயர் சூட்டும்  விழாவை குழந்தை பிறந்த 28-ம் நாளில் மேமாதம் 19-ம் தேதி வைத்திருந்தார் எங்களையும் அழைத்திருந்தார் என்று சொல்லத் தேவை இல்லை.

அழைப்பு வந்த நாளிலிருந்து  எனக்கு ஒரே கவலை. போகவேண்டுமா வேண்டாமா  என்னும் டைலம்மா . ஒரு பக்கம் மனம் நீ போக வேண்டும் என்றது.  இன்னொரு புறம்  அது அவ்வளவு தேவையா என்றும் எதிர்க் கேள்வி கேட்டது. இவரது வீடு  அருகாமையில் இருந்தால் இந்தக் கேள்விகளே எழாது. இந்த வயதில்  பெங்களூரின்  புகழ் பெற்ற  ட்ராஃபிக்கில்  போவதை நினைத்ததாலேயே இத்தனை கேள்விகளும் .எனக்கோ எந்த விழாவுக்கும் சரியான நேரத்தில்  இருக்க வேண்டும் டாக்சி யில் போய்வர ரூபாய் ஆயிரம் ஆகிவிடும் இரண்டு மணிநேரத்துக்கும் குறையாமல் ஒரு வழிப் பயணம் இருக்கும்
இந்த நேரத்தில் என் உறவினர் ஒருவர் கூறியது  நேரங்கெட்ட நேரத்தில் நினைவுக்கு வந்தது ஒரு வேளை உணவுக்காகவோ காப்பிக்காகவோ இத்தனை தூரம் பயணிக்க வேண்டுமா என்று கேட்டே எங்கும் போக மாட்டார் அவர். ஆனால் நான் அவர் மாதிரி அல்ல அன்பால் கூப்பிடும்போது போகாமல் இருக்க முடியவில்லை எப்படிப் பயணிப்பது என்று திட்டமிடத் துவங்கினேன்  பேரூந்துப் பயணம் இல்லவே இல்லை என்று மனைவி கூறி விட்டாள் யாருடனாவது தொற்றிக் கொள்ளலாம் என்றால் போகக் கூடியவர்கள் எல்லோரும் தொலைவில் இருந்தார்கள் வார நாளானதாலும் என் மகன் டூர் போயிருந்ததாலும் அவன் மும்பையிலிருந்தே ஓலா டாக்சி புக் செய்கிறேன்  என்றான்  என் பேரன் தானே செய்து தருவதாகக் கூறினான் காலை பதினொரு மணிக்கு பெயர் சூட்டப்படும் என்று கூறி இருந்தார்கள். அதற்கு நான் என் வீட்டிலிருந்து  காலை எட்டரை மணிக்கே புறப்பட்டால்தான்  நேரத்தோடு போய்ச் சேர முடியும் இப்போது ஓலாவில் ஓலா மினி என்னும் சர்வீஸ் இருக்கிறது  அதில் கட்டணம் குறைவாக இருக்கும் எலெக்ட்ரானிக் சிடிக்கு  இரு வழிகளில் பயணிக்கலாம்  ஒன்று சற்றே சுற்று ஐம்பது கிமீ தூரம் இருக்கும் நைஸ் ரோட் வழியே போகலாம் ஆனால் போகும் வழியில் இரண்டு மூன்று டோல்கள் இருக்கும் அதற்கும் கட்டணம் செலுத்த வேண்டும் இன்னொரு பாதை நகரத்தின் ஊடே பயணிக்க வேண்டும்  நேரம் அதிகமாகும் நாற்பது கிமீ தூரத்துக்கும்  குறைவே
எப்படியும்  போவது என்று முடிவு செய்து விட்டோம்  . நான் ரயில் நிலையத்திலிருந்து வீட்டுக்கு வர ப்ரிபெய்ட் ஆட்டோவை உபயோகிப்பேன்அதில் இரண்டு அட்வாண்டேஜுகள் உண்டு. ஒன்று கொடுக்க வேண்டிய தொகை முதலிலேயே தெரியும் இரண்டாவதுமீட்டரையே பார்த்துக் கொண்டு அதில் ஏறும் தொகையைப் பார்த்துக் கொண்டே வரும்போது எகிறும் பிபி தொல்லை இருக்காது. இந்த ஓலா செர்வீசில்  அந்த வசதி இல்லை. போய்ச் சேர்ந்தபின்தான் இவ்வளவு சார்ஜ் ஆயிற்று என்று தெரியும்  எனக்கோ எவ்வளவு தீட்டுவானோ என்னும்  கவலை.  ஓலாவில் வண்டி ஓடும்  நேரத்துக்கு நிமிஷத்துக்கு ஒரு ரூபாய் அதிகம் வசூலிக்கிறார்கள் இரண்டு மணிப்பயணம் என்றால்  ரூ 120 அதிகம் கட்ட வேண்டும் பெங்களூர் ட்ராஃபிக்கில் எவ்வளவு நேரம் ஆகும் என்று சொல்ல முடியாது இன்னொன்று நமக்கோ வழி தெரியாது  ட்ரைவர் கூட்டிக்கொண்டு போவதுதான் வழி.  அருகாமை வந்ததும்  தொலைபேசியில் மச்சினன் மகனிடம் ட்ரைவரிடம் வழி சொல்லக் கேட்டுக் கொண்டோம்
 எனக்குமட்டும்தான் இந்தப் பிரச்சனையா. செலவு செய்யும் பணம் பற்றி  அதிகம் யோசிக்கிறேனோ தெரியாது  இப்போது இருக்கும் தலை முறையினருக்கு ரூபாயின் மதிப்பு தெரியவில்லை என்றால் என் தலை முறை மக்கள் அது பற்றியே அதிகம் சிந்திக்கிறோம் ஒவ்வொரு ரூபாயும் எத்தனை மதிப்பு வாய்ந்தது என்று தெரியும்  இப்போது ரூபாய்க்கு மதிப்பேஇல்லை
நான் பணம் செலவு செய்யாத கஞ்சன் அல்ல.ஆனால் செலவு செய்யும் முன்  அந்தச் செலவு தேவைதானா என்று என்னையே கேள்வி கேட்பவன் பணத்தின்  அருமை தெரிந்தவன் 
ஒரு வழியாய் காலை 10-45க்கு  போய்ச் சேர்ந்தோம் நாங்கள்தான் முதலில் போய்ச் சேர்ந்தவர்கள் பதினொரு மணி அள்வில் பெயர் சூட்ட ஏற்பாடுகள் நடந்தன. இதுதான் முறை என்று ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. அரிசியும் அதன் மேல் தேங்காயும் வைத்து அருகில் விளக்கேற்றினார்கள் குழந்தையின் தாய் வழித் தாத்தா  மடியில் வைத்து கைக்கு கருப்பு வளையும்  காலுக்கு தண்டையும்  அணிவித்தார்கள் திருஷ்டிப் பொட்டும் வைத்தார்கள் நெருங்கிய சொந்தம் கொண்டவர்கள்  குழந்தைக்கு செயின் அணிவித்தார்கள் பிறகு தந்தை குழந்தைக்கு பெயர் சூட்டினார் முதலில் எனக்கு விளங்கவில்லை  பிறகு தெரிந்துகொண்டேன் ஷ்லொக்  நாயர் என்ற பெயர் என்று . எனக்கானால் பெயருக்கான காரணம் தெரிந்து கொள்ள ஆசை. என் மனைவி என் வாயை அடைத்து விட்டாள்யார் சொன்னது  சாதிகள் மறைகின்றன என்று.  பெயரிலேயே சாதியைக் குறிப்பிடும் புதிய தலை முறையினர் அதிகரித்து  விட்டனர் பெண்களின்  பெயருக்குப் பின்னாலும் பல இடங்களில் சாதிப்பெயர் காண்கிறேன் பனிரெண்டு மணிக்கெல்லாம் உணவு ரெடி சாப்பிடலாம் என்றார்கள்  மீண்டும் நெடுந்தூரப் பயணம் கருதி சீக்கிரமே உண்ண அமர்ந்தோம் ஒன்னாங் கிலாஸ் நாடன் சத்தியை வருவல் இஞ்சிப் புளி ஊறுகாய்  பப்படம் காளன் ஓலன் அவியல் எலிசேரி புளிசேரி பச்சடி பொறியல் இரு வகைப் பாயசம் சாம்பார் ரசம்  என்று பட்டியல் நீண்டது  நான் மிகவும் குறைந்த அளவே உண்பவன் அதிலும் அதிக நேரம் எடுத்துக் கொள்பவன்  முதலில் அமர்ந்து இலை எடுக்க ஆள் வரும்வரை உண்பவன் நாங்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது பலரும் வரத் தொடங்கினார்கள் 
பெங்களூரில் ஒன்று கவனித்திருக்கிறேன்  ஏதாவது விழாவுக்குச் செல்வதே சாப்பிட மட்டும்தான் என்று தோன்றும் படி இருக்கும் ஆனால் வந்தவர்களில் பெரும் பாலோர் ட்ராஃபிக்கில் மாட்டிக் கொண்டதாகக் கூறினர் நம்பாமல் இருக்க முடியவில்லை.
திரும்புவதற்கும் ஓலாவையே நாடினோம்  முதலில் வந்தவர் நைஸ் ரோட் வழிதான் போவேன் என்றார்  அவரைக் கான்சல் செய்து விட்டு சிறிது காத்திருப்பிக்குப் பின்  வேறொரு வண்டியில் பயணித்தோம் இந்த ட்ரைவரோ நம்மிடமே வழி கேட்டுக் கொண்டு ஓட்டினார்  ஆனால் பாதி தூரம் சென்றபின் யாரிடமோ வழிகேட்டு  நான் சொல்லாத பாதையில் சற்று சுற்றிப் போனார்  எதையும்  பொறுத்துக் கொள்ள வேண்டியதாயிற்று  ஒரு வழியாய் வீடு வந்து சேரும்போது மணி  மூன்றரை ஆகி இருந்தது வீட்டுக்கு வந்தது ட்ரைவருக்குச் சில மாம்பழங்கள் கொடுத்துக் குழந்தைகளுக்குக் கொடுக்கச் சொன்னோம்  .நல்ல படி வீடு வந்து சேர்ந்தோம் என்று எல்லோருக்கும் தகவல் தெரிவித்தோம் 
குழந்தையின்  பெற்றோருடன்  நாங்கள் 
                
  
பெயர் சூட்டல் 

சத்தியை


Sunday, May 22, 2016

தெய்வத்தின் குரலில்....


                             தெய்வத்தின் குரலில் ......
                             ------------------------------


நம்பிக்கைகளே பலரது வாழ்வுக்கும் ஆதார கீதமாக இருக்கிறது நான் பயிற்சியில் இருந்தபோது ஒரு பாடம்.  பொறுப்புணர்த்தலே அதன் நோக்கம் நீ இப்போது நீயாக இருப்பதற்கு யாரை பொறுப்பாக்குகிறாய் என்பதே கேள்வி. தந்தையின்  பங்கு இத்தனை சதம்  ஆசிரியரின்  பங்கு இத்தனை சதம் உற்றம்  சுற்றம் இத்தனை சதம் விதியின்  பங்கு இத்தனை சதம் அதிர்ஷ்டம் இத்தனை பங்கு  விதியின் பங்கு இவ்வளவு  கடவுள் நண்பர் என்று பொறுப்புகள் பங்கிடப்படும்   பெரும்பாலும்  யாருமே தான்தான்  பொறுப்பு என்று கூறமாட்டார்கள்நம்பிக்கைகள் வாழ்வின் முன்னேற்றத்துக்கு உதவ வேண்டும்எல்லாம் அவன் செயல் என்று இருப்பது பொறுப்புகளைத் தட்டிக் கழிக்கவே உதவும் இரண்டு விதப்பார்வையையும்  விளக்கும்  கதை ஒன்று உண்டு.  இரு நண்பர்கள். ஒருவன் எல்லாம் விதிப்படி என்று நினைப்பவன்  இன்னொருவன்  நம்மை மீறி ஏதும்  இல்லை என்று நினைப்பவன்  இருவரும் சாலையில் செல்லும் போது அவர்கள் கண்முன்பு ஒரு விபத்து  நிகழ்கிறது விபத்தில் ஒருவன்  நன்கு அடிபட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தான் நம்மை மீறி எதுவும் இல்லை என்று நினைப்பவன் விபத்துக்குள்ளானவனை மருத்துமனையில் சேர்த்து அவன் உயிர் பிழைக்க வைத்தான்எல்லாம் விதிப்படி என்று நினைப்பவன்  இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டு வாளா இருந்தான் முதலாமவன்  நான்  தகுந்த நேரத்தில் இவனை மருத்துவ மனைக்குக் கொண்டு வந்து  சிகிச்சை  கொடுத்திராவிட்டால் இவன் இந்நேரம் பரலோகம் போய் இருப்பான் என்றான்  இரண்டாமவனோ  விபத்து நேர வேண்டும்  என்பது விதி. அவனை நீ மருத்துவமனையில் சேர்க்கவேண்டும் என்பதும் விதி.  அவன் பிழைக்க வேண்டும் என்பதும் விதி.  இதை மீறி யாரும் ஒன்றும்  செய்திருக்க முடியாது என்றானாம்  எந்த வாதம் சரி என்பதை அவரவர்  பின்னணியே கூறும்
ஒரு நாணயத்தைப் பற்றிக் கருத்துக் கூற  வேண்டும் என்றால்  அதன்  இரு பக்கமும் தெரிந்து இருக்கவேண்டும்  அதை ஒட்டியே நான் தமிழில் கீதை என்னும் பதிவை எழுதினேன்  கடைசியில் என் கருத்தையும் எழுதி இருந்தேன் நான் ஒரு ஹிந்து, கடவுளோடு ஒரு உரையாடல்  என்னும்  பதிவுகளும்  அவ்வகையைச் சார்ந்தவையே
அந்த நோக்கத்தோடுதான்  தெய்வத்தின்  குரலைப் படிக்க ஆரம்பித்தேன் அதை அப்படியே பதிவாக்கலாம் என்றும் நினைத்தேன்  பல தமிழ் ஹிந்துக்களும் படித்திருக்க வாய்ப்பு இருக்கிறது  படிப்பது என்பது வேறு உள்வாங்குதல் என்பது வேறு  தெய்வத்தின்  குரல் போன்ற பதிவை உள்வாங்கிப் படிக்க பல முறை வாசிக்க வேண்டும்  என்னிடம் புத்தகம்  இருக்கிறது இது தேவை இல்லை என்று சிலரும் காப்பி பேஸ்ட் செய்வது பதிவாகாது எனச் சிலரும்  நான்  என் கருத்துக்களைக் கூறாமல் அவர் சொல்லியது அப்படி இவர் சொல்லியது இப்படி என்று பொறுப்பைத்தட்டிக் கழிக்கிறேன்  என்னும்  தொனியிலும்  பின்னூட்டங்கள் இருந்தனஆகவே தெய்வத்தின்  குரலிலிருந்து  சில பகுதிகள் அவர் சொன்னபடியே படிப்பதுதான் முறை என்று தோன்றியதால் அதிலிருந்து சில பகுதிகளைக் காப்பி பேஸ்ட் செய்கிறேன்   இதையே என் எழுத்துக்களிலும்  கொண்டு வர முடியும்  என்றாலும்  அதை தவிர்க்கிறேன் என்  எழுத்துக்களில்  வரும்போது என்னையும்  மீறி சிலகருத்துக்கள் சிதை படலாம்
            உலகம் பரவிய மதம் 
    --------------------------------------   
இப்போது ஹிந்து மதம் என்று சொல்லப்படுகிற நமது மதம் ஒன்றே ஆதியில் லோகம் முழுதும் பரவியிருந்தது! அந்த ஒரே மதம் இருந்தால்தான் அதற்குத் தனியாகப் பெயர் வைக்க வேண்டிய அவசியமிருக்கவில்லை. இதனால்தான் நம் ஆதார நூல்களில் ஹிந்து மதத்துக்குப் பெயரே இல்லை — என்பது என் அபிப்பிராயம்.
மிக மிகப் பழங்காலப் புதைப்பொருள் ஆராய்ச்சிகளைப் பார்த்தால் எல்லா அந்நிய தேசங்களிலுமே நமது வேத சமய சம்பந்தமான அம்சங்களை நிறையப் பார்க்கிறோம். உதாரணமாக, கிறிஸ்து பிறப்பதற்குச் சுமார் 1300 வருஷங்களுக்கு முன்னால் எகிப்து தேசத்தில் இரண்டு அரசர்கள் செய்து கொண்ட உடன்படிக்கை சாஸனம் பூமிக்கடியிலிருந்து கிடைத்திருக்கிறது. அதில் 'மித்ரா வருண' சாட்சியாக இந்த உடன்படிக்கை செய்யப்படுவதாகச் சொல்லியிருக்கிறது. மித்ரா-வருணங்கள் நமது வேதத்தில் சொல்லப்பட்ட தேவதைகள். மடகாஸ்கரில் உள்ள ஊர்களில் எழுபத்தைந்து சதவிகிதம் ஸம்ஸ்கிருத மூலத்திலிருந்து வந்ததாகத் தெரிகிறது.* ராமேஸஸ் என்ற ராஜப் பெயருக்கும் நம் ராமனுக்கும் சம்பந்தம் இருக்கிறது.
பூகோளத்தின் கீழ்ப் பாதியிலும் இத்தகைய அடையாளங்களே உள்ளன. மெக்ஸிகோவில் நமது நவராத்திரிப் பண்டிகையின்போது ஓர் உற்சவம் நடக்கிறது. அதற்கு 'ராம ஸீதா' என்று பெயர். அங்கே பூமியே வெட்டும் இடங்களிலெல்லாம் பிள்ளையார் விக்கிரம் அகப்படுகிறது.** ஸ்பெயின் தேசத்தார் புகுந்து அந்த நாட்டை வசப்படுத்துமுன் அங்கிருந்த பழங்குடிகள் ஆஸ்டெக்ஸ் (Aztecs) இது ஆஸ்திக என்பதன் திரிபே. பெருவில் சரியாக விஷு புண்ணிய காலத்தில் சூரியாலயத்தில் பூஜை செய்கிறார்கள். இவர்களுக்குப் பெயரே இன்காஸ். 'இனன்' என்பது சூரியனுடைய பெயர். 'இனகுல திலகன்' என்று ராமனைச் சொல்கிறோமே!
ஆஸ்திரேலியப் பழங்குடிகள் நிர்வாணமாக ஆடுகிற படங்களை ஒரு புஸ்தகத்தில் பார்த்தேன். (ஸ்பென்ஸர், கில்லன் என்பவர்கள் எழுதிய Native Tribes of Central Australia என்கிற புத்தகத்தில் 128, 129 என்ற எண்ணுள்ள படங்கள்). அதன்கீழ் சிவா டான்ஸ் என்று போட்டிருந்தது. நன்றாகக் கவனித்துப் பார்த்தேன். ஆடுகிற ஒவ்வொர் நெற்றியிலும் மூன்றாவது கண் வரைந்திருக்கிறது.
போர்னியோ தீவில் பிரம்ம சிருஷ்டி முதல் யாருமே உள்ளே நுழையாத காடு (Virgin Forest) என்று பெரிய ஒரு காட்டைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அதில் உள்ளே புகுந்து ஆராய்ச்சி செய்தபோது, நம் கிரந்த லிபியில் எழுதியதுபோல் ஒரு சாசனம் அசப்பட்டது. அதில் இன்ன மஹாராஜா, இன்ன யக்ஞம் செய்தான். இன்னவிடத்தில் யூபஸ்தம்பம் நட்டான். பிராமணர்களுக்கு கற்பக விருட்ச தானம் செய்தான் என்று கண்டிருக்கிறது. இதை Yupa inscription of Mulavarman of Koeti என்கிறார்கள். நம் மதத்தை ரொம்பப் பரிகாசம் செய்த இங்கிலீஸ்காரர்கள்தான் இத்தனை விஷயங்களையும் கண்டுபிடித்துச் சொல்லியிருக்கிறார்கள்.
இவையெல்லாவற்றையும்விட, எனக்குத் தோன்றுகிற ஒன்று சொல்கிறேன். வேடிக்கையாக இருக்கும். 'ஸகரர்கள்யாகக் குதிரைகள் தேடிப் பாதாளத்துக்குப் வெட்டிக் கொண்டே போனார்கள். அப்போது உண்டான கடலே ஸகரர் பெயரில் 'ஸாகர' மாயிற்று. கடைசீயில் கபில மகரிஷியின் ஆசிரமத்துக்குப் பக்கத்தில் குதிரையைக் கண்டார்கள். அவரே குதிரையை அபகரித்ததாக எண்ணி அவரை ஹிம்சித்தார்கள். அவர் திருஷ்டியினாலே அவர்களைப் பொசுக்கிச் சாம்பலாக்கிவிட்டார்'. இது ராமாயணக் கதை. நம் தேசத்துக்குக் நேர் கீழே உள்ள அமெரிக்காவைப் பாதாளம் என்று வைத்துக் கொண்டால் அங்கேயிருக்கும் கபிலாரண்யம்—(மதுரை என்பது மருதை என்கிற மாதிரி) கலிபாரண்யமாக-கலிபோர்னியாவாக-இருக்கலாம். அதற்குப் பக்கத்தில் குதிரைத் தீவு (Horse island) , சாம்பல் தீவு (Ash island) இவை உள்ளன.
ஸகரர், ஸாகரம் பற்றி இன்னொன்றும் தோன்றுகிறது. ஸஹாரா பாலைவனமும் ஒரு காலத்தில் கடலாக இருந்தது என்கிறார்கள். ஸாகரம்தான் ஸஹாராவாயிற்றோ என்று தோன்றுகிறது.
இப்படி உலகம் முழுக்க நம் மதச் சின்னங்கள் இருப்பதைப் பார்த்துவிட்டு, 'நம்மவர்களில் சிலர் இங்கேயிருந்து அங்கே போனார்கள். அந்தத் தேசத்தவர்கள் இங்கே வந்தார்கள், பலவித பரிவர்தனை ஏற்பட்டது' என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். எனக்கோ எல்லாவிடத்திலும் ஒரே தர்மம்தான் இருந்தது; இந்தச் சின்னங்கள் அங்கங்கேயே ஆதியில் இருந்தவர்களால் ஏற்பட்டவை என்றுதான் தோன்றுகிறது.
சரித்திர காலம் என்று சொல்லப்படுகிற ஒரு இரண்டாயிர மூவாயிர வருஷத்துக்கு உட்பட்ட சான்றுகள் மற்ற தேசங்களில் கிடைப்பதைப் பார்த்து, இந்தியர்கள் அங்கெல்லாம் சென்று அங்குள்ள பழைய நாகரிகத்தை அகற்றிவிட்டு அல்லது அதற்குள்ளேயே ஊரிப் போகிற மாதிரி, ஹிந்து நாகரீகத்தைப் புகுத்தியிருக்கிறார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். ஆனால் நாலாயிரம் வருஷம், அதற்கும் முற்பட்ட காலங்களில்கூட வைதிக சின்னங்கள் பல தேசங்களில் இருக்கின்றன. அதாவது அந்த தேசங்களில் நாகரீக வாழ்வு (Civilization) தோன்றின போதே இந்த வைதிக அம்சங்கள் அங்கே இருந்திருக்கின்றன. இதற்குப் பிற்பாடுதான் அந்தத் தேசத்துப் பழங்குடிகளுக்கென்று ஒரு மதமே தோன்றுகிறது. கிரீஸில் இப்படி ஒரு பூர்விக மதம், பல தெய்வங்களுக்குப் பிறகு பெரிய பெரிய கோயில் கட்டி வழிபடுகிற மதம் உண்டாயிற்று. அதிலும் வைதிக சம்பந்தமான அம்சங்கள் இருக்கின்றன. கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்தில் அவர் வாழ்ந்த பகுதிகளில் இருந்த ஸெமிடிக், ஹீப்ரு மதங்களிலும் வேத மதத்தில் இருக்கிற அம்சங்கள்—ஒரு மாதிரி வர்ணாசிரமப்பிரிவினை உள்பட—இருந்திருக்கின்றன. மெக்ஸிகோ போன்ற தேசங்களின் பழங்குடிகளுக்கு (aborgines) ஒவ்வொரு மதம் உண்டு—அவர்களும் வேதத்தில் சொல்லியிருக்கிற மாதிரி இயற்கையின் ஒவ்வோர் அம்சத்திலும் தெய்வத்தன்மையைப் பார்த்து அவற்றை ஒவ்வொரு தேவதையாக வழிபட்டிருக்கிறார்கள். இந்த மதங்களில் எல்லாம் ஏகப் பட்ட சடங்கு (ritual) களும் உண்டு

இப்போது நாகரீகத்தின் உச்ச ஸ்தானத்தில் இருந்த கிரீஸின் (ஹெல்லெனிக்) மதம் உள்பட இவை எதுவுமே இல்லை. இங்கெல்லாம் அநேகமாக கிறிஸ்துவ மதமே இருந்திருக்கிறது. ஜப்பான் வரை மத்திய ஆசிய, கிழக்காசிய நாடுகளில் பௌத்தம் பரவியிருக்கிறது. சில இடங்களில் இஸ்லாம் இருக்கிறது. தென் ஆப்பிரிக்க வனாந்தரம் மாதிரியான பகுதிகளில் மட்டும், அந்தந்த தேசத்து ஆதி (original) மதம் என்று ஆராய்ச்சிக்காரர்கள் சொல்கிற மதங்கள் காட்டுக்குடிகளிடையில் (tribal) மட்டும் இருக்கிறது. இப்படிப்பட்ட மிகப் பூர்வீக மதங்களிலேயே வைதிக அம்சங்கள் நிறைய இருக்கின்றன. இதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன்.
அதற்கு முன்னால் ஒரு விஷயம். தத்துவங்களை விளக்குகிற போது கதாரூபம் (கதை உருவம்) கொடுப்பதுண்டு—அப்போதுதான் அவை சுலபமாகப் பாமர ஜனங்களுக்குப் புரியும். தத்வம் அப்படியே பொது ஜனங்களிடம் ஏறாது. ஒன்று, கதாரூபம் தர வேண்டும். அல்லது, ஒரு சடங்காக அதை ஆக்கிக் காரியத்தில் செய்யும்படியாகப் பண்ண வேண்டும். இம்மாதிரி சமய கர்மானுஷ்டானங்களைச் செய்யும் போதே அவற்றின் உள்ளே 'ஸிம்பாலிக்'காக இருக்கிற தத்வங்கள் புரியும். 'சடங்குகள் எல்லாமே ரூபகம் (ஸிம்பல்) தான்; உள்பொருளைப் புரிந்து கொண்டாலே போதும். சடங்கே வேண்டாம்' என்று சொல்லுகிறவர்களோடு நானும் சேர்ந்து கொண்டு இதைச் சொல்லவில்லை. தனிப்படச் சடங்கு என்று வைத்துக் கொண்டாலே அதற்குச் சக்தி உண்டுதான். இம்மாதிரியே, 'புராணக் கதைகள் தத்வ விளக்கம் மட்டுமேதான்; அவற்றையே நிஜம் என்று நம்பக்கூடாது' என்றும் நான் சொல்ல வரவில்லை. வாஸ்தவத்திலேயே, நடந்த உத்தமமான சரித்திரங்கள் தான் இவை. அதே சமயத்தில் தானாகவே தத்வங்களையும் நமக்குக் காட்டிக் கொடுக்கின்றன. அதேபோல் காரரியமாகச் செய்கிறபோதே நமக்கு ஒரு பலனைத் தந்து, பிறகு எந்தப் பலனும் கோராத சித்த சக்தியைத் தந்து, சிரேயஸைத் தருகிற சடங்குகளுக்குள் தத்வார்த்தங்களும் இருக்கின்றன.
ஆனால் நாள்பட வழக்கத்தில் இப்படிப்பட்ட கதைகள் அல்லது சடங்குகள் அவற்றின் உள்ளுறை பொருளாக (inner meaning) இருக்கப்பட்ட தத்வங்களிலிருந்து விலகி விடக் கூடும்; அல்லது அதை மறந்தே போகக் கூடும்.
வெளி தேசங்களில் எத்தனையோ ஆயிரம் வருஷங்கள் மூலமான வேத மதத்தோடு சம்பந்தமே இல்லாமல் புதிய மதங்கள் வளர்ந்தபோது இப்படித்தான் வைதிக தத்துவங்கள் உருமாறியிருக்கின்றன.
நான் சொல்ல வந்த உதாரணத்திற்கு வருகிறேன். ஹீப்ரு மதங்களில் ஆதம்-ஈவாள் கதை (Adam and Eve) என்று கேட்டிருப்பீர்கள். 'அறிவு மரம்' (Tree of Knowledge) என்று ஒன்று இருந்தது. அதன் பழக்கத்தைப் புசிக்கக்கூடாது என்பது ஈஸ்வராக்ஞை. ஆதம் அப்படியே சாப்பிடாமல் இருந்தான். ஆனால் ஈவ் அதைச் சாப்பிட்டாள். அதன் பிறகு, 'வாழ்வோ தாழ்வோ அவளுக்கு என்ன சம்பவிக்கிறதோ அதுவே தனக்கும் சம்பவிக்கக்கூடும்' என்று ஆதமும் அந்தப் பழக்கத்தைச் சாப்பிட்டான் என்பது பைபில் பழைய ஏற்பாட்டின் (Old Testament) முதல் கதை (Genesis).
நம் உபநிஷத் தத்துவங்களில் ஒன்றுதான் இப்படி கதா ரூபமாயிருக்கிறது. அப்படி ஆகும்போது காலம், தேசம் இவற்றின் மாறுபட்டால் குளறுபடியும் உண்டாகியிருக்கிறது, மூல தத்வமே மறைந்து போகிறாற்போல.
உபநிஷத்தில் என்ன சொல்லியிருக்கிறது? 'பிப்பல மரத்தில் இரண்டு பட்சிகள் இருக்கின்றன. ஒன்று பிப்பலத்தைச் சாப்பிடுகிறது. இன்னொன்று சாப்பிடாமல் மற்றதைப் பார்த்துக் கொண்டேயிருக்கிறது' என்று உபநிஷத்து சொல்கிறது. சரீரம்தான் அந்த விருட்சம். அதில் ஜீவாத்மாவாக ஒருத்தன் தன்னை நினைத்துக் கொண்டு விஷயாநுபவங்கள் என்ற பழத்தைத் தின்று கொண்டிருக்கிறான். இவன் ஒரு பட்சி. இந்த சரீரத்திலேயே பரமாத்மா இன்னொரு பட்சியாக இருக்கிறான். அவன்தான் ஜீவனை ஆட வைக்கிறவன். ஆனாலும் அவன் ஆடுவதில்லை. சர்வ சாக்ஷியாக அவன் ஜீவனின் காரியங்களைப் பார்த்துக் கொண்டு மாத்திரம் இருக்கிறான். இந்த ஜீவனுக்கு அவனே ஆதாரமானாலும் அவன் விஷயங்களை அனுபவிப்பதோ—பழத்தைச் சாப்பிடுவதோ—அதற்கான கர்ம பலனை அனுபவிப்பதோ இல்லை. இதை உபநிஷதம், பழம்—அதைச் சாப்பிட்ட பட்சி—சாப்பிடாத பட்சி என்று கவித்வத்தோடு சொல்கிறது. சாப்பிடுபவன் ஜீவன், சாப்பிடாதவன் பரம்பொருள்—தன்னை ஆத்மாவாக உணர்ந்திக்கிறவன்

இந்த ஜீவன்தான் ஹீப்ரு மதங்களில் ஈவ் ஆகியிருக்கிறான். 'ஜீ' என்பது 'ஈ' யாவது ஒரு வியாகரண விதி. 'ஜ' வரிசை சப்தங்கள் 'ய' வரிசையாக மாறிவிடுவது சகஜம். இப்படித்தான் யமுனா ஜமுனாவாயிற்று. 'யோகீந்திர்' என்பது 'ஜோகீந்தா' என்றாயிற்று. 'ஜீவ' என்பது 'ஈவ்' என்றாயிற்று. 'ஆத்மா' என்பது 'ஆதம்' ஆக மாறிவிட்டது. பிப்பலம் என்பது ஆப்பிள் (apple) என்றாயிற்று; அறிவு விருட்சம் என்பதும் நம் 'போதி விருட்சம்' தான். போதம் என்றால் 'ஞானம்'. புத்தருக்குப் போதி விருக்ஷத்தின் கீழ்தான் ஞானம் உண்டாயிற்று என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதானே? ஆனால், அவருக்கும் முந்தியே அரச மரத்துக்குப் போதி விருட்சம் என்று பெயர் வந்தது.
உபநிஷதமானது தூர தேசம் ஒன்றில் எத்தனையோ காலத்துக்குப் பிற்பாடு மாறி மாறிப் புது ரூபம் எடுக்கிறபோது மூல தாத்பர்யம் மாறிப்போயிற்று. ஒரு போதும் விஷயாநுபோகத்துக்கு ஆளாக முடியாத ஆத்மாவும் பழத்தைச் சாப்பிட்டதாக பைபிள் கதை திசை திருப்பி விடுகிறது. விஷய சுகம் எல்லாம் அடிபட்டுப் போகிற அறிவை நம்முடைய போதி விருட்சம் குறிப்பிடுகிறது என்றால், அவர்களோ விஷய சுகத்தைப் பழுக்கிற லௌகீக அறிவையே Tree of Knowledge என்று சொல்லி விட்டார்கள். ஆனாலும், நம் வேத மதம் ஆதியில் அங்கேயிருந்திருக்கிறது என்பதற்கு இதிலிருந்து அத்தாட்சி கிடைக்கின்றதோ இல்லையோ? இன்னொரு உதாரணம் சொன்னால்தான் மூலத்தில் இருப்பது வெளி தேசத்தில் வேறு காலத்தில் ரொம்பவும் மாறிப்போகும்—மாறினாலும்கூட மூலத்தைக் காட்டிக் கொடுக்கும் என்பதில் உங்களுக்கு நம்பிக்கை வரும். நம்முடைய திருப்பாவை - திருவெம்பாவைப் பாடல்கள் வேதம் மாதிரி அத்தனை பிராசீனமானவை அல்ல. ஒரு ஆயிரத்தைந்நூறு வருஷங்களுக்குள் அவற்றை ஆராய்ச்சியாளர்கள் கொண்டு வந்து விடுகிறார்கள். எப்படியானாலும் வேத இதிஹாச காலங்களுக்கு மிகவும் பிற்பட்டுத் தோன்றியவர்கள்தான் இந்த இரு பாவைகளைச் செய்த மாணிக்கவாசகரும் ஆண்டாளும். இழர்கள் காலத்துக்கு அப்புறம் கடல் கடந்து ஹிந்து சாம்ராஜ்யங்கள் உண்டாயின. தமிழ்நாட்டின் சோழ ராஜாக்கள்கூட அம்மாதிரி தேசாந்தரங்களில் சாம்ராஜ்யத்தை விஸ்தரித்திருக்கிறார்கள். ஆனால் இந்த படை எடுப்பைவிட முக்கியமாக நம் கடல் வாணிபம் பெருகினதையே சொல்ல வேண்டும். வியாபார ரீதியில் நம் அந்நியத் தொடர்பு (Foreign contact) மிகவும் விருத்தியாயிற்று. இந்த வியாபாரிகளைப் பார்த்தே பல தேசங்களில் ஹிந்து நாகரீகத்தில் ஆகர்ஷிக்கப்பட்டு நம் மத அம்சங்களைத் தாங்களும் எடுத்துக் கொண்டார்கள். தூரக் கிழக்கு (Far - East ) என்று சொல்கிற நாடுகளை இவற்றில் முக்கியமாகச் சொல்ல வேண்டும். பாலி மாதிரி தேசங்கள் முழுக்க ஹிந்துவாயின. கம்போடியா, இப்போது தாய்லாந்து என்கிற ஸயாம், இந்தோ சைனா முழுவதும் பரவி, மணிலா இருக்கிற ஃபிலிப்பைன்ஸ் எல்லாம்கூட ஹிந்து கலாச்சாரத்துக்குள் வந்தன. அதை ஸ்ரீ விஜய சாம்ராஜ்யம் என்பார்கள்

.
ஆக, ரொம்பவும் ஆதியில் எங்கேயும் வேத மதமே இருந்தது ஒரு நிலை; அப்புறம் அங்கங்கே புது மதங்கள் ஏற்பட்டது ஒரு நிலை; பிறகு இந்த மதங்கள் எல்லாம் மங்கிப் போகிற மாதிரி கிறிஸ்துவம், இஸ்லாம், பௌத்தம் இவை மட்டுமே அங்கெல்லாம் பரவிய நிலை; இதற்கப்புறம், சரித்திரத்தில் நன்றாக உறுதிப்பட்டுவிட்ட காலத்தில் மறுபடி இப்போது நான் சொன்னமாதிரி, ஹிந்து நாகரீகச் செல்வாக்கானது பல தேசங்களில் — குறிப்பாக கீழ்த்திசை நாடுகளில் ஜீவ களையுடன் ஏற்பட்டது ஒரு நிலை. இந்தக் கட்டத்தில்தான் அங்கோர்வாட், பேராபுதூர், ப்ரம்பானன் மாதிரி பெரிய பெரிய தமிழ்நாட்டுக் கோயில்கள் அங்கே எழும்பின. இந்தக் கட்டத்தில்தான் நம்முடைய திருப்பாவையும் திருவெம்பாவையும் கூட ஸயாமுக்கு—இப்போது தாய்லாந்து என்கிறார்கள்—சென்றிருக்கின்றன.
இதற்குச் சான்றாக இப்போதும் அங்கே வருஷா வருஷம் இங்கே நாம் இந்தப் பாவைகளைப் பாராயணம் பண்ணுகிற அதே மார்கழி மாதத்தில் ஒரு பெரிய உத்ஸவம் நடக்கிறது. இரண்டு பாவைகளும், சைவத்தையும் வைஷ்ணவத்தையும் சேர்த்து வைக்கிற மாதிரி இந்த உத்ஸவத்தில் பெருமானுக்குறிய டோலோத்ஸவத்தை (ஊஞ்சலில் வைத்து ஆட்டுவதை) சிவபெருமான் வேஷத்தைப் போட்டுக் கொள்கிற ஒருத்தனுக்கு ஸயாம் தேசத்தில் செய்கிறார்கள். சரி அவர்களுக்குப் 'பாவை' நூல்களைப் பற்றி ஏதாவது தெரியுமா என்று கேட்டால், அடியோடு ஒன்றும் தெரியாது. அப்படியானால் இந்த உத்ஸவம் மார்கழியில் நடக்கிறது என்பது ஒன்றுக்காக அந்தப் பாவைகளோடு சேர்த்துப் பேசுவதற்கு ஆதாரம் இல்லை என்று தோன்றலாம். பின் நான் ஏன் இப்படிச் சொல்லுகிறேன் என்றால், அவர்கள் இந்த உத்ஸவத்துக்குப் பெயரே ட்ரியம்பாவை, ட்ரிபாவை (Triyambavai, Tripavai) என்கிறார்கள். இப்போது பைபில் படிப்பவர்களுக்கு உபநிஷத சமாச்சாரமே தெரியாவிட்டாலும், அதிலிருந்து வந்த கதை மாத்திரம் அவர்களிடம் இருக்கிற மாதிரி, தாய்லாந்துக் காரர்களுக்கு இப்போது திருப்பாவை - திருவெம்பாவை பாராயணம் அடியோடு விட்டுப் போய்விட்டது என்றாலும், அவர்கள் இதே தநுர் மாசத்தில் சிவ வேஷம் போட்டுக் கொண்டவனுக்காக நடத்துகிற டோலோஸ்தவத்துக்கு "ட்ரியம்பாவை, ட்ரிபாவை" என்ற பெயர் மட்டும் இருக்கிறது! சரித்திர காலத்துக்குள் இப்படிப்பட்ட மாறுபாடுகள் உண்டானால், மூவாயிரம் நாலாயிரம் வருஷங்களுக்கு முற்பட்ட சமாச்சாரங்கள் வெளிநாடுகளில் எத்தனையோ திரிந்தும் மாறியும் தானே இருக்கும்? இத்தனை மாறினாலும் எல்லாவற்றிலும் வேத சம்பிரதாயத்தின் அடையாளங்கள் "இதோ இருக்கிறோம்" என்று தலை நீட்டுகின்றன.
சரித்திர காலத்துக்கு முற்பட்டவர்கள் என்று வைக்கப்பட்ட பழங்குடிகளின் மதங்களில்கூட நம் சமய சின்னங்கள் இருக்கின்றன என்றால்
என்ன அர்த்தம்? அத்தனை காலத்துக்கு முந்தி, நாகரீக வாழ்க்கையே உருவாகாத தூர தூர தேசங்களுக்கு இந்தியாவிலிருந்து படையெடுத்தோ வியாபாரத்துக்காகவோ போய் நம் நாகரீகத்தைப் பரப்பினார்கள் என்றால், அது பொருத்தமாகவே இல்லையே! அதனால்தான் 'இங்கிருந்து கொண்டுபோய் அங்கே புகுத்தவில்லை; ஆதியில் லோகம் முழுக்கவே வேத மதம்தான் இருந்திருக்க வேண்டும்' என்று எனக்குத் தோன்றுகிறது. அப்புறம் அவை திரிந்து திரிந்து இப்போது அந்தந்த தேசத்து 'ஒரிஜினல்' மதங்களாக நினைக்கப்படுபவையாக ஆகி, பிற்பாடு அங்கும் சரித்திர காலத்துக்கு உட்பட்ட கிறிஸ்துவம், பௌத்தம், இஸ்லாம் ஆகியன பரவியிருக்க வேண்டும்.
 பெரியவர்சங்கராச்சாரியார்  அவருக்கே உரித்தான பாணியில்  சில கருத்துக்களை கூறி இருக்கிறார் இவற்றைப் புரிந்து கொள்வதோ அவை சரியானவை இல்லையா என்று பட்டிமன்ற விவாதம்  செய்வதோ நோக்கமல்ல. ஒரு நாணயத்தின் இரு பக்கங்களையும்  பார்க்க வேண்டும்என்பதே குறி இருந்தாலும் பெரியவருக்குக் கற்பனை வளம் அதிகம்  என்றே தோன்றுகிறது

.  
   

Wednesday, May 18, 2016

ஆமேல நோடோனா......


                                                  ஆமேல நோடோனா........
                                                  -------------------------------------
1992-ம் ஆண்டு நான் எங்கள் வீட்டின் மேல் இன்னொரு தளமெழுப்பினேன்  அதற்கு ஆன மொத்த செலவு மூன்று லட்சங்களே  அதே வீட்டை புதுப்பிக்க எனக்கு ஆன செலவு இப்போது ஏறத்தாழ  மூன்று லட்சங்கள் வீடு புதுப் பொலிவுடன் விளங்குகிறது  அதில் குடிவருவோரும் அதை நல்ல படியாக மெயிண்டெயின்  செய்ய வேண்டும் என்ற கவலையால்  வாடகைக்கு இருத்துபவரைகவனமாக கருத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகிறது வீடு வாடகைக்கு என்று போர்ட் மாட்டியதில் இருந்து பலரும் வீடு பார்த்துப் போக வந்தனர்  இவர்களில் ப்ரோக்கர்களும் வீடு தேவைப்படுபவர்போல் நடித்து வீட்டைப் பார்க்க வந்தனர் ஆனால் இவர்களை என்னால் அடையாளம் கண்டு கொள்ள முடிந்ததுபலரும் வீட்டைப் பார்க்கும்  முன்னர் வாடகை எவ்வளவு என்று அறிவதிலேயே கண்ணாய் இருந்தனர் வீடு யாருக்கு என்று கேட்டு அவர்கள் வந்து பார்க்கட்டும் என்று சொல்லியே அனுப்பி விடுவேன்  அவர்களை . வீடு வாடகைக்கு என்று எழுதியதைப் பார்த்தும் பலரும் லீசுக்கு  தருவீர்களா என்று கேட்டனர் லீசுக்கு இல்லை என்றதும் சிங்கிள் பெட் ரூம் வேண்டும் என்று சொல்லிப் போனவரும்  உண்டு. இத்தனைக்கும் வாடகைக்கு என்று எழுதிய போர்டில் இரண்டு பெட்ரூம்  இரண்டு ஹால்கள்  என்றும் எழுதி இருந்தேன் . நேரம் கெட்ட நேரத்தில் டெலிபோனில்  வீடு வாடகைக்குஎன்றால் என்ன வாடகை என்று கேட்டோரும்  உண்டு
 வந்தவர்களில் நிஜமாகவே சீரியசாக வீடு வேண்டி வந்தோரும் உண்டு  வருபவர்களில் நல்லவர்கள் யார் என்று கணிப்பதில் கவனம் தேவைசிலர் வாடகையைக் குறைத்து அட்வான்ஸ் அதிகம் வாங்கிக் கொள்ளுங்கள்  என்றும் கேட்டனர் ஒரு பார்ட்டி தொலை பேசி விட்டு வீடு பார்க்க வரலாமா என்று கேட்டார்கள் யாருக்கு வீடு தேவையோ அவர்கள் வரலாம் என்றேன்  வந்தவர் முதலில் கேட்ட கேள்வி முஸ்லிம் களுக்கு வீடு கொடுப்பீர்களா என்றது தான் எனக்கு எந்த ஆட்சேபணையும்  இருக்கவில்லை. ஆனால் என் மனைவிக்கு சில ரிசர்வேஷன்கள் இருந்தது நான் அவர்களை வீடு பார்க்க வரலாம் என்றேன்  எனக்கு ஒரு கண்டிஷன் இருந்தது. வீட்டில் குடி வருபவர்கள் எண்ணிக்கை ஐந்துக்கு மேல் இருக்கக் கூடாது என்பதுதான்  அது இருக்கும் தண்ணீர் பிரச்சனையால் வந்த கண்டிஷன் இன்னொன்று குடிப்பக்கம் கூடு என்பும்ான். வந்த முஸ்லிம்  பார்ட்டி ஐந்து பேரே என்றனர்  அதிலும் ஒரு மகன் திருமணத்துக்குத்  தயார் என்றும் அவனது திருமணத்துக்குப் பின் ஆறு பேர்கள் என்றும் கூறினார்  நான் அவரது மனைவியையும் அழைத்துக் கொண்டு வரச் சொன்னேன்  மறு நாள் வீடு பார்க்க வந்தபோது திருமணத்துக்கு இருக்கும் மகன் மகள் தவிர ஐந்து பேர் வந்தனர்  நான் அவர்கள் குடும்பத்தினரே  திருமணத்துக்கு  முன்பே ஏழுபேர் இருக்கிறார்களே என்று கேட்டேன் அவர் மகள் மணமாகிப் போய்விடுவார் என்று கூறினார் அப்படியும் இப்போதே ஆறு பேர் இருக்கிறார்களே என்று கேட்டேன்  திருமணத்துக்குப் பின் ஆறுபேர் இருக்கலாம் என்றால் இப்போது ஆறு பேர் இருப்பதில் என்ன தவறு என்றார் நான் திருமணத்துக்குப் பின்  ஏழு பேர் ஆவார்களே என்றேன்  அதற்கு அவர் சொன்ன பதில் என்னை அவருக்கு வீடு இல்லை என்று சொல்ல வைத்தது நான் கேள்வி கேட்டபோது அவர் அது குறித்து( ஆமேல நோடோனா” பிறகு பார்த்துக் கொள்ளலாம் ) என்றார் குடி  வைத்தபின்  அவர்களோடு மல்லுக்கட்ட என்னால் முடியாது என்று தோன்றியதாலும் வார்த்தைப் பிறழுபவரை  எனக்குப் பிடிக்காது என்றும் கூறினேன்  நான் அந்தப் பார்ட்டியை ரிஜெக்ட் செய்தது என் மனைவிக்கு மகிழ்ச்சி தந்தது
 இன்னொரு நாள் இரவு எட்டுமணி சுமாருக்கு  மூன்று பேர் வந்து நேரே மாடிக்குச் செல்லத் துவங்கினர் நான் அவர்களைத் தடுத்து யாருக்கு வீடு என்று கேட்டேன் மூவரில் ஒருவர் தனக்கு என்றார்  குடித்ிருந்தார் போல் இருந்தது. வீட்டில் எத்தனை மெம்பர்கள் என்று கேட்டேன்  அவர் மிகப் பெருமையாக பத்துபேர் என்றும் அவரது இரு மனைவிகளுடனும்  சேர்த்துக் கூட்டுக் குடித்தனம் என்றும் கூறினார்  நான் அவர்களுக்கு வீடு கொடுக்க முடியாது என்று அனுப்பி விட்டேன்
வீடு மிகவும் பிடித்துப் போய்  விடவும் முடியாமல்முடிவும்  எடுக்க முடியாமல் அவ்வப்போது வந்து இன்னும்  காலியாகவே இருப்பது அறிந்து சென்றவரும் உண்டு கார் பார்க்கிங் வசதியுடன் சற்றே விசாலமான புதுப்பிக்கப்பட்ட வீட்டுக்கு வாடகைக்கு வந்தாகி விட்டதுஒரு சற்றே வயதான தம்பதியர் ஒருமகன் இன்னும் திருமண மாகவில்லை என்று மூன்றே பேர் அடங்கிய காம்பாக்ட் குடும்பம்  வீட்டை நன்கு பர்ராமரிப்பார்கள் என்னும் நம்பிக்கையில் வாடகைக்கு கொடுத்திருக்கிறேன் . பார்ப்போம் புதுப்பிக்கப் பட்ட வீட்டின் புகைப்படங்கள் சில கீழே.         
 
வெளியில் இருந்து பார்வை
 
வீட்டு எண்ட்ரன்ஸ்
  
வெளி ஹால் ஒரு பகுதி
    
 
வெளிஹால் இன்னொரு வியூ 
.   
          
படுக்கை அறை  இதுபோல் இன்னொன்றும் உண்டு 

உள்ஹால் 
உள்ஹால் இன்னொரு வியூ
பூஜா அறை
சமையல் அறை 
ஸ்டோர் ரூம் 
குளியல் அறை  டாய்லெட்
பால்கனியிலிருந்து சாலை வியூ 
பின்புற கேட் 
கார் நிறுத்த
மாடிக்குச் செல்ல